கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த, ஏனாதிமேல்பாக்கம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், மூன்று ஆண்டுகளுக்கு முன் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது. அதன்பின், மாணவர்களும், ஆசிரியர்களும் களத்தில் இறங்கி, பள்ளி வளாகத்தில், இயற்கை வகை கீரை, காய், கனிகள் தோட்டம், பாரம்பரிய மரக்கன்றுகள் நட்டனர்.
பள்ளி வளாகத்தில் இருந்து பறிக்கப்படும் கீரை, காய்களை, தினசரி சத்துணவில் பயன் படுத்தி வந்தனர்.கொரோனாவால், இரண்டு ஆண்டுகளாக பள்ளிக்கூடம் முடங்கிய போதும், ஆசிரியர்கள், மாணவர்கள் முடங்காமல், அங்கிருந்து தோட்டத்தை முறையாக பராமரித்து வருகின்றனர்.தோட்டக்கலை, பாரம்பரிய மரங்களின் பலன்கள் மீது, மாணவர்கள் மத்தியில், ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கில், அந்தந்த மரத்தில் தொங்கவிடப்பட்டுள்ள அறிவிப்பில், அந்த மரத்தின் வகை, மருத்துவ பயன்கள் இடம் பெற்றுள்ளன.பள்ளியின் தலைமை ஆசிரியர் பரமசிவம் கூறுகையில், ''மாணவர்கள் படிப்பு மட்டுமின்றி தோட்டக்கலை பராமரிப்பு, பாரம்பரிய மரங்கள் மீது விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சித்தேன். ''எதிர்பார்த்ததை விட மாணவர்கள் மிகுந்து ஆர்வத்துடன் செயல்பட்டு வருகின்றனர்,'' என தெரிவித்தார்.
================================================================================================================
காட்பாடி: காட்பாடி ரயில் நிலையத்தில் முதியவர் ஒருவர், ரயில் புறப்பட்டதால் தண்டவாளத்தில் தவறி விழுந்தார். அவரை பணியில் இருந்த ரயில்வே போலீசார் துரிதமாக சென்று மீட்டனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் இன்று (ஆக.,17) காலை 11:40 மணி அளவில் வடமாநில முதியவர் ஒருவர் தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த குட்ஸ் ரயில் வண்டியை கவனக்குறைவாக கடக்கும் போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்தார். அந்த நேரத்தில் வண்டி புறப்பட்டுவிட்டது. அப்போது பணியில் இருந்த காட்பாடி ரயில்வே போலீஸ் வினோத் மற்றும் தலைமை காவலர் சண்முகம் ஆகிய இருவரும் அந்த முதியவரை ஓடிச்சென்று துரிதமாக மீட்டனர்.
இந்த சம்பவம் காட்பாடி ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. துணிச்சல்மிக்க அந்த ரயில்வே போலீஸ் இருவரையும் பொது மக்கள் வெகுவாக பாராட்டினர். இந்த சம்பவம் அந்த ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சிறப்பான பணி செய்த காட்பாடி ரயில்வே போலீசாருக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[
மத்திய அரசு கண்காட்சியால் காரைக்குடி நெசவாளர்கள் மகிழ்ச்சி.
இது குறித்து, பச்சையப்பன் மகளிர் கல்லுாரி மாணவி எஸ்.ஸ்வேதா கூறியதாவது: கல்லுாரியின் 'வாட்ஸ் ஆப்' குழு மூலமாக, 'எழுதுக' இயக்கம் குறித்து அறிந்து, புத்தகம் எழுத ஆரம்பித்தேன். அக்குழு அவ்வப்போது பயிற்சி அளித்தது.'முதல் படி' என்ற தலைப்பில், தன்னம்பிக்கை மற்றும் கல்வி சார்ந்து, கவிதை நடையிலேயே எழுதியுள்ளேன். இது முதல் அங்கீகாரம். இனியும் நிறைய தலைப்புகளில் புத்தகம் எழுதுவேன். இவ்வாறு அவர் கூறினார்.
ஏகனாம்பேட்டை, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவி பி.சுவர்ணலட்சுமி கூறுகையில், ''நான் ஏழாம் வகுப்பு முதல் கவிதை எழுதி வருகிறேன். 'எழுதுக' இயக்க கூட்டத்தில் அளித்த ஊக்கத்தில், கவிதை நடையிலும், தலைப்புகளை அகர வரிசையிலும் புத்தகம் எழுதியுள்ளேன்.''சமூக பிரச்னைகள், நரபலி, வரதட்சணை, சமூக சிக்கல்கள் போன்றவை குறித்து எழுதியுள்ளேன்,'' என்றார்.
காஞ்சிபுரம் எஸ்.எஸ்.கே.வி., பள்ளி, எட்டாம் வகுப்பு மாணவி கே.அகல்விழி கூறுகையில், ''நான் 'உயிர் பெறும் காகிதங்கள்' என்ற தலைப்பில் எழுதிய புத்தகத்தில், ராணுவ வீரர்கள் பற்றியும், ஐந்து பெரும் போர்கள் குறித்தும் எழுதியுள்ளேன்.''ராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பு, எல்லைகள், எல்லை பாதுகாப்பு படை போன்ற விபரங்களை அதில் கொடுத்துள்ளேன். என் தந்தை ராணுவ வீரர் என்பதால், அவர் சார்ந்து இதை எழுதினேன்,'' என்றார்.
ஏகனாம்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மற்றொரு பிளஸ் 2 மாணவி-யான ஏ.பிருந்தா கூறியதாவது: பள்ளி விழா ஒன்றில், ராணுவ வீரர்களின் தியாகம் போற்றும் கண்காட்சி நடந்தது. அதில் பேச்சு போட்டியில் பங்கேற்ற பின், புத்தகம் எழுதும் ஆர்வம் வந்தது.மின்னிதழ் ஒன்றில் எழுத ஆரம்பித்து, 'நம்பிக்கை வேர்' என்ற தலைப்பில் புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளேன். 35 கட்டுரைகள் அதில் உள்ளன. 'இஸ்ரோ' ஆய்வாளர்கள் மற்றும் 'தினமலர்' நாளிதழின் 'பட்டம்' இதழ் கொடுத்த ஊக்கத்தால் இதை எழுத முடிந்தது.இவ்வாறு அவர் கூறினார்.
நம்பிக்கை'எழுதுக' அமைப்பின் மூலம், அடுத்த பத்தாண்டுகளில், 1 லட்சம் புத்தகங்களை எழுத வைத்து, அதில், 1,000 புத்தகங்களையாவது அச்சு வடிவில் கொண்டு வர வேண்டும் என, இலக்கு வைக்கப்பட்டுள்ளது. மாணவ பருவத்திலேயே புத்தகம் எழுதும் பழக்கத்தை இந்த மாணவர்கள் வளர்த்துக்கொண்டுள்ளதால், எதிர்காலத்தில் சிறந்த எழுத்தாளர்களாகவும், படைப்பாளிகளாவும் உருவாக வாய்ப்பிருப்பதாக, எழுதுக இயக்கத்தைச் சேர்ந்தோர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
=====================================================================================================================
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஎல்லோரும் எல்லா நாட்களும்
ஆரோக்கிய நல் வாழ்வு பெற இறைவன்
நல்லருள் வேண்டும்.
வாங்க வல்லிம்மா.. வணக்கம்.
நீக்குஏனாதிமேல வாக்கம் பள்ளித் தலைமை ஆசிரியரும்
பதிலளிநீக்குமாணவர்களும், ஆசிரியர்களும் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
இந்தத் தொற்று காலத்திலேயும்
அயராமல் செயல் பட்டது மிக உயர்வு. அதிலும்
என்ன செய்கிறோம் என்று அறிந்த பிறகே
இன்னும் உற்சாகத்துடன் செயல் படுகிறார்கள். பலனும் அமோகமாக இருக்கும்.
நல்ல செய்திக்கு மிக நன்றி.
பாராட்டுவோம், வாழ்த்துவோம்.
நீக்குகாட்பாடி ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட
பதிலளிநீக்குபெரியவர் தப்பித்தது ஒரு பெரிய மகிமைதான்.
அந்தக் காவல்காரர்கள் துரிதமாகச் செயல் பட்டிருக்கிறார்கள்.
இது அவர்களின் அதீத எச்சரிக்கை
உணர்வை எல்லோருக்கும் எடுத்து சொல்கிறது.
உண்மையான காவல்காரர்கள்.
மனம் நிறை வாழ்த்துகள். நன்றி ஸ்ரீராம்.
பாராட்டுவோம், வாழ்த்துவோம்.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்...
பதிலளிநீக்குஇறையருள் சூழ்க எங்கெங்கும்...
வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்..
வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.. வாங்க...
நீக்குகாரைக்குடி நெசவாளர்களின் துன்பம் நீக்கப்படவேண்டும்.
பதிலளிநீக்குபொதுவாகவே நெசவாளர்களும், விவசாயிகளும் சிரமப் படுவதையே
பார்க்கிறோம்.
இதையே ஆன்லைனில் தொடர்ந்து அவர்களுடன்
இருக்கும்படி செய்து கொடுத்தால் இன்னும்
அதிக லாபத்தை அவர்கள் காணமுடியும்.
இவர்கள் மட்டும் அல்லாமல்
அனைத்து மாவட்ட நெசவாளர்களுக்கும் இந்த
வசதி கிடைத்தால் நடுவில் இருப்பவர்கள் மட்டும் லாபம்
அடைவது குறையும். மிக நன்றி ஸ்ரீராம்.
பாராட்டுவோம், வாழ்த்துவோம்.
நீக்குகல்லூரி மாணவர்களின் பணி மிகச் சிறந்தது.
பதிலளிநீக்குஎத்தனை குழந்தைகள் நலம் பெறுகிறார்கள்.
எழுத்து இவர்களை நல்ல உயர் நிலைக்கு
அழைத்துச் செல்லும்.
நல்ல புத்தகங்கள் விற்பனை ஆகும்போது இவர்களின் ஆர்வமும் வளரும்.
நன்றி ஸ்ரீராம்.
எல்லாம் நல்ல செய்திகள்.
பாராட்டுவோம்.
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குவணக்கம் பானு அக்கா.. வாங்க...
நீக்குமுதியவரை காப்பாற்றிய காவலர்களை பாராட்டுவோம்.
பதிலளிநீக்குஆசிரியர்களின் செயல் மேலும் வெற்றி பெறட்டும்.
ஆம். பாராட்டுவோம் ஜி. நன்றி.
நீக்குஅனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்
பதிலளிநீக்கு'எழுதுக' இயக்கத்தினரின் பணி பாராட்டத் தக்கது. இளம் தலைமுறையினரின் எழுத்தார்வம் வாழ்க! வளர்க! வாழ்த்துவோம்.
பதிலளிநீக்குகாஞ்சீபுரம் எஸ்.எஸ்.கே.வி. வரலாறு பெருமை கொண்டது. இந்தப் பள்ளியில் தான் மேல் நிலை வகுப்புகள் வரை என் மகள் வாசித்தாள் என்பதும் இன்றைய அவளது அமெரிக்க வாழ்க்கை உயர்வுகளுக்கு அடித்தளமிட்ட ஆரம்ப கல்வியளித்த பள்ளி இது என்பதையும் குறிப்பிட்டுச் சொல்ல விழைகிறேன்.
//''மாணவர்கள் படிப்பு மட்டுமின்றி தோட்டக்கலை பராமரிப்பு, பாரம்பரிய மரங்கள் மீது விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சித்தேன். ''எதிர்பார்த்ததை விட மாணவர்கள் மிகுந்து ஆர்வத்துடன் செயல்பட்டு வருகின்றனர்,'' என தெரிவித்தார்.//
பதிலளிநீக்குபாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
முதியவரை காப்பாற்றிய ரயில்வே போலீசார்களூக்கு வாழ்த்துக்கள், நன்றிகள்.
கண்டாங்கி புடவை விற்பனை அதிகமாகி இருப்பது மகிழ்ச்சி. அரசு அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றினால் இன்னும் மகிழ்ச்சி அவர்களுக்கு.
//எதிர்காலத்தில் சிறந்த எழுத்தாளர்களாகவும், படைப்பாளிகளாவும் உருவாக வாய்ப்பிருப்பதாக, எழுதுக இயக்கத்தைச் சேர்ந்தோர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.//
மாணவ எழுத்தாளர்களுக்கு வாழ்த்துக்கள்.
ஒரு பக்கம் எழுத்தார்வம் கூடுகிறது என்பதற்கு ஏற்ப இன்னொரு பக்கம் வாசிப்பார்வமும் பெருகினால் மகிழ்ச்சியே. இந்த விஷயத்தில் எபியில் புதுப்பகுதியாகத் துவங்கிய 'நான் படிச்ச கதை' பகுதி வாசிப்பார்வம் பெருக எபி எடுத்த முன் முயற்சி. கே.வா.போ. கதை பகுதி மாதிரி பெருமை கொள்ளப் போகும் பகுதி. எபியின் அயராத அரும் பணிகளுக்கு அதன் ஆசிரியர் குழுவிற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். எபி வாழ்க! வளர்க!!
பதிலளிநீக்குகாட்பாடி ரயில் நிலைய போலிசாரின் மனித நேய அரிய பணி நெகிழ்ச்சி ஊட்டுகிறது. மனிதம் காப்பாற்றப்படும் போதெல்லாம் நம் மகிழ்ச்சியும் கூடுகிறது. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநிகழ்வுகள் அருமை...
பதிலளிநீக்குகடைசி இரு செய்திகளும் புத்தம்புதுசு. மற்றவை படிச்சவை/பார்த்தவை. எழுதுக இயக்கம் தொடர்ந்து நல்ல முறையில் செயல்பட வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநல்ல செய்திகளின் தொகுப்பு...
பதிலளிநீக்குநல்லவர்களால் நாடு நலம் பெறட்டும்...
முதியவரை காப்பாற்றிய காவலர்களை பாராட்டுவோம்.
பதிலளிநீக்குஆசிரியர்களின் செயல் வெற்றி பெறட்டும
சிறப்பான தகவல்கள்.
பதிலளிநீக்குஎழுதுக - சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.