திங்கள், 29 ஏப்ரல், 2024

"திங்க"க்கிழமை  :  கூலா கறி -  மனோ சாமிநாதன் ரெஸிப்பி 

 இதற்கு ஏன் இந்தப்பெயர் வந்ததென்று தெரியவில்லை. ஆனால் மிகவும் சுவையாக இருக்குமென்பதற்கு மட்டும் உத்தரவாதம் தர முடியும். யாரிடம் இந்தக் கறியை செய்யக் கற்றுக்கொண்டேன் என்பதும் நினைவில்லை. ஆனால் 40 வருடங்களுக்கு மேல் சாம்பாருக்கும் ரசம் சாதத்துக்கும் குருமாவிற்கும் இதை பக்கத்துணையாக செய்து வருகிறேன். நெய் சாதத்துக்கும் இது பக்கத்துணையாக மிகவும் சுவையாக இருக்கும். காய்கறிகள் அறவே இல்லாமல் இருக்கும் சமயத்தில் இது மிகவும் பயன்படும்.

கூலா கறி

தேவைப்படும் பொருள்கள்::

கடலை மாவு-4 கப்

பச்சைக் கொத்துமல்லி இலை- 2 கைப்பிடி

இஞ்சித்துருவல்-1 மேசைக்கரண்டி

பச்சை மிளகாய் காரமானதாக இருந்தால் 3 அல்லது 4

சோம்பு- 1 ஸ்பூன்

நெய்- 3 மேசைக்கரண்டி

உப்பும் எண்ணெயும் தேவையான அளவு

பெரிய வெங்காயம்- நீளமாக மெல்லியதாக அரிந்தது-2

தக்காளி பொடியாக நறுக்கியது-3

மஞ்சள் தூள்-அரை ஸ்பூன்

கரம் மசாலா- அரை ஸ்பூன்

மிளகாய்த்தூள்- அரை ஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது- 1 ஸ்பூன் [ விருப்பம் இருந்தால் மட்டும் ]

பொடியாக அரிந்த கறிவேப்பிலைகொத்தமல்லி சிறிது


செய்முறை:


2 கைப்பிடி கொத்தமல்லி இலைஇஞ்சிபச்சை மிளகாய் மூன்றையும் நன்கு கெட்டியாக அரைத்து கடலை மாவில் கொட்டவும்.

அதில் மஞ்சள் தூள்நெய் 2 மேசைக்கரண்டிஉப்பு சேர்த்து நன்கு கெட்டியாக பிசையவும்.

பிசைந்த மாவை எண்ணெயைத்தொட்டுக்கொண்டு சிலிண்டர் வடிவத்தில் உருட்டி அனைத்தையும் எண்ணெய் தடவிய இட்லி தட்டில் வைத்து 10 நிமிடங்களுக்கு ஆவியில் வேக வைக்கவும்.

அவை ஆறியதும் வட்ட வடிவில் துண்டுகள் போடவும்.


வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் அவைகளை பொன்னிறமாகப் பொறித்தெடுக்கவும்.

மறுபடியும் வாணலியில் மீதமிருக்கும் எண்ணெயை சூடு பண்ணவும்.

தேவையென்றால் சிறிது கூட எண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம்.

வெங்காயத்தைப்போட்டு நன்கு வதக்கவும்.

அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

இப்போது தக்காளித்துண்டுகள்மஞ்சள் தூள் சேர்த்து குழைய வதக்கவும்.

மேலே எண்ணெய் தெளிந்து வரும்போது பொரித்த கூலா துண்டுகளைப்போட்டுசிறிது நீர் தெளித்து மிதமான தீயில் சுருள வதக்கவும்.


தூள்களை சேர்த்து மேலும் கிளறவும்.

நன்கு கறி சேர்ந்து வந்ததும் மல்லிகறிவேப்பிலை சேர்த்து கிளறி பாக்கியுள்ள 1 மேசைக்கரண்டி நெய் சேர்த்து கிளறி இறக்கவும்.



18 கருத்துகள்:

  1. அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்..

    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
  3. தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
    தளிர் விளைவாகித்
    தமிழும் வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரி

    இன்றைய திங்கள் பதிவில் தங்கள் தயாரிப்பான கூலாகறி அருமையாக உள்ளது. படங்கள், செய்முறை விளக்கங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. இது வடைகறி மாதிரியான ருசியுடன் இருக்குமென நினைக்கிறேன். இதுவரை இம்மாதிரி செய்ததில்லை. நீங்கள் கூறுவது போல் வீட்டில் காய்கறி இல்லாத ஒரு பொழுதுக்கு இது மிகவும் உதவியாகவும், ருசியாகவும் அமையும். இதுபோல் நானும் ஒருநாள் செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. இதுவரை கேட்டிராத புது விதமான செய்முறை.. தெளிவான படங்கள்..

    அருமை..

    பதிலளிநீக்கு
  7. சாதாரணமாக சேம்பு இலையில் மாவைத்தடவி சுருட்டி துண்டுபோட்டு ஆவியில் வேகவைத்து பின்னர் பொரித்து எடுப்பார்கள். இதில் சேம்பு இலை இல்லை
    பருப்பு உசிலி ஆனால் காய் வகை தேவை.
    Jayakumar

    பதிலளிநீக்கு
  8. கடலை மாவில் கூலாகறி வித்தியாசம். செய்து பார்க்கிறேன்.
    நாங்கள் உழுந்து, பயறு ஊறவைத்து அரைத்து எடுத்து இதுபோன்று செய்வோம்.

    பதிலளிநீக்கு
  9. வித்தியாசமான ரெஸிப்பி படம் அருமை.

    பதிலளிநீக்கு
  10. இன்றைக்கு என் குறிப்பை வெளியிட்டுள்ளதற்கு அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்!
    என் கணினியில் சில பிரச்னைகள் காரணமாக காலையிலிருந்து இங்கே வர முடியவில்லை. தாமதமாக வந்ததற்கு வருந்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  11. வருகைக்கும் அருமையான கருத்துரை தந்தற்கும் அன்பு நன்றி கமலா ஹரிஹரன்! செய்து பார்த்து விட்டு உங்கள் கருத்தினைக்கூறுங்கள்!

    பதிலளிநீக்கு
  12. இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் துரை.செல்வராஜ்!

    பதிலளிநீக்கு
  13. இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகரன்!
    நீங்கள் கூறியிருக்கும் குறிப்பு கூட இந்த மாதிரி செய்முறை தான்! அந்த செய்முறையும் நன்றாக இருக்கும்!
    //பருப்பு உசிலி ஆனால் காய் வகை தேவை.//
    இப்படி கூறியிருப்பதற்கு அர்த்தம் என்னவென்று புரியவில்லை!

    பதிலளிநீக்கு
  14. வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி மாதேவி! அவசியம் செய்து பார்த்து சொல்லுங்கள்!
    உங்கள் செய்முறையையும் இங்கே எழுதலாமே!! அந்த முறையும் சுவையாக இருக்குமென்று தோன்றுகிறது!!

    பதிலளிநீக்கு
  15. இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி கில்லர்ஜி!!

    பதிலளிநீக்கு
  16. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  17. கூலாகறி கேள்வி பட்டது இல்லை. செய்முறைகுறிப்புகளும், படங்களும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  18. இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி கோமதி அரசு!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!