உருப்படாத படமென்று சொல்கிறேனே தவிர அது மசாலாப் படம். அவ்வளவுதான்.
ஒரு உயர்ந்த லட்சியத்துடன் பட்டணத்துக்கு வரும் இளைஞன் பற்றிய கதை. ஒரு பெண்ணைக் கண்டுபிடித்து காதலித்து மணக்க வேண்டும். இதுதான் லட்சியம்!!
இளையராஜா சகோதரர்களின் சொந்தப்படம் என்பதால் இளையராஜா மெட்டுகளில் விளையாடி இருப்பார். 'புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பாட்டு ஒண்ணு...' 'தூது செல்வாதாரடி...' போன்ற பாடல்களுடன் இந்தப்பாடல். 'புதுச்சேரி கச்சேரி' பாடலின் சோகப்பாடல் இன்னொரு இனிமை.
இந்தப் பாடல் கேட்பதே ஒரு உற்சாகம். இன்றும் காட்சி இல்லாமல்தான் கானம்.
துள்ளலான ஆரம்ப இசை. தகுந்த இடத்தில் தொடங்கி இடைவிடாது தொடரும் ட்ரம்ஸ். கொஞ்சம் கொஞ்சமாக ஸ்ருதி ஏறி முறுக்கேறும் வயலின்...... "இன்னும் என்னை என்ன செய்யப்போகிறாய் அன்பே அன்பே...." பொருத்தமான வரிகள். இந்தப் பாடலில் இளையராஜாவும் எஸ் பி பியும் ஜானகியும் என்ன செய்யப்போகிறார்கள்?! அமைதியாக ஆரம்பித்தாலும் உற்சாகம் குறையாத மெட்டு, குரல். "கைகள் தானாய் கோர்த்தாய்..." என்று போகும் இடங்களில் வரும் குழைவு.. 'சிங்காரவேலா...' என்று ஏறும் இடத்தில பாம்பைப் போல வளைவு... சரணத்தில் வரும் வளைவுகளும், குழைவுகளும்.. இடம் பார்த்து என்கிற வார்த்தையிலும், 'உறங்காது' என்கிற வார்த்தையிலும் ஒரு எக்ஸ்டரா வளைவு...!
கேட்க இனிமையான பாடல் என்று மட்டும் அடக்கமாகச் சொல்லிக் கொள்கிறேன். ஒரு 'மிக' மட்டும் முன்னால் சேர்த்துக் கொள்ளவா?
படத்தை இயக்கிய ஆர் வி உதயகுமாரே இந்தப் பாடலை எழுதி இருக்கிறார். ஒரே காம்ப்ளெக்சின் இரு தியேட்டர்களில் வெளியான முதல் படம் அப்போது இதுதானாம்! (ரொம்ப முக்கியம்!)
இன்னும் என்னை என்ன செய்யப்போகிறாய் அன்பே அன்பே
என்னைக் கண்டால் என்னென்னவோ ஆகிறாய் முன்பே முன்பே
கைகள் தானாய்க் கோர்த்தாய் கட்டிமுத்தம் தேனாய் வார்த்தாய்
இன்பம் இன்பம் ஸ்ருங்காரலீலா...
ஆடி வரும் வான்மதியே பார்வைகளின் பூம்பனியே
தேவசுக தேன்கனியே மோகபரி பூரணியே
பூவோடு தான் சேர இளங்காற்று போராடும்போது
சேராமல் தீராது இடம் பார்த்து தீர்மானம் போடு
புதுப்புது விடுகதை தொடத் தொட தொடர்கிறதே...
இன்னும் என்னை என்ன செய்யப்போகிறாய் அன்பே அன்பே
என்னைக் கண்டால் என்னென்னவோ ஆகிறாய் முன்பே முன்பே
உன்னைச் சேர்ந்தாள் பாவை இன்னும் அங்கு ஏதோ தேவை
சொல்லு சொல்லு சிங்காரவேலா...
தேன்கவிதை தூதுவிடும் நாயகனே மாயவனே
நூல் இடையை ஏங்க விடும் வானமுத சாகரனே
நீதானே நான் பாடும் சுகமான ஆகாசவாணி
பாடாமல் கூடாமல் உறங்காது ரீங்கார தேனீ
தடைகளைக் கடந்து நீ மடைகளைத் திறந்திட வா
வாழ்க நலம்...
பதிலளிநீக்குநலமே விளைக.
நீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஓடி வந்தாலும் துரை அண்ணா முன்னாடி வந்துவிட்டார்!!! ஹா ஹா ஹா ஹா..
நீக்குஇந்தக் கணினி என்னை முந்த விடாமல் செய்கிறது. இத்தனைக்கும் டிடி சொன்ன அந்த தக்கினிக்கி போட்டாலும்
கீதா
எனக்கும் கணினி (இணையம் -தாமதம்) படுத்தல் தொடர்கிறது கீதா...
நீக்குஇனிய காலை வணக்கம் ஸ்ரீராம், பின்னால் ஓடி வரும் /முன்னால் ஓடி வந்த துரை அண்ணா மற்றும் எல்லோருக்கும்
பதிலளிநீக்குகீதா
இனிய காலை வணக்கம் கீதா...
நீக்குஅன்பின் ஸ்ரீராம் ..
பதிலளிநீக்குகீதாக்கா/ கீதா, வல்லியம்மா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...
உங்களை வரவேற்று வழிமொழிந்து, உங்களோடு சேர்ந்து நானும் வரவேற்கிறேன் அனைவரையும்...
நீக்குவரவேற்ற துரைக்கும், ஶ்ரீராமுக்கும் மற்றும் வ்ந்திருக்கும் தி/கீதா இனி வரப்போகும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், வாழ்த்துகள், நல்வரவு, பிரார்த்தனைகள்.
நீக்குவாங்க கீதா அக்கா...
நீக்குநல்வரவும் வணக்கமும்.
>>> உருப்படாத படம்.. <<<
பதிலளிநீக்குஇன்னும் பத்து தரம் சொல்லலாம்...
உருப்படாத படம் உருப்படாத படம் உருப்படாத படம் உருப்படாத படம் உருப்படாத படம் உருப்படாத படம் உருப்படாத படம் உருப்படாத படம் உருப்படாத படம் உருப்படாத படம்
நீக்குஎன்ன இது?..
நீக்குஅதற்குள்ளாகவா!...
ஆனாலும் கணக்கு சரியாக வந்திருக்கின்றது...
நன்றி! ஒட்டுவதில் கணக்குப் பிசகாது!
நீக்குஹா ஹா ஹா ஹா ஹா...துரை அண்ணா செம இம்பொசிஷன் கொடுத்திட்டீங்க...என்ன பணிவான மாணக்கன் ஸ்ரீராம் உடனே காப்பி பேஸ்ட் பண்ணி 10னு சொல்லிட்டார்...ஹூம் இந்த தெக்கினிக்கி ஸ்கூல் காலத்துல இருந்திருந்தா என்னமா ஜமாய்ச்சுருக்கலாம்...
நீக்கு..நிஜமாவே உருப்படாத படம்...
ஆ இதற்கு முன் போட்ட கமென்ட் வரவே இல்லையா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...
இந்தப் படம் சென்னையிலிருந்து திருவனந்தபுரம் அல்லது கோயம்புத்தூருக்கு பேருந்தில் சென்ற போது பார்த்த நினைவு.
பாடல்கள் அத்தனையும் நன்றாக இருக்கும்...
கீதா
/பாடல்கள் அத்தனையும் நன்றாக இருக்கும்...//
நீக்குஅது!
கர்ர்ர்ர்ர்... படம் உருப்படி இல்லையாமே.... நான் எத்தனை முறை பார்த்திருக்கிறேன். லாஜிக்லாம் பார்க்க இது என்ன பீம்சிங் படமா?
நீக்குநல்லா பொழுது போகும். கவுண்டமணி, வடிவேல், மனோ காம்பினேஷன்... போதாக்குறைக்கு வெண்ணிற ஆடை மூர்த்தி... அப்போ அப்போ இனிமையான பாடல்கள். போதாக்குறைக்கு குஷ்பு கவர்ச்சி...
இதுக்கு மேல ஒரு படத்துல என்னதான் எதிர்பார்ப்பீங்களோ.. 100 ரூ கொடுத்துட்டு 1000 ரூ கன்டென்ட் எதிர்பார்க்கலாமோ?
//லாஜிக்லாம் பார்க்க இது என்ன பீம்சிங் படமா?//
நீக்குஹா...ஹா...ஹா... வித்தியாசமாக குரல் கொடுத்திருக்கிறீர்கள் நெல்லை... நகைச்சுவைக்காக படம் ஒருமுறை பார்க்கலாம்...!
நகைச்சுவையை மட்டும் பிரிச்சுப் பார்க்கத்தான் இப்ப வழி இருக்கே நெல்லை...
நீக்குஅட குஷ்புவுக்கு அப்புறம் தான் தமன்னாக்கா வாந்தகளோ!!!!!!!!
கீதா
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குநெல்லைத்தமிழன் சாரே! பதிபக்தி! இதுகூட பீம்சிங் படம்தான்! கிளைமேக்ஸுக்கு கொஞ்சம் முன்னாடி road roller சைசுக்கு இருந்துகொண்டு சிவாஜி உருண்டு புரண்டு உருண்டு ஒரு பத்து நிமிஷத்துக்குப் பேசுகிற வஜனக் கொடுமையைப் பார்த்திருக்கிறீர்களோ? :-)))
நீக்குஸ்ரீராம்! எது உருப்படியான மசாலா அல்லது உருப்படாத மசாலா படம் என்று எதைவைத்து முடிவு செய்வது?
சி வேலன் வருமானவரித்துறைக்காக செலவுக்கணக்கைக் கூட்டிக் காட்ட / நட்டக்கணக்கைக்காட்ட எடுக்கப்பட்ட திரைக்காவியம்! அவ்வளவுதான்!
ரசிகர்கள் பார்வையில்தான் சொல்லவேண்டும் கிருஷ் ஸார்.!
நீக்குஸ்ரீராம்! அதுதான் ஒரு ரசிகனின் அல்லது ரசிக்கமுடியாதவனின் பார்வையிலிருந்து பீம்சிங் படைத்த காவிய பதிபக்தியில் ஜிவாசி உருண்டுபுரண்டு வஜனம் பேசுகிற கொடுமையைச் சொல்லி விட்டேனே! அதுக்கப்புறம் சி.வேலன் பாட்ரிக் சொன்னது supplement!
நீக்குநேற்று இரவு 7:30 க்கு இந்தப் படத்தைப் பற்றித்தான் நானும் எனது நண்பரும் பேசிக் கொண்டிருந்தோம்...
பதிலளிநீக்குஇளையராஜாவின் இசை இருந்தும் -
படம் ஊற்றிக் கொண்டதைப் பற்றி..
உருப்படாமல் போனதைப் பற்றி..
என்னமோ ... போகட்டும்!..
ஆச்சர்யம். சென்ற வாரப் பாடலுக்கும் சொன்னீர்கள்.
நீக்குஇளையராஜாவின் பாடல்களைச் சேர்த்து வைத்துக் கேட்டும் நான் இந்தப் பாடலைக் கேட்கவும் விரும்பமாட்டேன்.. பார்க்கவும் விரும்ப மாட்டேன்!...
பதிலளிநீக்குகுப்பையிலும் குப்பை!..
அப்பாடா... காந்திஜி ரொம்ப சந்தோஷப்படுவார்!...
ஏன்?...
உண்மையெல்லாம் ஜொல்லீட்டீங்களே!..
பார்க்க விரும்பாமல் இருக்கலாம். கேட்க விரும்பாதது ஆச்சர்யம்.
நீக்குஆமாம்...
நீக்குயாராவது Instrumental செய்திருந்தாலாவது சந்தோஷமாக இருந்திருக்கும்...
அந்த வார்த்தைகள் தானே கலையைக் கொலையாக்குவது!..
துரை அண்ணா இசை...இசைக்கு மொழியோ வார்த்தைகளோ தேவையில்லைதான்...நான் பெரும்பாலான பாடல்களின் மெட்டு இசையை மட்டுமே பார்ப்பதால் பாடகர்களின் குரல் அசைவு இன்டெர்லூட் இது மட்டுமேதான் ரசிப்பதால் பல பாடல்களின் வார்த்தைகள் எதுவுமே எனக்குத் தெரிவதில்லை. காதில் விழுவதில்லை...அந்த ராகத்தை இசையை ஹம் பண்ணிக் கொண்டே இருப்பேன் கண்ணை மூடினால் அந்த இசைதான் இந்த ராகம் தான் மனதில் ஒலிக்கும்...எனக்கு அப்படியே பழகிப் போனதால் இருக்குமோ...இது சினிமா பாடல்கள் என்றில்லை க்ருதிகள் உட்பட....
நீக்குகீதா
பூரணி
பதிலளிநீக்குசாரணி
ஊரணி
காரணி
ஓ... இதெல்லாம் உதயகுமாரா!...
அப்போ இந்தப் படத்தில இருந்து தான் உருட்டிக்கிட்டு விழுந்திருக்கணும்!...
ஹா....ஹா... ஹா...
நீக்குஎஜமான் படத்திலும் பாடல்கள் எழுதி இருக்கார் என்று நினைக்கிறேன்!
எஜமான் படம் இதற்கு முன்னா?.. பின்னா?... தெரியவில்லை..
நீக்குமுன் என்று நினைக்கிறேன். அப்புறம் சின்னக்கவுண்டர்!
நீக்குபடம் பற்றி அரைகுறையாகக் கேள்விப் பட்டிருக்கேன். இந்தப்பாடலெல்லாம் அந்தப் படத்தில் இருக்கு என்பதே தெரியாது. எப்படிக் கேட்டிருப்பேன்? ஹிஹிஹி, நாங்க பிரபலமான பாடல்களை மட்டும் கேட்போமாக்கும். :))))))
பதிலளிநீக்குஇதுவும் பிரபலமான பாடல்தான் என்பது ஒருபுறம்.... இன்னொருபுறம் பிரபலமாகாத நல்ல பாடல்களை மிஸ் செய்து விடுவீர்களே...
நீக்குஇன்னமும் "எங்கள் ப்ளாக்" திறக்கவோ, கருத்துச் சொன்னால் ஏற்கவோ அடம்!
பதிலளிநீக்குஎனக்குக் கொஞ்சம் தேவலாம் என்று சொல்லலாம்! கொஞ்சம்தான்....
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குகாலை வணக்கம் பானு அக்கா.
நீக்குஇந்தப் பாட்டு அந்தக் காலகட்டத்தில்
பதிலளிநீக்குநகைச்சுவை (!) பட்டிமன்றத்துக்கு ஊட்டச்சத்து அளித்ததை மறக்க முடியாது..
அருஞ்சொற்பொருள் எல்லாம் சொல்லி விளக்கியிருந்தாய்ங்கே!...
இன்னொரு பாட்டு -
சும்மா நிக்காதீங்க!..
நான் சொல்லும்படி வைக்காதீங்க!.. (?)
என்னக் கொடுமைடா சரவணா!..
அதுவும் இந்தக் கமலக்காசன் ஆடுனது தான்...
நீங்கள் சொல்லும் பாடலை எனக்குக் கேட்கப்பிடிக்காது. அதிலேயே "நானாக நானில்லை தாயே..." "வானம் கீழே வந்தாலென்ன.." பாடல்கள் நன்றாய் இருக்கும்.
நீக்கு>>> நானாக நானில்லை தாயே...<<<
நீக்குஇந்தப் பாடலை
இளையராஜா அவர்களும் SPB அவர்களும் தனித்தனியே பாடியிருக்கின்றார்கள்..
அவை இரண்டும் என்னிடம் உள்ளன...
எனக்கு spb வெர்ஷன் பிடிக்கும்!
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம். அன்பு ஸ்ரீராம், திரை செல்வராஜு, கீதாமா, கீதா ரங்கன்
நீக்குஎல்லோருக்கும் வெள்ளி நாள் வாழ்த்துகள்.
இது இனிமையான பாடல் தான். ஒளி வடிவம் இல்லாதது ஒரு
ப்ளெஸ்ஸிங்க்
இசை இனிமை. அது போதும். எஸ்.பி.பியும் ஜானகி அம்மாவும் இழைந்து பாடும் அழகு
வெகு இனிமை.
நீங்கள் சொல்லி இருக்கும் இன்னோரு பாடல் ,நானாக நான் இல்லை தாயே
மனம் உருகும் விதத்தில் பாடி இருப்பார்.
எத்தனை தடவை கேட்டிருப்போமோ.
மிக மிக நன்றி ஸ்ரீராம்.
வாங்க வல்லிம்மா... காலை வணக்கம்...
நீக்குபாடலை ரசித்ததற்கு நன்றி ..அம்மா.
அந்திமழை பொழிகிறது பாடல் கேட்டுக்கொண்டே இதை டைப்புகிறேன்!
ஆஹா ஸ்ரீராம் அந்தி மழை பொழிகிறது பாடலா....ஆஹா அந்தப் பாட்டு என்ன அருமையான பாடல்..செம ராகம்....இசையும் அதே போல...இடையில் டிவி கோபாலகிருஷ்ணன் ..என்று செம பாடல்..அது
நீக்குகீதா
அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்!
பதிலளிநீக்குகாலை வணக்கம் கோமதி அக்கா... வாங்க... வாங்க...
நீக்குஅன்பு காலை வணக்கம் கோமதி மா.
பதிலளிநீக்குவணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்
நீக்குபாடலை கேட்டு இருக்கிறேன்,
பதிலளிநீக்குதொலைக்காட்சியில் இந்த படம் பார்த்து இருக்கிறேன்.
நன்றி கோமதி அக்கா.
நீக்குஸ்ரீராம் மிக என்பதை தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம்..
பதிலளிநீக்குஇந்தப் பாட்டை முதன் முதலாகக் கேட்டதும் மிகவும் பிடித்துப் போனது. அதுவும் எஸ்பிபி என்னமா குழைவார் பல இடங்களில்....கமகங்கள் அதுவும் அலுக்காத ஓவரான கமகங்கள் இல்லாமல் தேவையான இடத்தில் மட்டுமே...என்று செமையா இருக்கும்....
இதில் ஒரு இடத்தில் தாள நடை மாறும் அதுவும் செமையா இருக்கும்...பாடிக் கொண்டே வரும் போது தாள நடை மாறும் போது எப்படி டக்கென்று பாடுவது என்று தோன்றும் இதில் அதைக் கேட்டு ஓ பாட முடியும் என்று தோன்றியது...நான் கத்துக்குட்டி தானே...
என் புரிதலில் இந்தப் பாட்டு கம்பீர நாட்டை...ஆனால் திலங்க் போலவும் இருக்கும்.....இரண்டிற்கும் மயிரிழைதான் வித்தியாசம் என்றாலும் வித்தியாசப் படுத்திக் காட்டும். என் புரிதல் கம்பீர நாட்டை...
கீதா
ஆஹா...மிக சேர்த்தே சொல்வோம்...
நீக்குஅந்த இசையும், அந்த குரலும்...!
நிச்சயம் கம்பீர நாட்டைத்தான்!
தாள நடை மாறும் இடம் எது?
ரசனைக்குநன்றி கீதா.
ஆரம்ப இசை என்ன அட்டகாசமான இசை அப்படியே எசன்ஸ் ராகத்தின்
பதிலளிநீக்குசிங்ங்க்ங்க்ங்கார வே...லனே இடம் ஆஹா...
அப்புறம் இரண்டாவது முறை இன்னும் என்னை எடுக்கும் போது செம குழைவு எஸ்பிபி...
கீதா
கடைசியில் போகிறாய் ஆஹா எஸ்பிபி!!!!
பதிலளிநீக்குஜானகியும் நன்றாக குரலில் குழைகிறார் என்றாலும் எஸ்பிபி சான்ஸே இல்லை. இதெல்லாம் இயற்கையாக அமைவது அந்தத் தொண்டையில் உள்ள வோக்கல் கார்டில் குரலில் மற்றும் சாதகம் உழைப்பு!!!
கீதா
உண்மை. கடவுளின் அருள்பெற்றவர்கள் இவர்கள் எல்லாம்... எத்தனை பேர்களை மகிழ்விக்கிறார்கள்....
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇந்தப் பாடல் கேட்டுள்ளேன்.எஸ். பி. பியின் குரலுக்காக ரசிக்கலாம். படமும் தொலைக் காட்சியில் பார்த்துள்ளேன்.கதைப் போக்குடன் நகைச்சுவையாக இருக்கும் கமல் படங்களில் ஒன்று. இப்போது பாடலை கேட்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா.
நீக்குநான் ரசித்த பாடல்களில் ஒன்று இன்னும் என்னை என்ன செய்ய..... அருமை.
பதிலளிநீக்குநன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஸார்..
நீக்குஆர்.வி.உதயகுமார் எப்பொழுதுமே தரமான கவிஞர்தான்.
பதிலளிநீக்குஇப்படத்தின் வசனங்கள் பல இடங்களில் இரட்டை அர்த்தங்களாக வரும்.
மூன்று வயது பெண் குழந்தையின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு அந்தக்குமரியை கண்டு பிடிப்பது ஜேம்ஸ்பாண்ட் கதைக்கு நிகரானது.
இப்படத்தில் எனக்கு பிடித்தது வடிவேலுவின் அழகு.
பாடகர் மனோவும் நடித்த படம்.
//இப்படத்தின் வசனங்கள் பல இடங்களில் இரட்டை அர்த்தங்களாக வரும்.//
நீக்குஅதனால்தான் படம் ஓடும் என்றுநினைத்தார்கள் போல.. அந்த கமலுக்கு கொஞ்சம் இறங்குமுகமாக இருந்த நேரம்...
//இப்படத்தில் எனக்கு பிடித்தது வடிவேலுவின் அழகு.//
ஓ... பியூட்டிஃபுல்! (வடிவேலு மாதிரியே படிக்கவும்)
நன்றி கில்லர்ஜி.
இனிமையில் பாட்டையும் மிஞ்சிவிடும் பின்னூட்டங்கள்...!
பதிலளிநீக்குஇனிமை என்று சொல்வதைவிட சுவாரஸ்யம் என்கிற வார்த்தை பொருத்தமாயிருக்குமோ!
நீக்குஇருக்கும்.. இருக்கும்!
நீக்குபாடல் ஆஹா! என்றால் அதை ஶ்ரீராம் வரிவரியாக ரசித்திருப்பது ஓஹோ!
பதிலளிநீக்குஹா... ஹா.. ஹா...
நீக்குநன்றி பானு அக்கா.
இந்த படத்திற்கு பிறகுதான் இளையராஜாவுக்கும், கங்கை அமரனுக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டு பிரிந்தார்களோ? சினிமாவில் பாலிடிக்ஸ் பண்ணுவது போல எங்கள் குடும்பத்திலும் பாலிடிக்ஸ் பண்ணி என்னையும், என் அண்ணனையும் பிரித்து விட்டார் கமல்" என்று க.அமரன் கூறியிருந்தாரே?
பதிலளிநீக்குஅடடே.... இது புதுத்தகவல்...இதுகுதான்பானு அக்கா வரணும்ங்கறது...!
நீக்குஸ்ருங்காரலீலா...
பதிலளிநீக்குதேவசுக
மோகபரி பூரணியே
மாயவனே
சாகரனே
ஆகாசவாணி
ரீங்கார
-- ஓர் ஒற்றைப் பாடலில் எத்தனை வடமொழி வார்த்தைகள், பாருங்கள்.
'சமஸ்கிருதத்தை புகுத்துகிறார்கள்' விரலை வடக்குப் பக்கம் நீட்டி பூச்சாண்டி காட்டுவதில் ஒன்றும் குறைச்சலில்லை.
அதுதானே ஜீவி ஸார்... இதில் சிங்காரவேலன் தமிழ்க்கடவுள் வேற....!
நீக்குஅதுதானே....
நீக்குசிங்கார - ஸ்ருங்கார - வேலன்!...
அதெப்படி வடமொழிப் பூச்சாண்டி வேலனுக்கு முன்னால் வரலாம்?..
விடாதே பிடி!..
என் பள்ளிக் காலத்தில் வந்த படம் ...
பதிலளிநீக்குஎல்லா பாடல்களும் பிடிக்கும் ...
அடடே...உங்களுக்கும் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி அனுபிரேம்
நீக்குஆஆஆஆஆஆஆஆஆஆ மீ வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்.. மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஊ:))..
பதிலளிநீக்குஇதென்ன இது இப்பூடிக் கத்தியும் ஆரும் திரும்பிப் பார்க்கினம் இல்லையே.. சே..சே... ட்றம்ப் அங்கிள் எண்டால் இப்போ ரீ கூட ஊத்தித் தந்திருப்பாரே...:))
ஹா ஹா ஹா எல்லோரும் நலமாகவும் ஹப்பியாகவும் இருக்கிறீங்க என நம்புகிறேன்.
புதன் கிழமையிலிருந்து கால் வைக்க நினைச்சு நினைச்சு.. இன்றுதான் எப்படியும் வந்திடோணும் என வந்தேன்.
அட வாங்க அதிரா... ஆச்சர்யம் உங்கள் வருகை. மகிழ்ச்சி.
நீக்குஅதிரா வாங்க வாங்க வாங்க வந்தனம் வந்தனம் வந்தனம்!!
நீக்குஉங்களை எத்தனை நாள் இங்க ஓட்டியிருந்தேன் தெரியுமா?!! அப்படியாச்சும் இங்கு எட்டிப் பார்ப்பீங்கனு..
சமீபத்திய விமர்சனத்தின் போது கூட சொல்லியிருந்தேனாக்கும்...எபி வானிலை அறிக்கை சொல்லுது இங்கு கமென்ட் மழை பொழியப் போகுது விரைவில் என்று....பாருங்க என் சோஸ்யம் பலிச்சுருச்சூஊஊஊஊஊஊஉ!!!
கீதா
ரொம்ப நாள் காணாமல் போனால் அப்பூடித்தான் ஹா ஹா ஹா ஹா...
நீக்குஅது சரி நீங்க ட்ரம்ப் மாமாவோடு டீ குடிச்சீங்களாமே....காத்துவாக்குல செய்தி வந்துச்சு....ஃபோட்டோ போட்டு ப்ரூவ் பண்ணிடுங்கோ...ஹிஹிஹி...இல்லைனா செக் பாவம்..
கீதா
என்னடா இங்கே பிரகாசம் கண்ணைக் கூசவைக்குதேன்னு பார்த்தேன்..ஒயிட் ஹவுஸ் வந்துருக்கா!
நீக்குகிட்டத்தட்ட 2 மாசமாகுதா நான் புளொக்கில் கால் வச்சு.. அதனால லெக்கை எங்கின வைக்கிறது காண்ட்ஸ் ஐ எங்கின வைக்கிறது என்றே தெரியல்ல ஜாமீஈஈஈ..
நீக்குஸ்ரீராம் நலம்தானே... கெள அண்ணன் நலம்தானே...
ஆஆஆ நன்றி நன்றி.. வெள்ளை மாளிகையில் ட்றம்ப் அங்கிளோடு ரீ குடிக்கையில் ஏ அண்ணனையும் நினைச்சனான் தெரியுமோ?:).. கீதா வாக்குப் பலிச்சிடுச்சா? அப்போ இனி அதிரா அடுத்து எப்போ காணாமல் போவேன் எனச் சொல்லுங்கோ பார்ப்போம்:))..
உண்மையில் நான் எட்டிக்கூடப் பார்க்கவில்லை கீதா, அதென்னமோ சொந்த பந்தம் கோயில் கொண்டாட்டம் என நேரம் போனதே தெரியவில்லை... ஆனா என் செக் இங்கின எட்டிப்பார்த்தால் மட்டும் எனக்கு அப்டேட் பண்ணுவா என்ன புதினம் என்பதை:)).. நெ.தமிழன் என் வார்த்தையை என்னைக் கேளாமல் “காவி” வந்து போட்டவராம்:).. அத்தோடு இன்னும் என்னை வரவேற்கவுமில்லை:) அதனால நன் வீடியோ எடுத்து வந்த ட்றம்ப் அங்கிள் வீட்டு தாராக் குஞ்சையும் அணில்ப் பிள்ளையையும் அவருக்குக் காட்ட மாட்டேனாக்கும்...க்கும்..க்கும் எங்கிட்டயேவா?:)).
எல்லோரும் நலமே... எட்டிக்கூடப் பார்க்காதது நியாயமா?
நீக்கு/// எட்டிக்கூடப் பார்க்காதது நியாயமா?///
நீக்குநியாயமில்லைத்தான்... மன்னிச்சுக்கோங்ங்ங்ங்........._()_
https://i.ytimg.com/vi/Ln2j-lTQ8dw/maxresdefault.jpg
வாங்க அதிரா... நலமா?
நீக்குவரும்போதே ரொம்ப அடக்கமா "White House"னு மட்டும் போட்டிருக்கீங்களே. நான் "U.S.A. President அதிரா" என்று போட்டுக்கொண்டு அலட்டுவீர்களோன்னு நினைத்தேன். கனடா பயணத்துக்கு அப்புறம் ரொம்ப அடக்க ஒடுக்கமா மாறிட்டீங்க.
இதாரிது புதுமுகம் ஒருவர் என்னோடு நன்கு பழகியவர்போலயேஏஏஏஏஏஏ பேசுறார்:)).. ஹா ஹா ஹா மீ அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு.. அதுசரி பயிர்ப்பு என்றால் என்ன?:) சரி அது போகட்டும். ஹா ஹா ஹ. நீதி நியாயம் கடமை நேர்மை எருமை எல்லாம் நிறைஞ்ச ஒரு சுவீட் 16 பிள்ளையாக்கும்:)).. அது ட்றம்ப் அங்கிள் சில ரகசியம் சொல்லி.. அதை பாதுகாக்கச் சொன்னார்:) அதனாலதேன் இவ்ளோ அடக் ஒடுக்காக்க்கும் ஹையொ ஹையோ:))
நீக்கு//மீ அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு.. அதுசரி பயிர்ப்பு என்றால் என்ன?:// - முதல்ல 'மடம்',என்னன்னு கண்டுபிடிங்க. அப்புறம் வழக்கொழிந்துபோய்விட்ட 'பயிர்ப்பு' என்ன என்பதைப் பற்றி நான் சொல்கிறேன்.
நீக்குஹா ஹா ஹா இங்கின நீங்க மட்டும்தானே நெ.தமிழன்.. “மடம்” ஊஸ் பண்ணும் ஒரே ஆள்:)).. கீசா மடம்.. பானுமதி மடம்.. இப்பூடி:)).. இதுக்கு என்னைப்போய் விளக்கம் கேட்டால்ல்ல்:)) ஹா ஹா ஹா..
நீக்கு///உருப்படாத படத்தில் ஒரு உருப்படியான பாட்டு!//
பதிலளிநீக்குஸ்ரீராமுக்கு வரவர நல்லாத்தான் எழுத வருது:)...
நான் பொதுவா கமல் அங்கிள் படங்கள் பார்ப்பதில்லை, ஆனா இப்போ இப்போதான் சிலது தேடிப் பார்த்து வருகிறேன்.. அந்த வரிசையில் சிங்காரவேலனும் பார்க்கோணும்.
பாட்டு ஓகே, கேட்ட பாடல்தான்.. ஆஹா ஓஹோ என்றும் இல்லை.. சரியில்லை என்றும் இல்லை.. இரண்டுக்கும் இடையே வைக்கலாம்.
நன்றி அதிரா... தொடர்ந்து வாங்க!
நீக்குதொடர்ந்து வாறது மட்டுமில்லை:)) இனிமேல் தான் தொல்லைகள் தொடரப்போகுது:)) அதுவும் வீடியோ வடிவிலயும் ஹா ஹா ஹா:))..
நீக்குஆஹா....தன்யர்களானோம்! வாங்க... வாங்க...
நீக்குஅனைவரின் கொமெண்ட்ஸும் இங்கு படித்து எலோரும் அப்பியாக இருப்பதை உணர்கிறேன். எல்லோரையும் இங்கேயே நலம் விசாரித்துக்கொண்டு இந்த சமூகம் இப்போ புறப்படுகிறது... டெய்சிப்பிள்ளை ரைப் பண்ண விடுறா இல்லை கீபோர்ட்டில் இருக்கிறா.. பின்பு வருகிறேன் எல்லா வீடுகளுக்கும்.. நன்றி.
பதிலளிநீக்குஅதிரடி, அதிரடியா வந்தாச்சா? ஏன் என்னோட வலைப்பக்கம் வரலை? உங்க செக் இன்னும் வேலை மும்முரமா? அல்லது உடம்பு சரியில்லையா? நீங்க, உங்க கணவர், இரு பையர்கள் எல்லோரும் நலமா? எல்லோருமா அம்பேரிக்கா போனீங்களா? நாங்க அடுத்த மாசம் அம்பேரிக்கா போறோம்! கொஞ்ச நாள் இருந்திருக்கக் கூடாதோ? முக்கியமான சந்திப்புக்கள் எல்லாம் வைச்சுட்டு இருந்திருக்கலாம்! அதுக்குள்ளே வந்துட்டீங்க!
நீக்குகீசாக்கா எனை இன்னும் மறக்கவில்லை:).. அதுக்குள்ள மீ வந்துட்டேனே:)).. அம்பேரிக்காவும் போய் ட்ரம்ப் அங்கிளோடு ரீ குடிச்சிட்டு வந்தோம்... வெள்ளை மாளிகையில் கிட்டப் போக நினைச்சால் பொலீஸ் சைக்கிளில் வந்து எல்லோரையும் வெளியே போகச் சொல்லிட்டினம் கர்ர்ர்ர்:))
நீக்குஅகோ வாரும் பிள்ளாய்!...
பதிலளிநீக்குஇந்தத்திரைக் காவியத்தில் தானே
ஓரங்கா.. சீரங்கா..
மாங்கா... தேங்கா...
என்றெல்லாம் போட்டுத் தாளித்தது!?....
ஆஹா என்னையா கூப்பிட்டீங்க துரை அண்ணன்.. உங்களுக்கு ட்றம்ப் அங்கிளின் கார்டினில் பிடுங்கிய மேபிள் நட்ஸ் கொண்டு வந்திருக்கிறேன் தருவேனாக்கும்:))
நீக்குஆமாம்.. அந்தப்பாடலை நான் குறிப்பிடவில்லை!
பதிலளிநீக்குநல்ல வேளை சொல்லாமல் விட்டீர்கள்.கமல் எஸ்பி பி காம்பினேஷனுக்கு
நீக்குமோசமான உதாரணம் அந்தப் பாடல்.
ஹா... ஹா.. ஹா...
நீக்குஆமாம் அம்மா.
அருமையான பாடல்
பதிலளிநீக்குநன்றி நண்பரே.
நீக்குஅனைத்து பாடல்களும் கேட்க இனிமையான உற்சாக பாடல் தான்...!
பதிலளிநீக்குட்ரம்ஸ் உடைந்தது "போட்டு வைத்த காதல் திட்டம்" பாடலில் என்று கேள்விப்பட்டேன்...! ஆனால், அதற்கு முன்னும் பின்னும் பல மிக சேர்த்துக் கொள்ள வேண்டும்...!
நல்ல அலசல்....
பதிலளிநீக்குஇங்க வந்து ரொம்ப நாளாச்சோ !
மாதவன்... உங்களைப் பற்றி 5-6 முறை சென்ற வாரத்திலும் இந்த வாரத்திலும் நினைத்தேன். மன்னார்குடி கோவில் (நடந்து மாளலை) சென்றிருந்தேன். அப்போ பலமுறை நினைத்தேன் வெண்பா பழகியவர் எங்க போனார்னு. அப்புறம் மூலவர் உருவம் நினைவுக்கு கொண்டு வர இணையத்தில் தேடியபோதும் நினைத்தேன். நலமா?
நீக்குநலம், ஐயா. ஓரளவிற்கு தொடர்ந்து வெண்பா எழுதி வந்தாலும், அதனை வெளியிடுவதில்லை.
நீக்குஅத்தி வரதரைப் பற்றி வெண்பா எழுத நினைத்தேன்.... இன்னும் ஆரம்பிக்கவே இல்லை...
படம்பார்த்த நினைவு பாடல் கேட்கும்போது கேட்ட நினைவு ஆனால் பெயர்தான் நினைவே தவிர வேறெதுவுமில்லை
பதிலளிநீக்குகேட்க இனிமையான பாடல்! கேட்டு ரசித்ததுண்டு.
பதிலளிநீக்கு