வெள்ளி, 17 மே, 2024

காலமகள் பெற்ற மயில் இரவினிலே மலர்ந்தாள்

 தவசீலன் எழுதிய பாடலுக்கு கே  வீரமணி இசையில் பி சுசீலா பாடிய பாடல்.

ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப் பூ எங்கள் தேவி முகம்
அந்த ஆதிசக்தி கருமாரி ஆலயம் வாழ்வு தரும்
ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப் பூ எங்கள் தேவி முகம்
அந்த ஆதிசக்தி கருமாரி ஆலயம் வாழ்வு தரும்
மங்கைய ரெல்லாம் போற்றி வணங்கும் மங்கலச் செல்வம்
மங்கைய ரெல்லாம் போற்றி வணங்கும் மங்கலச் செல்வம்
அதைக் குங்குமத்தாலே அள்ளிக் கொடுக்கும் கலியுக தெய்வம் - ஆயிரம்

ஆனி மறைந்து ஆடி பிறந்ததும் கண் மலரும்
கருமாரியம்மனின் அருள் மழையாலே மண்குளிரும்
ஆனி மறைந்து ஆடி பிறந்ததும் கண் மலரும்
கருமாரியம்மனின் அருள் மழையாலே மண்குளிரும்
முன்னை வினைகளை ஓடிடச் செய்யும் அன்னையின் தீர்ப்பு
முன்னை வினைகளை ஓடிடச் செய்யும் அன்னையின் தீர்ப்பு
அவள் முத்துக் கரங்களில் சூட்டி மகிழ்வோம் சந்தனக் காப்பு - ஆயிரம்...

நதியாய்ப் பாயும் பன்னீராலே அபிஷேகம்
தினம் நாற்பது கோடி நறுமலராலே அலங்காரம்
நதியாய்ப் பாயும் பன்னீராலே அபிஷேகம்
தினம் நாற்பது கோடி நறுமலராலே அலங்காரம்
தங்க ரதத்தில் அம்மன் அமர்ந்து ஊர்கோலம்
தங்க ரதத்தில் அம்மன் அமர்ந்து ஊர்கோலம்
அவள் தரிசனம் கண்டு துதிப்பவர்க்கெல்லாம் நலம் சேரும்
ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப் பூ எங்கள் தேவி முகம்
அந்த ஆதிசக்தி கருமாரி ஆலயம் வாழ்வு தரும்
மங்கைய ரெல்லாம் போற்றி வணங்கும் மங்கலச் செல்வம்
மங்கைய ரெல்லாம் போற்றி வணங்கும் மங்கலச் செல்வம்
அதைக் குங்குமத்தாலே அள்ளிக் கொடுக்கும் கலியுக தெய்வம்
கலியுக தெய்வம் கருமாரி கலியுக தெய்வம்



===============================================================================================

1963 ல் வெளியான திரைப்படம் அன்னை இல்லம்.  சிவாஜி கணேசன், தேவிகா, நம்பியார், முத்துராமன், நாகேஷ் நடித்தது.  பி மாதவன் இயக்கம்.  கண்ணதாசன் பாடல்களுக்கு இசை கே வி மஹாதேவன்.

திரையுலகினரால் அன்புடன் மாமா என்று அழைக்கபப்டும் கே வி மகாதேவன் இசையில் இந்தஹப் படத்தின் பாடல்கள் அத்தனையும் ஹிட்.  இந்தப் படத்திலிருந்து T M சௌந்தர்ராஜன் பாடிய எண்ணிரண்டு பதினாறு வயது என்கிற பாடல் இன்று.  படத்தின் கதையை விமர்சகர்கள் பெரிதாக கொண்டாடவில்லை என்பதோடு குறையும் சொன்னார்கள் என்றாலும் நூறு நாட்களைத் தாண்டி ஓடி வசூல் செய்ததாம் படம்.

காதல் கொண்டிருக்கிறேன் என்று நண்பனிடம் சொல்லி காதலியை வர்ணிக்கும் நாயகன்... இனிமையான பாடல்.

எண்ணிரண்டு பதினாறு வயது
எண்ணிரண்டு பதினாறு வயது அவள்
கண்ணிரண்டில் ஆடுதம்மா காதல் கொண்ட மனது
எண்ணிரண்டு பதினாறு வயது அவள்
கண்ணிரண்டில் ஆடுதம்மா காதல் கொண்ட மனது
எண்ணிரண்டு பதினாறு வயது

முன்னிரண்டு மலரெடுத்தாள் என் மீது தொடுத்தாள்
முக்கனியும் சர்க்கரையும் சேர்த்தெடுத்துக் கொடுத்தாள்
முன்னிரண்டு மலரெடுத்தாள் என் மீது தொடுத்தாள்
முக்கனியும் சர்க்கரையும் சேர்த்தெடுத்துக் கொடுத்தாள்
முக்கனியும் சர்க்கரையும் சேர்த்தெடுத்துக் கொடுத்தாள்

எண்ணிரண்டு பதினாறு வயது அவள்
கண்ணிரண்டில் ஆடுதம்மா காதல் கொண்ட மனது
எண்ணிரண்டு பதினாறு வயது

காலளந்த நடையினில் என் காதலையும் அளந்தாள்
காலமகள் பெற்ற மயில் இரவினிலே மலர்ந்தாள்
காலளந்த நடையினில் என் காதலையும் அளந்தாள்
காலமகள் பெற்ற மயில் இரவினிலே மலர்ந்தாள்
காலமகள் பெற்ற மயில் இரவினிலே மலர்ந்தாள்
எண்ணிரண்டு பதினாறு வயது அவள்
கண்ணிரண்டில் ஆடுதம்மா காதல் கொண்ட மனது
எண்ணிரண்டு பதினாறு வயது

சுற்றி நான்கு சுவர்களுக்குள் தூக்கமின்றிக் கிடந்தோம்
சுற்றி நான்கு சுவர்களுக்குள் தூக்கமின்றிக் கிடந்தோம் சிறு
துன்பம் போன்ற இன்பத்திலே இருவருமே நடந்தோம்
துன்பம் போன்ற இன்பத்திலே இருவருமே நடந்தோம்
எண்ணிரண்டு பதினாறு வயது அவள்
கண்ணிரண்டில் ஆடுதம்மா காதல் கொண்ட மனது
எண்ணிரண்டு பதினாறு வயது

36 கருத்துகள்:

  1. செல்வதுள் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாந் தலை..

    வாழ்க குறள்..

    பதிலளிநீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
    தளிர் விளைவாகித்
    தமிழும் வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. இரண்டாவது பாடல் மிகவும் பிடித்தமான பாடல்.

    முதல் பாடலைக் கேட்ட நினைவு இல்லை. கேட்டுப் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. இரண்டும் சிறப்பான பாடல்களே ஜி

    பதிலளிநீக்கு
  6. முதல் பாடல் தனித்துவமான பாடல்..

    என்றும் பசுமையானது..

    பதிலளிநீக்கு
  7. எண்ணிரண்டு பதினாறு வயது..

    என்றென்றும்

    எண்ணிரண்டு பதினாறு வயது..

    பதிலளிநீக்கு
  8. காலளந்த நடையினில் என் காதலையும் அளந்தாள்..

    காலமகள் பெற்ற மயில் இரவினிலே மலர்ந்தாள்..

    அட.. அட!..

    பதிலளிநீக்கு
  9. இரண்டாவது பாடல் எந்தக் காலத்திலும்
    மனம் கவர்ந்த பாடல்.

    //முன்னிரண்டு மலரெடுத்தாள்
    என் மீது தொடுத்தாள்..

    முக்கனியும் சர்க்கரையும் சேர்த்தெடுத்துக் கொடுத்தாள்..//

    //காலளந்த நடையினில்
    என் காதலலையும் அளந்தாள்..
    காலமகள் பெற்ற மகள்
    இரவினிலே மலர்ந்தாள்//

    இந்த கண்ணதாசனுக்குத் தான் வார்த்தைகள் காந்துக் கிடந்து அவர் நினைவில் படியும் நேரத்தில் அங்கங்கே வந்து பொருத்தமாக அமர்கிற மாதிரி இருக்கிறது... என்னவென்று சொல்வது?..

    சொல்லத்தான் நினைக்கிறேன்.. :))

    பதிலளிநீக்கு
  10. பாடல்களை ரசிக்கின்ற மனநிலையில் இல்லை..

    தாய் வழி உறவின் முறையில் பெரிய நிகழ்வு..

    இறைவன் துணை..

    பதிலளிநீக்கு
  11. இரண்டு பாடல்களுமே கேட்டிருக்கிறேன்.
    முதலாவது பக்தி அருமையானது பிடித்த பாடல்.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளி பாடல் பகிர்வில் இரு பாடல்களுமே அடிக்கடி கேட்டு ரசித்துள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  13. இரண்டு பாடல்களுமே அருமையான பாடல்கள். பி சுசீலா அம்மாவின் பாடல்களைக் கேட்கும் போது, இளையராஜாவும் மன வேற்றுமையும் விரோதமும் இல்லாமல் இருந்திருந்தால் பின்னாலும் எத்தனையோ பாடல்களை சுசிலா அம்மாவின் குரலில் கேட்டிருக்கலாம். அது போன்றே டி எம் எஸ் எவ்வளவு அருமையாக சிவாஜிக்கும், எம் ஜி ஆருக்கும் குரல் சற்று மாற்றி பாடியிருக்கிறார் என்பது அதிசயம் தருகின்ற ஒன்று. இப்போதும் கேட்டாலும், அந்த வாயசைப்பிற்கு ஏற்ப அந்தக் குரல் ஒலிக்கும். அந்தக் குரலுக்கு ஏற்ப வாயசைப்பு.

    சிறு இடங்களில் கூட முக அசைவும் உடலசைவும் கொடுத்து நடிக்கும் நடிகர் திலகம் அருமை.

    இறுதியில் அந்தப் பாறையிலிருந்து சறுக்கி விழுவது போல் தெரிகிறாது உண்மையிலேயே நிகழ்ந்திருக்கலாம் இல்லை என்றால் அப்படி ஒருகாட்சி படத்தில் வருமோ என்னவோ. பார்த்தால்தான் தெரியும். யுட்யூபில் கொடுக்கும் போது அந்த இடத்தில் கட் செய்து கொடுத்திருக்கலாம்! படத்தில் அது ஒரு முக்கியமான காட்சி என்று தெரிகிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி துளஸிஜி.  இளையராஜா-பி சுசீலா மனஸ்தாபம் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.  நிறைய பாடல்களை சுசீலாம்மாவுக்கு இளையராஜா கொடுத்திருக்கிறார்.

      நீக்கு
  14. ஸ்ரீராம், இரண்டு பாடல்களுமே கேட்டிருக்கிறேன். முதல் பாடலும். பாட்டின் வரிகள் பார்த்ததும் என்ன பாடல் என்று டக்கென்று நினைவுக்கு வரவில்லை பாட்டு கேட்டதும் நினைவுக்கு வந்துவிட்டது.

    இரண்டாவது பாடல் ரசித்த பாடல். வரிகளைப் பார்த்ததுமே பாடல் நினைவுக்கு வந்துவிட்டது அதாவது மெட்டு.

    இலங்கை வானிலியில் பெரும்பாலும் ஏதேனும்காதல் கதைகள் வாசிப்பார்கள் பொருத்தமான பாடல்களுடன். அப்ப இடையில் இந்தப் பாடல் ஒலித்ததுண்டு. எதுவுமே நான் தொடர்ந்து கேட்டதில்லை என்பதால் எல்லாமே ஒரு ப்சபசப்பான நினைவுதான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல பாடல்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.  நன்றி கீதா.

      நீக்கு
  15. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  16. இரண்டு பாடல்களும் அடிக்கடி கேட்ட பாடல்.
    நல்ல பாடல்கள். கேட்டு ரசித்தேன், நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!