முதலில் நேயர் விருப்பம் :
ஏகாந்தன் ஸார் விருப்பத்துக்காக ஒரு சி எஸ் ஜெயராமன் பாடல். 1957 இல் வெளிவந்த புதையல் திரைப்படத்திலிருந்து சி எஸ் ஜெயராமன் - பி சுசீலாவுடன் பாடியிருக்கும் பாடல்.
ஆத்மநாதன் வரிகளுக்கு விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை.
விண்ணோடும் முகிலோடும்…விளையாடும் வெண்ணிலவே
கண்ணோடு கொஞ்சும் கலையழகே இசையமுதே
அலைபாயும் கடலோரம் இளமான்கள் போலே
விளையாடி இசைபாடி விழியாலே உறவாடி இன்பம் காணலாம்
தேடாத செல்வசுகம் தானாக வந்ததுபோல்
ஓடோடி வந்த சொர்கபோகமே
காணாத இன்பநிலை கண்டாடும் நெஞ்சினிலே
ஆனந்த போதையூட்டும் யோகமே வாழ்விலே
விளையாடி இசைபாடி விழியாலே உறவாடி இன்பம் காணலாம்
விண்ணோடும் முகிலோடும்…
சங்கீதத் தென்றலிலே சதிராடும் பூங்கொடியே
சந்தோஷம் காண உள்ளம் நாடுதே
மங்காத தங்கமிது மாறாத வைரமிது
ஒன்றாகி இன்பகீதம் பாடுதே வாழ்விலே
விளையாடி இசைபாடி.. விழியாலே உறவாடி ..
இன்பம் காணலாம் !
இன்பம் காணலாம் !
*********************************************************
1961 இல் வெளிவந்த ஒரு ஜப்பானியப் படத்தைக் கட்டிப்பிடித்து ( ! ) 1972 இல் ஹிந்தியில் 'கோஷிஷ்' படம் எடுக்கப்பட்டது. சஞ்சீவ்குமார் நடித்த அந்தத் திரைப்படத்தை தமிழில் தழுவி 'உயர்ந்தவர்கள்' என்று 1977 இல் எடுக்கப்பட்டது.
கண்ணதாசன் பாடலுக்கு சங்கர் கணேஷ் இசை. இயக்கம் டி என் பாலு.
பாலமுரளிகிருஷ்ணா பாடியிருக்கும் இந்தப் பாடல் காட்சியில் அவரே நடித்துள்ளார். ஆனால் சோகம். பாடலின் கடைசிச் சரணம் மட்டுமே கிடைக்கிறது. இதுவே சில வருடங்களுக்கு முன்பு தேடியபோது கிடைக்கவில்லை. இந்தப் பாடலை முழுமையாக முன்பு நான் ரேடியோவில் கேட்டிருக்கிறேன். ஆனால் இப்போது முழுமையாகக் கிடைக்காதது வருத்தம்தான்.
எவ்வளவு இளமையான பாலமுரளி!
ராமனும் நீயே கிருஷ்ணனும் நீயே
ராதையின் வடிவம் சீதையின் தாயே
நாதனின் தரிசனம் கோதையின் யோகம்
ஸ்ரீராம சீதா நான் பாடும் ராகம்
ஜெய் ஜெய் ராம் ஜெயஜெய் சீதாராம்
பரந்தாமன் விளையாட்டில் புல்லாங்குழல்
அவன் மார்பில் ராதாவின் இளம் கார்குழல்
கண்பார்க்கும் பார்வைக்கு வார்த்தை இல்லை.
கண்ணா உன் கலைதானே காதல் கலை
ஜெய் ஜெய் ராம் ஜெய் ஜெய் சீதாராம்
ரகுராமன் மிதிலைக்கு வரும் நாள் எது
வைதேகி வாழ்நாளில் திருநாள் அது
மகராஜன் முகபாவம் அவள் காண்பது
-------------------------------------------------------
ஜெய் ஜெய் ராம் ஜெய் ஜெய் சீதாராம்
நால்வேகம் அவனாக உருவானது
நாலாகும் குணம் பெண்மை வடிவானது
நம்பிக்கை கொண்டார்க்கு அவனே பிள்ளை
நம்பிக்கை தந்தார்க்கு அவனே எல்லை
ஜெய் ஜெய் ராம் ஜெயஜெய் சீதாராம்
வாழ்க நலம்...
பதிலளிநீக்குவாழ்க நலம்.
நீக்குஅனைவருக்கும் அன்பின் வணக்கம்...
பதிலளிநீக்குவணக்கம் துரை செல்வராஜூ ஸார். வாங்க... வாங்க...
நீக்குபாடல்கள் இதண்டுமே அருமை...
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஉயர்ந்தவர்கள் பாடலைக் கேட்டு எத்தனை வருடங்களாயிற்று....
பதிலளிநீக்குஆனால் கால் பாடல்தான் கிடைக்கிறது. படத்தையே ஓட்டிப் பார்த்து விட்டேன். ஊஹூம்....முன்னர் முழுமையாகக் கேட்ட அந்தப் பாடல் என்ன ஆகியிருக்கும்?
நீக்குஇதே படத்திலேயே இன்னொரு இனிமையான பாடல் உண்டு. யேசுதாஸ் பாடிய பாடல் 'இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட' (விலையாட என்று பாடுவார்!)
நீக்கு'இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட' பாடல் இனிமை, பிடித்த பாடல். நன்றாக இருக்கும்.
நீக்குரொம்ப நன்றாக இருக்கும்.
நீக்குஇறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட....எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது.
நீக்குசொல்லும்படி இரண்டே பாடல்கள்தான் இதில்...
நீக்குநல்ல பாடல் அதையும் சேர்த்தே கொடுத்திருக்கலாமே ஸ்ரீராம்! இதோ இங்கே https://youtu.be/dKMIQqKDxTA
நீக்குவாங்க கிருஷ் ஸார்... அதை வேறொரு லிஸ்ட்டில் சேர்த்தது வேறு ஒரு வெள்ளிக்கு ரிசர்வ் செய்து வைத்துள்ளேன்!!!
நீக்குஅனைவருக்கும் நல்வரவு, வணக்கம், வாழ்த்துகள், பிரார்த்தனைகள். இந்த வாரம் ஸ்ரீராம் கொஞ்சம் எஸ்.பி.பியில் இருந்து விலகி வந்திருக்கார். நல்ல சகுனம்! :))) எங்கே தி/கீதா? வாட்சப்பில் வராங்க! பதிவுகளில் வரதில்லை? எஸ்.பி.பி. பாட்டுப் போடலைனு கோபம்னா இன்னிக்கு மட்டும் வராம இருக்கணும். ஆனால் 2,3 நாட்களாகவே காணலை!
பதிலளிநீக்குவாங்க கீதா அக்கா...
நீக்குநல்வரவு, வணக்கம், பிரார்த்தனைக்கு நன்றி!
கீதா ரங்கனைக் காணோம்தான் அக்கா... பிஸி போல...
கிர்ர்ர்ர்ர்..... பலமுறை எஸ் பி பி பாடாத பாட்டுகள் போட்டிருக்கேன்.
நீக்குநானும் சகோதரி கீதா ரங்கன் அவர்களை நினைத்திருந்தேன்...
நீக்குவாட்சப்பில் வருகின்றார்களா!..
நலம் வாழ்க...
வீட்டில் கொஞ்சம் வேலை அதிகமாம்...
நீக்குவிண்ணோடும் முகிலோடும் பாடல் இந்தப்படமா? பாவை விளக்குனு நினைச்சிருந்தேன். பாட்டு நன்றாக இருக்கும். அடுத்த பாடல் பாலமுரளி பாடியது கேட்ட நினைவு இல்லை. ஆனால் படம் தொலைக்காட்சி உபயத்தில் பார்த்திருக்கேன். சென்னைத் தொலைக்காட்சியில் (d00rdharshan) வந்ததால் அதில் இந்தப்பாடல் காட்சியை நீக்கி இருந்திருக்கலாம்.
பதிலளிநீக்குபாவை விளக்கு படத்திலும் ஒரு சி எஸ் ஜெயராமன் பாடல் இருக்கிறது... "காவியமா... நெஞ்சில் ஒவியமா?" அந்தப் பாடல்தான் பதிவதாக இருந்தேன் முதலில்!
நீக்குஓ, அப்படியா? அப்போ வண்ணத்தமிழ்ப் பெண்ணொருத்தி என்னருகில் வந்தாள், பாடல் பாவை விளக்கில் இல்லையா? !!!!!!!!!!!!!!
நீக்குஇன்னொரு இனிய பாடல்...
நீக்குஆயிரங்கண் போதாது வணணக்கிளியே!...
ஆகா...
நீக்குசிவாஜி படங்களை ரசிப்பதில்லை...
ஆனால் சிவாஜி பாடல்கள் அத்துப்படி....
கரகரப்பான குரலில் நடிகர் திலகம் தொடங்கி வைக்கும் அந்தப்பாடல் குறவஞ்சி என்று நினைக்கிறேன்....
LR ஈஸ்வரி அவர்களது ஹம்மிங் இனிமையாக இணைந்து வரும்....
@Durai, இஃகி,இஃகி,இஃகி, பாட்டுக் கேட்க ஜிவாஜியைப் பார்க்கணும்னு கட்டாயம் இல்லையே! அதுவும் அந்தக்காலங்களில்! பாடல்கள் இனிமையாக இருந்தால் ரசிப்பதில் என்ன வந்தது? நேரில் பார்ப்பது தான் கோரமாக இருக்கும். அதுவும் காதல் காட்சிகளில்! இஃகி,இஃகி,இஃகி!
நீக்குவண்ண தமிழ் பெண்ணொருத்தி பாடலும் பாவை விளக்குதான். சிவாஜி குரலும் வரும் அதில்!
நீக்குநானும் இதுவரை புதையல் படமும், பாவை விளக்கு படமும் பார்த்ததில்லை.
நீக்குஆயிரங்கண் போதாது வணணக்கிளியே செம பாடல்!
நீக்குபுதையல், பாவை விளக்கு இரண்டுமே பார்த்திருக்கிறேன்...
நீக்குபாவை விளக்கு நாவல் அல்லவா!...
படித்திருக்கிறேன்...
அவ்வளவாக நினைவில் இல்லை...
பாவை விளக்கு - அகிலன் எழுதிய நாவல். நாவலும் படித்ததில்லை! (இதில் என்ன பெருமை வேண்டிக்கிடக்கிறது என்று கேட்கிறீர்களா? பெருமையாகச் சொல்லவில்லை... சும்மா சொன்னேன்!)
நீக்குஶ்ரீராம்... இன்றைக்கு எங்க ஏரியாவுல செம மழை வரலாம்.
நீக்கு"காலை வணக்கம். தூங்கிவிட்டு காலையில் வருகிறேன்" என்று விநோத பின்னூட்டம் போடறவங்க இன்று நிறைய எழுதியிருக்காங்களே. என்ன காரணமாயிருக்கும்? அவங்க தலைவர் ஜிவாஜி மற்றும் உலக்கை படங்கள் போட்டதால் இருக்குமோ?
ஹா... ஹா... ஹா... நெல்லை...!
நீக்குஹாஹாஹா, நேத்திக்குச் சீக்கிரமாச் சாப்பிட்டாச்சு ஏழேகாலுக்குள்ளாக. அதனால் இணையத்தில் கொஞ்ச நேரம் உட்கார்ந்தேன். ஏழரைக்கு அப்புறமாச் சாப்பிட்டால் அதிகமா உட்கார மாட்டேன். இஃகி,இஃகி, அதாரு அது உலக்கை! அவர் படமெல்லாம் பார்க்கிறவங்களுக்குத் தான் தெரியும். உலக்கையா என்னன்னு!
நீக்குஇன்னிக்கு என்னன்னாக் காலம்பர மணி தெரியாமல் சீக்கிரமா எழுந்துட்டு, அவரையும் எழுப்பி! இஃகி,இஃகி,இஃகி!
நீக்குகாலம்பர மணி தெரியாம சீக்கிரமா எழுந்தது சரி. ’அவரையும் எழுப்பி’ - இது எதற்கு? அந்த மனுஷன் நிம்மதியாகத் தூங்குகிறாரே என்கிற பொறாமையோ..?
நீக்கு@ஏகாந்தன், இஃகி,இஃகி,இஃகி, தனியாக் காஃபி சாப்பிட போர் அடிக்காதா? அதான் அவரையும் எழுப்பிட்டேன்! :)))))
நீக்குஒரு காலத்தில் அதாவது பள்ளி நாட்களில் அகிலன் எழுதிய நாவல்களை எல்லாம் மனப்பாடம் செய்திருக்கேன். என் மாமா ஒருத்தருக்கு அகிலனும், மு.வ.வும் ரொம்பப் பிடித்த எழுத்தாளர்கள். அநேகமாக அவர்கள் இருவரின் எல்லா நாவல்களும் படித்துள்ளேன். அகிலனின் "கயல்விழி" தான் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனாக வந்தது என நினைக்கிறேன். அவரின் "சித்திரப்பாவை" விகடனில் வந்தது. ரொம்ப சுமார். ஆனால் ஞானபீடப் பரிசு கிடைத்தது. அநேகமாக அகிலன் எல்லாப் பரிசுகளையும் வாங்கி இருக்கார். புது வெள்ளம் அந்தக் காலங்களில் ஓர் புரட்சிகரமான நாவல்.
நீக்குஅகிலனுக்கு ஞானபீடம் என்பது அபத்தத்தின் உச்சம்! ரொம்ப சாதாரண எழுத்தாளர் அவர்.
நீக்குஎன்ன ஏகாந்தன் ஸார்... இப்படிச் சொல்லிட்டீங்க... அட நாராயணா....!
நீக்குஉண்மை ஸ்ரீராம். அப்பட்டமான உண்மை. அகிலன் சிபாரிசுகளின் மேல் எல்லா விருதுகளும் வாங்கியதாகக் கேள்விப் பட்டிருக்கேன் அப்போதே! இது குறித்து ஆதாரபூர்வமான சில தகவல்கள் தெரிந்தாலும் பகிர்வதற்கு இல்லை. :)))))
நீக்குதஞ்சை ஜூபிடரி உயர்ந்தவர்கள் வெளியானதாக நினைவு...
பதிலளிநீக்குஆனாலும் படம் பார்த்ததில்லை....
குறிப்பாக அப்போதெல்லாம் கமல் படங்களை விரும்புவதில்லை....
ஹிஹிஹி... நானும் படம் பார்க்கவில்லை!
நீக்குஉலக்கை(க) நாயகரெல்லாம் நெ.த.வோட குருநாதர். எனக்கு எப்போவுமே அவர் படங்கள் பிடிக்காது ரகம் தான். ஆனாலும் ஜிவாஜி படங்களைப் போல தொலைக்காட்சி தயவால் ஒரு சில படங்கள் பார்த்திருக்கேன் தான். எங்க பையர் அவரோட ரசிகர்.
நீக்குகமலஹாசன், அவர் கேரியரின் கடைசி கால கட்டங்களில்தான் நல்ல படங்களில் நடிக்க ஆரம்பித்தார் (மைக்கேல் மதன காமராஜன் படத்துக்கு கொஞ்சம் முன்னால). மிடில்ல அப்போ அப்போ நல்ல படம் வரும் (சாஹர சங்கமம் போன்று சில). ஆரம்பகால கமல் படங்கள் மலையாளப்பட பிட் பட ரேஞ்சுக்கு இருக்கும். அப்புறம் பாலசந்தர் படங்கள்லலாம் அவர் பொருத்தமா இருந்ததே இல்லை. அவர் படங்கள்ல உருப்படி என்று நான் நினைப்பது சாகர சங்கமம், மைக்கேல்.., மஹாநதி.... ஒரு 15-20 படங்கள் தேறும்.
நீக்கு"சாகர சங்கமம்" படம் எஸ்.பி.ஷைலஜா, ஜெயப்ரதாவின் மகளாக (?) நடிப்பாரே அந்தப் படமா? சொதப்பல்! படம் அரைகுறையாப் பார்த்தப்போவே பிடிக்கலை! உலக்கை நாயகரின் மிகை நடிப்பு இந்தப் படத்தில் தூக்கலாய்த் தெரிகிறாப்போல் ஓர் எண்ணம். மஹாநதி நல்ல கதையம்சம் உள்ள படம்.
நீக்கு//உலக்கை நாயகரின் மிகை நடிப்பு// - அட ஆண்டவா.... எல்லாம் மிகை நடிப்பு என்று லேபிள் போட்டீங்கன்னா... அப்புறம் எப்படித்தான் நடிக்கறது? எல்லாரையும் விமர்சனம் என்ற பெயரில் அலற வைத்த சுப்புடுகூட நினைவில் வரலையா?
நீக்குகமல் லிஸ்ட்டில் நான் ரசிக்கும் சில படங்களும் உண்டு.
நீக்குராஜபார்வை எடுத்து கையைச் சுட்டுக்கொண்டபின் தைரியமாக மறுபடியும் அப்போதைய காலத்துக்கு ஒவ்வாத விக்ரம் எடுத்தார். ஏவுகணையை தீபாவளி ராக்கெட் போல லாரியில் தூக்கிச்செல்வார்கள்! சமீபத்தில் சுஜாதா எழுத்துகளில் இது பற்றிய நினைவுகளை மீள்வாசிப்பு செய்தேன்!
நீக்குகமலின் மிகை நடிப்புப் படங்களில் "ஹே ராம்" மற்றும் "தசாவதாரம்" விட்டுட்டேனே! :P :P :P :P :P நல்லவேளையா இரண்டுமே பார்க்கலை, பிழைச்சேன். ஆங்காங்கே ட்ரெயிலர்கள் பார்த்ததே சகிக்கலை! அன்பே சிவம் இன்னொரு சொதப்பல். அலட்டல் ரகம்.
நீக்குபுதையலில் ஜிவாஜியோடு ஜோடி யாரு? லலிதா தானே? ஆரம்ப காலங்களில் அவர் தான் ஜிவாஜிக்கு ஜோடியா நடிச்சிருந்திருக்கார் போல!
பதிலளிநீக்குஅக்கா!...
நீக்குபுதையலில் சிவாஜிக்கு ஜோடி பத்மினி..
ஓ, அது பத்மினி தானா? பின்னே சபாஷ் மீனா படத்தில் லலிதாவோ? 2,3 படங்களில் ஜிவாஜி, லலிதா ஜோடி நடிச்சுப் பார்த்த நினைவு. பெயர் தான் நினைவில் வரலை.
நீக்குகீதா, பத்மினி தான். சபாஷ் மீனாவில் மாலினி என்ற நடிகை நடித்தார்.
நீக்குலலிதாவை உங்களுக்கு பிடிக்கும் என்று சொன்னீர்கள். அதனால் லலிதாவாக தோற்றம் தருகிறார் பத்மினி.
பத்மினி ஒல்லியாக இருந்த காலகட்டம் அது!
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்!
பதிலளிநீக்குவணக்கம் கோமதி அக்கா... வாங்க...
நீக்கு’எபி’ தானே இது! கண்ணைக் கசக்கிப் பார்த்துக்கொள்கிறேன். சி.எஸ்.ஜெயராமன்- சுசீலா.. அதுவும் ’விண்ணோடும்..முகிலோடும்...’ என்னடா இது, அட்டகாசமாக ஆரம்பமாகிறதே காலைப்பொழுது!
பதிலளிநீக்குஎபியேதான்! உங்கள் விருப்பம் ஸார்... அப்புறம் பின்னூட்டத்தில் பாருங்கள் சி எஸ் ஜெ பாடல்கள் அணிவகுக்கின்றன!
நீக்குஅவர் ஒரு விதமான பாடகர்தான். குரலே ஆளுக்கு அப்படி! அவருக்கு தரமான பாடல்கள் பல அமைந்துள்ளன -அந்தக்காலத்துக் கவிஞர்களின் கைங்கர்யம்!
நீக்குஇப்போது ஞாபகத்துக்கு வரும் இன்னொரு பாடல்... "யார் சொல்லுவார் நிலவே.... நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே...."
நீக்குஇதைக் கேட்ட நினைவில்லை.
நீக்குகுறவஞ்சிப் படப்பாடல்
நீக்குhttps://www.youtube.com/watch?v=LPaZhIljwyE
யார் சொல்லுவார் நிலவே பாடல் பல தடவை கேட்டு மகிழ்ந்திருக்கிறேன்.
நீக்குஇது கல்கி எழுதிய திரைப்படப் பாடல் என்ற நினைவு
நேயர் விருப்ப பாடல் எனக்கும் பிடித்த பாடல். ஏகாந்தன் சாருக்கு நன்றி.
பதிலளிநீக்குஅடுத்த பாடலும் கேட்டு வெகு காலம் ஆகி விட்டது.
இரண்டு இனிமையான பாடல் பகிர்வுக்கும் நன்றி.
கேட்டு மகிழ்ந்தேன்.
இரண்டாவது பாடல் முழுமையாக mp3 வடிவில் கூடக் கிடைக்காதது எனக்கு வருத்தம்.
நீக்குமுதல்பாடலின் கடைசிவரி இப்படி இருக்கவேண்டும்:
பதிலளிநீக்குவிளையாடி இசைபாடி.. விழியாலே உறவாடி ..
இன்பம் காணலாம் !
மாற்றி விட்டேன் ஏகாந்தன் ஸார்.
நீக்குநன்றி
நீக்குஇரண்டுமே நான் கேட்டு ரசித்த நல்ல பாடல்களே...
பதிலளிநீக்குமூன்று தினங்களாக தங்களது பதிவு எனது டேஷ்போர்டுக்கு வருவதில்லையே காரணம் என்ன ?
நன்றி கில்லர்ஜி.
நீக்கு// மூன்று தினங்களாக தங்களது பதிவு எனது டேஷ்போர்டுக்கு வருவதில்லையே காரணம் என்ன ? //
தெரியவில்லையே ஜி.......
பாடல் வரிகளைப் படிக்கும்போதே சி எஸ் ஜெ குரலுல் பாடல் காதில் கேட்பது எனக்கு மட்டும்தானா?
பதிலளிநீக்குஇரண்டாவது பாடலை பிறகு கேட்டு எழுதுகிறேன்.
தெரிந்த பாடலாயின், அனைவருக்கும் அதுபோலவே மனதில் ஓடும் நெல்லை.
நீக்குஉயர்ந்தவர்கள் படமும் காப்பி தானா?
பதிலளிநீக்குமூலப் படத்தின் பெயரை தலைப்பில் வெளியிட்டு இருந்தார்களா? பாலசந்தர் யாருக்கும் தெரியாமல் காப்பி அடிப்பதில் வல்லவர். ஆனாலும் அதிலும் ஒரு சுவை இருக்கும்.
வாங்க ஜோஸப் ஸார்... பாடலின் மேலேயே விவரம் எழுதி இருக்கிறேன் பாருங்கள்! பாலச்சந்தர் படம் இல்லை இது. டி என் பாலு. சட்டம் என் கையில், சங்கர்லால் போன்ற படங்களை எடுத்தவர். நீங்கள் 'அவர்கள்' படத்தை எண்ணி குழம்பி விட்டீர்கள் என்று நினைக்கிறேன்!
நீக்குஎப்போதோ கேட்டது ..மீண்டும் இன்று கேட்டு ரசிக்கிறேன்.
பதிலளிநீக்குநன்றி சகோதரி.
நீக்குபாடல்கள் கேட்டிருக்கிறேன்.
பதிலளிநீக்குநன்றி சகோதரி.
நீக்கு//சங்கீதத் தென்றலிலே சதிராடும் பூங்கொடியே
பதிலளிநீக்குசந்தோஷம் காண உள்ளம் நாடுதே ...
விழியாலே உறவாடி ..
இன்பம் காணலாம் !.. //
அந்நாட்களில் உறவு கொள்வதெல்லாம் அந்த மட்டில் தான்!
அதனாலேயே சமூகமும் ஒரு பாதுகாப்பான வளையத்துள் உறவு கொண்டிருந்தது!...
திரைப்படங்கள் நல்ல பண்புகளைச் சொல்லின.அட்றா அவளை... வெட்றா அவளை என்று பாடவில்லை!
நீக்குஅரிவாளையும், வழிகின்ற ரத்தத்தையும் காண்பித்துத்தானே போஸ்டர்களே வருகின்றன இந்தக்காலப் படங்களுக்கு. பெண்களைப்பற்றிய்ச் பொதுவான நல்ல மனப்படிவத்தை சீரழித்து சிதைக்கும்படியான கதையோட்டம், பாத்திரப்படைப்புகள், வார்த்தைகள், வசனங்கள். அதற்கெல்லாம் ஓயாது கைதட்டும், பல்லைக்காட்டும், விசிலடிக்கும் வேலைக்காகா குஞ்சுகள்.. தமிழ்மக்களின் ரசனை போனவிதம். ஒன்றும் சொல்வதற்கில்லை.
நீக்குஆமோதிக்கிறேன்.
நீக்கு///முதலில் நேயர் விருப்பம் : //
பதிலளிநீக்குஆஆஆஆஆஆ ஸ்ரீராம் உங்களுக்கு நினைவிருக்கோ.. முன்பு ஒருநாள் சொன்னேனே, நேயர் விருப்பமாக ஒருவரின் பாடலும், உங்கள் விருப்பத்துக்கு ஒரு பாடலும் எனப் போடலாமே என்று.. பார்க்கலாம் எனச் சொன்னீங்க.. ஆனா அதை எல்லாம் நீங்க எங்கு நினைவில் வச்சிருக்கப் போறீங்க கர்ர்ர்ர்:))..
சங்கமித்திரை சொல்வதையெல்லாம் மறந்துவிட்டால், உங்களது நித்திரை போய்விட வாய்ப்புண்டு ஸ்ரீராம் சார்..!
நீக்குநேயர் விருப்பம் பாடல் முன்னரே ஓரிருமுறை வெளியிட்டாச்சே அதிரா... உங்கள் ஐடியாவை முன்னரே செயல் படுத்தியாச்சே...!
நீக்குமறக்கவில்லையே ஏகாந்தன் ஸார்... தொடர்கிறேனே...!
நீக்குஉண்மையைச் சொல்லட்டோ எனக்கு இன்று நேயர் விருப்பப் பாடல்தான் பிடிச்சிருக்கு அதுக்கு முதலிடம்:) மற்றதுக்கு 2ம் இடம்.
பதிலளிநீக்கு2வது பாட்டுக் கேட்டீங்களோ என ஸ்ரீராம் கேட்பார் என்பதனால, வீடியோவைக் கேட்டேன் முழுவதும், நல்ல காட்சி நல்ல பாடல்தான், ஆனா படத்தில் பாடுபவரை எனக்குப் பிடிக்கவில்லை ஹா ஹா ஹா:).
//படத்தில் பாடுபவரை எனக்குப் பிடிக்கவில்லை// - பாடல்னா, இசையை மட்டும்தானே ரசிக்கணும். ஒருவேளை திங்கக் கிழமை சமையல் பதிவு எழுதுபவர்கள் தமன்னா, அனுஷ்கா, அஜீத் மாதிரித்தான் இருக்கணும்னு அடுத்து ஏதேனும் கோரிக்கை வைப்பாரோ?
நீக்குஎன்ன அதிரா இபப்டிக் சொல்லிட்டீங்க... புகழ் பெற்ற, திறமையான பாடகர் அவர். திருவிளையாடலில் யாரும் ஒருநாள் போதுமா, நூல்வெளியில் வரும் மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே, கவிக்குயிலில் வரும் சின்னக்கண்ணன் அழைக்கிறான் பாடல்களை எல்லாம் பாடியவர் இவர்தான்.
நீக்குஹா...ஹா... ஹா... நெல்லை!
நீக்குஎன் கல்லூரி நண்பன் ஒருவன் சிஎஸ்ஜெ-யின் குரலை அப்படியே கொண்டுவந்து பாடுவான். ’காவியமா..நெஞ்சின் ஓவியமா’ என்று அவன் ஆரம்பித்தால், ரேடியோவை மறந்துவிடலாம்.
பதிலளிநீக்குஅந்தக் கால பாடல் ரசனையில், ஆல் இந்தியா ரேடியோ, ரேடியோ சிலோன் ஆகிவற்றின் பங்கை மறக்கமுடியாது.
அப்போதெல்லாம் மனிதர்க்கு, காதுகளோடு மனம் என்ற ஒன்றும் இருந்தது. இப்போதும் என்னென்னவோ இருக்கிறது. ஆயிரம் இருந்தும்.. வசதிகள் இருந்தும்... no peace of mind !
பொதுவாக அந்தக் காலப் பாடல்களில் இரைச்சல் இல்லை. இனிமை இருந்தது.
நீக்குபிடித்த பாடல்கள்...
பதிலளிநீக்குஇரண்டு பாடல்களில் முதலாவது அதிகம் பிடித்த பாடல்.
பதிலளிநீக்கு