புதன், 18 ஆகஸ்ட், 2021

எந்த ஒரு படைப்பாளியும், ஏன் பாராட்டுகளை மட்டுமே எதிர்பார்க்கிறான்?

 

நெல்லைத்தமிழன் : 

1. பத்து ஆங்கிலேயர்களிடம் பத்தாயிரம் இந்தியர்கள் அடிமைப்பட்டுக் கிடந்தது எதைக் காண்பிக்கிறது? நம்மிடமிருந்த கயவர்களையா இல்லை அடிமைப் புத்தியையா இல்லை பயத்தையா?    

# ஆளாளுக்கு நாட்டாமை என்று இந்தியா பல சிற்றரசுகளாகச் சிதறிக்கிடந்தது, ஆங்கிலேயர்களுக்கு வசதியாகப் போய்விட்டது. சுய லாபத்துக்காக அண்ணனை தம்பி காட்டிக் கொடுப்பது போல பல வஞ்சனைகள் நடந்ததை வரலாறு சொல்கிறது.  நம்பிக்கை துரோகமும் சுயநலமும் அடுத்தவரைக் காட்டிக்கொடுத்தலும் கயமையல்லாது வேறென்ன ?

& அடிமை புத்திதான் முதல் காரணம். 

2.  எந்த ஒரு படைப்பாளியும், ஏன் பாராட்டுகளை மட்டுமே எதிர்பார்க்கிறான்? விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வராதது ஏன்?

# படைப்பாளி ஒரு உத்வேகத்தில் எதையோ உருவாக்குகிறான்.  அதில் குறைகளைக் கண்டு பிடித்து இது சொத்தை, அது சொள்ளை என விமர்சனம் வரும்போது அதை ஏற்றுக்கொண்டாகவேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லையே.

& கீழே கொடுக்கப்பட்டிருக்கும் quotable quote உங்கள் கேள்விக்கு பதிலாக அமைந்துள்ளது. 

படைப்பாளிக்கு விமரிசனம் என்பது ஒரு touch. பாராட்டு : good touch. கண்டனம் : bad touch. 
 

3. பெங்களூரில், 30-35 ரூபாய் மசால்தோசை. அதிகபட்சம் 70 ரூபாயில் காலை உணவு சாப்பிட, ஏகப்பட்ட ரொம்ப டீசண்டான ப்ராண்டட் கடைகள் இருக்கின்றன. ஆனால் சென்னையில் எதை எடுத்தாலும் 90 ரூபாய்க்கு மேல் என்று உணவுக்கொள்ளை எப்படி நடக்கிறது?

#  ஒரு பொருளுக்கு சந்தையில் இருக்கும் வரவேற்பையும் வாங்குபவரின் வசதியையும் அடிப்படையாகக் கொண்டு விலை நிர்ணயம் செய்யப் படுகிறது.  அது போக, அதிகமான அளவில் விற்பனை இருந்தால் விலை குறைவாக இருப்பது சகஜம்.  பெங்களுருவில் இந்த இரண்டு அம்சங்களும் உண்டு.

4. 60 வயது ஆகிவிட்டால், எதில் எதில் கவனமாக இருக்கவேண்டும்? என்ன என்ன நடைமுறைகளைப் பின்பற்றணும்?

#  பேச்சில் கவனமாகவும் (பிறர் மனம் புண்படாத வகையில் பேசுதல்) உடல் சார்ந்த செயல்களில் எச்சரிக்கையாகவும் இருந்தால் நிம்மதி. உணவில் நிதானம், உறக்கத்தில் நேரம் தவறாமை, பணப் பரிமாற்றங்களில் எச்சரிக்கை இவை முக்கியமானவை.  இவற்றுள் பலவும் எந்த வயதுக்கும் பொருந்தும்.

5. என்னிடம் 'உணவைப்' பகிர்ந்துகொள்ளாத கெட்ட குணம் உண்டு. வாங்கும்போதே யாருக்கு எவ்வளவு வேணும் என்று கேட்டு, எனக்கும் சேர்த்து வாங்கியபிறகு, என் பங்கை நான் பகிர்ந்துகொள்ள மாட்டேன். இதுபோல உங்களிடம் உள்ள கெட்ட குணம் என எதைக் கருதுகிறீர்கள்?

 #  உங்களிடம் இருப்பது கெட்ட குணம் இல்லை.  விவாதம் என்று வரும்போது அளவுக்கு அதிகமான வேகம் காட்டுவது என்னிடம் உள்ள கெட்ட குணம். சில நாட்களாக அதைக் குறைக்கும் முயற்சியில் இருக்கிறேன்.


பானுமதி வெங்கடேஸ்வரன்: 

 மாற்றங்களை சுலபமாக ஏற்றுக் கொள்வது ஆண்களா? பெண்களா?

$ மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளப் படுகின்றனவா அல்லது ஏற்படுத்தப்படுகின்றனவா என்பதே என் சந்தேகம். ஆணோ பெண்ணோ, தலைவிதியை  நொந்துகொண்டு சமாளிப்பவர்களே அதிகம். 

# மாற்றங்களை ஏற்பது என்றால் அதை எதிர்க்காமல் இசைந்து போவது என எடுத்துக் கொண்டால் இதில் ஆண் அல்லது பெண் என்பதால் பெரிய வேறுபாடு இராது. இது தனிநபர் மனப் பக்குவம் சார்ந்தது. 

& ஆண்கள்தான்! 

மனைவி தூங்கி எழுந்து வர அவளுக்கு முன் எழுந்த கணவன் அவளுக்கு காபி போட்டுத் தருவது போல் விளம்பரங்கள் வருகின்றன. எதிர்காலத்தில்,"அன்பே என்னை கை விட்டு விடாதே.." என்று அவள் காலை கட்டிக் கொண்டு கதறுவது போல காட்சி திரைப்படங்களில் இடம் பெறுமா?"

$ காலைப்பிடித்துக் கதறும் காலத்துக்கு முன்னரே உங்கள் கடைசி கேள்வி நிஜமாகலாம்.

# நீங்கள் கேட்பதைப் பார்த்தால் தற்சமயம் பெண்கள் இப்படிக் கதறுகிறார்கள் என்றல்லவா ஆகிறது ? 

& விளம்பரங்களில்தானே ' மனைவி தூங்கி எழுந்து வர அவளுக்கு முன் எழுந்த கணவன் அவளுக்கு காபி போட்டுத் தருவது' போல் வருகின்றன. போகட்டும் - மன்னித்துவிடுங்கள். 

 இந்த கேள்வியின் கொசுறாக ஒரு கேள்வி, விளம்பரத்தில் வரும் கணவனைப் போல மனைவிக்கு முன்னால் எழுந்து அவருக்கு காபி போட்டு கொடுத்திருக்கிறீர்களா?

# எழுந்ததுண்டு.  காபி கொடுத்ததில்லை. பல் துலக்காமல் காபியா ? சேச்சே. நினைத்தே பார்க்க முடியாது.

& எங்கள் இருவருக்குமே காபி குடிக்கும் பழக்கம் இல்லை. காபியை விட்டு, சில வருடங்கள் ஆகிவிட்டன. 

எதிர்காலத்தில் குடும்பம் என்னும் அமைப்பு உடையும், திருமணம் என்னும் நிறுவனமே இருக்காது என்கிறார்களே?

# இப்படி (குடும்பம் / திருமணம்) காணாமல் போகும் அறிகுறிகள் இல்லை எனினும் அவை பலவீனம் அடையலாம் என்பதற்கான மனப்பான்மை காணப்படுவது உண்மை.

சென்ற வார எங்கள் கேள்விகள்: 


இந்தக் கேள்விகளுக்கு, எங்கள் மற்ற ஆசிரியர்கள் சொல்லியிருக்கும் பதில்கள், கீழே. 

(பதிவில் கருத்துரைப் பகுதியில் எழுதப்பட்ட பதில்கள், மின்நிலா இதழ் எண் 65, ஆகஸ்ட் 16 - 2021 - பக்கம் எண் 19 ~ 22 - வெளியிடப்பட்டுள்ளன) 

 1.  $ அண்ணன் kgy, நான். படிக்கும் காலத்தில் கொடுத்த உந்துதல்

$ மனைவி. என் சம்பாத்தியத்துக்குள்  குடும்பம் நடத்தி சொந்தவீட்டுக் கனவை நிறைவேற்ற மிகவும் உதவியாக இருந்தவர். + ஒலிம்பிக்கில் இந்தியா. 

3 $ எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு வேலையிலும் 4 W & 1H என்று ஆரம்பித்தல்.

4 $ " அந்தக் காலத்தில் எல்லோரும் பாடிப்பாடித்தான் செய்திகள் சொல்வார்களா? " (Cd ராமாயணம் பார்க்கும்போது) பேரன்! 

" சிவாய நமஹா விஷ்ணுவே நமஹா என்பவர்கள் அக்னியே நமஹா என்று சொல்லாமல் அக்னியே ஸ்வாஹா என்பது ஏன்? " மீண்டும் அதே ராமாயணம்.

5 $ சகோதரர் வீட்டுக்கு விஜயம் செய்த சம்பந்தி அவர் வீட்டில் காய் கறிகளைக் கழுவி நறுக்கிக் கொடுத்துதவியது.

1. # என் ஆசிரியர் பிரான் ஒருவர்.  என் இசை ரசனையை முடுக்கிவிட்ட நண்பர் ஒருவர்.

2. # நாங்கள் இருக்கும் கட்டமைப்பில் அன்றாடம் சிறு குழந்தைகள் விளையாடுவதை பார்ப்பது என்னைக் கவர்ந்த ஒன்று. எங்கள் குடும்பத்தில் ஓரிரு இளைஞர்கள் தம் திறமையின் அடிப்படையில் சாதித்தது என்னை மகிழ்வித்த ஒன்று.

3 # எனக்கு என்று தனிப்பட்ட திறன் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு விஷயத்திலும் என்னை மிஞ்சக்கூடியவர்கள் எங்கள் குடும்பத்திலேயே உண்டு.

4. # பல ஆண்டுகளுக்கு முன்னால்  முதல் முறையாக ஒரு மரணம்.  என் மகள்  இறந்த உடலைத் தொட்டுப் பார்க்கவேண்டும் என்று கேட்டது மறக்க முடியாதது.  ( பூ, இவ்வளவுதானா? )

5. # அண்மையில் ஒரு நேர்மையான அதிகாரியைப் பெரிய பதவியில் அமர்த்தி அரசு ஆணை பிறப்பித்து என்னை வியப்பில் ஆழ்த்தியது ஒரு மாநில  முதல்வர் . = = = = =

கேள்விகள் கேட்டவர்களுக்கு எங்கள் நன்றி. தொடர்ந்து, நிறைய கேள்விகள் கேளுங்கள். 

= = = = 

73 கருத்துகள்:

  1. காலை வணக்கம் அனைவருக்கும்.

    //' மனைவி தூங்கி எழுந்து வர அவளுக்கு முன் எழுந்த கணவன் அவளுக்கு காபி போட்டுத் தருவது' // - அவ்வளவு மோசமாகவா அந்த 'மனைவி' காபி கூட போடத் தெரியாமல் இருக்கிறாள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லை..  வாங்க...   காபி போடத்தெரியாததாலா போடாமல் இருப்பார்?    வேறு காரணங்கள் இருக்கலாமல்லவா?  என்னைப் பொறுத்தவரை எனக்கு அதிகாலை எழுந்த (பல் விளக்கியதும்தான்) உடன் காபி வேண்டும். அதனால் நான் போட்டுவிடுவேன்.  அடுத்த கால் மணியில் அவர் எழுந்து வரும்வரை காத்திருப்பதில்லை!  பின்னர் பெரும்பாலும் எந்த செயலிலும் மனைவிக்கு உதவுவதில்லை.  அவர் நாள் முழுக்க ஓய்வில்லாமல் உழைப்பதற்கு இந்த காபி கொடுத்து அவரை ஏமாற்றுகிறேன்!

      நீக்கு
    2. ஆஹா... காலையில் வம்பை ஆரம்பித்து வைத்தால்தான் ஸ்ரீராமிடமிருந்து நெடிய பதில் வாங்கமுடியும் போலிருக்கிறது.

      நானும், முடிந்தபோதெல்லாம், காலையில், சாதம், பருப்பு (பையனுக்கு) வைத்துவிடுவேன், காயை கட் பண்ணிவைப்பேன், சப்பாத்தி என்றால் மாவு பிசைந்து வைத்துடுவேன். இது செய்யாத நாட்களும் உண்டு. ஞாயிறு என்றால்தான் மெதுவாகச் செய்தால் போதும் என்ற நிலை...

      இதெல்லாம் மிகச் சிறிய வேலை என்றாலும், ஏதோ நாமும் செய்தோம் என்ற உணர்வு.. அவ்ளோதான்

      நீக்கு
    3. ஹா..  ஹா..  ஹா...   உண்மைதான்.  சிறிய உதவிகள் செய்வதில் தவறில்லை.  இந்த காபி போடும் விஷயம் யதேச்சையாக இன்று காலை கோமதி அக்காவிடம் பேசும்போது அப்போதுதான் சொல்லிக் கொண்டிருந்தேன்.  எனவே இந்த பதில்.

      நீக்கு
    4. என்னிடம் சொன்ன போது ஸ்ரீராம் மனைவிக்கு காலையில் காப்பி போட்டு கொடுக்கிறார் என்று மகிழ்ந்தேன்.

      //அவர் நாள் முழுக்க ஓய்வில்லாமல் உழைப்பதற்கு இந்த காபி கொடுத்து அவரை ஏமாற்றுகிறேன்!//


      நாள் முழுக்க ஓய்வில்லாமல் உழைப்பதால் காபி கொடுத்து அவரை மகிழ்விக்கிறேன் காலையில், என்று சொல்லி இருந்தால் மகிழ்ச்சி அடைந்து இருப்பேன் அக்கா. இப்படி ஏமாற்றுகிறேன் என்று சொல்லி விட்டீர்களே!

      நீக்கு
    5. என் பக்கத்தில் எப்போதும் காபி இருந்து கொண்டே இருக்கும் இரவு படுக்கும் முன்னர் காபி குடித்துவிட்டுதான் தூங்குவேன் அதுமட்டும்ல்ல இரவு தூக்கத்தில் முழித்து எழுந்தாலோ அல்லது காலையில் எழுந்தாலோ காபி ஒரு வாய் குடிக்காமல் அடுத்த வேலை நடக்காது.. மனைவியிடம் காபியை எதிர்ப்பார்ப்பதில்லை ஈவினிங்க் வேலையில் இருந்து வந்த பின் அல்லது படுக்க போகும் முன் என் மகள் காப்பி போட்டு தருவாள்... அடுத்த வாரத்தில் இருந்து அதுவும் கட்டு அவள் எங்களை விட்டு வேறு மாநிலத்திற்கு படிக்க செல்லுகிறாள். வாழ்க்கையில் முதல் பிரிவை சந்திக்கப் போகிறேன் அதை நினைக்கும் போது எல்லாம் கண்ணில் கண்ணீர் வருகிறது அவளுக்கு தெரியாமல் அழுதுவிடுகின்றேன்

      நீக்கு
    6. உண்மைதான் மதுரை தமிழன் சகோதரரே.நம் குழந்தைகளின் பிரிவை (அவர்கள் நல்லதுக்காகத்தான் வெளியில் சென்று படிக்க, வேலை பார்க்க, அவர்கள் குழந்தைகளின் எதிர்கால நல் வாழ்க்கைகளுக்காக என்று நம்மை பிரிகிறார்கள்.) தாங்கிக் கொள்ள கஸ்டமாகத்தான் உள்ளது. நானும் பல சமயங்களில் இந்த வேதனையான தருணங்களை கடந்து வந்திருப்பதால், உங்கள் நிலையை உணர்கிறேன். என்ன செய்வது? மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள். நன்றி.

      நீக்கு
    7. //இப்படி ஏமாற்றுகிறேன் என்று சொல்லி விட்டீர்களே!//

      நான் இன்னும் அதிகமாக உதவவில்லை என்கிற குற்ற உணர்வு காரணம் அக்கா.

      நீக்கு
    8. /வாழ்க்கையில் முதல் பிரிவை சந்திக்கப் போகிறேன் அதை நினைக்கும் போது எல்லாம் கண்ணில் கண்ணீர் வருகிறது அவளுக்கு தெரியாமல் அழுதுவிடுகின்றேன்//

      புரிந்துகொள்ள முடிகிறது மதுரை.  எனக்கும் சமீபத்தில்  'இப்படி நடக்க வாய்ப்பிருக்கிறதோ' என்கிற நிலை எழும்போதே கஷ்டமாக இருந்தது.  அதேபோல நீங்கள் உங்கள் பெற்றோரைப் பிரிந்து வெளிநாடு வந்தபோது அவர்கள் இதேபோல மனதளவில் கஷ்டப்பட்டிருக்கலாம்.

      நீக்கு
    9. //வாழ்க்கையில் முதல் பிரிவை சந்திக்கப் போகிறேன் அதை நினைக்கும் போது எல்லாம் கண்ணில் கண்ணீர் வருகிறது அவளுக்கு தெரியாமல் அழுதுவிடுகின்றேன்//

      படிக்கும் போது என் அப்பாவின் நினைவு வருகிறது.

      உங்கள் பாசத்தை உணர்ந்து கொள்கிறேன்.

      நீக்கு
  2. //குடும்பம் என்னும் அமைப்பு உடையும்// - இந்த அமைப்பு உடையாது. பதிலில் சொல்லியிருப்பதுபோல, பிடிக்காத உறவிலிருந்து பிறர் என்ன சொல்வார்களோ என்ற அச்சம் இல்லாமல், விலகிக்கொள்ளும் நிலையும், 'குடும்பம்' என்ற அமைப்பில் இருவருக்கும் சம பொறுப்பு உண்டு என்ற உணர்வும் சகஜமாகும் என்று நினைக்கிறேன். (நீ சமைச்சால், நான் காய் கட் பண்ணுகிறேன், பசங்களை நீ ரெடி பண்ணினால், பாத்திரம் நான் தேய்த்துவிடுகிறேன்..... என்பது போல. ஆனால், 'நீ இந்த சீரியல் பார்த்தால், நான் அந்த சீரியல் பார்த்து நேரத்தை வீணடிப்பேன்' என்பதுபோல அல்ல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எவ்வளவு இடங்களில் கூட்டுக்குடும்பம் அமைப்பு இருக்கிறது என்று அரசாங்கம் கணக்கெடுக்கலாம்!  இன்றைய பணி நிமித்த வசிக்கும் இடம், மற்ற காரணங்கள் போன்ற நடைமுறையினால் இது சாத்தியமாவதில்லை.

      நீக்கு
    2. கூட்டுக் குடும்பம் சக்ஸஸ் ஆகணும்னா, உடலால் முடிந்த வரை, ஏதேனும் உதவி செய்துகொண்டே இருக்கணும். உட்கார்ந்த இடத்திலிருந்து, அதைக் கொண்டுவா, இதைக் கொண்டுவா, டிவில அந்த சேனல் போடு, இதனை மாற்று என்று இருக்க ஆரம்பித்தால், ரொம்ப நாள் செல்லாது.

      நீக்கு
    3. நெல்லைத் தமிழன் நீங்கள் சொல்வது உண்மை.
      முடிந்தவரை உதவி செய்ய வேண்டும்.

      நீக்கு
  3. //மாற்றங்களை சுலபமாக ஏற்றுக்கொள்வது ஆண்கள்தான்// என்று எப்படிச் சொல்லுகிறீர்கள்? பெண், தான் வளர்ந்த இடத்தை விட்டு, புதுச் சூழலில் வாழ்க்கையை டீனேஜ் பருவத்துக்குப் பிறகு ஆரம்பித்து, கற்றுக்கொண்டு, புகுந்த இடத்துக்கே தலைவியாக வருவதைக் கண்டுமா, ஆண்கள் என்று சொல்ல மனம் வந்தது?

    பதிலளிநீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​வாங்க கமலா அக்கா.. வணக்கம்.

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      தங்களுக்கு இனிய திருமணநாள் வாழ்த்துகள். இன்று போல் பல்லாண்டு காலம்,சிறப்புடன் வாழ இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  5. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    எல்லோரும் என்றும் இனிய ஆரோக்கியத்துடன்
    மகிழ்ச்சியாக இருக்க இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  7. அன்பின் கமலாமா, நெல்லைத்தமிழன், ஸ்ரீராம்
    அனைவரும் மிகச் சுறுசுறுப்பாகக்
    காப்பியும் குடித்துக் கேள்வியும் கேட்டு பதிலும் வாங்கிக்
    கொண்டு ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடி
    கண்ணைக் கட்டுகிறது.:)

    இனிய நன்னாளுக்கான வாழ்த்துகள் மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வல்லிம்மா.... இங்க காபி, டீ, பால் இதெல்லாம் கிடையாது. நேரடியாக சாப்பாடுதான் (அது எப்போ வருதோ அப்போ..ஹாஹா)

      நீக்கு
    2. ? ஓ. !!! நல்ல வழக்கம் தான். ஆரோக்கியமாக
      இருங்கள்.

      நீக்கு
  8. சின்ன மகனுக்கு 18 ஆம் தேதி பிறந்த நாள்.
    அவனுக்கு வாழ்த்துகள் ஜோடித்து
    ஸ்விட்சர்லாந்துக்கு படங்கள் அனுப்பியதில் நேரம் போனதே தெரியவில்லை.
    இறைவன் அவனுக்கும் எல்லோருக்கும்
    நல் வாழ்க்கையயும் சந்தோஷத்தையும் ஆரோக்கியத்தையும்
    கொடுக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் மகனுக்கு எங்கள் வாழ்த்தையும் சேர்த்துச் சொல்லுங்கள்மா...

      நீக்கு
    2. 😍😍😍😍😍😍😍😍😍😍😍 Thanks ma Sriram. Really appreciate it.

      நீக்கு
    3. உங்கள் மகனுக்கு எங்கள் வாழ்த்துகளும். எப்படி வாழ்த்து அட்டை தயார் செய்திருப்பீர்கள் என்று உங்கள் பதிவில் போடுவீர்கள் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    4. வல்லி அக்கா, உங்கள் மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்

      நீக்கு
    5. வணக்கம் சகோதரி

      உங்கள் மகனுக்கு என் அன்பான பிறந்த நாள் வாழ்த்துகளும். சீரும், சிறப்புமாக, இன்று போல் என்றும் வாழ இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    6. நன்றி அன்பு கமலாமா. எல்லோர் அன்பும் மிகத் தேவை.

      நீக்கு
  9. உண்மைதான். சிறிய உதவிகள் செய்வதில் தவறில்லை. இந்த காபி போடும் விஷயம் யதேச்சையாக இன்று காலை கோமதி அக்காவிடம் பேசும்போது அப்போதுதான் சொல்லிக் கொண்டிருந்தேன். எனவே இந்த பதில்.'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''உங்களுக்கு நேரில் அழைத்து வாழ்த்துகள் சொல்ல வில்லை.
    என்றும் உங்களுக்கும் பாஸுக்கும்
    அனிவர்சரி வாழ்த்துகள் மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துகளுக்கு நன்றிம்மா...    என்ன தவம் செய்தேன்...

      நீக்கு
  10. எங்களுக்கெல்லாம் இந்தக் காப்பி அனுபவம் கிடையாது.
    காடராக்ட் செய்த அன்று
    சிங்கம் ஒக்கடே ஹோட்டலில் காப்பி வாங்கி , அதைச் சுத்தம் செய்த
    ஃப்ளாஸ்கில் கொண்டு வந்ததே
    ஒரு பெரிய ஆச்சர்ய மகிழ்ச்சி.:)))))))))))))))))))))))))))))))
    முன்னும் இல்லை பின்னும் இல்லை.

    பதிலளிநீக்கு
  11. """"""படைப்பாளி ஒரு உத்வேகத்தில் எதையோ உருவாக்குகிறான். அதில் குறைகளைக் கண்டு பிடித்து இது சொத்தை, அது சொள்ளை என விமர்சனம் வரும்போது அதை ஏற்றுக்கொண்டாகவேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லையே.""""""மிகப் பிடித்த பதில். பெரிய எழுத்தாளர்களுக்கு,

    அப்படி இருந்தால் எல்லா விமரிசனங்களையும்
    எதிர் கொள்ளும் திறமை இருக்கும்.
    பொதுவாக பெரிய எழுத்தாளர்களை விமரிசிப்பது
    அவர் எழுத்தைப் பிடிக்காதவர்கள்தான்.
    ஏதோ ஒரு பாதிப்பு வருவதால் தானே எதிர்மறைக் கருத்துகளைச் சொல்கிறார்கள்!!

    அபத்தமாக இருந்தால் படிக்காமல் விட்டு விடலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை.  பொதுவெளியில் எழுத்துகள் பகிரப்படும்போது விமர்சனங்களை எல்லா வகையிலும் எதிர்பார்க்கவேண்டும்.

      நீக்கு
  12. Pearl S.Buck was a favourite author for both of us. Nice quote from A NOBEL PRIZE WINNER.

    பதிலளிநீக்கு
  13. அனைவருக்கும் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  14. கேல்விகளும், பதில்களும் அருமை.
    நெல்லைத் தமிழன் கேள்விகளுக்கு முதல் கேள்விக்கும், 4வது கேள்விக்கும் பதில்கள் அருமை.
    மாற்றங்களை ஏற்றுக் கொள்வது
    இது தனிநபர் மனப் பக்குவம் சார்ந்தது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

    பதிலளிநீக்கு

  15. //60 வயது ஆகிவிட்டால், எதில் எதில் கவனமாக இருக்கவேண்டும்? என்ன என்ன நடைமுறைகளைப் பின்பற்றணும்?//

    60 வயதாகிவிட்டால் மூச்சுவிடுவதில் கவனமாக இருக்கணும் .. இல்லைன்னா நமக்கு சங்கு ஊதிவிடுவார்கள்

    பதிலளிநீக்கு
  16. கேள்வி பதில்கள் அருமை...

    "பாராட்டுங்க... பாராட்டப்படுவீங்க..." என்று முன்பு எழுதிய பதிவு ஞாபகம் வந்தது...

    "உள்ளம் இரண்டும் ஒன்று, நம் உருவம் தானே இரண்டு" என்றாகி விட்டால், காஃபியாவது டீயாவது...!

    பதிலளிநீக்கு
  17. இந்த வாரத்தின் கேள்விகளும் பதில்களும் ஸ்வாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் சகோதரரே

    இன்றைய கேள்வி பதில்கள் எப்போதும் போல் அருமை. கேள்விகளை திறமையுடன் கேட்டவர்களுக்கும். அதற்கு தகுந்த மாதிரி பதில்களை அளித்த ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  19. @ ஸ்ரீராம்..

    // உண்மை. பொது வெளியில் எழுத்துகள் பகிரப்படும்போது விமர்சனங்களை எல்லா வகையிலும் எதிர்பார்க்க வேண்டும்... //

    அப்படிக் கிடைக்காத பொழுதில் எழுதுதற்கான ஆர்வம் குறைந்து விடுகின்றது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை. எனக்கும் தோன்றியதுதான்.

      நீக்கு
    2. சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்ற முதுமொழி எக்காலத்துக்கும் எல்லா விஷயங்களுக்கும் பொருந்தும்.

      நீக்கு
  20. இட்லி, வடை அல்லது பொங்கல், பூரி அல்லது தோசை மற்றும் காபியுடன் கூடிய மினி டிபன் சென்னையிலும் 75-100 ரூபாக்குக் கிடைக்கிறது - சுகாதாரமான டிபன் கடைகள் (அன்னபூரணி, சங்கீதா, மயிலாபூர் மாமி). பெங்களூர் என்ன கொம்பா ?

    பதிலளிநீக்கு
  21. அடுத்த புதனுக்கான கேள்வி.. பெங்களூர் அப்படி என்ன கொம்பா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "பெண்"களூர் மட்டுமல்ல ஆந்திராவிலும் ஓட்டல்களில் உணவுப் பண்டங்கள் விலை குறைவே! அதோடு இல்லாமல் இங்கே தமிழகத்தில் 60 ரூபாய்க்குக் குறைந்து தோசை கிடைப்பதில்லை. சாதா தோசை தான்! அதையும் மொறுமொறுவெனக் கொடுப்பதாய்ச் சொல்லிக் கொண்டு தூள் தூளாய்க் கொடுக்கிறாங்க/இல்லைனா உடைச்சு எடுக்கிறாப்போல் கொடுக்கிறாங்க! :(

      நீக்கு
  22. ஸ்ரீராம் தம்பதிக்கு இனிய திருமணநாள் வாழ்த்துகள். கேள்வி பதில்கள் நன்று.

    பதிலளிநீக்கு
  23. தாமதமான திருமண நாள் வாழ்த்துகள் ஶ்ரீராம்/பாஸ்!

    @நெல்லை! "பெண்"களூர் மட்டுமில்லை திருப்பதியிலும் ஓட்டல்களில் உணவுப் பண்டங்கள் விலை குறைவு. ஜிஎஸ்டியும் சேர்ந்து இருவருக்கு 150 ரூபாய்க்குள் தான் ஆகிறது. இதைப் பற்றி முன்னரே ஒரு முறை சொல்லி இருக்கேன். தமிழ்நாட்டில் தான் எல்லாமே விலை அதிகம்! :(

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!