வல்லிசிம்ஹன் :
1, ,கேள்வி கேட்பவர்களைப் பொறுத்து பதில் தரப்படுமா?
# கேள்வி கேட்டவரின் பொறுமையை சோதிக்காதவாறு பதில் இருக்க வேண்டும்.
& ஆம், சில சமயங்களில் அது தேவை. சீரியஸ் பதில் எதிர் பார்ப்பவர்களுக்கு காமெடியாக பதில் சொன்னால் வம்பில் மாட்டிக்கொள்ள வழிவகுத்துவிடும்.
2, ஒற்றை வார்த்தையில் பதில் சொல்பவர்களின் மனம் எதை யோசிக்கும்?
# அடுத்த கேள்வி பற்றி யோசிக்கும்.
& பெரும்பாலும் ஒற்றை வார்த்தையில் பதில் சொல்பவர்கள் கோபத்தில் இருக்கலாம் - அல்லது (கேள்வி கேட்பவரோடு) பேசுவதற்கு மூட் இல்லாமல் இருக்கலாம்.
3, கேள்விகள் புத்திக் கூர்மையை பிரகடனப் படுத்துவதற்கா இல்லை பதில் சொல்பவர்களின் அறிவை சோதிப்பதற்கா?
# கேள்வி கேட்பவருக்கு ஒரு காரணம் பதில் தருபவருக்கு வேறு காரணம்.
& கேள்விகள் யாரிடம் கேட்கப்படுகின்றன என்பதைப் பொருத்த விஷயம் இது.
குழந்தைகள் மற்றவர்களிடம் கேட்கும் கேள்விகள் பெரும்பாலும் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் கேட்கப்படுபவை.
பெற்றோர்கள் தம் பள்ளிப் பருவத்துக் குழந்தைகளிடம் கேட்கும் கேள்விகள் பெரும்பாலும் விசாரணை வகை.
விவரம் அறிந்த ஒருவர், மற்றொரு விவரம் அறிந்த ஒருவரிடம் கேட்கும் கேள்விகள்தான் நீங்கள் சொன்ன இரண்டு வகைகளின் கீழ் வரும்.
கீதா சாம்பசிவம் :
1.விளம்பரங்களைப் பார்த்துப் பொருட்களைத் தேர்வு செய்யும்/வாங்கும் வழக்கம் உண்டா?
# உண்டு. பொருள்களைப்பற்றி அலசி ஆராய்ந்து வாங்க விளம்பரங்களைதானே நம்ப வேண்டியிருக்கிறது ?
$ உண்டு. Cell phone Camera, போன்ற அதிக விலை உள்ளவற்றுக்கு மட்டும் .
& நான் வாங்க நினைக்கும் பொருள்கள் amazon ல் இருந்தால், அவற்றுக்கு வந்துள்ள customer reviews, rating எல்லாம் பார்த்து, சீர் தூக்கிப் பார்த்து, பிறகுதான் வாங்குவேன். கூடுமான வரையில் 5 ஸ்டார் + 4 ஸ்டார் rating = எண்பது சதவிகிதம் இருந்தால்தான் வாங்குவேன்.
2. வீட்டு உபயோகப் பொருட்களை விளம்பரங்களைப் பார்த்து வாங்குவீர்களா? அல்லது தேவையா என்பதை யோசித்து வாங்குவீர்களா?
# தேவைதான் முதல் காரணம். வாங்குவதற்கு வாங்க என்று கூப்பிடுவதால் தூண்டப் படுவதில்லை.
$ தேவையானவை மட்டும்.
& வீட்டு உபயோகப் பொருட்களுக்கு விளம்பரம் பார்த்து வாங்குவதில்லை. Department stores (பல்பொருள் அங்காடி?) செல்லும்போது அங்கு சுற்றி வரும் சமயத்தில், கண்ணில் படும் பொருட்களை, தேவை இருக்கும் என்றால் மட்டும், விலை பார்த்து, அந்த விலைக்கு பொருள் worth என்றால் மட்டும் வாங்குவேன்.
3.மதுரை புதுமண்டபம் கடைகளில் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கி இருக்கீங்களா?
# பல ஆண்டுகளுக்கு முன், என்ன என்பது நினைவில்லை.
$ நான் புது மண்டபம் கடையில் வாங்கியவை ஒரு logarithm டேபிள், ஒரு acrylic painting kit உம்.
& புது மண்டபமா ! நான் பழைய மண்டபத்தில் கூட எதையும் வாங்கியதில்லை.
4. இது பற்றிய விளம்பரங்கள் வரும் யூ ட்யூப் சானல்களைத் தொடர்ந்து பார்ப்பீர்களா? நம்மவருக்கு இதான் பொழுது போக்கே! உடனே வாங்கறேன் என்று கிளம்பவும் செய்வார்.
# வாங்கிய பிறகு உபயோகிக்க, வழிமுறைகளை அறிந்து கொள்ள யூ டியூப் உதவியிருக்கிறது.
$ You tube channel பார்த்து போனுக்கு எப்படி கொரில்லா glass போடுவது என்று தெரிந்து கொண்டு போட்டேன்.
5.எந்தப் பொருளுக்கும் நீண்ட காலப் பயன்பாடு இருந்தால் தான் வாங்கலாம் என்பது என் கருத்து. இது சரியா தப்பா? வாங்கிட்டுப் பயனில்லை எனில் தூக்கிப் போடுவீர்களா?
# குறுகிய காலப் பயன்பாட்டுக்கான பொருள்களும் உள்ளன அல்லவா ? திடமான தயாரிப்பு முக்கியம்தான்.
$ நீண்ட காலப் பயன்பாடு என்பது எல்லாப் பொருளுக்கும் உண்டா என்ன?
& சமீப காலங்களில் வாங்கிவிட்டு, பயன் இல்லை என்று என் சேமிப்புக் கிடங்கில் போடப்பட்டுள்ள பொருட்கள் கொஞ்சம் அதிகமாகவே உள்ளன. சந்தர்ப்பம் வாய்க்கும்போது அவற்றை வேறு வகையில் பயன்படுத்தி வருகிறேன்.
பானுமதி வெங்கடேஸ்வரன்:
திருமண வாழ்க்கையை பற்றி ஜோக் அடிக்கிறார்கள். (எங்கள் சம்பந்தி திருமண நாள் என்றால் ஒரு நிமிடம் மெளனமாக நிற்க வேண்டும் என்பார்). ஆனால் தங்கள் குழந்தைகளுக்கு திருமணம் ஆகவில்லை என்றால் மிகவும் கவலைப்படுகிறார்கள். இது ஏன்?
# கணவன், மனைவி,மாமனார், மாமியார், சமையல்காரி, வேலைக்காரி இப்படியாக ஜோக்குகளால் வதை படுவோர் நிறைய உண்டு. இதன் பின்னணியில் நிறைவேறாத ஆசைகள், பிறர் பொறாமைப்படுவதை விரும்புதல், ஆற்றாமை போன்ற பல உணர்ச்சிகளும் உண்டு.
ஒரு பொருள் மார்க்கெட்டுக்குள் நுழைந்தவுடனேயே அதை வாங்கி விடுவீர்களா? அல்லது கொஞ்ச நாள் பொறுத்து, அதன் சாதக, பாதகங்களை தெரிந்து கொண்டு வாங்குவீர்களா?
# அல்லது வாங்கவே மாட்டீர்களா என்றும் கேட்க வேண்டாமோ ?
& தேவை என்று தோன்றும் பொருட்களை, கொஞ்ச நாள் பொறுத்து, அதன் சாதக, பாதகங்களை தெரிந்து கொண்டு வாங்குவேன்.
நம் குழந்தைகளுக்கு இதை (கற்று) கொடுத்து விட்டோம் என்று பெற்றோர்கள் எதைக் குறித்து மகிழ்ச்சி அடையலாம்?
# பெரியோரை மதித்தல், சுடுசொல் பேசாமை, கொடுப்பதை வேண்டாமென உண்ணுதல், நண்பர்களோடு எதையும் பகிர்ந்து கொள்தல், பெற்றோர்-தாத்தா-பாட்டி தவிர யாரிடமும் எதுவும் கேட்காதிருத்தல்.. இப்படி நிறைய உண்டு.
& Value based approach.
= = = = =
கேள்விகள் கேட்டவர்கள் எல்லோருக்கும் எங்கள் நன்றி. தொடர்ந்து நிறைய கேள்விகள் கேளுங்கள்.
சென்ற வார புதன் அன்று நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு வாசகர்கள் அளித்த பதில்களும், படங்களுக்கு வாசகர்கள் எழுதிய கருத்துகளும், மின்நிலா 068 இதழில் பக்கம் எண் 25 முதல் 29 வரை வெளியிடப்பட்டுள்ளன.
= = = = =
எங்கள் கேள்விகள் :
1) இயற்கைக் காட்சிகளை இரசிப்பது உண்டா ? எப்போது? ஒரு வாரத்தில் எவ்வளவு முறை?
2) சமீபத்தில் உங்களுக்கு வந்த விசித்திர கனவு என்ன?
3) இது இல்லை என்றால் எனக்கு எதுவுமே ஓடாது - என்று எதை சொல்வீர்கள்?
= = = = =
படம் பார்த்துக் கருத்து சொல்லுங்கள் :
1)
2)
3)
= = = = =
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்,
பதிலளிநீக்குஎல்லோரும் எல்லா நாட்களும் இறைவன் கருணையில் நலமோடு இருக்க வேண்டும்.
வாங்க வல்லிம்மா... வணக்கம்.
நீக்குமிக மிகச் சுவையாகப் பதில்கள் சொன்னதற்கு நன்றி மா.
பதிலளிநீக்குபழைய குமுதம் கேள்விகள், சோ அவர்களின்
பதில்கள் எல்லாம் படிக்கும் போதே எனக்கு உதித்த கேள்விகள்
இவை.
காலம் மாறிய நிலையில் உங்களிடமாவது கேட்கலாம்
என்றுதான் கேட்டேன்.
All good Sportive replies.!!!
மிக நன்றி மா. கௌதமன் ஜி.
நன்றி.
நீக்கு"# அடுத்த கேள்வி பற்றி யோசிக்கும்.
பதிலளிநீக்கு& பெரும்பாலும் ஒற்றை வார்த்தையில் பதில் சொல்பவர்கள் கோபத்தில் இருக்கலாம் - அல்லது (கேள்வி கேட்பவரோடு) பேசுவதற்கு மூட் இல்லாமல் இருக்கலாம். "
மிக உண்மை. மிக மிக நன்றி மா.
மீண்டும் நன்றி.
நீக்குஉண்மையான உண்மை..
நீக்குஇப்படி ஒற்றை வார்த்தையில் பதில் அளிப்பவர்கள் 90% க்குமேல் பெண்களாகத்தான் இருப்பார்கள்.....தங்களது பாதுகாப்புக்கான முன்னெச்சரிக்கைக்காக இருக்கலாம்...என்பது எனது கருத்து !
அப்படியா !!
நீக்குகாலை வணக்கம் அனைவருக்கும்.
பதிலளிநீக்குவணக்கம் நெல்லை.. வாங்க...
நீக்கு//தங்கள் குழந்தைகளுக்கு திருமணம் ஆகவில்லை என்றால் மிகவும் கவலைப்படுகிறார்கள். இது ஏன்// - நமக்கு வலித்தாலும் தடுப்பூசி போட்டுக்கொள்வதும், மற்றவர்களுக்கு தடுப்பூசி போட்டாகணுமே என்று கவலைப்படுவது போலத்தான்
பதிலளிநீக்குஹா ஹா ஹா நல்ல பதில்.
நீக்கு//மார்க்கெட்டுக்குள் நுழைந்தவுடனேயே அதை வாங்கி// - நிச்சயம் வாங்க மாட்டேன். மெதுவா சாதக பாதகங்கள் தெரிந்துகொண்டுதான் வாங்குவேன். முதலில் ஐபோன் வந்தபோது, முதலில் பாஞ்சு வாங்கினவர்கள், Pantல்,ஐபோனை வைத்துக் குனிந்தால் ஐபோன் வளைந்ததைக் கண்டுபிடித்து பிறகு மாற்றினதையும், விண்டோஸ் ஆப்பரேடிங் சிஸ்டம் ஒன்று வெளியிட்டவுடன் அவசர அவசரமாக பலர் வாங்கி இன்ஸ்டால் செய்து பிறகு அது சுத்தமாக வேலை செய்யவில்லை என்று தெரிந்து பலர் முழித்ததும்தான் என் நினைவுக்கு வருது.
பதிலளிநீக்குஆம் உண்மைதான்.
நீக்குநான் மஸ்கட்டில் இருந்த பொழுது எல்லோ பேஸ் நடத்திய போட்டி ஒன்றில் 25ரியால் பரிசு கிடைத்தது.என் கணவர் "உனக்கு என்ன வேண்டுமோ வாங்கிக் கொள்" என்றார். அப்போது சப்பாத்தி மேக்கர் மார்க்கெட்டுக்கு வந்த புதிது. ஆசைப்பட்டு வாங்கி விட்டேன், ஆனால் அதில் செய்த சப்பாத்தி ஜவ்வாக இழுபடும். கொஞ்சம் பயன் படுத்தினேன். தோசை கூட பார்க்கலாம் என்றார்கள். தோசை சின்னதாக வரும். சப்பாத்தி மேக்கரை தூக்கி பரணில் போட்டு, வீடு மாற்றிய பொழுது விலைக்கு போட்டு விட்டேன்.
நீக்குஅப்படியா ! அடடா :((
நீக்குஎல்லோ பேஸ்// yellow Pages endru vandhirukka vendum.
நீக்குok
நீக்கு//கேள்விகள் புத்திக் கூர்மையை பிரகடனப்// - இதற்குச் சரியான விடை, யார் கஸ்டமர் என்ற புரிதல். இங்கு கஸ்டமர், பதிவைப் படிக்கும் வாசகர். அதனால் தேவையான கேள்விக்கு அறிவுபூர்வமாகவும் பெரும்பாலான கேள்விகளுக்கு ரசிக்கும் விதமாகவே பதிலளிக்க வேண்டும். இந்தக் கேள்விக்கே, அந்த author இப்படிச் சொல்லியிருக்கிறார், சுகி சிவம் தன் காணொளியில் இந்த மாதிரி மனித மனத்தை விளக்கியிருக்கார், சிக்மண்ட் ஃப்ராய்டு....என்று நீட்டிக்கொண்டு போனால், படிப்பவர்கள் அடுத்த ப்ளாக் பதிவை நோக்கி ஓடிவிடுவார்கள்
பதிலளிநீக்குகரெக்ட்.
நீக்கு@நெல்லை: ரேவதி பிரியன் என்று ஒருவர் குமுதத்திலும் கேள்வி கேட்பார். ராணியிலும் கேள்வி கேட்பார். அது அதற்கு ஏற்றார் போல் இருக்கும். கேள்வி கேட்பவர்கள் ஒரு தனி ஜாதி. எல்லோரிடமும் கேட்பதற்கு அவர்களுக்கு கேள்விகள் இருக்கும். உங்களையும், என்னையும் போல.
நீக்குநிறைய கேள்விகள் கேளுங்கள் என்று என்னதான் ஊக்கப் படுத்தினாலும் எ.பி.யில் ஈசாவாஸ்ய உபநிஷத் பற்றி கேள்வி கேட்க முடியுமா? நான் கேட்டாலும் அவர்கள் பதில் சொல்ல மாட்டார்கள்.
நீக்குஅடுத்த புதன் கிழமை பதில் அளிக்கிறோம்.
நீக்கு//அடுத்த புதன் கிழமை பதில் அளிக்கிறோம்.//அடடா! உறங்கும் புலியை இடறி விட்டு விட்டேனோ?
நீக்கு:))
நீக்கு//இதை (கற்று) கொடுத்து விட்டோம்// - நாம் எப்படி நடக்கிறோமோ அதனைப் பார்த்து கொஞ்சம் ரிஃபைன் செய்து அவர்களே கற்றுக்கொள்வார்கள். மற்றபடி நாம் செய்யாத எதையும் யாருக்கும் (குழந்தைகளுக்கு) கற்றுக்கொடுக்கவே முடியாது.
பதிலளிநீக்குஅதுவும் சரிதான்.
நீக்கு//மற்றபடி நாம் செய்யாத எதையும் யாருக்கும் (குழந்தைகளுக்கு) கற்றுக்கொடுக்கவே முடியாது.// கற்றுக் கொடுப்பது என்றால் என்ன? லெக்சர் அடிப்பதா?வாழ்த்து காட்டுவதைத்தான் சொன்னேன். சிலர் நான் குழந்தைகளுக்கு நல்ல கல்வி கொடுத்தேன், பிஸினெஸ் செட் பண்ணி கொடுத்தேன் என்றெல்லாம் கூறுவார்கள்.
நீக்கு//மதுரை புதுமண்டபம் கடைகளில் வீட்டு உபயோகப்// - பாவம் இவங்க. எங்க செட்டில் ஆகலாம் என்று மதுரையை மட்டும் பார்க்க முடியாமல் போய்விட்டது (அவருக்கும் மதுரைக்கும் ஒருவேளை சம்பந்தம் இல்லையோ? அதனால்தான் மதுரை பேச்சையே கீசா மேடத்தை எடுக்க விடவில்லையோ?) மற்றபடி பெங்களூர், அம்பத்தூர், மைசூர்....என்று பெரிய லிஸ்ட் போட்டுப் பார்த்திருக்கிறார். அதனால்தான் மனதளவில் இன்னும் மதுரையை விட்டு வெளியே வரமுடியவில்லை போலிருக்கு
பதிலளிநீக்குகீதா சாம்பசிவம் மேடம் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.
நீக்குஹாஹாஹா, கௌதமன் சார், வந்துட்டேன். நான் வந்துட்டேன், வந்துட்டேன்னு சொல்லுங்க! :)))))
நீக்குநெல்லையின் இந்தக் கவலைக்கு ஒரு பதிவே எழுதணும். ஆனால் மதுரையின் தண்ணீர்க்கஷ்டம், (நான் சின்ன வயசில் இருந்தே பார்த்து வருவது) அக்ரஹாரங்கள் அழிந்து வணிக இருப்பிடங்களாக மாறிய தெருக்கள், சொந்தங்கள் மதுரையை விட்டுச் சென்று விட்டது என்று பல காரணங்கள், மதுரையைத் தேர்ந்தெடுக்காததற்கு. நம்மவருக்குக் கூட ஆசை இருந்தது. ஆனால் நான் தான் பிடிவாதமாக வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். என்ன இருந்தாலும் நாங்க இருந்தப்போ இருந்த அந்தப் பழைய மதுரையின் அழகிய மங்களகரமான முகம் பின்னர் இல்லை. தலையை விரித்துப் போட்டுக் கொண்டு ஜீன்ஸ் அணிந்த இந்தப் புது மதுரை எனக்கு வேண்டாம்!
நீக்குநெல்லை! "பெண்"களூர், மைசூரு மட்டுமில்லை, பெரியகுளம், மேல்மங்கலம், சின்னமனூர், திருநெல்வேலிப் பக்கம், தென்காசி, திருக்குற்றாலம், திருநெல்வேலி நகர் னு எல்லா இடங்களையும் அலசி ஆராய்ந்தோம். திருக்குற்றாலம் என் கற்பனைக்கு மாறாக இருந்து விட்டது. தென்காசி நெரிசலாகத் தெரிந்தது. திருநெல்வேலியில் பழைய அக்ரஹார வீடுகளைத் தேட வேண்டி இருந்தது. செங்கோட்டைப் பக்கம் பார்க்கலாம் என்றார்கள். அவ்வளவு தூரம் போகலை. கல்லிடைக்குறிச்சி/அம்பாசமுத்திரம் ஆகிய ஊர்களில் அக்ரஹாரம் பராமரிப்புக்களில் இருந்தாலும் வீடுகள் ஒரு முழ அகலம் தான். நம்மவருக்குப் படுப்பது எப்படி எனக் கவலை! இப்படிப் பல ஊர்களைத் தள்ளிட்டுக் கடைசியில் அரங்கன் அழைத்தான்.
நீக்குவிளக்கமான கருத்துரைக்கு நன்றி.
நீக்குமதுரைப் புது மண்டபத்தில் பல உபயோகமான பொருட்கள் குறைந்த விலையில் வாங்கலாம். என்னோட சீனாச்சட்டிக் கல்யாணத்திற்குக் கொடுத்தது விரிசல் விட்டுப் போய்த் தூக்கிக் கொடுக்கும்படி ஆச்சு. அதில் தான் இட்லி வார்ப்பேன். சும்மா இட்லி "மெத்" "மெத்" தென்று வரும். இரண்டு சாப்பிட்டாலே போதும். அந்தப் பழைய சட்டியில் நீர் விட்டு அடுப்பில் வைத்தால் விரிசல் வழியாகக் கசிவு ஏற்பட்டதால் பயன்படுத்த முடியலை. இன்று வரை அந்தத் தட்டிற்கேற்ற சீனாச்சட்டியும் கிடைக்கலை. மதுரைப் புது மண்டபத்தில் தான் பார்க்கணும். கும்பகோணத்தில் சுந்தரேச ஐயர் பாத்திரக்கடையிலேயே சீனாச்சட்டினு கேட்டால் யாருக்கும் புரியலை. இங்கே மதுரையில் புதுமண்டபத்தில் இரண்டு சீனாச்சட்டிகள் வாங்கினேன். ஆனால் அந்த இட்லித்தட்டு வைக்கும்படியான அளவில் இல்லை. :( இட்லித்தட்டைக் கொண்டு வரச் சொல்லி இருக்காங்க. மதுரைக்குப் போயே 3 வருஷம் ஆச்சு! :)))))
நீக்கு/என்ன இருந்தாலும் நாங்க இருந்தப்போ இருந்த அந்தப் பழைய மதுரையின் அழகிய மங்களகரமான முகம் பின்னர் இல்லை.தலையை விரித்துப் போட்டுக் கொண்டு ஜீன்ஸ் அணிந்த இந்தப் புது மதுரை..// என்ன கொடுமை இது? பின் கொசுவம் வைத்து புடவை கட்டிக் கொண்டு, பிச்சோடா பொட்டுக் கொண்டு பூ வைத்துக் கொண்டிருக்கும் மாத்வப் பெண் என்று மதுரையை வர்ணித்திருப்பார் லா.ச.ரா. (எனக்கு மைசூர் அப்படித் தோன்றும்). இப்போது மதுரையின் அந்த அழகு மாறிப் போய் விட்டதா? என்ன செய்ய முடியும்? எனக்கு திருச்சியைப் பற்றி அப்படிப்பட்ட வருத்தம் உண்டு. மெட்ராஸ்காரர்கள் 1970க்கு முந்தைய மெட்ராஸ்தான் அழகு என்பார்கள். பெங்களூர்வாசிகளோ 30 வருடம் முந்தி பெங்களூர் எப்படி இருந்தது தெரியுமா? என்கிறார்கள். மாற்றங்கள் மட்டுமே மாறதது.
நீக்குசரியாகச் சொன்னீர்கள். சில மாற்றங்கள் காலத்தின் கட்டாயம் என்றாலும், நாகரீக மாற்றம் என்ற பெயரில் அரங்கேறும் அலங்கோலங்கள் ஏமாற்றங்கள்தான்.
நீக்குகீசா மேடம்...நீங்கள் மட்டும் மதுரையில் இருந்திருந்தால், நான் வந்து தங்கியிருக்கலாம், கோவில்கள், அப்புறம் நீங்க இலவச விளம்பரம் கொடுக்கும் கோபு ஐயங்கார் கடை, ப்ரேமா விலாஸ், ஹேப்பிமென்....என்ன என்னவோ.. சுற்றியிருக்கலாம்.
நீக்குசரி ஸ்ரீரங்கத்துலதான் இருக்கீங்க... பாய்ஸ் பட செந்தில் மாதிரி, எப்போ எத்தனை மணிக்கு எந்த சன்னிதில (ஸ்ரீரங்கம் கோவில்) என்ன பிரசாதம் கிடைக்கும்னு ஒரு இன்பர்மேசன் கூட உங்கள்ட இல்லை. வாங்க, வந்து தங்குங்க, மேல் மாடில போய் காவிரியைப் பாருங்க, உச்சிப்பிள்ளையார் தெரியுதான்னு பாருங்க..இடத்தைக் காலி பண்ணுங்க என்று சொல்றீங்க.. நான் என்ன பண்ணறது?
எத்தனை மணிக்கு எந்த சன்னிதில //(ஸ்ரீரங்கம் கோவில்) என்ன பிரசாதம் கிடைக்கும்னு ஒரு இன்பர்மேசன் கூட உங்கள்ட இல்லை.// ஒவ்வொரு வைணவ தலத்திலும் ஒவ்வொரு சிறப்பான பிரசாதம் உண்டு, திருவரங்கத்தில் மட்டும் அப்படி எதுவும் கிடையாது. அங்கு கிடைக்கும் தேன்குழலை சாப்பிட்டால் பல் உடைந்து விடும் என்று வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் உபன்யாசத்தில் சொல்வதையெல்லாம் கேட்பதில்லை என்ன வைஷ்ணவரோ...?
நீக்கு''விவரம் அறிந்த ஒருவர், மற்றொரு விவரம் அறிந்த ஒருவரிடம் கேட்கும் கேள்விகள்தான் நீங்கள் சொன்ன இரண்டு வகைகளின் கீழ் வரும். "
பதிலளிநீக்கு# கேள்வி கேட்பவருக்கு ஒரு காரணம் பதில் தருபவருக்கு வேறு காரணம்."
ஹாஹ்ஹா:) அருமை.
நமக்கு அடுத்த தலைமுறையினருக்குக்
கேள்வி கேட்பதே பிடிக்காமல் போகிறது.
மிகத்தொலைவில் இருந்து நல்ல தனமாகக்
கேட்கப்படும் கேள்விகளே பதில் சொல்லப்
படுகின்றன:)
நீங்கள் அனைவரும் நிதானமாக யோசித்துப்
பதில்கள் சொன்னது, சொல்வது சிறப்பு.
எங்கள் ப்ளாக் குழுமத்துக்கு என் நன்றிகளும் வாழ்த்துகளும்.
வாழ்த்துகளுக்கு நன்றி.
நீக்கு//உடனே வாங்கறேன் என்று// - எனக்கு இரண்டு சம்பவங்கள்தான் நினைவுக்கு வருது.
பதிலளிநீக்குபஹ்ரைனில் ஒரு தடவை வேறு ஏதோ வேலையாக கூகிளைப் பார்த்துக்கொண்டிருந்தபோது (ஆபீஸில், வேலை விஷயமா), சட் என்று 'எடை குறைக்கும் டேப்லெட்ஸ் விளம்பரம்' வந்துபோனது. I am obsessed with this. உடனே அதை check செய்து, நிறைய பேர், அந்த மெடிசினை (டாப்லட்ஸ்) ஆஹா ஓஹோ. ஒரே வாரத்தில் 2-4 கிலோ எடை குறைப்பு, 1 மாதத்தில் 7-10 கிலோ எடை குறையும் என்றெல்லாம் எழுதினதைப் பார்த்து, என்னுடன் வேலை பார்த்தவனிடம் க்ரெடிட் கார்ட் கொடுக்கச் சொல்லி, ஆர்டர் செய்தேன் (USA விலிருந்து அது வரணும்). அதன் விலை 15,000 ரூபாய், 6 மாதத்திற்கான 6 பாட்டில்கள். பிறகு அன்று நேரம் கிடைத்தபோது இன்னும் ஆராயலாம் என்று பார்த்தால் அந்த விளம்பர சைட்டையே காணோம். பத்து நாளில் எனக்கு கொரியர் வந்தது. Medicinesலாம் பக்காவா வந்தது. பிறகு ஆராய்ந்ததில், இதனை USA Medical Authorities clear பண்ணவில்லை என்றும் side effects இருக்கும் என்றும் புரிந்ததால், அதனை உபயோகிக்கவே இல்லை. தூரப் போட்டுவிட்டேன்.
ஒரு வருடம் முன்பு, இங்கு முருக்கு செய்யும் மிஷின் (ப்ளாஸ்டிக், 100 ரூபாய்) இரண்டை, மனைவியிடம் ரொம்பச் சொல்லி ஆர்டர் செய்தேன். விளம்பரம் பார்த்து வாங்கினதுதான். பிறகு அதில் பிழிவது வேலைக்காவாது என்பதைப் புரிந்துகொண்டேன். இன்னும் உபயோகிக்கவில்லை. நல்லவேளை 300 ரூபாயோடு போயிற்று.
அனுபவ பாடங்கள்!
நீக்குஹையோ, இந்தச் சப்பாத்தி மிஷினும், முறுக்கு மிஷினும் நம்மவர் கிட்டத்தட்ட வாங்கியே விட்டார். நான் பண்ணின ஸ்ட்ரைக்கில் பின்வாங்கினார். இப்போவும் ஏதோ மீனாக்ஷி வீட்டு உபயோகப் பொருட்களாம். ஒரே பாத்திரத்தில் பால் காய்ச்சி, சாதம் வடித்து, காய்கள் பண்ணி, இட்லியும் வார்த்து னு இப்படி ஏதேதோ ஏழெட்டு வேலைகள் செய்யலாமாம். எனக்கு இட்லிப் பாத்திரத்துக்குப் பயன்படும்னு ஆசை, வாங்கட்டுமா என்றார். நான் சமைப்பதை நிறுத்திடறேன். சமையல் மாமிட்டேயே சாப்பாடு வாங்கிக்கோங்க என்றேன். பதிலே வரலை! :))))
நீக்குபாவம் அவர் !
நீக்கு😀😀😀
நீக்குநம் குழந்தைகளுக்கு இதை (கற்று) கொடுத்து விட்டோம் என்று பெற்றோர்கள் எதைக் குறித்து மகிழ்ச்சி அடையலாம்?///////////////நம்மைப் பார்த்து குழந்தைகள் வளர்கிறார்கள்.
பதிலளிநீக்குபெரியவர்களிடம் நாம் நடந்து கொள்ளும் விதம்,
நம் நேர்மை எல்லாமே அவர்களைப் பதப் படுத்தும் என்பதே எனக்குத் தோன்றுகிறது.
ஆம் உண்மைதான்.
நீக்குதேகப் பயிற்சிக் குழந்தை மிக அழகு.
பதிலளிநீக்குபெயர் சொல்லாததோடு விளையாடும் குழந்தை.?
தென் கிழக்கு ஆசியக் குழந்தை.
ரசிக்க முடியவில்லை:(
!! நன்றி.
நீக்குஇயற்கைக் காட்சிகளைத் தினம் ரசிக்கிறேன்.
பதிலளிநீக்குகுருவி,கிளி என்று வித விதமான பறைவைகள். அணில் ,முயல் என்று
காலையில் விளையாடும் காட்சிகளில் கழிகிறது
கோடை.
கருத்துரைக்கு நன்றி.
நீக்கு2 ஆவது கேள்வி.
பதிலளிநீக்குசமீபத்தில் வந்த கனவு.
எங்கள் வீட்டு உதவியாளர் ராணி
படியேறி வருகிறார். பால் வாங்கலையா அம்மா என்று கேட்கிறார்.இந்த வீட்டில்:))
ஆச்சரியமான கனவு!
நீக்கு3 ஆவது....பதில்.... இணையம்.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குபதில் சொல்வது சுலபம் இல்லை:0)
பதிலளிநீக்குஇப்படி உணர்ந்திருக்கிறீர்களா? அடுத்த புதனுக்கான
கேள்வி.
நன்றி, பதில் அளிப்போம்.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குஇறையருள் சூழ்க எங்கெங்கும்..
வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்..
வாழ்க வளமுடன்..
நீக்குகேள்விக்கு கேள்விகள்... நல்ல பதில்கள்...
பதிலளிநீக்குநன்றி .
நீக்கு//அல்லது வாங்கவே மாட்டீர்களா என்றும் கேட்க வேண்டாமோ ?// அது எப்படி? கேள்வி வாங்குவதை பற்றிதானே?
பதிலளிநீக்குஅதானே !!
நீக்குஇயற்கை காட்சிகளை ரசிப்பதற்கெல்லாம் நேரம்,காலம் ஒதுக்கி காத்திருக்க முடியுமா? கண்ணில் படும் பொழுதெல்லாம் ரசிக்க வேண்டியதுதான்.
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி.
நீக்கு2.கனவுகள் வருகின்றன, விசித்திரமாக எதுவும் வரவில்லை.
பதிலளிநீக்கு3. முன்பு புத்தகங்கள் என்பேன், இப்போது செல்ஃபோன் என்று சொல்லலாம்.ஏனென்றால் அதில்தான் படிக்கிறேன், பாட்டு கேட்கிறேன், யூ ட்யூப் பார்க்கிறேன்.
கருத்துரைக்கு நன்றி.
நீக்கு1.மாற்றி யோசிக்கத் தெரிந்த குட்டிச் சுட்டி பிழைத்துக் கொள்ளும்.
பதிலளிநீக்கு2.இயற்கையும்,செயற்கையும்
3.பாம்பிற்கு முத்தம் தரும் பாலகன்
கருத்துரைக்கு நன்றி.
நீக்கு1. இயற்கைக்காட்சிகளை ரசிக்க நேரம், காலம் எதுக்கு? கண்களில் படும்போது மனம் ஈர்க்கும்போது ரசிக்க வேண்டியது தான். இங்கே எங்க வீட்டு ஜன்னல் வழியே தெரியும் காட்சிகளில் எனக்குப் பிடித்ததூ கருமேகங்களின் குவியலின் பின்னணியில் தெற்கு கோபுரம். விளக்குப் போட்டால் ஒரு மாதிரி அழகு! விளக்குப் போடாமல் மாலை நாலு மணிக்குக் கூடும் கருமேகப் பின்னணியில் வேறே மாதிரி அழகு! silhouette/அதன் மௌனம் சார்ந்த கம்பீர அழகு! வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.
பதிலளிநீக்குஆஹா அற்புதம்.
நீக்கு1.முதல் படத்துக் குட்டிப்பையர் ஏற்கெனவே வந்திருக்கார்.
பதிலளிநீக்கு2.தொலைக்காட்சி பார்த்து யோகா செய்யும் குழந்தையும் அறிமுகமே
3. கடைசிப் படம் பயமா இருக்கு.
:))
நீக்கு2.விசித்திரமான கனவா? கனவுனு ஏதும் நினவில் வருவதில்லை. ஆனால் ஏதோ கோயிலுக்குப் போறோம். அதன் பிரகாரச் சுவர்களைத் தாண்டுவதற்கு இரண்டு வழி. ஒன்று சுவர் வழியாகவே தாண்டித் தாண்டிப் போகணும். இன்னொன்று கீழே இருக்கு. அங்கே எதிலோ புகுந்தால் கோவில் பிரகாரம் வருது. இது எந்த ஊர்/எந்த இடம்னு எல்லாம் புரியறதில்லை. பிரகாரம் வந்ததும் உடனே எழுந்து கொண்டு விடுவேன். நம்மவரிடம் சொன்னால் சமீப காலங்களில் எங்கேயுமே போகாததால் இப்படித் தோன்றுவதாய்ச் சொல்கிறார். ஏனெனில் இது அதிகாலையின் தோன்றும் ஒரு விஷயம். அதுவும் ஒரே விஷயம்!
பதிலளிநீக்குவிசித்திரமான கனவுதான்!
நீக்குமுன்னெல்லாம் புத்தகம் படித்தால் தான் சாப்பாடு ஜீரணம் ஆகும்னு இருந்தேன். அது ஒரு காலம். இப்போதெல்லாம் அப்படி இல்லை. கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக வலித் தொந்திரவில் எதையுமே கூர்ந்து கவனிக்கவோ/ மனம் ஈடுபடவோ முடியாமல் போய்விட்டது. இப்போத் தான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறேன்.
பதிலளிநீக்குவிரைவில் மீண்டு வர வாழ்த்துகள்.
நீக்குகேள்விகளுக்கு பதில் சொன்ன "ஆசிரியர்கள்" மூவருக்கும் மனமார்ந்த நன்றி.
பதிலளிநீக்குநன்றிக்கு நன்றி.
நீக்கு1.உங்களுக்குப் பிடித்த பொழுதுபோக்கு என்ன?
பதிலளிநீக்கு2. தொலைக்காட்சித் தொடர்கள் பார்ப்பீர்களா/
3. அதிலேயே மூழ்கி முத்தெடுப்பவர்கள் பற்றிய உங்கள் கருத்து என்ன?
4. ஒரு காலத்தில் தூர்தர்ஷனில் வந்த தொடர்கள் பார்த்திருக்கிறீர்களா? அப்போதைய தொடர்களுக்கும் இப்போது வரும் தொடர்களுக்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன?
5. உங்களுக்குப் பிடித்த/அல்லது நீங்கள் அடிக்கடி பார்க்கும் தொலைக்காட்சி சானல் எது?
கேள்விகளுக்கு நன்றி. பதில் அளிப்போம்.
நீக்கு6. யாரெல்லாம் அர்ச்சகர் ஆகலாம் என்பது பற்றிப் பேராசிரியர் திரு நாகசாமி அவர்கள் தினமலரில் எழுதி வருகிறார். படித்து வருகிறீர்களா? இது குறித்து உங்கள் கருத்து என்ன?
பதிலளிநீக்கு7.சுமார் பனிரண்டு வருடங்களாவது படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய ஆகமவிதிகளை ஒரே வருஷம் பனிரண்டு மாதம் படிக்கும் டிப்ளமா கோர்ஸினால் பூர்த்தி செய்ய முடியுமா?
8. கோவில்கள் அரசு அலுவலகங்கள் ஆக ஆரம்பித்தது எப்போதில் இருந்து?
9. கோவில் ஊழியர்கள் அரசு அலுவலர்களா? அப்படி எனில் அவர்களுக்கும் பணி ஓய்வு, பென்ஷன் எல்லாமும் உண்டா?
10. தானாக இயலவில்லை என்பது வரைக்கும் தானே முன்னாட்களில் எல்லாம் அர்ச்சகர்கள் பணி புரிந்து/தொண்டு செய்து வந்தார்கள்! இப்போது அவர்களுக்குக் கட்டாய ஓய்வு கொடுப்பது சரியா? அதிலும் எந்தவிதமான ஊதியமும் கொடுக்காமல் அவர்களைக் கோயிலுக்கு வர வேண்டாம் என்று சொல்வது ஏற்புடையதா?
கேள்விகளுக்கு நன்றி. பதில் அளிப்போம்.
நீக்குஹையா, மாட்டிக்கிட்டாங்களே! எ.பி. ஆ"சிரி"யர்கள் மாட்டிக்கிட்டாங்களே! இஃகி,இஃகி,இஃகி!
பதிலளிநீக்குபார்ப்போம். பதில்கள் வந்த பிறகு !
நீக்கு@ Sriram, What happened to Kamala Hariharan? Long time. No see. :( Is she OK?
பதிலளிநீக்குஎனக்கும் அதே நினைவுதான்...
நீக்குஉடல் நலம் தேறி வருகிறது சகோதரி கமலாவுக்கு, கூடிய விரைவில் வருவார்கள்.
நீக்குநல்ல கேள்வி பதில்கள்.
பதிலளிநீக்குஇயற்கை எப்பொழுதும் ரசிக்கப் பிடிக்கும்.
புத்தகம்,இணையம்.
இறுதி குழந்தை படம் எம்மைத்தான் பயமுறுத்துகிறது.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குகேள்வி பதில்கள் ஸ்வாரஸ்யம். இன்றைய படங்கள், அதிலும் கடைசி படம் - செம!
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஅனைத்து கேள்விகளும், அத்ற்கு பதில்களும் மிக அருமை.
பதிலளிநீக்குபடங்கள் எல்லாம் அருமை. கடைசி படம் "இளங்கன்று பயம் அறியாது" என்ற வாக்கியத்திற்கு பொருத்தம். பார்த்தால் நமக்கு பயம் வருகிறது.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குகேள்விகளும்,பதில்களும் படங்களும் அருமை.. மிக அருமை...
பதிலளிநீக்குவாழ்க நலம்..
நன்றி.
நீக்குஇயற்கையை எப்போதும் ரசிக்க பிடிக்கும்.
பதிலளிநீக்குகனவுகள் எப்போதும் வரும்.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குகேள்வி கேட்டவர்கள், கருத்துரை பதித்தவர்கள் எல்லோருக்கும் நன்றி. 100.
பதிலளிநீக்கு