சனி, 16 நவம்பர், 2019

எனக்கு எதற்கு அந்தப் பணம்...


1)  வசந்தா டீச்சர்.  இவரைப்பற்றி சுருக்கமாக முன்னர் பார்த்திருக்கிறோம்.  குடைகொடுத்தது பற்றி மட்டுமே சொல்லப்பட்டதை பகிர்ந்திருந்தோம்.  ஆனால் அவரின் ப்ளஸ்கள் இன்னும் ஏராளமாக இருக்கின்றன.....





2)  தாரங் மாவட்டத்தில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் சில தாய்மார்கள் தங்கள் குழந்தையுடன் தேர்வெழுத வந்தனர். அறையினுள் குழந்தையுடன் அனுமதிக்க முடியாது என்பதால், தவித்த தாய்மார்களுக்கு பாதுகாப்புக்கு வந்த பெண் போலீசார் உதவினர். தேர்வு முடியும் வரையில், குழந்தையை அழாமல் பார்த்துக்கொண்ட போலீசாரின் இந்த செயலை அனைவரும் நெகிழ்ச்சியுடன் பாராட்டினர்.....





3)  புதுக்கோட்டை சிறைத்துறை பெட்ரோல் பங்க்கில், வாடிக்கையாளர் தவறவிட்ட, 1.75 லட்சம் ரூபாயை, அங்கு பணியாற்றும் கைதிகள் இருவர் (புஷ்பகுமார், 35, கார்த்திக், 36) எடுத்து, உரியவரிடம் ஒப்படைத்தனர்....


4)  10ம் வகுப்பில் அனைத்து பாடத்திலும்(6 பாடம்) 'பெயில்' ஆன மாணவன் 
பிரின்ஸ் பான்சால், 35 மாடல்களில், இலகு ரக விமானங்களை செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளார்.





5)  கையும், காலும் நல்லா இருப்பதால், அரசு வழங்கும் முதியோர் உதவித் தொகை வாங்கவில்லை. எனக்கு எதற்கு அந்தப் பணம்...  இதுவரையிலும், யார் கிட்டேயும் இலவசமாக எதையும் வாங்கியதில்லை!

சீர்காழி அருகே உள்ள ஆயங்குடி பள்ளம், பாக்கியராஜ் நகரில் வசிக்கும் நீலாம்பாள்.


49 கருத்துகள்:

  1. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா.....   நன்றி, நல்வரவு, காலை/மாலை வணக்கம்.

      நீக்கு
  2. அநேகமாக எல்லாச் செய்திகளும் முகநூலில் பார்த்தவை. பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அடையாத மாணவன் பொறியியலில் முன் மாதிரியாக வந்தது எப்படி? மாணவனின் திறமை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லையோ என எண்ண வைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படிப்புக்கும் திறமைகளுக்கும் சம்பந்தமில்லை!

      நீக்கு
    2. // அநேகமாக எல்லாச் செய்திகளும் முகநூலில் பார்த்தவை// முகநூலில் அதை போட்டவரும் ஸ்ரீராம்தானே!

      நீக்கு
  3. ஆசிரியர் பயிற்சித் தேர்வுக்கு வந்த தாய்மார்களின் குழந்தைகளைக் காவல் துறைப் பெண் அதிகாரிகள் பார்த்துக்கொண்டதை நானும் படித்தேன். இந்தப் பெண்கள் தேர்வில் வெற்றி பெற்று ஆசிரியராக ஆனதும் குழந்தையை யாரிடம், எங்கே விடுவார்கள்? அதான் முகநூலிலும் கேட்டிருந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது முகநூலிலா, ஏகாந்தன் ஸார் தளத்திலா?!!!

      நீக்கு
    2. அப்படியா? எங்கே படித்தோம்னு நினைவில் இல்லை. 2 முறை படித்தேன்.

      நீக்கு
    3. கேட்டதற்கு சின்னதாக ஒரு பதிலும் சொல்லியிருந்தேன் !

      நீக்கு
    4. வந்தது ஆசிரியர் பணிக்கு. முந்தானை முடிச்.சு  திரைப்படத்தில் பாக்யராஜ் செய்வது போல் தூளி கட்டி தூங்கவிட்டு பணி  செய்வார்கள் போல. Jayakumar

      நீக்கு
  4. வழக்கம்போல் நான் முதலில் வந்தால் அன்னிக்கு எல்லோரும் போய் ஒளிஞ்சுப்பாங்க. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பின்னாலேயே பதில் சொல்லிக்கொண்டு வந்து கொண்டிருக்கிறேன்..   திரும்பியே பார்க்கவில்லை...  அதே க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....

      நீக்கு
    2. ஹாஹா, சாப்பிடப்போயிட்டேன். அதான் பார்க்கலை. எல்லோருக்கும் பிட்சா. எங்க ரெண்டு பேருக்கும் மோர் சாதம். ஒரே ஒரு சீஸ் பிட்சா மட்டும் அவங்க சொன்னதுக்காக எடுத்துக்கொண்டோம். என்ன இருந்தாலும் "சொர்கமே என்றாலும் நம்ம ஊரு, நம்ம ஊருதான்!" ஒரு சில சமயங்களில் எப்போடா திரும்புவோம் என இருக்கும். குழந்தைகளுக்காகப் பொறுத்துப்போம். :)))))))

      நீக்கு
    3. மோர் சாதத்துக்காக இந்தியாவா?   கொஞ்சகாலம் அங்கேயே அப்புவோடும் குஞ்சுலுவோடும் மகிழ்ந்திருந்து அப்புறம் இந்தியா வாருங்கள்!

      நீக்கு
    4. மத்தவங்களை விடுங்க கீசா மேடம். நான் உங்களை வரவேற்கிறேன். காலை, மதுய, மாலை, இரவு வணக்கங்கள் (எந்த டைம் ஸோன்ல இப்ப இருக்கீங்கன்னே புரியலை)

      நீக்கு
    5. இப்போ யாரு எங்களை அனுப்பப்போறாங்க! :))))))))))))))))))))))))))) ச்ச்ச்ச்ச்ச்ச்சும்மா, நம்ம ஊரு பெருமையை நினைத்துச் சொன்னேன். :))))) அப்பு ரொம்ப ரொம்ப பிசி. குட்டிக் குஞ்சுலுவுக்கு விஷமத்துக்கே நேரம் பத்தலை! :)))))

      நீக்கு
    6. ஶ்ரீராம்.. கீசா மேடம் பதிவுகளில் படித்தது மறந்துவிட்டதா? ஒருவேளை கேடர்ரின் ருசியான உணவுக்காக இருக்குமா? இல்லை பண்டிகை காலங்களில் அவர் வீட்டு இராமர் படம் போட்டு இடுகை எழுத முடியலை என்பதால் இருக்குமா?

      நீக்கு
    7. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நெ.த. இன்னும் எத்தனை நாட்கள் சொல்றதாம்? பனிரண்டு மணி நேரம் பின்னாடி இருக்கோம். கோடையில் ஒன்றரை மணி நேரம் அதிகம் ஆகும். இப்போ அரை மணி நேரம். எங்களுக்கு இரவு எட்டு மணி. உங்களுக்குச் சனிக்கிழமை காலை ஏழரை! அம்சவல்லி, ஏஞ்சல் எல்லாம் தூக்க மயக்கத்தில் இருப்பாங்க.

      நீக்கு
    8. நெ.த. நீங்க வரச்சே அந்த கேடரரோட பறங்கிக்காய் மோர்க்கூட்டும், (க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ரசனையே இல்லை, எதிலே மோர்க்கூட்டு பண்ணுவது என்று தெரியலை.) பீட்ரூட் ரசமும் செய்து தரச் சொல்லிப் போடணும்.

      நீக்கு
    9. உங்க வாயால் திரும்பவும் சொல்லாதீங்க கீசா மேடம். ஏற்கனவே 7 1/2 சனில ரொம்பவே கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறேன். இன்று சனிக்கிழமை காலையிலேயே 7 1/2னு சொல்லிட்டீங்களே. :-((

      நீக்கு
    10. அட? இதை எல்லாம் ரொம்பத் தீவிரமா எடுத்துக்கலாமா? கேலி தான் செய்தேன். வீட்டுக்கு வரவங்களுக்கு நான் சமைச்சுத் தான்போடுவேனே தவிர்த்து காடரர் சாப்பாடெல்லாம் போடமாட்டேன். பயப்படாதீங்க! எனக்கும் தான் ஏழரை நடக்குது! ஒரு தரமாவது சொல்லி இருக்கேனோ? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நீங்க தான் சும்மாச் சொல்லிட்டு இருக்கீங்க! அவரையும் நண்பராக நினையுங்க. ஆஞ்சியைப் பிரார்த்தனை செய்யுங்க. சனியைக் காலால் உதைத்த ஆஞ்சி உங்களைக் காப்பாற்றுவார்.

      நீக்கு
    11. //சனியைக் காலால் உதைத்த் ஆஞ்சி.///

      நீங்களுமா இப்படி.. அக்கா?..

      கும்பகோணத்திற்கு பக்கத்தில் சனி பகவானை மிதித்துக் கொண்டிருக்கும் ஆஞ்சநேயர் என்று சக்தி விகடனில் முன்பொரு சமயம் சிலாகித்து இருந்தார்கள்..

      (இது அவர்களது பாணி)

      நாமும் அந்த மாதிரியே போகலாமா?...

      இதன் உண்மை என்ன என்று தெரியுமா!...

      நீக்கு
    12. //http://sivamgss.blogspot.com/2010/04/blog-post_11.html// இது குஜராத்தில் ஆஞ்சி காலால் மிதிக்கும் பெண்ணைப் பற்றி நான் எழுதிய பதிவு. பொதுவாக ஆஞ்சநேயரையும், பிள்ளையாரையும் சனி பகவான் பிடிக்கமுடியாது எனப் புராண ரீதியான ஒரு கருத்து உண்டு. ஆகவே சனி அதிலும் ஏழரைச் சனி பிடித்தவர்கள் இவர்கள் இருவரையும் தொடர்ந்து வணங்குபவர்கள் சனியால் அவதிப்பட மாட்டார்கள் என்ற பொதுவான கருத்தும் உண்டு. ஆகவே நெல்லைத் தமிழரின் சமாதானத்திற்காகவே எழுதினேன். பெருமாள் கோயில்களிலும் நவகிரஹங்கள் சந்நிதி இருக்காது, மதுரை கூடலழகர் கோயில் தவிர்த்து. நவகிரஹங்களினால் தோஷம் பெற்றவர்கள் பெருமாளை வணங்கி வந்தால் போதும் என்றும் சொல்லுவது உண்டு.

      நீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்நாள் இனிமை நிறைந்த நன்னாளாக இருக்கவும் ஆண்டவனை பரிபூரணமாக பிரார்த்திக்கிறேன்.

    அனைத்து பாஸிடிவ் செய்திகளும் அருமை.
    மேலோட்டமாக படித்தேன். விரிவாக படித்து விட்டு வருகிறேன். இன்று கொஞ்சம் தாமதம் ஆகி விட்டது.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...     காலை வணக்கம்.  இனிய ப்ரார்தனைகளுக்கு நன்றி.

      நீக்கு
  6. தோன்றிற் புகழொடு தோன்றுக..

    அன்பின் வணக்கம் அனைவருக்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் துரை செல்வராஜூ ஸார்...   வாங்க...  வாங்க...

      நீக்கு
  7. இன்றைய பதிவின் செய்திகளை அனைத்தும் மகிழ்வூட்டுபவை...

    அனைவரும் வாழ்வாங்கு வாழட்டும்...

    பதிலளிநீக்கு
  8. நீலாம்பாள் போன்றவர்களே
    இம்மண்ணுக்கு எடுத்துக்காட்டு ஆனவர்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  எனக்கெதற்கு முதியோர் உதவித்தொகை என்று அவர் கேட்டிருப்பது கன்னத்தில் அறைவது போலிருக்கிறது.

      நீக்கு
  9. நேற்று சூப்பரா இரண்டு பாடல்கள் போட்டிருந்தீங்க. பின்னூட்டம் எழுத நேரம் கிடைக்கலை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்பதான் எழுகறது...இன்னும் அதிக நேரம் ஆகி விடவில்லையே...!!!

      நீக்கு
  10. இன்று, ஓய்வூதியம் பெற்றுக்கொள்ளாத முதிய பெண்ணும், அதைவிட சிறைத்துறை சம்பவமும் மனதைக் கவர்ந்தன. அனைவருக்கும் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  11. இரு புதிய செய்திகளை அறிந்தேன். மற்றவற்றை இதழ்களில் படித்தேன். போற்றத்தக்கவர்கள்.

    பதிலளிநீக்கு
  12. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    செய்திகள் அனைத்தும் அருமை. சில முகநூலில் படித்த செய்திகள்.
    ஆசிரியர் வசந்தா அவர்களுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
    சிறைகைதிகள் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்தது மகிழ்ச்சி.

    இத்தனை வயதிலும் உழைத்து உண்ண வேண்டும் உதவி தொகை வேண்டாம் என்று இருக்கும் அம்மாவை வணங்குகிறேன்.

    அனைத்தும் நல்ல செய்திகளை தந்த
    உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    பொது நலத்துடன் அனைவருக்கும் நிறைய உதவி செய்து செயல்படும் வசந்தா ஆசிரியரை வாழ்த்துவது மட்டுமில்லாமல் வணங்கலாம். அவருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

    குழந்தைகளை அவர்கள் தாயார்கள் தேர்வு எழுதி முடிக்கும் வரை அழாமல் பார்த்துக் கொண்ட பெண் போலீஸ் காவலர்களுக்கு வாழ்த்துகள்.

    சிறைக்கைதிகள் பணத்தைக் கண்டவுடன் அதன் உரியவரிடம் சேர்ப்பிக்கும் வகையில் செய்த உதவியினை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

    இளம் விஞ்ஞானியாய் எண்ணம் கொண்டு விமானங்கள் செய்யும் முயற்சியில் அசாத்திய திறமையுடன் வெற்றி பெற்றிருக்கும் மாணவனை மனதாற பாராட்டுகிறேன்.

    முதியோர் தொகை வேண்டுமென கூறி இத்தனை வயதிலும் தன் கைகளால் உழைத்துச் சாப்பிடும் அந்த மூதாட்டி மனம் கலங்க வைக்கிறார். அவரை அவரின் செயலை வணங்குவோம்.

    அனைத்து நற் செய்திகளையும் தொகுத்து தந்தமைக்கு தங்களுக்கு நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதியோர் உதவித் தொகை வேண்டாமெனக் கூறி என திருத்திப் படிக்கவும். தட்டச்சு பிழை வந்து விட்டது.

      நீக்கு
  14. நீலாம்பாள் அம்மாவுக்கு ஒரு சல்யூட்

    பதிலளிநீக்கு
  15. இன்றைக்கு நிறைய பாசிட்டிவ் செய்திகள். நல்ல விஷயங்கள் நிறைய நடப்பது ஒரு நல்ல விஷயம்தானே. 

    பதிலளிநீக்கு
  16. அனைவரும் போற்றுதலுக்கும் பாராட்டுக்கும் உரியவர்கள்.

    பதிலளிநீக்கு
  17. அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வாழ்த்துகள்... பாராட்டுகள்...

    நன்றி...

    பதிலளிநீக்கு
  18. அனைத்தும் சிறப்பான செய்திகள். முதல் செய்தி ஆசிரியர் சிறப்பான பாராட்டுகளுக்கு உகந்தவர். நல்ல செய்திகளைத் தேடித் தரும் உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  19. ஒரு வெளி ஓய்வூதியப்பணத்துக்காக அலைய முடியவில்லஒயோ என்னவோ

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!