வெள்ளி, 13 மார்ச், 2020

வெள்ளி வீடியோ : வரும் காலம் இன்பம் என்று நிகழ்காலம் கூறும் கண்ணே


இன்றைய நேயர் விருப்பமும் சென்ற வாரம் போலவே என் விருப்பமுமாக அமைந்து விடுகிறது!



இன்று பானு அக்காவின் விருப்பத்தில் 'அக்னி சாட்சி' படத்தில் எஸ் பி பி பாடிய - நடுவில் சரிதா கொஞ்சம் வசனம் பேசி குரல் கொடுக்கும் - "கனாக் காணும் கண்கள் மெல்ல"



என் லிஸ்ட்டில் நீண்ட நாட்களாய் இருக்கும் பாடல்.   முன்னரே ஒருமுறை பகிர்ந்திருக்கிறேனா என்றும் சந்தேகம்!

ஸ்ரீபதி பண்டிதராத்யுல பாலசுப்ரமணியம்!  இதுதான் எஸ் பி பாலசுப்ரமணியத்தின் முழுப்பெயர்.



1982 இல் வெளியான இந்தப் படத்தை இயக்கி இருப்பவர் கே பாலச்சந்தர்.  வாலியின் பாடல்களுக்கு இசை எம் எஸ் விஸ்வநாதன்.    சரிதா மனச்சிதைவு நோய்க்கு ஆளான நாயகியாய் நடித்திருப்பார்.  நாயகனாய் சிவகுமார்.



இந்தப் பாடல் காட்சியைப் பார்க்கும்போது எனக்கு ஹிந்திப் படக் காட்சியொன்று நினைவுக்கு வரும்.  'கர்' திரைப்படத்தில் அருமையான ஒரு கிஷோர்குமார் பாடல் ஒன்று வரும்.  "ஃபிர்வஹி ராத் ஹை" 





இந்தக் காட்சியில் ரேகாவின் (ஹிந்தி) நடிப்பு கொஞ்சம் இதேபோல வரும்.  ஆனால் அது வேறு கதை அமைப்பு கொண்ட படம்.



"கனாக்காணும் கண்கள் மெல்ல.." பாடல் காட்சியில் ஆங்காங்கே பாலச்சந்தர் டச் தெரியும்!

கனாக்காணும் கண்கள் மெல்ல 
உறங்காதோ பாடல் சொல்ல 
நிலாக்கால மேகம் எல்லாம் 
உலாப்போகும்நேரம் கண்ணே 
உலாப்போகும் நேரம் கண்ணே 

குமரி உருவம் குழந்தை உள்ளம் 
ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ 
தலைவன் மடியில் மகளின் வடிவில் 
தூங்கும் சேயோ 

நொடியில் நாள்தோறும் நிறம் மாறும் தேவி 
விடைதான் கிடைக்காமல் தடுமாறும் கேள்வி 
விளக்கு ஏற்றி வைத்தால்கூட 
நிழல்போல தோன்றும் நிஜமே 
நிழல்போல தோன்றும் நிஜமே 

நான்...    
உன் நிஜத்தை நேசிக்கிறேன் 
உன் நிழலையோ 
பூஜிக்கிறேன் 
அதனால்தான் 
உன் நிழல் விழுந்த 
நிலத்தின் மண்ணைக் கூட 
என் நெற்றியில் 
நீறுபோல் 
திருநீறுபோல் 
பூசிக்கொள்கிறேன் 


புதிய கவிதை புனையும் குயிலே 
நெஞ்சில் உண்டான காயம் என்ன 
நினைவு அலைகள் நெருப்பில் குளிக்கும் 
மாயம் என்ன 


கிழக்கு வெளுக்காமல் இருக்காது வானம் 
விடியும் நாள் பார்த்து இருப்பேனே நானும் 
வரும் காலம் இன்பம் என்று 
நிகழ்காலம் கூறும் கண்ணே 
நிகழ்காலம் கூறும் கண்ணே 



53 கருத்துகள்:

  1. அன்பின் ஸ்ரீராம்.
    இனிய காலை வணக்கம்.
    இரண்டுமே அருமையான பாடல்கள்.
    சிவகுமாரின் பொறுமையும், சரிதாவின் தவிப்பும்
    பரிதாபமாகவும் , அதே சமயம் அனுபவிக்கும்படியும் இருக்கும்.
    பாலு சாரின் குரல் மென்மை நம்மை எங்கோ
    இழுத்துப் போய்விடும்.
    உங்களுக்கும் பானுமாவுக்கும் மன்ம் நிறை நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா...   காலை வணக்கம்.  ஆம், இரண்டுமே மிக அருமையான பாடல்கள்.

      நீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அயனாவரம் சயானி திரையரங்கில் பார்த்த படங்களுள் இதுவும் ஒன்று என நினைக்கிறேன். பாலசந்தர் படங்களெல்லாம் அங்கே தான் போடுவாங்க!பாடலை அடிக்கடி கேட்டிருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா... வணக்கம். நன்றி. சயானி பெயர் மட்டும் கேள்விப் பட்டிருக்கிறேன்.

      நீக்கு
  4. சென்னையில் அம்பத்தூரில் இருக்கும்போது எழுபதுகளில் 2 டூரிங் திரையரங்குகள். இரவு எட்டு மணிக்காட்சியில் இரண்டு படங்கள். அதிர்ஷ்டம் இருந்தால் இரு நல்ல தமிழ்ப் படங்கள். இல்லை எனில் ஒரு தமிழ்ப்படம், ஒரு ஹிந்திப் படம். அப்போ தியேட்டர் என்றால் வில்லிவாக்கமோ, ஆவடியோ தான் போகணும். பெரிய வேலை. :))))) அதனாலேயே அதிகம் திரைப்படங்கள் பார்க்க மனசு வராது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க அம்பத்தூர் வீட்டை வித்திட்டீங்களோ கீசாக்கா.... ஏன் அப்படி செய்தீங்க... எனக்கே கவலையாக இருக்கு... காணி வாங்கிக் கட்டிய வீடெல்லோ..

      நீக்கு
    2. அது வி(த்து)ட்டு கனகாலமாச்சே அதிரா....

      நீக்கு
    3. அந்த வீட்டை விட்டு வந்ததுக்கும் பின்னால் விற்றதுக்கும் மனம் வருந்தக்கூடிய அளவுக்குக் காரணங்கள் பிஞ்சு! இப்போ எதுக்கு அவை எல்லாம்? இங்கே எல்லாமும் நன்றாகவே இருக்கிறது. என்ன தோட்டம்! அதான் முக்கியமா வயிற்றையே என்னமோ செய்யும்!

      நீக்கு
    4. //எனக்கே கவலையாக இருக்கு...// - அடடா... இது என்ன வேண்டாத வேலை அதிராவுக்கு. இப்போ கீசா மேடம் 5 பத்திகள் எழுதக்கூடிய அளவுக்கு விஷயம் எழுதப்போறார்.

      On a serious note, யாருக்குமே சொந்த வீட்டை (அதாவது தோட்டம், தரையுடன் கூடியது) விட்டுவிட்டு அடுக்கு மாடிக் குடியிருப்பை ரொம்பவே விரும்ப மாட்டார்கள். நிலத்தில் கட்டிய வீடு என்பது தனி. அதனால் என்ன.. இப்போ கீசா மேடம் சூப்பரான வீட்டில் இருக்கிறார். நல்ல ஜிலுஜிலு காத்து, வெளிச்சம்... குறை ஒன்றும் இல்லை. அடிக்கடி கோவில் தரிசனம் (இப்போவெல்லாம் ஆண்டாள் படங்கள் போடுவதில்லை ஹா ஹா)

      நீக்கு
  5. இப்போ எல்லாம் யாரும் சினிமா தியேட்டர் பக்கம் போறதில்லைனு நினைக்கறேன். நீங்க சொல்லும் இரண்டு காட்சிகள் வைகுண்ட ஏகாதசி, சிவராத்திரி ஸ்பெஷலோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதைய நிலைமை தெரியாது ஸ்ரீராம். அது வைகுண்ட ஏகாதசி, சிவராத்திரிச் சிறப்பெல்லாம் இல்லை. தினமுமே இரவுக்காட்சியில் இரண்டு படம். ஆனால் ஒரு படம் பார்ப்பதற்கான பணமே வாங்குவார்கள். தரை, பெஞ்ச், நாற்காலி, சோபா என இருக்கும்.

      நீக்கு
  6. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன் !

    பதிலளிநீக்கு
  7. சரிதாவின் கண்கள் பேசும், பேச வைத்து இருப்பார் பாலசந்தர்.

    எஸ் பி பாலசுப்ரமணியம் இந்த பாடலில் அருமையான ஆதரவை, ஆறுதலை வெளிபடுத்தி இருப்பார்.. அதை அவர் குரலில் கொண்டு வந்து இருப்பார் எம் எஸ் விஸ்வநாதன்.

    பாடல் எழுதிய வாலியும் அருமையாக எழுதி இருக்கார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரிதாவை அவ்வளவு திறமையான நடிகையாக்கியதில் கேபியின் பங்கு அதிகம்.

      எஸ் பி பி குரலுக்குக் கேட்க வேண்டுமா?   வாலியின் வரிகளுக்குதான் குறை உண்டா?

      நன்றி அக்கா.

      நீக்கு
    2. //சரிதாவை அவ்வளவு திறமையான நடிகையாக்கியதில் கேபியின் பங்கு அதிகம்.// தவறாக சொல்கிறீர்களே ஶ்ரீராம். சரிதாவின் திறமையை புரிந்து கொண்டு அதை சரியாக பயன் படுத்தியவர்களில் கொண்டவர்களில் முதன்மையினவர் கே.பி.அவர்கள்.

      நீக்கு
    3. சரிதா என்றதும் எனக்கு நினைவுக்கு வருவது......... கைதியின் டைரி.... ஆட்டோசங்கர் எழுதியது

      நீக்கு
    4. இல்லை பானு அக்கா...    கேபிபோன்ற இயக்குனர்களிடம் ஆர்டிஸ்டுகள் பட்டை தீட்டப்படுவார்கள் என்பதே என் கருத்து.  அதுவரை பார்த்த சீதாவுக்கும், உன்னால்முடியும் தம்பி சீதாவுக்கும் சட்டென ஒரு வித்தியாசம் தெரியும்.  சரிதாவும் விதி விலக்கல்ல...   மரோசரித்ரா, தப்புத்தாளங்கள், கல்யாண அகதிகள் போன்ற படங்களில் கேபி இயக்கத்தில் அவர் நடித்திருக்கிறார்.

      நீக்கு
    5. நீங்கள் சொன்னதும் எனக்கும் ஞாபகம் வருகிறது நெல்லை.  அந்தப் புத்தகம் நானும் படித்தேன்!

      நீக்கு
  8. அருமையான பாடல் ஜி பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. நான் பாலசந்தர் ரசிகன். அகர முதல எழுத்தெல்லாம்...என்று தொடங்கி இறுதி வரை இருக்கையில் அமர்ந்திருப்பேன். அவர் படத்தின் ஒவ்வொரு பிரேமையும் ரசித்துப் பார்ப்பேன். அவ்வகையில் என் மனதில் நின்ற படங்களில் ஒன்று அக்னி சாட்சி. சரிதாவா சிவக்குமாரா என்று போட்டி போட்டுக் கொண்டு இருவரும் சிறப்பாக நடித்திருப்பர். அனைத்து கதாபாத்திரங்களும் அருமையாக இருக்கும். தன் அன்பை வெளிப்படுத்த, கணவன் மனைவியின் படத்தினை பெரிது பெரிதாக இல்லத்தில் வைத்திருக்கும் அழகு, நம்மை வியப்பில் ஆழ்த்தும். ஓர் அறையின் சுவர் முழுக்க உள்ள சரிதாவின் மேலே பார்த்த நிலையிலுள்ள புகைப்படம் மிகவும் அழகாக இருக்கும். தெளிந்த சித்தம் தேடுகிறது பிராயச்சித்தம் என்ற சொற்றொடரை ரசித்து ரசித்துப் படித்துள்ளேன். சரிதாவிற்கு இணை சரிதாவே தான். அருமையான படத்தை நினைவுகூர்ந்தமைக்கு நன்றி. பாலசந்தர் முதலாம் நினைவு நாளில் நான் எழுதிய கட்டுரை தி இந்து நாளிதழில் வெளிவந்தபோது நான் அடைந்த மகிழ்ச்சி எல்லையற்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே...   கேபி உங்களை பெரிய பின்னூட்டமாக எழுத வைத்திருக்கிறாரே...   உங்கள் ரசனையை ரசித்தேன் முனைவர் ஜம்புலிங்கம் ஸார்.

      நீக்கு
  10. யாவருக்கும் இனிய காலை வணக்கங்கள். நான் இப்படத்தை இன்று வரை பார்க்கவில்லை. ஆனால், இந்த பாடலை படம் எடுத்த விதம் மிக அறுமை. அதிலும் சிவக்குமாரும் சரிதாவும் என்னமாக நடித்திருக்கின்றார்கள். ஒரு பேரடியான மன நோயை என்ன அழகாக ஒரு பீதி வராமல் காண்பித்திருக்கின்றார்கள் !!!!! அந்த காலத்து படங்கள் நம்மிடத்தில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கின்றன என்றால் அது முற்றிலும் உண்மை. பகிர்ந்ததற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வாங்க... வாங்க...   ரசித்ததற்கு நன்றி, நன்றி.  .

      நீக்கு
  11. ஆஆ கொஞ்சக்காலம் முன்புதான் இப்படம் பார்த்த இடத்தில் இப்பாடல் பிடிச்சிருந்தது, நோட் பண்ணி வச்சால், என் பக்கம் போடலாம் என நினைச்சு மறந்திட்டேன்... பானுமதி அக்கா நினைவுபடுத்திட்டா... நல்ல பாட்டு...

    இப்போ ஶ்ரீராம் எஸ்கேப் ஆவதற்கு சாட்டுத் தேடித் திரிகிறார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)... இப்போ புரியுதோ வீட்டில் கொஞ்சம் பிஸி எனில் புளொக் பக்கம் வருவது எவ்ளோஓஒ கஸ்டம்ம்ம்ம்:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா...   நான் கூடத்தான் சுத்துது சுத்துது பாட்டு லிஸ்ட்டில் வைத்திருந்தேன்.  ஏதாவது சொன்னேனா?!!!!  இது மிக,  மிக மிக, மிக மிக மிக அருமையான பாடல்.

      நீக்கு
  12. ஆஹா!நான் விரும்பி கேட்டிருந்த பாடல்!நன்றி. ஹிந்தி பாடல் கேட்ட நினைவில்லை. அதையும் பகிர்ந்திருக்கலாம். சிவகுமார் இந்தப் படத்தில் அற்புதமாக நடித்திருப்பார். முடிவில் சோகத்தை வலிந்து திணித்தது போல இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிந்திப்பாடலை என் விருப்பமாகப் பகிர்ந்திருக்கலாமோ...    யாரும் கேட்க மாட்டார்களோ என்ற சம்சயம்!

      நீக்கு
  13. இந்த பாடல் கேட்டதில்லை . படமும் பார்ததில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாடல் நன்றாயிருந்ததா?   படம் நானும் பார்க்கவில்லை சகோதரி மாதேவி.

      நீக்கு
  14. அருமையான வரிகள். இந்த படத்தை பார்த்த ஞாபகம் எனக்கு இல்லை. மறந்துவிட்டேனோ தெரியாது.....

    பதிலளிநீக்கு
  15. தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 13 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    தற்போது, தங்களது வெள்ளி வீடியோ : வரும் காலம் இன்பம் என்று நிகழ்காலம் கூறும் கண்ணே பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    பதிலளிநீக்கு
  16. https://engalblog.blogspot.com/2018/12/181207.html

    no doubt :)

    //முன்னரே ஒருமுறை பகிர்ந்திருக்கிறேனா என்றும் சந்தேகம்!//

    2018 டிசம்பர் 7 பகிர்ந்ந்திருக்கிங்க :) எல்லாரும் கும்மி அடிச்சோம் பஞ்சு பேச்சாளர் :) வருங்காலம் நிகழ்கலாம்னுலாம் டவுட் கேட்டாங்க :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹி...    மறந்துட்டேன்!    இரண்டாம்முறை கேட்டு விட்டோம்.   வேறு வகையில் கும்மியும் அடிச்சாச்சு!

      நீக்கு
  17. கனாக் காணும் கண்கள் மெல்ல .. எனக்கும் பிடித்த பாடல்.

    பதிலளிநீக்கு
  18. இனிமையான பாடல். காலையிலேயே பின்னூட்டம் எழுத விட்டுப்போய்விட்டது.

    அப்போதெல்லாம் வருடத்துக்கு ஒரு வெள்ளிவிழாப் படமாவது சிவகுமார் கொடுப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிவகுமாரா?   ஆமாம்.   அம்பிகா,ராதா எல்லோருடனும் நடித்திருக்கிறார்.  ரத்தி அக்னிஹோத்ரியுடனும் நடித்திருக்கிறார்!

      நீக்கு
  19. நல்லதொரு பாடல்.

    இணைப்பு வேலை செய்யவில்லை - பாடலை யூவில் தான் கேட்க வேண்டும்! :) கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!