கெங்கேரி ரயில் நிலையத்தில் அருகில் (ஒரு நாளுக்கு 400 ருபாய்) காரை நிறுத்தி விட்டு, skytravels and tours லிருந்து வந்த innova வில் பயணம் தொடர்ந்தது. ஓட்டுநர் பாபு போன்றவர்களால் தான் அந்தக் கம்ப்பெனி தன் சேவையை நன்கு செய்ய முடிகிறது .
அவரைப் பற்றிய குறிப்புகள் அவ்வப்போது இடைச்செருகலாக
அங் ங் ..ங் ..ங்கே தூரத்தில் ...
இவர்தான் ...
விநாயகர்!
கோவிலுக்குப் போகிறவர்களுக்கா அந்த போக்குவரத்து அறிவிப்பு?
டாங்க் டிசைன் வேடிக்கையாக இல்லை?
மேகம் திரளுது ..
மழை வரப் பாக்குது ..
வீசியடிக்குது காத்து..
அப்போ என்ன..சூடா ஒரு ..
என்ன சாப்பிடலாம்..
உள்ளே காத்திருந்த போது
எப்போ வருவாரோ
இனிய ஞாயிறு காலை வணக்கம்.
பதிலளிநீக்குபடங்கள் மிகத் தெளிவு.
எங்கே பயணம் என்று தெரியவில்லையே.
ஆஞ்சனேயர் மிக அழகு.
வாங்க வல்லிம்மா... இனிய காலை வணக்கம். படங்களில் ஒன்றில் இருக்கும் அறிவிப்புப் பலகையில் இருக்கும் எழுத்துகளை பார்த்தால் கன்னட எழுத்துகள் மாதிரியோ, தெலுங்கு எழுத்துகள் மாதிரியோ இருக்கிறது இல்லை?
நீக்குகாலை வசக்கம்.
நீக்குஇங்க இடுகை வெளியிட்டு விளக்கம் சொல்பவருக்கே கண்ணைக்கட்டி காட்டில் விட்ட நிலைமையா? அடப்பாவமே
காலை வணக்கம் நெல்லை... வாங்க... எனக்கு எழுத்து எல்லாம் ஒரே பியத்துப்போட்ட ஜிலேபி, ஜாங்கிரியாதான் தெரியுது... கன்னடமா,தேரழுங்கா தெரியவில்லை!
நீக்கு//வசக்கம்.// hahahahahahahaahaahaahaa
நீக்குவசக்கமா? கொரோனா பாதிப்பா !
நீக்குஏகாந்தன் சார்.... பயணத்தில் குளிர், மழை, குளங்கள், கடலில் குளித்தது போன்றவை கொஞ்சம் உடல் நிலையை அசைத்துவிட்டது. (பஞ்ச த்வாரகை கஷ்டமான பயணம், நிறைய தூரம் பேருந்துப் பயணம் தூக்கமின்மை எல்லாம் இருக்கும் என எச்சரித்ததற்கு மாறாக கேக் வாக் போன்று அமைந்துவிட்டதே என்று நினைத்தது கண்ணேறு ஆகிவிட்டது போலும்).
நீக்குஎதிலோ, கொரோனா வைரஸ் பாதிப்பிருந்தால் 10 செகண்ட்ஸ் கூட மூச்சை இழுத்துப்பிடித்து வைத்திருக்க முடியாது என்று படித்தபிறகு அவ்வப்போது 50 செகன்டுகளாவது மூச்சை நிலைநிறுத்தி... இது கொரோனா இல்லை எனப் புரிந்துகொள்கிறேன்.. ஹாஹா ஹா
ஜிலேபி... ஜாங்கிரி.... நாக்கில் நீர் ஊறுது...
நீக்குசரிதான்...!
நீக்கு//ஏகாந்தன் சார்.... பயணத்தில் குளிர், மழை, குளங்கள், கடலில் குளித்தது போன்றவை கொஞ்சம் உடல் நிலையை அசைத்துவிட்டது. (பஞ்ச த்வாரகை கஷ்டமான பயணம், நிறைய தூரம் பேருந்துப் பயணம் தூக்கமின்மை எல்லாம் இருக்கும் என எச்சரித்ததற்கு மாறாக கேக் வாக் போன்று அமைந்துவிட்டதே என்று நினைத்தது கண்ணேறு ஆகிவிட்டது போலும்).//
நீக்குநெல்லைத்தமிழன் சார், எப்படியோ போய் தரிசனம் முடித்து வந்து விட்டீர்களே. மிகவும் மகிழ்ச்சி. உங்களுடன் பேசுவதிலேயே கொஞ்சம் புண்ணியம் வருமென்றால், நாங்களும் புண்ணியவான்கள்தான். இந்த கொரோனாவை பற்றி அதிகம் பயம் கிளப்பி விடுகின்றார்களோ என்று கூட சமயத்தில் தோன்றுகிறது. தொலைபேசியை எடுத்தவுடனே ரெகார்டட் சம்பாஷனையை போட்டு பயமுடுத்துகிறார்களோ என்று நினைக்க வைக்கிறது. ஜாக்கிரதையாக இருக்கலாம். அதற்காக பயத்தில் செயல் படக் கூடாது என்பது என் கூற்று.
நெல்லையாரே, ராஜஸ்தானில் ஏழு, எட்டு வருடங்கள் இருந்தும் நாத் த்வாரா போனதில்லை. அவர் மட்டும் 2,3 முறை போயிருக்கார். எனக்கும், குழந்தைகளுக்கும் கொடுத்து வைக்கலை! அதை நினைக்கையில் உங்களிடம் கொஞ்சம் பொறாமை வருது! :))))))
நீக்கு@ கொரோனா காலத்திலும் அதிரடி ஆன்மீகப் பயணத்திலிருக்கும் உங்களைப் பாராட்டித்தான் ஆகவேண்டும். நீண்ட பயணத்தின்போது வெவ்வேறு இடங்களின் காற்று, தண்ணீர் என்பது உடம்பைக் கொஞ்சம் அசைக்கத்தான் செய்யும். அதற்கும் மேலே ஆண்டவனே அதிகாரி!
நீக்கு@ ரமா ஸ்ரீனிவாசன்: //..ஜாக்கிரதையாக இருக்கலாம். அதற்காக பயத்தில் செயல் படக் கூடாது என்பது என் கூற்று.//
“Prepare but do not panic " என்பதுதான் ’சார்க்’ கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய நாடுகளுக்கான இந்தியாவின் ’மெஸேஜ்’ என்று பிரதமர் மோதி ’SAARC’ மாநாட்டில் சற்றுமுன் பேசியிருக்கிறார்.
கீசா மேடம்.... பஞ்ச த்வாரகை, புஷ்கர், கோகுலம், ப்ருந்தாவன், மதுரா, ஆக்ரா, குருஷேத்திரம் ஆகியவைகளை 10 நாட்களில் கவர் பண்ணினோம். ஒவ்வொன்றும் 300-500 கி.மீ தொலைவு. நான் எப்போதும் நினைப்பதுதான். இந்தியா வந்த புதிதில், முதல் முறையாக எ.பி. மூத்த ஆசிரியரின் சதாபிஷேகத்துக்குச் சென்றிருந்தோம். அப்போது நங்கநல்லூரில் புராதனமான கோவில்களித் தரிசனம் செய்தோம். (கிட்டத்தட்ட இரு வருடம்?) அப்போதிருந்து வரிசையாக கோவில்கள் என்று அவ்வப்போது போய்க்கொண்டே இருக்க்றேன்(றோம்). திருவரங்கத்துக்கே மூன்று முறை வந்துவிட்டேன் (இரண்டாம் தடவைதான் உங்களைச் சந்தித்தேன். சமீபத்தில் வந்திருந்தபோது-அம்மா மண்டப காவேரியில் குளியல்... நீங்க அம்பேரிக்கா பயணம்... இருந்திருந்தாலும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. குழுத் தலைவர் காவேரியில் நாங்கள் குளித்து உடை மாற்றி, பெரிய பெருமாள் மற்றும் 4-5 சன்னிதிகளைச் சேவித்து, பிறகு உணவு உண்டுவிட்டு, அங்கிருந்து தொடங்கி பாண்டிய நாடு திவ்யதேசம், மலைநாடு திவ்ய தேசம் என்று 10 நாட்கள் பயணம். மலைநாட்டு திவ்யதேசங்களைச் சேவித்த போது என் மனமோ எங்கு பால்பாயசம் கோவிலில் கிடைக்கும் என்பதில் சென்றுகொண்டிருந்தது. அதாவது பிரசாத வாய்ப்பு இருந்தால் உடனே வாங்கிடலாம்னு. ஆனா எல்லாக் கோவில்களிலும் நாங்கள் அங்கிருந்தவரை பிரசாதம் ரெடியாகவில்லை இல்லை காலையிலேயே காலியாகிவிட்டது என்ற நிலைமை. இரண்டு கோவில்களில் டப்பாக்களில் அடைக்கப்பட்ட நெய்ப்பாயசம் மட்டும்தான் வாங்க முயன்றது. குருவாயூரில் நெய்ப்பாயசம் வாங்கினேன். பால்பாயசம் கேட்டபோது கவுண்டர் மூடிவிட்டார்கள். மீண்டும் 2 மணி நேரம் கழித்துத்தான் திறப்பார்களாம், அதற்குள் நாங்கள் குருவாயூரை விட்டு கிளம்பியிருப்போம். அப்போ ஒரு தம்பதி என்னிடம் வந்து, அவர்கள் வாங்கிவைத்திருந்த 1 லிட்டர் பால் பாயச டப்பாவைக் கொடுத்தார்கள். அவர்கள் சொன்னது, அவர்கள் இன்னும் 5 மணி நேரத்துக்குமேல் தலத்தில் இருக்கப்போவதால் பிறகு வாங்கிக்கொள்வோம் என்றார்கள். எனக்கு அது தெய்வச் செயல் என்று பட்டது)
நீக்குஇந்தப் பயணத்தில்-த்வாரகை வட இந்தியர்களைப்போன்ற பக்தி எனக்கு வரலையே என்ற எண்ணம்தான் தோன்றியது.
@ரமா ஸ்ரீநிவாசன் - மேடம்... கொரானா - நீங்கள் நினைப்பதுபோல் எளிது அல்ல. அரசு 'பயத்தில் செயல்படுகிறது' 'நம்மைக் கொஞ்சம் பயமுறுத்துகிறது' என்பது உண்மை. ஆனால் அடிப்படை சுத்தம் குறைவாக உள்ள நம் நாட்டில் இது அவசியத் தேவை என்று படுகிறது. நம் தில்லி வெங்கட் அவர்கள், என்னிடம் கை குலுக்காதது மட்டுமல்ல, எங்களையும் ஜாக்கிரதையாக இருக்கணும் என்று சொன்னபோதுதான் அதன் தாக்கம் எப்படி என்று புரிபட ஆரம்பித்தது.
நீக்குபெரிய ஆஸ்பத்திரிகளைத் தவிர பல இடங்களில் அவேர்னெஸ் குறைவு. தனியார் ஆஸ்பத்திரிகளிலும், நீங்கள் பயணம் செய்தீர்களா, தொண்டை வலிக்கிறதா, ஜலதோஷம்போல் இருக்கிறதா.. எதற்கும் அரசு மருத்துவமனைக்குச் சென்றுவிடுங்கள் என்பது போன்ற புரிதல்தான் இருக்கிறது..ஹா ஹா
இதைச் சாக்கிட்டு முகமூடி, சானிடைசர் போன்றவற்றை (அர்த்தமில்லாமல் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது) வாங்கிக் குவித்து அவை சாமானியர்களுக்குக் கிடைக்க ஒட்டாமல் செய்வது அல்லது அதீத விலைக்கு விற்பது என்பதுதான் டிரெண்டாக இருக்கிறது.
படங்கள் கதை சொல்கின்றன...
பதிலளிநீக்குநன்றி ஜி.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். மைசூர்ப் பயணமா? அங்கே முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னாடி இந்திர விலாஸ் என்றொரு ஓட்டல் இருந்தது. நான் சொல்வது 2010 ஆம் ஆண்டுகளில். அதுவரை "பெண்"களூர், மைசூர் அடிக்கடி போய்க் கொண்டிருந்தோம். இந்திர விலாஸில் சாப்பாடு முக்கியமாய்க் காபி நன்றாக இருந்தது.
பதிலளிநீக்குஅப்படியா அப்போ அது கன்னட எழுத்துதானா? மைசூரா? காலைவணக்கம் கீதா அக்கா, நல்வரவு, அன்றி.
நீக்குமுதல் படத்தில் இருப்பது "பெண்"களூரு விதான் சபாக் கட்டிடம் போல் இருப்பதால் மைசூர்ப் பயணமா என்று கேட்டேன். ஏனெனில் மற்றப் படங்கள் வழியில் எடுக்கப்பட்டிருக்கின்றன போலும்.
நீக்குஓஹோ... வரிசையா சிந்திக்கறீங்க... நான் பெங்களூரு போனது ஒரு ஒரு முறை. அதுவும் ஒரு சதாபிஷேகத்துக்கு
நீக்குஓஹோ... வரிசையா சிந்திக்கறீங்க... நான் பெங்களூரு போனது ஒரு ஒரு முறை. அதுவும் ஒரு சதாபிஷேகத்துக்கு அரை நாள் இருந்து விட்டு வண்டியிலேயே ஹோசூர் வந்து விட்டோம்!
நீக்குஇஃகி,இஃகி, அங்கே சர் சிவி.ராமன் நகரில் வீடு கூடப்பார்த்துட்டோம். கடைசி நிமிஷத்தில் என் உள்ளுணர்வு வேண்டாம்னு சொல்லிடுத்து! அடிக்கடி பெண்களூரில் DRDO complexஇன் விருந்தினர் விடுதியில் கறுப்புப் பூனைப் பாதுகாப்பில் தங்கி இருக்கோம்.
நீக்கு// கறுப்புப் பூனைப் பாதுகாப்பில் //
நீக்குயார், நம்ம டெய்சிப்பிள்ளையின் பாட்டியா?
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் Black Cat Cammondos! :)))))
நீக்குஓ... அப்படித் தெளிவாச் சொல்லணுமில்லோ...
நீக்கு//கறுப்புப் பூனைப்படை பாதுகாப்பில்// -மக்களுக்கு நீங்க அவ்வளவு டேஞ்சரா கீசா மேடம்?
நீக்குநெல்லையாரே, மக்களுக்கு நான் டேஞ்சர் எனில் இந்திய ராணுவத்தின் கறுப்புப் பூனைக் கமான்டோஸ் எதுக்கு எனக்குப் பாதுகாப்புக் கொடுக்கணும்? இஃகி,இஃகி, பாதுகாப்பு எங்களுக்கும் எங்களோடு தங்கி இருந்த மற்ற டிஆர்டிஓ ஊழியர்களுக்கும்! அந்த விருந்தினர் விடுதியைச் சுற்றி நிற்பார்கள். அவங்க பணி நேரம் மாற்றும் போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன்.
நீக்குகீசா மேடம்... நான் உங்கள் இடத்தில் இருந்திருந்தால் அதனை போட்டோ எடுத்து வைத்துக்கொண்டிருப்பேன். அது வாழ்நாளில் நடக்கும் அபூர்வ சம்பவம் அல்லவா?
நீக்குநான் இருந்த ஊரில் கொஞ்சம் புரட்சிக் குரல் வந்தபோது, மக்கள் கூடின இடத்தில் இருந்த மிகப் பெரிய நினைவுச் சின்னத்தை அரசு உடைத்துத் தள்ளியது. அதுமட்டுமல்லாமல் ஊருக்குள் டாங்கிகள் நடமாடின. மக்களும் குப்பைத் தொட்டிகளை (பெரிய இரும்பினாலானது, தெருவுக்கு இரண்டு மூன்று இருக்கும்) ரோடில் கவிழ்த்தும், டயர் எரித்தும் சில இடங்களைச் சூறையாடியும் பிரச்சனை கொடுத்துக்கொண்டிருந்தனர். ஆனால் இதில் பெரிய அதிசயம் என்னவென்றால், புரட்சி இளைஞர்கள் கடைக்கு முன்பாக டயர்களை எரிப்பார்கள், போலீஸ் கவச வண்டி வரும், அவர்களைத் தடி, துப்பாக்கி கொண்டு (ரப்பர் புல்லட்) துரத்துவார்கள். ஆனால் அருகிலேயே நாங்கள் நிம்மதியாக நடந்துகொண்டிருப்போம்.
இவைகளின் பல கூறுகளை நான் புகைப்படம் எடுத்து வைத்தேன். ஹா ஹா
நெல்லைத் தமிழரே, அங்கே எல்லாம் நீங்க நினைக்கிறாப்போல் புகைப்படங்கள் எடுக்க முடியாது. எடுப்பதைப் பார்த்தால் அவ்வளவு தான். நம்ம ரங்க்ஸ் விசாரணைக்கு உள்ளாகும்படி ஆயிடும்! மிகவும் பாதுகாப்புக்குரிய இடங்கள்! நாங்க அந்த அலுவலக ஊழியர்கள்/குடும்பமென்பதால் எங்களை அங்கே தங்க அனுமதித்தார்கள்.அப்படியும் விடுதியை விட்டு வெளியே வரும்போதும் சுற்றிவிட்டு மீண்டும் உள்ளே வரும்போதும் அடையாள அட்டையைக் காட்டணும். எல்லாத்துக்கும் மேலே அப்போ எங்களிடம் இருந்தது ஃபில்ம் மாற்றும் கானன் காமிரா தான். அதையும் நாங்க கொண்டு போகவில்லை. ஏனெனில் படம் எடுக்கக் கூடாது என்பது தெரியும்.
நீக்குSky Travels and Tours அங்கேயும் இருக்கா? நாங்க எங்கே போனாலும் விமானப் பயணச் சீட்டு அவங்க மூலமாத் தான் பல வருடங்களாக. இங்கே ஸ்ரீரங்கத்திலும், திருச்சியிலும் இருக்கு!
பதிலளிநீக்குgrrrrr..... எனக்கு இதற்கெல்லாம் பதில் தெரியாது!
நீக்குhehehehehehe
நீக்குமுதலில் போர்டை அரைகுறையாகப் பார்த்து ஹோளிகேமனே என்று நினைத்தேன் (போளிகள் செய்யும் கடை/வீடு). எங்கே போகும் இந்தப் பாதை - பாடல் பாடாத குறைதான்.
பதிலளிநீக்குநல்ல பாட்டாச்சே... இளையராஜா குரலில் நல்லாயிருக்கும் நெல்லை!
நீக்குமழை வந்ததா...?
பதிலளிநீக்குதெரியும்... அடுத்த வாரம் தெரியும்.
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குகாலை வணக்கம் ... வாங்க...
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் இறைவனை மனதாற பிரார்த்தித்து கொள்கிறேன்.
பயணம் எங்கேயாயினும் படங்கள் நன்றாகத்தான் இருக்கிறது.
வானம் இருண்டு காற்று துணை வந்த பின்னும் மழைக்கு காத்திருக்கும் படங்கள் அருமை.
அழகான முகப்பு மண்டப வாசலில் இருக்கும் ராமரின் வரவுக்காகக் உள்ளே மண்டியிட்டு (தன்னை காண வரும் பக்தர்களுக்கு காட்சியளித்தபடி இருந்தாலும்) வாசலிலேயே காத்திருக்கும் ஆஞ்சநேயர் படமும் அன்பில் நிறைந்த பக்தியை தருகிறது.
சூடான காபியா, இல்லை உணவா என்ற குழப்பத்தில் அதற்கு காத்திருக்கும் பயணிப்பவர்கள் படமும், பிண்ணனியும் அழகாக உள்ளது.
இதில் எப்போ வருவாரோ.. எந்தன் கலி தீர.. என்ற அழகான பாடலுடன் யார் யாருக்காக காத்திருக்கிறார்கள் என தெரியவில்லையெனினும், இன்றைய ஞாயறு, நாளை வரும் திங்களுக்கு காத்திருக்கிறது. பொதுவாக காத்திருத்தல் என்பது சுகமானதுதானே...!
பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
//பயணம் எங்கேயாயினும் படங்கள் நன்றாகத்தான் இருக்கிறது.//
நீக்குஆஹா... நன்றி. யார் வருவார், எப்போ வருவார், எங்கே வருவார்? பார்ப்போம்.
காலை வணக்கம், வாங்க கமலா அக்கா.
பயணம் சிறக்கட்டும். எங்கே செல்லும் இந்தப் பாதை? தெரிந்து கொள்ள நானும் காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குவாங்க வெங்கட்... அடுத்த வாரம் விடை கிடைக்கிறதா என்று நானும் காத்திருக்கிறேன்!
நீக்குகுறளின் குரலை இன்னும் காணோம்!
பதிலளிநீக்குஎனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்.
நீக்குவாழிய நலம்.
ஶ்ரீராம் நல்லது
நல்லது. ஆனாலும் குவைத் குரலைக் காணோம்!!
நீக்கு"ஹா ஹா ஹா" விட்டுப்போச்சு நெல்லை... ஸாரி...!!
நீக்குகொரோனா - துரை செல்வராஜ் சார் பணியில் எவ்வளவு தூரம் குறுக்கிடும் எனத் தெரியலை. உணவு சம்பந்தமான ஸ்டோர் இன்சார்ஜ்... நிறைய கட்டுப்பாடுகள் இருக்கலாம்... இல்லை விடுமுறை விட்டிருக்கலாம்.
நீக்குஓ... அப்படி ஒண்ணு இருக்கோ...
நீக்குஆமா இல்ல? துரைக்கு என்ன ஆச்சு? :(((((
நீக்குகர்ஃப்யூ என்று கேள்விப்பட்டேன். வதந்திகள் பரவக்கூடாது என்று தொலைத்தொடர்பு கொள்வதில் சிக்கலும் இருக்கலாம், கட்டுப்பாடுகளும் இருக்கலாம்.
நீக்குஎனக்கும் கன்னட தெலுகு ழுத்துக்சளில் வித்தியாசம் தெரியாதுஜிலேபி ஜாங்கிரிதான் ஹள்ளி மனே கெங்கேரிபோன்ற வார்த்தைகள் உதவுகின்றன
பதிலளிநீக்குஅடடே... நீங்கள் பெங்களூருவிலேயே இருந்தும் இப்படிச் சொல்கிறீர்களே ஜி எம் பி ஸார்...
நீக்குபயணம் பற்றிய படத் தொகுப்பு அருமை. தொடருங்கள்.
பதிலளிநீக்குதமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 14 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
தற்போது, தங்களது எப்போ வருவாரோ பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.
உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்
எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்
வாங்க சிபா... நம் ஆதரவு எப்போதும் உண்டு என்பது உங்களுக்கே தெரியும்.
நீக்குaஅனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம், வாங்க...
நீக்குபடங்கள் அருமை
பதிலளிநீக்குஅழகு
நன்றி நண்பரே...
நீக்குபயணத்தில் எடுத்த படங்கள் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குகர்நாடகா போல தான் இருக்கிறது.
பயணம் ஆரம்பிக்கும் போது எடுத்த படங்கள் போலும்.
இருக்கலாம் கோமதி அக்கா... நன்றி.
நீக்குஇந்தத் தடவை போட்டோகளுக்கான தலைப்பு சுவாரஸ்யப்படவில்லை. ஒரே நேரத்தில் கிடுகிடுவென்று தலைப்பு போட்டால் இயந்திர கதியில் அமைந்து விட வாய்ப்பு உண்டு. ஒரு வேளைக்கு மூன்று போட்டோக்கள் என்று எடுத்துக் கொள்ளலாம். தலைப்புகளில் வித்தியாசம் காட்டுவதில் தான் போட்டோக்களும் சிறக்கின்றன.
பதிலளிநீக்குமன்னிக்கவும் ஜீவி ஸார்... அடுத்த முறை சுவாரஸ்யமாக போட முயற்சிக்கிறோம்.
நீக்குஅவரைப் பற்றிய குறிப்புகள் அவ்வப்போது இடைச்செருகலாக--- இது முந்தின பாராவின் கடைசி வரி.
பதிலளிநீக்குஆக, அந்த முதல் படத்திற்கு தலைப்பிடாமல் விட்டிருக்கிரீர்கள்.
விநாயகர் தலைப்பு அந்த வெள்ளைக் கட்டிட கோயிலுக்கா?.. நல்ல ஆராய்ச்சி போங்கள்...
இருக்கலாம். ஹிஹிஹி...
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குபயணப்படங்கள் அருமை.
பதிலளிநீக்குநன்றி குமார்.
நீக்குஅனைவருக்கும் வணக்கம்...
பதிலளிநீக்குஇரண்டு நாட்களாக வலைத்தளத்திற்கு வர முடியவில்லை...
கல்வி நிலையங்கள் அனைத்தும் கால வரையறையின்றி மூடப்பட்டு விட்டன...
வெள்ளிக் கிழமையோடு விமான நிலையம் முற்றாக மூடப்பட்டு விட்டது..
அத்துடன் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப் பட்டு விட்டன...
நாள் முழுதும் காவல்/ சுகாதாரத் துறையினர் சுற்றி வந்து கூட்டம் கூடாமல் தடுக்கின்றனர்..
இவ்வளவு களேபரத்துக்கு இடைய Net Pack முடிந்து விட்டது... கடைகள் மூடப்பட்டு இருப்பதால் உடனடியாக Recharge செய்ய முடியவில்லை...
நலம் கேட்ட அனைவருக்கும் நன்றி....
நாளை அல்லது மறுநாள் அனைவரையும் சந்திக்கிறேன் - வலைத் தளத்தில் தான்!...
வாங்க துரை செல்வராஜூ ஸார்... காலை வணக்கம். அவதிதான் என்று தெரிகிறது. இங்கும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு வருகின்றன. நிறைய ஐ டி கம்பெனிகள் வொர்க் பிரம் ஹோம் அறிவித்துள்ளன... பத்திரமாக இருங்கள்.
நீக்குகூடவே குளிர் அறையில் இருந்த பொருட்கள் அனைத்தையும் இட மாற்றம் செய்யும் வேலையும் சேர்ந்து கொண்டது...
பதிலளிநீக்குமீண்டும் கல்வி வளாகம் திறக்கப்படும் போது தான் அங்கு வேலை... அது வரைக்கும் அங்கே இங்கே என்று பல இடங்களிலும் வேலை....
Take care
நீக்கு