சனி, 30 நவம்பர், 2019

வெளியே மழையா, வெயிலா? உள்ளே சென்றால் தெரியாது!



ஒரு நூற்றாண்டுக்கு சற்று அதிகம் ..  இந்தக் குகை உண்டாகி
இரண்டாவது பாராவில் மேகாலயாவில் புழங்கும் பாஷை
வேறு மாநிலங்களில் எங்காவது இப்படி ஆங்கில எழுத்துக்களை உபயோகிக்கிறார்களா?


மரத்துக்கு பெயிண்ட் அடித்தபோது உஜ்ஜாலா கலந்து விட்டார்களோ?


குகை வாயிலுக்கு போய்  சேர நிறைய தூரம் நடக்க வேண்டும்


பூகம்பத்தில் உருவானது என்கிறார்கள்.  ஆனால் எரிமலையின் கைங்கர்யம் மாதிரி இருக்கிறது


வேறு லைட் செட்டிங்கில் அதே பாறை


குகை வாயிலில் சுரேஷ் பத்மநாபன்


நாம் பராக்குப் பார்க்காமல் போயிருக்கோமா என்ன?


பூச்சி  தாவரம் .....


குகைக்குள் செல்லும் முன் ...



இடம் பொருள் விவரம்...



வெளியே மழையா, வெயிலா?  உள்ளே சென்றால் தெரியாது!  கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு உள்ளே போகலாம்...



"சிக்னல் நல்லா கிடைக்குதே...."
"சத்தமா சொல்லாதே...  விளம்பரத்தில் அதையும் சேர்த்துடுவாங்க...!"



வந்த வழியா?  வரும் வழியா?



குறுகிய திறப்புடன் இறுகிய பாறைகள்...



பாதியில் மாட்டிக் கொண்டாரோ!



நான் புகுந்து வந்துட்டேன் பாருங்க....!



அம்மாடி...   இந்த வழியே நுழைவது கஷ்டமப்பா....



கல்லில் தெரிவது கடவுளப்பா....



முகம் தெரிகிறதா? மூஞ்சூறு தெரிகிறதா?



கண்ணில் படுவதை எல்லாம் க்ளிக்கினால்...



கையில் வருவதை எல்லாம் எழுத வேண்டியதுதான்!


கிளம்பலாமா?



இன்று பிறந்தநாள் காணும் எங்கள் "தலைமை"  ஆ'சிரி'யர் திரு கௌதமனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.


47 கருத்துகள்:

  1. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு..

    வாழ்க நலம்....

    பதிலளிநீக்கு
  2. அன்பின் KGG அவர்களுக்கு நல்வாழ்த்துகள்...

    நீடூழி வாழ்க....

    பதிலளிநீக்கு
  3. குகையைப் பார்த்தாலே நடுக்கமாக இருக்கிறது....

    நமக்கு அதெல்லாம் !?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது மாதிரி இடங்களில் எனக்கும் அந்த 'உள்ளேபோகோஃபோபியா' உண்டு துரை செல்வராஜூ ஸார்...!

      நீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் மனப்பூர்வமாக ஆண்டவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று பிறந்த நாள் காணும் சகோதரர் திரு கெளதமன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் இன்று போல் எல்லா நலன்களையும் பெற்று இனிதாக பல்லாண்டு வாழ வேண்டுமென இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

      நீக்கு
    2. வாங்க கமலா அக்கா...  காலை வணக்கம்.  இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      நீக்கு
  5. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  6. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கெளதமன் சார், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    மேகாலயா குகை படங்கள் அருமை. அவற்றிற்கு பொருத்தமாக வாசகங்கள் படிக்க ஸ்வாரஸ்யமாக இருந்தது. குகை உள்ளே நுழைந்து வெளியே வரும் வரை கொஞ்சம் "திரில்"தான். எல்லா படங்களும் நன்றாக வந்திருக்கின்றன.

    ஒவ்வொரு மனிதரையும் ஆரம்பகால கட்டத்தில் குகைக்குள்தான் (கருவறை) இறைவன் தோற்றுவிக்கிறான்.ஆனால் அப்போது விபரமறியாத வயது. விபரமறிந்து இறைவனை பார்க்க/உணர நினைக்கும் மனிதர்கள் அதனால்தான் இறைவனை தரிசிக்க மறுபடியும் இந்த மாதிரி குகைகளுக்கே சென்று கடும் தவமிருக்கிறார்களோ?
    (சகோதரி அதிரா இதைப்பார்த்தால், இன்றைக்கு புதனா அக்கா? என்பார்கள். ஹா ஹா ஹா. என்னவோ குகையைப் பார்த்ததும் சிந்தனை வருகிறது.)

    பசுமையான படங்கள் எல்லாம் கண்களை கவர்கின்றன. கல்லில் தெய்வங்கள் நம் கற்பனைக்கேற்றவாறு தோற்றமளிக்கின்றன.
    நன்றாக ரசிக்கும்படி உள்ளது.
    "கல்லிலே கலை வண்ணம் கண்டான்" என்னும் பாடல் நினைவுக்கு வந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஒவ்வொரு மனிதரையும் ஆரம்பகால கட்டத்தில் குகைக்குள்தான் (கருவறை) இறைவன் தோற்றுவிக்கிறான்.ஆனால் அப்போது விபரமறியாத வயது. விபரமறிந்து இறைவனை பார்க்க/உணர நினைக்கும் மனிதர்கள் அதனால்தான் இறைவனை தரிசிக்க மறுபடியும் இந்த மாதிரி குகைகளுக்கே சென்று கடும் தவமிருக்கிறார்களோ? //

      இருக்கலாம்.மனிதனின் சில பழக்க வழக்கங்களுக்கு இதுபோன்ற காரணங்கள் இருக்கலாம்.

      நானும் கல்லிலே கலைவண்ணம் கண்டான் பாடலைச்ச்சொல்ல நினைத்து பின்னர் விட்டு விட்டேன்.

      நன்றி கமலா அக்கா.

      நீக்கு
  8. //கையில் வருவதை எல்லாம் எழுத வேண்டியதுதான்!//

    குகையை ரசித்தோம், அங்கு செல்லும் வழி படங்களுக்கு கையில் வருவதை எழுதியதும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  9. இனிய காலை வணக்கம். கேஜிஜி அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

    பெரும்பாலான வடகிழக்கு மாநிலங்களில் ஆங்கில வார்த்தைகள் கொண்டே அவர்கள் பாஷையில் எழுதுவது வழக்கம். மிசோ மொழியில் அப்படி ஒரு கட்டுரை எழுதிக் கொடுத்ததை கஷ்டப்பட்டு தட்டச்சு செய்த அனுபவம் உண்டு!

    படங்கள் அழகு. நான் சென்று வந்த போது கிடைத்த அனுபவங்கள் மனதில்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட் நலமா ? வேலை அதிகமோ?
      பதிவுகளை காணவில்லையே!

      நீக்கு
    2. நலம் தான் கோமதிம்மா... பணிச்சுமை கொஞ்சம் அதிகம் தான். மீண்டும் எழுதுவேன்.

      நீக்கு
    3. வாங்க வெங்கட்.  வணக்கம்.   பெரிய இடைவெளி இல்லாமல் சீக்கிரம் சிறிய பதிவுகளாகவாவது தொடங்குங்கள்.

      நீக்கு
  10. முகம் தெரிகிறதா? மூஞ்சூறு தெரிகிறதா?//

    யானைமுகம், கீழே மூஞ்சூறும் தெரிகிறது.

    அமெரிக்காவில் இது போன்ற குகைகள் நிறைய இருக்கிறது. நாங்கள் போய் பார்த்தோம் அதை பதிவு போடவில்லை, இந்த பதிவை பார்த்ததும் போட ஆசை வந்து விட்டது.

    இங்கும் பார்க்கவேண்டிய இடங்கள் நிறைய இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களும் வெளியிடுங்கள்.  பார்ப்போம்.   நன்றி அக்கா.

      நீக்கு
  11. எங்கள் ப்ளாக் ஆசிரியருக்கு அன்பு பிறந்த தின
    வாழ்த்துகள். இன்று போல் என்றும்
    நல் ஆரோக்கியத்தோடு, மன நிறைவோடு
    பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகள்.

    அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    பயணம் முடிந்து இன்னோரு பயணம். குகைகள் பார்ப்பதற்கு மட்டும் அழகு.
    நானெல்லாம் உள்ளேயே போக மாட்டேன் சாமி.
    அதுவும் கரடு முரடாக இருக்கிறது. வழுக்கினால்
    எத்தனை எலும்பு உடையுமோ.
    சுரேஷ் பத்ம நாபன் வெங்கட் தோழர் இல்ல?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுரேஷ் பத்மநாபன் வெங்கட் தோழர் இல்ல?

      இவர் வேறு பத்மநாபன் வல்லிம்மா....

      நீக்கு
    2. வாங்க வல்லிம்மா.    ரசித்ததற்கு நன்றி.

      நீக்கு
  12. இன்று பதினாறாம் பிறந்தநாள் காணும் கௌதமன்ஜி அவர்களுக்கு வாழ்த்துகள்.

    குகை படங்கள் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா.. ரத்தின சருக்கமாய் வாழ்த்து அருமை சகோ.

      நீக்கு
    2. /// பதினாறு வயதா!...///

      சொல்றது தான் சொல்றீங்க..
      இன்னும் ரெண்டு வயசு குறைச்சு
      சொல்லலாமே!!!...

      இன்னும் அந்தப் (!) பையன்
      ஓடிப் புடிச்சு வெளையாடலையாம்!...

      நீக்கு
    3. என்னை வைத்து காமெடி பண்றீங்களா! எ ன் ஜா ய் !

      நீக்கு
  13. படங்கள் அருமை
    மறக்க இயலாத பயணமாக அமைந்திருக்கும்
    நன்றி

    பதிலளிநீக்கு
  14. Birthday Boy-க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
    என்றென்றும் இளமையோடு கேள்விகளுக்கு பதில் சொல்லி வாழ்வாராக !

    பதிலளிநீக்கு
  15. வாழ்த்தியவர்கள் எல்லோருக்கும் என் நன்றி!

    பதிலளிநீக்கு
  16. பிறந்த நாள் வாழ்த்துக்களும், வணக்கங்களும் கௌதமன் சார். இன்று போல் மாறாத நகைச்சுவையுணர்வோடு என்றும் வாழ வாழ்த்துகிறேன். 

    பதிலளிநீக்கு
  17. திருச்ச்யில் ச்சி பிள்ளையார் கோவிலுக்கு தாயுமானவர் சன்னதியில் இருந்து போகும்போது இடது பக்கம் ஒரு குகை காணப்படும் யாராவது போய் இருக்கிறார்களா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை செல்வராஜூ ஸார் ஃபேஸ்புக்கில் இதே போன்றதொரு குகையை மதுரைக்குப் பக்கத்தில் இருக்கிறது என்று சொல்லு வீடியோ பதிவிட்டிருந்தார்.

      நன்றி ஜி எம்பி ஸார்.

      நீக்கு
  18. இன்று பிறந்தநாள் காணும் எங்கள் "தலைமை" ஆ'சிரி'யர் திரு கௌதமனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.////

    ஆஆஆவ்வ்வ்வ்வ்வ் தனக்குத்தானே வாழ்த்துச் சொல்றாரோ கெள அண்ணன்... Many more happy returns of the day.... Happy birthday கெள அண்ணன்... மெலிஞ்சிட்டீங்கபோல இருக்கே....
    கற்றக் ஒபரேசனுக்குப் பின் படிக்கும் பேப்பரோ?:)...

    சண்டே போஸ்ட்டுக்கு என்ன நடந்தது ஶ்ரீராம்?... என் செக் தகவல் சொன்னதும் தேடினால் காணம்:)...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!