வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

வெள்ளி வீடியோ : கன்னத்தில் அடிக்குமடி முத்தத்தாலே வேண்டுமடி.. மத்ததெல்லாம் உன்னுடைய இதழ்களின் இஷ்டப்படி

 41 வயதாகும் கார்த்திக் தமிழ்க் குடும்பத்தில் பிறந்தவர்.  முறையாக இசை கற்றவர்.  அவர் நண்பரின் உறவினரான பாடகர் ஸ்ரீனிவாஸ் மூலம் தூண்டப்பட்டு மேலும் இசை கற்று ரஹ்மானிடம் அவராலேயே அறிமுகப் படுத்தப் பட்டார்.

ஹிந்தியில் பு(க்)கார் படத்துக்காக புதிய குரல்களைத் தேடிக்கொண்டிருந்த ரஹ்மான் இவர் குரலை டிராக் பாட உபயோகித்துக் கொண்டிருந்திருக்கிறார்.  அடுத்த ஹிந்திப் படத்தில் இவருக்கு ஒரு உச்சஸ்தாயியில் பாடும் ஆலாபனை ஒன்றைக் கொடுத்திருக்கிறார்.


பின்னர் தமிழில் பிரசாந்த் நடித்த ஸ்டார் படத்துக்காக முதல் பாடல் வெளிவந்திருக்கிறது.  பின்னர் இளையராஜா, வித்யாசாகர், மணிசர்மா, ரஹ்மான், என்று அனைவர் இசையிலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பாடி இருக்கிறார்.  சில படங்களுக்கு இசையும் அமைத்திருக்கிறார்.  உதாரணம் அரவான்.

இசைவிழா சமயத்தில் கர்னாடக சங்கீதப் பாடல்களை நவீன இசைக்கருவிகளுடன் இவர் பாடி இருந்ததை ஒருமுறை கேட்டிருக்கிறேன். ரசித்திருக்கிறேன்.  அப்புறம் பி பி ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு அஞ்சலியாய் ஒரு நிகழ்ச்சி.  அதில் அவரது பாடல்களை சில வரிகளாய் பாடி இருந்தார்.  நன்றாய் இருந்தது.

என் இளைய மகன் இவர் ரசிகன் என்பதால் சில பாடல்கள் கேட்டிருக்கிறேன், ரசித்திருக்கிறேன்.  முக்கியமாய் ஏழாம் அறிவு படத்தில் வரும் 'முன் அந்தி சாரலில்',  வேங்கை படத்தில் வரும் 'காலங்கார்த்தாலே' போன்ற பாடல்கள். தில்லுமுல்லு படத்தில் எஸ் பி பி பாடிய 'ராகங்கள் பதினாறும்' பாடலை கார்த்திக் மீண்டும் பாடி வரவேற்பைப் பெற்றாலும், எனக்கு எஸ் பி பி வெர்ஷனே பிடித்திருந்தது.

'மாலைப்பொழுதில் மயக்கத்திலே' படத்தில் அவர் பாடிய 'என்னுயிரே' பாடலை ரசித்திருக்கிறேன் என்று என் இளையவன் எனக்கு நினைவூட்டுகிறான்.

இளையராஜா இசையில் அவர் பாடிய இரண்டு பாடல்களை இன்று  பகிர்கிறேன்.  இளையராஜா இசை மோகமிழந்து போன காலகட்டத்தில் இந்தப் பாடல்கள் இரண்டும் மறுபடியும் அவரை நினைக்க வைத்தன.  பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றிபெற்றன.  இசை வெளியாவதற்கு முன்னதாகவே 22 மில்லியனுக்கு விற்பனையாயினவாம் ஆடியோ உரிமை.

கெளதம் மேனன் படம் 'நீதானே என் பொன்வசந்தம்'.   ஜீவா, சமந்தா, சந்தானம் நடித்த படம் ரசனையாய் இருந்தாலும் கெளதம் மேனனின் வழக்கமான பாணி வசனங்கள் சற்றே எரிச்சலடைய வைக்கும்.  சில காட்சிகளை ரசித்துப் பார்க்கலாம்.  

இந்த இரண்டு பாடல்களுமே ஒரு சுவாரஸ்யமான சூழ்நிலையில் வெளிப்படுவதாய் காட்சி அமைப்பு.  காட்சியையும் ரசிக்கலாம்.  பாடலின் இடையில் வரும் டயலாக் கடுப்பேற்றும்!

2012 ல் வெளிவந்த  படம்.  ஏகப்பட்ட விருதுகளை அள்ளிக் குவித்தது.

"காற்றைக் கொஞ்சம் நிற்கச் சொன்னேன்.."
 
இன்று பகிரப்போகும் முதல் பாடல். பாடல்கள்  நா முத்துக்குமார் எழுதி இருக்கிறார்.மேனனின் ஆஸ்தான பாடலாசிரியர் தாமரையை விட்டு விட்டு நா முத்துக்குமார் பக்கம் வந்திருந்தார்!

1975 ல் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்திருந்த முத்துக்குமார் பாலுமஹேந்திராவிடம் நான்கு வருடங்கள் பணிபுரிந்திருக்கிறார்.  பின்னர் மலபார் போலீஸ் படத்துக்காக முதல் பாடல் எழுதி இருக்கிறார்.  கிரீடம், வாரணம் ஆயிரம் படங்களுக்கு கதை வசனம் எழுதி இருக்கிறார்.  ஆனால் மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு 2016 ல் மறைந்தார்.

இந்தப் பாடலில் பல்லவியைவிட சரணங்கள் கேட்பதற்கு சுவாரஸ்யமாய் இருக்கும்.

காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன் 
பூப்பறித்து கோர்க்க சொன்னேன் 
ஓடி வந்து உன்னை சந்திக்க. 
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன், 
மேகம் அள்ளி வைக்க சொன்னேன், 
கண்ணை மூடி உன்னை சிந்திக்க.  

சுற்றும் பூமி நிற்க சொன்னேன்… 
உன்னை தேடி பார்க்க சொன்னேன்… 
உன்னை பார்த்து கேட்க சொன்னேன் 
என்னை பற்றி கேட்க சொன்னேன், 
என் காதல் நலமா என்று..  

நேரில் பார்த்து பேசும் காதல் ஊரில் உண்டு ஏராளம். 
நெஞ்சில் பார்த்து பேசும் காதல் நின்று வாழும் எந்நாளும். 
தள்ளி தள்ளி போனாலும் உன்னை எண்ணி வாழும் ஒரு ஏழை இதயம் நெஞ்சத்தை பாரடி.. 
தங்க மெத்தை போட்டாலும் உன் நினைவில் என்றும் தூக்கம் இல்லை ஏன் என்று சொல்லடி… 
சாத்தி வைத்த வீட்டில் தீபம் ஏற்றி வைக்க நீ வா. 
மீதி வைத்த கனவை எல்லாம் பேசி தீர்க்கலாம்.. ஹே ஹே ஹே…  

நேற்று எந்தன் கன்வில் வந்தாய் நூறு முத்தம் தந்தாயே… 
காலை எழுந்து பார்க்கும் போது கண்ணில் நின்று கொண்டாயே.. 
பார்த்து பார்த்து எந்நாளும் பாதுகாத்த என் நெஞ்சில் என்ன மாயம் செய்தாயோ சொல்லடி
உன்னை பார்த்த நாள் தொட்டு 
எண்ணம் ஓடும் தறிகெட்டு.. 
இன்னும் என்ன செய்வாயோ சொல்லடி 
என்னை இன்று மீட்கத்தான் உன்னை தேடி வந்தேனே.. 
மீட்டபோதும் மீண்டும் நான் உன்னுள் தொலைகிறேன்…  


முதல் பாடலைவிட இன்னும் அழகான பாடல் இரண்டாவது பாடல்.  
என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன் என்னும் இந்தப் பாடல் அழகான காதல், குறும்புப் பாடல்.  சமந்தாவின் ஊடலும், கோபமாய்க் காட்டிக் கொண்டாலும் ஜீவாவைத் தேடும் காதலும் காட்சியையும் அழகாக்கும்.  பாடலை வெகுவாக ரசிக்க வைப்பது கார்த்திக்கின் புதிய, இளமையான குரல்.


என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன் 
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன் 
நீ என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன் 
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்  
செல்ல சண்டை போடுகிறாய் தள்ளி நின்று தேடுகிறாய் 
ஆ ஆ ஆ அன்பே என்னை தண்டிக்கவும்  
புன்னகையில் மன்னிக்கவும் 
உனக்கு உாிமை இல்லையா  

கன்னம் தொடும் கூந்தல் ஒதுக்க 
நீ சாய்வதும் என்னை கொஞ்சம் பாா்க்கதானடி 
கண்ணை மூடி தூங்குவதை போல் நீ நடிப்பது 
எந்தன் குரல் கேட்கதானடி  
இன்னும் என்ன சந்தேகம் என்னை இனி எந்நாளும் 
தீயாக பாா்க்காதடி 
சின்னப் பிள்ளை போல நீ அடம்பிடிப்பதென்ன சொல்ல 
என்னை விட யாரும் இல்லை அன்பு செய்து உன்னை வெல்ல 
சண்டை போட்ட நாட்களைத்தான் 
எண்ணி சொல்ல கேட்டு கொண்டால் 
கணக்கும் பயந்து நடுங்கும்  

காதலுக்கு இலக்கணமே தன்னால் வரும் 
சின்ன சின்ன தலைக்கனமே 
காதல் அதை பொறுக்கணுமே 
இல்லையெனில் கட்டி வைத்து உதைக்கணுமே 
உன்னுடைய கையாலே தண்டனையை தந்தாலே 
என் நெஞ்சம் கொண்டாடுமே 
கன்னத்தில் அடிக்குமடி முத்தத்தாலே வேண்டுமடி 
மத்ததெல்லாம் உன்னுடைய இதழ்களின் இஷ்டப்படி 
எந்த தேசம் போனபோதும் என்னுடைய சொந்த தேசம் 
உனது இதயம் தானே  

51 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    எல்லோரும் எல்லா நாட்களிலும் இறை அருளுடன்
    சுகமாக இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. அன்பின் ஸ்ரீராம் இரண்டாம் பாடல் கேட்டிருக்கிறேன்.
    நா. முத்துக்குமாரின் பாடல்கள் வெகு இனிமை.ஒரு பெரிய அலையாக வந்து சாதித்துவிட்டுச் சென்று விட்டார்.
    இதே ஜீவா, சரண்யா நடித்து ஏதோ ஒரு படம்
    நினைவில்.அம்மா,பிள்ளை படம்.

    இந்த சமந்தா அப்போதிலிருந்து நடிக்கிறாரா!!!
    நீண்ட காலம் தான்.

    பதிலளிநீக்கு
  3. கார்த்திக் குரலில்'' முன் அந்திச் சாரலில்'
    மிகப் பிடிக்கும். நல்ல குரல் வளம்.
    இப்பொழுதும் பாடுகிறாரா தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  4. 90களிலா. இல்லை அதற்கும் பிறகா நினைவில்லை.
    நிறைய இவர் குரலில் பாடல்கள்
    வந்தன.
    நீங்கள் கொடுத்திருக்கும் இரு பாடல்களுமே
    மிக சுவை. நன்றாக இருக்கின்றன.
    பாராட்டுகள்மா.

    பதிலளிநீக்கு
  5. பாடல்களை விட தங்களது விளக்கம் அருமை ஜி

    பதிலளிநீக்கு
  6. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  7. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  8. பாடல்கள் பாடியவர் , பாட்டு எழுதியவர் பற்றிய விவரங்கள் தெரிந்து கொண்டேன்.
    பாடல்கள் இரண்டும் கேட்டு இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்க்கையிலும் ஆரோக்கியமும் மன அமைதியும் மேலோங்கப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  10. இந்தப் பாடல்களைத் தொலைக்காட்சி தயவில் கேட்டிருந்தாலும் பாடியவர் "கார்த்திக்" என்பது இப்போத் தான் தெரியும். நல்ல குரல் வளம். ஆனால் பிரகாசிக்கவில்லை போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். கார்த்திக் மட்டுமல்ல, வேறு சிலர் பாடியதும் பிடிக்கும். பெயர் கூட தெரியாது

      நீக்கு
  11. நா. முத்துக்குமார் மேலும் தொடர்ந்திருந்தால் நான் தமிழ்த் திரையின் புதிய பாடல்களை விரும்பிக் கேட்டிருப்பேன்...

    பதிலளிநீக்கு
  12. இசையோடு இரண்டாவது பாடல் வரிகளும் ஆகா...!

    பதிலளிநீக்கு
  13. இவரது சில பாடல்களை கேட்டு ரசித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  14. இரண்டு பாடல்களையுமே இப்போது தான் கேட்கிறேன்... இந்த காலத்திற்கேற்ற மாதிரி இருக்கின்றன..

    வாழ்க நலமுடன்...

    பதிலளிநீக்கு
  15. அனைவருக்கும் முகம் மலர இனிய காலை வணக்கங்கள்!
    நா.முத்துக்குமாரின் வரிகள் என்றும் இனிக்கும். முன்பு விகடனில் அவருடைய தொடர் படித்திருக்கிறேன். சிறு வயதில் தாயை இழந்து, நல்லதாய் இன்னொரு தாய் கிடைத்து வளர்ந்ததும், முயன்று சிறிது சிறிதாய் வாழ்வில் முன்னேறிய கதையை தனக்கே உரிய எளிய, ஆழமான நடையில் சொல்லியிருப்பார். "ஆனந்த யாழை மீட்டுகிறாய்" பாடல் நெகிழ்ச்சியை உண்டாகும் ஒவ்வொரு முறை கேட்கும் பொழுதும் . கார்த்திக்கின் பாடல்களும் ரசித்து கேட்பதுண்டு!முதல் பாடல் கேட்டிருக்கிறேன். இரண்டாவது இன்று தான் கேட்டேன். நல்ல பாடல்கள் பதிவிற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வானம்பாடி, வணக்கம். முத்துக்குமார் கட்டுரை வாசித்த நினைவு எனக்கும் வருகிறது.

      நீக்கு
  16. வணக்கம் சகோதரரே

    இன்றைய இரு பாடல்களையும் இன்றுதான் கேட்டு ரசித்தேன். கார்த்திக் பாடல்கள் என்று வீட்டில் என் குழந்தைகள் விருப்பத்துடன் சொல்லி கேட்டுள்ளேன். ஆனால் சரியாக அந்தப் பாடல்களை கூற நினைவில் இல்லை. அவரது குரல் வளம் சிறப்பாக உள்ளது. அவரைப்பற்றிய விபரங்களுடன் நல்ல இசையுடன் கூடிய அவரது நல்ல பாடல்களை தந்த பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் சகோதரரே

    நேற்று எங்கள் நலத்திற்காக, அன்புடன் பிரார்த்தித்து கொண்ட அன்பான சகோதரர்கள், ஸ்ரீராம், கில்லர்ஜி, நெல்லை தமிழர், ஏகாந்தன், துரை செல்வராஜ், வெங்கட் நாகராஜ் அனைவருக்கும், அன்பான சகோதரிகள் வல்லிசிம்ஹன், கோமதி அரசு, மனோ சுவாமிநாதன், கீதா சாம்பசிவம், மாதவி, வானம்பாடி அனைவருக்கும் என் பணிவுடன் கூடிய மனம் நிறைந்த நன்றிகள்.ஒரு வார காலமாக இந்த அல்சர் உபாதையின் வலியான முதுகு,நெஞ்சின் கடுமையான விண், விண்ணென்ற வலியினால் கையில் மொபைலை வைத்துக் கொண்டு, தட்டச்சு செய்ய கூட இயலாமல் அவதிபட்டேன். அதனால் பதிவுகளுக்கும் உடனடியாக வந்து படிக்க இயலாமல் போய் விட்டது. அனைவரும் மன்னிக்கவும். நேற்று எ.பிக்கு வந்து தந்த உங்களது கூட்டுப் பிரார்த்தனைகள், இன்று சற்று வலி பொறுத்துக் கொள்ளும் மனோ தைரியத்தை அளித்துள்ளது. கூடிய விரைவில் அனைவரின் பதிவுகளுக்கும் வருகிறேன். அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.🙏.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாதேவி என்பது தட்டச்சு பிழையால், மாதவி என வந்து விட்டது. சகோதரி மன்னிக்கவும்.

      நீக்கு
    2. எனக்கு அல்சர் உண்டு. ஆனால் வலி வயறில் வரும். அல்சர் H PYLORI என்ற கெட்ட கிருமிகளால் வருவது. ஆகவே அதற்கு மருந்துகள் உண்டு. இப்போதும் எடுத்துக்கொள்கிறேன். 

      உங்களுக்கு முதுகு மற்றும் நெஞ்சில் வலி வருவதாக சொல்கிறீர்கள். ஒரு ECG எடுத்துப்பாருங்கள். இரத்தக்குழாய்களில் சிறிய அடைப்பு இருக்கலாம். மருந்து  disprin ecospirin போன்ற ஆஸ்பிரின் மருந்துகள் தான். இவை வலி நீக்கிகள்.

       Jayakumar

      நீக்கு
  18. மிக்க மகிழ்ச்சி!!! நல்ல இடுக்கை நண்பர்களே இந்த பதிவை படித்து மகிழும் நீங்களும் இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க, தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க Tech Helper Tamil ஐ பாருங்கள் Tech Helper Tamil https://www.techhelpertamil.xyz/

    பதிலளிநீக்கு
  19. எனக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டதற்கு நன்றி திருமதி கமலா ஹரிகரன்.

    பதிலளிநீக்கு
  20. இரண்டு பாடல்களும் இனிமையான பாடல்கள். பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  21. அப்பாடா! இப்போதாவது என்னைப்போன்ற யூத்துகளின் ரசனைக்கேற்ப பாடல்களை பகிர்ந்திருக்கிறீர்கள். உங்களுக்கு எஸ்.பி.பி.போல எனக்கு கார்த்திக் அவ்வளவு பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //என்னைப்போன்ற யூத்துகளின் ரசனைக்கேற்ப//

      ​நன்றி... நன்றி.

      நீக்கு
  22. இந்த படத்தில் சமந்தா ஒழுங்காக சிரித்திருக்கிறார். ஓ பேபி! படத்திற்கு பிறகு அவர் சிரிப்பு மாறி விட்டது. அதைப் போல நாம் சிரித்தால் கேரம் என்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ.. இப்படி எல்லாம் வேறு இருக்கிறதா? பேமிலி மேன் சமந்தா வித்தியாசமானவர்!

      நீக்கு
  23. கேணம் என்று வந்திருக்க வேண்டியது நேரமாகி விட்டது.

    பதிலளிநீக்கு
  24. இந்த படத்திற்கு முன்னால் ஜீவா லோக்கல் பையனாக நடித்துக் கொண்டிருந்தார். கெளதம் மேனனுக்கு ஃபோன் பண்ணி அவர் படத்தில் நடிக்க ஆசை என்றாராம். கெளதம்,"உங்கள் படங்களை பார்த்திருக்கிறேன் லோக்கல் பையன் காரக்டர் வரும் பொழுது அழைக்கிறேன்" என்றதும், ஜீவா,"ஐயையோ! லோக்கல் பையன் காரக்டரெல்லாம் வேண்டாம், ஸ்டைலிஷாக ஒரு ரோல் கொடுங்கள்" என்றதும் 'நீதானே என் பொன் வசந்தம்' பட வாய்ப்பு வந்தாராம்.

    பதிலளிநீக்கு
  25. இரண்டு, மூன்று நாட்களாக வராததால் கமலா ஹரிஹரன் உடல் நல பாதிப்பு பற்றி தெரியவில்லை. ஆனால் க.ஹ.,கீதா அக்கா இரண்டு பேருக்குமே உடல் நலம் தேறியது குறித்து மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். குறையில்லாமல் எல்லோரும் வந்து கொண்டிருந்தால்தான் சந்தோஷம்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!