சனி, 9 நவம்பர், 2019

நள்ளிரவில் பஸ்ஸில் இருந்து இறங்கிய மருத்துவ மாணவி 


1)  பாராட்ட வார்த்தைகள் இல்லை...  நெகிழ வைக்கிறார்கள்.  மாணவியின் பாதுகாப்புக்காக, பஸ்சை நிறுத்திய, கேரள அரசு போக்குவரத்து கழக டிரைவர், கண்டக்டரை மற்றும் சக பயணிகளை  நாமும் பாராட்டுவோம்.






2)  மகத்தான மனுஷி.   அர்ப்பணிப்பு ஆசிரியை.  மஹாலக்ஷ்மி பற்றி அறிந்துகொள்ள இதில் இருக்கும் சுட்டிகளை பாருங்கள்.  ஆசிரியை வேலை கிடைத்ததும் எவ்வளவு கனவுடன் பணிக்குச் சென்றார் என்பதையும், அதன் பின்னான அனுபவங்களையும் முயற்சிகளையும்...











3)  முதியோர் உதவித்தொகை வாங்கி தருவதாக, அரசு ஊழியர் லஞ்சமாக பெற்ற பணத்தை, பொதுமக்கள் முன்னிலையில், ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவ ராவ் திருப்பி கொடுக்க வைத்தார்.








4)  மைசூரு மாவட்டம், கடகா கிராமத்தை சேர்ந்தவர் தேஜஸ். இவர், அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்றில், 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், தனியார், 'டிவி' ஒன்றில் நடத்தும், 'கன்னட கோடீஸ்வரன்' நிகழ்ச்சியில் பங்கேற்று, 6.40 லட்சம் ரூபாய் வென்றுள்ளார்.  தான் வென்ற பணத்திலிருந்து, ஒரு பகுதியை செலவழித்து, தான் படிக்கும் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டி கொடுக்க, தேஜஸ் முடிவு செய்துள்ளார்.






5)  இதுகுறித்து ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. மோகன்தாசுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். மோகன்தாஸ் அந்த மூதாட்டியை மீட்டு ஜெயங் கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்து தொடர்ந்து பராமரித்து வருகிறார். மூதாட்டிக்கு தேவையான வசதிகளை டி.எஸ்.பி. மோகன்தாஸ், போலீஸ்காரர் மணிகண்டன் உள்ளிட்ட போலீசார் செய்து வருகின்றனர்.






6)  மழை பெய்யக் காரணமானவர்.  

''மக்கள் தொகைக்கு ஏற்ப, 120 கோடி மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதே, என் லட்சியம்,'' எனக் கூறி, நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறார்.   முல்லைக்கு தேர் கொடுத்த பாரியைப் போல, தன் வாழ்க்கையை, மரங்களுக்காக கொடுத்திருக்கிறார், முல்லைவனம்.




27 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் வணக்கங்களுடன் இந்நாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை பரிபூரணமாக பிரார்த்திக்கிறேன்.

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை முதல் செய்தி இரண்டொரு நாள் முன்பு அறிந்தேன். மனித நேயம் மிக்க அந்த பேருந்திலுள்ள அனைவருக்கும் பாராட்டுக்கள். நன்றிகள். நிறைய செய்திகள் மன நிறைவை தருகின்றன படித்து விட்டு வருகிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...    காலை வணக்கமும், பிரார்த்தனைக்கு நன்றியும்.

      நீக்கு
  2. அன்பின் வணக்கம்...
    அனைவருக்கும் நல்வரவு....

    பதிலளிநீக்கு
  3. மகத்தான மனிதர்கள்..

    மனிதநேயம் இன்னும் தழைத்துக் கொண்டுதான் இருக்கின்றது..

    தேஜஸ் போன்ற செல்வங்களின் வருகை
    புதிய நம்பிக்கையின் வெளிப்பாடு...

    வாழ்க நலம் என்றென்றும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  மனதில் நம்பிக்கை ஒளியேற்றும் தீபங்கள்.

      நீக்கு
  4. தேஜஸ் பிரமிப்பூட்டுகிறான் வாழ்க வளர்க...

    பதிலளிநீக்கு
  5. மகத்தான ஆசிரியை மஹாலக்ஷ்மி : என்னவொரு அர்ப்பணிப்பு... பாராட்டுகள்... வாழ்த்துகள்..

    G.V. பிரகாஷ் அவர்களின் ஆர்வமும் தேடலும் தொடரட்டும்...

    பதிலளிநீக்கு
  6. நீங்கள் பகிர்ந்து உள்ள அனைத்து செய்திகளும் பாராட்ட பட வேண்டியவை பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  7. இந்த வாரம் நிறைய நல்ல செய்திகளைப் பகிர்ந்துகொண்டுள்ளீர்கள்.

    அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் நல்ல செயலைச் செய்திருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  8. 1. ஒரு பெண் தனியாக இரவில் வருகிறாள் என்றால், உறவினர் வெகு நேரத்துக்கு முன்பே பஸ்ஸ்டாண்டில் சென்று காத்திருக்கவேண்டாமா? அதுவும் இரவு 11 மணி, கடையடைப்பு நடந்த தினம். பொறுப்பற்றவர்கள். இதில் பேருந்து டிரைவர், கண்டக்டர் பாராட்டுக்குரியவர்கள்.
    2. ஆசிரியை மஹாலக்‌ஷ்மி பாராட்டுக்குரியவர். தன் சமூகக் குழந்தைகளை முன்னேற்ற தன் வாழ்க்கையை அர்ப்பணித்ததற்காக.
    3. முதியோர் உதவித்தொகைக்காக லஞ்சம் - அரசுப் பணியாளர்கள் லஞ்சத்தில் ஊறித் திளைக்கிறார்கள், தங்கள் குடும்பத்திற்கு பெரும் பாவத்தைச் சேர்த்து இறக்கிறார்கள் என்பதற்கான இன்னொரு உதாரணம் இது. கலெக்டர் அப்படிப்பட்ட லஞ்சம் வாங்குபவர்கள் எல்லோரையும் பணத்தைத் திருப்பிக் கொடுக்குமாறு வைக்க நினைத்தால், நாளையே அவர் மாற்றப்பட்டுவிடுவார். நாட்டு நிலைமை அப்படி.
    4. தேஜஸின் சமூகச் சிந்தனை பாராட்டுக்குரியது. மற்றவர்களுக்கும் இன்ஸ்பிரேஷனாக இருப்பான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உறவினர்களின் பொறுப்பின்மை!  லஞ்சப்பணம்...மாற்றவேமுடியாத அவலம்.

      நீக்கு
  9. 5, 6 - ஒருவர் விவசாயக்கூலியாக இருந்து, மரம் (செடி) வளர்த்து, நடும் பணியைச் செய்துவருகிறார். இன்னொருவர் 8 பசங்க கூலி வேலைக்குச் செல்பவர்களாக இருந்தும் அனாதையாக இருக்கிறார். நான் நினைக்கறது, ஒவ்வொருவரும், தங்கள் வாழ்க்கைக்குத் தேவையான பணத்தைச் சேமித்து வைக்கணும். தனக்கு மிஞ்சினபிறகுதான் தானம். அப்படி இல்லாவிட்டால் அவர்கள் பாடு, வயதாகும்போது திண்டாட்டமாகிவிடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை.  பணத்தின் மீதுதான் பக்தி என்றபின்....

      நீக்கு
    2. வெவ்வேறு துறைகளில் சிறப்பான செயல்களை செய்ந்திருப்பவர்களில் சிறுவன் தேஜஸ் மிகவும் கவர்கிறான். கலெக்டர் மக்களுக்கு முன்னிலையில் லஞ்சம் வாங்கிய ஊழியரை தண்டித்திருக்க வேண்டாம் என்று தோன்றுகிறது. 

      நீக்கு
  10. வரிசையாக திகட்டாத நேர்மறைச் செய்திகள்!.. எல்ளோரும் நல்லவரே என்பது தான் இயல்பான வாழ்க்கை அமைப்பாக இருக்கிறது.

    பல நேரங்களில் அது மாறிப் போவது எப்படி என்பதும் தெரிவதாகத் தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  11. நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும்பெய்யும் மழை என்று படித்திருக்கிறோம் ஆனல் இங்கு நல்லார் பலரும் இருக்கிறார்கள் மழைக்கு பஞ்சமே இருக்காது

    பதிலளிநீக்கு
  12. அனைவருக்கும் மாலை/காலை வணக்கம். வந்தவர் அனைவருக்கும் நல்வரவு. வாழ்த்துகள், பிரார்த்தனைகள். முதல் நான்கும் படித்திராத செய்தி. பாட்டி பற்றிய செய்தியைப்படித்து மனம் நொந்து போனேன். ஏற்கெனவே படித்தும் இருக்கேன். முல்லைவனம் போற்றுதலுக்கு உரியவர். தேஜஸ் பெயருக்கேற்ப ஒளி வீசிப் பிரகாசிக்கட்டும். பாட்டியைக் கவனித்து வரும் காவல் துறையினர் உண்மையிலேயே மக்களின் நண்பர்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  13. போற்றத்தக்கவர்களைப் பற்றிய அருமையான செய்திகள். வழக்கம்போல அருமை.

    பதிலளிநீக்கு
  14. பாராட்டுக்குரியவர்களைப் பற்றிய பகிர்வுக்கு நன்றி. பல குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்றி வருகிறார் ஆசிரியர் மஹாலக்ஷ்மி. குடும்பத்தினரால் புறக்கணிக்கப்படும் முதியவர்களைப் பற்றிய செய்திகள் அதிகமாகி வருவது வருத்தத்துக்குரியது. காவல் துறையினர் கருணையுடன் செயல்பட்டுள்ளனர். ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான மரங்களை சாலை விரிவாக்கம், மெட்ரோ போன்றவற்றுக்காக இழந்து வரும் வேளையில் திரு.முல்லைவனத்தின் செயல் நம்பிக்கையூட்டுகிறது.

    பதிலளிநீக்கு
  15. பேருந்து டிரைவர், கண்டக்டர் பாராட்டுக்குரியவர்கள்.
    மகத்தான மனுஷிதான் மகாலட்சுமி. இரண்டு காணொளிகளும் அவரை புரிந்து கொள்ள உதவியது.



    அனைத்து செய்திகளும் அருமை.
    போற்றவேண்டியவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!