ஞாயிறு, 22 மார்ச், 2020

தோஷிகா கிமோகோ மிகாயோ கிமோனா...


சாப்பிட்டு வெளியே வருவதற்கும் மழை விடவும் சரியாக  இருந்தது

செடி கொடி மரங்கள் கட்டடங்கள் எல்லாம் பளிச்சென்று மழையில் குளித்திருந்தன..

'இவர்' ரெஸ்ட்டாரெண்ட் வேறு வைத்திருக்கிறாரா?!!


கிளைக் கோப்பையில் மர ஐஸ்க்ரீம்....



போகுமிடமெல்லாம் சந்தன மணம். கொஞ்சம் காரமும்...  ஆ...   காவேரி!



திபெத் gift shop  என்றதும் தெரிந்திருக்குமே எங்கே போகிறோம் என்று?

 நம்மை இங்கே இறக்கிவிட்டு பாபு பார்க்கிங் நோக்கிப் போய்விட்டார்




சரிவான சாலையில் சறுக்கிச் செல்லும் கார்...!


மக்கள் வந்துகொண்டே இருப்பார்களா இல்லை மழை பெய்து முடிந்த பின் புறப்பட்ட ஈசல்களா?




பைல குப்பா என்கிற இடத்தில் இருக்கும் புத்த மடம்



அடுத்த மழைக்குள் உள்ளே போய்விடவேண்டும்என்ற அவசரத்தில்


எல்லாம் திரும்பும்போது  பார்த்துக் கொள்ளலாம் என்று தொடர்ந்தோம்


பெரிய குடியிருப்பு தான்!


இது ஏதோ திரைப்படத்தில் பார்த்த இடம் மாதிரி இல்லை?  காதல் மன்னன்?



தலாய்லாமாவின் ஒன்று விட்ட தம்பியோ...



வந்துடும்...என்று வரவே வந்துவிட்டது மழை



சற்று நேரம் வெளியே நின்று பின் உள்ளே மின்சாரம்  வந்ததும் 



உள்ளே போனவர்கள் உடனே த்யானத்தில் ......



எதிரே ....அது தான் ....பார்க்கிறீர்களே ! யார் யாரென்று சொல்லுங்கள் பார்க்கலாம்



வெளியே அழகான நந்தவனம்

இந்த வகை செடிகளை அருகே இருக்கும் நர்சரியில் 1000, 500 என்கிறார்கள்


காமெராவை திருப்பி வைத்து என்ன எடுக்கிறார்கள்?


இதே..  இதே!


curator வீடு மிக அழகு 

54 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் அனைவருக்கும்.
    மழையும் படங்களும், புத்தர் கோவிலும்

    கொடுக்கப் பட்டிருக்கும் தலைப்புகளும்
    மிக அருமை.
    புத்தர் கோவிலில் இருக்கும் மூன்று தெய்வங்களில்
    இருவர் கௌதம புத்தர்.
    மற்ற இருவரும் யாரோ.
    சிங்கப்பூரில் இதே மாதிரி கோவில் பார்த்தோம்.
    அச்சு அசல் இதே ப்ளான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் வல்லிம்மா... வாங்க..்். எல்லா இடங்களிலும் புத்தர் சிலைகள் ஒரேமாதிரிதான் இருக்குமோ..

      நீக்கு
  2. நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல்...

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
  3. காமிராவைத் திருப்பிப் போடும் கில்லாடிகள் சூப்பர்...

    படங்கள் எல்லாம் அழகு....

    பதிலளிநீக்கு
  4. நள்ளிரவில் இருந்து இங்கே மழை தூறிக் கொண்டு இருக்கிறது...

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். இது கூர்கில் இருக்கு இல்லையோ? அப்படின்னாத் தலைக்காவிரிக்குச் செல்கிறார்களா? வழியில் இந்தக் குட்டி திபெத்தைப் பார்த்துட்டுப் போகிறார்கள் போல!

    பதிலளிநீக்கு
  6. அந்த 3 சிலைகள் முதலாவது தங்க புத்தர், அடுத்தது பத்ம சாம்பவா, கடைசியில் அமித்யாயுஸ் எனப் படிச்சிருக்கேன். ஆனால் புத்தர் தவிர்த்து மற்றவர்கள் யார்னு தெரியலை. கேள்விப் பட்டதில்லை. இந்தப் பதிவின் மூலம் பதில் கிடைச்சால் தெரிஞ்சுக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Budhof Padma Sambava, one of his first disciples, and Amithyayus, the formulator of contemporary medicine

      நீக்கு
  7. மன்னிக்கவும், நட்டுவில் தான் புத்தர். இருபக்கங்களிலும் மற்ற இருவர். படத்தை இப்போத் தான் பெரிது பண்ணிப் பார்த்தேன். தப்பாய்ச் சொல்லிட்டேன். :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹி, "நடு"வில் தான் என்பது "நட்டு"வில்னு வந்திருக்கு, பார்க்கலை.

      நீக்கு
    2. அழுத்தம் திருத்தமா சொல்றீங்கன்னு நினைச்சேன்...!

      நீக்கு
  8. இதுவும் ஒரு தங்கக் கோயில் என்றும் சொல்வார்கள்.

    பதிலளிநீக்கு
  9. கேமராவை திருப்பி பார்ப்பதை ரசித்தேன் ஜி

    பதிலளிநீக்கு
  10. தலைக்காவிரிக்குப் போகும் எண்ணமும் வழியில் இந்தக் குட்டி திபெத்தைப் பார்க்கும் ஆவலும் உண்டு தான். ஆனால் என்னமோ நடக்கவே இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீசா மேடம்... நான் வரும் வாரம் செல்லவேண்டியது (வைரமுடி சேவை). நடக்குமா என்றுதான் தெரியலை.

      நீக்கு
    2. கோயில் திறந்து உற்சவங்களும் நடைபெறும் சூழ்நிலை வந்தால் கட்டாயம் கிடைக்கும்.

      நீக்கு
  11. புகைப்படங்கள் அனைத்தும் மிக அழகு!
    'கிளைக்கோப்பையில் ஐஸ்கிரீம்" வாசகம் அதையும்விட அழகு!!

    பதிலளிநீக்கு
  12. படங்கள் அனைத்தும் அழகு. புத்தர் கோவில்கள் - வடக்கே நிறைய இடங்களில் இருக்கிறது. ஹிமாச்சலப் பிரதேசம், ஒடிஷா, பீஹார் என மூன்று நான்கு மாநிலங்களில் பார்த்ததுண்டு. அப்படி ஒரு அமைதியான சூழல் அங்கே...

    பதிலளிநீக்கு
  13. பூக்களும், புத்த மடத்தின் படங்களும், அதிகம் கவர்ந்தது...

    பதிலளிநீக்கு
  14. படங்களையும் அதற்கான வாசகங்களையும் ரசிக்க முடிகிறது. தலைக்காவேரி செல்லும் வழியில் ஒரு குட்டி திபெத்தா? Interesting.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பானு இது கூர்க்கில் இருக்கின்றது. நாங்கள் எங்கள் பெண்களுடன் இரண்டு அல்லது மூன்று தடவைகள் சென்றுள்ளோம். என்ன ஒரு அழகு, என்ன ஒரு வசந்தமான சூழல். எங்கெங்கு காணிலும் மரங்களடா என்று பாடலாம். என் சிறிய பெண்ணின் classmateஇன் பாட்டி அங்கு ஒரு பிரம்மாண்டமான பங்களா cum homestayவின் சொந்தகாரர். எனவே, நாங்கள் கூர்க் சென்றால், அவருடன் தங்கி விடுவோம். தேன்,மிளகு, காப்பிக் கொட்டை சகிதம்தான் அவர்கள் வீட்டிலிருந்து சென்னைக்கு கிளம்புவேன்.இந்த கோவில் பார்க்க வேண்டிய ஒன்று. என்ன அமைதி, என்ன ஒரு அமப்பான வாழ்க்கை. நாங்கள் அங்கிருந்த ஒரு புத்த பிக்ஷூவுடன் நண்பர்கள் ஆகி, அவர் சென்னையில் எங்கள் வீட்டில் வந்த இரண்டு நாட்கள் தங்கிவிட்டு சென்றார். அதே போல், தலைக் காவேரி பார்க்க மிக சாதாரணமாக இருக்கும். ஒரு சிறிய சதுரமான குழியிலிருந்து நீர் கொந்தளித்துக் கொண்டு வரும். இதற்காகவா தமிழகத்திற்கும் கர்னாடகத்திற்கும் இவ்வளவு தகராறு என்று கூட தோன்றும். ராஆனால், பார்க்க வேண்டிய ஒரு சுற்றுலா தலம். ஸ்ரீராம், அங்குள்ள யானைகள் நீரடும் ஆறு பார்த்தீர்களா ? என்ன ரம்மியமான ஒரு மரங்களும் செடி கொடிகளும் அடங்கிய ஒரு இடம். ஆஹா, ஆஹா !!!!!!!!!!!!!! மறுபடியும் போக வேண்டும் போல் இருக்கின்றது. படங்களுடன் நினைவுமுடித்தியதற்கு நன்றி.

      நீக்கு
  15. புத்த மடத்தின் படங்கள் நன்றாக இருக்கிறது. நேற்று இங்கு சிறிது நேரம் நல்ல மழை. மழையில் எடுத்த படங்களும் அழகு.

    கிளை கோப்பையில் மர ஜஸ்கிரீம் நன்றாக இருக்கிறது கற்பனை.

    பதிலளிநீக்கு
  16. தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 22 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    தற்போது, தங்களது தோஷிகா கிமோகோ மிகாயோ கிமோனா… பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    பதிலளிநீக்கு
  17. பயணத்துடன் சில படங்கள்... படங்களுடனே ஒரு பயணம்.... சிறப்பு....

    பதிலளிநீக்கு
  18. தலைப்பு அருமை. ஸ்ரீராம்.... பிடிங்க பாராட்டை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நெல்லை...   தலைப்பைப் பற்றிய முதல் பிரஸ்தாபம்.  ஆனால் ஏன் அந்தத் தலைப்பு என்று யூகிக்க முடிந்ததா?

      நீக்கு
    2. ஹா ஹா ஹா.... எப்படி இதனை நினைவு வைத்துக்கொண்டிருக்கிறீர்கள்? நானும் யோசித்துத்தான் கண்டுபிடித்தேன் (இணையத்திலும் செக் பண்ணிக்கொண்டேன்)... உலகம் சுற்றும் வாலிபன், நம்பியார்... ஹா ஹா ஹா

      நீக்கு
  19. ஃபோட்டோக்கள் பேசும் பொழுது அதற்கான குறிப்புகளே தேவையில்லை போலிரு7க்குஇ..

    பதிலளிநீக்கு
  20. படங்கள் அனைத்தும் அழகு.
    500-1000 விலை சொல்லும் மரங்கள் எங்கள் வீட்டில் சிவப்பு, மஞ்சள் ,ரோஸ் நிறங்களில் உள்ளன. இவரையும் ஒரு வகை கள்ளி இனம் போல தண்ணீர் அதிகம் தேவையில்லாதவை .

    பதிலளிநீக்கு
  21. படங்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றன. புத்தர் கோயில் மனதைக் கவர்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  22. படங்களின் கேப்ஷன்ஸ் நன்றாக இருந்தது என்றலும் தலைப்புத்தான் செம மிகவும் ரசித்தேன்...ஸ்ரீராம்!!கௌ அண்ணாவின் வாசனை வீசுது!! ஹிஹிஹி

    கூர்கில் குட்டி திபெத் என்பதால் எல்லாரையும் யோசிக்க வைக்க இப்படியான தலைப்போ?!! தலைப்பைப் பார்த்ததும் கண்டிப்பா ஆஹா எல்லாம் பெண்களின் பெயரா இருக்கேன்னு ஒரு ஸ்வாரஸ்யத்தோடு வந்திருப்பாங்க. தோஷிகாநு பெயர் உண்டு...

    தோஷிகா - க்யூட்டி அடோரபிள்/ கிஃப்ட்
    மிகாயா - சுறு சுறுப்பு நேர்மை....
    கிமோனா - ஜப்பான் பெண்களின் உடை!!!
    மனதைக் கவரும் சுறு சுறுப்பான கிமோகா கிமோனா வில்!!!!!! ஹிஹிஹிஹி

    கீதா





    பதிலளிநீக்கு
  23. அந்தப் பெயர்களை கூகுளில் சும்மா டைப்பி அர்த்தம் என்னவா இருக்கும் என்று பார்த்தப்ப...இதுவும் கிடைச்சுச்சு

    //உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் எம்ஜியார் ஜப்பானிய கோவில் உள்ளே நுழையும்போது முக்காடு போட்டு குத்த வைத்து உட்கார்ந்து கண்களை உருட்டிபடி ‘தோஷிகா, கிமோகா’ என ரகசிய வார்த்தைகள் சொல்லும் தெற்றுப்பல் நம்பியார்//

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதெல்லாம் இன்னும் ஞாபகம் இருப்பது ஆச்சர்யம் தான்!..

      நீக்கு
  24. இந்த புத்த மடத்திற்குச் சென்றிருக்கிறேன். அருமையான இடம். படங்களும் பகிர்வும் நன்று.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!