நெல்லைத்தமிழன்:
1. குரு, துறவிகளிடம் ஏகப்பட்ட சொத்துக்கள் சேர்ந்துவிடுகிறதே. அது எப்படி?
# குற்ற உணர்ச்சி இருக்கும் மனிதர்கள் தம்முடைய குருமார்களுக்கு அல்லது சில ஸ்தாபனங்களுக்கு பெரிய நன்கொடைகள் அளிப்பதன் மூலம் தங்களது தவறுகள் ஓரளவு மேல் உலகில் மன்னிக்கப்படும் என்று நம்புகிறார்கள். இதுபோக சில ஸ்தாபனங்கள் கருப்பு பணத்தை பெற்றுக்கொண்டு அதை பாதுகாத்து அதில் பெரும் பகுதியை வேண்டும் போது திரும்ப அளிப்பதாகவும் சொல்லுகிறார்கள். இது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை.
& நிறைய வரவுகள்; செலவுகளே கிடையாது - அல்லது உணவு, உறைவிடம், உடை எல்லாமே பக்தர்கள் அல்லது சீடர்கள் கவனித்துககொள்கிறார்கள். அப்புறம் என்ன - சொத்து சேர்ந்துகொண்டேதானே இருக்கும்!
2. 60 வயதைக் கடந்தவர்கள் என்ன என்ன மாற்றங்களைத் தன் வாழ்க்கையில் செய்யவேண்டும்? ஆரோக்கியமாக காலம் தள்ள?
# அறுபது என்று இல்லை எப்பொழுதும் என்றே சொல்லலாம் - எரிச்சல் கோபம் இவற்றைத் தவிர்த்து, முறையான அளவான உடற்பயிற்சி செய்து, உண்ணும் போது அதிகம் உண்ணாமல் தேவைக்கு சரியான சாத்வீக உணவு உட்கொண்டு வாழ்ந்தால் எப்போதும் எல்லாருக்கும் நல்லது.
& (உணவுக்கோ அல்லது உணர்வுகளை வெளிப்படுத்தவோ) வாயை அதிகம் திறக்காமல் இருந்தால் போதும்!
3. மன நிம்மதியை எது கொடுக்கும்?
# தேவைகளும் ஆசைகளும் குறைந்தால் மகிழ்ச்சி இல்லாவிட்டாலும் திருப்தி இருக்கும்.
& நம் வீட்டில் கரண்ட் போனவுடன், அடுத்த வீட்டிலும் கரண்ட் இல்லை என்று தெரியவரும்போது மன நிம்மதி வரும். கரண்ட் மட்டும் இல்லை - எல்லா விஷயங்களுக்கும் இது பொருந்தும்!
4. சந்தோஷம் அல்லது துக்கம் - எது அதிக காலம் நீடிக்கிறது?
# சந்தோஷம் ஆனாலும் சோகம் ஆனாலும் காலக்கெடுவில் அது தேய்ந்து அது குறித்த ஒரு நினைவு மட்டுமே மிஞ்சும். அந்த நினைவு கூட வீரியம் படிப் படியாகக் குறைந்து ஒரு மங்கலான பதிவாக மட்டும் தங்கும்.
இதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்பது அது எவ்வளவு தீவிரமானது என்பதைப் பொறுத்திருக்கும்.
& துக்கம் வரும்வரை சந்தோஷமும், சந்தோஷம் வரும்வரை துக்கமும் நீடிக்கக் கூடும். எந்த உணர்வாக இருந்தாலும் அதன் அளவு படிப்படியாக குறைந்துகொண்டே வரும். அடுத்த நிகழ்வு முன்னதை மாற்றிவிடும்.
= = = = = = = = =
எங்கள் கேள்விகள் :
நெல்லை கேட்டுள்ள மேற்கண்ட 4 கேள்விகளுக்கு வாசகர்கள் பதில் சொல்லலாம்.
மேலும் எங்கள் கேள்வியாக :
ஏப்ரல் 1 ஆம் தேதி - ஏ மு தினத்தில் கடந்த காலங்களில் நீங்கள் ஏமாற்றிய அல்லது ஏமாறிய சம்பவங்கள் ஏதேனும் நினைவில் இருந்தால் அதை கருத்துரை பகுதியில் எழுதுங்கள்.
= == = = = = =
KGG பக்கம்:
பாலிடெக்னிக் ஆசிரியர் வாஞ்சிநாதன் நினைவுகள் தொடர்கின்றன.
ஃபிசிக்ஸ் பாட வகுப்பில் கணக்குகளை solve செய்ய நாங்கள் முயற்சி செய்யும்போது அவர் சொல்லுவது :
" ரொம்ப சுலபமான பெருக்கல் - வகுத்தல் போன்ற சில ஸ்டெப் வரும்போது உங்களுக்குத் தெரிந்த கொம்பு வகுத்தல் , வாய்ப்பாடு மூலம் செய்யுங்கள் - எதற்கெடுத்தாலும் லாகரிதம் டேபிள் பார்த்து அதில் தவறு செய்து அபத்தமான விடை எழுதாதீர்கள்.
20 X 5 = 100 என்பதை மனக் கணக்காகவே போடமுடியும் - அப்படி இருக்கும்போது
log 20 = 1.3010
log 5 = 0.6989
so 20 X 5 = antilog ( log 20 + log 5) = antilog (1.3010 + 0.6989) = antilog (1.9999) = 99.9770
என்று எழுதினீர்கள் என்றால், உங்கள் நேரமும் வீண், விடையும் தவறு என்று ஆகிவிடும்.
So, don't use logarithm table for simple multiplication and simple division. Use logarithm table for complicated multiplication or division problems.
அப்போது அவர் சொன்னது கால்குலேட்டர் புழக்கத்திற்கு வராத காலம். அப்பொழுது பரிட்சை எழுதும்போது Clarks Table மட்டுமே மாணவர்கள் பரிட்சையில் பயன்படுத்த அனுமதி இருந்த காலம்.
Clark's Table புத்தகத்தில் இன்னும் ஒரு சிறப்பு உண்டு. Physics பாடத்தின் பல பகுதிகளுக்கு பயன்படும் formulae மற்றும் definitions எல்லாம் அந்தப் புத்தகத்தில் இருக்கும்! Physics பாட தியரி பகுதிகளுக்கு பதில் எழுத சில சமயங்களில் அந்தப் பகுதி உபயோகமாக இருக்கும்.
இந்தக் காலத்தில் எல்லா மேல்வகுப்பு பரிட்சைகளிலும் கால்குலேட்டர் அனுமதி இருக்கிறது என்பதால் நாங்கள் அந்தக் காலத்தில் பட்ட கஷ்டங்கள் இந்தக் கால மாணவர்களுக்கு இல்லை.
இன்றும் கூட - நான் இருக்கும் தெருவில் உள்ள மருந்துக்கடையில் 86 ரூபாய் மதிப்புள்ள மாத்திரை strip இரண்டு வாங்கினால் - அந்தக் கடையின் ஆள் கால்குலேட்டர் கையில் எடுத்து, 86 X 2 = 172 என்று போட்டு பில் தொகை சொல்லும்போது எனக்கு வாஞ்சிநாதன் ஞாபகம் ஒருமுறை வந்துபோகும். மனக் கணக்காகப் போடவேண்டியதற்கு கால்குலேட்டர் தேவையா என்று நினைப்பேன்.
- -- - - -
physice லாப் வகுப்பில், ஃபிசிகல் பேலன்ஸ் (பௌதிக தராசு ) பரிசோதனை - விவரங்கள் பார்த்து observation நோட்டில் எழுதவேண்டும்.
பௌதிக தராசின் முள் வலது பக்கமும் இடது பக்கமும் மாறி மாறி அசைந்து திரும்பும்போது அதிக பட்ச அளவு எண் பார்த்து நோட்டில் எழுதிக்கொள்ள வேண்டும்.
ஒரு மாணவர் தன்னுடைய நோட்டில்,left side ---- right side
4 ---- 5
4 ----- 6
3 ----- 5
3 ------- 4
இதைப் பார்த்த வாஞ்சிநாதன் அந்த மாணவரிடம் - 'இந்த readings தவறு. முதல் ரீடிங் அளவிலிருந்து அடுத்த ரீடிங் குறையலாம் அல்லது அதே அளவு இருக்கலாம் - ஆனால் அளவு கூடாது' என்றார்.
அந்த மாணவர் உடனே " இல்லை சார் இப்படித்தான் ரீடிங் வந்தது" என்றார்.
" நீ ரீடிங் எடுக்கும்போது கொஞ்சம் விலகி நின்று தராசின் ஸ்கேல் க்கு நேராக கண்ணை வைத்துப் பார்த்து ரீடிங் எடுக்கணும். அதுக்கு பதிலாக தராசின் வலது தட்டுக்கு நேராகப் போய் பாம்பு போல மூச்சு விட்டிருப்பாய் " (Instead of keeping a safe distance from the scale - you would have hissed like a snake near the right-side pan of the balance!) " என்று சொன்னார்.
இதைக் கேட்டு எங்களுக்கு சிரிப்பு வந்தாலும் - ரீடிங் எடுக்கும்போது என்ன முன் எச்சரிக்கை எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதை அழகாக மனதில் பதியவைத்தார்.
= = = = = = =
பாலிடெக்னிக் முதல் ஆண்டு கால் பரிட்சையில் ( First term exam) எனக்கு சிம்பிள் பெண்டுலம் பரிசோதனை வந்தது. பரிசோதனை செய்து, ரீடிங் எடுத்து, அந்த readings மூலம் சிம்பிள் பெண்டுலம் L / T*T = constant நிரூபணம் செய்து, செகண்ட்ஸ் பெண்டுலம் நீளம் கண்டு பிடிக்கவேண்டும். ( செகண்ட்ஸ் பெண்டுலம் நீளம் = 100 செ மீ என்பது தியரி - )
பரிசோதனை செய்து முடித்து, செகண்ட்ஸ் பெண்டுலம் நீளம் கண்டுபிடித்து என்னுடைய ரீடிங் படி 99.8 செ மீ விடை வந்தது. விடை ஏன் 100 வரவில்லை என்பதற்கு ஒரு விளக்கம் எழுதி பரிட்சை விடைத் தாளை கொடுத்துவிட்டு பெருமையுடன் வந்தேன்.அப்புறம் என்ன ஆனது என்றால் ..
(தொடரும்)
= = = = = = = = =
வாஞ்சிநாதன் ஆசிரியர் நினைவுகள் மிகவும் கவர்கிறது.
பதிலளிநீக்குநான் லாக்ரிதம் உபயோகித்து கணக்கு விடைகள் எழுதியதே இல்லை. இப்போதும் மனக்கணக்குதான். கால்குலேட்டர் இருக்கும்போது, போன் இருக்கும்போது. கூகுள் மேப் இருக்கும்போது, கூகுள் இருக்கும்போது.. என்று அறிவியல் கண்டுபிடிப்புகளால் நமது அடிப்படைத் திறமைகளை இழந்துவருகிறோம்.
ஹிஹிஹி.. நான் லாக் புக்கை கொஞ்சம் வேறு மாதிரியும் உபயோகித்திருக்கிறேன்!
நீக்குஅது என்ன வேறு மாதிரி? விளக்கமாக சொல்லலாமே!
நீக்குவேறு என்ன.. பிட் அடிக்க உபயோகித்திருப்பார்னு பட்சி சொல்லுது
நீக்கு:)))
நீக்குசபாபதே...
நீக்குசமீபத்தில் சென்னை பயணத்தில் பத்து மணி நேரம் கார் எடுத்தேன். இடையில் பெட்ரோல் போட ஐந்நூறு ரூபாய் கொடுத்தது, செட்டில் பண்ணும் நேரம் நள்ளிரவை நெருங்கிவிட்டதால், காட்டிய தொகையைக் கொடுத்துவிட்டேன். ஐந்நூறு ரூபாய் ஏமாந்துவிட்டேன். நெல்லைப் பகுதியைச் சேர்ந்தவன், என்னென்னவோ விஷயங்களைப் பேசிக்கொண்டு வந்தவன் இப்படி ஏமாற்றுப் பேர்வழியா இருப்பான் என்று நினைக்கலை. ஏழ்மையோ இல்லை பணத் தேவையோ ஒருவனை ஏமாற்றுப் பேர்வழியாக ஆக்கிவிடுமா?
பதிலளிநீக்குஇல்லை, மறந்திருப்பார். நினைவுபடுத்தினால் போட்டு விட்டு விடுவார். கும்பகோணம் ட்ரிப் முடித்து வீடு திரும்பியதும் நானும் செட்டில் பண்ணும்போது பெட்ரோல் மறந்து விட்டது. ஜி பே செய்து கொஞ்ச தூரம் சென்ற அந்த டிரைவர் உடனடியாக திரும்பி வந்து நினைவுபடுத்தி எனக்கு மறுபடி அந்த அமவுண்ட்டை திருப்பி அனுப்பினார். ஒரு ஜோக், ஏதோ கணக்கில் அவர் முன்னூறு ரூபாய் அதிகம் அனுப்பிவிட்டார். கணக்கு காட்டி சொன்னார். நானும் சரிபார்த்து முன்னூறு ரூபாயை மறுபடி அவருக்கு அனுப்பினேன்!
நீக்குஇரண்டு தடவை நினைவுபடுத்தியும் அவர் செய்யவில்லை. ஏமாற்றுப்பேர்வழி
நீக்குஎல்லா ஆட்டோ ஓட்டுனர், டாக்ஸி ஓட்டுனர்களும் வழியில் பெட்ரோல் போட காசு கொடுக்க சொல்லிவிட்டு கடைசியில் மறந்து போனது போல இருப்பார்கள். நாம் நினைவுபடுத்தியவுடன் ஒப்புக் கொள்வார்கள். பத்துக்கு ஏழு பேர் இப்படி ஏமாற்றுவதை பார்த்திருக்கிறேன் .
நீக்குஅடுத்த வீட்டிலும் கரென்ட் இல்லை - மற்றவர்கள், அதிலும் உறவினர்கள் வெற்றி அடையும்போது பொறாமையும், அவனின் கஷ்டத்தைப் பார்த்து, அப்பாடி... நமக்கு அவ்வளவு கஷ்டமில்லை என ஆதரவு அடைவதும் பலரின் குணமாக இருக்க என்ன காரணம்?
பதிலளிநீக்குபடைத்தவனைதான் கேட்க வேண்டும்! அவனுக்கும் தெரியுமோ என்னவோ... எந்த இடத்தில ஒரு ஸ்க்ரூ கழன்றுள்ளது என்று அவனும் மண்டையை உடைத்துக் கொள்வான்!!!
நீக்குமீண்டும் புதன் கேள்வியா?
நீக்குகற்பக கணபதி
பதிலளிநீக்குகனிவுடன் காக்க..
முத்துக்குமரன்
முன்னின்று காக்க..
தையல் நாயகி
தயவுடன் காக்க..
வைத்திய நாதன்
வந்தெதிர் காக்க..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
நலம் வாழ்க.
நீக்குபாலிடெக்னிக் ஆசிரியர் ஸ்ரீ வாஞ்சிநாதன் போன்ற புண்ணியர்கள் மாணவ குலத்திற்குக் கிடைத்த பொக்கிஷங்கள்..
பதிலளிநீக்குஅவரது நினைவுகள் தொடரட்டும்..
அந்தக் கால ஆசிரியர்கள் போல ஒரு ஆசிரியரை இன்றைய நாள் காண முடியுமா?
நீக்குஎனது மனைவியின் உறவினர் கணவன் மனைவி அப்படிப்பட்ட ஆசிரியர்களாக இருந்தார்கள் இருக்கிறார். அவங்க பிரச்சனை பற்றி எழுதறேன். ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் பாடம் நடத்துவதை விட ஏகப்பட்ட இன்பர்மேஷன் மாணவர்களைப்பற்றி கணிணியில் பதியத்தான் அரசு நெருக்குகிறது. பதின்ம வயது மாணவரை அரசு சிஸ்டம் பெற்றோர் சப்போர்ட் செய்வதால் குடி கஞ்சா அட்டகாசம் ஒழுங்கீனம் எதைப்பற்றியும் ஆசிரியர் கவலைப்படக் கூடாது அவர் வேலை பாடம் முடிக்கணும் ரிசல்ட் காட்டணும் பிரச்சனை இல்லாமல் பாத்துக்கணும். அப்புறம் எப்படி உருப்படும்
நீக்குமிகவும் வருந்தத்தக்க நிலை. :(((
நீக்கு//// 60 வயதைக் கடந்தவர்கள் என்ன என்ன மாற்றங்களைத் தன் வாழ்க்கையில் செய்யவேண்டும்?..///
பதிலளிநீக்குஇதுவரை செய்யாதிருந்த நல்ல காரியங்களைக் கணக்கெடுத்து அவற்றைச் செய்ய வேண்டும்..
இது பொருளாதாரம் உடையார்க்கு மட்டும்!..
எல்லோராலும் முடிவதில்லை!
நீக்குபொருளாதாரம் உடையார்க்கு என்பது தவறு. மனது நிறைந்திருப்பவர்களுக்கு என இருக்கணும். பொருளாதாரம் உடையவர் என்பது அர்த்தமில்லாதது ஆளைப் பொறுத்து மாறுபடும்
நீக்குஎன்னையே எடுத்துக் கொள்ளுங்கள்..
நீக்குதீயோர் சகவாசம் கிடையாது.. ஊதாரித்தனமும் இல்லை..
ஆனாலும்
சேமிப்பு இருந்ததில்லை.. இதனால் ...
தோழனோடும் ஏழைமை பேசேல் என்றார் ஔவையார்..
பேசி விட்டேன்..
மன்னிக்கவும்..
பொருளில்லார்க்கு இவ்வுலகு இல்லை.
நீக்குஉங்களுடைய ஞாபக சக்தி அபாரமானது. லேப் ரீடிங் முதற்கொண்டு லோகரித்ம் வரை மறக்காமல் இருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குநெல்லைக்கு நிம்மதி? அவர்தான் "ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு" என்று சிவாஜி போல் பக்தி யாத்திரை மேல் யாத்திரையாக போகிறாரே.
சந்தோசம் துக்கம் என்பவை நிகழ்வை பொறுத்து வயதை பொறுத்து, மாறுபடும். ஒரு 80 வயது கடந்து விட்டால் சந்தோசம் துக்கம் இரண்டுமே பாதிக்காது. ஒரு துறவி வாழ்க்கை வாழ நேரிடும்.
Jayakumar
Progressive Compromise!
நீக்குprogressive detachment.
நீக்குகருத்துரைகளுக்கு நன்றி.
நீக்கு60 வயதைக் கடந்து விட்டால்
பதிலளிநீக்குஇதுவரையிலும் படிக்காதிருந்த தேவார திவ்ய பிரபந்த திருப்புகழ் பாடல்களில் ஏதாவது இரண்டையாவது மனனம் செய்து விடியற்காலை (4:30/6:00) நேரத்தில் பாராயணம் செய்ய வேண்டும்.. அல்லது அமரத்துவம் பெற்று விட்ட தாய் தந்தையருடன் மனதார உரையாட வேண்டும்..
(இதற்கு பல் துலக்கி முகம் கழுவியிருக்க வேண்டியது இல்லை.. பல் துலக்கி முகம் கழுவியிருந்தால் ரொம்ப ரொம்ப நல்லது..)
இந்த அறிவுரை கொடுத்தவர் -
திரு டாக்டர் பக்தவத்சலம்..
..60 வயதைக் கடந்து விட்டால் இதுவரையிலும் படிக்காதிருந்த தேவார திவ்ய பிரபந்த திருப்புகழ் பாடல்களில் ..//
நீக்குஇப்படி புத்தி சொல்பவர்கள் இருக்கிறார்கள் என்பது நல்ல விஷயம். ஆனால் கேட்பவர்கள் இருக்கிறார்களா தமிழ்நாட்டில்..?
நான் கடந்த ஒரு வருடமாக இந்த அறிவுரையைப் பின்பற்றி வருகின்றேன்..
நீக்குதமிழகத்தில் எல்லோரும் அறிவுக் கொழுந்துகள். பிறரிடம் கேட்டுத் தெளிய ஒன்றுமில்லை
நீக்குஉயர்வு நவிற்சி அணி..
நீக்கு/// தமிழகத்தில் எல்லோரும் அறிவுக் கொழுந்துகள்.///
நீக்குதத்திகள்!?..
பல வருட சென்னை நகர வாழ்க்கையில் நான் தெரிந்து கொண்டது: விஷயம் தெரிந்தவர்கள் பேசாமல் ஒதுங்கி இருப்பார்கள். அரைகுறை கள் மட்டும் தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்பது போல் அடித்துப் பேசுவார்கள்!
நீக்குஇந்தப் பதிவைத் தொடர்ந்து பல கருத்துகள்..
பதிலளிநீக்குஎனது கருத்து ஒன்றும் திருப்புகழ் பற்றி..
திருச்செந்தூர் சுவாமிமலை பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கும் போது ஜெயா வில் கஜகேசரி அவர்கள் சொல்கின்றார் - சுவாமிநாத ஸ்வாமியை வழிபாடு செய்யுங்கள் என்று!..
__/\__
நீக்கு/// பொருளாதாரம் உடையார்க்கு என்பது தவறு. மனது நிறைந்து இருப்பவர்களுக்கு என இருக்கணும். ///
பதிலளிநீக்குபொருள் இல்லார்க்கு இவ்வுலகம் நஹி.. நஹி..
பணம் பஃபே டேபிளிலே..
குணம் டிராஷ் பேக்கிலே!..
ஆஹா ! காலத்திற்கேற்ற மாற்றத்துடன் பாடல்!
நீக்கு/// அரைகுறைகள் மட்டும் தனக்குத் தான் எல்லாம் தெரியும் என்பது போல் அடித்துப் பேசுவார்கள்.. ///
பதிலளிநீக்குஅரைகுறை - தத்திகள்..
அரைத்தி,
குறைத்தி,
!?
: <)))
:))))
நீக்குமுதல் கேள்விக்கான பதிலை மிகவும் ரசித்தேன் ஜி
பதிலளிநீக்குநன்றி.
நீக்குநேற்றைய கதை வாசிப்பின் போது
பதிலளிநீக்குநிவ்யா, ஷ்ரேயா என்ற பெயர்களை வாசிக்கும் பொழுது அனுக்ஷா, தமன்னா என்ற பெயர்கள் புழங்கிய பழைய எபி பதிவுகள் தான் ஞாபகத்திற்கு வந்தன.
ஒரு கதையைப் பின்ன இந்த கதாசிரியர்களுக்கு எப்படில்லாம் விஷயம்
கிடைக்கறதுன்னு ஆச்சரியமாத் தான் இருந்தது.
:)))
நீக்குஇன்னொரு பக்கம் KGG-யின் கைவண்ணம் வேறு.
பதிலளிநீக்குஇந்த சித்திரக் கலையில் இளமையிலேயே உங்கள்
ஆர்வம் இருந்ததா கெளதமன் ஸார்?
கொஞ்சம் இருந்தது. வேலை பார்த்தது அசோக் லேலண்ட் - டிராயிங் ஆபீஸ் என்று சொன்னவுடன் என் அம்மா " நீ போடற டிராயிங்குக்கா உனக்கு சம்பளம் கொடுக்கிறார்கள்?" என்று ஆச்சரியத்துடன் கேட்டார்கள்!
நீக்குஹஹ்ஹஹா.
நீக்குஅந்தக் காலத்திலேயே உங்கள் அசோக் லேலண்ட் பதிவுகளுக்கு நான் ரசிகன்.
முப்பது மணி நேரத்தில் நேற்றைய கதை வண்ணம் முதலிடத்தை அடைந்தது வரலாற்றுச் சாதனை..
பதிலளிநீக்குபுரியவில்லை
நீக்கு/// நேற்றைய கதை வாசிப்பின் போது நிவ்யா, ஷ்ரேயா என்ற பெயர்களை வாசிக்கும் பொழுது.. ///
பதிலளிநீக்குஇன்றைய கதாபாத்திரங்களுக்கு சராசரியாக 25, 30 வயது என வைத்துக் கொண்டால் அன்றைக்கு நிவ்யா, ஷ்ரேயா என்ற பெயர்கள் பொதுப் புழக்கத்தில் இருந்தனவா என்பதை யோசிக்கின்றேன்..
(நீ இப்படியே ஒரு பயனும் இல்லாமல் யோசித்துக் கொண்டே இரு!)
அனுஷ்கா, தமன்னா போலவே ஷ்ரேயாவும் நவ்யாவும் நடிகையரின் பெயராய் அமைந்தது
நீக்குஆச்சரியம்.
நெல்லைக்கு இந்த பழசெல்லாம் ஞாபகத்திற்கு வந்திருந்தால் வாசிக்கும் பொழுது அந்த அயர்ச்சி ஏற்பட்டிருக்காது தான். :))
நிவ்யா - Nivea என்றொரு முக அழகுச் சாந்து உள்ளது..
பதிலளிநீக்குஇப்படி எனில் சந்தைப் பொருள்களில் இருந்தே கதை நாயகியர்க்குப் பெயர் எடுக்கலாம்..
<:))
:)))
நீக்குநிவியா இல்லே!
நீக்குநவ்யா. அந்த 'வ்'வில் ஒரு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
வாஞ்சி நாதன் போன்ற ஆசிரியர்கள் பாராட்டுக்கு உரியவர்கள்.
பதிலளிநீக்குஅறுவது வயது நல்ல அறிவுரைகள். நீங்கள் கூறியதுபோல மன அமைதியும் மகிழ்ச்சியும் முக்கியம்.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குவாஞ்சி நாதன் போன்ற ஆசிரியர்கள் பாராட்டுக்கு உரியவர்கள்.
பதிலளிநீக்குஅறுவது வயது நல்ல அறிவுரைகள். நீங்கள் கூறியதுபோல மன அமைதியும் மகிழ்ச்சியும் முக்கியம்.
மீண்டும் நன்றி.
நீக்கு@ ஜீவி அண்ணா..
பதிலளிநீக்கு/// நேற்றைய கதை வாசிப்பின் போது நிவ்யா, ஷ்ரேயா என்ற பெயர்களை வாசிக்கும் பொழுது.. ///
நீங்கள் எழுதியிருந்ததைத்தான் அப்படியே கொண்டு வந்திருக்கின்றேன்...
அது தட்டச்சுப் பிழை. போகட்டும். அந்தக் கதைக்கு உங்கள் பின்னூட்டம் பார்த்த பொழுது,
நீக்கு'புலன் மிக்கவரை புலமை தெளிதல்...
பாம்பறியும் பாம்பின கால்.' என்னும் பழமொழி நானூறு செய்யுள் தான் நினைவுக்கு வந்தது.
எழுத்தாளர் உஷா அவர்களால் எபி தளத்திற்கு வந்து தன் கதைக்கான பின்னூட்டங்களைப் பார்க்க முடியாது போனதும் நல்லதுக்குத் தான் என்று நினைத்துக் கொண்டேன்.
நான் நேற்று எனது கருத்தாக எதுவும் பிழைபட எழுத வில்லையே..
நீக்குஅப்படியிருக்க,
இன்று ஏன் இப்படியொரு கருத்தோட்டம்?..
நேற்றைய பதிவுக்குப் போய்ப் பார்த்தேன்.
நீக்கு(உஷாவின் வருகை) எபிக்கு அதிர்ஷ்டம்
என்று வாழ்த்தியிருக்கிறீர்களே! அது போதாதா?
நம்ம சனிக்கிழமை விமர்சகர் தான் ஒரு பக்கக் கதையாகக் குறைத்திருக்கலாம் என்று சொல்லியிருந்தார்.
சங்கீதக் கச்சேரிகளில் விதவான்கள்அனுபவித்து ஆலாபனை செய்வதெல்லாம் அவருக்குப் பிடிக்காது போலும்.
ஆகா..
நீக்குநல்லது.. நல்லது..
அந்த நீல நிற டப்பா (ஒப்பனைச் சாந்து) Nivea எனக்கு ஒத்துக் கொள்ளாது..
பதிலளிநீக்குஎனது ஆதரவு Creme 21 ..
அது குவைத்தில் இருந்தபோது பயன்படுத்தியது..
இனி அதெல்லாம் எதற்கு?..
அதானே!
நீக்குபள்ளிக்கூட நினைவுகள் நன்று.
பதிலளிநீக்குநன்றி.
நீக்கு@ கௌதம்
பதிலளிநீக்கு/// புரியவில்லை///
கதையின் சிறப்புக்காக சொன்னேன்..
தங்களுக்குப் புரியாதது என்று ஏதும் இல்லை..
விளக்கம் அளித்ததற்கு நன்றி.
நீக்கு