இன்றைய தனிப்பாடல் மேனி ஒரு செம்பவளம்... டிசம்பர் 1958 ல் வெளியானது. TMS குரலில் பாடல். அருள்மணி எழுதிய பாடல்.
மேனி ஒரு செம்பவளம் மேல் முழுதும் வெண்நீறு
தேனளைந்த தினைப் புசிக்கும்
திருத்தணிகை வேலனுக்கு ----(2)
ஆடிவரும் வண்ணமயில் அமர்ந்திருக்கும் பேரழகன்
ஆடிவரும் வண்ணமயில் அமர்ந்திருக்கும் பேரழகன்
தேடி வரும் துயரெல்லாம் தீர்த்து வைக்கும் கந்தனுக்கு
தேடி வரும் துயரெல்லாம் தீர்த்து வைக்கும் கந்தனுக்கு - மேனி ஒரு
ஆற்றிவிடும் ஆறுமுகம் அசுரனுக்கு மாறு முகம்
ஆற்றிவிடும் ஆறுமுகம் அசுரனுக்கு மாறு முகம்
போற்றும் ஜெக தீசனுடன் பேசும் ஞானதேவனுக்கு
போற்றும் ஜெக தீசனுடன் பேசும் ஞானதேவனுக்கு - மேனி ஒரு
ஏவலுக்கு சேவல் கொண்ட ஏரகத்தின் குமரனுக்கு
ஏவலுக்கு சேவல் கொண்ட ஏரகத்தின் குமரனுக்கு
காவலுக்கு வேலும் உண்டு கதிர்காம செம்மலுக்கு
காவலுக்கு வேலும் உண்டு கதிர்காம செம்மலுக்கு - மேனி ஒரு
முருகா முருகா முருகா முருகா
============================================================================================
1992 ல் ஒரு கதை எழுதும் சாஃப்ட்வேரை வைத்து கமல் 7 நாட்களில் எழுதி வெளியான படம் தேவர் மகன். 5 தேசிய விருது பெற்ற திரைப்படம். 1972 ல் வெளியான Godfather மற்றும் 1973 ல் வெளியான கன்னடப்படம் காடு படம் ஆகியவை இந்தப் படத்தின் கதைக்கு இன்ஸ்பிரேஷன் என்று கமல் சொல்லி இருக்கிறார். மாபெரும் வெற்றிப்படம். காட்ஃபாதர் படத்தை வைத்து சிவாஜி கமலை வைத்து முக்தா சீனிவாசன் ஒரு படம் எடுக்க நினைத்தாராம். கமலின் நண்பர் அனந்து அது சிவாஜி படமாக பார்க்கப்படுமே தவிர கமல் படமாக இருக்காது என்று சொன்னதால் கமல் மறுத்து விட்டதாகவும் சொல்கிறார்கள். ஆனால் தேவர் மகனில் சிவாஜி நடித்திருக்கிறார்!
இன்னொரு வம்பும் உண்டு. கங்கை அமரன் 'அதிவீரராமபாண்டியன்' என்கிற பெயரில் இதே கதையை கமலை வைத்து இயக்க முயன்றபோது, இளையராஜா கமலிடம் அமர் இயக்குவதற்கு லாயக்கில்லாதவன் என்று சொல்லி நிறுத்தி விட்டாராம். அந்தக் கதையைத்தான் கமல் தேவர் மகனாக எடுத்து, தனக்கு இயக்கும் அனுபவம் இல்லாததால் பரதனிடம் கொடுத்து இயக்கச் சொன்னதாகவும் சொல்கிறார்கள்.
அந்தப் படத்திலிருந்து வாலி எழுதி, இளையராஜா இசையில் சுத்தசாவேரி ராகத்தில் அமைந்த, மின்மினி, சிந்துஜா பாடிய மணமகளே மணமகளே பாடல் இன்றைய பகிர்வில்...
மணமகளே மணமகளே
மண மகளே மண மகளே வாழும் காலம் சூழும்
மங்களமே மங்களமே
குண மகளே குல மகளே பாலும் தேனும் நாளும்
பொங்கிடுமே பொங்கிடுமே
குற்றம் குறை இல்லா ஒரு கொங்கு மணிச்சரமே
மஞ்சள் வளமுடனே என்றும் வாழணும் வாழணுமே
மண மகளே மண மகளே வாழும் காலம் சூழும்
மங்களமே மங்களமே
குண மகளே குல மகளே பாலும் தேனும் நாளும்
பொங்கிடுமே பொங்கிடுமே
வலது அடி எடுத்து வைத்து வாசல் தாண்டி வா வா
பொன் மயிலே பொன் மயிலே
புகுந்த இடம் ஒளிமயமாய் உன்னால் தானே மாறும்
மாங்குயிலே மாங்குயிலே
இல்லம் கோயிலடி அதில் பெண்மை தெய்வமடி
தெய்வம் உள்ள இடம்
என்றும் செல்வம் பொங்குமடி
மண மகளே மண மகளே வாழும் காலம் சூழும்
மங்களமே மங்களமே
குண மகளே குல மகளே பாலும் தேனும் நாளும்
பொங்கிடுமே பொங்கிடுமே…
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
பதிலளிநீக்குநற்றாள் தொழாஅர் எனின்..
தமிழ் வாழ்க..
வாழ்க, வாங்க...
நீக்குகற்பக கணபதி
பதிலளிநீக்குகனிவுடன் காக்க..
முத்துக்குமரன்
முன்னின்று காக்க..
தையல் நாயகி
தயவுடன் காக்க..
வைத்திய நாதன்
வந்தெதிர் காக்க..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
வாங்க செல்வாண்ணா... வணக்கம்.
நீக்குமேனி ஒரு செம்பவளம் மேல் முழுதும் வெண்நீறு
பதிலளிநீக்குதேனளைந்த தினை புசிக்கும்
திருத்தணிகை வேலனுக்கு..
மனதுக்கு நெருக்கமான பாடல்..
பாடலைக் கேட்டு பல வருடங்கள்...
ஆம். எனக்கும்,திடீரென ஞாபகம் வந்தது!
நீக்குதிருவிழாக் காலங்களில் இப்படியான பாடல்களை ஒலிபரப்புவது யார்?...
பதிலளிநீக்குகபகப கபா என்றொரு அலறல்...
மைக் செட் காரனின் இஷ்டம் தான் எல்லாமும்...
குறை ஏதும் சொன்னால் சாமி குத்தம் ஆகி விடும்...
:))
நீக்குவல்லினம் மெல்லினம் அறியாத தமிழ் கொண்டு கோயில் வர்ணனை தருகின்றார்களே அதைப் போல
பதிலளிநீக்குஇன்றைய பக்க்க்க்திப் பாடல்கள் ஒன்றும் சொல்வதற்கு இல்லை..
இன்று பக்திப்படல்கள் புதிதாக புனையப்பட்டு வருகின்றனவா என்ன...
நீக்குஒரு பழம் - சரி
பதிலளிநீக்குஒரு இலை - சரி..
ஒரு தண்ணீர்.. (!?)
எப்படிச் சரியாகும்?..
இங்கே தமிழ் வளர்க்கின்றார் ஒருவர்...
ஆ ஆ ஆ ஆடி
மா மாதம்... - இன்னொரு பக்கம்...
எல்லாம் தலைஎழுத்து..
:(
நீக்குமணமகளே மண மகளே வாழும் காலம் சூழும்
பதிலளிநீக்குமங்களமே மங்களமே
குண மகளே குல மகளே பாலும் தேனும் நாளும்
பொங்கிடுமே பொங்கிடுமே..
அருமை.. அருமை..
வாழ்க பல்லாண்டு..
__/\__
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்கம்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வெள்ளி பாடல் பகிர்வில் இரு பாடல்களும், அதன் விபரங்களும் அருமை.
முதல் தனிப்பாடல் இப்போதுதான் கேட்டு ரசித்தேன். டி. எம். எஸ் அவர்களின் தெய்வீக பாடல்கள் பலவற்றை கேட்டிருந்தாலும், இந்தப்பாடலை இதுவரை கேட்டதில்லை.
இரண்டாவது பாடலும் அடிக்கடி கேட்ட நினைவு இல்லை. இந்தப்படம் வந்தது தெரியுமே தவிர பார்த்ததில்லை. இந்தப்பாடலையும் இப்போதுதான் கேட்டு ரசித்தேன்.இதிலே இன்னொரு பாடலை அடிக்கடி வானொலியிலும், தொ. காட்சியிலும் கேட்டிருக்கிறேன். இந்தப் படத்தைப்பற்றிய தகவல்களுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மேனி ஒரு செம்பவளம் கேட்டதில்லையா... அடடே... தேவர் மகன் நீங்கள் பார்த்ததில்லை என்பதும் ஆச்சர்யம். நல்ல படம். நீங்கள் சொல்லும் இன்னொரு பாடல் இஞ்சி இடுப்பழகி பாடலா,
நீக்குஆம்.
நீக்கு//ஒரு கதை எழுதும் சாஃப்ட்வேரை வைத்து கமல் 7 நாட்களில் எழுதி.//
பதிலளிநீக்குஹி..ஹி..
சில விஷயங்கள் சொல்லிச் சொல்லியே உண்மை ஆகிவிடும் போலிருக்கு.
வரலாறுகள் கூட இப்படித் தானோ என்னவோ? யார் கண்டார்கள்?
60 ஆண்டுகளுக்குப் பின்னால் படிக்கப் போகும் இன்றைய தமிழக வரலாறு பற்றி நினைத்தால் இப்பொழுதே சிரிப்பு பொங்கி வருகிறது.. :))
இப்போதைய செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தில் கூட கரு சொல்லி கதை எழுதி வாங்க முடியும் ஜீவி ஸார்... இந்தப் அப்படத்துக்கு கமல் என்ன செய்தாரோ... நான் அறியேன்!
நீக்குஇரண்டும் சிறப்பான பாடல்களே...
பதிலளிநீக்குஇரண்டாவது பாடல் இயங்கவில்லை ஜி
அப்படியா... எனக்கு இயங்குகிறதே ஜி... செல்வாண்ணா, கமலா அக்கா கூட கேட்டுவிட்டு பதில் சொல்லி இருக்கிறார்களே....
நீக்குஇரண்டு பாடல்களுமே அருமையானவை. கேட்டிருக்கிறேன்.
பதிலளிநீக்குநன்றி மாதேவி.
நீக்கு