நான் சாதாரணமாக கேக், பிஸ்கெட் போன்ற பேக்கிங் ஐட்டங்கள் செய்ய முயல மாட்டேன். காரணம் அவைகளுக்கு மெஷர்மெண்ட் முக்கியம். நம் சமையலில் சரியாக வராத அல்வாவை, கேக்காக மாற்றி விடலாம். ஆனால் கேக் சொதப்பினால் ஒன்றும் செய்ய முடியாதே. ஆனால் இந்த புது வருடத்திற்காக நோ பேக்கிங் பிஸ்கட் கேக் செய்ததாக என் மகள் புகைப்படத்தோடு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள். அவளிடம் செய்முறை கேட்டு முயற்சி செய்து வெற்றியும் பெற்றேன். அதை உங்களோடு பகிர்ந்து கொள்ளாவிட்டால் எப்படி?
நோ பேக்கிங் பிஸ்கெட் கேக் செய்யத் தேவையான பொருள்கள்:
சாக்லேட் சிரப்
பிஸ்கெட்ஸ்
டாப்பிங்கிற்கு மில்க் சாக்லேட் அல்லது சாக்லேட் சிப்ஸ்.
முதலில் சாக்லேட் சிரப் செய்து கொள்ளலாம்: இதற்கு தேவை
பால் - 1 கப்
கோக்கோ பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 2 டீ ஸ்பூன்
வெண்ணை - 1 டீ ஸ்பூன்
ஒரு பாத்திரத்தில் கோக்கோ பவுடரையும் சர்க்கரையையும் போட்டு கட்டி இல்லாமல் நன்றாக கலந்து கொள்ளவும். பின்னர் அதில் பால் மற்றும் வெண்ணை சேர்த்து அடுப்பில் வைத்து அடி பிடிக்காமல் கிளறவும். அடுப்பு சிம்மில் எரியட்டும். அந்த கலவை கெட்டியான குழம்பு போல வந்ததும், சரியாகச் சொன்னால் கிளறும் ஸ்பூனில் ஒட்டிக் கொள்ள வேண்டும். உடனே இறக்கி கீழே வைத்து ஆற விடுங்கள்.
பின்னர் எந்த பிஸ்கெட்டுகளை சேர்க்க வேண்டுமோ அவைகளை சிறு துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும். சாக்லேட் சிரப் ஆறியதும் அதில் உடைத்த பிஸ்கெட் துண்டுகளை போட்டு கிளறி ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு பட்டர் பேப்பர் அல்லது அலுமினியம் ஃபாயிலில் சற்றுத் தடிமனாக ஊற்றி ஃபிரீசரில் ஒரு மணி நேரம் வைக்கவும். பட்டர் பேப்பரோ, அலுமினியம் ஃபாயிலோ இல்லாவிட்டால் இரண்டு இன்ச் உயரமுள்ள ஒரு பாத்திரத்தில் வெண்ணை அல்லது, நெய்யை தடவி பின்னர் அதில் பிஸ்கெட் கலவையை ஊற்றி வைக்கலாம்.
ஒரு மணி நேரம் ஆன பிறகு கேக்கின் மேலே ஊற்ற சாக்லேட் கோட் தயார் செய்ய வேண்டும். இதற்கு தேவையான பொருள்கள்
மில்க் சாக்லேட் ஒரு பார் அல்லதுசாக்லேட் சிப்ஸ்.
ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து, மில்க் சாக்லெட்டை ஒரு கப்பில் போட்டு அதை கொதிக்கும் நீரில் வைத்தால் சாக்லேட் உருகும். மைக்ரோ வேவ் அவனிலும் உருக்கலாம். அதை எடுத்து கேக்கின் மீது தடவி, பின்னர் அதன் மீது உங்கள் விருப்பம் போல் குட்டி அரிசி மிட்டாய்கள், வைட் சாக்லேட் என்று எதனால் வேண்டு- மானாலும் அலங்கரித்துக் கொள்ளலாம். மீண்டும் சற்று நேரம் பிரீசரில் வைத்து பின்னர் சாப்பிடலாம்.
பிஸ்கெட்டோடு பாதாம் பருப்பு, வால்நட் போன்றவைகளையும் பொடி செய்து சேர்க்கலாம். மேலே ஊற்றும் சாக்லேட் கோட் இல்லாமலும் சாப்பிடலாம். எந்த பிஸ்கெட் வேண்டுமானாலும் சேர்க்கலாம் என்றாலும், இனிப்பு குறைந்த பிஸ்கெட்டுகள் நன்றாக இருக்கும். அதே போல டார்க் சாக்லேட் கோட்டிங்கும் சுவையாக இருக்கும்.
அதே போல சாக்லேட் சிரப் செய்து கஷ்டப்பட வேண்டாம் என்று நினைப்பவர்கள் கடைகளில் கிடைக்கும் சாக்லேட் சிரப்புகளை வாங்கி பயன் படுத்திக் கொள்ளலாம்.
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து..
பதிலளிநீக்குநலம் வாழ்க...
அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
பதிலளிநீக்குஅழகான செய்முறை...
பதிலளிநீக்குபிஸ்கட் துண்டுகளைப் போலவே
Slice Bread துண்டுகளைச் சேர்த்தும் செய்யலாம்....
நன்றி.//Slice Bread துண்டுகளைச் சேர்த்தும் செய்யலாம்....//அப்படி செய்தால் மிகவும் சாஃப்ட் ஆக இருக்கும் இல்லையா?
நீக்குஆமாம்... மிகவும் மிருதுவாக இருக்கும்.. 2 அல்லது 3 அடுக்காக வைத்து Cream Topping - செய்வது தான் Black Forest எனப்படும் பிறந்தநாள் கேக் 🍰 🍰 🍰 வகைகள்....
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம். அட! இன்று என்னுடைய ரெசிபியா?
பதிலளிநீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் மனப்பூர்வமாக ஆண்டவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
இன்றைய திங்கள் பதிவை அலங்கரிப்பவர் சகோதரி பானுமதி வெங்கடேஷ்வரன் அவர்களா? பதிவை படித்து விட்டு வருகிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
//பதிவை படித்து விட்டு வருகிறேன்.// இன்னும் படிக்கவில்லையா?
நீக்குஇனிய காலை வணக்கம். சுவையான ,பேக் பண்ண அவசியமில்லாத கேக். . நல்ல கலவை. வண்ணமும் , சொன்ன முறையும் அருமை. நல் வாழ்த்துகள் பானுமா. நன்றி.
பதிலளிநீக்குநன்றி வல்லி அக்கா.
நீக்குநாங்கள் ரொம்பக காலமாக மைதா ,கோதுமை மாவும், பவுடர் சர்ககரையும் ,வெண்ணெயும் கலந்து
பதிலளிநீக்குஒரு பெரிய ருக்மணி குக்கரில். அடுக்குத் தட்டுகளில். செய்வோம். குக்கரில் அடியில் மணல் இருக்கும். பச்சைக் கற்பூரம் கலந்து. அருமையாக இருக்கும்.:)
வல்லி மாமி, எனக்கும் அதுதான் நினைவிற்கு வருகின்றது. ஏனெனில் அம்மா செய்து கொடுப்பார்கள். சிரமம் இல்லாமல் நன்றாக உண்டு மகிழ்வோம். ஆனால், இந்த ரெசிப்பி வித்தியாசமாக இக்கால குழந்தைகளுக்கு பிடிக்குமாறு இருக்கின்றது. பாராட்டுக்கள் பானு.
நீக்குவல்லி அக்கா சொன்ன முறையில் எங்கள் அம்மா பிஸ்கெட் செய்திருக்கிறாள்.
நீக்குநன்றி ரமா.
நீக்குநான் நம்ம ப்ரெஸ்டிஜ் குக்கரிலேயே மணலைப் போட்டு இம்மாதிரி பிஸ்கட்டுகள், முட்டை போடாத கேக் வகைகள் செய்திருக்கேன். அதிலே வர மாதிரி எனக்கு அவனில் வந்ததில்லை என்பதையும் சொல்லணும். அவன் வாங்கினப்புறமாக் கொஞ்சம் சொதப்பலாக இருக்கும். அதையே குக்கரில் வைத்தால் பிரமாதம்னு சொல்லும்படி வரும்.
நீக்குநல்ல குறிப்பு. பார்க்கவும் நன்றாகவே வந்திருக்கிறது.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குஅருமை... ஆர்வமும் பொறுமையும் தேவை...
பதிலளிநீக்குநன்றி டி.டி. //ஆர்வமும் பொறுமையும் தேவை...// சமையல் குறிப்புகளை படித்தால் அப்படி தோன்றும்.கணிணி செயல்பாடு போலத்தான், படிக்கும் பொழுது மலைப்பாக இருக்கும். செயல்முறை இவ்வளவுதானா? என்றுதான் தோன்றும்.
நீக்குகேக் மற்றும் குக்கிகீற்கும் எனக்கும் ரொம்ப தூரம்....அதனால் நான் அதன் பக்கமே போகமாட்டேன்...
பதிலளிநீக்குஹா ஹா, நானும் அப்படித்தான். இது கொஞ்சம் ஈசியாகத்தான் இருக்கிறது.நன்றி.
நீக்குஅருமை..இதுபோன்ற அதிக சிரத்தையுடன் செய்யவேண்டியவைகளை நாங்கள் முயற்சிப்பதே இல்லை..படங்களுடன் தங்கள் பதிவு தெம்பூட்டுகிறது...முயற்சிக்கத் தீர்மானித்துள்ளோம்..வாழ்த்துகளுடன்..
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குபிஸ்கெட் கேக் மிக அருமையாக இருக்கிறது.
பதிலளிநீக்குசெய்முறை படங்களுடன் அருமை.
நாங்கள் இதை சொக்லட் புடிங் என்போம்.
பதிலளிநீக்குஅப்படியா? வருகைக்கு நன்றி.
நீக்குநன்றாகச் செய்திருக்கிறீங்க. இப்படித்தான் நானும் செய்வேன், பிஸ்கட் க்குப் பதில் றைஸ் சீரியல் போட்டுக் கிண்டி, உடனேயே கப் கேக் பேப்பர்களில் போட்டு ஆறவிட்டதும் கப் கேக்காக கட்டியாகிடும்.
பதிலளிநீக்குஇதற்கு குக்கிங் சொக்கலேட் என கடையில் கிடைக்கிறது, கொக்கோவுக்குப் பதில் அதைத்தான் பாவிக்க ஈசி.
பின்னூட்டத்தைவிட அதிராவின் பட்டம் என்னைத் தலை சுத்த வைக்குது.
நீக்குஎன்ன பிஞ்சைபோச்சுன்னு தெரியலையே. போட்டுக்கொள்ளும் செருப்பு பிஞ்சதை எல்லாம் பட்டப் பேரா வச்சுக்குவாங்களா? கலிகாலம்
அதிரா நீங்க பானுமதியம்மா செய்வது மாதிரிதான் செய்வீங்க ஆனால் ரிசல்ட் அவங்க செஞ்ச மாதிரி உங்களுக்கு வராதே....
நீக்குஅருமையான குறிப்பு.
பதிலளிநீக்குஇதை வேறு விதமாகச் செய்ததுண்டு. நீங்கள் சொல்லியிருப்பது போல கோக்கோ கலவை தயார் செய்து கொண்டு மில்க் பிக்கிஸ் அல்லது மேரி பிஸ்கட் நான்கு நான்காக எடுத்துக் கொண்டு நடுநடுவே இந்தக் கலவையை நிரப்பி ஒரு டின்னில் பட்டர் பேப்பர் மேல் பரப்பி ஃப்ரீஸரில் வைத்து எடுத்தாலும் சுவையாக இருக்கும். சாக்லேட் கோட்டிங் கொடுத்ததில்லை. அது கண்டிப்பாகக் கூடுதல் சுவை அளிக்கும்.
ஆமாம், அதில் மாரி பிஸ்கெட்டை முழுசாக போட வேண்டும். நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குராமலக்ஷ்மி சொல்றாப்போல் நான் மாரி பிஸ்கட்டுகளில் செய்திருக்கேன். நாலைந்து நாட்கள் முன்னர்தான் நினைத்துக்கொண்டேன். இதெல்லாம் செய்து எத்தனை வருஷங்கள் ஆகின்றன என்று. கஸ்டர்ட் செய்து கூட பிஸ்கட்டுகளில் மாறி மாறிச் சாக்லேட் சிரப்போடு சேர்த்து ஊற்றி மேலேயும் ஊற்றி ப்ரீசரில் வைத்துச் சாப்பிட்டது உண்டு. ஒண்ணும் இல்லைனா கொஞ்சம் வெண்ணெய் இருந்தால் போதும். சாக்லேட்டை உருக்கி வெண்ணெயோடு கலந்து கொண்டு பிஸ்கட்டுகளில் தடவி ஒன்றின் மேல் ஒன்றாக வைத்துச் சாப்பிடலாம். ப்ரீசரிலும் வைத்துச் சாப்பிடலாம். சாப்பிட மனம், வயிறு இரண்டும் வேண்டும். பண்ணுவதற்கும் மனசு பதிந்து செய்ய வேண்டும்.
பதிலளிநீக்குவாங்க கீதா அக்கா. ஜெட்லாக் போச்சா? நீங்கள் சொல்லியிருப்பவை குழந்தைகள் விரும்புவார்கள். நன்றி.
பதிலளிநீக்குவணக்கம் பானுமதி சகோதரி
பதிலளிநீக்குதங்கள் செய்முறையான பிஸ்கெட் கேக் படங்களுடன் நன்றாக உள்ளது. படங்கள் கண்களை கவர்கிறது. எனக்கு உண்மையிலேயே இந்த மாதிரியெல்லாம் செய்து பழக்கமில்லை. சமையலில் மிகவும் கர்நாடக பாணியில் சுற்றுபவள், (அதானால்தான் இங்கு வந்திருக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஹா. ஹா. ஹா.)
முதலில் பிஸ்கெட், சாக்லெட் சாப்பிடும் சிறு வயதில் அவ்வளவாக அதை சாப்பிடாத ஆபூர்வ குழந்தை நான்.
அதன்பின் என் குழந்தைகளுடன் பிஸ்கெட் மட்டும் சாப்பிட்டுள்ளேன். சாக்லேட் வகைகள் ஐஸ்கிரீம்கள் அவர்களுக்கும் ஒவ்வாமை வந்து விடுமோ என்ற எண்ணத்தில் வீட்டில் வாங்குவதே இல்லை.
இப்போது வீட்டிலிருக்கும் குழந்தைகளுக்காக எல்லாமே வாங்க வேண்டியிருப்பதால், இப்போதும் பிஸ்கெட்களை மட்டுமே நாங்கள் எடுத்துக் கொள்கிறோம். இப்போது சாக்லேட், ஐஸ்கீரீம் போன்றவை எங்களை ஒவ்வாமை என்று கூறி ஒதுக்கி விட்டன.அது வேறு விஷயம்..
உங்கள் தயாரிப்பான பிஸ்கெட் கேக் செய்யும் ஆவலை தூண்டுகிறது. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும். செய்து பார்க்கிறேன். தங்கள் பகிர்வுக்கு ரொம்ப நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி.
நீக்குசூப்பரா இருக்கு....ஆனா இந்த ரெசிபி பல முறை பார்த்து இருந்தாலும் முயற்சித்து இல்ல மா...
பதிலளிநீக்குவீட்டிலேயே cake செய்து விடுவதால்...இது வரை இதை செய்து பார்க்கும் எண்ணம் வரவில்லை....
தங்களின் குறிப்பும் , படங்களும் மிக அருமை...
நன்றி.
நீக்குபடங்கள் ஆசையைத் தூண்டுகிறது.
பதிலளிநீக்குஅந்த வகையில் வெற்றி என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். நன்றி.
நீக்கு//சாக்லேட் சிரப் செய்து கஷ்டப்பட வேண்டாம் என்று நினைப்பவர்கள் கடைகளில் கிடைக்கும் சாக்லேட் சிரப்புகளை வாங்கி பயன் படுத்திக் கொள்ளலாம். // - என்னடா இது.. ஒரு கேக் செய்ய இவ்வளவு மெனக்கிடணுமா.. ஒருவேளை சொதப்பினால் என்ன சொல்லி ஏமாற்றி, கணவர், பசங்க தலைல கட்டலாம் என யோசிக்கணுமே என்று கவலைப்படுபவர்கள் பேசாமல் நல்ல பேக்கரி பக்கம் ஒதுங்கி கேக்கை விலைகொடுத்து வாங்கிக்்கொள்ளலாம். இல்லை.. கீதா ரங்கன் போன்ற கேக் செய்யத் தெரிந்தவர்களை வீட்டிற்கு அழைத்தால் அவங்களே கேக் செய்து வீட்டிற்குக் கொண்டுவரும் சாத்தியமும் உண்டு
பதிலளிநீக்கு//பேசாமல் நல்ல பேக்கரி பக்கம் ஒதுங்கி கேக்கை விலைகொடுத்து வாங்கிக்்கொள்ளலாம்.//ஹாஹா! நானப்படித்தான் செய்வேன். இதில் பேக் பண்ணும் தொல்லைகள் இல்லை. அதனால்தான் முயற்சித்தேன். நன்றி.
நீக்குஆர்வத்தோடு நீங்களே செய்துபார்த்து படங்களுடன் பகிர்ந்துகொண்டதைப் பாராட்டறேன்.
பதிலளிநீக்குஉப்பு பிஸ்கெட் அல்லது டீ பிஸ்கெட் இன்னும் நல்லா இருக்கும்னு தோணுது
//உப்பு பிஸ்கெட் அல்லது டீ பிஸ்கெட் இன்னும் நல்லா இருக்கும்னு தோணுது// சரியாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள். நான் ஜிஞ்சர் பிஸ்கெட் பயன்படுத்தினேன். என் மகனுக்கு அது மிகவும் பிடித்திருந்தது.
நீக்கு