ஹாய் ப்ரெண்ட்ஸ்!
குழந்தைகளோட லஞ்ச் விஷயத்துல நமக்கு எப்பவுமே குழப்பம் தான். எங்க வீட்டிலும் அதே!
சாதம்... டப்பாலன்னா அப்படியே அபௌட் டர்ன் ஆகும். அதே சப்பாத்தின்னா... வாவ்! தினம் கொடுத்தாலும் அவங்களுக்கு போரடிக்காது.
அப்படி தினம் கொடுக்கும் போது வெரைட்டி இல்லன்னா எப்படி? இன்றைக்கு பண்ணின முள்ளங்கி சப்பாத்தியும் , முழு உருளை சப்ஜியும் பார்க்க.....
வாங்க! எங்க வீட்டு சமையலறைக்கு!
முதல்ல இரண்டு கப் கோதுமை மாவை உப்பு போட்டு பிசைஞ்சு வைச்சுடுங்க.
அது கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்.
இந்தப் பக்கம் வாங்க. இதோ இந்த முள்ளங்கி இரண்டை எடுத்து அலம்பிட்டு, தோலைச் சீவிக்கலாம். சீவியாச்சா? அதை நன்னா பிழிஞ்சு எடுத்து ஒரு தட்டில் வைச்சுக்கோங்க.
ஒரு பெரிய வெங்காயம் நல்லா பொடிப் பொடியா நறுக்கிக்கணும். வாணலியில் எண்ணெய் விட்டு சீரகம் போட்டு, வெங்காயம் சேர்த்து வதங்கிய பின் பிழிஞ்சு வைச்ச முள்ளங்கித் துறுவலைச் சேர்த்து வதக்குங்க. சிறிதளவு உப்பு, கரம் மசாலா, ஒரு சிட்டிகை மிளகாய் பொடி சேர்த்து, நல்லா வதங்கியதும் ஒரு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து வதக்கி இறக்கும் முன் பொடியாக வெட்டிய கொத்தமல்லித் தழை சேர்த்து ஒரு தட்டில் எடுத்து வைத்து ஆற விடவும். ஆறிய பின் சிறு உருண்டைகளாக எடுத்துக்கோங்க.
ரெஸ்ட் எடுக்கும் சப்பாத்தி மாவை " போதும் ரெஸ்ட்!" என உருண்டையாக உருட்டி , குழவியாலயே போட்டு, ஹா ஹா.. பாவம்!
ஒண்ணும் இல்லீங்க! சப்பாத்தி இட்டு அதனுள் இந்த முள்ளங்கி பூரணத்தை விட்டு திரும்ப இட்டு தோசைக்கல்லில் போட்டு எடுக்க வேண்டியது தான். குழந்தைகளுக்கு என்றால் நெய் தாராளமாக விட்டு சப்பாத்தி போடலாம்.
தொட்டுக்கொள்ள
முழு உருளைக்கிழங்கு சப்ஜி
ஒண்ணு போல் குட்டியா இருக்கற உருளைக் கிழங்கை உப்பு சிறிது சேர்த்து குக்கரில் வேகவைத்து எடுத்தாச்சு.
தக்காளி நறுக்கின ஒரு பங்கை அரைச்சு வைச்சாச்சு.
இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் எல்லாம் மெல்லிசா நறுக்கி வைச்சாச்சு!
இப்ப என்ன? வாணலில எண்ணெய் விடுங்க. வரிசையா..
கடுகு, வெங்காயம், இஞ்சி, பூண்டு, நறுக்கின தக்காளி போட்டு வதக்கி வேக வைச்ச முழு உருளையை சேர்த்து,மஞ்சள் பொடி, உப்பு, தனியா பொடி, சீரகப் பொடி, கரம் மசாலா, கிச்சன் கிங் மசாலா சேர்த்து அப்படியே பொன் வண்ணமா மினுமினுக்கற வரை அடுப்பை 'சிம்'ல வைச்சு மெதுவா கரண்டியில் கிளறுங்க. பின் மீதி தக்காளியை மிக்ஸியில் அரைச்சு க்ரேவியா சேர்க்கவும். கொஞ்சம் போல கஸ்தூரி மேத்தி தூவி இறக்கினா சப்ஜி ரெடி!
வாங்க சாப்பிடலாம்!
மாலா மாதவன்
வாழ்க நலம்...
பதிலளிநீக்குவாழ்க நலம்.
நீக்குஅனைவருக்கும் அன்பின் வணக்கம்...
பதிலளிநீக்குவணக்கம் துரை செல்வராஜூ ஸார்... வாங்க...
நீக்குமுன்பெல்லாம் இலந்தைப் பழ அளவில் குட்டி உருளைக் கிழங்குகள் கிடைக்கும்...
பதிலளிநீக்குஇப்போது எப்படி என்று தெரியவில்லை...
சுலபமாக செய்யக்கூடிய அருமையான குறிப்பு...
அவ்வளவு குட்டியா நான் உ கி பார்த்ததில்லை.
நீக்குஅந்த அளவுக்கெல்லாம் குட்டிக் குட்டி இல்லை..
நீக்குசீமை இலந்தை பார்த்திருக்கின்றீர்களா!..(சுவைத்திருக்கின்றீர்களா?..)
அப்படியிருக்கும்...
Baby Carrot போல Baby Potato.. என்று ஜொல்லலாம்...
சற்றே மாற்றங்களுடன் தக்காளியைத் தவிர்த்து விட்டு செய்வேன்...
பதிலளிநீக்குவாழ்க நலம்...
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்நாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை பரிபூரணமாக பிரார்த்திக்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா. காலை வணக்கம். பிரார்த்தனைகளுக்கு நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇந்த வாரம் "திங்க"ப்பதிவாக சகோதரி மாலா மாதவன் செய்த ரெசிபி நன்றாக உள்ளது.
காரட், பீட்ரூட் சப்பாத்திகள் செய்துள்ளேன். முள்ளங்கியை இந்த மாதிரி அழகூட்டி செய்ததில்லை. அதற்கு தொட்டுக் கொள்ள முழு சின்ன உ. கி மசாலாவும் மிக அருமையாக உள்ளது. இனி இப்படி செய்து பார்க்கிறேன். காய்கறிகள் அனைத்தும் சேர்வதால் மிகவும் சுவையாகத்தான் இருக்கும். அருமையான ரெசிபியை சிறப்பாக தந்த சகோதரிக்கு பாராட்டுக்கள். நன்றிகள். பகிர்ந்த தங்களுக்கும் நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குநேத்துத் தான் சரவண பவனில் சாப்பிட்டு விட்டு (சாப்பாடா அது! ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! கோபத்திலே "க்"ஐ முழுங்கிட்டேன்.) இந்தியன் க்ரோசரியில் முள்ளங்கி வாங்கினோம். மூலி ரோட்டி பண்ணி ரொம்ப நாட்கள் ஆகுதேனு. இப்போல்லாம் ஸ்டஃப் செய்தால் சில சமயங்களில் சாப்பிட முடியறதில்லை என்பதால் முள்ளங்கியைத் துருவி, மஞ்சள் பொடி, உப்பு, காரம், கரம் மசாலா சேர்த்துச் சிறிது நேரம் வைச்சுட்டுப் பிழிந்து எடுத்து வெங்காயம் சேர்க்காமல் மாவிலேயே போட்டுப் பிசைந்தும் பண்ணிடுவேன். தொட்டுக்க தயிர்ப்பச்சடி தான்.
பதிலளிநீக்குசரவண பவன் போய் பணத்தை வேஸ்டாக்கினீங்களா? சரியா போச்சு சரவன பவனுக்கு வாழைப்பழ சோம்பேறிகள்தான் போய் சாப்பிடுவார்கள் அல்லது நார்த் இண்டியன்ஸ் மட்டும் செல்லுவார்கள்
நீக்குஎங்கே! சொன்னால் பெண், மாப்பிள்ளை, பேத்தி ஆகியோர் கேட்கவே இல்லை. நாங்க இந்தியாவிலேயே அதுவும் சென்னையில் இருக்கிறச்சேயே சரவண பவன் போனதில்லை. ரொம்ப உயர்வாகச் சொல்லி அழைத்துப் போனார்கள். :( கடைசியில் சொதப்பல்!
நீக்குhttp://sivamgss.blogspot.com/2015/02/blog-post_16.html முள்ளங்கியைத் துருவிக் கொண்டு மாவில் சேர்த்துப் பிசைந்து செய்த மூலி பராந்தாவின் செய்முறை
நீக்குஉருளைக்கிழங்கில் செய்திருக்கும் "ஆலு தம்" அநேகமா ஃபுல்கா ரொட்டியோடு தான் சாப்பிடுவோம். ஆலு பராந்தா, மூலி பராந்தா, மேதி பராந்தா போன்றவற்றிற்குத் தயிர்,ஊறுகாய் தான்! ஆவக்காய் விழுதோடு, தக்காளித் தொக்கோடு நன்றாக இருக்கும்.
பதிலளிநீக்குஇதே! இதே! வெண்ணையை விட்டு விட்டீர்களே?
நீக்குஆமா, இல்ல வெண்ணெயும் தான், சூடான பராந்தாவின் மேல் வெண்ணெயைப் போட்டு அது உருகிட்டு இருக்கிறச்சேயே சாப்பிடணும்!
நீக்கு// கஸ்தூரி மேத்தி தூவி இறக்கினா சப்ஜி ரெடி!// कसूरी मॆती அது கசூரி மேதி, காய்ந்த வெந்தயக்கீரை இலைகள்! பலரும் கஸ்தூரி மேதி என்றே சொல்லுகின்றனர்.
பதிலளிநீக்குஆம்... நானே சொல்ல வேண்டும் என நினைத்தேன்...
நீக்குவிடியற்காலை அவசரத்தில் கூடி வர வில்லை...
இதற்குத்தான் இப்படியொரு அக்கா வேண்டும் என்பது...
பதிலளிநீக்குகுழந்தைகளுக்கு வித விதமாக நான் லஞ்ச் தாயாரித்து கொடுத்துவிடுவேன் என்ன விதவிதமாக செய்து கொடுக்க சோம்பேறி இல்லாத மனம் வேண்டும் அவ்வளவுதான்
பதிலளிநீக்குநான் விதவிதமாக சாப்பாத்தி தயாரிப்பதற்கு பதிலாக ப்ளேய்ன் சப்பாத்தி பண்ணி ஆனால் அதற்கு சைடிஸ் விதவிதமாக பண்ணிவிடுவேன் உதாரணமாக ஒரு நாள் பாலக் பன்னீர் ஒரு வெஜிடபுள் குருமா, ஒரு நாள் பஞ்சாபி சோலே, ஒரு பன்னீட் பட்டர் மாசாலா ஒரு நாள் பாசிபருப்பு உப்பு உறைப்பு தக்காளி போட்டு ம்சாலா இன்னொரு நால் பாசி பருப்பில் கீரையை பொடிப்ப்பொடியாக போட்டு , உருளைக்கிழங்கு வித் கரம் மசாலா கறி இன்னும் பல
ஐயோ பாவம் மதுரைத் தமிழன். எல்லாம் தானே பண்ணிக்க வேண்டிருக்கு. நாம பண்ணி நாமே சாப்பிடறது தண்டனை இல்லையோ?
நீக்குஎனக்கு என் சமையலை சாப்பிட மிகவும் அதிகம் பிடிக்கும் என் மனைவியின் சமையலை சாப்பிடுவதென்றால்தான் தண்டனை
நீக்குஅருமை
பதிலளிநீக்குதேவகோட்டையிலும் இப்படித்தான் செய்வோம்.
பதிலளிநீக்குநேற்று முள்ளங்கி வாங்கிய பொழுது *முள்ளங்கி பராத்தா செய்து எ.பி.க்கு அனுப்ப வேண்டும் என்று நினைத்தேன். மாலா மாதவன் முந்திக்கொண்டு விட்டார். செய்முறையும், படங்களும் பிரமாதம். இதோ இரண்டு கப் கோதுமை மாவை பிசைந்து விட்டேன். உருளையை வேக வைத்தாயிற்று. *முன்பெல்லாம் கறிகாய் வாங்கினால் என்ன சமைக்கலாம் என்று தோன்றும், இப்போது எ.பி.க்கு அனுப்பும் வண்ணம் என்ன செய்யலாம் என்று தோன்றுகிறது.(இதற்கு நெல்லை என்ன சொல்லப் போகிறாரோ?)
நீக்குஎனக்கும் அப்படித்தான் தோணும் பானுமதி வெங்கடேச்வரன் மேடம். என் பெண் ஏதேனும் புதிதாகச் செய்தால், என் மனைவி மூணு நாலு ஐட்டம் புதிதாகச் செய்தபோது, படங்கள் எடுக்கலையா என்பதுதான் என் முதல் கேள்வி. எபிக்கு அனுப்புவேனே என்பேன்.
நீக்குநல்லா சில ஐட்டம் (இனிப்புகள்) செய்யலாம்னு நினைச்சா நீங்க, க.ஹ., கீ.ர... என்று டக்குனு அனுப்பிடறீங்க. அனுபவசாலிகள் புதிய ஐட்டம்தான் அனுப்பணும் என்ற பேஸிக் ரூலை மறந்துடறீங்க. ஹா ஹா
முள்ளங்கி சப்பாத்தி..இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.
பதிலளிநீக்குபடித்துவிட்டேன். எனக்கு ஷ்டஃப்டு சப்பாத்தி பிடிக்காது. புது செட் டிஷ். இரண்டுமே நல்லா இருக்கும்போல்தான் இருக்கிறது. கொஞ்சம் பிஸி. தி பதிவுக்காக வந்தேன்
பதிலளிநீக்குஎளிய செய்முறை குறிப்பு... நன்றி...
பதிலளிநீக்கு// போதும் ரெஸ்ட்...! // ஹா... ஹா...
முள்ளங்கியின் வாசனை பிடிக்கும் என்றால் ஓக்கே
பதிலளிநீக்குமிக அருமையான குறிப்பு!
பதிலளிநீக்குcharge இல்லை. அப்புறமா இல்லைனா காலம்பரத் தான் வரணும்.
பதிலளிநீக்குஅருமையான சமையல் குறிப்பு.
பதிலளிநீக்குநன்றாக இருக்கிறது , செய்முறை குறிப்பு சொன்னவிதம் அருமை.