முதலில் ரமா ஸ்ரீநிவாசன் அவர்களின் நேயர் விருப்பப் பாடல்... 1962 ஆம் வருடம் பி எஸ் வீரப்பா தயாரிப்பில், கே ஷங்கர் இயக்கத்தில் சிவாஜி கணேசன், சரோஜா தேவி, எஸ் எஸ் ஆர் நடிப்பில், விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் வெளியான ஆலயமணி திரைப்படத்திலிருந்து கண்ணதாசன் எழுதிய 'கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா' பாடல்.
மூலக்கதை ஜாவர் சீதாராமன். உணர்ச்சிக்குவியலான கதை. காதல், தியாகம், சந்தேகம், பொறாமை... சிவாஜி கதாநாயகனாக இப்படி ஒரு கதாபாத்திரத்தில் துணிந்து நடித்திருக்கிறார்.
இந்தப்படத்தில் வரும் பொன்னை விரும்பும் பூமியிலே பாடலும், சட்டி சுட்டதடா பாடலும் சூப்பர்ஹிட் பாடல்கள். என் டி எம் எஸ் கேசெட் லிஸ்ட்டில் அடுத்தடுத்து இருந்த பாடல்கள்.
தொகுலுவா மீனாட்சி அய்யங்கார் சௌந்தர்ராஜனும் லூர்துமேரி ராஜேஸ்வரி ஈஸ்வரியும் பாடிய பாடல்! பாடிய பாடல்.
கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா
களையெல்லாம்கண்கள் சொல்லும் கலையாகுமா?
சொல்லெல்லாம் தூய தமிழ்ச்ச்சொல்லாகுமா?
சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா?
கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்
கல்லைக் கனியாக்குகே உந்தன் ஒரு வாசகம்
உண்டென்று சொல்வதுந்தன் கண்ணல்லவா வண்ணக் கண்ணல்லவா
இல்லையென்று சொல்வதுந்தன் இடை அல்லவா மின்னல் இடை அல்லவா?
கம்பன் கண்ட சீதையுந்தன் தாயல்லவா
காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா
அம்பிகாபதி அணைத்த அமராவதி மங்கை அமராவதி
சென்றபின்பு பாவலர்க்கு நீயே கதி என்றும் நீயே கதி
=====================================================================================================
என் விருப்பத்தில் வரும் பாடல்... தேவர் தயாரிப்பில் எம் ஏ திருமுகம் இயக்கத்தில் 1964 இல் வெளியான படம் தொழிலாளி. ஆலங்குடி சோமு,மாயவனாதன் பாடல்களுக்குஇசை கே வி மகாதேவன்.
எம் ஜி ஆர் பாடல்கள் என்றாலே காதல் பாடல்களும், துள்ளல் பாடல்களும்தான் நினைவுக்கு வரும். பெருமளவு அப்படிதான்.
ஆனால் இந்தப் பாடல் மிக அமைதியான பாடல். இவ்வளவு அமைதியான பாடல் வேறு பாடல் எம் ஜி ஆர் பாடல் லிஸ்ட்டில் இருக்கிறதா என்று தேடத்தான் வேண்டும். ஆலங்குடி சோமு எழுதியுள்ள இந்தப்பாடலை நிதானமாக இசைத்திருப்பவர் டி எம் சௌந்தரராஜன்.
எம் ஜி ஆர், கே ஆர் விஜயா ரத்னா நடித்திருக்கும் இந்தப் படத்தில் எம் ஜி ஆரின் ஜோடி ரத்னாதான். கே ஆர் விஜயா அல்ல. ஆனால் படத்தில் ரத்னா பெயர் விஜயா! ரத்னாவுக்கு தமிழில் இதுதான் முதல் படமாம்.
அப்போது கடவுள் மறுப்புக்குப் பெயர் போன திராவிடக் கட்சியில் இருந்த எம் ஜி ஆர், ஆண்டவன் பற்றி பாடுவதும் சிறப்புதான்!
ஆணடவன் உலகத்தின் முதலாளி -
அவனுக்கு நானொரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின் மேலே
அனைவரும் எனது கூட்டாளி
இருப்பதைக்கொண்டு சிறப்புடன் வாழும்
இலக்கணம் படித்தவன் தொழிலாளி
உருகு போன்ற தான் கருத்தை நம்பி
ஓங்கி நிற்பவன் தொழிலாளி
கல்லை கனியாக மாற்றும் தொழிலாளி
கவனம் ஒருநாள் திரும்பும்
அதில் நல்லவர் வாழும் சமுதாயம்
நிச்சயம் ஒருநாள் மலரும்
வாழ்க்கை என்றோர் பயணத்திலே
பலர் வருவார் போவார் பூமியிலே
வானத்து நிலவாய் சிலர் இருப்பார்
அந்த வரிசையில் முதல்வன் தொழிலாளி
செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை..
பதிலளிநீக்குநலம் வாழ்க...
நலம் வாழ்க.
நீக்குஅன்பின் வணக்கங்களுடன்....
பதிலளிநீக்குவாங்க துரை செல்வராஜூ ஸார்... வணக்கம்.
நீக்குகல்லெல்லாம் மாணிக்கக் கல் கல்லாகுமா!..
பதிலளிநீக்குTMS தான் பாடியிருப்பார்..
LR. ஈஸ்வரி தேன் சிட்டு மாதிரி உடன் இசை தானே!...
சரி... Humming Bird என்று ஒன்றும் இருக்கிறதாமே....
ஆமாம்... ஆமாம்... இனிய குரலில் இணைந்து வருவார்...
நீக்குகன்னித் தமிழ் தந்ததொரு திருவாசகம்..
பதிலளிநீக்குகல்லைக் கனியாக்கும் உந்தன் ஒரு வாசகம்..
அந்நாளைய காதலர்களிடத்தில்
இந்த வரிகள் வெகு பிரசித்தம் என்று பேசிக் கொள்வார்கள்...
இனிய வெள்ளி காலை வணக்கம் அனைவருக்கும்.
நீக்குஇரண்டு பாடல்களும் ரத்தினங்கள்.
எனக்கு மிகவும் பிடித்தது எம் ஜி ஆரின் ஆண்டவன்....
அதுவும் இரவு நேரத்தில்
கேட்க வேண்டிய அமைதியான பாடல்.
மனதுக்கு இனிமை.
டி எம் எஸின் குரல் பட்டுப் போல ஒலிக்கும்.
நன்றி ஸ்ரீராம்.
ரமா தேர்ந்தெடுத்திருக்கும் எங்கள் பள்ளி நாட்கள் பாடல்
ஆலயமணியின் அருமையான பாடல்.
வித்தியாசமான நடிப்பு.
பாடல் அமிர்தம்.
மிகப் பிரபலமாக இன்றும் இருக்கும் பாட்டு. இசை, குரல்,
பாடல் வரிகள் அனைத்துமே சூப்பர்.
டி எம் எஸ்ஸின் குரல்... பாவத்துடன்! அது ஸ்பெஷல்!
நீக்குமக்கள் திலகத்தின் பாடல்கள் வருவதில்லை என்றொரு குறை...
பதிலளிநீக்குஸ்ரீராம் ஜி சொல்வது போல மிகவும் அமைதியான இனிமையான பாடல்...
இதைப் போல வேறு சில பாடல்கள் எனக்குத் தெரிந்து...
1)செல்லக் கிளியே மெல்லப் பேசு...
2)வெள்ளி நிலா முற்றத்திலே..
இன்னொன்று -
இரவுப் பாடகன் ஒருவன் வந்தான்!...
ஆமாம்.. அந்தப் பாடல்களையும் சொல்லலாம். ஆனால் இது காதல், பாசம் எதிலும் சேராத தனிரகம் இல்லையா?
நீக்குஇதோ என் விருப்பமாக பழைய பாடலை
பதிலளிநீக்குநான் கேட்கலாமா.
இரும்புத்திரை படத்தில் அதாவது பழைய படம்.
அதில் வரும் நெஞ்சில் குடி இருக்கும்..........
அன்பருக்கு பாடல். டிஎம் எஸ், பி .லீலா பாடிய அருமையான
பாடல்.
//நெஞ்சில் குடி இருக்கும்.........// இது என்ன பாடல் என்று யோசித்துப் பார்த்தேன். மனதோ 'வீணைக் கொடியுடைய வேந்தனே' என்ற பாடலையே முணுமுணுக்கிறது.
நீக்குநெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
நீக்குநிலைமை என்னவென்று தெரியுமா என்
நினைவைப் புரிந்துகொள்ள முடியுமா..
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வரைந்தது. பாம்பே பக்கம் பாயுமுன் வைஜயந்தி மாலா ஆடிவிட்டுப் போனது. சீனப்போருக்கு முன் வந்தது...
கேட்டிருக்கிறேன் வல்லிம்மா. அதற்குமுன் இருக்கும் ஒரு நேயர் விருப்பம் முடிந்து இதையும் வெளியிடுவோம்!
நீக்குஉண்மைதான். பின்னாட்களில் 'தேன் நிலவில்' ஆடினார்.:)நன்றி ஸ்ரீராம்.
நீக்கு@நெல்லைத்தமிழன்,
நீக்குஇரண்டும் ராகம் ஒன்றோ என்னவோ. கீதா ரங்கனைக் கேட்டால் தெரியும்:)
ஏகாந்தன் ஜியின் பதிலே கவிதையாக வருகிறது.
நீக்குவரைந்தது,பாய்ந்தது ,ஆடியது. நாகின்.
:) KAVITHAI. Naagin Vaijayantthi.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்தநாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் இறைவனை மனதாற பிரார்த்தித்து கொள்கிறேன்.
இரு திலகங்களின் பாடல்கள் என்றுமே இனிமையானதுதான்..அதில் கருத்தும் இனிமையும் எப்போதும் போட்டி போட்டுக் கொண்டு பிரகாசிக்கும். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா... வணக்கம். இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி. இரு திலகங்களின் இந்த இரு பாடல்களும் வெவ்வேறு வகையில் ஸ்பெஷல், இலையா?
நீக்குஇனிய காலை வணக்கம் ஸ்ரீராம் மற்றும் எல்லோருக்கும். கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா பாடல் பிடிக்கும் நிறைய கேட்டதுண்டு. ஆனால அடுத்த பாடல் வரிகள் வைத்துச் சொல்ல இயலவில்லை அப்புறம் கேட்டுவிட்டு வருகிறேன் ஸ்ரீராம்...மற்ற தகவல்களும் அப்புறம் வாசித்துவிட்டு வருகிறேன்
பதிலளிநீக்குகீதா
வாங்க... கேட்டு விட்டு வந்து சொல்லியும் விட்டீர்கள் கீதா... நாந்தான் லேட்!
நீக்குஎனக்கு சிலபல பாடல் வரிகள் முழுவதும் மனதில் பதிந்து விடும்... அவ்வகையில் அமைந்தவை இந்த பாடல்கள்... பதிவுகளில் ரசித்து எழுதிய பாடல்கள்...
பதிலளிநீக்குஎனது முந்தைய பதிவில் 'வரிகளை' மாற்றி எழுத நினைத்த பாடல்களில் இன்னொரு (அமைதி!) பாடல் :-
// கடவுள் இருக்கின்றான்...
அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
காற்றில் தவழுகிறாய்...
அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா? //
வாங்க DD... மாற்றி எழுதி பார்பபது ஒரு சிறப்பு. ஆனான் நீங்கள் சொல்லி இருக்கும் வரிகளில் தவழ்பவருக்கே அது கண்ணில் தெரியாமல் (உணராமல்) எப்படி இருக்கும்? பார்ப்பவரைப் பார்த்துக் கேட்க வேண்டிய கேள்வி அல்லவா அது?!
நீக்குநேற்று வைரம்.. இன்று மாணிக்கம் !
பதிலளிநீக்குநாளை?
நீக்குமுதல் பாடலை க்யூபாவில் ஒரு இந்திய அஃபிஷியல் ரிசப்ஷனில் முதலில் தயங்கி, பிறகு சத்தமாக பாடியிருக்கிறேன். Delegation-ல் வந்திருந்த ஒரு ராஜஸ்தான் ஐஏஎஸ் அதிகாரி ஹிந்திப் பாட்டொன்றைப் பெருமையாகப் பாடி முடிக்க, பக்கத்தில் உட்கார்ந்திருந்த எனது ஹெட் ஆஃப் த மிஷன் (தமிழ் லேடி) என்னைக் கிள்ளிவிட்டதால் நான் பாட நேர்ந்தது. இந்தப்பாட்டின் வரிகள்தான் எனக்கு அப்போது முழுசாக ஞாபகத்தில் இருந்தது எடுத்து விட!
பதிலளிநீக்கு’ஆண்டவன் உலகத்தின் முதலாளி’யும் பிடித்த பாடல். டி எம் எஸ் பரபரப்பின்றி பாடுமாறு இசையமைப்பு.
ஹலோ ஏகாந்தன் அண்ணா நீங்க பாடுவீங்களா?!!!! ஆஹா அப்ப ஒரு ஃபைல் ப்ளீஸ்!! வெள்ளிக்கிழமை கூட பகிரலாம் தான் இங்கு ஸ்ரீராம் என்ன வேண்டம் என்று சொல்லப் போறாரா என்ன? வழக்கமான இந்தப் பாடல்கள் பதிவுடன் நேயர்கள் யாரேனும் பாடியதைக் கூட இங்கு பகிரலாம். இதைக் கேவாபோபா என்று சொல்ல முடியாது. ஹா ஹா ஹா ஹா. எல்லோரும் பேக் அப் தான். யாராவது விரும்பி ஷேர் செய்யலாம்.
நீக்குஏகாந்தன் அண்ணா நீங்க முதல்ல தொடங்கி வைங்க...ஸ்ரீராம் இப்போதைக்கு வர மாட்டார் ஸோ நான் சொல்லிட்டு ஓடிடலாம்..
கீதா
பாடினேன் என்றுதான் சொன்னேன். கேட்டவர்களுக்கு அது எப்படி இருந்தது என்கிற இன்புட் என்னிடம் இல்லையே.. அஃபீஷியல் ஃபங்ஷனாதலால் யாராலும் எழுந்து ஓட முடியவில்லை போலும். ஹா..ஹா.!
நீக்குஅடடே... நன்றாகவே பாடுவீர்கள் போலவே... நேற்று என் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் சற்றும் எதிர்பாராமல் நன்றாகக் பாடியதைக் கேட்க ஆனந்த அதிர்ச்சி... அவரிடமிருந்து அப்படி இனிமையாக ஒரு பாடலை நான் எதிர்பார்த்திருக்கவில்லை!
நீக்குஅருமையான பாடல்கள்
பதிலளிநீக்குடி.எம்.எஸ். எல்.ஆர்.ஈஸ் விரிவாக்கத்தை ரசித்தேன் ஜி.
நன்றி ஜி.
நீக்குஅனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா.. வணக்கம்.
நீக்குஇரண்டு பாடல்களும் மிகவும் பிடித்த பாடல்.
பதிலளிநீக்குமிக இனிமையான பாடல்கள்.
பகிர்வுக்கு நன்றி.
எல்.ஆர். ஈஸ்வரி ஹம்மிங்க் செய்யும் பாடல்கள் மிக அருமையாக இருக்கும்.
டி.எம்.எஸ் , எல்.ஆர்.ஈஸ்வரி முழுபெயரையும் குறிப்பிட்டது அருமை.
நன்றி கோமதி அக்கா.
நீக்குஇரண்டு பாடல்களும் மிகவும் பிடித்த பாடல்கள். கேட்டு ரசித்தவை.
பதிலளிநீக்கு"இல்லை என்று சொல்வதுந்தன் இடையல்லவா" - கவிஞருக்கு அந்தக்கால நடிகைகளைப் பார்த்தும் தைரியமாக இந்த வரிகளை வைத்தது குறும்புதான்.
தமன்னா வரப்போவது ஞானக்கண்ணில் தெரிந்திருக்கும்!
நீக்குஏகாந்தன் சார் ... ஹை ஃபை...
நீக்குநம்ம ஶ்ரீராமாவது பொருத்தமான படமா போட்டிருக்கலாம்னு நினைச்சா, அவருக்கு த படம் செலெக்ட் பண்ணத் தெரியாது... ஹா ஹா ஹா
பாருங்க சைக்கிள் கேப்ல தமன்னானு சொன்னதும் நெல்லை புகுந்துவிட்டார்...
நீக்குகீதா
//கவிஞருக்கு அந்தக்கால நடிகைகளைப் பார்த்தும் தைரியமாக இந்த வரிகளை வைத்தது குறும்புதான்.//
நீக்குஹா.. ஹா... ஹா... எனக்கும் தோன்றியது நெல்லை. கவிதைக்கு பொய்யழகு!
இடையில்லா அழகிக்கு நான் நிஷாந்தியை செலெக்ட் செய்திருப்பேன்!
நீக்குகாலை 5:29வரை பதிவு வெளியிடப்படவில்லை. கொஞ்சம் தலைவலி என்று திரும்பவும் தூங்கச் சென்றுவிட்டேன்.
பதிலளிநீக்குஇப்போது பார்த்தால் அந்த சமயத்தில் கில்லர்ஜி பக்கத்தில் இருந்திருக்கிறீர்கள்.
அதென்ன அவ்வளவு துல்லியக் கணக்கு? நேரங்கள் மாறுபடலாமே...!
நீக்குஇரண்டுமே இனிய பாடல்கள். கேட்டுக் கொண்டு இருக்கிறேன்.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்கு//உண்டென்று சொல்வதுந்தன் கண்ணல்லவா வண்ணக் கண்ணல்லவா
பதிலளிநீக்குஇல்லையென்று சொல்வதுந்தன் இடை அல்லவா மின்னல் இடை அல்லவா?//
அனைவருக்கும் கால் வணக்கம். கண்ணதாசனுக்குதான் என்ன ஒரு கற்பனைத் திறன். இடையே இல்லாத ஒரு மங்கையை கற்பனை செய்து அந்த வரிகளில் சிறிதும் விரசமில்லாமல் எழுதுவது அவரால் மட்டுமே முடியும் ஒன்று. ஒரு நிமிடல் கண் மூடி இன்றைய பாடல்களையும் அன்றைய பாடல்களையும் ஒப்பிட்டு பாருங்கள். நான் சொல்வது 100/100 உண்மை என்பது புரியும்.
அதில் என்ன சந்தேகம் ரமாஸ்ரீ?
நீக்குகாலை வணக்கத்தை கால் வணக்கம் என்று வெளியிட்டதற்கு மன்னிக்கவும்.
பதிலளிநீக்குநாங்கள் முழு வணக்கமாகவே ஏற்றுக்கொண்டு விட்டோம்!! :P
நீக்குமுதல் பாடல் நிறைய முறை கேட்டிருக்கிறேன். மிகவும் பிடித்த பாடல். சில பாடல்களில் இப்படி ஹம்மிங் அழகாக இருக்கும். இப்போது நினைவுக்கு வருவது 'காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ..' பாடல். இரண்டாவது பாடல் காதில் விழுந்திருக்கிறது, அனால் ரசித்து கேட்டேன் என்று சொல்ல முடியாது. இப்போது கேட்கும் பொழுதுதான் அதன் இனிமை புரிகிறது. காதை திறந்ததற்கு நன்றி.இது சிவாஜி பாடல் என்று நினைத்திருந்தேன்.
பதிலளிநீக்குவாங்க பானு அக்கா.. பார்த்தீர்களா? எம் ஜி ஆரின் இயல்புக்கு இது மாதிரி பாடல் எதிர்பார்த்திருக்க முடியாது!
நீக்குஎனக்கு மிகவும் பிடித்த பாடல் அந்த முதல் பாடல். அருமை அருமை.
பதிலளிநீக்குநன்றி.
நீக்கு// இப்படி ஒரு கதாபாத்திரத்தில் துணிந்து நடித்திருக்கிறார்.../
பதிலளிநீக்குதுணிந்து?.. அவர் துணிச்சலில் என்ன சந்தேகம் வந்தது?.. அது தான் ஊர் அறிந்ததாயிற்றே!..
அதானே?
நீக்கு//களையெல்லாம்கண்கள் சொல்லும் ... //
பதிலளிநீக்குகலையெல்லாம் கண்கள்
ஆமாம்.. மாற்றவேண்டும் ஜீவி ஸார்... நன்றி.
நீக்கு//கடவுள் மறுப்புக்குப் பெயர் போன.. //
பதிலளிநீக்குஇந்த பெயர் போன என்ற வார்த்க்தை எப்படி வந்தது?.. ஆக்சுவலி, பெயர் போன என்றால் பொருள் என்ன?
புதன் கிழமைக்கான கேள்வியோ, கெள அண்ணா?..
அப்பாடி.. அப்போ இப்போ பதில் சொல்லவேண்டாம்!
நீக்குஅப்படீன்னா இதையும் புதன் கேள்வியாகச் சேர்ந்துக்கொள்ளுங்கள் கேஜிஜி சார்.
நீக்கு'பழம் பெரும்' என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன. 'பழம் பெரும் புலவர்', 'பழம் பெரும் நடிகை' என்றெல்லாம் சொல்கிறோமே.
கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா - மாயாமாளவகௌளை ராகம் பேஸ்..
பதிலளிநீக்குஅடுத்த பாடல் இப்போதுதான் கேட்கிறேன் ஸ்ரீராம். பொன்னை விரும்பும் பூமியிலே பாடலையும் மனிதன் கடவுளாகப் பிறக்க வேண்டும் என்ற பாடலையும் கூடவே லிங்க் செய்ய வைக்குது.
கீதா
/// மனிதன் கடவுளாகப் பிறக்க வேண்டும்..///
நீக்குஆனாலும் உங்களுக்கு மிகவும் பேராசை..
அந்தப் பாடல் -
கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்...
ஓ... அந்தப் பாடல்களும் இதே டியூனா? அதென்ன சொல்வீர்கள், மெட்லி, சரியா?
நீக்குதமிழ் வலையுலகில் கொட்டிக்கிடக்கும் நூற்றுக் கணக்கான தமிழ் வலைப்பூக்களை ஒன்றிணைக்கும் ஓர் அரிய முயற்சியில் களத்தில் இறங்கியிருக்கிறது நமது வலை ஓலை வலைத் திரட்டி. நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 22 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஏனைய வலைத்தளங்களும் விரைவில் இணைத்துக் கொள்ளப்படும்.
பதிலளிநீக்குதற்போது, தங்களது வெள்ளி வீடியோ : அதில் நல்லவர் வாழும் சமுதாயம் நிச்சயம் ஒருநாள் மலரும் பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
எமது வலைத் திரட்டிக்கு உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.
உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்
எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்
இதேவேளை, வலைச்சரம் வலைத்தளம் போன்று வலைப் பதிவர்களை ஒருங்கிணைக்க எழுத்தாணி எனும் தளத்தையும் நாம் உருவாக்கியுள்ளோம். இந்த தளத்தில் தங்கள் சுய அறிமுகத்துடன் தாங்கள் விரும்பிய பதிவுகளை பதிவிடலாம். வலைச்சரம் போன்று வாரம் ஒரு ஆசிரியருக்கு வாய்ப்பு வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு: தொடர்பு
இந்த நிலையில், அடுத்த கட்டமாக தமிழுக்காக ஒரு அகராதியையும் நாம் உருவாக்கியுள்ளோம். இந்த அகராதிக்கு நீங்களும் பங்களிக்கலாம். அகராதி---->>> சொல்
நன்றி சிபா... அகராதி புதிதாக இருக்கிறது!
நீக்குசிவாஜியின் இரு பாடல்களுமே பிடிக்கும். எம்.ஜி.ஆரை பிடிக்காததால் அவர் பாடல் எதுவுமே ரசிப்பதில்லை
பதிலளிநீக்குவாங்க ராஜி... எம் ஜி ஆர் பிடிக்காதா உங்களுக்கு? அதனால் என்ன, பாடலை ரசிக்கலாமே!
நீக்குராஜி மா. எம் ஜி ஆர் பாடல்களைக் கேட்க மிகவும் பிடிக்கும்.
நீக்குஇசை,பொருள் சிலபாடல்களைத் தவிர நன்றாக இருக்கும்.
காவேரிக்கரை இருக்கு போன்ற பாடல்கள் ஒலிபெருக்கிகளில் ஒலித்த காலத்தில் நாங்கள் மொட்டை மாடியில் படித்த வண்ணம் கேட்டு ரசிப்போம்.
விகல்பம் அறியாத காலம்.
//காவேரிக்கரை இருக்கு போன்ற பாடல்கள் ஒலிபெருக்கிகளில் ஒலித்த காலத்தில் நாங்கள் மொட்டை மாடியில் படித்த வண்ணம் கேட்டு ரசிப்போம். விகல்பம் அறியாத காலம்... //
நீக்குமனதின் குரலை வார்த்தைகளில் பொதித்துச் சொல்ல சிலரால் தான் முடிகிறது. அந்த சிலரில் நீங்கள் முதல் வரிசையில்
இருப்பதாக பல நேரங்களில் நினைத்துக் கொள்கிறேன்.
அதெல்லாம் இனியதொரு காலம்...
நீக்குகவிஞர் சுரதா அவர்களது வரிகளில் என்றால் -
மலரினும் மெல்லியது காதலே!...
அத்தகையத மெல்லிய காதலைக் கூட வெளியே சொல்ல முடியாமல் எண்ணத்தில் அடை காத்து அடை காத்து அவிந்து போன நெஞ்சங்கள் பலப்பல...
எல்லாவற்றுக்கும் மேலாக குடும்பப் பொறுப்பு கௌரவம் இரண்டும் தோள்களில் ஏற்றிக் கொண்ட சுமைகள்..
அன்றைய சாதாரண குடும்பங்களில் மூத்த பெண்ணும் மூத்த பையனும் அனுபவிக்காத வலிகளா?...
இன்று எல்லாம் தண்ணீர் தெளித்து விடப்பட்ட உதவாக்கரைகள்...
இவைகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் .... கெட்ட ஊடகங்கள்...
காலே அரைக்கால் முழத் துணியுடன் மகள்.. அவளுடன் அவளைப் பெற்ற அப்பன்...
இப்படியான படத்தைதும் வெளியிட்டு ஜன்ம சாபல்யம் தேடிக் கொள்ளும் பத்திரிக்கைகள்..
மதி கெட்ட இளவட்டங்களும் போகும் வழி தெரியாமல் அலைகின்றன..அழிகின்றன..
@ துரை செல்வராஜு:
நீக்குஅந்தக் கால மென்காதலைப்பற்றி, வெளிப்படுத்த இயலாது உள்ளேயே அவஸ்தைப்பட நேர்ந்த மென்னிதயங்கள் சில/பலதின் வேதனைபற்றி நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
இந்தக் காலத்தில் உலா வரும் சில ஆண்கள், பெண்கள் - அதாவது அப்படி தங்களை நினைத்துக்கொண்டிருக்கும் நபர்களைப்பற்றி வாயைத் திறந்து ஏதாவது சொன்னால், மௌத்வாஷும் உடனே தேவைப்படும்..
மௌத் வாஷ் கூட இரசாயனம்... நல்லதல்ல என்கிறார்கள்..
நீக்குஏலக்காய் கிராம்பு இவற்றுடன் கடுக்காய் தோலையும் சேர்த்துக் கொதிக்க வைத்து வடிகட்டி ஆறியதும் வாய் கொப்பளிக்க வேண்டும்...
ஏலக்காய், கிராம்பு, கடுக்காய் போன்ற சங்கதிகளை தமிழர்கள் மீள்-கண்டுபிடிப்பு செய்வார்களா? அல்லது வெள்ளைக்காரன் என்ன சொல்கிறான் என வாய்பார்த்து நிற்பார்களா?
நீக்குஇரண்டுமே அருமையான பாடல்கள்
பதிலளிநீக்குஜீவி சார்,
பதிலளிநீக்கு60களில் வந்த சிவாஜி,எம் ஜி ஆர் பாடல்களில்
மென்மையை மட்டும் தெரிந்து கொண்டவர்கள்.நாங்கள்.
உங்கள் நல் வார்த்தைகளுக்கு மிக நன்றி.
அதை அழகாகச் சொல்லி இருக்கிறார் துரை.
நல் உணர்வுகள் எங்களை நல்வழிக்கு அழைத்துச் சென்றன.
அருமையான பாடல்கள்
பதிலளிநீக்கு