சுஜாதா சினி ஆர்ட் தயாரிப்பில் திருலோக்சந்தர் இயக்கத்தில் சிவாஜி, பாலாஜி, சரோஜா தேவி நடிப்பில் 1968 ல் வெளிவந்த படம் என் தம்பி.
ஸ்லிம் சிவாஜி. ரோஜாரமணியைப் பார்த்து சிவாஜி பாடும் பாடலாய் வருகிறது இந்தப் பாடல். டி எம் எஸ் பாடியிருக்கும் பாடலுக்கு இசை எம் எஸ் விஸ்வநாதன். கண்ணதாசன் வரிகள்.
பாலாஜி சொந்தமாக ஏதாவது படமெடுத்திருக்கிறாரா, தெரியாது. இந்தப் படம் தெலுங்கிலிருந்து உருவப்பட்டது!
தென் மதுரை மீனாள் தேன் கொடுத்தாளா, தேர் கொடுத்தாளா தெரியவில்லை, இணையத்தில் பார்த்த மாதிரியே எழுதி விட்டேன். அடுத்த வரி சீர் என்று வருவதால் இங்கு தேர் என்று வந்தால் சரியாய் இருக்கும் என்று தோன்றியது.
முத்துநகையே உன்னை நானறிவேன்
தத்துங்கிளியே
என்னை நீ அறிவாய்
நம்மை நாம் அறிவோம்
தென்மதுரை மீனாள் தேன் கொடுத்தாள்
சித்திரத்தை போல சீர் கொடுத்தாள்
என் மனதில் ஆட இடம் கொடு்த்தாள்
இது தான் சுகம் என வரம் கொடுத்தாள்
கண்ணழகு பார்த்தால் பொன்னெதற்கு.
கையழகு பார்த்தால் பூவெதற்கு.
காலழகு பார்த்தால் தெய்வத்திற்கு
கருணை என்றொரு பேரெதற்கு
நடனப்புயல் (!) ஷம்மி கபூர் 1968 ல் நடித்து வெளிவந்த பிரம்மச்சாரி படத்தின் தமிழ் வடிவம் 1970 ல் வெளிவந்த எங்க மாமா. சாதாரணமாக இது போன்ற ஹிந்திப்பட ரீமேக்குகளை - அதுவும் சிவாஜி நடிக்க - பாலாஜிதான் செய்வார். இந்தப் படத்தில் பாலாஜி நடித்திருந்தாலும் தயாரிப்பு வேறு நிறுவனம்.
இதே எங்க மாமா, ப்ரம்மச்சாரியின் கதை வடிவத்தில் ஆண் பாத்திரத்தில் பெண் நடிப்பதாய் உல்டா செய்தால் ஹேமமாலினி தயாரித்து நடித்த 'ட்ரீம்கேர்ள்'.
எங்க மாமா வண்ணப்படம். இதில் சிவாஜியை மறுபடியும் ஸ்லிம்மாக பார்க்கலாம். 'எதிர் முகாம்' ஆட்கள் இருவர் உண்டு இப்படத்தில். ஒன்று தேங்காய். இன்னொருவர் வெ. ஆ நிர்மலா! வெண்ணிற ஆடை நிர்மலாவுடன் சேர்ந்து நடனமாடி ஒரு பாடலும் உண்டு படத்தில் "சொர்க்கம் பக்கத்தில்.."
அவள் ஒரு தொடர்கதை படத்தில் நடிகை ஜெயலட்சுமி படாஃபட் என்று பேசி புகழடைந்து படாஃபட் ஜெயலட்சுமி ஆனார். எங்க மாமா படத்தில் தேங்காய் படாஃபட் சங்கராக வருகிறார்! இவர்தான் அந்த வார்த்தைக்கு முதல் சொந்தக்காரர்!
உண்மையில் தேங்காய் ஸ்ரீனிவாசனை ஒருவிரல் சீனிவாசன் என்று அழைக்கலாம். அதுதான் அவர் முதல் படம். ஆனால் நடிகர் தங்கவேலு தேங்காய் வியாபாரியாக சீனிவாசன் நடித்த கல்மனம் நாடகத்தைப் பார்த்து விட்டு தேங்காயை அவர் பெயருக்கு முன்னே சேர்த்து விட்டாராம்! தேங்காய் என்றால் உடனே நினைவுக்கு வருவது காசேதான் கடவுளடா, தில்லு முல்லு , கலியுகக் கண்ணன்.
இன்று பகிரும் பாடல் எப்போது கேட்டாலும் இனிக்கும் "செல்லக்கிளிகளாம் பள்ளியிலே" பாடல்.
அருமையான தாலாட்டுப் பாடல். கண்ணதாசன் வரிகளுக்கு எம் எஸ் விஸ்வநாதன் இசை அமைக்க, டி எம் எஸ் குரலில் பாடல். இந்தப் படத்தில் வாலியும் இரண்டு பாடல்கள் எழுதி இருக்கிறார். இயக்கம் அதே ஏ ஸி திருலோக்சந்தர்.
செல்ல கிளிகளாம் பள்ளியிலே
செவ்வந்தி பூக்களாம் தொட்டிலிலே
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை,
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை……
கன்றின் குரலும் கன்னி தமிழும்
சொல்லும் வார்த்தை அம்மா அம்மா…
கருணை தேடி அலையும் உயிர்கள் உருகும்
வார்த்தை அம்மா அம்மா…..
கன்றின் குரலும் கன்னி தமிழும்
சொல்லும் வார்த்தை அம்மா அம்மா…
கருணை தேடி அலையும் உயிர்கள் உருகும்
வார்த்தை அம்மா அம்மா
எந்த மனதில் பாசம் உண்டோ அந்த
மனமே அம்மா அம்மா….
இன்பகனவை அள்ளித் தரவே இறைவன்
என்னை தந்தானம்மா….
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை….
செல்ல கிளிகளாம் பள்ளியிலே
செவ்வந்தி பூக்களாம் தொட்டிலிலே
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை,….
தந்தை ஒருவன் அந்த இறைவன் அவனும்
அன்னை இல்லாதவன்
தன்னை தேடி ஏங்கும் பிள்ளை கண்ணில்
உறக்கம் கொள்வானவன்…
தந்தை ஒருவன் அந்த இறைவன் அவனும்
அன்னை இல்லாதவன்
தன்னை தேடி ஏங்கும் பிள்ளை கண்ணில்
உறக்கம் கொள்வானவன்…
பூவும் பொன்னும் பொருந்தி வாழும் மழலை
கேட்டேன் தந்தானவன்
நாளை உலகில் நீயும் நானும் வாழும்
வழிகள் செய்வானவன்
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை….
= = ++ = =
= = = = =
ஸ்ரீ வரலக்ஷ்மி ஸ்தோத்ரம் ( 9 நிமிட காணொளி )
= = = = = =
அன்பின் ஸ்ரீராம்,
பதிலளிநீக்குஅருமையான வெள்ளிக்கிழமை அதுவும் மஹாலக்ஷ்மியின் அருளுடன்
சேர்ந்த நற்காலை.
எல்லா நலங்களும் குடுமபத்தில் சேர வேண்டும். அவள் வழங்கும் பொறுமையும்
வளங்களும், மகிழ்ச்சியும்,
நோயில்லா வாழ்வும் நம்மை அடைய வேண்டும். நோன்பு
நோற்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்.
வாங்க வல்லிம்மா... வணக்கம். நன்றி.
நீக்குகொடுத்திருக்கும் இரண்டு பாடல்களுமே
பதிலளிநீக்குமுத்தான பாடல்கள்.
அதுவும் முத்து நகையே பாடல் மிகவும் உருக்கம்.
அடுத்த செல்லக் கிளிகளில்
மகிழ்ந்து திளைத்தவர்கள் நானும் குழந்தைகளும்.
ஒருவிரல் பட்டம் தான் கிருஷ்ணாராவுக்குப் போய் விட்டதே!!
ஆம். "வெண்ணிற ஆடையை" இருவர் பங்கு பிரித்துக் கொள்ளவில்லையா? அது போலதான்!
நீக்குபாலாஜி எங்களுக்கு அறிமுகம் ஆனது
பதிலளிநீக்குஅவரது நாடகங்கள் வழியே தான். புரசவாக்கத்தில் இருந்து பிறகு எழும்பூருக்குக் குடி
போனார் என்று நினைக்கிறேன்.
என் மறைந்த மாமாவுக்கு சினிமாப் பைத்தியம் பிடித்தது அவரால்
தான்.:)
பிறகு தெளிந்து விட்டது!!
அவரது படங்கள் எல்லாமே ஹிந்திப் படங்களின் ரீமேக் தானே?
சிவாஜி கிடைத்தார். நமக்கும் கொஞ்சம் செயற்கை கலந்த
படங்கள் கிடைத்தது.
நீதி படம் கொஞ்சம் நன்றாக இருக்கும்.
எங்க மாமா படம் ஷம்மி கபூர் படத்தைவிட நன்றாக
இருக்கும்:)
பிறகு வந்த மிஸ்டர் இந்தியா படம் கூட எங்க மாமா
படத்தை நினைவுக்குக் ஒண்டு வந்தது.
ஆம். அனில்கபூரின் மிஸ்டர் இந்தியா கூட இதே கதை! எனக்கும் நீதி ரொம்பப் பிடிக்கும்.
நீக்குஅனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம் கோமதி அக்கா.. வாங்க...
நீக்குதேங்காய் ,கதா நாயகனாய் வந்திருக்க வேண்டியவர். பாவம்.
பதிலளிநீக்குகாசேதான் கடவுளடா இன்றும் பார்ப்பேன்.
மங்களம் உண்டாகட்டும்:)
தில்லுமுல்லு டாப் க்ளாஸ்.
பாடல்கள் செய்திகள் எல்லாவற்றுக்கும் நன்றி மா.
அதே அதே. இதுவும் காசேதான் கடவுளடா படத்தில் தே.சீ. பேசும் வசனம் தான்.
நீக்குஹா.. ஹா.. ஹா... ஆமாம். வசனம் அந்தப் படத்தில் வருவதுதான்! காலச்சக்கரம் நரசிம்மா அப்பாதான் கதைவசனம்!
நீக்குவரலக்ஷ்மி விரத நாள் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅவள் கடாக்ஷம் எங்கும் நிறையட்டும்.
நன்றி அம்மா. அனைவருக்கும் வாழ்த்துகள்.
நீக்குஇரண்டு பாடல்களும் கேட்டேன் பிடித்த பாடல்கள் . முன்பு அடிக்கடி ரேடியோவில் கேட்டது. இப்போது பழைய பாடல்கள் நிகழச்சியில் தொலைக்காட்சியில் கேட்டு இருக்கிறேன்.
பதிலளிநீக்குநன்றி கோமதி அக்கா.
நீக்குமகாலட்சுமியின் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்
பதிலளிநீக்குவரலட்சுமி பண்டிகை வாழ்த்துக்கள்.
நன்றி கோமதி அக்கா.
நீக்குமகாலட்சுமி ஸ்தோத்திரத்திற்கு நன்றி.
பதிலளிநீக்குநன்றி கோமதி அக்கா.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்...
பதிலளிநீக்குஸ்ரீ மஹாலக்ஷ்மியின் நல்லருள் நல்லோர் அனைவருக்கும் ஆகட்டும்..
வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்..
வணக்கம் துரை செல்வராஜூ ஸார்... வாங்க...
நீக்குஅனைவருக்கும் ஸ்ரீ வரலக்ஷ்மி பூஜை நல்வாழ்த்துகள்...
பதிலளிநீக்குஅதே... வாழ்த்துக்கள் அனைவருக்கும். நன்றி துரை செல்வராஜூ ஸார்.
நீக்குஇன்றைக்கு இரண்டு பழைய பாடல்களா? கேட்ட பாடல்கள். அருமை
பதிலளிநீக்குநன்றி நெல்லை.
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஆகா...! அருமையான பாடல்கள்...
பதிலளிநீக்குநன்றி DD.
நீக்குஸ்ரீ வரலெஷ்மியைப் போற்றும் நிறைய திரைப்படப் பாடல்கள் கூட இருக்கின்றனவே...
பதிலளிநீக்குஆம் ஜீவி சார்.
நீக்குநல்ல பாடல்கள். இப்போதெல்லாம் படங்களில் தாலாட்டு பாடல்கள் ஏன் இடம் பெறுவதில்லை?(இதை புதனுக்கான கேள்வியாக எடுத்துக் கொள்வதில் ஆட்சேபணை இல்லை)
பதிலளிநீக்குஇருந்து நாம்தான் கவனிப்பதில்லையா?!! ரசிகர்கள் தூங்கி விட்டால் என்ன செய்வது என்கிற கவலையோ... ஆனால் உங்கள் கேள்வி எனக்கு பிராப்தம் பாடலை நினைவு படுத்தியது.
நீக்குபாலாஜிக்கு சரோஜா தேவியோடு ஜோடியாக நடிக்க வேண்டும் என்ற ஆசையாம். அது நிறைவேறாததால் குறைந்த பட்சம் அவரை தன் படத்தில் கதாநாயகியாக போடலாம் என்று என தம்பியிலும் இன்னுமொரு படத்திலும் புக் பண்ணினாராம்.
பதிலளிநீக்குஅது நிறைவேறுவதில் என்ன கஷ்டமாம்? படம் அமையவில்லையா!
நீக்குபாலாஜி சரோஜாதேவியுடன் நடித்து இருக்கிறார்.
நீக்குManamulla Maruthaaram படத்தில் நடித்து இருக்கிறார். பாட்டு எல்லாம் மிக நன்றாக இருக்கும்.
//பாலாஜி சொந்தமாக ஏதாவது படமெடுத்திருக்கிறாரா, தெரியாது// ஹாஹா! ஒரு முறை குமுதத்தில் சினிமா சம்பந்தப்பட்டவர்களின் புகைப்படங்களை வெளியிட்டு அதற்கு பொருத்தமான கேப்ஷன் எழழுதச் சொல்லியிருந்தார்கள். அதில் பாலாஜியின் படத்திற்கு ஒருவர் ஹிந்தி+வண்ணம்+சிவாஜி = பாலாஜி என்று எழுதியிருந்தார்.
பதிலளிநீக்குஹா.. ஹா.. ஹா... ஆனால் வண்ணம் எல்லாம் பின்னர். தங்கை, திருடன் போன்ற படங்கள் எல்லாம் கருப்பு வெள்ளைதானே!
நீக்குஇன்று எட்டிப் பார்த்துவிட்டேன். (நல்ல நாளாச்சே இன்று அதனால வலது கையை எடுத்து வைச்சு உள்ளே வந்தாச்சு!!! இருங்க நல்ல காலம் ராகு காலம் முடிஞ்சுதான் வந்திருக்கிறேன்! ஹிஹிஹிஹி)
பதிலளிநீக்குஎல்லோரும் நலம் என்று நினைக்கிறேன். கீதாக்கா கால் வலி தெரியும்..
இரு பாடல்களும் மிக மிக பிடித்த பாடல்கள் ரசித்த பாடல்கள்.
இந்தப் படத்தில் பாலாஜி நடித்திருந்தாலும் தயாரிப்பு வேறு நிறுவனம்.//
இல்லையே ஸ்ரீராம். சுஜாதா சினி ஆர்ட்ஸ் அவருடையதுதானே. அவர் இரண்டாவது பெண்ணின் பெயர். மோஹன்லால் இவரது மாப்பிள்ளை மூன்றாவது பெண்ணின் கணவர்.
என்னாச்சு பானுக்கா அண்ட் நெல்லை...ரெண்டு பேருமே நிறைய இந்தா மாதிரி நியூஸ் கொடுப்பாங்களே! சொல்லவில்லையே.
இன்னும் வலைப்பக்கம் முழுவதும் வர இரு நாட்கள் மேல் ஆகும். இப்ப இந்த வரியை பார்த்ததும் சொல்லத் தோன்றியது டக்குனு சொல்லிவிட்டு போகிறேன்...பிஸி வேலைப்பளு
கீதா
அடடே.. வாங்க கீதா... ரொம்ப நாளாச்சு... சௌக்கியமா? சுஜாதா சினி ஆர்ட்ஸ் பாலாஜியோடதுதான். நானும் அதைத்தானே சொல்லி இருக்கிறேன்... எங்க மாமா படம் பாலாஜி தயாரிப்பு அல்ல. அதைச் சொல்லி இருக்கிறேன்.
நீக்குவருக கீதா ரங்கன்(க்கா). உங்கள் சேவையைப் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.
நீக்குஎழுத்தாளர் சுபா மாதிரி பாகி (பானுமதி/கீதா) என்று பெயர் போட்டுக்கொண்டு எழுதுவதால், அவங்ககிட்ட ரொம்ப ஈஷாதீங்க. தம்பிதான் முக்கியம் என்று நினைத்துக்கொள்ளுங்கள். ஹாஹா
சுஜாதா சினி ஆர்ட்ஸ் என்ற பேனரில் சிவாஜியை வைத்து படங்களை எடுத்த பாலாஜி மற்ற கதா நாயகர்களை வைத்து அந்த பேனரில் எடுத்ததில்லையாம். அதற்கு சுரேஷ் சினி ஆர்ட்ஸ் என்ற பேனராம்.
பதிலளிநீக்குஅதைப்போலவே எம்.ஜி.ஆரை வைத்து தேவர் ஃபிலிம்ஸ் என்ற பேனரில் படமெடுத்த சின்னப்பா தேவர் மற்ற ஹீரோக்களை வைத்து தண்டாயுதபாணி பிக்சர்ஸ் என்ற பேனரில் தான் படங்கள் எடுத்திருக்கிறாராம். ஒரு நண்பர் கூறிய தகவல் இது.
ஓ.. இப்படி வேறு அட்ஜஸ்மென்ட் இருக்கிறதா?!!
நீக்குஇரண்டு பாடல்களுமே/படங்களுமே பார்த்திருக்கேன். எங்க மாமாவின் ஹிந்தி மூலமும் சேர்த்து! நல்ல பாடல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குவாங்க கீதா அக்கா. எப்படி இருக்கீங்க?
நீக்குவெல்கம் பேக் கீதா ரங்கன். திங்கற கிழமைகளில் இந்த நெல்லையின் லொல்ளு தாங்க முடியவில்லை. கொஞ்சம் டஃப் ஃபைட் குடுங்க.
நன்றி பானுமதி. தி.கீதாவின் வரவுக்கும் வாழ்த்துகள்.
நீக்குதிங்கற கிழமைகளில் இந்த நெல்லையின் லொல்ளு தாங்க முடியவில்லை. கொஞ்சம் டஃப் ஃபைட் குடுங்க.//
நீக்குஹாஹாஹா பானுக்கா யாம் வந்தோம் பயமென்!!! அதாரு எங்க பானுக்காவை லொள்ளு பண்ணினது.. பாருங்க திங்கற கிழமைக்கு வரமாலேயே மசில் எல்லாம் தேத்திக் கொண்டு வந்திருக்கிறேனாக்கும். டஃப் ஃபைட் தான்...தட்டி வைக்கிறேன்!!!! ஹாஹாஹாஹா
கீதா
ஓ.. வாங்க கீதா அக்கா... நீங்கள் படங்களை பார்த்திருப்பது ஆச்சர்யம்.
நீக்குதிங்கக்கிழமை மட்டும்தான் நெல்லை ஃபைட் கொடுக்கறாரா?!!
நீக்குநான் தி.பதிவுக்காக படம் எடுத்து வைத்திருப்பதை யாரோ (அந்த யாரோ வேற யாரு? கீதா ரங்கன்(க்கா) வாகத்தான் இருக்கும்) பா.வெ. மேடத்திற்குச் சொல்லி, அவரும் அவசர அவசரமாகச் செய்து தி.பதிவுக்கு அனுப்பி உடனே வெளிவரச் செய்துவிடுகிறார்.
நீக்குபடங்கள் எடுத்து ஆற அமர ஸ்ரீராமுக்கு அனுப்புவதற்குள், மத்தவங்க செய்முறை வெளிவந்துடுது. அப்புறம் என்னதான் பண்ணறது? இருந்தவற்றில் மொத்தமாக கட கடவென ஸ்ரீராமுக்கு அனுப்பிவிட்டேன்.
வரலக்ஷ்மி நோன்பு வாழ்த்துகள். கொழுக்கட்டை ஶ்ரீராம் பண்ணி முடிச்சிருப்பார்னு நினைக்கிறேன்.
பதிலளிநீக்குநன்றி கீதா அக்கா.. நாம் கே வாசி கொஞ்சூண்டு கொழுக்கட்டை!
நீக்குஏன் அப்படி? போணி ஆகிறதில்லையா? இங்கே நான் பண்ணினால் பறக்கும்! :)
நீக்குபொறுமை, நேரம் இல்லை. இங்கேயும் அடிதடிதான். நானே கொழுக்கட்டைக்கு வீங்கினவன்!!!!
நீக்குஇரண்டும் ஸூப்பர் பாடல்தான்.
பதிலளிநீக்குஆமாம் ஜி.
நீக்குஇன்றைய பதிவின் பாடல்கள் இரண்டுமே இனிமையானவை...
பதிலளிநீக்குகவியரசரின் தமிழ் அழகை அறியலாம்..
வழக்கம் போல தென்மதுரை மீனாளையும் அழைத்திருப்பார்...
ஆமாம். ஆமாம். நன்றி துரை செல்வராஜூ ஸார்.
நீக்கு@ பானுமதி வெங்கடேஸ்வரன்
பதிலளிநீக்கு// சுஜாதா சினி ஆர்ட்ஸ் என்ற பேனரில் சிவாஜியை வைத்து படங்களை எடுத்த பாலாஜி மற்ற கதா நாயகர்களை வைத்து அந்த பேனரில் எடுத்ததில்லையாம். அதற்கு சுரேஷ் சினி ஆர்ட்ஸ் என்ற பேனராம்..//
@ ஸ்ரீராம்
// ஓ.. இப்படி வேறு அட்ஜஸ்மென்ட் இருக்கிறதா?!!.. //
கொழந்தப் புள்ளயாவே இருந்து இருக்கீங்களே!..(இப்ப மட்டும் என்னவாம்!)
:-)))
நீக்குஅனைவருக்கும் வரலஷ்மி விரத வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஇரண்டு பாடல்களும் அருமையானவை.
நன்றி மாதேவி.
நீக்குஅருமை
பதிலளிநீக்குமிகவும் பிடித்த பாடல்கள்
நல்ல பாடல்கள்.
பதிலளிநீக்கு