முதலில் நேயர் விருப்பம் :
பானு அக்கா விருப்பத்தில் "ஆகாய வெண்ணிலாவே... தரை மீது வந்ததேனோ..."
இடம்பெற்ற படம் அரங்கேற்ற வேளை. வெளிவந்த ஆண்டு : 1990. இயக்கம் பாசில். பிரபு-ரேவதி நாயக நாயகியாய் நடித்த திரைப்படம்.
சுவாரஸ்யமான படம். முழுநீள நகைச்சுவை என்றாலும் இறுதிக் கட்டத்தில் திடீரென ஒரு சீரியஸ் வந்துவிடும் படத்தில். ரேவதி நடிப்பை ரசிக்க முடியும். "பக்கிராம்..." ரொம்ப நாள் இந்தப்பெயர் மனதில் இருந்தது!
மூலம் மலையாள "ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங்" பாடல்களை எழுதியது யார் என்பதை மர்மமாக வைத்திருக்கிறார்கள்! வாலியாகத்தான் இருக்கவேண்டும்! 'யு டியூப்' தகவலும் அப்படிதான் சொல்கிறது. இசை இளையராஜா.
கே ஜே யேசுதாஸும், உமா ரமணனும் பாடிய பாடல். ரேவதி, பிரபு, வி கே ஆர் மூன்று பேர் கற்பனையிலும் அவரவர்கள் மனக் கற்பனைக்கேற்ப பாடி நடிப்பதுபோல அமைந்த காட்சி. வி கே ஆரின் கற்பனையில் கருப்பு - வெள்ளை கால ஸ்டைலில் இருக்கும் காட்சி அமைப்பு!
கீதா ரெங்கன் இல்லாமல் இந்தப்பாடலுக்கெல்லாம் ராகம் சொல்ல ஆளில்லாமல் போய்விட்டது. நெல்லையை இரு நேற்றே ஆளைக்காணோம்! சீக்கிரம் கீதா ரெங்கனின் கணினி சரியாகப் பிரார்த்தனைகள்!
கீதா ரெங்கன் இல்லாமல் இந்தப்பாடலுக்கெல்லாம் ராகம் சொல்ல ஆளில்லாமல் போய்விட்டது. நெல்லையை இரு நேற்றே ஆளைக்காணோம்! சீக்கிரம் கீதா ரெங்கனின் கணினி சரியாகப் பிரார்த்தனைகள்!
ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
அழகான ஆடைசூடி அரங்கேறும் வேளைதானோ
மலர் சூடும் கூந்தலே மழைக்கால மேகமாய்க் கூட
உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட
தேவார சந்தம் கொண்டு தினம் பாடும் தென்றல் ஒன்று
பூவாரம் சூடிக்கொண்டு தலைவாசல் வந்ததின்று
தென்பாண்டி மன்னன் என்று திருமேனி வண்ணம் கண்டு
மடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று
இளநீரும் பாலும் தேனும் இதழோரம் வாங்கவேண்டும்
கொடுத்தாலும் தாபம் குறையாமல் ஏங்க வேண்டும்
கடல்போன்ற ஆசையில் மடல்வாழை மேனிதான் ஆட
நடுஜாம வேளையில் நெடுநேரம் நெஞ்சமே கூட
ஆகாய வெண்ணிலாவே தரைமீது வந்ததேனோ
தேவாதி தேவர் கூட்டம் துதிபாடும் தெய்வ ரூபம்
பாதாதி கேசமெங்கும் ஒளிவீசும் கோவில் தீபம்
வாடாத பாரிஜாதம் நடைபோடும் வண்ண பாதம்
கேளாத வேணுகானம் கிளிப்பேச்சில் கேட்கக்கூடும்
அடியாளின் ஜீவன் மேவி அதிகாரம் செய்வதென்ன
அலங்கார தேவதேவி அவதாரம் செய்வதென்ன
இசை வீணை வாடுதோ இதமான கைகளை மீட்ட
சுதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட
============================== ========
அடுத்து வழக்கமான வெள்ளி வீடியோ! என் தெரிவு!
பாலமுருகன் திரைக்கதை வசனத்தில், கே சங்கர் இயக்கத்தில் சிவாஜியின் சொந்த நிறுவனம் தயாரித்து 1965 இல் வெளிவந்த திரைப்படம் 'அன்புக்கரங்கள்'.
வாலியின் பாடல்களுக்கு இசை ஆர். சுதர்சனம். இன்று இரண்டு பாடல்களுமே வாலியின் பாடல்களாக அமைந்து விட்டன.
"என் பிறந்த வீடு திருவரங்கம். புகுந்த வீடு திரையரங்கம்" என்று சொல்லும் வாலி தன் தமிழ்க்கவிக்கு இப்படி நன்றி தெரிவிக்கிறார்.
பொடிவருடிப் பூந்தென்றல்
குலவுகின்ற தென்பொதிகை
மடிவருடிப் பூத்தவளே !
மணித்தமிழே ! மாற்றாரின்
அடிதிருடிப் பாடாமல்
அம்மா ! நின் அரவிந்த
அடிவருடிப் பாட என்னை
ஆளாக்கி வைத்தனையே !
ஆனைக்கா அம்பிகையின்
அடியொற்றிப் பாட்டிசைத்தால்
மோனைக்கா பஞ்சமுண்டு ?
முற்றெதுகை முதலான
சேனைக்கா பஞ்சமுண்டு ?
சூல்கொண்ட செந்தமிழின்
சோனைக்கா பஞ்சமுண்டு ?
சுடர்கவிதை துளிர்க்காதோ?
'வியட்நாம் வீடு' நாடக அரங்கேற்றம் ஆக இரண்டு மூன்று நாட்களே இருந்த நிலையில் சிவாஜி லதா மங்கேஷ்கர் சம்பந்தப்பட்ட விசேஷத்தில் கலந்து கொள்ள மும்பை பம்பாய் புறப்பட்டாராம்.
"அண்ணே... இந்த நேரத்தில் பம்பாய் போறீங்களே... நாடக வசனமெல்லாம் பாடம் பண்ணிட்டீங்களா?" என்று வாலி கேட்க, அதற்கு அப்போது இறைமறுப்புக் கட்சியின் ஆதரவாளராக இருப்பவராகக் கருதப்பட்ட சிவாஜி, "வாத்யாரே... இன்னும் ஒரு வரிகூட சரியாய் பாடம் பண்ணல.. ஆனா அரங்கேற்றத்தன்னிக்கு பிச்சு உதறிடுவேன்... எப்படின்னு கேக்கறியா? சைடு கர்ட்டன் பக்கத்திலிருந்து சமயபுரம் அம்மன் 'பஜாங்' என்று ஒரு குரல் கொடுப்பா... அவ்வளவுதான்... வசனமும், நடிப்பும் பொத்துகிட்டு வரும்" என்றாராம்.
"அண்ணே... இந்த நேரத்தில் பம்பாய் போறீங்களே... நாடக வசனமெல்லாம் பாடம் பண்ணிட்டீங்களா?" என்று வாலி கேட்க, அதற்கு அப்போது இறைமறுப்புக் கட்சியின் ஆதரவாளராக இருப்பவராகக் கருதப்பட்ட சிவாஜி, "வாத்யாரே... இன்னும் ஒரு வரிகூட சரியாய் பாடம் பண்ணல.. ஆனா அரங்கேற்றத்தன்னிக்கு பிச்சு உதறிடுவேன்... எப்படின்னு கேக்கறியா? சைடு கர்ட்டன் பக்கத்திலிருந்து சமயபுரம் அம்மன் 'பஜாங்' என்று ஒரு குரல் கொடுப்பா... அவ்வளவுதான்... வசனமும், நடிப்பும் பொத்துகிட்டு வரும்" என்றாராம்.
அன்புக்கரங்கள் படத்தில் முக்கிய வேடத்தில் சிவாஜி, தேவிகா நடித்திருக்கிறார்கள். 'முதலாளி' படத்தில் அறிமுகமான நடிகை தேவிகாவின் சொந்தப்பெயர் பிரமீளா தேவியாம். அவரது மாமா ஒருவர் சென்னையின் மேயராக இருந்தாராம். அவரது தாத்தா தெலுங்கு சினிமாவின் முன்னோடிகளில் ஒருவராம்!
'இரவு முடிந்துவிடும்' என்கிற அருமையான பி பி ஸ்ரீனிவாஸ் - சுசீலா டூயட் பாடல் ஒன்றும் இந்தப்படத்தில் உண்டு. இன்று நான் பகிர இருப்பது டி எம் எஸ் குரலில் "ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும்". அந்தக் காலத்தில் குழந்தைகளுக்கு அறிவுரை சொல்வது போல நல்ல பல கருத்துகளைப் பாடலில் சொல்லும் காலமாய் இருந்தது. "நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி..", "கேளாய் மகனே.." என்று நிறைய பாடல்கள்... எல்லா அறிவுரையும் சொல்லி முடிச்சாச்சு போல... எனவே இப்போதெல்லாம் அப்படிப் பாடல்கள் வருவதில்லை!
ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் - இந்த
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்.
ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் - இந்த
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்.
காக்காக் கூட்டத்தை பாருங்க - அதுக்குக்
கத்துக் கொடுத்தது யாருங்க..
வீட்டை விட்டு வெளியே வந்தா நாலும் நடக்கலாம்
அந்த நாலும் தெரிஞ்சு நடந்துக்கிட்டா நல்லாயிருக்கலாம்
வீட்டை விட்டு வெளியே வந்தா நாலும் நடக்கலாம்
அந்த நாலும் தெரிஞ்சு நடந்துக்கிட்டா நல்லாயிருக்கலாம்
உன்னைக்கேட்டு என்னைக்கேட்டு எதுவும் நடக்குமா
உன்னைக்கேட்டு என்னைக்கேட்டு எதுவும் நடக்குமா
அந்த ஒருவன் நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியுமா?
தன்னைப்போல பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே -அந்தத்
தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே
தன்னைப்போல பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே -அந்தத்
தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே
பொன்னைப்போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை
பொன்னைப்போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை
-இதைப்
புரிந்து கொண்ட ஒருவனைப்போல் மனிதன் வேறில்லை
கொஞ்ச நேரம் காற்றடித்து ஓய்ந்து போகலாம்
வானில் கூடிவரும் மேகங்களும் கலைந்து போகலாம்
கொஞ்ச நேரம் காற்றடித்து ஓய்ந்து போகலாம்
வானில் கூடிவரும் மேகங்களும் கலைந்து போகலாம்
நேற்றுவரை நடந்ததெல்லாம் இன்று மாறலாம்
நேற்றுவரை நடந்ததெல்லாம் இன்று மாறலாம் - நாம்
நேர்வழியில் நடந்து சென்றால் நன்மை அடையலாம்
நியூசிலாந்தில் காக்கைகளே கிடையாதாமே, அப்படியா?
ராஜாஜி கூட காமராஜரை ஒருமுறை காக்கை என்ற அர்த்தம் வருமாறு தேர்தல் கூட்டத்தில் பேசியிருக்கிறாராம். ஹண்டேயை ஆதரித்துப்பேசும்போது "இங்கே ஒருகாக்கையை அடித்தால் போதும். டெல்லி வரை காக்கைகள் எல்லாம் காணாமல் போகும்" என்று பேசினாராம்.
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள் வைப்புழி...
பதிலளிநீக்குவாழ்க நலம்...
வாழ்க நலம். எனக்கு தேடும் வேலை இல்லை! ஹா... ஹா.. ஹா...
நீக்குஆமாம்... அதென்ன பாதியைச் சொல்லிக் கொண்டு!..
நீக்குநான் கூட முதலில் நினைத்தேன். அப்புறம் பழகிப்போனது.. இது நல்லா இருக்கு!
நீக்கு// இது நல்லா இருக்கு..//
நீக்குஇருக்கட்டும்.. நல்லா இருக்கட்டும்....
அன்பின் வணக்கம் அனைவருக்கும்....
பதிலளிநீக்குவணக்கம் துரை செல்வராஜூ ஸார். வாங்க...
நீக்குஇன்றைய பாடல்கள் இரண்டுமே அருமை....
பதிலளிநீக்குஆம்.. எல்லோரும் ரசிக்கும் பாடல்களில் இரண்டு...
நீக்குபலராலும் ரசிக்க முடிந்த பாடல்கள் என்று இருக்க வேண்டுமோ
நீக்குசொல்லலாம் ஜி எம் பி ஸார்... ரசிப்பிலிருந்து உங்களுக்கு விலக்கு அளிக்கக் கோருகிறீர்கள் போல!
நீக்குதிரு வாலி அவர்கள் ஆனைக்கா அம்பிகையின் மீது பத்துப் பாடல்கள் பாடியிருப்பதாக படித்த நினைவு....
பதிலளிநீக்குஆமாம்... எனக்கும் அப்படி படித்த நினைவு இருக்கிறது.
நீக்குபடித்தது நினைவில் இருக்கிறது!...
நீக்குபாடி வைத்த்து எங்கே இருக்கிறது?...
என்னிடம் வாலி பற்றி ஒரு குண்டு புத்தகம் இருக்கிறது. புதிய பார்வையில் அவர் எழுதிய சுவாரஸ்யமான கட்டுரைகளின் தொகுப்பு. அதில் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்!
நீக்குதேடுங்கள்... கண்டடைவீர்கள்...
நீக்குதேடிடுவோம்!
நீக்குநடிகர் திலகத்திற்கு வாலி அவர்கள் எழுதிய முதல் பாடல் தான் - ஒன்னா இருக்கக் கத்துக்கணும்....
பதிலளிநீக்குஓ... இது எனக்கு நினைவில்லை... அப்படியா விஷயம்?
நீக்குநல்ல பாடல்கள் ரசித்தேன்.
பதிலளிநீக்குபின்னணி தகவல்கள் சுவாரஸ்யம்.
நன்றி ஜி.
நீக்குவாய் சும்மா இருக்காது...
பதிலளிநீக்குஇருந்தாலும் சொல்கிறேன்...
நேற்று காலையில் இந்தப் பாடலின் வரிகளை யோசித்துக் கொண்டிருந்தேன்...
கொஞ்ச நேரம் காற்றடித்து ஓய்ந்து போகலாம்.. வானில் கூடி வரும் மேகங்களும் கலைந்து போகலாம்...
ஆகா...
வேத வேதாந்த நீதிகளைப் படிக்கத் தான் இல்லை.. ( நாம தான் பள்ளிக் கூடத்துக்கே போகலையே..)
படித்தவர்கள் சொன்னால் கூட அதில் விருப்பமும் இல்லை...
சாதாரண திரைப் பாடலுக்குள் கொண்டு வந்து வைத்தானே கவிஞன்...
அதைச் சிந்திக்கக் கூடவா மனம் இல்லை!..
அட மனமே.. மட மனமே!...
அடடே...
நீக்குஇந்தப் பாடலை ஒரு வாரம் முன்பே தெரிவு செய்து விட்டேன். அப்புறம் அதிரா கமலா அக்கா தளத்தில் இந்தப் பாடலின் வரிகளை கோட் செய்த்திருந்தார். புன்னகை வந்தது!
அன்புக் கரங்களில் இன்னொரு
பதிலளிநீக்குமகா சோகமான பாடல்..
காகிதத்தில் கப்பல் செய்து
கடல் நடுவே ஓட விட்டேன்...
மணல் எடுத்து வீடு கட்டி
மழை நீரில் நனைய விட்டேன்!...
ஆமாம். முன்பு கேட்ட பாடல். எனினும் அதைப் பகிர விருப்பமில்லை!
நீக்குசும்மா நினைவுக்காகச் சொன்னேன்...
நீக்குஅந்தப் பாடலில் அறம் இருப்பதை பின்னாளில் தான் உணர்ந்து கொண்டேன்...
Sokam.inthap paadal.azhuthuviduvEn.
நீக்குநான் இந்த மாதிரி சோகப்பாடல்களைக் கேட்கவும் விருப்பப்படுவதில்லை. இருக்கிற சோகம் போதாதுன்னு, இன்னும் நம்மை சோகத்தில் இவை ஆழ்த்திவிடும்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்தநாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை மனதாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா... வணக்கம். இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி.
நீக்கு// ஒரு காக்கையை அடித்தால் போதும்..//
பதிலளிநீக்குஇதை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்...
சக்ரவர்த்தித் திருமகன் என்றும் வியாசர் விருந்து என்றும் இதிகாசங்களில் ஆழ்ந்திருந்தவர் அடுத்து வரக்கூடியதை உணர்ந்து கொள்ள இயலாதவராகிப் போனாரே.. என்று வருந்தியிருக்கிறேன்...
பெருந்தலைவரை வீழ்த்துவதற்கு ராஜாஜியும் துணை நின்றார்...
இவர் காக்கை என்று சொன்னார். இன்னொருவரோ அண்டங்காக்கை என்று சொன்னார்!
நீக்குசக்ரவர்த்தித் திருமகன், வியாசர் விருந்து எல்லாம் எழுதி என்ன புண்ணியம்?...
பதிலளிநீக்குஅறம் ஓய்வதற்கு புனையப்பட்ட பொய்களுக்கு
ராஜாஜியும் உடன்பட்டார்...
தர்மபுத்திரனின் ரதம் தரையில் இறங்கி ஓடியதாம் - துரோணருடைய கேள்விக்குப் பொய் சொன்ன காரணத்தால்....
மஹாத்மா தான் செயல்படுவதில் நியாயமான வழிமுறைகளுக்கு முக்கியத்வம் கொடுத்தவர். இதை இப்படித் தான் செய்ய வேண்டும்; இல்லையென்றால் அந்தக் காரியத்தைச் செய்யவே கூடாது என்ற உறுதி..
நீக்குகுடுமியை அவிழ்த்து விட்டு சபதம் செய்த சாணக்கியனின் வழிமுறை ராஜாஜிக்கு. தான் நினைப்பதை எப்படியும் செய்தாக வேண்டும் என்ற வீம்புத்தனமான உறுதி.. செஸ் விளையாடுவது போள அதற்கான வழி முறைகள்..
காந்திக்கும் காந்தியாரின் மனச்சாட்சி என்று அழைக்கப்பட்டவருக்குமான வித்தியாசம் இது தான்!
//அறம் ஓய்வதற்கு புனையப்பட்ட பொய்களுக்கு// - அரசியல் ரீதியாக ராஜாஜி அன்று செய்தது பெரும் பிழை. பசு மாட்டின் மீதான கோபத்தில், இன்னொரு பசு, நாகப் பாம்புடன் கூட்டுச் சேர்ந்ததற்கு ஒப்பான தவறு அது. கடைசியில் இரண்டு பசு மாடுகளும் அரசியலிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டதுதான் மிச்சம்.
நீக்குஅன்பு துரை, அன்பு ஸ்ரீராம்,இன்னும் வரப் போகிறவர்களுக்கு வாழ்த்துகளும் அன்பும்.
பதிலளிநீக்குபானும்மாவின் சாய்ஸ் அருமை. பாடலில் வரும் வார்த்தைகளும் அழகு. அது ஒரு நல்ல படம். பிரபு ரேவதி இருவரும் நல்ல ஹிட் ஜோடி.
துரை தினம் குறள் சொல்வது மனதுக்கு இதம். ஏதோ நல்வார்த்தை காதில் உறைகிறது. நன்றி மா.
.
புத்திமான், பக்திமான் எல்லோரையும் வழுக்கச் செய்வது அரசியல்.
நீக்குபடிக்காத மேதையின் விசால மனம் யாருக்கு வரும். ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து செல்லும்போது சிவகாசி,சிவகாமி அம்மாளின் இல்லத்தையும் வணங்கிக் கொண்டேன். பெருந்தலைவரைப் போல இனி ஒருவர் பிறக்க வேண்டும்.
சிவகாசி இப்போது எங்களுக்கு சம்பந்தி புரம்..
நீக்குமகளது திருமணத்துக்குப் பிறகு மூன்று / நான்கு முறை சென்று விட்டேன்..
அந்தப் பக்கம்
சீர்மேவும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமியருள் ஒருத்தியான செந்தமிழ்க் கோதையையும்
இந்தப் பக்கம்
சித்தனைப் பெற்றெடுத்த சிவகாமி அம்மையாரையும் தரிசிப்பதற்கு இன்னும் நேரம் வாய்க்கவில்லை...
//சித்தனைப் பெற்றெடுத்த சிவகாமி அம்மையாரையும்// - காமராசரைப் பெற்றது பெறர்க்கரிய பேறுதான். இருந்தாலும், காமராசர் தன் குண நலன்களால், தன் அம்மாவின் விருப்பத்தை, ஆசையை எப்போதும் நிறைவேற்றியதில்லை. அம்மா எளிமையாகத்தான் இருக்கணும் என்றே அவர் கடைசிவரை நினைத்தார். இந்த மாதிரி அதீத 'நேர்மை' உடையவர்களால், அவரைச் சுற்றி இருக்கும் ஆதார சொந்தங்களுக்கு (கஸ்தூர்பா காந்தி, அவர் பசங்க போன்று) வாழ்க்கை கடினமாக ஆகிவிடுகிறது. சாஸ்திரி கூட, அவரது வீட்டுச் செலவுக்கு மிக அவசியமான தொகை மட்டுமே மாதா மாதம் தந்த நேர்மையாளர்.
நீக்குஇப்போ பாருங்க... கவுன்சிலர் என்றாலே, அவருக்கு, வாக்களிக்கும் மக்கள் பிச்சைக்காரர்களாகவும், தன் சொந்தங்கள் எல்லாம் அரண்மனை வாரிசுகள் போலவும் எண்ணம் தோன்றிவிட்டது.
வாங்க வல்லிம்மா... வணக்கம். வாங்க...
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வெள்ளி பாடல்கள் இரண்டுமே இனிமையானவை. இரண்டையும் பலமுறை கேட்டு ரசித்துள்ளேன். அதனுடன் ஒட்டிய பல தகவல்களும் படிக்க ஸ்வாரஸ்யமாக இருந்தன. இன்றும் தலைப்பை பார்த்ததும் பாடல் மனதுக்குள் ஓட ஆரம்பித்து விட்டது இரண்டாவது பாடல் நான் அடிக்கடி முணுமுணுப்பது. அந்த அளவுக்கு அந்த வரிகள் மனதுள் தங்கியவை. இன்று
இனிமையான பால்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா... வணக்கம்.
நீக்குஆனாலும்
பதிலளிநீக்கு1960 களில் கருக்கலைப்பு தடைச் சட்டம் நீக்கப் பட்டபோது - இனி ஒழுக்கம் குட்டிச் சுவராகும் என்று சொல்லியிருக்கிறார் மூதறிஞர்..
மேலும்
அன்றைய முதல்வரின் வீடு தேடிச் சென்று
கள், சாராயக் கடைகளைத் திறக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டவர்...
என்ன விசித்திரம் பாருங்கள்!...
தீயவை தீயவைகளையே பயக்கும் என்று தெரிந்திருந்தும் காக்கையை விரட்டுவதில் கவனமாக இருந்திருக்கிறார் - ஏதோ பகையை வன்மத்தை மனதில் வைத்துக் கொண்டு...
என்னதான் நல்லவர்களாக இருந்தாலும், அரசியலில் காமராஜர் மேலெழுந்து வருவதற்கு, பொதுவாக இருந்த 'பிராமண எதிர்ப்பு' அப்போது உபயோகப்பட்டது. (அதாவது, ராஜாஜி தலைவராக வரவேண்டாம், அதற்கு காமராஜரை ஆதரிப்போம் என்று ஆரம்ப கால காங்கிரஸில்). காமராஜருக்கு இன்னொரு பிராமணர் 'சத்தியமூர்த்தி' தன் முழு ஆதரவையும் தந்திருந்தார். இது அப்போதைய அரசியல் சூழ்நிலை. அப்படி இருக்கும்போது அந்த 'அடிப்படை அரசியல் பகையில்' ராஜாஜி, காமராஜருக்கு எதிராக இருந்தார்.(அதற்குப் பிறகு காமராஜர் மிகப் பெரிதாக வளர்ந்தார், அரசியலில். அவர் தன்னை, நாம் எல்லோரும் வியந்து பார்க்கும் வண்ணம் மிகப் பெரிய உயரத்தை அரசியலில், மக்கள் மனதில் அடைந்தார்). நாம் இன்றைக்கு (அல்லது 30-40 வருடங்களுக்கு முன்பு இருந்து) பார்க்கிறபோது, அன்று ராஜாஜியின் பிழை/பகையால், தமிழகத்துக்கு ஏற்பட்டது சாதாரண இழப்பன்று என்பது வேஷ்டியில் பட்ட கருப்பு இங்க் கரை போலத் தெரிகிறது.
நீக்குஇருந்தும் 'காக்கை' என்று நீங்கள் சொன்ன வார்த்தை கொஞ்சம் மனதைத் தைக்கிறது. காமராசர் 'கருப்புத் தங்கம்'. தமிழக மக்களுக்கு கல்விக் கண் கொடுத்ததில் (நான் சொல்வது, பிற்பட்ட வகுப்பினர் மற்றும் ஏழையினருக்கு... அவர்கள்தாம் 75-80%க்கும் அதிகமானவர்கள்) காமராஜர் மட்டுமே இந்த 70 ஆண்டுகளில் முதல்வராக இருக்கிறார்.
காமராஜரைப் போலவே 'கக்கன்' அவர்களுக்கும், ஜீவா அவர்களுக்கும் என் மனதில் பெரிய இடம் உண்டு. இன்றைக்கு தமிழக அரசியல்வாதிகள், எங்கோ பிறந்த அம்பேத்காருக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, தமிழனான, ஒரு பைசா அரசியலில் சம்பாதிக்காத, ஆனால் எளியவர்களுக்கு உழைத்த கக்கன், ஜீவா போன்றவர்ளைக் கண்டுகொள்ளாத போக்கும் வெறுப்பை வரவழைக்கும்.
தன்னைப் பார்க்க வந்த காமராசரை காக்க வைத்து, காயப்போட்டிருந்த ஒரே வேஷ்டி காய்ந்தவுடன் அதை உடுத்திக்கொண்டு வந்து காமராசரைப் பார்த்த ஜீவா, எந்த உதவியையும் ஏற்க மறுத்த ஜீவா, கடைசி காலத்தில் அரசு ஆஸ்பத்திரியில் கிழிந்த பாயைப் போன்று கிடந்த கக்கன் அவர்கள், ஒரு முட்டை தன் காசில் சாப்பிடுவதையே, பெரிய விருந்து என்று நினைத்துக்கொண்டிருந்த காமராசர் - இவர்களெல்லாம் இந்தத் தமிழகத்தில்தானா பிறந்தார்கள்? அவ்வளவு பெரியவர்களை நாம் அவ்வளவு எளிதாக மறந்துவிட்டோமா என்று மனது ஆச்சர்யப்படுகிறது.
(நெல்லை.. ஜீவாவை நினைவில் கொண்டு சொன்ன செய்திகளுக்கு நன்றி. சில சின்ன திருத்தங்கள் மட்டும்)
நீக்குதாம்பரத்தில் ஜீவா வசித்த குடிசை இருந்தது. தாம்பரம் வழியாக காமராஜர் காரில் சென்னைக்குத் திரும்பும் பொழுது "இந்தப் பக்கத்தில் தானே ஜீவாவின் வீடு இருக்கிறது? அங்கே போப்பா.." என்று டிரைவரிடம் சொகிறார். ஜீவாவின் குடிசை வாசலில் கார் நிற்கிறது. ஜீவா ஒரு குடிசையில் தான் வாழ்கிறார் என்று காமராஜருக்கே அப்பொழுது தான் தெரியும். காரிலிருந்து இறங்கியவர் குடிசை வாசலில் நின்றபடியே அங்கு நின்றவரிடம்
"உள்ளே போய் ஜீவாவை வரச் சொல்.." என்கிறார். எது விஷயமாகவோ காரில் சென்னைக்கு தன்னுடன் ஜீவாவையும் கூட்டிச் செல்ல வேண்டும் என்பது காமராஜரின் எண்ணம்.
குடிசையின் உள்ளே சென்றவரும் வரவில்லை. ஜீவாவும் வரவில்லை. 'என்னாச்சு?' என்ற யோசனையில் குனிந்து காமராஜரே குடிசைக்குள் செல்கிறார். குடிசைக்குப் பின்புற வெட்ட வெளியில் தனது ஒற்றை வேட்டியைக் காயப் போட்டு கோவணத்தோடு நிற்கும் ஜீவாவைக் கண்டு திகைக்கிறார். காமராஜரே உள்ளே வந்து விட்டாரே என்ற அவசரத்தில் அரைகுறைக் காய்சலில் இருந்த வேட்டியை பற்றி இழுத்து கட்டிக் கொள்ள முயற்சிக்கும் ஜீவாவைப் பார்த்து கண் கலங்கிப் போய் விட்டார் காமராஜர். "ஜீவா.. நீ இங்கேயா வசிக்கறே?.." உனக்கு அரசு ஒதுக்கீடாக வீடு பார்த்து வைக்கிறேன்.. சென்னைக்கு வந்து விடு.." என்று வற்புறுத்துகிறார். அதற்கு ஜீவா உறுதியாக மறுத்து விடுகிறார். காமராஜர் ரொம்பவும் வற்புறுத்த "இங்கே என்னோடு இருக்கும் அத்தனை பேருக்கும் அப்படியான வீடு கிடைக்கும் பொழுது நிச்சயம் நானும் அவர்களோடு சேர்ந்து வந்து விடுகிறேன்.." என்று காமராஜர் வறுத்தப்படாதவாறு சொல்கிறார்.
கடைசி வரை ஜீவா அந்தக் குடிசையிலேயே தான் வாழ்ந்தார்.
தினமும் தாம்பரம் ரயில் நிலையத்திற்கு எதிரே இருக்கும் பஸ் ஸ்டாண்டுக்கு நடந்து வந்து பஸ் ஏறி பிராட்வேயில் இருந்த கட்சி அலுவலகத்திற்கு வந்து (ஜனசக்தி பத்திரிகை அலுவலகமும் சேர்ந்தே மாடியில் இருந்தது) திரும்புவார்.
எம்ஜிஆருக்கும் ஜீவாவின் மேல் அளப்பரிய அன்பு உண்டு. அவர் நடித்த சில திரைப்படங்களில் ஜீவா என்ற பெயரில் ( பெண் பாத்திரங்கள்) உலா வருவதுண்டு.
ஜீவா என்ற மானுடன் வாழ்ந்த வாழ்க்கை பற்றி சொல்ல நிறைய உண்டு.. ஓரு பதிவு போட்டுச் சொல்ல வேண்டும். விரைவில் செய்கிறேன்.
இந்தப் படத்தில்
பதிலளிநீக்குநடிகர் திலகம் ஸ்டேசன் மாஸ்டர் அல்லவா ..
ஆமாம்
நீக்குஇரண்டு பாடல்களும் பிடித்த பாடல்தான்.
பதிலளிநீக்குகேட்டு மகிழ்ந்தேன். பகிர்வுக்கு நன்றி.
அன்பு கரங்கள் படத்தில் ''ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும்' பாட்டுக்கு அப்புறம் நாகேஷ் "கதவடை கதவடை" என்று சொல்லிக் கொண்டு வருவார். பழைய ரயில் பெட்டியில் பாதி கதவு மாதிரி இருக்கும் அதை அடைத்துக் கொண்டே இப்படி சொல்லி வருவார். ஒரு பயணி வடை என்று என்று நினைத்து இந்தாப்பா வடை என்று கூப்பிடுவார்.( சிரிப்பு)
உங்கள் தளத்திலோ, என் தளத்திலோ இந்த பாடலை பற்றி எல்லோரும் கலந்துரையாடல் செய்து இருக்கிறோம்.
பேரிடர் தருணத்தில் ,மக்கள் ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்வது பற்றி பேசி இருக்கிறோம்.
எங்கள் ரயில் திருப்பதியிலிருந்து மாயவரம் வரும் வழியில் தொடர் மழையால் தண்டவாளத்தில் தண்ணீர் ஓடி கொண்டு இருந்தது. தண்ணீர் வடியும் வரை காத்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது நின்ற இடம் கடைகள் கிடையாது, உணவு, பால் கிடைக்காது.
ஆனால் அக்கம் பக்கம் உள்ள கிராம மக்கள் உணவு, குழந்தைகளுக்கு பால், நோயாளிகளுக்கு மருந்து போன்றவை வாங்கி வந்தும், சமைத்தும் கொடுத்தது மறக்க முடியாத நினைவுகள்.
எலுமிச்சை சாதம், ஊறுகாய் தான் அலுமினிய பாத்திரத்தில் வைத்து அவசர அவசரமாய் கிளறி கொண்டு வந்தார்கள். சரியாக கலக்கபடவில்லை சாதம் இருந்தாலும் பசியோடு இருக்கிறார்கள் என்று அவர்கள் விரைவாய் கொண்டு வந்து கொடுத்தது அவர்களின் மனித நேயத்தை காட்டுகிறது. அப்போது அந்த உணவு அதிக ருசியாக இருந்தது.
மிக அருமையாக மக்களின் நேசத்தைச் சொல்லியிருக்கின்றீர்கள்...
நீக்குஅப்போது அந்த உணவின் ருசி - அதுதான் நாவில் என்றென்றும் நின்றிருக்கும் ....
அப்போது அந்த உணவின் ருசி - அதுதான் நாவில் என்றென்றும் நின்றிருக்கும் ....//
நீக்குஆமாம் சகோ.
ஊர் மக்களின் மனித நேயம் வியக்க வைக்கிறது. நன்றி கோமதி அக்கா.
நீக்குவாலி அவர்களின் ஆனைக்கா அம்பிகையின் கவிதை அருமை.
பதிலளிநீக்குமற்ற விவரங்கள் பத்திரிக்கைகளில் படித்த நினைவு வருகிறது.
நன்றி கோமதி அக்கா.
நீக்குஎன்றாலும் இறுதிக் கட்டத்தில் திடீரென ஒரு சீரியஸ் வந்துவிடும் படத்தில். ரேவதி நடிப்பை ரசிக்க முடியும். "பக்கிராம்..." ரொம்ப நாள் இந்தப்பெயர் மனதில் இருந்தது//
பதிலளிநீக்குஎனக்கும் தான்.
நன்றி ஜோஸப் ஸார்.
நீக்குஅருமையான பாடல்கள்
பதிலளிநீக்குநன்றி நண்பரே...
நீக்குஅரங்கேற்ற வேளை - படம் எப்போது பார்த்தாலும் சுவாரஸ்யம்... அருமையான பாடல்...
பதிலளிநீக்குஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் - 2/3 பதிவுகளில் பயன்படுத்திய சிறப்பான பாடல்...
நன்றி DD.
நீக்குஆகாய வெண்ணிலாவே பாடல் தர்பாரி கானடா ராகம். இதே ராகத்தில் ஜகதலப்ரதாபன் படத்தில் வருகின்ற "சிவசங்கரி ... சிவானந்தலஹரி " பாடல், பிரமாதமாக இருக்கும்!
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
நீக்குஉண்மை.. அந்தப் பாடல் எனக்கும் பிடித்த பாடல். நான் இசைப்பற்றி ஏதும் அறியாதவள். ஆனால் கானடா ராகம் எனக்கு மிகவும் பிடிக்கும்.ரசித்து கேட்டால் மனது அமைதியை அடையும்.
சிவாஜியும்,அவருடன் ஜோடியாக வருபவரும் (பெயர் சட்டென மறந்துவிட்டது. மூன்று முறைக்கும் மேலாக ஊர்வசி பட்டம் வாங்கியவர். ஊர்வசி என்றவுடன் அவர் பெயர்தான் நினைவுக்கு வருகிறது. ) இணைந்து பாடும் "சின்னஞ்சிறிய வண்ணப் பறவை எண்ணத்தை சொல்லுதம்மா" அந்த பாடலும் கானடா ராகந்தான் என நினைக்கிறேன். அதுவும் எனக்கு மிகவும் பிடித்த பாடல். அந்தப்பாடல் ஏற்கனவே பகிர்ந்தாகி விட்டதா? இன்னமும் இதே ராகத்தில் அமைந்த நிறைய பழைய பாடல்கள் நெஞ்சை விட்டு நீங்காதவை.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கானடா ராகம் அல்ல; தர்பாரி கானடா ராகம், ஆகாய வெண்ணிலாவே, சிவசங்கரி, சின்னஞ்சிறிய === எல்லாப் பாடல்களும்.
நீக்குசின்னஞ்சிறிய வண்ணப் பறவை...
நீக்குகவியரசர்..
TMS - S. ஜானகி..
இசை திரை இசைத் திலகம்..
நடித்தவர்கள்
நடிகர் திலகம் - சாரதா...
படம் - குங்குமம்
ஒரு வழியாக அவர் பெயரை கண்டுபிடித்து விட்டேன்.அவர் பெயர் "சாரதா" நினைவுக்குகளில் இருந்து வழுக்கி விழுந்து சுற்றி சுற்றி துலாபாரத்தை மட்டும் நினைவு படுத்தி மறைந்து விடுகிறது. ஆனால் பெயர் நினைவுக்குள் வாராமல் அவஸ்தை.. கூகுளில் தேடாமல் கொண்டு வர நினைத்தேன். முடியவில்லை. இறுதியில் துலாபாரத்தால் பாரம் அகன்றது.
நீக்குதுரை செல்வராஜ் சகோவிற்கும், கௌதமன் சகோதரருக்கும் தெளிவுபடுத்தியமைக்கு நன்றிகள். தகவல்களுக்கும் மிக்க நன்றி.
நீக்கு//"சிவசங்கரி ... சிவானந்தலஹரி " பாடல், பிரமாதமாக இருக்கும்!//
நீக்குகெள்தமன் சார் சொன்ன இந்த பாடலை சீர்காழி கோவிந்தராஜன் மிக அருமையாக பாடி இருப்பார்.
//கீதா ரெங்கன் இல்லாமல் இந்தப்பாடலுக்கெல்லாம் ராகம் சொல்ல ஆளில்லாமல் போய்விட்டது.// - இனி ஸ்ரீராம் இந்த மாதிரி எழுதுவார்னு நினைக்கறீங்க? முடியாதுல்ல. பெங்களூர்லேர்ந்து இன்னொரு சங்கீத கலை நிதி, ராகம் சொல்லப் புறப்பட்டாச்சே..
நீக்குஆகாய வெண்ணிலாவே -- எனக்கும் மிகவும் பிடித்த பாடல். இசைக்கு ஒத்துழைக்கிற என்ன மாதிரி வார்த்தைக் கோர்வைகள்!..
பதிலளிநீக்குவாலியா? -- சான்ஸே இல்லை. அவர் நெருங்கவே முடியாத ரகம்.
நெருங்கவே முடியாத ரகம் என்று தோன்றாவிட்டாலும், அது வாழிஎழுதிய பாடல்தான் என்பதற்கு உறுதியான சான்றும் கிடைக்கவில்லை.படத்தின் டைட்டில் கார்டிலேயே பாடல் எழுதியவர்கள் பெயரே இல்லை!
நீக்குநான் விரும்பி கேட்ட பாடலை பகிர்ந்த ஸ்ரீராமுக்கு நன்றி! மிகவும் தாமதமாக நன்றி கூறுவதற்கு மன்னியுங்கள். அரங்கேற்ற வேளை படம் மிகவும் கலகலப்பாக ஓடும், கடைசியில்தான் கொஞ்சம் ஜவ் வாகி விடும். இதில் ரேவதி அட்டகாசமாக நடித்திருப்பார்(அவர் எதில் சோடை போயிருக்கிறார்?). இந்த படத்தில்தானே "சார் லட்டு.."என்ற காட்சி வரும்? அந்த டாய்லெட் காமெடியும் நன்றாக இருக்கும். மலையாளத்தில் அந்த காட்சியில் நடித்த மூவரும் ஆண்கள், இதில் ஒரு பெண் இருப்பதால் விரசமாகி விடக்கூடாதே என்று இயக்குனர் மிகவும் கவலைப்பட்டாராம். இரண்டாவது பாடல் சிறு வயதில் நிறைய கேட்டது. இப்போதெல்லாம் இந்த மாதிரி குழந்தைகளுக்கு அறிவுரை கூறும் பாடல்கள் ஏனோ வருவதில்லை. அறிவுரை கூறினால் குழந்தைகள் கேட்க மாட்டார்கள் என்று கூற முடியாது, பெரியவர்களுக்கு கூற நேரமில்லை. அவரவர் அவரவர் செல்லில் பிஸி.
பதிலளிநீக்குநன்றி பானு அக்கா.
நீக்குதுரை சார் நீங்களே முழு குறளையும் கூறாமல் பாதி மட்டும் கூறுங்கள், அதனால் நாங்களும் கொஞ்சம் தூசு தட்டிக் கொள்கிறோம். திருக்குறள் மாரத்தானும் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் ஸ்ரீராமிடம் சொல்லி வையுங்கள் அவர் மீதி பாதியை முழுமையாக கூறாமல், இரண்டு வார்த்தைகளை மட்டும் கூறி போங்காட்டம் ஆடுகிறார்.
பதிலளிநீக்குஸ்ரீராம் செய்வதில் அர்த்தம் இருக்குன்னு நினைக்கறேன். அவரே பல சமயங்களில் கூகிளிட்டுத்தான் மீதிப் பாதியைக் கண்டுபிடிக்கிறார் என அவர் எழுதிய நினைவு. அதனால் இரு வார்த்தைகளை மட்டும் போட்டு, மிகுதியை நம்மைக் கண்டுபிடிக்க, தெரிந்துகொள்ளச் செய்கிறார் என நினைக்கிறேன்.
நீக்குஹா... ஹா... ஹா... அப்புறம் கௌரவப் பிரச்னை ஆகிவிடும்!
நீக்குசிவாஜி இதில் ஸ்டேஷன் மாஸ்டரா? இன்னொரு படத்தில் விஜயகுமாரிக்கு அண்ணனாக வந்து ஒளி மயமான எதிர்காலம் உள்ளத்தில் தெரிவதாக பாடுவாரே, அதில் என்ஜின் ட்ரைவரா? என்ன படம்? பச்சை விளக்கா?
பதிலளிநீக்குஆமாம்...
நீக்குகாலையிலேயே சொல்ல வேண்டும் என்றிருந்தேன்...
பச்சை விளக்கு படத்தில் இஞ்சின் டிரைவர்...
அன்புக்கரங்களில் ஸ்டேஷன் மாஸ்டர்...
இன்னும் இது மாதிரி பல படங்கள்...
ஆகாய வெண்ணிலாவே பாடல் தர்பாரி கானடா என்று தெளிவு படுத்திய கௌதமன் சாருக்கு நன்றி.
பதிலளிநீக்குபிறந்த ஊரையும் புகுந்த ஊரையும் ஒரே தட்டில் வைத்து எடை போட்டுப் பார்த்து அதை ரசித்துச் சொல்லவும் சொல்லும் டி.எஸ். ரங்கராஜன்!..
பதிலளிநீக்குஅன்புக் கரங்கள் என்றவுடன் பச்சை விளக்கு நினைவுக்கு வருகிறது!
பதிலளிநீக்குஅடுத்த வெள்ளிக் கிழமை 'ஒளி மயமான எதிர்காலம்.." பாட்டை நேயர் விருப்பாமாக பதிவிடுங்கள்!
போட்டுடலாம் ஜீவி ஸார்.
நீக்கு//அடுத்து வழக்கமான வெள்ளி வீடியோ! என் தெரிவு!//
பதிலளிநீக்குஉடனேயே பிளாக் அண்ட் வைட் க்கு மாறிவிட்டன படங்கள் ஹா ஹா ஹா.
பானுமதி அக்கா விருப்பம்..ஆகாய வெண்ணிலாவே அழகிய பாட்டு.. படம் பார்க்கவில்லை...
வாங்க அதிரா...
நீக்கு//வாலியின் பாடல்களுக்கு இசை ஆர். சுதர்சனம். இன்று இரண்டு பாடல்களுமே வாலியின் பாடல்களாக அமைந்து விட்டன.
பதிலளிநீக்கு//
இவர் பேசுவதே பார்க்க சீரியசாக இருக்கும் ஆனா அத்தனையும் நகைச்சுவையாகவெ இருக்கும்.. எனக்கு இவரைப் பார்த்தாலே விவேக்குக்கு ஏதோ மலையாளமோ ஹிந்தியோ தப்புத்தப்பாச் சொல்லிக் கொடுத்த கொமெடிதான் நினைவுக்கு வரும்:).
அவர் பேச்சு ரொம்பவும் சுவாரஸ்யமாக இருக்கும் அதிரா.
நீக்கு//பொடிவருடிப் பூந்தென்றல்
பதிலளிநீக்குகுலவுகின்ற தென்பொதிகை
மடிவருடிப் பூத்தவளே !//
மிக அழகிய வரிகள்..
//சைடு கர்ட்டன் பக்கத்திலிருந்து சமயபுரம் அம்மன் 'பஜாங்' என்று ஒரு குரல் கொடுப்பா... அவ்வளவுதான்... வசனமும், நடிப்பும் பொத்துகிட்டு வரும்" என்றாராம்.
//
ஹா ஹா ஹா...
நீங்க கர்டன் என எழுதினால் எனக்கு டக்குப்பகெகெனப் புரியுது ஆனா இதை நான் கேர்ட்டின் என எழுதினால் உங்களுக்குப் புரியவில்லை என்பீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
நாங்க 'அதிரா' என்று சொன்னால் நீங்க ஏத்துக்குவீங்க. ஆனால் 'ஆதிரா' என்று சொன்னால், 'அது நான் இல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்பீங்க. இரண்டுக்கும் ஒரே ஆங்கில எழுத்துதானே.
நீக்குஆனா, ஆக்செண்ட் - இந்தியாவுக்கும்-அதிலும் தமிழகத்துக்கும், ஒரிஜினல் ஆங்கிலத்தின் ஆக்செண்டுக்கும் உள்ள வித்தியாசம்தான் எழுத்தில் வருது. நாங்க Driverஐ டிரைவர் என்போம். நீங்க றைவர் என்பீங்க. ஹா ஹா.
படித்தால் புரிந்தால் சரி!
நீக்குஅதேதான் ஆக்சென் வித்தியாசம் எனினும் எனக்குப் புரிந்துவிடுகிறது, ஆனா தமிழ்நாட்டில் இருப்போருக்கு என் தமிழ் புரிவதில்லை, இங்கென்றில்லை ஃபோனிலும் பலரோடு பேசியிருக்கிறேன் .. புரியவில்லை என்பினம், அதுதான் எனக்கு டவுட், தமிழ்தானே எப்படி அக்ஷன் மாத்திக் கதைச்சாலும் புரியவெல்லோ வேணும், எனக்குப் புரியுதே, ஆனா என் பாசை ஏன் அவர்களுக்குப் புரிவதில்லை என எனக்கு ஒரே டவுட்டூ:)).. இதைப் புதன் கிழமையில் கேட்டிருக்கலாமோ:)).
நீக்குபெயரை மட்டும் தப்பாக உச்சரிப்பது ஆருக்குமே பிடிக்காது நெ.தமிழன்:)).. அதிலும் நானெல்லாம் ரொம்ப ஆஆஆஆஆ நல்ல பொண்ணு:) .. பேசாமல் போயிடுவேன், ஆனா இங்கு வெள்ளைகளுக்கு பெயரில் பிழைவிட்டால் பிடிக்கவே பிடிக்காது.
நீக்கு// 'முதலாளி' படத்தில்//
பதிலளிநீக்குஆஆஆ இங்கும் முதலாளி:)
உண்மை குழந்தைக்கு இக்காலத்தில் அறிவுரை தேவையில்லை ஏனெனில் எல்லாக் குழந்தையும் அறிவுடன் தான் பிறக்கிறது என நினைக்கினம் போலும்:) எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:))
இது வேற முதலாளி!
நீக்கு//ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் - இந்த
பதிலளிநீக்குஉண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்.//
பாட்டை மட்டும் அருமை ஆஹா ஓஹோ எனப் பேசுங்கோ ஆனா அதிரா இப்படி ஒண்ணாயிருப்போம் தேம்ஸ்கரை ஆச்சிரமம் வாங்கோ என்றால் ஆரும் ஒண்ணாயிருக்க விரும்புகினம் இல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..
உண்மைதானோ!
நீக்குஸ்ரீராமின் இன்றைய பாட்டு, ரசிக்கக்கூடிய பாட்டு... மனதுள் புகாது, நெஞ்சை ஒண்ணும் பண்ணாது ஆனா ஆடிப்பாடி வேலை செய்ய வைக்கும் பாட்டு.
பதிலளிநீக்குஇங்கு காகம் இருக்கிறது, புரட்டாசிச் சனிகளில் கூப்பிட்டு லஞ் குடுப்போம்:))..
நைட் ஏனோ தெரியவில்லை ஒரு கனவு வந்துது, நான் எதுக்கோ காக்கை என சொன்னேன், முன்னால் போன ஒருவர் முறைத்தார் பயந்துவிட்டேன், இது உண்மைக்கனவு. சனி அங்கிள் ஏதும் ஜதித்திட்டம் போடுகிறாரோ அதிராவுக்கு எனப் பயம்மாக்கிடக்கூஊஊஊஊ:)).
என்ன இப்படிச் சொல்லிட்டீங்க... வரிகள் ரொம்ப ரசிக்க வைக்கின்றனவே....
நீக்குவாலி பற்றிப் படித்த செய்திஒன்று ஒரு பார்ப்பானையும் பாம்பையும் ஒரே நேரத்தில் பார்த்தால் முதலில் பார்ப்பானை அடிக்க வேண்டும் என்று சொன்னவ்ர்களின் கூட்டத்தில் இருந்தவராம் வாலி
பதிலளிநீக்குஹா.. ஹா... ஹா... நன்றி ஜி எம் பி ஸார்.
நீக்கு