செவ்வாய், 19 நவம்பர், 2019

கேட்டு வாங்கிப் போடும் கதை :  தத்தும் கிளி - துரை செல்வராஜூ 



தத்தும் கிளி 

துரை செல்வராஜூ 

==========

''அந்தப் பொண்ணைப் பார்த்திருக்கியா.. இல்லையா?... ''

சுடச்சுட வெங்காய பஜ்ஜியும் அருமையான தேங்காய்ச் சட்னியும் எதிரில்
இருக்க அதற்குப் பின்னும் டிகிரி காஃபி காத்திருக்க -

அந்த ஆனந்தத்தில் மூழ்க விடாமல் தடுத்தது செண்பகத்தின் கேள்வி!..

தவித்திருந்தான் சங்கர்...

அவனோடு அந்தக் கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண் பிள்ளைகள்..

அவர்களுள் அவள் யாரென்று கண்டான் இவன்?..

அப்படியே கண்டிருந்தாலும் என்னென்று சொல்வது.. ஏதென்று சொல்வது?...

''பனங்கிழங்கின் குருத்தைக் கொண்டு எழுதினாற்போல்
நெற்றி நடு வகிடும்

அந்த அழகிய நெற்றியில் அரக்கு நிற செஞ்சாந்தும்

இளம்பிறை நெற்றியின் இருபுறங்களிலும்
சுருள் சுருளாக கருங்குழற் கற்றைகளும்

கிர்ணிப் பழத்தைப் பிசைந்தெடுத்துச்
செய்தாற்போன்ற முகமும் அதன் அழகும்...

சித்திரப் பூ போன்ற கண்களும் செவி மடல்களும்
செவிகளோடு பிறந்தவையாய் தோடும் தொங்கல்களும்… ''

இப்படியெல்லாம் சொல்லி வைத்தால்..

'' நீயெல்லாம் எங்கே உருப்படறது?...
படிக்கப் போகிறாயா?... இல்லே பொண்ணுகளை ரசிக்கப் போகிறாயா?...
இதுக்குத்தான் உங்க அண்ணன் கஷ்டப்பட்டு உன்னைப் படிக்க வைக்கிறாரா?.. ''

என்ற வினாக்கள் எழுந்து விஷயம் வேறு திசையில் திரும்பி விடக் கூடும்...

அல்லது,

'' நான் எந்தப் பொண்ணையும் பார்த்ததில்லை!...
நான் உண்டு.. என் படிப்பு உண்டு... ன்னு வந்துக்கிட்டு இருக்கிறேன்!... ''

என்று சொல்லி விட்டால்...

'' எனக்கு அப்பவே தெரியுமே!...
நீ இதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டே...ன்னு!.. ''

- என்று புரளியாகி விட்டால்.. பிறகு
நான் தலையைப் பிய்த்துக் கொண்டு இருக்க வேண்டும்!...
- என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டிருந்தான்..

'' சரி.. நீ.. சாப்பிடு!.. '' - என்றாள் செண்பகம் ..

செண்பகம் - சங்கருடைய அண்ணி ... பண்பும் பாசமும் நிறைந்த அண்ணி..

சங்கருடைய அண்ணன் செண்பகத்தின் கழுத்தில் மாலையிட்டபோது இவனுக்கு ஒன்பது வயது...

அண்ணியை அப்போதே இவனுக்குப் பிடித்து விட்டது..
கல்யாணப் பெண்ணின் சேலைத் தலைப்பைப் பிடித்துக் கொண்டே திரிந்தான்..

பார்த்தவர்கள் எல்லாரும் சிரித்தார்கள்…

செண்பகம் பெரிய குடும்பத்திலிருந்து வந்தவள்.. ஆகையால்,
எந்த வேற்றுமையும் இல்லாமல் அரவணைத்துக் கொண்டாள்....

அந்த அன்பு எல்லாருக்கும் பிடித்துப் போயிற்று...

அண்ணியின் புடவைத் தலைப்பை விடமாட்டேன்!.. என்று
ரகளை கட்டி அடிப்பானோ!..

ஒரு கட்டத்தில் எல்லாருக்கும் சந்தேகம் வந்து விட்டது...

நல்லவேளையாக முன்னேரத்திலேயே தூங்கி விட்டான்... ஆனாலும்
ராத்திரி பதினோரு மணிக்கு விழித்துக் கொண்டு ஒரே அழுகை...

'' இப்பவே.. அண்ணிக்கிட்ட போகணும்!... '' - என்று...

அதுக்காக.. இந்நேரத்தில அங்கே போய் கதவைத் தட்ட முடியுமா!?..

ஒருவழியாக அவனை ஆற்றுப்படுத்தி விடியற்காலையிலேயே
புதுப் பெண்ணின்  வீட்டிற்கு அழைத்துப் போய் -

'' இந்தாம்மா... உன்னோட மூத்த பிள்ளை!.. '' - என்று ஒப்படைத்ததும் தான்
இவன் முகத்தில் சிரிப்பு வந்தது...

செண்பகம் வந்த பின் இங்கே சங்கரின் அம்மாவுக்கு
சங்கரை வளர்த்தெடுக்கும் வேலை குறைந்து போனது...

சங்கரும் வளர வளர உலகியலைப் புரிந்து கொண்டான்..

காலாகாலத்தில் செண்பகமும் இரு குழந்தைகளுக்குத் தாயாகி விட
அன்பு நிறை சித்தப்பாவாகி நின்றான்...

அண்ணன் தனது அலுவலகம், பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடம் - என்ற இவைகளை
முன்னிட்டு கிராமத்திலிருந்து ஐந்து கி.மீ தொலைவிலிருந்த நகருக்குள் குடி
புகுந்தான்...

அடுத்த சில வருடங்களில் சங்கரும் கல்லூரி மாணவன் ஆனான்..

கல்லூரி முடிந்ததும் அண்ணனின் வீட்டை எட்டிப் பார்த்து விட்டு
உடனடியாக வீட்டுக்குத் திரும்பி விடுவான்...

வயதான காலத்தில் அப்பா அம்மா தனியாக இருக்கிறார்கள் - என்று...

வீட்டில் வேலைக்கு ஆட்கள் இருந்தாலும் நடைமுறையை மீறுவதில்லை..

வெள்ளிக்கிழமை மாலையிலிருந்து சனிக்கிழமை மாலை வரை அண்ணன் வீட்டில் தான்
பிள்ளைகளுடன் கும்மாளம் கொண்டாட்டம்...

சமயங்களில் அம்மா அப்பாவை காலையிலேயே ஆட்டோவில் அழைத்து வந்து அண்ணன்
வீட்டில் விட்டு விட்டு மாலையில் கல்லூரி முடிந்ததும் கிராமத்துக்கு
அழைத்துச் செல்வான்...

ஆக நாளும் பொழுதும் இப்படியான
சந்தோஷத்துடன் போய்க்கொண்டிருந்த வேளையில் தான்

இவனுக்கும் ஒரு கால் கட்டு போட்டு விடுவோம்.. என்று
பெரியவர்கள் எல்லாரும் கூடி முடிவெடுத்தார்கள்..

அதன் பேரில் அங்குமிங்குமாக பெண் தேடும் படலம் ஆரம்பமாயிற்று..

அதன் தொடர்ச்சி தான் செண்பகத்தின் கேள்விக் கணை..

'' எங்கே நான் கேட்டதுக்குப் பதிலே சொல்லலை?... ''

'' அந்த மாதிரி ஒரு பெண்ணே என் க்ளாஸ்..ல இல்லை!... ''

'' உங் க்ளாஸ்..ல இல்லாட்டாலும் அடுத்தடுத்த க்ளாஸ்..ல!?… ''

'' நீங்க சொல்ற மாதிரி மளிகைக் கடைக்காரர் பொண்ணு.. ரெண்டு அண்ணன்களோட
பிறந்தவ... அப்படின்னு யாரும் இல்லை... அண்ணி… ''

'' அப்போ நீயும் இவ்வளவு விவரமும் தெரிஞ்சு தான் வைச்சிருக்கே!.. ''

'' அப்படியெல்லாம் இல்லை அண்ணி..
மற்ற பசங்கள் பேசிக் கொள்வதை வைத்துச் சொன்னேன்!.. ''

'' ஓ... அப்படியான பசங்களோடயும் பழக்கம் இருக்குதா?... ''

'' அண்ணி..நீங்க வளர்த்த பிள்ளை  நான் !.. ''

'' அதனால தாம்பா.. எனக்கும் ஒரே கவலையா இருக்கு..
எங்கே.. உங்க அண்ணன் உலகம் தெரியாம எந்தம்பியை வளர்த்து வச்சிருக்கியே
செம்பகம்!.. ந்னு சொல்லிடுவாரோ...ன்னு!... ''

'' அண்ணி.. நீங்க கவலையே படாதீங்க... எனக்கும் உலகம் தெரியும்!.. ''

'' ம்.. தெரியும்.. தெரியும்!... தெரிஞ்ச அழகைத் தான் இப்போ பார்த்தேனே!... ''

'' அண்ணி.. அதெப்படி நீங்க செய்ற பஜ்ஜி மட்டும் இவ்வளவு ருசியா இருக்கு?... ''

'' நீ பேச்சை மாத்தாதே!... கேக்குறதுக்குப் பதிலச் சொல்லு!.. ''

'' என்னா கேட்டீங்க அண்ணி!?… ''

திரும்பவும் ஆரம்பத்திலிருந்து வந்தான் சங்கர்..

'' சரியாப் போச்சு!... மாமாவும் அத்தையும் உனக்கு கல்யாணப் பேச்சு
எடுத்துட்டாங்க... இப்பவே நாலு ஜாதகம் வந்துருக்கு... அதுல ஒன்னு
உன்கூடப் படிக்கிற பொண்ணோடதாம்!... ''

'' அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்… ''

'' அப்போ நீ யாரையும் பார்த்து வச்சிருக்கியா?.. ''

'' ..... ..... ..... '' - குறும்பான புன்னகையுடன் அமைதியாக இருந்தான் சங்கர்...

'' கேக்கிறேன்..ல!... ''

'' ம்!... '' - தலையை ஆட்டினான்...

'' ரொம்ப நல்லதாப் போச்சு... அங்கே இங்கே அலையற வேலை மிச்சம்!..
சொல்லு.. அந்தப் பொண்ணு எந்த ஊரு?...

'' ஊரெல்லாம் இல்லை!... ''

'' அப்போ?... ''

'' இங்கே தான்!... ''

'' இங்கே தான்... னா?... ''

'' இங்கேயே தான்.. இந்த வீடு தான்... உங்க வீடு தான்!... ''

'' நீ என்ன சொல்றே சங்கர்?... '' - செண்பகம் திகைத்தாள்...

'' கௌரி!... ''

'' நீ சும்மா இரு சங்கர்... இதெல்லாம் ஒத்து வராது!... ''
- செண்பகத்தின் முகம் வியர்த்திருந்தது...

'' ஏன் அண்ணி?... ''

'' ரெண்டு வீட்டையும் பகையாக்கிடும்...உம் பேச்சு?.... என்னயப் போட்டு
புடுங்கி எடுத்துடுவாங்க!.. இதுக்குத் தான் கொழுந்தன்.. கொழுந்தன்..ன்னு
கொஞ்சினாயா..ன்னு!... நான் ஒரு நாளும் இதுக்கு சம்மதிக்க மாட்டேன்!...
இதோட இந்த எண்ணத்தை விட்டுடு... நானும் யாருக்கிட்டயும் சொல்லாம
மறைச்சுடுறேன்!.... ''

பதைபதைப்பு இன்னும் அடங்கவில்லை செண்பகத்திற்கு...

'' அண்ணி நான் எவ்வளவோ நம்பிக்கையா இருந்தேன்!... ''
- ஏக்கத்துடன் பரிதவித்தான் சங்கர்...

'' வேண்டாம் சங்கர்... எவ்வளவோ அன்னியோன்யமா இருக்கோம்... நமக்குள்ள
பிரச்னை வேண்டாம்.... உங்க அம்மா எனக்கும் அம்மாவா இருக்காங்க... அவங்களை
நீ மாமியாரா மாத்திடாதே... ''

'' இல்லே அண்ணி... கௌரிய நான் மனசார நேசிக்கிறேன்... கௌரிய விட்டுட்டு
இன்னொரு பெண்ணை நினைச்சுக் கூட பார்க்க முடியாது... ''

'' கொஞ்ச நேரத்துக்கு முன்னால தான் நான் வளர்த்த பிள்ளை..ன்னு பெருமையா
இருந்துச்சு... இப்போ என்னடா இப்படி வளர்த்து இருக்கோம்..ன்னு வேதனையா
இருக்கு!... ''

'' ஏன் அண்ணி... நான் என்ன தப்பு செஞ்சேன்?...
கௌரி..ய நான் கட்டிக்கிறேன்..ன்னு சொன்னது ஒரு குற்றமா?... ''

'' உனக்கு உலகம் ன்னா என்னான்னு தெரியாது... நான் தான் உனக்கு மை
வெச்சுட்டேன் .. மந்திரம் போட்டுட்டேன்... னு புழுதி வாரி தூத்தும்... ''

'' அப்போ.. உங்க சுய நலத்துக்காகத் தான் பேசறீங்க...
உங்க வளர்ப்பு மகனுக்காக பேசவில்லை!... இல்லையா?... ''

'' இல்லடா.. ராஜா... அப்படி இல்லை... உனக்கு எந்த மாதிரி சொல்லி விளங்க
வைக்கிறது..ன்னு எனக்குத் தெரியலையே!... '' - கண்களில் நீர்
தளுதளுத்தது...

அண்ணியின் கண்களில் நீரைக் கண்டதும் அரண்டு போனான் சங்கர்...

வாசலில் ஸ்கூட்டியின் சத்தம் கேட்க -

'' உங்க அண்ணன் பசங்களை ஸ்கூல்..ல இருந்து
அழைச்சிக்கிட்டு வந்துட்டார் போல இருக்கு... ''

முந்தானையால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு
வாசலை நோக்கி ஓடி கதவைத் திறந்தாள் செண்பகம்...

யாரொருவரையும் காணவில்லை அங்கே...

நேரத்தைப் பார்த்தாள்..
அவர்கள் வருவதற்கு இன்னும் பதினைந்து நிமிடங்களுக்கு மேல் இருக்கிறது...

வாசலில் இருந்து திரும்பி கூடத்தில் நடக்கையில்
சடாரெனக் கால்களில் விழுந்தான் சங்கர்...

திடுக்கிட்ட செண்பகம் அப்படியே குனிந்து
கீழே கிடந்தவனை வாரித் தூக்கினாள்...

'' சங்கர்... என்ன இது சின்னப் பிள்ளையாட்டம்?..

சங்கரின் கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்தது...

'' வேணாம்.. அண்ணி... நீங்க அழக் கூடாது...
நீங்க அழுது நான் பார்த்ததே இல்லை...
எங்க வீட்டு மஹாலக்ஷ்மி நீங்க...
என்னை மன்னிச்சுடுங்க... அண்ணி!..
நீங்க என்ன சொன்னாலும் கேக்கறேன்!... ''

- விசும்பினான் சங்கர்...

நெகிழ்ந்து நின்ற - செண்பகம் தன் கண்ணீரால் நனைந்திருந்த
முந்தானையால் சங்கரின் கண்களைத் துடைத்து விட்டபடி
நெஞ்சோடு சாய்த்துக் கொண்டாள்...

அடுத்து சில நாட்கள் கழிந்தன...

வாசலில் ஆட்டோ வந்து நிற்க - அதிலிருந்து
இறங்கியவர்களைக் கண்டதும் செண்பகம் ஓடோடிச் சென்று வரவேற்றாள்...

'' அம்மா.. அப்பா!.. ஏய்.. கௌரி?..
என்ன இது சொல்லாம கொள்ளாம!... ''

கைப் பைகளில் பழங்கள், இனிப்புகள், மல்லிகைச் சரங்கள்...

அடுத்த சில நொடிகளில் இன்னொரு ஆட்டோ...

சங்கர்.. மாமா.. அத்தை!...

அவர்களது கைகளிலும் பைகள்..
பைகளில் பழங்கள், இனிப்புகள், மல்லிகைச் சரங்கள்...

'' என்ன நடக்கிறது இங்கே?... '' - ஒன்றும் புரியவில்லை செண்பகத்திற்கு..

'' வாங்க எல்லாரும் உள்ளே.. உட்கார்ந்து பேசலாம்!.. ''
- சங்கரின் அண்ணன் அழைத்தான்...

'' பேசறதா?... எதப் பத்தி?.. '' - குழம்பித் தவித்தாள்..

உள்ளே சென்று அமர்ந்ததும்
சங்கரின் தந்தை விருட்டென்று பேச்சை ஆரம்பித்தார்...

'' அன்னைக்கு செண்பகமும் சங்கரும் பேசிக்கிட்டதைக்
காது கொடுத்துக் கேட்ட பெரியவன் வீட்டு ஓடியாந்து -
அப்பா.. இந்த மாதிரி ஆகியிருக்கு... என்னா சொல்றீங்க.. ன்னான்... ''

'' நான், அஞ்சலை, பெரியவன் - எல்லாருமா கூடிப் பேசுனோம்...
எங்களுக்கும் ஒரு மக இருந்து அவளுக்கும் இப்படி ஒன்னு...ன்னா தூக்கியா
போட்டுருப்போம்?... ஒருத்தருக்கொருத்தர் உதவுறது தானே உறவு?.. ''

'' யாரா இருந்தா என்னா?... பெத்தவங்க… ன்ற ஸ்தானம் பெருசு இல்லையா!..
சின்னவனோட ஆசையே எங்களோட ஆசையாவும் ஆயிடிச்சி... ''

சுற்றி வளைத்துப் பேசியபோதே மனக்கவலை தீர்ந்ததைப் போலிருந்தது
செண்பகத்தின் தாய் தந்தையர்க்கு... கண்களைத் துடைத்துக் கொண்டனர்...

'' அதான் - உங்களைb புறப்பட்டு வரச்சொன்னோம்!.. ''

'' என்ன?... ஒரு காலை கொஞ்சம் தாங்கி நடக்கிறா கௌரி!... அவ்ளோ தானே!.. ''

''அட... சாலையில போறப்ப..
புல்லளவு கல்லு சுருக்கு..ன்னு குத்துனா தாங்கி நடக்க மாட்டோமா?...
நெல்லளவு கல்லு நறுக்கு..ன்னு குத்துனா ஏந்தி நடக்க மாட்டோமா?... ''

'' அது மாதிரி தான் இது!... இதப் போய் பெரிய குறையா பேசிக்கிட்டு!...
கிளி தாவுனாலும் அழகுதான்.. தத்துனாலும் அழகுதான்!.. ''

'' எம்மகன் கௌரி மேல ஆசப்பட்டுட்டான்...
அதை எப்பாடுபட்டாவது தேடி வந்து கொடுக்க மாட்டேனா!...
என்ன சொல்றே அஞ்சலை?... ''

'' நீங்க சொன்னா சர்தான்!.. '' - அஞ்சலை புன்னகையுடன் மகனைப் பார்த்தாள்..

'' என்ன ஒரு வருத்தம்..னா - இந்த சம்பந்தத்தை எடுத்துப் பேசுனா நாங்க
தப்பா நெனைச்சுடுவோம்..ன்னு எம் மருமக நெனைச்சது தான்!... ''

'' மாலையும் கழுத்துமா எங்க வீட்டுக்கு வந்தப்பவே
சின்னவனை தோள்...ல ஏத்திக்கிட்டு வந்த பராசக்தி நீ!..
நீ வந்து அவனைக் கேட்டா - இல்லே...ன்னா சொல்லிடுவோம்?.. ''

'' என்னை மன்னிச்சிடுங்க மாமா!.. '' - கண்ணீருடன் கை கூப்பினாள் செண்பகம்..

'' அதுல ஒரு தப்பும் இல்லை செண்பகம்.. சரி.. அதெல்லாம் போகட்டும்!..
நல்ல நாளாப் பார்த்து பாக்கு மாத்திக்கலாம்.. என்ன நான் சொல்றது!.. ''

'' நீங்க பேசுனது போதும்!.. விட்டா விடிய விடியப் பேசுவீங்க!..
கௌரி.. இப்படி அத்தை கிட்ட வாம்மா!... '' - என்றாள் அஞ்சலை..

அதைக் கேட்டு எழுந்து அருகில் வந்த
கௌரியின் ஜடையில் மல்லிகைச் சரங்களைச் சூட்டினாள்...

'' நீ போயி எல்லாருக்கும் காப்பி போட்டு எடுத்துக்கிட்டு வாம்மா!... ''

வெட்கத்துடன் கௌரி சமையலறைக்குள் செல்ல
சங்கரும் அவள் பின்னேயே சென்றான்...

'' இந்தா... கௌரியோட முந்தானையப் பிடிச்சிக்கிட்டான்...ல!... ''

எல்லாரும் சிரித்தார்கள்...
ஃஃஃ

56 கருத்துகள்:

  1. அணங்குகொல் ஆய் மயில்கொல்... - என்று மயங்கி நிற்கும் சங்கரின் சார்பாக

    வாழ்க நலம்.. - என்று கூறி
    இன்றைய பதிவுக்கு அன்புடன்
    வரவேற்கிறேன்...

    பதிலளிநீக்கு
  2. இன்று எனது கதையைப் பதிவு செய்த
    அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கு
    நெஞ்சார்ந்த நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் நன்றியையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

      நீக்கு
  3. அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். என்ன நேரம் என்று கவனம் இல்லை. ஆகையால் தாமதமாக வந்தேன். :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா... காலை/மாலை வணக்கம். நல்வரவு. நன்றி.

      நீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்தநாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை மனப்பூர்வமாக பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    இன்று சகோதரர் துரை செல்வராஜ் அவர்கள் எழுதிய கதையாகதான் இருக்குமென நினைத்தேன். அது போல் அவர் எழுதிய கதை வந்துள்ளது. நல்லதொரு கதையை சற்று நேரத்தில் படித்து வருகிறேன்.நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...    காலை வணக்கம். இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      நீக்கு
    2. ஸ்ரீமதி கமலாஹரிஹரன் அவர்களுக்குத்தான் எத்தனை அன்பு எனது எழுத்துக்களின் மீது..

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
    3. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

      தங்கள் எழுத்துக்கள் ஆழமானவை. எவரையும் காயப்படுத்தாத அழகின் அம்சங்கள் நிறைந்தவை. குடும்ப பாங்கும், பண்பும், அன்பும், பிறருக்கு விட்டுத் தரும் மனோபாவமும் தாங்கள் எழுதும் கதை எழுத்துக்களுக்கு சிறந்த மூலதனம். அதனால் தாங்கள் எழுதும் கதைகளை விரும்பி படிக்கும் போது எனக்குள் ஒரு நிறைவு வருகிறது. மேலும் கதைகளை சுபமாக தருவதற்கு மிக்க நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    4. ஸ்ரீமதி கமலாஹரிஹரன் அவர்களது கருத்துரைக்குத் தலை வணங்குகிறேன்...

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  5. இன்னிக்கும் துரையின் கதையாகத் தான் இருக்கும் என மனதில் தோன்றியது. தலைப்பு அருமை. கதையைப் படிச்சுட்டு வரேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதெப்படி உங்களுக்கும் ஸ்ரீமதி KH அவர்களுக்கும் ஒரே மாதிரியாகத் தோன்றியது!..

      வருக... வருக...

      நீக்கு
    2. ஆச்சர்யம்.   உங்களுக்கு வெள்ளி வீடியோ பாடல் தெரிந்தது போல!

      நீக்கு
    3. ஆமாம்..ஆச்சர்யந்தான்... சில சமயம் நம் மனதில் நம்மையறியாமல் தெரிந்து விடுகிறது. அதனால்தான் "மனக்கண்" என்ற வார்த்தை உண்டாகியிருக்கும் போலிருக்கிறது. நன்றி சகோதரரே.

      நீக்கு
    4. ஆகா...

      மனக்கண்... விளக்கம் அருமை...

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  6. நல்ல மகிழ்ச்சியான குடும்பத்தில் குளத்தில் வீசும் "கல்" எறிந்தாற்போல் கலக்கம் வந்துடுமோனு நினைச்சதுக்குக் குடும்ப மகிழ்ச்சி எங்கேயுமே போகலைனு பெருந்தன்மையான பெரியவங்க காட்டிட்டாங்க. குழந்தைங்க சந்தோஷமே முக்கியம் பெற்றோருக்கு. அதுவும் தெரிந்த அறிந்த, பழகிய பெண் எனில் கரும்பு தின்னக் கசக்குமா? அருமையான கதையைக் கொடுத்த துரைக்கும், அதைப் பகிர்ந்த ஸ்ரீராமுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும்
      கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி ..
      நன்றியக்கா...

      அப்புறம் -

      பெரியவங்க ஏதாவது கோளாறு பண்ணனும்..ந்னு நெனைச்சாலும்
      நாங்க விட மாட்டோமே!....

      நீக்கு
  7. இதை எல்லாம் படிச்சுட்டு நாமும் எழுதறோமேனு மனசில் தோன்றத் தான் செய்கிறது. சரளமான நடை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதெப்படிச் சொல்லி விட்டீர்கள்!...

      தங்களது வித்வத்துவத்தை உணர்ந்தவன் நான்...

      தங்களது வீட்டு வாசலின் மரங்களைப் பற்றி எழுதும் போதெல்லாம் மனம் குளிர்ந்து விடும்..

      நெகிழ்ந்து விடுவேன்...

      நீக்கு
  8. பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களது வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  9. கதை கருவை விட அதை சொன்ன விதம் அழகு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  11. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  12. கதை மிகவும் அருமை.

    //' அன்னைக்கு செண்பகமும் சங்கரும் பேசிக்கிட்டதைக்
    காது கொடுத்துக் கேட்ட பெரியவன் வீட்டு ஓடியாந்து -
    அப்பா.. இந்த மாதிரி ஆகியிருக்கு... என்னா சொல்றீங்க.. ன்னான்... ''//

    செண்பகம் கண்வனின் வண்டி சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்த் அபோது யாரு இல்லை என்ற போதே நினைத்தேன் , சங்கரின் அண்ணன் கேட்டு இருப்பார் என்று.

    //எங்களுக்கும் ஒரு மக இருந்து அவளுக்கும் இப்படி ஒன்னு...ன்னா தூக்கியா
    போட்டுருப்போம்?... ஒருத்தருக்கொருத்தர் உதவுறது தானே உறவு?.. '//

    ஓ ! அதுதான் செண்பகத்திற்கு அத்தனை தய்க்கமும் பதை பதைப்புமா சங்கர் கேட்டதில்.
    அன்பால் குறை நிறையாகிவிட்டது.

    கதை இனிமையான நிறைவு.

    வாழ்த்துக்கள் மணமக்களுக்கு.
    அன்பான கதைக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி... நன்றி...

      நீக்கு
  13. அன்பால் குறை நிறைவாகி விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறைகளை நிறைவாக்குவது
      அன்பு ஒன்று தானே...

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  14. நல்ல கதை. ரசித்தேன். ஆனால் 'சீதை ராமனை மன்னித்தாள்' டெம்ப்ளேட் மாதிரி எல்லாமே சுக முடிவாக இருந்தால்? ஒருவேளை நன உலகில் இல்லாத சுக முடிவுகளை கனவுலகில் கொண்டுவருகிறாரோ ஆசிரியர்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை...

      //நனவுலகில் இல்லாத சுக முடிவுகள்.. //

      முழுமையாக அப்படிச் சொல்ல முடியா விட்டாலும்

      ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டுதானே இருக்கின்றன...

      தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  15. அனைவருக்கும் அன்பு வணக்கம்.
    எங்கள்ப்ளாகைத் திறந்ததும் துரையின் அன்பு கதை.
    அடெயப்பா எத்தனை நாட்களாச்சு தமிழைப் அடித்து. அதுவும் துரையின் உள்ள கதை.உண்மைக் கதை. இத்தனை நெகிழ்ச்சியாக ஒருவர் எழுதமுடியுமா.
    இந்த அண்ணியின் தாயன்பு, மைத்துனனின் ஆழ்ந்த பற்று,
    பெற்றவர்களின் புரிதல்.
    கௌரியின் அழகின் வர்ணனை. அத்தனையும் அற்புதம்.
    நன்றி துரை. உலகில் இது போலக் குடும்பமும்
    பாசமும் இன்னும் இருக்கிறது என்று உணரவே மிக மிக மகிழ்ச்சி. நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா...   வாங்க...   வாங்க...

      நீக்கு
    2. வாங்க வல்லி சகோதரி..

      வணக்கம்.. நலமா சகோதரி. ? நீங்கள் தெய்வீக சுற்றுலாவுக்கு சென்றிருப்பதாக தெரிந்து கொண்டேன். ஆண்டவனின் தரிசனங்கள் நல்லபடியாக சிறப்புடன் கிடைத்திருக்கும் என நம்புகிறேன். அனைத்தும் நலமாக நடந்திட நானும் இறைவனை பிரார்த்திக்கிறேன். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. வல்லியம்மா அவர்களது வருகை கண்டு மகிழ்ச்சி...

      காலையிலேயே பார்த்து விட்டேன்..

      உடனே பதில் சொல்ல முடியவில்லை...

      நல்லபடியாக திருக்கோயில் தரிசனம் செய்திருப்பீர்கள்....

      அதையொட்டி தங்களது பதிவுகள் வரக்கூடும்...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. மகிழ்ச்சி.. நன்றி...





      நீக்கு
  16. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

    கதை நன்றாக உள்ளது. படித்து வருகையில் வேறு மாதிரி நினைத்தேன். ஒரே குடும்பத்தில், அக்கா, தங்கை என பெண் எடுத்தால், சில பேர் பிரச்சனை வருமென நினைப்பதுண்டு. அதனால்தான் அண்ணி,கொழுந்தன் தான் அன்புடன் வளர்த்த பிள்ளையாயினும் தயங்குகிறாரோ என நினைத்தேன். ஆனால், முடிவில் கதை தலைப்பிறகேற்றவாறு கதையை நகர்த்தி, சம்பந்தம் பேச மகிழ்வுடன் ஒத்துக்கொண்ட நல்ல மனம் படைத்த அந்தப் பெரியவர்களை அடையாளம் காட்டி, சிறப்பாக முடித்திருக்கிறீர்கள். அவர்களுக்கு பிறந்த நன்மக்களுக்கு கண்டிப்பாக நல்லதை தவிர வேறு எதையும் நினைக்கும் மனம் இருக்காது. அந்த மாதிரி குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு, நிறைவாக வாழும் பாக்கியம் பெற்ற அக்காவும். தங்கையும் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள். வாழ்க மணமக்கள்.கதை நிறைவாக இருந்தது. ரசித்தேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகை கண்டு மகிழ்ச்சி...

      அக்கா தங்கையர் அண்ணன் தம்பியர்க்கு வாழ்க்கைப்பட்டு நல்லபடியாக வாழ்ந்த வரலாறு எல்லாம் நானறிவேன்..

      அன்றைய கிராமங்களில் இதெல்லாம் சகஜம்....

      இன்று ஒரே பிள்ளை என்றான பிறகு
      ஒன்றும் சொல்வதற்கில்லை...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  17. இன்று துரை சாரின் கதையாகத்தான் இருக்கும் என்று தோன்றியது. அவருடைய கதைகள் வெளியாகும் நாள் எ.பி.யை பொருத்தவரை பாசிட்டிவ் செய்திகளுக்கான மற்றொரு நாள். கதை மாந்தர்கள் எல்லோரும் நல்லவர்களாக இருப்பார்கள்.
    மதனிக்கும்,மைத்துனனுக்கும் இடையே நிலவிய அழகான பந்தம் போற்றுதலுக்குரியது. கெளரியின் ஊனம் நாசூக்காக சுட்டி காட்டப்பட்டுள்ளதையும் ரசிக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

      அண்ணி என்ற உறவும்
      அக்கேன்ற உறவும் மகத்தானவை....

      எனக்கு இந்த பந்தங்கள் வாய்க்க வில்லை..

      கதை மாந்த்த்களின் அந்நியோன்னியம் மனதை லேசாக ஆக்குகிறது..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...


      நீக்கு
    2. இதென்ன?...

      கூகிள் இப்படி செய்து வைத்திருக்கிறது!...

      // அக்கா என்ற உறவும்..///

      // மாந்தர்களின்.. ///

      என்று வாசித்துக் கொள்ளவும்...

      நீக்கு
  18. பதில்கள்
    1. அன்பின் குமார்...
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி...

      நீக்கு
  19. பதில்கள்
    1. சீர்வரிசை நிறைய வரும் என்று நினைத்தேன்...

      சுருக்கமாக வாழ்த்துரையுடன் முடித்து விட்டீர்களே ஜி!...

      ஆனாலும் தங்கள் வருகைக்கு
      மகிழ்ச்சி... நன்றி...

      நீக்கு
  20. அழகான கதை. அருமையான நடை. ஆசிரியர் சஸ்பென்ஸ் வைத்து அசத்தி விட்டார். ����

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகையும் அன்பின் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி...

      நீக்கு
  21. சரளமான நடையில் கதை நகர்ந்து செல்கிறது.

    பதிலளிநீக்கு
  22. சரளமான நடையில் கதை நகர்ந்து செல்கிறது.

    பதிலளிநீக்கு
  23. அண்ணியோட முந்தானையைப் பிடிச்சுப்போட்டு டக்கென அண்ணியின் தங்கையின் முந்தானையைப் பிடிச்சிட்டாரேகொளுந்தனார் ஹா ஹா ஹா.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இலக்கியச் செம்மல் அவர்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!