திங்கள், 27 செப்டம்பர், 2021

'திங்க'க்கிழமை : காபேஜ் புலவ் - ரேவதி நரசிம்மன் ரெஸிப்பி 

 முட்டைக் கோஸ்------- காபேஜ் புலவ். எங்கள் ப்ளாகுக்கு.

+++++++++++++++++++++++++++++++++++++++++++ 
தேவை 
ஒரு பெரிய்ய்ய்ய காபேஜ்.
இங்கே வர மாதிரி. 
சென்னை காபேஜும் சரியாக இருக்கும்.
பெரிய அளவில் சத்தில்லாமல் வரும் முட்டைக் கோஸ் சுவைக்காது. அதை சலாட் செய்ய வேண்டியதுதான். நல்ல கெட்டி,இறுக்கமாக இருக்கும் காபேஜை வைத்து இந்தப் புலாவ் செய்தால் சுவை கூடும். 

வெஜ்ஜி கட்டர்  உபயோகித்தால்  சின்ன அளவில் கிடைக்கும் பொடி காபேஜ்  ருசி கூட்டும்.  அதை உப்பு ,மஞ்சள் பொடி போட்டுப்
பிசிறி வைத்துக் கொள்ள வேண்டும்.



பச்சையாக அரைத்துக் கொள்ள.....

இரண்டு ஏலக்காய்,
கொஞ்சம் கசகசா,
ஒரு சின்னத்துண்டு பட்டை,
நாலு கிராம்பு,

இரண்டு அங்குல இஞ்சி,
 பச்சை மிளகாய்,
நாலைந்து முந்திரிப்பருப்பு,
இரண்டு பாதாம்,
சின்ன வெங்காயம் ஐந்து,
பூண்டு அவரவர் இஷ்டப்படி,
பச்சைக் கொத்தமல்லி,
புதினா

வேறு இலை தழையையும் சேர்த்துக் கொள்ளலாம்:)

வதக்கி சேர்க்க,
 தேவையானபச்சை மிளகாய்,
இஞ்சி,
சின்ன வெங்காயம்,
பிரிஞ்சி இலை இரண்டு.

++++++++++++++++++++++++++++

அரைமணி நேரம் ஊறவைத்த நீள பாசுமதி அரிசி இரண்டு கிண்ணம்.
தேவையான நெய்.
கரம் மசாலா பொடி கொஞ்சம்,
மஞ்சள் தூள்,
மிளகாய்த் தூள்,
தனியா கொத்தமல்லிவிரைத் தூள்,
சீரகத் தூள்.
தேவையான உப்பு.

+++++++++++++++++++++

செய்முறை...
++++++++++++++

குக்கர் , ஒன் பாட் எல்லாம் எனக்கு ஒத்து வராது.  இருக்கிறதலியே பெரிய வாணலி, தடிமனா இருக்கிறதை எடுத்து அடுப்பில் வைத்து, 
தேவையான நெய் விடுவேன்.

மகள் பக்கத்தில் இருந்தால் பாதி எடுத்து விடுவாள்.  'ஒன்னோட நலத்துக்காகத் தான் சொல்றேன். ரத்தப் பரிசோதனை வருது.  கொலஸ்டீரால் ஏறினால் டாக்டர் கிட்ட வார்த்தை கேட்கணும்"

1, நெய் விட்டதும், ப.மிளகாய் ,சி வெங்காயம்இத்தியாதிகளை
வதக்கிக் கொண்டு
 2,  அரைத்த மசாலாவைச் சேர்த்து நல்ல பழுப்பு நிறத்தில் வறுத்துக் கொள்ள வேண்டும்.
3, பொடியாக நறுக்கி உப்பு மஞ்சள் பொடி சேர்த்து வைத்திருந்த முட்டைக்கோஸையும்,ஜலம் போகப் பிழிந்து சேர்க்க வேண்டும்.  நன்றாகப் பிரட்டிவிடும் போதே வாசனை வரும்.

4, ஊறின பாஸ்மதியை வடிகட்டி, அந்த ஜலத்தைத் தனியே வைத்துக் கொண்டு, வாணலியில் மற்ற கலவையோடு சேர்க்க வேண்டும்.
பாஸ்மதியைப் பொறுத்தவரை 1:1அரை. அளவு தண்ணீர்  
சேர்ப்பது என் வழக்கம்.  அடுப்பை ஏற்றச் சொல்லிக் குறிப்பிட மறந்துவிட்டேன்:)

சரி ...இப்போது தண்ணீரும் கொதிக்க,

நல்ல பெரிய மூடியாகப் போட்டு மூடி காத்துக் கொண்டிருக்கணும்.

ஒரு தடவை கிளறி விட்டு, அடுப்பைத் தணிக்கலாம்.  இன்னோரு பத்து நிமிடத்தில் புலாவ் தயார்.

இறக்குவதற்கு முன் குங்குமப்பூ, சேர்த்து, நெய்யில் முந்திரி பாதாம் வறுத்துப் போடலாம்.  பொடியாக நறுக்கிய கொத்தமல்லி,புதினா அலங்காரத்துக்கு.

நன்றாக ஆறினால் தான் பொலபொல வென்று வரும்.  நல்ல புலாவ் சாப்பிட்டு சந்தோஷமாக இருக்கலாம்.🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

+++++++++++++++++++++++++++++++++++


தொட்டுக் கொள்ள, தக்காளி,வெங்காயம், தேங்காய், சிவப்பு மிளகாய் ,உப்பு வறுத்து அரைத்துத் தயிரில் கலந்து கொண்டால்  நல்ல சுவையாக இருக்கும்.

வாழ்கவளமுடன்.

--


70 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் வல்லி சிம்ஹன் சகோதரி

    தங்களது கோஸ் வெஜிடபுள் புலாவ் செய்முறை விளக்கம் நன்றாக உள்ளது. அளவான சாமான்கள், அளவான வார்த்தைகள், இடையே சில நகைச்சுவை தெளிப்புகள் என கோஸ் புலாவ் மிக ரசிக்கும்படி இருக்கிறது. படமும் அருமை. நான் கோஸ் கூட்டு சாதம், கோஸ் துவையல் செய்து சாதத்தில் கலந்து, என்பது போலலெல்லாம் செய்து இருக்கிறேன். இந்த மாதிரி மசாலா சாமான்கள் இணைத்து பாசுமதியில் செய்யவில்லை. இனி செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி மா அன்பின் கமலா,.

      எனக்கு செய்யத் தெரிந்த அளவு எழுதத் தெரியாது

      . இன்னமும் மகள்
      நான் செய்யும்போது குறித்து
      வைத்துக் கொள்கிறாள்.
      அதுவும் ஒரு தடவை செய்தது போலச் செய்ய மாட்டேன்:)

      நீங்கள் படித்துப் புரிந்து கொண்டால் சரிதான்.

      குறைகள் இருந்தால் அதற்கு முழுவதும் நானே
      பொறுப்பு.
      மிக நன்றி மா.புலாவ் ருசிக்கட்டும்.

      நீக்கு
  4. காபேஜ் புலவ் நன்றாக இருக்கிறது. நான் முன்பு அடிக்கடி செய்வேன். பாசுமதி அரிசியில் இல்லை. சாப்பாட்டு பச்சரிசியில் செய்வேன். இப்போதுதான் பாசுமதியில் செய்கிறேன்.
    செய்முறை குறிப்பும், படமும் அருமை. பிரியாணி அரிசி என்று முன்பு வாங்கி வைத்து இருப்பேன், பொடி அரிசி அதில் கலவை சாதங்கள். கத்திரிக்காய் சாதம், தக்காளி சாதம் முட்டைக்கோஸ் சாதம் எல்லாம் அந்த அரிசியில்தான்.

    தொட்டுக்கொள்ள சொன்ன குறிப்பும் மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் கோமதிமா,

      இங்கே பாசுமதி அடிக்கடி உபயோகமாகிறது.
      மகள் நன்றாகச் செய்வாள்.

      எல்லாக் காய்கறிகளும் பாசுமதியோடு இணைகையில்
      குழந்தைகள் மறுக்காமல் சாப்பிட்டு விடுவார்கள்.

      கொஞ்சம் வளவளவென்று எழுதி இருக்கிறேன்.
      பார்த்து செய்ய வேண்டிய செய்முறை. பாராட்டுகளுக்கு நன்றி மா.



      "தொட்டுக்கொள்ள சொன்ன குறிப்பும் மிக அருமை."

      இந்தப் பச்சடியைப் புதிதாகச் செய்து பார்த்தேன். புளிப்பும் காரமும் கூடி
      நன்றாக இருந்தது.

      நீக்கு
    2. கோமதிக்கா ஆமாம் பிரியாணி அரிசி/ஜீரகச் சம்பா நம்மூர் பக்கங்களில் நன்றாகக் கிடைக்கும்...நல்ல மணமாக இருக்கும் பிரியாணி செய்ய. அந்த ஊர்ப்பக்கங்களில் பிரியாணி அரிசியில்தான் பெரும்பாலும் பிரியாணி செய்வாங்க அதன் சுவை தனி. சென்னையில் எல்லாம் பிரியாணியை பாசுமதியில் செய்யறாங்க..

      கீதா

      நீக்கு
  5. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    எல்லோரும் என்றும் நலமுடன் இருக்க இறைவன் அருள்
    வேண்டும்.

    பதிலளிநீக்கு
  6. ஆஹா!!
    இன்று நம்ம படைப்பா!!! மறந்து கூடப் போய்விட்டேன்.:)

    மே மாதம் அனுப்பினேனா? நினைவில்லை.
    ஏற்கனவே வந்து படித்த அன்பின் கமலா,அன்பின் கோமதிக்கு
    மிக நன்றி.

    மிக சாதாரணமான முறைதான்.
    ரசித்தவர்களுக்கும் ரசிக்கப் போகிறவர்களுக்கும் மிக
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா...  ஹா..   அவ்வளவு முன்னதாகவா அனுப்பினீர்கள்?  பார்க்க வேண்டும் அம்மா.

      நீக்கு
    2. 😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣அன்பு ஸ்ரீராம். பழைய மெயில் பார்த்த நினைவு. எங்கள் ப்ளாக் அவ்வளவு
      பிசியாக இருக்கிறது மா. நல்லதுதானே.!!!!

      நீக்கு
  7. இந்த செய்முறையை இன்று பதிவிட்ட ஸ்ரீராமுக்கு
    ரொம்ப நன்றி.

    இனிமேல் ஏதாவது எழுதினால்............................................................................
    கச்சிதமாகப் பதிவு செய்யப் பார்க்கிறேன்.
    எல்லோரும் பொறுமையாகப் படிக்கவேண்டும்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதென்ன எழுதினால்?  அப்பப்போ அனுப்புங்க அம்மா..   சுவையாக இருக்கும்.  இது வளவளவென்றெல்லாம் இல்லை.  அப்போ நான் எழுதுவதெல்லாம் வளவளாவா?  சொல்ல வந்த விஷயத்தைக் கொஞ்சம் ஜவ்வு மாதிரி இழுத்துச் சொல்வேன்!! :>))

      நீக்கு
    2. ஓ!!!!
      என்னுடைய பொறுமை குறைந்து விட்டது என்று நினைக்கிறேன்.
      நான் சொல்றதை நானே கேட்க முடிவதில்லை ஹாஹ்ஹா.:)

      பாராட்டுக்கு நன்றி.



      ''சொல்ல வந்த விஷயத்தைக் கொஞ்சம் ஜவ்வு மாதிரி இழுத்துச் சொல்வேன்!! '':>))



      சுவையாகச் சொல்கிறீர்கள். அதுதானே முக்கியம்.
      குறைவாக மதிப்பிடாதீர்கள்.

      நீக்கு
  8. இனிய காலை வணக்கம் எல்லோருக்கும், அட வல்லிம்மாவின் குறிப்பு!!! புலாவ் இங்கு மணக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. மகள் பக்கத்தில் இருந்தால் பாதி எடுத்து விடுவாள். //

    ஹாஹாஹாஹா!!!! அதான் மகள்!!! அம்மாவின் உடல் நலனில் அக்கறை உள்ள மகள்...அடுத்த லைன் அதுதான்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் .சின்ன கீதாமா. இங்கு வந்ததற்கு அப்புறம் சர்க்கரை
      வெகுவாகக் குறைந்ததற்கு அவளும் ஒரு காரணம். நன்றி மா.
      இரண்டு மாதங்களுக்கு அப்புறம் இன்று தான்
      குணுக்கு செய்தேன் .அடைக் குணுக்கு.
      வெங்காயம் இல்லாமல் தான்.

      நீக்கு
  10. அம்மா அசத்தல் ரெசிப்பி!!!! நான் இதுவரை பச்சையாக அரைத்து வதக்கியதில்லை. மசாலாக்களை லைட்டாக வறுத்து, வெங்காயம் கொஞ்சமாக வதக்கி அரைத்து அப்புறம் மீண்டும் விழுதை வதக்கி என்று...இப்படியும் செய்துடலாம்...

    அம்மா அரைத்த மசாலாவைச் சேர்க்கறப்ப, அதோடு தனியா பொடி கரம் மசாலா, மிளகாய்த்தூள் எல்லாம் சேர்க்க வேண்டும் இல்லையா?

    கீதா

    பதிலளிநீக்கு
  11. காலை வணக்கம் அனைவருக்கும்.

    தலைப்பைப் படித்துப் படம்பார்த்தேன். வல்லிம்மா ரெசிப்பி. வெங்காயம் உண்டான்னு பார்க்கணும்

    கேபேஜ் ஸ்டாக் இருக்கு. படித்துவிட்டு பத்து நாட்களில் செய்து பார்க்கணும்

    பிறகு வருகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி மா. நெல்லைத் தமிழன்.

      புரட்டாசி மாதத்துக்கு எழுதவில்லை:)

      புலாவில் எனக்குத் தெரிந்தவரை
      (நான் சேர்க்காவிட்டாலும்) வெங்காயம்
      எல்லோரும் சேர்த்தே செய்வார்கள்.
      மஹாலய பட்சம், புரட்டாசி மாதம்
      மசாலா, கரம் மசாலா நினைத்துக் கூடப்
      பார்ப்பதில்லை.

      எங்கள் வீட்டுக்கு வந்த உறவினர் நான் செய்த ப்ரெட் உப்புமாவை
      ரசித்தபடியே
      உனக்கு வெங்காயம் இல்லாமல்
      சமைக்கத் தெரியாது இல்லையா என்று புன்னகை செய்வார்.!!
      பிறகு படித்துப் பாருங்கள் மா. நன்றி.



      நீக்கு
  12. 1:1அரை. அளவு தண்ணீர்
    சேர்ப்பது என் வழக்கம்.//

    அதே அதே நானும் இதே அளவுதான் அது போல நீங்கள் செய்வது போல அடிகனமான வாணலி அல்லது குக்கர் பேனில் வெயிட் எதுவும் போடாமல் மூடி செய்தால் புலாவ் நன்றாகவே வருகிறது. அதுவும் கொதிக்க விட்டு சிம்மில் வைத்து விட்டல் 15 னிமிடத்தில் புலாவ் ரெடி. சாப்பிடவே செய்யலாம்.

    அம்மா கோஸ் பிழிந்த தண்ணீரையும் கூட தண்ணீர் கொதிக்கும் போது சாதக்கலவை சேர்க்கும் முன் கடைசியில் சேர்க்கலாம் இல்லையா? தண்ணீர் அதிகம் இருக்காதே அப்படி இருந்தால் அதையும் சேர்த்து 1 1/2 கப்பாக அளக்கலாம் இல்லையா?

    மணக்கிறது. புலாவ் ஆசை வந்துவிட்டது. கொஞ்ச நாளாகிவிட்டது புலாவ் செய்து. செய்துவிட வேண்டியதுதான்...

    மிக்க நன்றி அம்மா சூப்பர் ரெசிப்பி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை ராஜா. காபேஜ் ஊற வைத்த தண்ணீர்
      இறுத்து விட வேண்டும். இங்கே காபேஜ் வாசனை தூக்கலாக இருந்தால்
      பிடிக்காது.
      அதனால் மிருதுவாக இருக்கும் காபேஜை
      வதக்குவதும் சுலபம்.Stir fry .

      நீக்கு
  13. ஆமாம் சின்ன கீதாமா,

    சரியான சொதப்பல் இல்லை:)
    பச்சையாக அரைப்ப்தும், பிறகு பொடி சேர்ப்பதும் தோழியிடம் கற்றவை.
    அவள் 50 பேருக்கு சமைப்பாள்.

    எனக்கு தான் எழுதத் தெரியவில்லை.
    எடிட் செய்து அனுப்பி இருக்க வேண்டும்.

    நல்ல வேளை இங்கே வருபவர்கள் எல்லாம் நன்றாகச் சமைப்பவர்கள்!!!
    நன்றி மா.

    பதிலளிநீக்கு
  14. சைட் டிஷ் சூப்பர் அம்மா

    படங்களும் நல்லா இருக்கு!!

    கீதா

    பதிலளிநீக்கு
  15. Super recipe. நிச்சயம் செய்து சாப்பிடணும்னு தோணுது.

    நாளை ச்ராத்தம். அப்புறம் மாளயபக்ஷ தர்ப்பணம் என்று அடுத்த பத்து நாட்கள் ஓடிப் போயிடும். பிறகு இதனைச் செய்யணும்

    அடிக்கடி எழுதுங்கள் வல்லிம்மா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா.
      நன்றி மா. நெல்லைத் தமிழன்.

      நறுவிசாகச் செய்து விடுவீர்கள்.

      நான் செய்தாலும் கூட ருசி பார்ப்பதோடு சரி.
      பேரன்கள் சாப்பிடுவார்கள்.
      அம்மாவின் கைப்பக்குவத்தில் இருந்து மாற்றி ஒரு
      பாட்டி
      பக்குவம் அவ்வளவுதான். நன்றாகச் செய்து
      பாருங்கள்.

      அடிக்கடியா:) உற்சாகம் இல்லைம்மா.
      தளிகை செய்கிறேன். எழுவதும் சொல்வதும் சிரமம்.

      நீக்கு
    2. என்ன அப்படி உற்சாகம் இல்லைனு சொல்றீங்க? உங்க பதிவுலாமே (உங்க தளத்துல) நல்லா ரசனையா இருக்கே..

      நீக்கு
  16. மணக்கிறது. புலாவ் ஆசை வந்துவிட்டது. கொஞ்ச நாளாகிவிட்டது புலாவ் செய்து. செய்துவிட வேண்டியதுதான்...

    மிக்க நன்றி அம்மா சூப்பர் ரெசிப்பி//நன்றி சின்ன கீதாமா.
    இன்னும் படங்கள் போட்டு இருக்கலாம்.
    அதே மசாலா. அதே பொருட்கள்.
    எல்லோருக்கும் புரியும் என்று விட்டு விட்டேன்.

    நீங்கள் அருமையாகச் செய்வீர்கள்.

    பதிலளிநீக்கு
  17. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் ஆரோக்கியமும் மன அமைதியும் மேலோங்கப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  18. அட! இன்னிக்கு ரேவதி சமையலா? முன்னரே ஒரு முறை சொல்லி இருக்கீங்களோ? அல்லது நான் மட்டும் கேட்டுத் தெரிந்து கொண்டேனோ நினைவில் இல்லை. நல்லா இருக்கு பார்க்கவும். சாப்பிடவும் நன்றாகவே இருக்கும். ஆனால் இங்கே முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், நூல்கோல், முள்ளங்கி, டர்னிப், பீட்ரூட் போன்றவை சேர்க்க முடியாது. காரட் மட்டும் அவ்வப்போது ஒன்றே ஒன்று எனச் சேர்ப்போம் அதுவும் சாலடாக. மற்றக் காய்களைப் போட்டுப் பண்ணிப் பார்க்கணும் இதே சமையல் பொருட்களை வைத்து. நான் குக்கரில் வைத்துவிட்டு விசில் போட்டு ஒரே விசிலில் அடுப்பை அணைத்துவிடுவேன். ரைஸ் குக்கரில் வைக்கலாம் என்றால் அது ரொம்பப் பெரிது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட! இன்னிக்கு ரேவதி சமையலா?''
      ஆமாம் பா கீதாமா. ஏதோ உற்சாகத்தில் அப்பொழுது எழுதி அனுப்பி 'விட்டேன். இப்போ
      குளிர் வந்த பிறகு
      எல்லாமே பிரம்மப் பிரயத்தனமாக இருக்கு.

      முன்னேயே சொன்னேனா. ராமச்சந்த்ரா!!

      நீங்கள் செய்வதெல்லாம் கச்சிதமாக
      விளக்கமாக இருக்குமே!!!


      "நூல்கோல், முள்ளங்கி, டர்னிப், பீட்ரூட்" இங்கேயும் கிடையாதுமா.
      எல்லாமே வாயுன்னு ஒதுக்கிவிடறதுகள்.



      ""ரைஸ் குக்கரில் வைக்கலாம் என்றால் அது ரொம்பப் பெரிது.""

      இரண்டு பேருக்கு எவ்வளவு என்று செய்வது மா.
      கஷ்டம் தான்.




      நீக்கு
  19. தொட்டுக்கச் சொல்லி இருக்கும் பச்சடி செய்முறையில் துவையலாகவும் அரைத்து தோசைக்குத் தொட்டுக்கலாம் போல இருக்கே. எல்லாம் மஹாலய பக்ஷம், நவராத்திரி முடிஞ்சால் தான்! இப்போ நோ வெங்காயம்! பூண்டு எப்போவுமே இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தப் பச்சடி இந்தப் புலாவுக்கு நன்றாக இருந்தது.

      நிதானமாகச் செய்து பாருங்கள்.
      வெங்காயம் இல்லாமலே செய்யலாமே
      நன்றாக இருந்தது.

      நீக்கு
  20. எளிமையான சமையல் குறிப்பு. செய்யவும் சுலபம். சாப்பிடுவதற்கும் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி மா கீதா. '
      எத்தனை நாட்களாக இந்தச் சமையல்
      நமக்குப் பழக்கம்!!

      சாப்பிடுகிறவர்கள் விரும்பினால்
      சமைப்பதில் கஷ்டமே இல்லை.

      நீக்கு
  21. நானும் முன்னெல்லாம் சாப்பாட்டுப் பச்சரிசியிலேயே புலவ், ஃப்ரைட் ரைஸ், வெஜிடபிள் பிரியாணி போன்றவை செய்து கொண்டிருந்தேன். இப்போத் தான் இரண்டு, மூன்று வருடங்களாக பாஸ்மதி அரிசி. அம்பேரிக்காவில் அவங்க தினசரி சாப்பாட்டுக்கே பாஸ்மதி தான் பயன்படுத்துவதால் அங்கே இது தான் எந்தக் கலந்த சாதத்துக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்பேரிக்காவில் அவங்க தினசரி சாப்பாட்டுக்கே பாஸ்மதி தான் பயன்படுத்துவதால் அங்கே இது தான் எந்தக் கலந்த சாதத்துக்கும்.//////
      அதேதான் மா. பசங்களுக்கு மிகப் பிடித்தது பாஸ்மதி.

      வாரத்தில் மூன்று நாட்கள் இரவில்
      ஒழுங்கான சாப்பாட்டுக்கு உதவுகிறது. மீண்டும் மீண்டும் பாஸ்தா,
      என்றில்லாமல் உபயோகமாகிறது.

      நீக்கு
    2. இங்கே பாஸ்தாவெல்லாம் வாங்குவதே இல்லை. பதஞ்சலி நூடுல்ஸ் கோதுமையில் செய்தது என்பதால் ஆரம்பத்தில் வாங்கினோம். பின்னர் பதஞ்சலி பொருட்கள் வாங்குவதையே நிறுத்திட்டோம். கேஷ்கந்தி வாங்கிட்டு என்னோட தலை மயிரெல்லாம் கொட்டிப் போய் ரொம்ப மோசமாக ஆகிவிட்டது. மீண்டும் நீலிபிருங்காதித் தைலம் தான். ஆனால் முன்னேற்றம் ரொம்பவே குறைவு. என்ன செய்ய முடியும்?

      நீக்கு
    3. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், வேலை செய்யும் பெண்மணி விடுமுறையாம். போகணும், வேலை செய்ய. கொஞ்சம் எழுந்து நடமாட ஆரம்பிச்சதும் அடிக்கடி விடுமுறை எடுக்கிறார் அந்தப் பெண். :( நான் முடியாமல் தான் செய்ய வேண்டி இருக்கு. :(

      நீக்கு
    4. கீதாமா, பாஸ்தா,பீட்சா, சாண்ட்விச் என்று தான் மதியத்துக்குப் பார்சல்
      சின்னவனுக்கு.

      சாப்பிடக்கூட நேரம் இல்லாமல் வகுப்புகள். ஒரு மாடியிலிருந்து இன்னோரு
      மாடி ஏறி வீடு வந்து சேரும்போது அகோரப் பசி.
      நல்ல வேளை,
      பாட்டி குழம்பு செய்தார், துகையல் இருக்கு என்றால் வந்ததும்
      சாப்பிடுகிறான்.

      வாரம் ஐந்து நாட்களும் இந்த ஓட்டம்
      தான். சனி,ஞாயிறில் வேற விதமாக
      செய்ய வேண்டி இருக்கிறது.

      பெரியவனுக்கு வேலைக்குப் போகும் இடத்தில்
      ஐந்து நாட்களுக்கும் சமைத்து சப்பாத்தி சன்னா
      வித விதமாக ஐஸ் பாக்சில் வைத்துக் கொடுக்கிறாள்
      மகள்.

      வினோத வாழ்க்கை இவர்களுடையது:)

      நீக்கு
    5. "கேஷ்கந்தி வாங்கிட்டு என்னோட தலை மயிரெல்லாம் கொட்டிப் போய் ரொம்ப மோசமாக ஆகிவிட்டது. மீண்டும் நீலிபிருங்காதித் தைலம் தான். ஆனால் முன்னேற்றம் ரொம்பவே குறைவு. என்ன செய்ய முடியும்?"


      அட ராமா, எப்படி எல்லாம் பிரச்சினை வருகிறது
      அம்மா:(

      இந்த மாதிரி கஷ்டங்களுக்கெல்லாம் விடிவு வந்தால்
      தேவலை.
      உதவி செய்பவருக்கு ஒரு நியாயம் வேண்டாமா? மீண்டும் கால் வலி வராமல் பகவான் தான் காப்பாற்றணும்,.

      பத்திரமாக இருங்கள் கீதா.

      நீக்கு
  22. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நற்காலை வணக்கம் அன்பு துரை.

      அந்த வெய்யில் ஊரில் சமைத்துச் சாப்பிட்டு வெளியே வருவதே சிரமம்.

      நல்ல சாப்பாடகச் சாப்பிட்டால்
      உடலுக்கு நல்லது.
      நன்றி மா. வாழ்க வளமுடன்.

      நீக்கு
  23. இது இங்கே அடிக்கடி செய்யப் படுவது.. வசதியான சமையலறை அமையவில்லை ஆயினும் சமையலை விடுவதில்லை.. பொதுவாக பட்டாணி, தக்காளி, கேரட் அதிகமாக சேர்ப்பதில்லை..

    முட்டைக் கோஸுக்குப் பதிலாக காலிஃப்ளவரை சேர்த்துக் கொள்வதும் உண்டு..

    பதிலளிநீக்கு
  24. இங்கே இரவு 9.15 ஆகிறது.
    அனைவருக்கும் நன்றி. மீண்டும் கடவுள் கிருபையில்
    காலை பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  25. செய்முறை குறிப்பும் படமும் அருமைம்மா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @Aargal Unmaigal,அன்பின் தீஜ் துரை,
      படம் ஒன்றுதான் எடுத்தேன். அதுவும் எடிட் செய்ததில் பாதி போனது.
      நீங்கள் இன்னும் நன்றாகச் செய்திருப்பீர்கள்.
      மிக நன்றி மா.

      நீக்கு
  26. பதில்கள்
    1. அன்பின் தேவகோட்டைஜி,
      பொறுமையாகப் படித்ததற்கு மிக நன்றிமா.

      நீக்கு
  27. பதில்கள்
    1. அன்பின் திண்டுக்கல் தனபாலன்.
      நன்றி மா. உண்மையாகவே பிரயோசனப் பட்டால்
      நன்மைதான்.

      நீக்கு
  28. அரிசி கலக்காமல் செய்தாலும் புலாவ் தானே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ துரை.
      ஞே.....ந்னு சொல்ல ஆசைதான். கேள்வியே
      புரியலியே:)
      அரிசி இல்லாமல் புலாவா? புலவா?

      சரியான கேள்விக்குச் சரியான பதில் சொல்வதே
      எனக்குக் கொஞ்சம் சிரமம்:)

      இதில் இப்படிக் கேட்டால் தருமி என்ன செய்வாள்:))))))))
      நன்றி மா.

      நீக்கு
  29. இன்றைக்கு விடியற்காலையிலேயே வெளியே சென்று விட்டேன். அத‌னால் இப்போது தான் [ மாலை 5 மணி] எங்கள் ப்ளாக் வந்தேன். பார்த்தால் திருமதி.வல்லி சிம்ஹனின் குறிப்பு!
    ரொம்பவும் அருமையான, வித்தியாசமான குறிப்பு கொடுத்திருக்கிறீர்கள் வல்லி சிம்ஹன்!
    பாதாம், கசகசா சேர்த்திருப்பது நிச்சயம் தனி ருசியைத்தரும்! அதனால் விரைவில் இதை செய்து பார்க்க வேண்டும் என்ற ஆவல் பிறக்கிறது. இங்கே கசகசாவிற்கு தடை விதித்திருப்பதால் அது மட்டும் இல்லாமல் உங்கள் புலவ் செய்து பார்க்க வேண்டும்!
    அது மட்டுமல்ல‌. தெள்ளத்தெளிவாக எழுதியிருக்கிறீர்கள், சமையல் தெரியாத ஆளும்கூட புரிந்து கொள்ளும் வகையில்!! பூண்டு இதழ்கள் மட்டும் நீங்கள் எத்தனை பற்கள் உபயோகித்தீர்கள் என்று சொல்லுங்கள். ஒரு அருமையான குறிப்பு கொடுத்ததற்காக இனிய பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு மனோ!!!
      நிஜமாவா. உங்களுக்குப் புரிந்ததா!!!

      எனக்கு உலக மஹா சொதப்பல் அம்மான்னு
      ஒரு பெயர் உண்டு. என்னவோ எங்க வீட்டுக்காரரும்
      கச்சேரி போயிருக்கார் என்று சொல்வது போல எபிக்கு அனுப்பி விட்டேன்:)

      நீங்க எல்லாம் ரசிப்பது , எனக்கு எதோ இனிப்பு சாப்பிடுவது போல இருக்கு.

      எல்லாக் காய்கறிகளையும் வதக்கி எடுத்தபிறகு
      அதில் சாதம் பிரட்டிக் கொடுத்தால் கூடக்
      குழந்தைகளுக்குப் பிடிக்கும்.

      " பூண்டு இதழ்கள் மட்டும் நீங்கள் எத்தனை பற்கள் உபயோகித்தீர்கள் என்று சொல்லுங்கள். ஒரு அருமையான குறிப்பு கொடுத்ததற்காக இனிய பாராட்டுக்கள்!"
      😀😀பூண்டு நாலு போட்டு இருப்பேன் மா.

      நிறைய சேர்த்தாலும் வாய்ல வாசனை வருமே மா

      சுவைக்காகச் சேர்ப்பதுதான்.
      I really appreciate your comment. Thank you Mano.




      நீக்கு
  30. வித்தியாசமான புலவு! நாளைக்கே செய்து பார்த்து விடுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு பானுமா,
      நீங்கள் எல்லாம் கச்சிதமா அருமையாகச் செய்வீர்கள். நன்றி மா.

      நீக்கு
  31. மிக அருமையான குறிப்பு மா ..

    இதே போல எல்லா காய்கறியும் வைத்து செய்வேன் ...ஆனால் கோஸ் மட்டும் வைத்து செய்தது இல்லை ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அனு, உங்களைப் பார்த்ததில் மிக சந்தோஷம்.
      காபேஜ்னு சொன்னாலே பசங்க யக் அப்படின்னு சொல்லும்.

      சாப்பிட வைப்பதற்காகவே இதை செய்தேன் அம்மா. நலமுடன் இருங்கள்.
      ரொம்ப நன்றி மா.

      நீக்கு
  32. நல்லதோர் புலாவ்.

    முதலில் பொடிகள் வதக்கி செய்த முட்டைக்கோஸ் பகிர்ந்திருந்தீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் மாதேவி,
      நல்ல வேளை சொன்னீர்கள்.
      நான் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை ஆகிவிட்டேன்.

      நல்ல ஞாபகம் வைத்திருந்து நினைவூட்டி இருக்கிறீர்கள்.
      இனி இதைப் போல செய்யாமல்
      புதிதாக எழுத வேண்டும்.
      உங்களிடம் லிங்க் இருந்தால் பதிவுக்குப் பின்னூட்டம் எழுதும்போது சொல்லுங்கள்.

      இத்தனை நண்பர்களின் நேரம் வீணாகிவிட்டதே.:(
      நன்றி மா. நலமுடன் இருங்கள்.புலாவ் செய்து பார்க்கவும்.

      நீக்கு
  33. அன்பின் நண்பரகளுக்கு மனம் நிறைநன்றி. செய்முறை எல்லோருக்கும் பயன் பட்டால் நன்மை.

    பதிலளிநீக்கு
  34. அன்போடு பதிவிட்ட ஶ்ரீராம்.எங்கள் பிளாகுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  35. கோஸ் புலாவ் - சுவையான குறிப்பாக இருக்கிறது. கலந்த சாதம் செய்து சாப்பிடுவது உண்டு. இந்த முறையிலும் செய்து பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!