திங்கக்கிழமை.பதிவு – சோஹன் ஹல்வா - நெல்லைத்தமிழன்
எனக்கு மிகவும் பிடித்தது சோஹன் ஹல்வா. இதை நான்
இந்தியாவில் பெரும்பாலும் பார்த்தில்லை. (நான் தமிழகத்தைவிட்டு ரொம்ப தூரம் சென்றதும்
இல்லை). பஹ்ரைனில் இருக்கும்போது இந்த ஹல்வாவை பாகிஸ்தானி கடைகளில் பார்த்திருக்கிறேன்.
ரொம்பவே நெய் ஒட்டிக்கொண்டு, சாப்பிடுவதற்குக் கொஞ்சம் கடினமாக இருக்கும். ரொம்பவே
ருசியானது. நான் அவ்வப்போது இதனை வாங்குவேன்.
இந்த இனிப்பில் பிரச்சனை என்னன்னா, பற்களுக்கிடையில் ஒட்டிக்கொள்ளும். சாப்பிட்ட பிறகு
பல் துலக்கவில்லை என்றால், பற்கள் கெட்டுப்போகும்.
எனக்கு இரண்டு வகையான அல்வாக்கள் பிடிக்கும். ஒன்று
கராச்சி அல்வா. அது ரப்பர் போல இழுவையாக இருக்கும். அதனை மும்பையில் டி.மார்ட்டில்
பல முறை வாங்கியிருக்கிறேன். கராச்சி அல்வா என்று நம்பி சில முறை வாங்கியதில் இழுவையாக
இல்லாமல் இருந்து என்னை ஏமாற்றியிருக்கிறது.
அடுத்தது இந்த சோஹன் ஹல்வா.
கராச்சி அல்வாவிற்கு ரொம்பவே மெனெக்கிடனும். பத்து
நிமிடங்களில் கராச்சி அல்வா, அரைமணி நேரத்தில் அதி ருசி கராச்சி அல்வான்னு போட்ட யூடியூப்
பக்கமே போயிடாதீங்க. அதெல்லாம் கராச்சி அல்வா கிடையாது. பல்லுபோன பெருசுகளுக்குக் கொடுக்கும்
அல்வா அது.
சரி வந்த வேலையைக் கவனிப்போம். இந்த இனிப்பு செய்ய மிகக் குறைந்த அளவு நேரமே போதும்.
ஆனால் கொஞ்சம் கவனமுடன் செய்யணும்.
தேவையான பொருட்கள்
வித விதமான நட்ஸ் (முந்திரி, பாதாம் உடைத்தது, கசகசா,
பிஸ்தா…)
பேப்பர் கப் 15-20. இதுதான் சரியா வரும்.
பால் பவுடர் ½ கப்
மைதா ½ கப்
ஜீனி 2 கப்
நெய் ½ கப்
செய்முறை
எல்லா நட்ஸையும் கொஞ்சம் பொடியா, அரையா கட் பண்ணி
வச்சுக்கோங்க.
பேப்பர் கப்
எல்லாத்துலயும் உள்ளே நெய் தடவிக்கோங்க.
அதில் இந்த பொடித்த நட்ஸ், பாதம் முந்திரி எல்லாம்
சிறிதளவு போட்டுக்கோங்க. இதில் எவ்வளவு போடறீங்களோ அவ்வளவு நட்ஸ் ஒவ்வொரு சோஹன் அல்வாவிலும்
இருக்கும். அதுவும் தவிர சோஹன் அல்வாவின் மேல்புறம் இந்த நட்ஸ்கள் தெரிந்து அழகா இருக்கும்.
நல்ல கடாய்ல, ஜீனி 2 கப் போடுங்க. அதில் நெய் ½ கப்
சேர்த்துக்கோங்க.
இப்போ அடுப்பை SIMல வைத்து நல்லா கிளறணும். தண்ணீர்
கொஞ்சம்கூட சேர்க்கவில்லை என்பதைக் கவனிச்சுக்கோங்க.
அடுப்பு சிம்ல தான் இருக்கணும். தொடர்ந்து இதைக்
கிளறணும். கொஞ்ச நேரம் ஆனபிறகு நெய் ஜீனி கலந்து, ஜீனி முழுவதுமாய் நெய்ல உருகும்.
நிறமும் மாறும்.
கைவிடாம கலக்கணும். (பெரிய வேலை இல்லை. அதிகபட்சம்
7-10 நிமிடங்கள்). இப்போ நல்லா கலந்து நிறம் மாற ஆரம்பிக்கும். (கேரமலைஸ் பதம்).
இப்போ அடுப்பை அணைத்துவிட்டு, மைதா+பால் பவுடர் கலவையை
இதில் சேர்த்து கைவிடாம கிளறணும். இதை ரொம்ப
வேகமாச் செய்யணும். தொடர்ந்து கிளறும்போது அல்வா பதத்திற்கு வருவது போல இருக்கும்.
கடாய்ல ஒட்டாம வரும்.
இந்தக் கலவையை உடனே ஸ்பூனில் எடுத்து ஒவ்வொரு கப்பிலும்
2 ஸ்பூன்கள் விடவும். விடும்போதே உங்களுக்குத் தெரியும், சோஹன் அல்வா எவ்வளவு உயரத்துக்கு
வரும் என்று. அரை இஞ்சுக்கும் குறைவா இருந்தாலே போதும்.
நேரம் கடத்தாமல் எல்லா பேப்பர் கப்பிலும் விடவும். உங்களுக்கு பிடிபடுவதற்காகச் சொல்கிறேன். கடைசில
கொஞ்சம் பாக்கி இருந்தால், சின்ன தட்டில் நெய் தடவிட்டு அதில் விட்டுவிடலாம். ஸ்பூனால லைட்டா சரிப்படுத்தவும் (மேற்பகுதி தட்டையாக
இருப்பதற்காக)
அப்படியே கொஞ்ச நேரம் ஆறவிட்டுடுங்க. விரைவில் ஆறிடும்.
பிறகு ஒவ்வொரு பேப்பர் கப்பையும் எடுத்து, கட் பண்ணி
எடுத்துவிட்டால், சோஹன் அல்வா தயார்.
கவனம் தேவை
ரொம்ப கிளறிக்கிட்டே இருந்தால், கலவையில் கசப்புச்
சுவை ஏறிடும்,, கேரமலைஸ் ஆவதால்.
ஜீனியையும் நெய்யையும் தொடர்ந்து கலக்கலைனா ஜீனி
முழுவதும் நெய்யில் கரையாது. கேரமலைஸ் ஆகாது.
அடுப்பை சிம்மில் வைக்காமல் அதிக சூடு வைத்தால்,
ஜீனி கடாயில் ஒட்டிக்கொண்டு கருகிவிடும்.
அதனால அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு, இந்த இனிப்பு தயார் செய்வதில் கவனம் செலுத்தவும். அடுத்தவங்கள்ட பேசிக்கொண்டே இந்த வேலையைச் செய்ய முடியாது.
சரி, எப்படி இருந்தது என்று கேட்கிறீர்களா? நன்றாகத்தான் இருந்தது. இன்னும் கொஞ்சம் முன்னாலேயே எடுத்திருந்தால் இன்னும் சாஃப்டா இருக்குமா என்று இன்னொரு தடவை செய்து பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.
ஒன்னு புரியுது. நெல்லை ஆட்கள் எந்த ஊர் போனாலும் அல்வா சாப்பிடுவதையோ, மற்றவர்க்கு அல்வா கொடுப்பதையோ விடமாட்டார்கள்.
பதிலளிநீக்குஅல்வா தீபவளிக்கு தான் செய்யணும்.
இந்தியாவே கொதித்து நிற்கும் இத்தருணத்தில் பாகிஸ்தான் இனிப்பை கொடுத்ததற்கு தனி கடும் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன். சும்மா ஒரு கலாய்ப்பு தான்.
Jayakumar
வாங்க ஜெயகுமார் சார். சோஹன் அல்வா ரொம்ப சூப்பரா இருக்கும்.
நீக்குநீங்க சொல்றதுனால இனி யாரைச் சந்தித்தாலும் அல்வா கொடுத்துவிடுகிறேன். என் பெண் திருமணத்திற்கு நெல்லை அல்வா மிக்சர் (சாந்தி விலாஸ்) எல்லோருக்கும் கொடுக்கணும் என நினைத்திருந்தேன். ப்ராக்டிகல் காரணங்களால் இயலாது போயிற்று.
எனக்கு ரொம்பப் பிடித்தது பாகிஸ்தான் குல்கந்து மாம்பழம் போன்றவை
/நீங்க சொல்றதுனால இனி யாரைச் சந்தித்தாலும் அல்வா கொடுத்துவிடுகிறேன்./
நீக்குஹா ஹா ஹா. சந்திப்பதற்கு முன்னரே பதிவிலேயே எங்களுக்கு அல்வா தர கற்று கொண்டு விட்டீர்கள். தந்தும் விட்டீர்கள்.:)) (நானும் கலாய்க்கத்தான் இவ்விதம் சொன்னேன்.தவறாக நினைக்க வேண்டாம். )
கமலா ஹரிஹரன் மேடம்.. உங்களைச் சந்தித்தால், உங்களுக்கு திருநெல்வேலி அல்வா கொடுக்க வாங்கி வைத்திருந்தேன், உங்களுக்கு ஷுகர் இருக்குமோ, கொடுத்தால் உங்கள் உடல்நலனுக்குக் கேடோ என்ற சந்தேகத்தினால் எடுத்துவரலைனு சொல்லி அல்வா கொடுத்தால் போச்சு
நீக்குஹா ஹா ஹா. எனக்கே திருநெல்வேலி அல்வாவா? சூப்பர்.
நீக்கு/எடுத்துவரலைனு சொல்லி அல்வா கொடுத்தால் போச்சு/ ஹாஹாஹா ஓ.. இப்படியும் அல்வா கொடுக்கலாம் இல்லையா? ரசித்தேன்.
கமலாக்கா அதைச் சொல்லுங்க நமக்கே அல்வாவா!!!..
நீக்குநம்ம ரெண்டு பேருமே இனியவர்கள். அதனால பாருங்க மேலே நெல்லை சொல்லியிருக்கார் பாருங்க!!
கீதா
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ப்ரார்த்தனைக்கு நன்றி கமலா ஹரிஹரன் மேடம்
நீக்குதிரு. நெல்லை தமிழன் அவர்கள் எல்லாருக்கும்
பதிலளிநீக்குஅல்வா கொடுத்து தான் நெல்லை தான்
என்பதை சொல்லி பெருமிதம் அடைந்திருக்கிறார்.
நன்றி
கே. சக்ரபாணி
வாங்க சக்ரபாணி சார். நீங்க கும்பகோணமான்னு கேட்டிருந்தேனே
நீக்குவணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய திங்கள் இனிப்புடன் மலர்ந்துள்ளது. சோஹன் அல்வா செய்முறை படங்கள் அனைத்தும் அட்டகாசமாக உள்ளது. அழகாக பொறுமையாக செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள். பேப்பரில் சூடான கலவையை விட்டால், பேப்பர் வாசனை வராதோ? ஒரே மாதிரியான சின்ன எவர்சில்வர் கிண்ணங்களில், விட்டு ஆறியதும், இட்லி எடுப்பது போல ஸ்பூன் வைத்து எடுத்தால் சரியாக வருமா? ஷேப் மாறி விடுமோ.? இது பார்க்கவே அழகாக உள்ளது. நானும் அல்வாகோதுமை வைத்து அரைத்து பாலெடுத்து முன்பு பண்ணியிருக்கிறேன். பின் கோதுமை மாவை கரைத்தும், தங்களைப்போல மைதா மாவிலும் பண்ணியுள்ளேன். (தட்டில் கொட்டி விள்ளல்களாக) ஆனால், உங்கள் செய்முறை பக்குவமும், படங்களும் சூப்பர். இப்படி ஒரு தடவை முயற்சிக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரிஹரன் மேடம். கோதுமையை ஊறவைத்து அரைத்து பாலெடுத்து அல்வா பண்ணினால் யம்மியா இருக்கும்.நான் ஆறாவது படிக்கும்போது அப்பா நிறையதடவை பண்ணியிருக்கார். மைதா மாவிலும் எனக்கு பண்ணத்தெரியும்.
நீக்குசோஹன் அல்வால பேப்பர் வாசனைலாம் வரலை.
எத்தனை ஹல்வாக்கள் வந்தாலும் தின்னவேலி கோதுமை அல்வா போன்று? அது தனிதான்....சம்பா கோதுமைல பண்ணுவது செமையா இருக்கும். இப்பலாம் மற்ற உருண்டை கோதுமையிலும் செய்யறாங்க. ஆனால் ஒருஜினல் சம்பா கோதுமையில்தான்.
நீக்குகீதா
அதுலயாவது திருநெவேலியை யாரும் மிஞ்ச முடியாது என்பதில் சந்தோஷம் மதுரை ஹேப்பிமேன் முந்திரி அல்வா உட்பட
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குசரணம் சரணம்
நீக்குரோஹன் ஹல்வா என்று சற்றே மயங்கி விட்டேன்...
பதிலளிநீக்கு(விளம்பரங்கள் செய்த வினை)
வாங்க துரை செல்வராஜ் சார். சமீபத்துல வாழை இலை அல்வா செய்முறை பார்த்தேன். சாப்பிட யாரேனும் தயார்னா நான் செய்து தரத்தயார்
நீக்குஇதைத்தான் நானும் ஸ்ரீராம் சகோதரரிடம் போன வியாழன் பதிவில் சொன்னேன். "வாழை இலையை வைத்தே ஒரு ஸ்வீட் செய்கிறார்கள் என்று." நீங்களும் செய்து பார்த்து ஒரு எ. பி திங்களில் பகிருங்களேன் . அதைப்பார்த்து நாங்களும் செய்ய ஆரம்பிக்கிறோம். (இப்போது வாழை இலையில் மதிய உணவு சாப்பிடுவதே அதிசயமாக விட்டது. இதில் எங்கே வாழை இலை ஸ்வீட் எனவும் என் மனம் நினைக்கிறது.)
நீக்குகமலா ஹரிஹரன் மேடம்... இப்போ மைசூரில் ஆந்திரா மீல்ஸ் வாழை இலையில் சாப்பிட்டேன். உங்க கருத்தைப் படித்ததும் கடைகள்ல வாழை இலை அல்வா புது இலையில்தான் பண்ணுவானா என்ற சந்தேகம் எழுகிறது
நீக்கு/உங்க கருத்தைப் படித்ததும் கடைகள்ல வாழை இலை அல்வா புது இலையில்தான் பண்ணுவானா என்ற சந்தேகம் எழுகிறது. /
நீக்குஆகா... இனி. கடைகளில் அது (அந்த இனிப்பு) பிரபலமாகி விட்டால் சாப்பிடுவது கடினந்தான். ஆனால், நான் பார்த்தது யூடியூபில் புத்தம் புதிதான வாழை இலை பறித்து வந்து செய்யும் அல்வா. நீங்களும் அதைத்தான் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இனி கால்நடைகளுக்கு பேப்பர்தான் உணவு. (ஏற்கனவே அதற்குப் பழகிப் போயிருக்கிறது..) வாழை இலை இனி அதற்கே அதிசயமாகி விடும்.
இப்படியொரு சிறப்பான குறிப்பு சமீபத்தில் வந்ததில்லை..
பதிலளிநீக்குசிறப்பு..
மிக்க நன்றி துரை செல்வராஜ் சார்
நீக்குநீங்களும் சமையல் வாதியா?..
பதிலளிநீக்குபொடித்த நட்ஸ். என்றெல்லாம் எழுதிக் கொண்டு?...
ஆஹா. என்னையும் சமையல் வல்லுநர்ல ஒண்ணாச் சேர்த்துட்டீங்களே. சில நேரம் சரியான தமிழ் வார்த்தை தெரிவதில்லை
நீக்குசோஹன் அல்வா எனக்கு மிகவும் பிடிக்கும். சோஹன் அல்வா,கராச்சி அல்வா இரண்டும் ஒன்றுதானா? பல நாட்களுக்கு முன்பு வல்லி அக்கா அவருடைய பதிவில் சோஹன் அல்வா செய்முறை எழுதியிருந்தார், அது வித்தியாசமாக இருந்தது. டில்லியில் மிகவும் ஃபேமஸ் இது. டில்லியில் முப்பது வருடம் வசித்த என் சம்பந்திக்கு சோஹன் அல்வா என்றால் என்னவென்று தெரியாதது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.
பதிலளிநீக்குவாங்க பானுமதி வெங்கடேஸ்வரன் மேடம். கராச்சி அல்வா ஜவ்வு மாதிரி இருக்கும். எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். சோஹன் ஹல்வா கொஞ்சம் சாலிடா இருக்கும்
நீக்குநெல்லை, சோஹன் ஹல்வா அருமையாக வந்திருக்கிறது. பல்லுல்ல கடுக்குனு சிலப்போ ஒட்டிக்கும். காரமலைஸ் பண்ணுவதால். ஆனால் சுவை அபாரமாக இருக்கும்.
பதிலளிநீக்குஉங்க செய்முறையும் அபாரமாக வந்திருக்கு.
ஹூம் என்ன, அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததேன்னு பாடத்தான் வேண்டும்.
நீங்களும் தான் பல திறமைகளைக் கொண்டிருக்கிறீர்கள். நல்லா பாடுவீங்க, நல்லா எழுதறீங்க, நல்லா படம் வரைவீங்க, நல்லா சமையல் செய்வீங்க! நல்லா படம் எடுக்கறீங்க....
கீதா
வாங்க கீதா ரங்கன் க்கா. நல்லா அல்வா குடுக்கறேன்னு சொல்லாம இருந்தால் சரிதான். கவுண்டமணி சொல்வாரே.. ஒருத்தருக்கு ஒரு திறமைதான் இருக்கும்னு.
நீக்குஅல்வா பார்க்கவே நல்ல அழகாக வந்திருக்கிறது. சுவையும் நன்றாகவே இருக்கும் என்று தெரிகிறது.
பதிலளிநீக்குவாங்க மாதேவி அவர்கள். மிக்க நன்றி
நீக்குவணக்கம் நெல்லை சார். உங்களைப்போலவே
பதிலளிநீக்குநானும் கும்பகோணம் என்பதில் பெருமை கொள்கிறேன்.
கே. சக்ரபாணி
உங்கள் பெயரை வைத்து பல நாட்கள் அப்படி நினைத்திருந்தேன். சக்ரபாணி கோயில். என் மனைவி கும்பகோணம். நான் திருநெல்வேலி
நீக்குசோஹன் ஹல்வா செய்முறை விளக்கமும், படங்களும் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குவாங்க கோமதி அரசு மேடம். நன்றி
நீக்கு