வியாழன், 12 மார்ச், 2020

புது வீடு மகாத்மியங்கள்...

சென்ற வாரம் பழைய வீட்டின் எண்ணங்கள் சொல்லியிருந்தேன்.  இந்த வாரம் புதிய வீட்டின் எண்ணங்கள் சில.


முன்பு அவரவர் அலுவலகத்துக்கு சிரமமில்லாமல் சென்று வந்தோம்.  இப்போது சற்றே அலைச்சல் சிரமத்துடன்!  பழகிப்போகும் என்று நம்புகிறோம்!  எனக்குதான் வலைப்பக்கம் வருவதற்கு நேரம் இன்னும் குறுகி விட்டது!

தண்ணீர் உப்புத் தண்ணீராய் இருக்கிறது.  பாத்திரங்களில் உப்பு படிவது ஒரு சோகம்,  அங்கு அயலார் அதிகம் கிடையாது.  இங்கு அயலாருடன் கூட ஈகோவும் இருக்கிறது!

வாங்கிய வீட்டில் குடிபுகுவதற்கு முன் சில ஏற்பாடுகள் செய்துகொள்வோம் இல்லையா? அந்த வகையில் இரண்டு பாத்ரூம்களில் கெய்சர் வாங்கிப் போட்டோம்.  பார்த்துப் பார்த்து 15 லிட்டர் கெய்சர் வாங்கிப் போட்டோம்.



அதே போல இரண்டு (எங்களைப் பொறுத்தவரையில்) பெரிய அறைகளில் 1.5 டன் குளிர்சாதன மெஷின் வாங்கிப் போட்டோம்.

பாத்ரூமுக்கு கண்ணாடி வைத்த, சிறு கதவு உள்ள, உள்ளே சிறு அறைகள் கொண்ட பெட்டி வாங்கி வைத்தோம்.  அப்புறம் ஆள் வரமாட்டார், இப்போதே முடித்து விடுங்கள் என்று பில்டர் சொன்னதால் (!) வாசல் கதவுக்குமேல், ஜன்னல்களுக்கு மேல் எல்லாம் திரைசீலை அமைக்க வழிகள் செய்துகொண்டோம்.

என் நண்பனிடம் வீடு பற்றிச் சொன்னதும் பால் காய்ச்சும் முன்னரே பார்க்க விரும்பினான்.   அழைத்துச் சென்று காட்டினேன். அவனுக்கு முதலிலேயே நான் ஏதோ ஒரு ஒதுக்குப்புறமான ஏரியாவில் தள்ளி வீடு வாங்கி விட்டேன் என்று குறை.   'நகரின் மத்தியிலிருந்து விட்டு எங்கேயோ போயிட்டியே' என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

ஆனால் இடம் பார்த்ததும், 'பரவாயில்லை, நான் நினைத்ததை விட இடம் பரவாயில்லை' என்று சொன்னான்.

அவன் சொன்ன சில குறிப்புகள் என்னை யோசிக்க வைத்தன.

"எதற்கு உணர்ச்சிவசப்பட்டு 15 லிட்டர் கெய்சர்?   அஞ்சு லிட்டர் கெய்சர்தான் சரி.   உடனே உடனே சூடாகும்.    கரண்ட்டும் கம்மியாய்ச் செலவாகும்.  

"எதற்கு 1.5 டன் ஏ ஸி?   நாம் என்ன பெரிய மீட்டிங் ஹாலா வைத்திருக்கிறோம்?  ஏதாவது பொதுக்கூட்டம் நடத்தப் போகிறோமா?  அரைமணி, ஒருமணி போட்டு விட்டு  குளிர்கிறது என்று அணைத்துவிடுவோம்...  ஒரு டன் ஏ ஸி யே போதும்.   குறைந்த மின் அழுத்தத்திலும் சட்டென எடுக்கும்.  குறைந்த மின்சக்தி.  சர்வீஸின் போதும் காசுக் கம்மி,  Gas நிரப்பவும் காசு கம்மி..."



"பாத்ரூமில் இந்தப்  பெட்டி எல்லாம் வேஸ்ட்.  அழகாய் இரண்டு மூன்று ஸ்டேண்ட் வாங்கி ஒன்றன் கீழ் ஒன்றாய் அடித்துக் கொள்ளலாம்.  மெட்டல் ஸ்டேண்ட் வாங்கவேண்டாம்.   துருப்பிடித்து விடும்...."



திரைசீலை அடிக்க ஜன்னலுக்கு கீழேயும் ஒரு கம்பி அடித்து, இரட்டையாய் ஸ்க்ரீன் மாட்டு.   காற்றில் பறக்காது...  பாதியை இழுத்து, பாதியை வைத்துக்கொள்ளலாம்...."



மின்மீட்டர் பற்றி நண்பன் சொன்ன யோசனையை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.

அரசுக் குடியிருப்பில் எல்லோரும் ஒரே இடத்தில் வசித்தோம்.  இங்கு ஒரே வீட்டில் தனித்தனியாய் இருக்கிறோம்!

ஸோலார் பேனல் வைக்கும் வைபவம்தான் ரொம்பவே படுத்தி விட்டது.  பழைய வீட்டிலிருந்து டிஸ்ட்மாண்டில் செய்து எடுத்து வந்தது ஒரு கஷ்டம்.  எப்போதும் சண்டையிடும் கீழ் வீட்டுக்காரர் இதற்கும் எங்களுடன் கெட்ட வார்த்தையில் சண்டையிட்டதும் ஒரு அனுபவம்.

இங்கு வந்து அதை மறுபடி Fix செய்ய அவர்களுக்காகக் காத்திருந்து, காத்திருந்து, அவர்களும் வந்துஅதை மாட்டியது ஒரு சாதனை.  முன்பு இரண்டு 200V போட்டிருந்தேன்,  இப்போது அதனுடன் கூட இரண்டு 325V இணைத்துப்போட்டிருக்கிறேன்.  அதனால் 2KV இன்வெர்ட்டர் பெட்டி. குளிர்சாதனப் பெட்டியையும் அதனுடன் இணைத்திருக்கிறேன்.  சென்னை வெயில் காக்கட்டும்!

புத்தகங்களை இன்னும் வெளியில் கூட எடுத்து வைக்கவில்லை.  இன்னும் பலநாட்கள் ஆகும்.  அதனால் பிலஹரி கதைகளை பகிரமுடியாது!  (அப்பாடா...    பிழைத்தோம் என்று நினைக்கவேண்டாம்.  வேறு யோசனை இருக்கிறது!)  அது எங்கே இருக்கிறது, வீடு மாறியதில் அதை "அடையாளமாய்" எங்கே வைத்தேன் என்றும் தெரியவில்லை!  பரணில் வைக்கப்பட்டிருந்த 15 பெட்டிகளில் இருந்த நிறைய பழைய புத்தகங்கள் மழைத்தண்ணீர் சுவரில் ஊறி வந்த காரணத்தால் தொட்டாலே மாவாகி பொடிந்து உதிரும் நிலை.   அவற்றை எல்லாம் சோதித்து, தேறும் புத்தகங்கள் மட்டும் காப்பாற்றி, அதற்கு ரேக் தயார் செய்ய வேண்டும்!

ஒரு வருத்தம் உண்டு.   என் அப்பாவுக்கு மிகவும் பிடித்த மாதிரி அமைந்திருக்கும் வீடு.  அழகான பெரிய மொட்டைமாடி, ஒரு பால்கனி, ஒரு ஓபன் டெரஸ்...    அப்பா இருந்திருந்தால் மிகவும் ரசித்திருப்பார்.  வீடு பற்றி அவருக்கு விதம் விதமான ரசனைகள் உண்டு.  பாரதியாரின் 'காணிநிலம் வேண்டும்' பாடலை மிகவும் ரசிப்பார்.  வீட்டுக்கருகில் நிறைய மரங்கள் இருந்தால் குதூகலமாகி விடுவார்.  மரங்கள் சூழ்ந்த வீடாக இருக்கவேண்டும்.  அமர்ந்து படிக்க சௌகரியமான இடம் வேண்டும். எழுத வேண்டும்.  இந்த வீடு வந்ததிலிருந்து இந்தக் குறை எனக்கு மனதில் இருந்துகொண்டே இருக்கிறது.

==============================================================================================


ஃபேஸ்புக்கில் ஆர் வி ராஜு பதிவுகள் சில எல்லோரும் ரசிக்கும்படி சுவாரஸ்யமாய் இருக்கும்.   கொஞ்ச நாட்கள் முன் அவர் அவர் ஜான் துரை ஆசீர் செல்லையா என்பவர் பகிர்ந்திருந்ததை ஷேர் செய்திருந்தார்.  மனதைத் தோட்ட அந்த ஷேரை இங்கு ஷேர் செய்கிறேன்...




ரேவதி எப்போது கிணற்றில் விழுவார் என எதிர்பார்த்து காத்திருந்தேன்.

அவர் பாண்டியராஜனோடு இணைந்து நடித்த  "ஆண் பாவம்" ஏதோ ஒரு சேனலில் ஓடிக் கொண்டிருந்தது.

எப்போதோ தியேட்டரில் பார்த்ததுதான் ;  எனினும் பழைய நினைவுகளை மீட்டும் படம் என்பதால் , சேனலை மாற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அதிலும் ஒரு குறிப்பிட்ட காட்சியை  மட்டும் ஆவலோடு எதிர்பார்த்திருந்தேன் . 

ஆம் . ரேவதி கிணற்றில் விழும் காட்சி. இதோ , அந்தக் காட்சியும் வந்து விட்டது.

தலையில் அடிபட்டு மருத்துவ மனையில் ரேவதி படுத்திருக்க , அப்பா பூர்ணம் விஸ்வநாதன் டாக்டரை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார்.

நானும் அந்த டாக்டருக்காகத்தான் காத்திருந்தேன்.

அதோ , டாக்டர் வருகிறார் ; எக்ஸ்ரே பார்க்கிறார். பூர்ணம் விஸ்வநாதனிடம் விவரம் சொல்கிறார் . நான் உற்று கவனிக்கிறேன். இரண்டு நிமிடங்களில் அந்த காட்சி முடிந்து விட்டது.
.
நான் அசையாமல் அமர்ந்திருந்தேன்.

ஏனெனில் அந்தக் காட்சி என்னை ரொம்பவே பாதித்து விட்டது. தியேட்டரில் பார்க்கும்போதும் என்னை மிகவும் பாதித்த காட்சி அது.

காரணம் , அந்த காட்சியில் ரேவதியை பரிசோதிக்கும்  டாக்டராக நடித்திருந்தவர் , எனக்கு நன்கு தெரிந்தவர்.

எண்பதுகளில்  நான் ஓவியக் கல்லூரியில் படிக்கும்போது எனக்கு சீனியர். பெயர் சரியாக நினைவில் இல்லை ; ராமலிங்கமாக இருக்கலாம்.

கல்லூரி நாட்களில் ஒருநாளும் அவர் என்னோடு பேசியதில்லை. என்னோடு மட்டும் அல்ல. யாரோடும் பேசியதில்லை. காரணம் ,  பிறவியிலேயே பேச்சு திறன் அற்றவர் அவர்.

ஆம் . வாழ்நாள் முழுவதும் பேசவே முடியாது என்று டாக்டர்களால் கை விடப்பட்டவர். கல்லூரியில் படிக்கும் காலத்தில் நாங்கள் அவரை கருணையோடும்  இரக்கத்தோடும் பார்ப்போம்.

சரி. அவரை ஏன் தன் படத்தில்  நடிக்க வைத்தார் பாண்டியராஜன் ?

இந்தக் கேள்வியை பிறிதொரு நாளில் பாண்டியராஜனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தபோது , அவரிடமே கேட்டேன்.

"ஓ , அதுவா ? பாருங்க பிரதர். லைஃப் முழுக்க அவரால பேசவே முடியாதுன்னு கேள்விப்பட்டேன். மனசுக்கு ரொம்ப கஷ்டமா போச்சு. இந்த விஷயம் நமக்கே இவ்வளவு கஷ்டமா இருக்கே , அவரை பெத்தவங்களுக்கு ?"

நான் அமைதியாக அமர்ந்திருந்தேன். சற்று இடைவெளி விட்டு பாண்டியராஜன் சொன்னார்: "அதனாலதான் நாம இயக்குற படத்தில , ஒரே ஒரு காட்சியிலாவது அவரை வாய் பேசற மாதிரி நடிக்க வைக்கணும். தன் மகன் பேசறத  பாத்து அவரோட பேரண்ட்ஸ் சந்தோஷப்படணும் . அந்த ஒரே ஒரு காரணத்துக்காகத்தான்   , டப்பிங் வாய்ஸ் கொடுத்து அந்த கேரக்டர்ல அவரை நடிக்க வச்சேன்!"
.
சாதாரணமாக சொல்லி விட்டார் பாண்டியராஜன்.



உண்மைதான். ஆனால்  அந்தக் காட்சியைப்  பார்த்து , அவரது பெற்றோர்  எத்தனை சந்தோஷப்பட்டிருப்பார்கள் ? எவ்வளவு ஆனந்தக் கண்ணீர் விட்டிருப்பார்கள்?
.
பாண்டியராஜனின் குருவான கே.பாக்கியராஜ் அடிக்கடி  சொல்வது நினைவுக்கு வருகிறது :  "சந்தோஷத்திலேயே பெரிய சந்தோஷம் , அடுத்தவர்களை  சந்தோஷப்படுத்திப் பார்ப்பதுதான்"
.
பாண்டியராஜன் உருவத்தால் சிறியவராக இருக்கலாம்; உள்ளத்தால்  மிக மிக உயர்ந்தவர்.

John Durai Asir Chelliah


=================================================================================================

"கவிதை" க்குக் கொஞ்ச இடம்!



நெருங்கிச் செல்கையில்தான் 
தெரிகிறது 
விலக நினைத்திருக்கிறார்கள் 
என்பது 


பழகிக்கொண்டே இருக்கையில்
எப்போது விலகத் தொடங்கினார்கள்?

மௌனம் புரிந்திருக்க வேண்டும் எனக்கு   

==================================================================================================


மதனின் ஜோக் ஒன்று ...  அவமானம் என்று எதுவும் இல்லை...    பெருமைதான்!



---------------------------------------------------------

இந்திராவுடன் இருக்கும் அந்தக் குழந்தைகள் யார்?  இரண்டும் ஆண் குழந்தைகள் என்றால் ராஜீவ், சஞ்சய் என்று சொல்லலாம்.  ஒரு பெண் குழந்தை வேறு இருக்கிறதே...   இது அறுபதுகளில் எடுக்கப்பட்ட புகைப்படம்.  அப்பாவுக்கு அப்போதெல்லாம் அவரைக் கவர்ந்த புகைப்படங்களை எடுத்து நோட்டில் ஒட்டி, 'இரண்டு வரி' எழுதும் பழக்கம் இருந்திருக்கிறது!



போகிற போக்கில் எடுத்த ஒரு புகைப்படம்...  சில நாட்களுக்கு முன் குரோம்பேட்டை பாலம் அருகில் எடுக்கப்பட்டது....



ஆஹா...   கிளம்பிட்டாரய்யா...   கிளம்பிட்டாரய்யா...


154 கருத்துகள்:

  1. செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாந் தலை..

    நலமே வாழ்க...

    பதிலளிநீக்கு
  2. இனிய காலை வணக்கம் ஶ்ரீராம். புது வீடு அழகாக இருக்கிறது. மொட்டைமாடிக்கு. நான் வந்து விடுகிறேன். அப்பா பார்த்துப் பூரித்திருப்பார். மீண்டும் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா...    காலை வணக்கம். 

      அம்மாவை அழைத்தாயிற்று.    அடுத்த மாதம் அப்பாவை அழைக்கணும்!  ஏற்கெனவே அவர் இங்கிருப்பார் என்கிற நம்பிக்கை!  

      நீக்கு
  3. பதில்கள்
    1. இருந்தாலும்
      சிரமங்கள் என்றிருப்பவை பழகி விடும்..

      ஸ்ரீ காமாக்ஷி கருணை புரிவாள்...

      நீக்கு
    2. அம்மா, அப்பா இருவரும் அடுத்தடுத்து வந்து ஆசீர்வாதம் செய்கின்றனரே! அதுக்கு சந்தோஷப் படுங்கள். அது சரி, எத்தனாவது மாடி? மின் தூக்கி இருக்கா? கடைகள், பேருந்து நிறுத்தங்கள் எல்லாம் பக்கத்தில் இருக்கின்றனவா?

      நீக்கு
  4. பதில்கள்
    1. இந்த்ரா காந்தியுடன் இருக்கும் குழந்தைகள் யார். விஜய லட்சுமி பண்டிட்டின் பேரன் பேத்திகளோ.
      அப்பாவின் அவர்கள் அருமை.

      நீக்கு
    2. அப்பாவின் எழுத்து அருமை. பாண்டிய ராஜனின் கனிவு அசர வைத்தது

      நீக்கு
    3. //இந்த்ரா காந்தியுடன் இருக்கும் குழந்தைகள் யார். விஜய லட்சுமி பண்டிட்டின் பேரன் பேத்திகளோ.//

      நானும்யோசித்தேன்.  ஆனாலும் தெரியவில்லை அம்மா.

      நீக்கு
  5. திரு. பாண்டியராஜன் பற்றிய செய்தி மனதை நெகிழ்த்தி விட்டது...

    உள்ளத்தில் நல்ல உள்ளம்..

    பதிலளிநீக்கு
  6. இன்றைய அரசியலை அன்றைக்கே கேட்டிருக்காங்க முன்சாமியின் மனைவி!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதே போல மதன் கிரிக்கெட்டில் சியர் கர்ல்ஸ் பற்றி அப்போதே படம் வரைந்திருந்ததை முன்னர் பகிர்ந்திருக்கிறேன் துரை ஸார்...நினைவிருக்கிறதா?

      நீக்கு
  7. உங்கள் கவிதை ,யோசிக்க வைக்கிறது. விலகுபவர்கள் அரகே வருவார்கள். வந்தவர்களும் விலகுவார்கள்.

    பதிலளிநீக்கு
  8. வீட்டின் அமைப்புடன் ஒரு படம் வேண்டும். இத்தனை சொன்ன நண்பர் முன்பே வந்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதாவது வந்தாரே...  நானவசரப்பட்டு வாங்குவேன் என்று அவர் எதிர்பார்க்கவில்லை!

      நீக்கு
  9. மென்மேலும் வளம் பெற வாழ்த்துகள். அப்பாவும் வந்து ஆசி சொல்லு அங்கேயே இருப்பார்.

    பதிலளிநீக்கு
  10. புதிய வீடு எல்லா மகிழ்ச்சிகளையும் தரட்டும் ஜி வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
  11. காலை வணக்கம் அனைவருக்கும்.

    //எதற்கு உணர்ச்சிவசப்பட்டு 15 லிட்டர் கெய்சர்? // - ஸ்ரீராம்... நானும் ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டு 25 லி. 3 வாங்கிப்போட்டேன். ஆனால் 2 க்கு மேல் ஆன் செய்யக்க்கூடாது. அதுவும் தவிர 15 லிட்டரே அதிகம் என்று இப்போது எண்ணுகிறேன். சென்னையில் 15 லி என்பதால் இங்கு ஜாஸ்தி வேணும்னு நினைத்தேன்.

    இவையெல்லாம் ஆரம்பப் பிரச்சனைகள்தான். வெகு விரைவில் பழகிவிடும். அப்புறம் குறைகள்னு மனதில் எதுவும் இருக்காது.

    புதுவீடு நல்ல செய்திகளை நிகழ்ச்சிகளைக் கொண்டுவர ஆரம்பித்துவிட்டால் பிறகு எதுவும் தோணாது. வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை, வணக்கம்.  உண்மையில் ஐந்து லிட்டர் கெய்சரே போதும்.  சட்சட்டென சூடாகி தயாராகி விடும். அது சரி என்று அவன் சொன்ன பின்னர்தான் புரிந்தது.

      நீக்கு
  12. நண்பர் சொன்ன யோசனைகளைக் கேட்டதும் ..... நிறைய மாற்றங்கள் சொல்கிறாரே என்று தோன்றியது. எல்லாம் நல்லபடியாக முடிந்ததில் மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாற்றங்கள் என்று இல்லை. யோசனைகள்.   எப்போதுமே என் அந்த நண்பன் இதுபோன்ற விஷயங்களில் சொல்வது சரியாய் இருக்கும்.

      நீக்கு
  13. பாண்டியராஜன், வாய்பேச முடியாதவரை டப்பிங் வாய்ஸோடு நடிக்க வைத்தது - மிக நல்ல பகிர்வு. முதல் முறை கேள்விப்படுகிறேன். எவ்வளவு உயர்ந்த எண்ணம் பாண்டியராஜனுக்கு? மனதை நெகிழவைத்த நிகழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.   சட்டென தோன்றியதே...   சம்பந்தப்பட்டவர்கள் எப்படி நெகிழ்ந்திருப்பார்கள்... 

      நீக்கு
  14. மூலிகை பெட்ரோல் - இன்னும் வருஷம் குறிப்பிடலையே அதுவரை சந்தோஷம்

    சமீபத்தில் இந்திராகாந்தி வீட்டை வெளியிலிருந்து பார்த்தேன். அங்கு சென்றிருந்த இரயிலில் ஸ்நேகம் பிடித்த பாண்டிச்சேரி பயணிகள், உள்ளே எடுத்த புகைப்படங்களைக் காண்பித்தார்கள்... பாவம் அவர்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தினமலர் செய்தியில் இந்த வ்ருடம்மார்ச் 31 தான் சொல்லி இருக்கிறார்.   முதலில் காமராஜர் மாவட்டத்தில் முயற்சிக்கிறார் போலும்.

      நீக்கு
  15. புரிவது மௌனம் எப்போதாவது
    பிரிவதில் கவனம் அவ்வப்போது..

    பதிலளிநீக்கு
  16. மே.மு.வின் மகன் என்ன நினைப்பான்?
    அப்பாவை நினைத்து துக்கப்படுவானா? அம்மாவை நினைத்துப் பெருமைப்படுவானா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாடம் படிக்கிறான்! பின்னர் எரிதழல் ஏகாம்பரமாக வரக்கூடும்!

      நீக்கு
  17. அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். ஏசி அறையின் விஸ்தீரணத்தைப் பொறுத்து நாங்கள் வாங்குவோம். எங்க படுக்கை அறைகளின் அளவைக் கேட்ட பின்னர் ஏசி வாங்கும் கடைக்காரரே ஒரு டன் போதாது என்றார். ஏசியையும் இப்போதெல்லாம் 25 அல்லது 26க்குள்ளேயே வைக்கிறோம். இதனாலும் மின்சாரம் மிச்சம் ஆகும் என்றார்கள். சோலார் போட நினைத்து ஒரு சில காரணங்களால் போடவில்லை. மற்றபடி திறந்த மேல் தளம் உங்களுக்கே உங்களுக்கானதா? அப்படி எனில் தொட்டியில் ஒரு சில பூச்செடிகள் மட்டுமானும் வையுங்கள். சென்னையில் மேற்குத் தாம்பரத்தில் பிரபல பில்டரிடம் முதலில் நாங்கள் வாங்குவதற்கென முன் பணம் கொடுத்திருந்தோம். அந்த வீட்டில் நாங்க பார்த்திருந்த குடியிருப்புக்கு மட்டும் இரண்டு திறந்த மேல்தளங்கள், மூன்று பால்கனி. இரண்டு பால்கனி வழியா மேலே செல்லப் படிகள்னு இருந்தது. ரொம்பக் கனவு கண்டு கொண்டிருந்தேன். கடைசியில் அதை வாங்கலை. இது சுமார் 10 வருஷங்கள் முன்னால்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போ ஏ.சி. உபயோகப்படுத்த வேண்டியிருக்கா கீசா மேடம்? அவ்வளவு சூடா? இங்கு குளிர் குறைந்திருக்கிறது. ஃபேன் தேவையாக இருக்கு

      நீக்கு
    2. காலை வேளையில் மிதமான சூடு தான். வெயில் வரவும் நேரம் ஆகிறது. பெரும்பாலும் குளிர் இல்லைனே சொல்லணும். ஆனால் சூடும் இல்லை. வீட்டுக்குள் இன்னும் தெரிய ஆரம்பிக்கலை. ஆனாலும் நாங்க 25 இல் ஏசியை வைத்துவிட்டுப் போட்டுக்கறோம். அதுவே நம்ம ரங்க்ஸுக்குக் குளிர்கிறது. :)))) நீங்க பங்களூரில் இருந்து கொண்டு சென்னையில் வேர்க்கிறதா என்று கேட்பது அநியாயமாய் இல்லையோ?

      நீக்கு
    3. நீங்க வேற கீசா மேடம்... மார்ச், ஏப்ரல் இங்கு சூடு அதிகமாம். (அல்லது ஏப்ரல், மே?). அப்புறம் நன்றாக இருக்குமாம். லட்சக்கணக்கான மக்கள் கடந்த 20 வருடங்களில் மைக்ரேட் ஆனதால் பெங்களூர் கிளைமேட்டில் நிரம்ப மாறுதல்களைக் காண்கிறேன்.

      நீக்கு
    4. வாங்க கீதா அக்கா...     அறையின் விஸ்தீரணம் என்னதான் பெரிசா இருந்தாலும் பெரிய மீட்டிங் ஹால் போல இருக்காது அல்லவா, ஒரு டன் போதும் என்பது நண்பன் கூற்று! எழுதலாம் எங்களுக்கே சொந்தம் அல்ல...   எங்களையும் சேர்த்து ஆறு வீடுகளுக்கு சொந்தம்!  நீங்கள் சொல்லி இருக்கும் வீட்டை கற்பனை செய்து பார்த்தால் அழகாய் இருக்கிறது.

      நீக்கு
    5. பெங்களூரு முன்போல இப்போதெல்லாம் குளிராய் இருப்பதில்லை என்று சொல்லக்கேட்டிருக்கிறேன் நெல்லை.  ஒரு அக்னிநட்சத்திர நாளில் ஹோசூரிலொரு விழாவுக்கு வந்தேன்.  மதியம் குளிர் அடித்தது.  இப்போது அப்படி எல்லாம் எதிர்பார்க்க முடியாது என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  18. எங்க வீட்டில் ஒரு குளியலறையில் மட்டும் உடனடியாகச் சூடு செய்யும் கீசர் உள்ளது. அதையும் நாங்க வாங்கியது அம்பத்தூர் வீட்டில் இருக்கும்போது. சுமார் பதினைந்து வருடங்களுக்கும் மேல் இருக்கும். குளியலறையில் நீங்கள் வாங்கி வைத்திருக்கும் அதே பெட்டி எங்க வீட்டுக் குளியலறைகளிலும் உண்டு. ஸ்டான்டும் இருந்தது. அது என்னமோ கழன்று விட்டது. பெட்டியைத் தான் ஹார்ப்பிக், சோப் ஆயில், ஆசிட் போன்றவை வைக்கவும் அதிகப்படியான சோப்புகள், ஷாம்பூக்கள், மஞ்சள் பொடி பத்திரப்படுத்தும் இடமாகவும் பயன்படுத்துகிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓஹோ....     நாங்களும் சமீபத்தில்தான் கீசர் வாங்கினோம்.   ஒரு பத்து வருடங்கள் இருக்கும்!

      நீக்கு
  19. நாங்க ஜன்னலுக்குத் திரை எல்லாம் போடவில்லை. அதே போல் அறைகளின் வாயிலிலும் திரை போடவில்லை. நமக்குச் சரிவராது, மடி, ஆசாரம் பார்ப்பதால்! விசேஷ நாட்களில் கழட்டணும்! :)))))) மற்றபடி உங்க வீடு அழகாயும் அம்சமாயும் இருக்கு. வீட்டு வாயிலில் கறுப்புக் கயிறில் எலுமிச்சம்பழம், மிளகாய் வையுங்கள். அல்லது பூதத்தை மாட்டி வையுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அல்லது பூதத்தை மாட்டி வையுங்கள்.// - ஹா ஹா ஹா.... இப்போ ஸ்ரீராம்... பழைய வீட்டுக்கு முன்னால் இருந்த பெரிய மரத்தில் அமாவாசை பெளர்ணமி அன்று தேடவேண்டியதுதான்.

      நீக்கு
    2. கடைகளில் பூதம் விற்குமே! வீட்டு வாசலில் மாட்டனு சொன்னால் போதும். கிடைக்கும்.

      நீக்கு
    3. ஹாஹாஹா, திருஷ்டி பொம்மை! இப்போ நினைவுக்கு வந்தது, காலம்பர இந்தக் கருத்தைச் சொல்லும்போது மூளையைக் கசக்கிக் கொண்டு யோசித்தும் நினைவுக்கு வரவில்லை. :))))))

      நீக்கு
    4. மரத்தடியில் பேய், பிசாசு தான் கிடைக்கும் நெல்லைத் தமிழரே! பூதம் கிடைக்காது. பூதம் நம்மைக் காவல் காக்குமே! ஆகவே கோயில்களில் தான் தேடணும். :))))

      நீக்கு
    5. மடி ஆச்சாரம் சரிதான்...   ஆனால் இங்குதிரை போடவில்லை என்றால் செம வெளிச்சமாய் இருக்கிறது. மேலும் வாசல் அஃதாவுக்கு என்ன, கிச்சனுக்கே திரை போடலாம் என்று யோசனை!

      நீக்கு
    6. பூதம் இல்லை, கருப்புக்கயிறு, எலுமிச்சம்பழம் கட்டப்பட்டிருக்கிறது.  

      ஒரு கூத்து...    கிரஹப்பிரவேசம் செய்த அன்று சுற்ற ஆள் இல்லாததால் பதினைந்து நாட்கள் கழித்து அந்த பூசணியைச் சுற்றி உடைத்தோம்.

      நீக்கு
  20. புது வீட்டிற்குக் குடி போன நேரம் உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் நல்லதாகவே நடக்கட்டும். தூரம் பழகிப் போய்விடும். விரைவில் எல்லாம் அநுகூலமாக இருக்கட்டும். இங்கே மனிதர்கள் பேசுகிறார்கள் என்கிறீர்களே! அதுவே நல்ல ஆரம்பம் தான்.

    பதிலளிநீக்கு
  21. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை மனதாற பிரார்த்தித்து கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் சகோதரரே

    தங்களின் புது வீட்டிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். புது வீட்டு மகாத்மியம் நன்றாக உள்ளது. நாம் நமக்காக ஒரு முடிவு செய்து அதை நிறைவேற்றிய பின் மற்றவர்களின் ஆலோசனைகள் கொஞ்சம் உறுத்தலை தருவது இயல்புதானே..! அதை மனதில் வைத்துக் கொள்ளாமல் புது வீட்டின் செளகரியங்கள் உங்களை சந்தோஷப் படுத்த இறைவனை வேண்டிக் கொள்கிறேன். தங்கள் அப்பாவின் ஆசிர்வாதங்கள் தங்களை நல்லபடியாக வைத்திருக்கும். அம்மா, அப்பா இருவரும் நம்முடனேதான் நம் சௌளகரியங்களை நினைத்தபடிதான் எப்போதும் வாழ்வார்கள்.

    கவிதை மிகவும் அழகு. ஆழமாக மனதில் பதிந்தது.
    /மெளனம் புரிந்திருக்க வேண்டும் எனக்கு/

    உண்மைதான். யோசிக்க வைத்த வரிகள்.
    மெளனத்தின் மொழியை இடையில் அவ்வப்போது கற்காமல் போனது தவறுதான். கற்றிருந்தால், விலக நினைத்தவர்களின் சுபாவங்கள் சிறிதாவது உடனுக்குடன் புரிந்திருக்கும்.

    பாண்டியராஜனின் இரக்க மனம் மனதை தொட்டது. அந்தப் படம் பற்றிய விபரங்கள் அறிந்து கொண்டேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நாம் நமக்காக ஒரு முடிவு செய்து அதை நிறைவேற்றிய பின் மற்றவர்களின் ஆலோசனைகள் கொஞ்சம் உறுத்தலை தருவது இயல்புதானே..! //

      உண்மை.   ஆனால் அதில்நியாயம் இருக்கிறியாது என்று புரிந்தால் பிரச்னை இல்லை.  நானே என் பாஸிடம் அவசரம் வேண்டாம், சில விஷயங்கள் மெதுவாய் வாங்குவோம் என்றேன்.  எங்கே நான் ஒத்திப்போட்டே செய்யாமல் விட்டு விடுவேனோ என்கிற சந்தேகத்தில் பாஸ் சட்சட்டென வாங்கி விட்டார்.

      கவிதையை ரசித்ததற்கு நன்றி.

      நீக்கு
  23. //நெருங்கிச் செல்கையில்தான் தெரிகிறது விலக நினைத்திருக்கிறார்கள் என்பது 

    பழகிக்கொண்டே இருக்கையில்
    எப்போது விலகத் தொடங்கினார்கள்?//

    Rahul Gandhi
    ம பி அரசியல்? 
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா...    ஹா...  ஹா...    வாங்க ஜெயக்குமார் சந்திரசேகர் ஸார்...   நேரத்துக்கான நகைச்சுவை!

      நீக்கு
  24. புதிய வீடு வாழ்த்துகள். சகல நலனும் கிடைக்கட்டும்.
    நாட்கள் செல்ல அனைத்தும் பழகிவிடும் அப்புறம் நன்கு பிடித்துபோய்விடும்.

    பதிலளிநீக்கு
  25. இந்திரா காந்தி இந்தக் குழந்தைகளுடன் இருக்கும் படம் எனக்கும் வாட்சப்,முகநூல் எல்லாவற்றிலும் வந்தது. அறுபதுகள் என்பதால் பிரியங்காவும், ராஹுலுமாக இருக்குமோ என்பது யோசிக்க வைக்கிறது. ஆனால் பிரியங்கா 68 அல்லது 69 ஆம் ஆண்டில் பிறந்த நினைவு. தெரியலை நிச்சயமாய்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாட்ஸாப்பில் இந்தப் படம் வந்ததா?   என்ன ஆச்சர்யம்?  எப்படி?

      இது என் அப்பா அந்தக் காலத்து பெரிய சைஸ் நோட்டு ஒன்றில் இந்தப் படத்தையும் வேறு சில குழந்தைகள் படத்தையும் ஒற்றி சில வரிகள் எழுதி வைத்திருந்தார்.  இதிலும் அவர் எழுதிய வரிகளுடன்தான் வெளியிட்டிருக்கிறேன் பாருங்கள்.

      நீக்கு
  26. உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது. நம்மிடம் இருந்து விலக நினைப்பவர்களிடம் கொஞ்சம் மனதைக் கடினம் செய்து கொண்டு திரும்பிப் பார்க்காமல் இருந்தோமானால் ஓடி ஓடி வருவார்கள். பாண்டியராஜனின் உதார குணம் பற்றியும் ஏற்கெனவே அறிந்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்லும் மருத்துவம் சரிதான்.  நானும் செய்திருக்கிறேன்.  ஆனால் இது கற்பனைக்காக எழுதிய கவிதையே அன்றி,  அனுபவம் இல்லை!

      நீக்கு
    2. பாண்டியராஜன் குணராஜனாக இருக்கிறாரே ! நல்லவர்களும் உண்டு சினி உலகில்..

      நீக்கு
  27. ஸ்ரீராம், எங்களுக்கும் இந்த கூத்துகள் அத்தனையும் நடந்தன. ஒவ்வொரு நண்பர் வந்து ஒன்று சொல்லி விட்டுப் போவார். எல்லாரும் நாம் செய்தது தவறு என்று சொல்வது போலவே அமையும். ஒன்றும் கவலைப் படாதீர்கள். "இதுவும் கடந்து போகும்". நான் விவரமாக ஒரு கட்டுரையாகவே நாங்கள் இந்த வீட்டிற்கு குடி புகுந்தது பற்றி விரைவில் எழுதுகின்றேன். இப்பொழுது நினைத்து பார்த்தால் சிரிப்பு வருகின்றது. ஆனால், அன்று அது உண்மையாக இருந்தது. எனவே, கவலையை விடுங்கள். எல்லாம் சரியாகத்தான் செல்கின்றது என்று நம்புங்கள். சந்தோஷமாக புது வீட்டில் வளைய வாருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ரமா ஸ்ரீநிவாசன்...   எனக்குக்கவலை எல்லாம் இல்லை.   அவன் சொன்னதைச் சொன்னேன்.  அவ்வ்வளவுதான். எனவே கவலை எல்லாம் எதுவுமே இல்லை.ஹேப்பியாக இருக்கிறோம்.

      நீக்கு
    2. அம்பத்தூரில் நாங்க இடம் வாங்கி வீடு கட்டின கதையை எழுதணும்னு பல வருஷங்களாக நினைத்தும் முடியவில்லை. :)))) அந்த வீட்டின் ஒவ்வொரு செங்கல்லும் ஒரு கதையைச் சொல்லும். இப்போ அங்கே குடியிருப்பு வந்து விட்டது. போய்ப் பார்க்கணும். கூப்பிட்டுட்டே இருக்காங்க! போக முடியலை.

      நீக்கு
  28. ஸ்ரீராம், முக்கியமான விஷயத்தை விட்டு விட்டேன். புது வீடு மிக அழகாக இருக்கின்றது. என் அம்மா அடிக்கடி கூறும் இரண்டு வார்த்தைகள் "கிளி கொஞ்சரது". அதேதான் தோன்றியது உங்கள் வீட்டைப் பார்க்கும்போது. All the very best.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி.  ஆனால் நான் வீட்டின் படமே போடவில்லையே....   துண்டு துண்டாக சில படங்கள்...   அவ்வளவுதானே?

      நீக்கு
    2. நானும் குழம்பினேன் - கீஸரையும், ஏசியையும் பார்த்தா கிளி இப்படிச் செய்கிறது!

      நீக்கு
    3. ஹா...  ஹா...  ஹா.... கூடு கட்ட இடம் ஏதுவாய் இருக்கிறதா என்று பார்த்திருக்குமோ!

      நீக்கு
  29. ஓ புது வீடு பற்றிய சுவாரஷ்யங்களோ இன்று, இப்போ விட்டால் ஈவினிங்தான் ரைம் கிடைக்கலாம் என ஓடி வந்திட்டேன் இப்பவே..

    ///தண்ணீர் உப்புத் தண்ணீராய் இருக்கிறது. பாத்திரங்களில் உப்பு படிவது ஒரு சோகம், அங்கு அயலார் அதிகம் கிடையாது. இங்கு அயலாருடன் கூட ஈகோவும் இருக்கிறது!//

    பாத்திரங்களில் படிவது உப்பாக இருக்காது ஸ்ரீராம் அது கல்சியமாகத்தான் இருக்கும், கேற்றிலின் உள் பகுதியிலும் படியும், அப்படி எனில் அது நல்ல தண்ணி ஸ்ரீராம், சுவையானதாக இருக்கும். அத்தோடு இத்தண்ணியில் தோய்ந்தால், தலை மயிர் கரகரவென அடர்த்தியாக இருக்கும்.. இப்படி பல கனிகள் இருக்க எதற்குக் காய் கவர்கிறீங்கள்?:)

    ஒன்று கிட்னிக் கல்லுப் பிரச்சனை இருப்பதால், எப்பவும் சுடவைத்துக் குடிக்கப் பழகுங்கோ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை, இது கால்சியமில்லை, இரும்புச்சத்து!  கடின நீர்!  தலைமுடிக்கு ஆபத்து வரலாம் என்றார்கள்.  தலைமுடி இருப்பவர்கள்தான் கவலைபபடவேணும்...  எனக்கென்ன!

      வாங்க அதிரா...  ஆர் ஓ போட்டிருக்கிறோம்.

      நீக்கு
    2. ///தலைமுடி இருப்பவர்கள்தான் கவலைபபடவேணும்... எனக்கென்ன!//

      ஆஆஆஆஆஆஆஆஆ அஞ்சூஊஊஊஊஊ எங்கட டயறில இதை எழுதிடுங்கோ டக்கென:))

      நீக்கு
    3. https://images.ladbible.com/thumbnail?type=jpeg&url=http://beta.ems.ladbiblegroup.com/s3/content/39c619a55e42d581b0ead6bccbae78c4.png&quality=70&width=720

      ஆங் எழுதி  வச்சாச்சு :)))))))

      நீக்கு
    4. ஓட்டை வாய்டா ஸ்ரீராம் உனக்கு...!

      நீக்கு
    5. பாக்கெட் இருக்கலாம் ஓட்டையாய்.. வாய் இருக்கப்படாது! ஆனால் அங்கேதான் பலருக்குப் ப்ரச்னையே..

      நீக்கு
    6. யாகாவாராயினும் நா காக்க...!!!

      நீக்கு
  30. ஒரு சொத்தோ பொருளோ ஒரு வேலையோ செய்யமுன்னர்/வாங்க முன்னர்தான் சிந்திக்க வேண்டும்... வாங்கியாச்சா, அதன்பின்னர் ஆரிடமும் ஆலோசனை கேட்க வேண்டாம், ஆரோடு பேசினாலும் இதில் உங்களுக்குப் பிடிச்ச விஷயங்களை மட்டுமே பேசுங்கோ... பிடிக்காததைப் பேசினால்... சிலர் தொண்டை வரை அடைத்து வைத்திருப்பினம்[பொறாமை என்றுகூடச் சொல்லலாம்] அதனை உங்களோடு சேர்த்து பல மடங்காகக் கொட்டி விடுவோரும் உண்டு... அதனால இப்படி வேலைகள் எல்லாம் வீட்டுக்குச் செய்துவிட்டேன் எனப் பெருமை மட்டும் படுங்கோ... கீஸர், பார்த்றூம் தட்டெல்லாம் சாகும்வரை வைத்திருக்க மாட்டோம்ம்.. 3,4 வருடங்களில் புதுசு மாத்தலாம் அப்போ நன்கு ஆராட்சி செய்து வாங்கிடலாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எண்ணித் துணிக கருமம், துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு என்பது எனக்கும் தெரியும். வழிய வந்து அக்கறையுடன் சொல்லும் நண்பனை ஏன் தடுக்க வேண்டும்?   அவன் கருத்து அவனுக்கு?  நல்லதை எடுத்து, அல்லதை விடுவோம்!

      அதேதான், மாற்றும்போது மாற்றிக்கொள்ளலாம் என்று...   அதே போல சொல்ல மறந்த விஷயம், நாங்கள் வாங்கியிருப்பது ரிமோட் Fan.  கரண்ட் மிச்சம் செய்யுமாம்.  ரிமோட்டில் இயக்கலாம் சோலாரில்நன்றாய் வேலை செய்யுமாம்.

      நீக்கு
    2. @ பிஞ்சு சூப்பரா சொன்னிங்க ..உண்மையில் அதே கொள்கையில்தான் இன்னமும் இருக்கோம் நானும் கணவரும் .செகண்ட் thought எப்பவும் இல்லை எல்லார் இயல்பும் ஒரேபோலிருக்காது :) விதவிதமா அட்வைஸ் டிசைன் டிசைனா வரும் :) அதைப்பார்த்து நமக்கு ப்ரெஷர் எகிறும் எதுக்கு வம்பூ :) அடிபட்டாலும் நமக்குள் இருக்கட்டும்னு நானும் கணவரும் மட்டுமே டிசிஷன் டெக்கர்ஸ் :)

      ஆத்தீ :) புதனுக்கு ஒரு கேள்வி கிடைச்சாச்சு :)
      இதிலிருந்து எல்லாரும் தெரிஞ்சுக்க வேண்டியது கேள்விகள் நம் முன்னே கிடைக்கின்றன ஹாஹ்ஹஹ்ஹா 

      நீக்கு



  31. // அஞ்சு லிட்டர் கெய்சர்தான் சரி. உடனே உடனே சூடாகும். கரண்ட்டும் கம்மியாய்ச் செலவாகும். //

    இதை Instant water heater என்கிறார்கள். எங்கள் உபயோகத்தில் இருப்பது இது தான். கொஞ்சம் ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருந்தால்தானே ஜாக்கிரதை!   அதுதான் இல்லையே!   வாங்க ஜீவி ஸார்.

      நீக்கு
    2. என்ன ஜாக்கிரதை என்று தெரிந்தால், இப்பொழுது இருப்பதே பெரிதாகப்படலாம் இல்லையா?
      அவர் சொன்ன மாதிரி இன்னொருவருக்கும் நீங்கள் ஆலோசனை சொல்லலாம்.

      நீக்கு
    3. லாம்...லாம்...சொல்லுங்கள்.   உபயோகப்படும்.    முன்பு நான் ஒரு இன்ஸ்டன்ட் வாட்டர் ஹீட்டர் வைத்திருந்தேன்.   ப்ளக்கில் சொருகி  ஒரு இரும்பை வாளித்தண்ணீரில் முக்கி வைத்தால் தண்ணீர் சூடாகும்.   ஆனால் மறந்துபோய் தண்ணீர் சூடாகி விட்டதா என்று வாளித்தண்ணீரில் கைவைத்துப் பார்த்தோமோ...   போச்!  அதை பிளக்கிலிருந்து எடுத்துவிட்டு தண்ணீரைத் தொடவேண்டும்!  இப்போது அதை உபயோகிப்பதில்லை.  ஆபத்தான வாட்டர் ஹீட்டர்.  

      நீக்கு
    4. இது பெரிய வாட்டர் ஹீட்டர் போலவே சிறிய அளவில் இருக்கும். 5 லிட்டர் தண்ணீர் பிடிக்கிற கொள்ளளவு.
      வாட்டர் ஹீட்டரிலிருந்து கீழ் வரை நீர் வருவதற்கு வழக்கம் போலவே அதிக அளவு சூட்டைத் தாங்குகிற அளவுக்கு ட்யூப்.
      தண்ணீர் குழாயிலிருந்து ஹீட்டருக்குள் தண்ணீர் போகவும், சூடான தண்ணீரை கீழே பக்கெட்டில் பிடித்துக் கொள்கிற மாதிரியும் அமைப்பு. சிறிய அளவில் வெந்நீர் வருகிற அளவில் குழாய் அமைப்பை வைத்து விட்டு வெளியே இருக்கும் ஸ்விட்சை போட்டு பக்கெட் நிறைய தண்ணீர் பிடித்தவுடன் வெளி சுவிட்சை அணைத்து விட்டு குளிக்கப் போனால் ஆபத்தில்லை.
      வெளியே சுவிட்ச் ஆன் நிலையிலேயே வைத்து விட்டு குளித்தோம் என்றால் நாமறியாமல் மின் கசிவு ஏற்பட்டு விட்டால் மிகப் பெரிய ஆபத்து. சரியான முறையில் கையாண்டால் வேண்டிய அளவு மட்டும் தண்ணீரை சூடாக்கிக் கொண்டு, அதிக சூட்டு நீரை விளாவிக் கொள்ளவும் செய்யலாம். மின் சிக்கனம், நீர் சிக்கனம் எல்லாம் இதில் உண்டு. ஓரளவு மின் வெப்பத்திற்கு மேல் அதிக அளவு மின் வெப்பம் ஏற்பட்டால் மின்சாரம் தானே துண்டித்துப் போகும் (Auto cut off) வசதியும் இதில் உண்டு.

      நீக்கு
    5. நல்ல வேளை என்ன ஜாக்கிரதை என்று கேட்டு விட்டீர்கள். நீங்கள் அப்படி கேட்கவில்லை என்றாலும்,

      என்ன ஜாக்கிரதை என்று
      அவரும் கேட்கவில்லை
      ஜாக்கிரதை என்னவென்று
      நானும் சொல்லவில்லை -- என்கிற ரீதியில் குட்டிக்கவிதை ஒன்றும் பிறந்திருக்கும். ஹி..ஹி...

      நீக்கு
    6. immersion heater ஸ்ரீராம், நீங்க சொல்லி இருப்பது இமெர்சன் ஹீட்டர். அது வேறே, இந்த இன்ஸ்டன்ட் ஹீட்டர் வேறே. இதைத் தண்ணீருக்குள் மூழ்கடிக்க வேண்டாம். இதிலும் சின்ன டாங்க் உண்டு. குறைந்த பட்சம் 2 லிட்டர் கொள்ளளவு, அதிக பட்சம் 5 லிட்டர் கொள்ளளவு. ஹீட்டரைப் போட்டதுமே வெந்நீர்க்குழாயைச் சின்னதாகத் திறந்து வைத்தால் ஒரே சூட்டுடன் வெந்நீர் வரும். ஒரு வாளி நிரம்பும் வரை போட்டு வைத்திருக்கலாம். நடு நடுவில் தெர்மாஸ்டாட் அணைந்து அணைந்து எரியும். அணைந்தால் தண்ணீர் அதிகச் சூடாக ஆகி இருக்கும். அந்த வெந்நீர் முழுசும் வந்து விட்டால் தெர்மாஸ்டாட் மறுபடி எரியும். தண்ணீரும் சூடாகும். கீஸர் மாதிரியான அமைப்பு. ஆனால் சின்னது. இதிலும் குழாய் ஒன்று குளிர்ந்த நீர் தண்ணீர்த் தொட்டிக்குள் போகவும் இன்னொரு குழாய் வெந்நீர் வருவதற்கும் அமைக்கப்பட்டிருக்கும். என்ன, சின்னத் தொட்டி! அம்புடே தான்.

      நீக்கு
  32. நான் முன்பும் சொல்லியிருக்கிறேன், நாம் அப்பா அம்மாவை எப்படி நன்கு கவனித்திருந்தாலும் , நம் உயிர் போகும்வரை சில கவலைகள் இருந்துகொண்டுதான் இருக்கும்.. அப்படி பார்த்திருக்கலாம் இப்படிப் பார்த்திருக்கலாம், இப்போ அவர் இருந்திருந்தால் நன்றாக இருக்குமே என்றெல்லாம்ம்... ஆனா என்ன செய்வது.. கடந்ததை நினைத்து இருக்கும் சந்தோசத்தை இழக்ககூடாது, மனதை டைவேர்ட் பண்ணி மகிழ்ச்சியாக வாழ்வோம்... இனி வருங்காலத்தில் இதே கவலையை நம் பிள்ளைகள் படக்கூடும் ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் அதிரா...    ஆனாலும் மனம் கேக்குதில்லையே...!   

      நீக்கு
  33. ஆண்பாவம்.. பாண்டியராஜன் தகவல்கள் சுவாரஸ்யம்... அவர் நல்லவர் எனத்தான் எல்லோரும் சொல்கின்றனர்... ஏன் பிரபல்யம் ஆரையுமே கெட்டவர்கள், கூடாதவர்கள் என ஆரும் சொல்வதில்லை என்றே நினைக்கிறேன்:)).. ஓரிருவர் சொன்னாலும், இல்லை அவர் நல்லவர் எனச் சொல்ல நெருங்கிய நட்பு ஒன்றையாவது வைத்திருப்பினம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் சொந்த வாழ்க்கையில் எபப்டியிருப்பார் என்று யாருக்கும் தெரியாது.   அது நமக்குத் தேவையுமில்லை.  ஒன்று சொல்லலாம்.  அவர் பற்றி தவறான தகவல் வந்ததில்லை!

      நீக்கு
  34. ///நெருங்கிச் செல்கையில்தான்
    தெரிகிறது
    விலக நினைத்திருக்கிறார்கள்
    என்பது


    பழகிக்கொண்டே இருக்கையில்
    எப்போது விலகத் தொடங்கினார்கள்?

    மௌனம் புரிந்திருக்க வேண்டும் எனக்கு //

    ஹா ஹா ஹா சூப்பர்ர்... ஜதார்த்தமான கவிதை..

    பதிலளிநீக்கு
  35. //மதனின் ஜோக் ஒன்று ... அவமானம் என்று எதுவும் இல்லை... பெருமைதான்!//

    ஹா ஹா ஹா அந்தக் காலத்தில் கட்சியில் இருந்தால், பொலீஸ் பிடிச்சு ஜெயிலில் போட்டால்தானாம் பெருமை ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போதான் பிரபலம் ஆகமுடியும்!  காசு பார்க்க முடியும்!

      நீக்கு
  36. இந்திரா அவர்களுடன் இருக்கும் குழந்தைகள் ஆராக இருக்கும்.. அப்பாவுக்கே அன்று புரியவில்லைப்போலும் அப்போ நமக்கெங்கே புரியப்போகிறது:)).. அழகான புகைப்படம்...

    பாலத்தருகே இருப்பது நோர்த் இண்டியன் கோயிலோ.. இங்கும்[வெளிநாடுகளில்] இப்படி இருக்கிறது..

    ///ஆஹா... கிளம்பிட்டாரய்யா... கிளம்பிட்டாரய்யா...///
    யேச்ச்ச்ச்ச் யேச்ச்ச்ச்ச்ச் ஸ்ரீராம் கமெராவைத்தூக்கிக்கொண்டு வெளிக்கிட்டிட்டார்ர் படம் எடுக்க ஹா ஹா ஹா..

    அப்போ நான் போட்டு வரட்டே ஸ்ரீராம் என் யோகா ரீச்சர் தேடுவா:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பாவுக்குஅப்போது அவர்கள் யாரெனத் தெரிந்திருக்கும்.   பின்னர் பல வருடங்கள் கழித்து இதைப் பார்ப்பவர்கள் குழப்புவார்கள் என்று யோசித்திருக்க மாட்டார்!

      அதைப்பார்த்தால் கோவில் மாதிரி தெரியவில்லை.  ஏதோ பிலேடிங்.   அவ்வளவுதான்.

      போயிட்டு வாங்க அதிரா...   யோகா ரீச்சரை சாரித்தேன் என்று சொல்லுங்க...

      நீக்கு
    2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர் :) அது கோவில் இல்லை அது வசந்தம் திருமண மாளிகைன்னு படமே சொல்லுது ஜூம் ஜூம் ஜூம் பண்ணி பாருங்க 

      நீக்கு
    3. ஆஆஆஆஆஆஆ திருமண மண்டபமோ:))..

      நான் அப்படித்தான் நினைச்சேன் அஞ்சு:)) ஆனா கோயில் எனச் சொன்னேன்ன்:))[எப்பூடியாவது ஜமாளிச்சிடோணும் இதை எல்லாம் ஹா ஹா ஹா:)]

      நீக்கு
    4. ஹாஹா படத்தை எடுத்தவரே //பில்டிங்// னு சொல்லியதால் உங்களை விடறேன் 

      நீக்கு
    5. ஹிஹிஹி...     அதெல்லாம் யார் பார்த்தா ஏஞ்சல்...    படத்தை எடுத்தோமா, செல்லை மூடினோமான்னு இருந்துட்டேன்...

      நீக்கு
    6. ஹா ஹா ஹா.. இங்கின ஒரு ஆராட்சி அம்புஜம் இருப்பதை மறந்திட்டீங்களே ஸ்ரீராம்:))

      நீக்கு
  37. நெருங்கிச் செல்லாததினால் தான்
    விலக நினைத்திருந்தார்கள்
    என்று புரிந்தது
    அவர்கள் விலகிய பின்பு தான்
    விலகியதின் வெப்பம்
    நெருப்பாய் சுட்டது.
    அடுத்தவர் பழக்கத்திலாவது
    இப்படியான விபத்து
    நடக்காதிருக்க வேண்டும்.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது சகஜமாய் நடக்கும் ஒன்று.   நான் எழுதி இருப்பது வித்தியாசமாய் நிகழும் ஒன்று!   ஆனாலும் நன்றாய் இருக்கிறது.

      நீக்கு
  38. வீடு அடுக்கு மாடி குடியிருப்பா எந்த ஏரியா விவரங்கள் மிகவும்குறைவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா அதுதானே ஸ்ரீராம்.. ச்சும்மா மொட்டையாகச் சொன்னால் எப்பூடி?:).. அட்ரஸ் சொல்லுங்கோ:).. முழுசா வீட்டுப் படமெல்லாம் போடுங்கோ:).. இது ஒண்ணுமே சொல்லாமல் வீட்டைப்பற்றிப் பேசியிருக்கிறீங்களே.. அப்போ நாங்கள் எப்பூடித்தான் உங்கட விட்டுக்கு வாறதாம்ம்?:)).. இன்று ஸ்ரீராம் யூப்பர் மாட்டீஈஈஈஈ ஹா ஹா ஹா..

      நீக்கு
    2. அதானே நாங்க கூகிள் மேப்பில் பாப்போம் ஹாஹ்ஹஹ்ஹாஹ் :)

      நீக்கு
    3. ஸ்ரீராம், சூப்பர் ஸ்டார் தெரு, உலகநாயகன் நகர், சென்னை குறுக்குச் சந்து, தமிழ்நாடு!

      நீக்கு
    4. தெரிந்து கொள்ள் வேண்டி கேட்ட கேள்வி நகை சுவை ஆக்கி விட்டார்கள்இப்போதும் குறைந்து விடவில்லை

      நீக்கு
    5. ஜி எம் பி ஸார்...    அப்புறம் வாட்ஸாப்பில் அனுப்புகிறேன்.

      நீக்கு
    6. ஜி எம் பி ஐயாவுக்குப் புரியவில்லைப்போலும் பப்ளிக்கில் இப்படி விபரமெல்லாம் எதுக்கு?.. இங்கு நாம் குளோஸ் குரூப்போல இருப்பின் சொல்லலாம், இது ஆராரெல்லாம் படிக்கிறார்களோ அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்...

      ஒருதடவை ஒருவர் பேஸ்புக்கில் தன் வீட்டு விலாசத்திலிருந்து அனைத்தையும் போட்டாராம் பின்னர், குடும்பத்தோடு சுற்றுலாப் போகிறோம் எனப் போட்டாராம், பேஸ்புக்கில் அப்ப அப்ப அப்டேட் பண்ணியிருக்கிறார், அதைப்பார்த்து கள்ளர் கூட்டம் வீட்டுக்குப் போய், அனைத்தையும் எடுத்துப் போயிட்டார்களாம்.

      எனக்கு என் கணவர் சொல்லியிருக்கும் அட்வைஸ் ஒன்றுதான், பப்ளிக்கில் என்னவும் பேசுங்கோ பழகுங்கோ.. ஆனா சொந்த விபரம் மட்டும் வேண்டாம் என்பது..
      அதனாலதான் சிலசமயம் சிலர் ஏதும் விபரம் கொமெண்ட்டில் கேட்டால், பேசாமல் போகக் கஸ்டமாக இருப்பினும், பப்ளிக்கில் எதையும் பேச விரும்பாமல் மெளனமாகிப் போய் விடுவதுண்டு.

      நீக்கு
  39. நண்பர் வீட்டுக்கு வாங்கிய பொருட்களைப் பற்றி சொன்னதும் , முன்பே நண்பரிடம் யோசனை கேட்டு இருக்கலாம் என்று தோன்றும்.

    இன்னும் வீட்டைப்பற்றி புதிதாக வீட்டுக்கு வருபவர்கள் சொல்லிக் கொண்டே தான் இருப்பார்கள். அனைத்தையும் கேட்டு விட்டு சிரித்துக் கொண்டே இருக்க பழகி கொள்ள வேண்டும்.

    //எப்போதும் சண்டையிடும் கீழ் வீட்டுக்காரர் இதற்கும் எங்களுடன் கெட்ட வார்த்தையில் சண்டையிட்டதும் ஒரு அனுபவம்.//


    பழைய கீழ் வீட்டு அன்பர் தானே! அக்கம் பக்கத்தினருடன் நட்பு பாராட்டும் விஷயத்தை மறந்து விட்டார்களா? அதுவும் காலி செய்து போகும் போதும் சண்டை ஏன்?





    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அக்கா...    அவர்கள் முகத்தில் சிரிப்பையே நான் பார்த்ததில்லை.  நான் என்று இல்லை.  நாங்கள் யாருமே பார்த்ததில்லை.  அவரே பார்த்திருப்பாரோ என்னவோ!  அவரோடு சுமுக நட்புடன் இருக்க எவ்வளவோ முயன்றும் தோல்விதான்.  நான் அங்கிருந்து காலி செய்ய அவர்கள் ஒரு முக்கிய காரணம்.

      நீக்கு
  40. அப்பாவுக்கு பிடித்த மாதிரி வீடா அப்புறம் என்ன! மகிழ்ச்சிதான்.
    அழகான பெரிய மொட்டைமாடி, ஒரு பால்கனி, ஆனால் உட்கார்ந்து படிக்க மர நிழல் இல்லையா?
    பந்தல் அமைத்து கொடி படர விடுங்கள் . இரண்டு மூன்று பூ தொட்டிகள் வையுங்கள் அந்த இடத்தை நந்தவனம் ஆக்குவது பெரிய விஷ்யம் இல்லை. வீடு கொஞ்ச நாளில் பிடித்துவிடும் என் வீடு போல் வருமா? என்று மனது நினைக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக கோமதி அக்கா...    பிடிக்காமல் போகுமா?  இப்போதே பிடித்துத்தான் இருக்கிறது.  ஆனால் கிரஹப்பிரவேசம் செய்த ஒரு வாரம் கழிந்த நாட்களில் "நம்ம வீடு" என்றால் பழைய வீடு மனதில் வருவது மாற நாட்களாயிற்று!

      நீக்கு
  41. பாண்டியராஜன் உருவத்தால் சிறியவராக இருக்கலாம்; உள்ளத்தால் மிக மிக உயர்ந்தவர்.//
    பாண்டியராஜன் பற்றிய புதிய செய்தி எனக்கு. உள்ளத்தால் உயர்ந்தவர்தான்.
    சமுத்தரகனி படத்தில் ஒரு பெண் வாய் பேச முடியாத பெண்ணாம் அந்த பெண்ணை பேசி நடிக்க வைத்து இருக்கிறார் என்று படித்தேன் செய்தியில்.

    //பழகிக்கொண்டே இருக்கையில்
    எப்போது விலகத் தொடங்கினார்கள்?

    மௌனம் புரிந்திருக்க வேண்டும் எனக்கு //

    எப்போது விலகினார்கள் எப்போது மெளனம் ஆரம்பித்தது
    என்று தெரியாத போது என்ன செய்வது? சில உறவுகள் இப்படித்தான்.
    "நெருங்கி போனால் விலகி போகும்" வா ராஜா வா பட வசனம் நினைவுக்கு வருது.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உறவா, நட்பா?   யார் விலகினார்கள் என்பது இருவருக்கும் பொருந்துமே... ஆனால் யாரைக்குறித்தும் எழுதியது இல்லை இது.  சும்மா பொதுவாக எழுதியதுதான்.

      நீக்கு
    2. இது சுமார் இரண்டு மாதங்களாய் என் டிராப்டில் தூங்கிக் கொண்டிருந்தது.   அதை எடுத்துக் போட்டேன்.  பா வெ அக்கா எங்கே என் கவிதை என்று தேடுவார்களேயென்று ஒன்று வெளியிட்டேன்.   அவங்களையே காணோம்.

      நீக்கு
    3. பயணத்தில் இருப்பதால் வரமுடியவில்லை எனக்காக கவிதையா ரொம்ப தேங்க்ஸ் என்னைக் கூட தேடி இருக்கீங்களே? கவிதை பிரமாதம்! நான் யாரையும் கைவிடுவதுமில்லை யாரை விட்டும் விலகுவதுமில்லை.ஹி ஹி!
      அது சரி கவிதையை மட்டும் போட்டால் அனுஷ்கா படத்தை யார் போடுவார்களாம்?
      அனுஷ்காவிற்கு கல்யாணம் நிச்சயமாகி விட்டதாமே

      நீக்கு
    4. ///கௌதமன்12 மார்ச், 2020 ’அன்று’ பிற்பகல் 8:01
      நம்பிட்டேன்!//

      ஆஆஆஆஆஆவ்வ்வ்வ் மீயும் நம்பிட்டேன்ன்ன்:)) ஹா ஹா ஹா..

      நீக்கு
    5. ///அனுஷ்காவிற்கு கல்யாணம் நிச்சயமாகி விட்டதாமே//

      ஸ்ரீராம் புதுவீட்டு சந்தோசத்தில் இருக்கும்போது, இப்பூடி அதிர்ச்சியான செய்திகளை எல்லாம் ஏன் சொல்றீங்க பானுமதி அக்கா?:)) ஹா ஹா ஹா..

      நீக்கு
    6. வாங்க பானு அக்கா...  ஆமாம்...  வெளியூர் செல்வதாக நீங்கள் சொல்லி இருந்ததை மறந்து விட்டேன்,  கல்யாணம் பண்ணி க்ஷேமமாய் இருக்கட்டும் அனுஷ்...   பாவம் இவர்கள் எல்லாம்.

      நீக்கு
    7. // ஸ்ரீராம் புதுவீட்டு சந்தோசத்தில் இருக்கும்போது, இப்பூடி அதிர்ச்சியான செய்திகளை எல்லாம் ஏன் சொல்றீங்க பானுமதி அக்கா?:)) ஹா ஹா ஹா..//

      ஆமாம் அதிரா...     அப்படியே  ஷாக்காயிட்டேன்! :)))

      ஆனால் இது நானும் எங்கோ படித்த செய்தி.

      நீக்கு
  42. மதன் ஜோக் பெருமைதானே ! பிழைக்க தெரியதவர் என்கிறார் போலும்.

    தந்தை, அத்தை போல் புகழ் வளர்ப்பீர் என்று உங்கள் அப்பா எழுதி வைத்து இருப்பதைப் பார்த்தால் இந்திராகாந்திக்கு சகோதரர் குழந்தைகளா? இந்திரா காந்திக்கு சகோதரர் கிடையாதே!

    யார் என்று தெரியவில்லை.
    போகிற போக்கில் எடுத்தபடம் நன்றாக இருக்கிறது.
    ராமர் பிள்ளை பெட்ரோல் வரட்டும் வரட்டும்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்...   அப்பா எழுதியிருக்கும் குறிப்பு ரொம்பவே குழப்புகிறது.  ராமர் பிள்ளை பெட்ரோல் வரும்வரை நிச்சயமில்லை.

      நீக்கு

  43. பாண்டியராஜனுக்கு வாழ்த்துகள். இப்பதான் இரு நாளுக்குமுன் டிவியில் ஆண்பாவம் படம் போட்டாங்க. தெரிஞ்சிருந்தால் நானும் கவனிச்சிருப்பேன் இனியொரு முறை கவனிக்குறேன்.
    சசிக்குமார் தன்னோட நாடோடிகள் படத்தில் தன்னோட தங்கையாய் ஒரு வாய் பேச முடியாத பெண்ணை நடிக்க வச்சிருப்பார். அந்த பொண்ணு தனி ஒருவன், ஈசன் படத்திலும் நடிச்சிருக்கு,.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே...   வாங்க ராஜி...    உங்கள் வருகை நல்வரவாகுக...   

      நீக்கு
  44. வீடு புகு அனுபவம் நல்லா இருக்கு ..ஆனா பழைய வீட்டு அண்டை வீட்டுக்காரர் :( சே ஒருவர் போகும் பொது கூடவா இப்படி நடந்துப்பாங்க பாண்டியராஜன் மனதை நெகிழ்த்தினார் அன்புசெயலால் .

    பதிலளிநீக்கு
  45. அந்த ரெண்டு குழந்தைகள் யார்னு கண்டுபிடிச்சாச்சா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லையே...   தெரியவில்லையே....

      நீக்கு
    2. கூகிள் இட்டுப் பார்த்ததில், விஜயலட்சுமி பண்டிட் 1900 ல் பிறந்தவர் என்று தெரிகிறது. அவருக்கு ஒரே பெண் நயன்தாரா (சாகல்!) 1927 ல் பிறந்தவர். அவருக்கும் ஒரே பெண் கீதா சாகல். இவர் 1956 or 1957 ல் பிறந்தவர். படத்தில் இருப்பது இவராக இருக்கலாம். ஆனால் மற்ற குழந்தை யார் என்று தெரியவில்லை. ராஜீவ் 1944, சஞ்சய் 1946 இரண்டு பேருமே வயதில் கீதாவை விட பெரியவர்கள். மர்மம் தொடர்கிறது!

      நீக்கு
    3. SB க்கு மட்டும்தான் தெரியும் போல!

      நீக்கு
  46. புது வீடு விரைவில் எல்லா வகையிலும் பழகிப் போகும். தினசரிப் பயணங்களும். Sheer curtain எனும் உட்புறத் திரைச்சீலை வீட்டுக்கு வெளிச்சம், மற்றும் ப்ரைவஸி என்ற வகையில் சில இடங்களில் பயனாகும். தேவைப்படும் இடங்களில் மட்டும் மீண்டும் புதிய கம்பிகள் மாட்டிக் கொள்ளலாம். கீஸர், ஏஸி போன்றவை பற்றி அதிகம் அலட்டிக் கொள்ள வேண்டாம். செய்தாகி விட்டது. அக்கறையின் பேரில் சொல்லப்பட்டாலும் இது போன்ற கருத்துகள் வந்தபடியேதான் இருக்கும்.

    கவிதை மிக அருமை.

    தொகுப்பு நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  ஒவ்வொருவரும் அவரவர் விருப்பம், அனுபவத்தைக் கூறியபடியே இருப்பார்கள்.  
      நன்றி ராமலக்ஷ்மி,

      நீக்கு
  47. அருமை. அனுபவங்கள் தானே சிறந்த ஆசான்? புது வீட்டு அனுபவங்கள் இனிமையாக இருக்க வாழ்த்துகள். அனாவசிய செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள்....

    பதிலளிநீக்கு
  48. தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 13 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    தற்போது, தங்களது புது வீடு மகாத்மியங்கள்… பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    பதிலளிநீக்கு
  49. புது வீடு மகாத்மியங்கள்...ரசித்து வாசித்தேன் ..

    பதிலளிநீக்கு
  50. புது வீடு - வாழ்த்துகள். உங்கள் நண்பர் சொன்ன விஷயங்கள் நன்று. தேவையில்லாமல் பல பொருட்களை வாங்கி விடுகிறோம் - சில நாட்களில் அவை தேவையில்லை என்று தோன்றிவிடுகிறது!

    புத்தகங்கள் - பராமரிப்பில் உள்ள சிரமம் புரிகிறது. இப்போதெல்லாம் புத்தகம் வாங்கவே ரொம்பவே யோசிக்க வேண்டியிருக்கிறது.

    வழமை போல பதிவின் பகுதிகள் ஸ்வாரஸ்யம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!