சித்ராலயா அளிக்கும் ஸ்ரீதரின் நெஞ்சிருக்கும் வரை. 1967 இல் வெளிவந்த படம்.
வசனங்கள் ஸ்ரீதருடன் சேர்ந்து எழுதியவர் நரசிம்மா ஸாரின் அப்பா கோபு ஸார். சமீபத்தில் அப்பா, மகன் இருவரும் இணைந்து ஒரு விழாவில் கலந்து கொண்டதாய் நரசிம்மா பேஸ்புக்கில் எழுதி இருந்தார்.
வசனங்கள் ஸ்ரீதருடன் சேர்ந்து எழுதியவர் நரசிம்மா ஸாரின் அப்பா கோபு ஸார். சமீபத்தில் அப்பா, மகன் இருவரும் இணைந்து ஒரு விழாவில் கலந்து கொண்டதாய் நரசிம்மா பேஸ்புக்கில் எழுதி இருந்தார்.
நெஞ்சிருக்கும் எங்களுக்கும் நாளை என்ற நாளிருக்கும் வாழ்ந்தே தீர்வோம் என்கிற பாடல் மட்டும் வாலி எழுதி இருக்கிறார். மற்ற அனைத்துப் பாடல்களும் கவியரசர் பாடல்களே...
இசை எம் எஸ் விஸ்வநாதன்.
சிவாஜி கணேசன், கே ஆர் விஜயா, முத்துராமன் ஆகியோர் நடித்த திரைப்படம்.
இரண்டு பாடல்களில் எது முதல் எது இரண்டாவது என்றே சொல்ல முடியாது. தங்கைக்காக அண்ணன் பாடும் பாடலாக முதலாவது பாடல். இந்தப்பாடல் பற்றி சமீபத்தில் ஜி எம் பி ஸார் எழுதிய பதிவும் ஞாபகமிருக்கும். இரண்டு பாடல்களும் அழகான வரிகளில் மிளிர்கின்றன. முதல் பாடலில் டி எம் எஸ் உணர்ந்து பாடி இருப்பார். முதல் பாடல் டி எம் ஸ் மட்டும், அடுத்த பாடல் பி. சுசீலாவுடன் இணைந்தும் பாடியிருக்கிறார்.
பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி
பார்வையிலே மன்னன் பேரெழுதி
பார்வையிலே மன்னன் பேரெழுதி
அதை பார்த்திருக்கும் கண்ணில் நீரெழுதி
அதை பார்த்திருக்கும் கண்ணில் நீரெழுதி
பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி
பொன்மணி கண்களில் அஞ்சனம் தீட்டி
பூவையின் அண்ணன் கைவளை பூட்டி
பொன்மணி கண்களில் அஞ்சனம் தீட்டி
பூவையின் அண்ணன் கைவளை பூட்டி
தாய் வழியே வந்த நாணத்தை காட்டி
தாய் வழியே வந்த நாணத்தை காட்டி
தான் வருவாள் மங்கை மங்கலம் சூட்டி
தான் வருவாள் மங்கை மங்கலம் சூட்டி
நிகழும் பார்த்திப ஆண்டு
ஆவணி திங்கள் இருபதாம் நாள்
திருவளர் செல்வன் சிவராமனுக்கும்
திருவளர் செல்வி ராஜேஸ்வரிக்கும்
நடைபெறும் திருமணத்திற்கு
சுற்றம் சூழ வந்திருந்து
வாழ்த்தி அருள வேண்டுகிறேன்
தங்கள் நாள் வரவை விரும்பும்
ரகுராமன் ரகுராமன் ரகுராமன்
மாதரார் தங்கள் மகளென்று பார்த்திருக்க
மாப்பிள்ளை முன் வந்து மணவறையில் காத்திருக்க
காதலாள் மெல்ல கால் பார்த்து நடந்து வர
கன்னியவள் கையில் கட்டி வைத்த மாலை தர
காளை திருக்கரத்தில் கனகமணி சரம் எடுக்க
ஆனந்தம் பாடு என ஆங்கோர் குரல் பிறக்க
கொட்டியது மேளம் குவிந்தது கோடி மலர்
கட்டினான் மாங்கல்யம்
மனை வாழ்க துணை வாழ்க குலம் வாழ்க
கைத்தலம் தந்தேன் என் கண்மணி வாழ்க
கடமை முடிந்தது கல்யாணமாக
அடைக்கலம் நீ என்று வந்தனள் வாழ
அடைக்கலம் நீ என்று வந்தனள் வாழ
ஆண்டவன் போல் உன்னை கோயில் கொண்டாட
பூ முடித்தாள் இந்த பூங்குழலி
புது சீர் அடைந்தாள் வண்ண தேனருவி
என் பார்வையிலே உந்தன் பேர் எழுதி
அதை பார்த்திருப்பேன் கண்ணில் நீரெழுதி
கண்ணில் நீரெழுதி
கண்ணில் நீரெழுதி
இந்தப்பாடலின் ஆரம்ப இசையிலேயே எம் எஸ் வி மயக்கியிருக்கிறார். சந்தித்த வேளையில் வரிகள் வரும்போது வெங்கட் நாகராஜ் நினைவுக்கு வருகிறார்!
இந்த வருட தீபாவளி மலரில் 'முத்துக்களோ கண்கள்' பாடல் உருவான வகை பற்றி மதுரை ஜி எஸ் மணி சொல்லி இருக்கும் விவரங்கள் படித்ததும் முன்னரே குறித்து வைத்திருந்த பாடலை எடுத்து பதிவிவிட்டு விட்டேன்.
இந்த வருட தீபாவளி மலரில் 'முத்துக்களோ கண்கள்' பாடல் உருவான வகை பற்றி மதுரை ஜி எஸ் மணி சொல்லி இருக்கும் விவரங்கள் படித்ததும் முன்னரே குறித்து வைத்திருந்த பாடலை எடுத்து பதிவிவிட்டு விட்டேன்.
முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை
தந்துவிட்டேன் என்னை
படித்த பாடம் என்ன உன் கண்கள்
பார்க்கும் பார்வை என்ன?
பாலில் ஊறிய ஜாதிப்பூவை சூடத் துடிப்பதென்ன
முத்துக்களே பெண்கள் தித்திப்பதே கன்னம்
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை
தந்துவிட்டேன் என்னை
கன்னிப்பெண்ணை மெல்ல மெல்ல தென்றல் தாலாட்ட
கடலின் அலைகள் ஓடிவந்து காலை நீராட்ட
எழுந்த எண்ணமென்ன என் எண்ணம்
ஏங்கும் ஏக்கம் என்ன?
விருந்து கேட்பதென்ன அதையும் விரைந்து கேட்பதென்ன?
ஆசைகொஞ்சம் நாணம் கொஞ்சம் பின்னிப்பார்ப்பதென்ன?
மலர்ந்த காதல் என்ன உன் கைகள்
மாலையாவதென்ன?
வாழைத்தோரண மேளத்தோடு பூஜை செய்வதென்ன?
அருகில் விழுந்து மடியில் விழுந்து ஆடக் கேட்பதென்ன?
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்..
பதிலளிநீக்குவாழ்க நலம்...
கிடையாது!
நீக்குவாழ்க நலம்.
அன்பின் ஸ்ரீராம் மற்றும் அனைவருக்கும் வணக்கம்....
பதிலளிநீக்குவாங்க துரை செல்வராஜூ ஸார்... வணக்கம்.
நீக்குஅன்பின் நல்வரவு....
பதிலளிநீக்குகாலை இனிதாக அமையட்டும் அனைவருக்கும்.
பதிலளிநீக்குபழம்பாட்டுக்களுக்கு ஒரு வெல்கம் !
பழம் பாட்டுகளே வெல்லம்...
நீக்குவெல்லும்!...
இனிதான காலை வணக்கம் ஏகாந்தன் ஸார்... வாங்க.. வாங்க...
நீக்குபழமென்றால் இனிக்கும்!
நீக்குமிகுந்த ஆச்சர்யம்...
பதிலளிநீக்குசென்ற வாரமே நினைத்திருந்தேன்..
இந்த வாரம் இந்தப் பாடல் வெள்ளி மலராக மலரும் என்று....
ஆச்சர்யம். நானே இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் முடிவு செய்தேன். முதலில் எழுதி வைத்திருந்தது வேறு! எப்படி?!!
நீக்குஇதெல்லாம் அமானுஷ்யத்துள் வருமோ!...
நீக்குஆச்சர்யம். அடுத்த வாரம் என்ன பாடல் பகிரப்போகிறேன்?!! சொன்னீர்கள் என்றால் மாற்றிப் பதிகிறேன்!!!
நீக்குபுதன்கிழமைக்கு ஒரு புதிய சப்ஜெக்ட். அமானுஷ்யம்!
நீக்குகேஜிஜி குறித்துக் கொள்வார்! அது சரி... முன்னர் இதே தளத்தில் சில அமானுஷ்ய அனுபவங்கள் வந்திருக்கிறது தெரியுமோ?
நீக்குஅதிகாலை 3 மணிக்கு வந்த விழிப்புக்குப் பின் அமானுஷ்யமோ. மர்மமோ எனப் புரியாத வெளியில் சிந்தனை தொடர்ந்துகொண்டே இருந்தது. கட்டுரையோ.. கதையோ !
நீக்குஅப்போ அது சம்பந்தமாக உங்கள் தளத்தில்பதிவு வரும் என்று சொல்லுங்கள்!
நீக்குஇதில் திட்டமிட்டால்
நீக்குஅமானுஷ்யத் திரள் கலைந்து போகும்..
நான் சிவாஜி என்றால்
அவர் எம்ஜியார் என்பார்
இடையில் சந்தடியில்லாமல் வீரப்பா நுழைந்து விடுவார்...
முன்னரே அமானுஷ்ய அனுபவங்கள் வந்திருக்கிறதா!
நீக்குஎங்கள் பிளாக்கிலா கேட்கிறீர்கள்? எனில், ஆமாம்... அமானுஷ்ய அனுபவங்கள் என்று சர்ச் கொடுத்தால் வரலாம்!
நீக்குஇந்தப் படத்தில் எவருக்கும் ஒப்பனை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது...
பதிலளிநீக்குஆமாம். அதைப் பதிவில் குறிப்பிடவேண்டும் என்று நினைத்திருந்தேன். மறந்துவிட்டது.
நீக்குஇடைவேளை வரை தான் மேக்கப் இல்லை. இடைவேளைக்குப் பிறகு மேக்கப் உண்டு.
நீக்குஓ... அப்படியா?
நீக்கு@ஸ்ரீராம்: ஆமாம்!
நீக்குஇரண்டுமே எனக்கு பிடித்த பாடல் ஜி
பதிலளிநீக்குரசிப்புக்கு மிக்க நன்றி ஜி.
நீக்குவிடியலுக்கு சற்று முன்பாக எங்கள் இல்லத்தில் இன்னுமொரு பூ பூத்திருக்கின்றது...
பதிலளிநீக்குஇறைவனுக்கும் அம்பிகைக்கும் நன்றி...
ஆஹா... புது வரவுக்கு(ம்) வாழ்த்துகள்.
நீக்குவணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே
நீக்குதங்கள் வீட்டில் மலர்ந்திருக்கும் புது மலருக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
(பேத்தியா, பேரனா..?) நீடூழி வாழ்க வளமுடன் என இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கங்கையாய் காவிரியாய்
நீக்குகன்னலாய் இனித்திடும் கனித்தமிழாய்...
முல்லையாய் மல்லியாய்
முன்வினை தீர்த்திடும் செண்பகவல்லியாய்!..
வணக்கம் சகோதரரே
நீக்குநல்லது. மிக்க மகிழ்ச்சி. இத்தனையும் செழித்திடும் பொறுமையின் சிகரமாம் பூமித்தாயாய் பூத்த புது பூவினிற்கும்,அப் பூ மகளை ஈன்றெடுத்த அன்பு அன்னைக்கும் என்றென்றும் என் மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
புது மலருக்கு நல்வரவும், ஆசிகளும். நோய் நொடியில்லாத ஆரோக்கியமான சந்தோஷமான வாழ்க்கை வாழவும் பிரார்த்தனைகள். குழந்தையின் பெற்றோருக்கும் ஆசிகளும், வாழ்த்துகளும்.
நீக்குமலரே வருக! இனிதே நீடூழி வாழ்க!
நீக்குபுது மலருக்கு வாழ்த்துக்கள்.
நீக்குபுதுமலரின் பெற்றோர்கள், தாத்தா, பாட்டிகள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
எங்கள் ஆசியும், அன்பும்.
புது வரவிற்கு வாழ்த்துகளும், ஆசிகளும்!வெள்ளியன்று விடியற் காலையில் மஹாலக்ஷ்மியே உங்கள் இல்லதிற்கு வந்திருகிறாள். மிக்க மகிழ்ச்சி.
நீக்குஅன்பு கொண்டு எங்கள் இல்லத்துத் தென்றலை வாழ்த்திய் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.. மகிழ்ச்சி...
நீக்குகேட்கும் பாடல்கள் பலவற்றில்
பதிலளிநீக்குகேட்டவுடன் மனதில் ஒட்டிக் கொள்பவை ஒரு சில..
அவற்றுள் இவையிரண்டும்...
ஆமாம். முதல் பாடல் பாசமழை பொழிகிறது என்றால், இரண்டாவது பாடலின் ஆரம்ப இசையே கவர்கிறது. எம் எஸ் வி!
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்தநாள் இனிய நாளாக அமையவும் மனமாற இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா... காலை வணக்கமும், பிரார்த்தனைகளுக்கு நன்றியும்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇரண்டுமே அருமையான பாடல்கள். இசையும், பாடல் வரிகளும் மனதில் போட்டியிட்டு அமர்ந்து கொண்டவை. இதுவும் முதலில் தலைப்பை பார்த்தவுடன் இந்தப் பாடல்தான் என நினைவுக்கு வந்து விட்டது. உறுதியாக்கி விட்டு வருவதற்குள் வந்த இருபது கருத்துக்கள் பாட்டின் இனிமையை பறைச் சாற்றுகின்றன. நன்றி.
படம் பார்த்திருக்கலாம். கதை நினைவுக்கு வரவில்லை. ஆனால் பாடல்கள் மறக்க முடியாதவை. இன்றெல்லாம் என் மனதுக்குள் இந்தப் பாடல்கள் ஒலித்துக் கொண்டேயிருக்கும். இன்றைய வெள்ளியில் இந்த இனிமையான மறக்க முடியாத பாடல்களை தந்தமைக்கு நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா... ஆமாம்... இதில் இன்னும் இரண்டு இனிமையான பாடல்களும் இருக்கின்றன. எவ்வளவு பாடல்களை பகிர! நன்றி.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். இந்தப்படம் சின்னமனூரில் புகழேந்தித் திரை அரங்கில் பார்த்தோம். பார்த்தோம்னா நாங்க குழந்தைகளாகப் போனோம். சித்தி குழந்தைகள், நான், என் தம்பி, சித்தி நாத்தனார் குழந்தைகள். துணைக்கு வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த முருகேசன்! இந்தப்படம் பார்க்கச் சொல்லி அனுப்பியது சித்தப்பா. சின்னமனூரில் குழந்தைகளோடு தனியாய்ப் படம் போனது அப்பாவுக்குத் தெரிந்தால் என்ன சொல்லுவாரோ என்னும் பயம் எனக்கும், தம்பிக்கும்! சித்தப்பாவுக்குக் கோபம் வந்தது. இப்படிக் கோழையாய் இருக்கீங்களே என்றார். நம்மைப் பத்தி அவ்வளவா அறிந்திருக்கலை! இஃகி,இஃகி, இஃகி,
பதிலளிநீக்குவாங்க கீதா அக்கா... சின்னமனூர் என்றதும் எனக்கு சர்க்கஸ் ஞாபகம் வருகிறது!
நீக்கு//சமீபத்தில் அப்பா, மகன் இருவரும் இணைந்து ஒரு விழாவில் கலந்து கொண்டதாய் நரசிம்மா பேஸ்புக்கில் எழுதி இருந்தார். //
பதிலளிநீக்குஇந்த நிகழ்ச்சி பற்றிய ஓர் விமரிசனம், முகநூல் நண்பர் ஜெயராமன் ரகுநாதன் எழுதி இருந்தார். திரு கோபுவின் பற்கள் அற்ற வாயிலிருந்து வந்த மழலைச் சொற்கள் ஹாஸ்யம் ததும்ப இருந்ததையும் சுட்டிக் காட்டி இருந்தார். பல நினைவுகளைப் பகிர்ந்து கொண்டாராம் திரு கோபு. இசைக்கவி ரமணனும் அதில் பாடல்கள் பாடி இருந்திருக்கிறார்.
ஆமாம்... கணேஷ் பாலா அதுபற்றிய விவரங்கள் கேட்க, யூ டியூபில் விரைவில் வெளிவரும் என்று சொல்லி இருக்கிறார் நரசிம்மா...
நீக்குஇரண்டு நாட்கள் முன்னர் தான் ஜி.எஸ்.மணி பற்றியும் அவர் மதுரை மேலாவணி மூலவீதியில் ஒன்றாம் எண் வீட்டில் இருப்பது குறித்தும் முகநூல் சிநேகிதி ஷோபாவிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். ஸ்வாமி ஹரிதாஸ் அந்த நாட்களில் மதுரை ஜி.எஸ்.மணி அவர்கள் வீட்டில் தான் தங்குவார். பஜனைகள் பல கேட்டிருக்கோம். ஆடி வீதியில் நடக்கும் பஜனைகளுக்குப் போவோம். இரவு பனிரண்டு மணி வரை கூட்டம் நான்கு ஆடி வீதியிலும் ஆடாது, அசையாது கேட்டுக் கொண்டிருக்கும். அதெல்லாம் ஓர் பொற்காலம்.
பதிலளிநீக்குஅடடே... இன்னொரு தற்செயலான விஷயம். ஒருவிதத்தில் அவர்தான் இன்று இந்தப் பாடலைப் பகிரவே காரணம். தினமணி தீபாவளி மலரில் அவர் சொல்லி இருக்கும் இந்த விவரம் படித்த உடன்தான் எனக்கு இந்தப் பாடலைப் பகிரும் எண்ணமே வந்தது.
நீக்குஇரவு நேரம் கணினியில் அதிகமாக உட்கார முடிவதில்லை. இங்கே மழை, குளிர், வெயில் என மாறி மாறி வரும் சீதோஷ்ணம். குளிர் அதிகம் என்பதால் ஏசியை அணைச்சுட்டுக் கதகதப்புக்கான ஹீட் போட்டிருக்காங்க. எனக்கு வேர்க்குது! :( எல்லோருக்கும் குளிர்! :) எனக்கு மட்டும் தனியாக டேபிள் ஃபான்! :)))) பிழைத்துக்கிடந்தால் காலம்பரப் பார்க்கலாம்.
பதிலளிநீக்குஓகே... கீதா அக்கா... தூங்கிட்டு காலையில் வாருங்கள்.
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம். இரண்டுமே மிக அழகான பாடல்கள்.
பதிலளிநீக்கு'பூ முடிப்பான் இந்த பூங்குழலி..' இந்தப் பாடலை எழுதி முடித்த கையோடு அவர் மகளுக்கு திருமணம் நிச்சயமானதாம். மகளின் திருமண வரவேற்பில் டி.எம்.எஸ். இந்தப் பாடலை பாடியபொழுது கண்ணதாசனைப் பார்த்து ஒரு பொருள் பொதிந்த புன்னகை புரிந்தாராம். 'கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்' என்னும் கட்டுரையில் இதை குறிப்பிட்டிருந்தார்.
துரை சாரைப் போலவே நானும் 'முத்துக்களோ கண்கள்..' பாடலை நினைத்துக் கொண்டேன். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
வாங்க பானுக்கா... காலை வணக்கம்.
நீக்குநீங்கள் சொல்லி இருக்கும் தகவலில் அந்த அவர் எம்மெஸ்வியா? சிவாஜியா? கண்ணதாசனா? கண்ணதாசன் என்கிற பதில்தான் பொருத்தமாய் இருக்கிறது!
எனக்கும் நினைவிருக்கிறது...
நீக்குதன் மகளின் திருமண வரவேற்பு
நிகழ்ச்சியில் இந்தப் பாடலை TMS பாடும் போது அதைக் கேட்டு நெகிழ்ந்ததை கவியரசர் நினைவு கூர்ந்திருப்பார்....
ஓ...
நீக்குமுதல் பாடலில் டி எம் எஸ் உணர்ந்து பாடி இருப்பார்.//
பதிலளிநீக்குஅவர் பாடிய அனைத்துப் பாடல்களுமே உணர்ச்சிகரமான பாடல்கள் தான். அவருக்கு பிறகு வருபவர்கள் எல்லாம் வெறுமனே பாடலை பாடுகிறார்களேத் தவிர உணர்ந்து பாடுவதில்லை.
வாங்க ஜோஸப் ஸார்... நீங்கள் .சொல்வது உண்மை. இந்தப் பாடலில் திருமணம் பற்றி பாட வேண்டுமென்றால் பாடல் எவ்வளவு உற்சாகமாக இருக்கவேண்டும்? ஏழ்மையோ, பிரிவோ, ஏதோ ஒரு காரணத்தால் மெல்லிய சோகம் இழைந்தோட, அன்பும், பாசமும் தெரிய வரிகள் குரலில் குழைந்து வரும். அதைச் சொன்னேன்.
நீக்குஅனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குஇரண்டு பாடல்களும் மிகவும் பிடித்த பாடல்.
இனிமையான பாடல்கள்.
இந்த படத்தில் தான் காதலித்த பெண் தன் நண்பரை காதலிப்பாதக சொன்னவுடன் அந்த பெண்ணை தங்கையாக ஏற்றுக் கொள்வார். தங்கையின் நல் வாழ்வுக்கு தன்னையே தியாகம் செய்வார்.
அதுதான் இந்த பாடலில் சோகம்.
ஓஹோ... நான் படம் பார்க்கவில்லை.
நீக்கு//ஓஹோ... நான் படம் பார்க்கவில்லை.// !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நீக்குமுத்துக்களோ கண்கள் கனவு பாடல்.
பதிலளிநீக்குஆமாம்... பாடல் ஆரம்பிக்கும்போது தெரியும். கொஞ்சம் முன்னரே தொடங்கும் அந்த வீடீயோவை விட்டுவிட்டு இதை ஷேர் செய்தேன்.
நீக்குஇயக்குனர் ஸ்ரீதர் ராணுவ வீரன் ஒருவனை கதா நாயகனாக்கி ஒரு கதை எழுதி அதற்கு நெஞ்சிருக்கும் வரை என்று தலைப்பும் கொடுத்திருந்தாராம். அந்தக் கதையை சிவாஜியிடம் கூறிய பொழுது அவர் அப்பொழுதான் ரத்தத்திலகத்தில் நடித்திருந்ததால் ராணுவ பின்னணி வேண்டாமே என்றாராம். அதனால் நெஞ்சிருக்கும் வரை என்ற தலைப்பை மாற்றாமல் வேலையில்லாத மூன்று நண்பர்கள் என்ற கதையை உருவாக்கினாராம். கே. பாலச்சந்தரின் வறுமையின் நிறம் சிவப்பு என்னும் படம் வந்த பொழுது சிலர் அதையும் நெஞ்சிருக்கும் வரையையும் ஒப்பிட்டார்கள்.
பதிலளிநீக்கு1982 ல் நான் சிங்கப்பூரில் வேலை செய்தபோது அங்கே ஒளிவழி ( Tv) யில் வறுமையின் நிறம் சிவப்பு படம்
நீக்குஒளிபரப்பப்பட்டது..
உடன் வேலை செய்த தமிழர் மட்டுமல்லாமல் சீன மலேஷியரும் இழிவாகப் பேசினார்கள்...
காரணம்
அந்தப் படத்தில் வேலையில்லாத பட்டதாரிகள் சாக்கடையில் விழுந்த ஆப்பிள் பழத்துக்காக அடித்துக் கொள்வதைப் போல ஒரு காட்சியில் வரும்...
//அந்தப் படத்தில் வேலையில்லாத பட்டதாரிகள் சாக்கடையில் விழுந்த ஆப்பிள் பழத்துக்காக அடித்துக் கொள்வதைப் போல ஒரு காட்சியில் வரும்...//
நீக்குஆமாம். அதுவும் நல்ல பாடலின் நடுவே வரும்! கமல் கற்பனை செய்வது போலதான் அந்தக் காட்சி வரும். "நல்லதோர் வீணை செய்தே" பாடலின் நடுவே...
யார் கற்பனை செய்து கொள்வதாக இருந்தாலும்....
நீக்குஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஹையோ என்னால முடியேல்லை... என்னால முடியேல்லையே:)... இப்பவே தேம்ஸ்ல குதிச்சிடுவேன் போல இருக்கே....
பதிலளிநீக்குஇரு பாடல்களுமே என் மிக மிகப் பிரியமான பாடல்கள்..... ஆஆ எனக்கு மூச்சடைச்சிடும் போல வருதே.....
வாங்க அதிரா... வாங்க... தேம்ஸ்ல குதிச்சாலும் ஹெட்போன்ல இந்தப் பாடல்களைக் கேட்டுகிட்டே நீந்துங்க!
நீக்குஇது போல இன்னொரு பாடல்..
பதிலளிநீக்குபூமாலையில் ஓர் மல்லிகை..
- விரைவில் எதிர்பார்க்கிறோம்..
தலைப்பு பாடல் வரியை பெண் தான் இசைக்க வேண்டும் என்றிருக்கிறது பாருங்கள்.. இதே வரிகளை ஆண் சொல்லக் கூடாது.. விரைவு ஆணுக்குச் சொந்தமானது. அதை குறிப்பிட்டுச் சொல்வது பெண்ணின் அடக்க உணர்வு சம்பந்தப்பட்டது;. வேடிக்கை தான்.
பதிலளிநீக்குசிவாஜிக்கு என்ன சொல்லியா தர வேண்டும்?.. இந்தக் குறிப்பிட்ட பாடலில் இருவரின் முக பாவங்களும் உதடசைப்பும் பிரமாதம்.
அதை அழகாகப் ஒளிப்பதிவு செய்தவரின் மேதமை அற்புதம்.
'பூ முடிப்பாள் இந்த பூங்குழலி' பாடலில் ஒரு திருமணப் பத்திரிகையை வாசிப்பது போலவன தத்ரூபமான வரிகள் -- முதல் புது முயற்சி. காட்சியின் சிறப்பம்சங்களில் கண்ணதாசன் எவ்வளவு கவனம் கொண்டு பாடல் அமைத்திருக்கிறார் என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு.
பதிலளிநீக்குஅருமையான பாடல்கள்
பதிலளிநீக்குஎந்நாளும் ரசிக்கும் பாடல்கள்...
பதிலளிநீக்குஅதுவும் இப்போது உள்ள பயணத்தில், இப்போது கேட்டதில் மிகவும் மகிழ்ச்சி...
நன்றி...
பழைய பாடல்களின் இனிமை
பதிலளிநீக்குமனம் நிறைக்கிறதுதான் என்றும்!
Kaatrinpakkangal.Blogspot.Com
நீக்குஎனது புதிய வலைப்பக்கம்!
முத்துக்களோ கண்கள் நல்லா இருக்கு .அங்கிங்கே கேட்டது இப்போ தான் முழுசா கேட்கிறேன் .படம் நல்லா இருக்குமா ? ஒண்ணுமில்ல அம்சவல்லி பார்த்து ரிவ்யூ எழுதட்டும் அதுக்கு கேட்டேன் :)
பதிலளிநீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்:) என் ரிவியூ வருது:) ஆனா ஆனா அது ஹிந்தியாக்கும்:) ஹா ஹா ஹா
நீக்கு@ அம்சவல்லி அதிரா:) ஹிந்தியிலேயே ரிவியூ முழுசும் எழுதணும். ஆமா, சொல்லிட்டேன்.
நீக்குஆஆஆஆவ்வ்வ்வ்வ் ஜொந்தச் செலவிலேயே யூனியம் வச்சிட்டேனோ:)
நீக்குஅக்கா :) அம்சவல்லி தமிழில் D ஹிந்தில E
நீக்குD = ட்ராப் அவுட் E = EVACUATED FROM கிளாஸ்ரூம் :) இவுக புலமை பார்த்து டீச்சர் பயந்துட்டாகளாம்
புது மலருக்கு வாழ்துகள்.
பதிலளிநீக்குஇனிமையான பாடல்கள்.
இரண்டு பாடல்களுமே ரசித்த பாடல்கள்
பதிலளிநீக்குதலைப்பைப் படித்ததுமே பாடல் வரிகள் மனதில் ஓடியது. இரண்டு பாடல்களுமே நிறையதடவை (வெகுகாலம்) முன்பு கேட்ட பாடல்கள். வரிகளும் அனேகமாக நினைவில் இருக்கின்றன.
பதிலளிநீக்குஇரண்டும் பிடித்த பாடல்கள்.... ஆஹா... என் நினைவு உங்களுக்கு வந்தது அறிந்து மகிழ்ச்சி.
பதிலளிநீக்கு