குல்ஃபி ஐஸ்க்ரீம்!
தேவையான பொருள்கள்:
டபுள் க்ரீம் மில்க் - 500 மி.லி.
பாதம் பருப்பு - 10 பருப்புகள்
பிஸ்தா பருப்பு - 10 பருப்புகள்
ஏலக்காய் - 3
சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
பாலை அடுப்பில் வைத்து, சர்க்கரை சேர்த்து அடிபிடிக்காமல் கிளறி சுண்டக் காய்ச்சவும். ஓரளவு குறுகியதும் பொடி செய்து வைத்திருக்கும் பாதம்,பிஸ்தா, ஏலக்காய் வகையறாக்களை சேர்த்து செமி சாலிட் பதத்திற்கு வந்ததும் இறக்கி ஆற விடவும். ஆறியதும், குல்ஃபி மோல்டில் ஊற்றி, ஐஸ் க்ரீம் குச்சியை சொருகி, ஃபிரிசரில் வைத்து விட்டு, மூன்று மணி நேரம் பொறுத்தால் குல்ஃபி ரெடியாகிவிடும். பிறகு என்ன? எடுத்து சாப்பிட வேண்டியதுதான்.
பால் சீக்கிரம் குறுக வேண்டுமென்றால் அடுப்பில் வைக்கும் முன் கொஞ்சம் சோள மாவை சேர்த்து நன்றாக கலந்து குறுக்கினால் விரைவில் பால் கெட்டியாகி விடும். அளவும் கணிசமாக கிடைக்கும். ஆனால் அடிபிடிக்காமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
குல்ஃபி மோல்ட் இல்லையென்றால் வீட்டில் இருக்கும் சிறிய எவர்சில்வர் டம்பளரை உபயோகப்படுத்தலாம்.
இந்த கொரோனா காலத்தில் குளிர்ச்சியாக சாப்பிடாதீர்கள் என்கிறார்கள். வீட்டிலேயே தயாரிப்பது என்பதால் பாதகமில்லை. குல்ஃபி சாப்பிட்டு விட்டு வெந்நீர் குடித்து விடுங்கள். படுக்க போகும் முன் உப்பு நீரில் வாயை கொப்பளித்து விடுங்கள்.
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குஇன்றைய திங்களில் உங்களின் குல்ஃபி ஐஸ்கிரீம் செய்முறை படங்களுடன் நன்றாக உள்ளது. அந்த குல்ஃபி மோல்ட் இல்லாதவர்கள் எவர்சில்வர் டம்ளர், கிண்ணங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற பயனுள்ள தகவல்கள் சௌகரியமாக இருக்கிறது. (ஏனென்றால் என்னிடமும் அது இல்லை.) ஆனால் எனக்கு குளிர்ச்சி ஒத்துக் கொள்ளாது. வெய்யில் காலத்தில் வீட்டுத் தயாரிப்பாக குழந்தைகளுக்கு செய்து தரலாம். நல்ல பயனுள்ள யோசனை...பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி
நீக்குஎல்லோருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குபானுக்கா உங்கள் குல்ஃபி சூப்பர்ப்! நன்றாக வந்திருக்கு. கூடவே என் பழைய நினைவுகளைக் கிளப்பிவிட்டது. கேஸர் குல்ஃபி, ரோஸ் குல்ஃபி, ஏலக்காய் குல்ஃபி(நீங்கள் செய்திருப்பது போல்) என்று செய்த நினைவுகள்.
ரொம்ப அழகா இருக்கு பானுக்கா..குடோஸ்!
கீதா
நன்றி. நீங்கள் ஒரு யூ ட்யூப் குக்கரி சேனல் தொடங்கலாம்.
நீக்குஅனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் அமைதியும் இனிமையும் நிம்மதியும் மகிழ்ச்சியும் கூடி வரப் பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்கு//http://geetha-sambasivam.blogspot.com/2013/01/blog-post_4555.html// பொருள்விளங்கா உருண்டையின் சமையல் குறிப்பு. முன்னேயே நெல்லைக்காகப் போட நினைச்சுப் போட முடியலை. இன்னிக்குப் போட்டிருக்கேன். ஹிஹிஹி, சம்பந்தா சம்பந்தமில்லாமல் போட்டிருக்கேன்னு நினைச்சுக்காதீங்க.
பதிலளிநீக்குசெவ்வாய் கிழமை ச.கு. போட்டால்தான் சம்பந்தா சம்பந்தம் இல்லை என்று பொருள். இன்று திங்கற கிழமைதானே, accepted.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குஇறையருள் சூழ்க எங்கெங்கும்..
வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்..
http://geetha-sambasivam.blogspot.com/2012 இங்கே ஒரு டெசர்ட் பற்றிய குறிப்பு
பதிலளிநீக்குhttps://geetha-sambasivam.blogspot.com/2012/11 இங்கே குல்ஃபி பற்றிய குறிப்பு! குல்ஃபி முன்னெல்லாம் அடிக்கடி பண்ணுவேன். இப்போல்லாம் பண்ணுவதே இல்லை! :(
பானுமதியின் செய்முறையும் நன்றாக உள்ளது. பானுமதியின் செய்முறையில் இருந்து கொஞ்சம் மாறும் என்னோடது குல்ஃபி செய்முறை. இரண்டுமே நன்றாக இருக்கும். வடக்கே எல்லாம் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதில்லை. மண்சட்டியில் ஊற்றிக் குளிர்ந்த நீர் உள்ள பெரிய பாத்திரத்தில் மண்சட்டியின் வாயை இறுக மூடிப் போட்டுவிடுவார்கள். தேவையான போது எடுத்துச் சாப்பிட வேண்டியது தான்.
பதிலளிநீக்குநன்றி
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஎல்லோரும் எல்லா நாட்களிலும் நல் ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டும்.
அன்பு பானுவின் குல்ஃபி பிரமாதமாக வந்திருக்கிறது.
பதிலளிநீக்குபடங்களும் செய்முறையும் மிக அருமை.
நான் மில்க்மெயிட் உபயோகித்து குழந்தைகளுக்கு செய்து கொடுப்பேன்.
திருச்சியில் தான் முதலில் ஃப்ரிட்ஜ் வந்தது:) 1973யில்.
நன்றி. 1973ல் திருச்சியில் ஃப்ரிட்ஜ் என்றால் கோத்ரெஜ்?
நீக்குசுலபமாக இருக்கிறதே... நன்றி.
பதிலளிநீக்குநன்றி
நீக்குஆம் சுகாதார முறைப்படி தயாரிக்கப்பட்ட குல்ஃபி சாப்பிட ஆசை..பகிர்ந்தமைக்கு வாழ்த்துகள்..
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம். அட! என்னுடைய ரெசிபி! மறந்தே போச்சு, ரொம்ப நாளாச்சு.. நெல்லை இடம் கொடுத்த சைக்கிள் கேப்பில் வந்து விட்டது. நன்றி!
பதிலளிநீக்குஅருமை... எளிய செய்முறை...
பதிலளிநீக்குஆமாம், ரொம்ப சுலபம். நன்றி.
நீக்குகுல்ஃபி செய்முறை மிக அருமை!
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஅனைவருக்கும் முகம் மலர இனிய காலை வணக்கங்கள்! அனைவரும் நலமுடன் வாழ, எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
பதிலளிநீக்குநினைத்தாலே இனிக்கும் குல்ஃபி ரெசிப்பிக்கு நன்றி பானும்மா !
நன்றி.
நீக்குபதிவைப் படிக்கும் போதே ஜில் என்று இருக்கின்றது...
பதிலளிநீக்குவாழ்க நலம்...
நன்றி.
நீக்குகுல்ஃபி என்று சாப்பிட்டதாக நினைவு ஏதும் இல்லை..
பதிலளிநீக்குமற்ற்படிக்கு இங்கு உயர்தரமான ஐஸ் க்ரீம்களுக்குப் பஞ்சம் இல்லை..
ஆனாலும் ஐஸ் க்ரீம்கள்சாப்பிட்டு மூன்று வருடங்கள் ஆகின்றன...
நன்று. இதனை நானும் செய்து சாப்பிட்டிருக்கிறேன். ஆனாலும் கடையில் உள்ள டேஸ்ட் மிஸ்ஸிங் என்று எனக்குத் தோன்றியது.
பதிலளிநீக்குFor me it is the other way round. வீட்டில் செய்த குல்ஃபி நன்றாக இருந்தது. நன்றி.
நீக்குகுல்ஃபி ஐஸ்க்ரீம் செய்முறை அருமை.
பதிலளிநீக்குமிகவும் அருமையான குறிப்பும் கொடுத்து குல்ஃபி ஐஸ்க்ரீம் சாப்பிடலாம் பயமில்லாமல் என்று சொன்னதற்கு நன்றி.
நானும் பேரனுடன் இப்படி இரண்டு மூன்று முறை ஐஸ்க்ரீம் சாப்பிட்டு விட்டேன்.
நன்றி
நீக்குகுல்ஃபி நன்றாக வந்திருக்கிறது.
பதிலளிநீக்குநானும் பேரனுக்கு குல்ஃபி,குச்சி ஐஸ் வகைகள் செய்து கொடுப்பேன்.
நன்றி
நீக்குசுவை
பதிலளிநீக்குநன்றி
நீக்குகுல்ஃபி அருமை,அருமையான குறிப்பு
பதிலளிநீக்குநன்றி.
நீக்குவாவ் ...அருமையான குல்ஃபி
பதிலளிநீக்குஇதே போல நானும் செய்வது உண்டு ...