செவ்வாய், 24 மார்ச், 2020

கேட்டு வாங்கிப் போடும் கதை -  வாழ்க்கை முன்னோடிகள் - ரமா ஸ்ரீநிவாசன் 

வாழ்க்கை முன்னோடிகள்
ரமா ஸ்ரீனிவாசன் 
சுமார் காலை 9 மணி இருக்கும். சூரியனின் ஒளிக்கதிர்கள்
விளையாட்டாக முருகனின் வீட்டிற்குள் தன் கழுத்தை நீட்டி எட்டிப்
பார்த்தது.   ஆயினும் முருகன் படுக்கையை விட்டு நகரவில்லை.
“அட, எழுந்திரப்பா” என்று குரல் கொடுத்தார் அவன் அப்பா.
போர்வையின் அடியிலிருந்து தலையை மட்டும் வெளியே நீட்டி தான்
இன்னும் 5 நிமிடங்களில் எழுந்து விடுவதாக கூறிவிட்டு மீண்டும் தூங்க
முற்பட்டான் முருகன்.

“பாவம் அந்த பையன். இன்னும் சிறிது நேரம் தூங்கட்டும்.
இப்போதுதான் பரீட்க்ஷை முடிந்திருக்கறது” என்று வக்காலத்து
வாங்கினாள் அவன் அம்மா.   இதை கேட்டு முருகன் இன்னும் கொஞ்சம்
தாராளமாக தூங்க முற்பட்டான்.

“காலையும் மாலையுன் அவனுக்கு ஒன்றே.  எப்போதும் படுத்துக்
கொண்டும் சோம்பிக் கொண்டும் இருந்தால், அவன் வெறும் சோம்பேறி
ஆகி விடுவான். இதை நீ ஊக்குவித்தால், அவன் எப்படி ஒழுக்கத்தை
கற்றுக் கொள்வான்?  அவனுடைய இரு பொழுது போக்குகள் தூக்கமும்
டெலிவிஷனும்தான்” என்று சத்தம் போட்டுவிட்டு வேலைக்கு சென்றார்
அவன் அப்பா.

அன்று மாலை முருகனின் தாத்தா அவன் வீட்டிற்கு வந்திருந்தார்.
முருகன் எப்போதும் தூங்கி கொண்டும் வெட்டி பொழுது போக்கி
கொண்டும் இருப்பதைப் பார்த்து வருந்தினார்.

தன் மகளிடம் சென்று “முருகன் ஏன் எப்போதும் தூங்கி
கொண்டிருக்கிறான் ? அவனை முதலில் எழுப்பு.  ஒன்று சிறிது
படிக்கட்டும். அல்லது உடற்பயிற்சி செய்யட்டும்” என்று கூறினார். அவர்
மகளோ “அப்பா, அவன் சிறிது நாட்கள் முன்புதான் பரீட்ஷைகளை
முடித்தான். இப்போதுதான் ஒய்வு எடுக்கிறான். அவனைக் கொஞ்சம்
விடுங்கள் அப்பா” என்றாள்.

“நீ பேசுவது அவனுக்கு உதவியாக இருக்காது மகளே. காலம் பொன்
போன்றது என்பது பழமொழி. அதை எவ்வளவுக்கு எவ்வளவு
உபயோகிக்கிறோமோ அது அவ்வளவுக்கு அவ்வளவு நமக்கு
ஒத்துழைக்கும். ஆனால், என்று நாம் அதை வீணாக்குகிறோமோ,
அப்போதே நாம் நம் அழிவிற்கு தயாராகிறோம். உலகில் எத்தனை பேர்
நேரமின்மையால் அவதியுறுகிறார்கள் தெரியுமா?   இந்த வயதில் உன் மகன்
நேரத்தை வீணடிப்பதை நீ அனுமதித்தால், அது அவனை நீயே படு
குழியில் தள்ளுவதற்கு ஈடாகும்.  அவனால் அந்தக் குழியில் இருந்து
மேலே ஏறி வரவே முடியாது” என்று கூறினார்.

முருகனின் அப்பா இந்த உரையாடலின்போது உள்ளே நுழைந்தவர்
“100% சரியாக சொன்னீர்கள் அப்பா.  அவன் கஷ்டப்பட்டு படித்து
பரீட்ஷைகளை எழுதினான் என்பது உண்மை.  ஆனால், இப்போது அவன்
வெட்டிப் பொழுது போக்குவது அவனுக்கு நல்லதல்ல. பக்கத்து வீட்டு
செந்திலைப் பாருங்கள். காலையில் யோகா, நாள் முழுக்க பள்ளி,
மாலையில் நடன வகுப்புகள் மற்றும் டென்னிஸ் கோச்சிங். இவ்வாறு
தன் நாளை அவனே புத்திசாலித்தனமாக திட்டமிட்டிருக்கின்றான். தான்
விரும்பி இவைகளைத் தேர்ந்தெடுத்து கொண்டதால், அவை அவனுக்கு
சுமையாக தெரியவில்லை. இன்னும் சொல்ல போனால், இவை யாவும்
அவனின் வெற்றிக் கதையின் படிக்கற்களாக அமையும்.  அது மட்டும்
அல்ல,  இவை யாவும் அவனை ஒரு ஆல் ரவுண்டர் ஆக்கும் என்பதில்
எந்த ஐயமும் இல்லை” என்று முடித்தார்.

முருகனின் தாத்தா உடனே “மிக உண்மையான கருத்து. விடுமுறை
நாட்கள் தூங்குவதற்கும் வெட்டி பொழுது போக்குவதற்கும் அல்ல.
அவைகளை உபயோகமாக பயன்படுத்தினால், நீங்கள் இன்னும் மேலே ஏறி
சிகரத்தை தொட்டு விடலாம். வயதில் மூத்தவர்களான நாம்தான் இந்த
அரிய உண்மையை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். காலையில்
எழுதல், நேரத்தை செவ்வனே உபயோகித்தல் போன்ற நல்ல
பழக்கங்களை நாம்தான் அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். நல்ல
பழக்கங்கள் நல்ல எண்ணங்களாக மாறும். நல்ல எண்ணங்கள் நல்ல
செயல்களுக்கு விதையாக அமையும்.  நல்ல புத்தகங்களை விடுமுறை
நாட்களில் படித்தால், நம் நுண்ணறிவு வளர்வதற்கு ஏதுவாக இருக்கும்”
என்று கூறி நிறுத்தினார்.

“நல்லொழுக்கம் நல்ல பழக்கமாக மாறி, நல்ல மனிதனை
உருவாக்கும். காலை உடற்பயிற்சி வியாதியை விரட்டும். இதனால் நாம்
விடியலில் எழுவோம். நமக்கு ஒரு நல்ல வாழ்க்கை கல்வியை தரும்
இந்த கணக்கு போட்டு வாழும் வாழ்க்கை.  இந்த நல்ல வாழ்க்கை கல்வி நமக்கு ஒரு மன திருப்தியை தரும்.  நாம் நிமிர்ந்த நெஞ்சுடன் எதிர்காலத்தை முன்னோக்கலாம். என்றுமே சோம்பியும் இல்லை, சும்மாவும் இல்லை என்ற மிதப்பில் நடக்கலாம்.  நாம் என்றுமே, ஒர் தேனியை போல சுடியாகவும், ஒர் எறும்பைப் போல விடா முயற்சியுடனும் முன்னேற வேண்டும்.  என் பேரன்
முருகனுக்கு இவை யாவும் புரிய வேண்டும் என்பதே என் விருப்பம்”.
என்று கூறி நிறுத்தினார்.

அத்தனை சம்பாஷணைகளையும் உறங்குவது போல் பாசாங்கு
செய்து கொண்டு கேட்டுக் கொண்டிருந்த முருகன், தன் தவறையும்
முட்டாள்தனத்தையும் உணர்ந்தான்.  படுக்கையிலிருந்து பாய்ந்து வெளியே
குதித்தவன், “அப்பா, தாத்தா, என்னை மன்னித்து விடுங்கள். இந்த விளங்காத தூக்கத்தையும் வெட்டி டீ.வி பார்த்து பொழுதை கழிப்பதையும் இந்த நிமிடம் முதல் கை கழுவி விட்டேன். என் நண்பன் செந்தில் போல் நானும் பொழுதை உபயோகமாக கழிக்க கற்று கொள்ள போகின்றேன்.  நான் அருகில் உள்ள நூலகத்தில் உறுப்பினராகி நல்ல புத்தகங்களை வாசித்து என் பொழுதை பயனுள்ளதாக மாற்ற போகிறேன். மேலும் என் ஓவியத் திறமைகளை வெளிக்கொணர, நான் சிறிது தொலைவில் இருக்கும் ஒவியப் பள்ளியிலும் சேர்ந்து பயனடைகிறேன்” என்று ஆணித்தரமாக சூளுரைத்தான்.

இதை கேட்ட அவன் தாத்தா, மிக்க மகிழ்ச்சி அடைந்து, அவனுக்கு
ஒரு புத்தம்புதிய கை கடிகாரத்தை பரிசாக அளித்து “உன் கையில்
அவகாசம் (கை கடிகாரம்) இருக்கும்போது, வெற்றியின் படிகள் உன்
கால்களுக்கு அடியில்” என்று ஆசீர்வதித்தார்.

“என் அருமை பேரனே, விடுமுறைகள் ஒரு வாய்ப்பு. உன் கையில்
இருக்கும் “பொழுது” தங்க பொடியென்றால், உனக்கு கிடைக்கும்
விடுமுறைகள் தங்கக் கட்டிகளாகும்.  நீ எவ்வளவு தங்கத்தை
வேண்டுமானால் வாங்கலாம். ஆயின், நீ வீணடித்த நேரம் வீணடித்ததே.
ஏனெனில், வீணடித்த நேரம் வீணாய் போன வாழ்க்கை. அது திரும்பவும்
வராது.  அளவு கடந்த நேரம் நம் கையில் இருப்பதால், நாம் அதை
மிகவும் கவனத்துடன் பொறுப்புடனும் பயன் படுத்த வேண்டும்.
இப்பொழுது இளமையில் குனிந்து, முனைந்து கல்வி கற்றாயானால்,
உன் முதுமையில் நிமிர்ந்து பீடு நடை போடலாம்” என்று அறிவுறை
கூறினார் தாத்தா.

இப்பொழுதெல்லாம், முருகன் ஒர் மாறுபட்ட மனிதனாக வளைய
வருகின்றான். விடியலில் துயிலெழுந்து, தன் பெற்றோருக்கும்,
சுற்றியிருப்பவர்களுக்கும் உதவியாக இருப்பது அவன் பழக்கமாகி விட்டது.
வகுப்பில் முதல் மாணவனாக திகழும் முருகனின் திறமையும் அவன்
பரிணாம வளர்ச்சியும் அவன் அம்மாவை மகிழ்ச்சியிலும் திகைப்பிலும்
ஆழ்த்தியது.

“எல்லாம் என் முயற்சிதான்” என்று மகிழ்ந்தார் தாத்தா.

“இல்லை, இல்லை எல்லாம் என் கைவண்ணம்” என்றார் அப்பா.

“இல்லவே இல்லை. இவ்வெற்றிகள் அனைத்தும் என் கைவிடா
முயற்சியால்” என்றான் முருகன் தன் தாத்தாவை ஒரு டென்னிஸ் விளையாட்டிற்கு தன்னுடன் விளையாட வரும்படி தாஜா செய்து கொண்டே.

நண்பர்களே, பெரியோர்கள் நல்ல விஷயங்களை நயமாகவும்
புரிதலாகவும் கற்று கொடுத்தால், வளைந்து வளராத பிள்ளை கிடையாது.
அதே சமயம், பெரியோர்கள் நிமிர்ந்து பார்க்கும் ஓர் முன்னோடியாகவும்
வாழ வேண்டும் என்பது மறுக்க முடியாத உண்மை. ஏனெனில், நாம்தான்
நம் வருங்கால சந்ததியினருக்கு வழி காட்டிகளாக விளங்குகின்றோம்.

36 கருத்துகள்:

  1. பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்..

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
  2. அருமை... அருமை...

    காலம் பொன் போன்றது..
    கடமை கண் போன்றது - என்பார்கள்....

    மிக உன்னதமான கருத்து கதையின் மையப் புள்ளியாகி இருக்கிறது...

    இப்படியொரு தாத்தா அற்புதம்...
    நல்லதொரு படிப்பினையைத் தரும் கதை...

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை செல்வரஜூ சார், என்னுடைய தமிழ் கதை முதல் முதலாக வெளியிட படுகின்றது. மிக்க மிக்க நன்றி ஸ்ரீராம் உங்கள் உந்துதலுக்கு. oh my God, I am so happy to see it in print. Thank you all

      நீக்கு
  3. அன்பு ஸ்ரீராம், துரை மற்றும் வருபவர்களுக்கு
    இனிய காலை வணக்கம்.

    கேவாபோவில்
    இன்று ரமாஸ்ரீனிவாசனின் கதை.
    மிக அருமை. இது போல நற்போதனையுடன் கூடிய கதைகளைக்
    கூறித்தான் நம் மக்களை வளர்க்கவேண்டும்.
    மிக அருமையான இலக்கணத் தமிழில் ரமா
    ,ரசனையுடன் கதை படைத்திருக்கிறார்.

    இத்தனை உத்வேகத்துடன் படைக்கப் பட்ட கதை
    என் போன்றவர்களுக்கு இன்னும் உற்சாகம் தரும்.
    மனம் நிறை வாழ்த்துகள் ரமா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாமி, உங்களைப் போல் ஒரு பாட்டி இருந்தால், கதையை ஏன் படிக்க வேண்டும் ? நீங்கள் சொல்வதை கேட்டு நடந்தாலே போது. புரிகிறது, புரிகிறது. கேட்பதில்தான் சிக்கல் எங்கிறீர்கள். இது எல்லோருக்கும் உள்ள சிக்கல். ஆனாலும் நாம் முயன்று கொண்டே இருப்போம். நான் நினைப்பதை என் பெண்களிடம் சொல்லி விடுவேன். அது என்றாவது ஒரு நாள் உள்ளிரங்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை. என் பெண்கள் விஷயத்தில் வீண் போகவில்லை. கடவுளின் அருள்.

      நீக்கு
    2. அன்பு ரமா, எங்கள் பேரன் பேத்திகள்
      பொறுமையாகக் கேட்பார்கள்.
      கதை என்றால் அவ்வளவு இஷ்டம். வாரத்தில் மூன்று நாட்கள் நீதிக் கதைகளுக்குத்தான்.

      நீக்கு
  4. காலம் பொன்னானது.

    முருகன் போன்ற அனைத்து சிறுவர்/சிறுமியரும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம். பெரியவர்களும் குழந்தைகளுக்கு புரியும் படிச் சொல்லித் தர வேண்டியதும் அவசியம்.

    சிறப்பான கதை. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட் சார், என்னால் நம்பவே முடியவில்லை. என் கதையை யாவரும் பாராட்டுகின்றீர்கள். மேலும் எழுதிவேன். நன்றி.

      நீக்கு
  5. நான் கல்லூரியில் படிக்கும் காலம் நீதிபோதனை வகுப்புகள் உண்டு.

    இந்தமாதிரி நீதிபோதனைக் கதைகள் வளரும் சிறுவர்களுக்குச் சொல்லி வளர்க்கப்பட வேண்டும். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் ஜார்ஜ் டௌனில் உள்ள சென்ட் பிரான்ஸிஸ் சேவியர் கான்வென்ட்டில் பயின்றேன். எங்கள் பள்ளியிலேயே நீதி போதனை வகுப்புகள் உண்டு. ஆகவேதானோ என்னவோ சமூகத்தில் ஒரு நல்ல இடத்தில் நிற்கின்றேன்.

      நீக்கு
  6. எல்லோருக்கும் வணக்கம்.

    ரமா அக்கா அழகான சிறுவர் கதைக்கு வாழ்த்துகள் பாராட்டுகள். எபியில் கேவாபோக பக்கம் சிறுவர் மலர் வாசித்த எஃபெக்ட்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா, நான் வெறும் ரமாதான். அக்காவும் இல்லை. சொக்காவும் இல்லை. மிக்க நன்றி.

      நீக்கு
    2. ஓ அக்கா இல்லியா சரி சரி அப்ப ரமானே சொல்லிக்கறேன்!!! ரமா இது நல்லாருக்கு இன்னும் அடுத்த கதை இன்னும் இதைவிட நல்ல ஸ்வாரஸ்யமா வரும்னு எதிர்பார்க்கிறேன். மாரல் கருத்துகளைக் கூட இடையில் சின்ன சின்னஸ்வாரஸ்யங்கள் சேர்த்து சின்ன சின்னதா உரையாடல்களுடன் கொண்டுவந்துருங்க. அசத்துங்க ரமா...!! வாழ்த்துகள்!

      அது போல கதை முடிஞ்சதும் இதுல நீங்க கொடுத்திருக்கும் பாரா போல இனி வேண்டாம் என்பது என் அன்பான தாழ்மையான கருத்து.

      கீதா

      நீக்கு
  7. அழகிய கருத்தியலை சொல்லியது கதை.
    வாழ்த்துகள் மேடம்.

    பதிலளிநீக்கு
  8. நேரத்தின் சிறப்பை உணர்த்தும் அருமையான கதை...

    பதிலளிநீக்கு
  9. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  10. அருமையான கதை.
    இந்த நேரத்திற்கு ஏற்ற கதை.
    பிள்ளைகள் பரீட்சை முடித்து விடுமுறை காலத்தில் இருக்கும் போது அவர்கள் பொழுதை நல்ல விதமாய் கழிக்க ஏற்ற கதை.
    வளரும் தலைமுறை நலமாக வள்ரும்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த சூழ்லுக்கு ஏற்ற கதை என்றுதான் ஸ்ரீரமிற்கு அனுப்பினேன். ஆனால், இவ்வளவு பாராட்டுக்களை எதிர்பார்க்கவில்லை. எல்லோருக்கும் மறுபடியும் நன்றி.

      நீக்கு
  11. பதில்கள்
    1. மனத்திலிருந்து அனைவருக்கும் ஜெயக்குமார் சார் உள்பட வந்தனங்கள். ந

      நீக்கு
  12. பிள்ளைகளுக்கு நல்ல அறிவுரை சொல்லும் சிறப்பான கதை.

    பதிலளிநீக்கு
  13. அருமையான தத்துவத்தைக் கொண்ட சிறுகதை. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜம்புலிங்கம் சார், வாழ்த்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  14. பள்ளி மாணவர்களுக்கு ஏற்றதொரு நீதிபோதனைகள் கொண்ட கதைக்குப் பாராட்டுகள். தி/கீதா சொன்னமாதிரி சிறுவர் மலரும் எங்கள் ப்ளாகில் வந்திருக்கிற நினைவும் வருகிறது. இப்போது குழந்தைகளுக்குப் பள்ளி இல்லாத நேரம் இம்மாதிரிக் கதைகள் வருவதன் மூலம் அவர்கள் தங்கள் நேரத்தைச் சரியானபடி செலவிடலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாவரும் இது ஒரு உபயோகமான கதை என்று கூறும்போது, இன்னும் எழுத தெம்பு வருகின்றது.

      நீக்கு
  15. ஆலோசனைகள் ஏற்றுக் கொள்ளூம்படி இருந்தால் நலம்விளையும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆலோசனைகள் ஏற்றுக் கொள்ளூம்படி இருந்தால் நலம்விளையும்//. பாலா சார், அங்குதான் hitchஏ இருக்கின்றது. நாம் சொல்வதை சொல்வோம். அவசியம் கேட்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருகின்றது. "புலிக்கு பிறந்தது பூனையாகாது". நமக்கு பிறந்த பிள்ளைகள் நல்லவர்களாகவே இருப்பார்கள் என்று நம்புவோம்.

      நீக்கு
  16. ஆஹா இன்று ரமா அக்காவின் கதையோ.. ரமாப்பாட்டி போல மாறிக் கதை சொல்லிட்டீங்க.. அழகு, அருமையான ஆலோசனை...

    வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்குப் பிள்ளைகள் நேரத்தோடு எழும்போணும் எனும் எண்ணம், ஆனா பிள்ளைகளுக்கோ விடுமுறையிலாவது கொஞ்ச நேரம் நித்திரை கொள்ளலாமே எனும் விருப்பம்... பெரியவர்களின் சொல்லுக் கேட்டால் குழந்தைகளின் எதிர்காலம் நல்ல ஒளிமயமாஅகும் என்பதைச் சொல்லிட்டீங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா அவர்களே, நான் வெரும் ரமாதான். ரமா அக்காவெல்லாம் இல்லை. எங்கள் வீட்டிலும் இதே தொல்லைதான். "பூனாவிலிருந்து வந்திருக்கின்றேன். இங்குதான் நன்றாக தூங்க முடியும்" என்று வசனம் பாடி விட்டு மதியம் 12 மணிக்குதான் என் பெண்ணுக்கு சுப்பிரபாதமே. கதையெல்லாம் சொல்லலாம். அதை நடைமுறை படுத்த நம் குழ்ந்தைகளின் ஒத்துழைப்பு தேவை.

      நீக்கு
    2. அதிரா உண்மைதான் குழந்தைகள் தூங்கத்தான் விரும்புவார்கள். ஆனால் சில குழந்தைள் லேட்டா எழுந்தாலும் லேட்டஸ்டா வருவேன் (ரமா உங்களுக்கு மிகவும் பிடித்த ஹா ஹா ஹா ஹா அவரின் வசனம்!!!!! ஹிஹிஹி) என்ற ரீதியில் தூள் கிளப்புவார்கள். சிறு குழந்தைப் பருவத்தில் நல்லப் பழக்கங்கள் சொல்லிக் கொடுத்து வந்தாலும் சில சமயம் பெரியவராகும் போது மாறிவிடுகிறது. சில குழந்தைகள் சிறு வயதில் சோம்பேறி என்று நாம் நினைத்தாலும் படிப்பில் சுட்டியாக இல்லையே என்று நினைத்தாலும் கூட அவர்கள் ஒரு பருவம் வந்த பிறகு மிக மிக நன்றாக ஷைன் ஆகிறார்கள். நம்மிடம் இருக்கும் போது செல்லம் கொஞ்சும் குழந்தைகள் தனியாக இருக்க நேரிடும் போது நிறையவே கற்றுக் கொண்டு மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்வதையும் காண முடிகிறது. நாமுமே சின்ன வயதில் அப்படி இருந்திருப்போமே..இருந்தாலும் கூட நாம் நம் அனுபவத்தைச் சொல்லி வைப்பதைச் சொல்லி வைப்போம்...நாளடைவில் அப்படி ஊன்றப்பட்ட விதை மரமாகலாம்தான் ..

      கீதா

      நீக்கு
    3. கீதா, உண்மையிலும் உண்மை நீங்கள் கூறுவது. என் பெண்கள் இருவருமே வீட்டை விட்டு பூனாவிலும் அமேரிக்காவிலும் இருக்கின்றார்கள். இங்குதான் நீங்கள் சொல்வது போல் தூக்கம், சோம்பல் எல்லாம். ஆனால், அவர்கள் வீட்டிற்கு சென்றால், "ஆத்தீ, இது நம்ம வளர்த்த குழந்தைகளின் வீடா ? பின்ன ஏன் நம் வீட்டில் மட்டும் அப்படி இருக்கிறார்கள் ?" என்று வினவும் அளவிற்கு சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருக்கின்றார்கள். விரை ஒன்று போட்டால், சுரை ஒன்று முளைக்குமா என்ன ? நம்புவோம்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!