KGG எடுத்த படங்கள் இந்த வார(மு)ம் தொடர்கின்றன ..
பார்ப்பதற்கு ஈச்ச மரமும், ஈச்சம் பழங்களும் போல உள்ளன
பரந்து விரிந்த பழுத்த பப்பாளி இலை
வெள்ளை ரோஜா
பல மூங்கில்களுக்கு இடையே ஒன்றே ஒன்று மட்டும் உயரே, உயரே வளர்ந்துகொண்டு போகிறது - - -
அடுக்கு மாடிக் கட்டிடத்தின் உயரத்தைப் பிடிக்கின்றது !
பெ - ரீ --- ய இலைகள் !
= = = = =
அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம் கோமதி அக்கா.. வாங்க...
நீக்குபடங்கள் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குபழுத்த பப்பாளி இலை நன்றாக இருக்கிறது.
நன்றி.. வயசானாலும் பப்பாளி இன்னும் ஸ்டைலாகத்தான் இருக்கிறது என்கிறீர்களா?!!
நீக்கு:)))
நீக்குஹாஹாஹா ஸ்ரீராம் ஆமாம் ஸ்டைலாத்தான் இருக்கு பாருங்க இந்த அழகு செய்துக்கறவங்க ஒரு பேஸ் க்ரீம் போட்டு முகம் செம பள ப்ளன்னு எண்ணை போட்டாப்ல இருக்குமே அது போல இருக்கு பாருங்க! இயற்கையே ப்யூட்டிஷியன் தானே!!!
நீக்குகீதா
அன்பின் வணக்கம் அனைவருக்கும்.
பதிலளிநீக்குஇறையருள் சூழ்க எங்கெங்கும்...
வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்..
வாங்க துரை செல்வராஜூ ஸார்... வணக்கம்.
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஎல்லோரும் என்றும் இனிமையான வாழ்வு பெற இறைவன் அருள வேண்டும்.
வாங்க வல்லிம்மா... வணக்கம்.
நீக்குமலர்களின் அழகும், ரசனையோடு எடுக்கப்
பதிலளிநீக்குபட்ட வண்ணப் படங்களும்
மிக இனிமை. கௌதமன் ஜியின்
காமிராக் கண் இனிய காட்சிகளைப்
படைக்கிறது.
ஆமாம். சாலையைப் பார்த்து நடக்காமல் சாலையின் ஓரத்தைப் பார்த்துக் கொண்டே நடக்கிறார் போல...!!! கடமையுணர்ச்சி!!!
நீக்குஹா ஹா ஹா - இவை அடுக்கு மாடிக் குடியிருப்பின் சுற்றுச் சுவர்களுக்கு உள்ளே எடுக்கப்பட்ட படங்கள்.
நீக்குஹாஹாஹா ஸ்ரீராம்!!! சிரித்துவிட்டேன்!
நீக்குகீதா
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன்,அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்கம்.
நீக்குஅனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள். பிரார்த்தனைகள். தொடரும் நாட்கள் நன்மையே தந்து அனைவருக்கும் மன மகிழ்ச்சியைத் தந்திடப் பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குவாங்க கீதா அக்கா.. வணக்கம்.
நீக்குபாவம் கேஜிஜி சார், போன வாரத்தில் இருந்து நடக்கிறாரே! காலை வலிக்காதோ! :))))))) கொட்டை வாழைப் பூக்கள் அருமை. பப்பாளி இலையும் இயற்கையான ஓவியம். மூங்கில் கும்பகோணம் பக்கமெல்லாம் இன்னமும் உயரமாக வளர்கின்றன. கண்களுக்கும் மனதுக்கும் நிறைவான படங்கள்.
பதிலளிநீக்குஅப்பப்போ ஓரமா பெஞ்சுல உட்கார்ந்துக்கறாராம்... அடுத்த வாரம் அந்த பெஞ்ச்சையும் படம் எடுத்துக் போடுவார்!
நீக்கு:)))
நீக்குஹாஹாஹா ஹையோ! இன்று ஸ்ரீராம் செம ஃபார்ம்ல போல....பாஸ் ரொம்பப் பிடிச்சது செஞ்சு கொடுத்தாரோ!!! சம்திங்க் சம்திங்க்!!!
நீக்குகீதா
ஆமாம் கீதா... மோர்க்களி!
நீக்குஹை, மோர்க்கூழா? நானும் ஒரு வாரமாய்ப் பண்ண நினைச்சுட்டிருக்கேன். நாள் தான் சரியா வாய்க்கலை.
நீக்குஆமாம் கீதா அக்கா.. இப்ப இரண்டு மூன்று வாரமா ஞாயிற்றுக்கிழமைக் காலை மோர்க்கூழ். மோர் மிளகாய் தாளித்து சூப்பரா இருந்தது போங்க...
நீக்குநாளைக்கு யார் சமையல்? மீண்டும் நெல்லை?
பதிலளிநீக்குஹிஹிஹிஹி...
நீக்குகீசா மேடம்... நெல்லை தொல்லை (இப்போதைக்கு) இல்லை. முன்ன மாதிரி ஏதேனும் செய்வது குறைந்துவிட்டது. நேரம் இல்லை.
நீக்குஅதனால, செய்முறையை தூசு தட்டி எபிக்கு அனுப்பலாம்.
தொடர்ந்து பத்து வாரங்களுக்கு ஒருவரின் சமையல் குறிப்புகள் வந்தது, எனக்கு மட்டும்தான் என நினைக்கிறேன்.
நீக்குவருட ஆரம்பத்தில் ஸ்டாடிக்ஸ் போடும் கேஜிஜி அவர்களுக்கு இது நினைவில் இருக்கணும்.
பார்க்கிறேன்.
நீக்குநெல்லை, ஸ்ரீராம் ஹிஹிஹிஹி போட்டதிலிருந்தே தெரியுது நாளைக்கு உங்க ரெசிப்பிதான்னு!!!!!
நீக்குகீதா
நெல்லை சகோதரருக்கு என் வாழ்த்துக்களும்... தொடர்ந்து வாராந்திர திங்களில் வந்து திங்கள் கிழமையை இனிமை நிறைந்த நாட்களாக்கி கலக்கும் அவர் புகழ் வாழ்க..!நெல்லை சகோதரருக்கு பாராட்டுகளும்,என் நன்றிகளும்.🙏.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅழகான மலர் படங்கள். மலர்களும், பசுமை நிறைந்த இலைகளும் கண்களுக்கு நல்ல விருந்தாக உள்ளது. வஞ்சனை இல்லா வளர்ப்பில்,வானுயர்ந்த மூங்கிலும், கள்ளங்கபடமற்ற உள்ளத்தை நினைவுபடுத்தும் வெள்ளை ரோஜாவும் மிக அழகு.
மூப்பின் காரணமாக பழுத்த பப்பாளி மர இலை கீழே விழுந்த நிலையிலும், தான் மரத்தில் பசுமையாக வாழ்ந்த கம்பீரத்தை மறக்காத நினைவுகளினால்தான் இன்றும் அழகாக இருக்கிறேன் என சொல்வது போல் தோன்றுகிறது.
அத்தனையும் அழகான படங்கள். நடைபயிற்சி நேரத்திலும், அருமையாக லாவகத்துடன் படங்களை எடுத்து கண்களுக்கு விருந்தாக இங்கு பகிர்ந்த கெளதமன் சகோதரருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இளமையில் ஒரு அழகு.. முதுமையில் ஒரு அழகு என்று சொல்கிறது போல பப்பாளி இலை...
நீக்குநன்றி கமலா அக்கா...
விளக்கமான கருத்துரைக்கு நன்றி.
நீக்குபூக்களை படம் பிடித்தவர் பூவையரையும் படம் பிடித்து போடுவாரா?
பதிலளிநீக்குJayakumar
நல்ல கேள்வி.. நானும் காத்திருக்கிறேன் பதிலுக்காக...!
நீக்குபடம் பிடித்திருக்கிறேன். ஆனால் .. ..
நீக்குகௌ அண்ணா இவிங்களுக்கு என்னா ஆசை பாருங்க!!!
நீக்குஸ்ரீராம் நைசா தப்பிச்சுட்டார் பாருங்க கௌ அண்ணா "நானும் காத்திருக்கிறேன்...... பதிலுக்காகன்னு சொல்லி...!
நீங்க எடுத்திருக்கிற பூவையர் எல்லாம் அனுஷ் மாதிரி வருவாங்களான்னு!!! நினைப்புல....
ஹாஹாஹா
கீதா
ஆ ! என்னை மாட்டாமல் விடமாட்டார்கள் போலிருக்கே !
நீக்குஅனுஷுக்கு ஈடு இணை உண்டா கீதா?!!
நீக்கு40 வயசு ஆயிடுத்து! :)
நீக்குஅதனால் என்ன?!!!!
நீக்குஅது சரி! :)))))
நீக்குஅனைத்தும் அருமை. பப்பாளி இலை அழகு.
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்குபடங்கள் அருமை...
பதிலளிநீக்குபரந்து விரிந்த பழுத்த பப்பாளி இலையும் அழகு...
நன்றி.
நீக்குபடங்கள் அழகு
பதிலளிநீக்குநன்றி.
நீக்குபச்சைப் பசேல் எனப் படங்கள் அழகான பூக்களுடன்...
பதிலளிநீக்குஇரசிப்புக்கு நன்றி.
நீக்குநடைப் பயிற்சியில் வேறு எதுவும் கண்களில் தென்படாதா!...
பதிலளிநீக்குபடும் -- -- -- -- -- ஆனால் - - - -படாது !
நீக்குவண்ணக் கோலம்போல பப்பாளி இலை. எல்லாம் அருமை.
பதிலளிநீக்குமுதல் படத்திலுள்ள மரம் எங்கள் வீட்டில் உண்டு நிறைய பூக்கும்.
.
தகவல்களுக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி.
நீக்குகௌ அண்ணா, படங்கள் எல்லாமே மிக மிக அழகு!
பதிலளிநீக்குபழுத்த பப்பாளி இலை! பாருங்க பழுத்த முதுமையிலும் அதன் கலர் என்ன அழகு!
வீழ்வேன்/வீழ்ந்தேன் என்று நினைத்தாயோ என்று கேட்பது போல் அதன் பளபளபான நிறம்!!!!
ஓங்கி உயர்ந்த மூங்கில் அதன் கைகள் கோலாட்டம் போடுவது போல இருக்கு பாருங்க!
ரசித்தேன்!
கீதா
வணக்கம் கீதாரெங்கன் சகோதரி
நீக்குநலமா? எப்படியிருக்கிறீர்கள்? பதிவுலகத்தில் உங்கள் தொடர் வருகை மகிழ்ச்சி தருகிறது.நீண்ட நாட்கள் கழித்து வந்த என் வருகைக்கும் எபியில் நீங்கள் மகிழ்ச்சி தெரிவித்திருப்பதற்கு மிக்க நன்றிகள். இப்போதுதான் சகோதரி கோமதி அரசு அவர்களின் அந்திச் சூரியன் பதிவில் நீங்கள் இட்டிருந்த கற்பனை நிரம்பிய, பொருத்தமான பல கருத்துகளை படித்து மிக்க மகிழ்வடைந்தேன். வாழ்த்துகள் சகோதரி. நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பாராட்டுக்கு நன்றி.
நீக்குபொதுவா வயசானா வறண்ட சருமம் வரும்பாங்க...ஆனா இந்தப் பப்பாளி இலை என்ன மினு மினு! அழகி!
பதிலளிநீக்குகீதா
அதானே !
நீக்குபூக்களும், இலைகளும் அழகு. அந்த பப்பாளி இலை கவிதை பாடப் சொல்கிறது.யாராவது பாடுவார்கள். அது அப்படியே கிடந்ததா? இல்லை நீங்கள் அட்ஜெஸ்ட் செய்து படம் எடுத்தீர்களா?
பதிலளிநீக்குமண் தரையில் அப்படிக் கிடந்ததை, அப்படியே எடுத்து டைல்ஸ் மீது வைத்து கிளிக் செய்தேன்.
நீக்குபடங்கள் நன்று. வெள்ளை ரோஜா படமும் கடைசி படமும் கொஞ்சம் Shake ஆகிவிட்டதோ/அல்லது Out of Focus ஆகிவிட்டது போல இருக்கிறது.
பதிலளிநீக்குதொடரட்டும் படங்களும் நடைப்பயிற்சியும்.
நன்றி.
நீக்கு