வியாழன், 30 செப்டம்பர், 2021

ஏழு தலைமுறைகளுக்கொரு முற்றுப்புள்ளி...

 படிச்சவன் பாட்டைக் கெடுத்தான் எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான் .  இந்தப் பழமொழியை நாம் மாற்றிச் சொல்கிறோம் என்பார்கள்.  படிச்சவன் பாட்டைக் கொடுத்தான்; எழுதினவன் ஏட்டைக் கொடுத்தான் என்பதே சரியாம். அது மட்டும் சரியா என்று எப்படிச் சொல்வது?

சரி போகட்டும், அந்த வார்த்தைக்கு  நாம் இப்போது எடுத்துக் கொண்டிருக்கும் அர்த்தத்துக்கே வருவோம்.  பெரிய விஞ்ஞானியாய் இருப்பார்.  ஆனால் வீட்டில் பியூஸ் போனால் போடத்தெரியாது என்றும் சொல்வார்கள்.  

வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் ஒரு காட்சி வரும்.  எந்த வேலையும் சரிவராமல் மெத்தப் படித்த ரங்கன் (கமல்) சலூனில் வேலை செய்வார்.  படத்தில் அதுமாதிரி காட்சி வந்தாலோ, இல்லை யாராவது அப்படி எழுதினாலோ 'அந்த வேலை என்ன மட்டமா" என்று இப்போது கொடி பிடிக்கலாம்.  அந்த காலகட்டத்தில் அந்தப் பார்வை ஏற்றுக்கொள்ளப்பட்டது!  பாவமன்னிப்பு போன்ற படங்கள் இப்போது வந்தால் ஏகப்பட்ட எதிர்ப்பை / விமர்சனங்களைச் சந்திக்கும்!  இப்போது "அர்பன் ஆப்" தளத்தில் பதிவு செய்துகொண்டும், கடைகளிலேயே இருந்தும் (கொரோனா கால லாக் டவுன் நேரங்கள் தவிர) நல்ல காசு பார்க்கும் தொழில்களில் அதுவும் ஒன்று.

ஷேவிங் செய்து கொள்ள தேங்காய் சீனிவாசன் உள்ளே வருவார்.  கடை முதலாளி பெயரைச் சொல்லி 'கிதர்' என்பார்.  கமல் 'பாஹர் கயி 'என்று விட்டு அவரை ஆசனத்தில் அமரச்சொன்னதும், அவர் தமிழில் புலம்ப இவரும் தமிழ் பேச.. (காட்சிகள் டெல்லியில் நடப்பதாய் காட்டுவதால்) தேங்காய் கமலிடம் 'தமிழா நீ?  எந்த ஊர்' என்றெல்லாம் கேட்டு விட்டு, என்ன சாதி என்று கேட்பார் என்று நினைக்கிறேன், உடனே கமல் அவரை ஒரு பார்வை பார்ப்பார்.  சற்று மௌனம் காத்து விட்டு 'வெள்ளை நிறத்தொரு பூனை' என்று தொடங்குவார்.  தேங்காய் "சரி" என்று ஆர்வமாய்க் கேட்பார்.

வெள்ளை நிறத்தொரு பூனை
எங்கள் வீட்டில் வளருது கண்டீர்

பிள்ளைகள் பெற்றதப் பூனை
அவை பேருக்கொரு நிறம் ஆகும்.
சாம்பல் நிறத்தொரு குட்டி,
கரும் சாந்தின் நிறம் ஓரு குட்டி,
பாம்பின் நிறமொரு குட்டி,
வெள்ளை பாலின் நிறம் ஓரு குட்டி
எந்த நிறமிருந்தாலும்
அவை யாவும் ஓரே தரம் அன்றோ
இந்த நிறம் சிறிதென்றும்
இஃது ஏற்றம் என்றும் சொல்லலாமோ

இதுதான் அந்த பாரதியின் பாடல்.  இதை ஏற்ற இறக்கமாய், கத்தியைத் தீட்டிக் கொண்டே சொல்வார் கமல்.

"கவிதை நல்லாயிருக்கே, யார் எழுதினது" என்பார் தேங்காய்.  'பாரதியார்' என்பார் கமல்.  'இதெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கியே நீ என்ன படிச்சிருக்கே?' என்று தேங்காய் கேட்பார்.  இவர் 'எம் ஏ' என்றதும் 'அய்யய்யோ...   ஆளை விடப்பா' எழுந்து ஓட முயற்சிப்பார்!

படித்தவர்கள் சில வேலைகளை சரியாய்ச் செய்ய மாட்டார்கள் என்பது பொருள் போலும்.  இவர்க்கு இதுதான் பணி என்று வைத்திருப்பார்கள் போல..

முன்னர் எங்கள் வீட்டுக்கு ஒரு பிளம்பர் வந்தார்.  எலெக்ட்ரிஷியன் வேலையும் கொஞ்சம் செய்வேன் என்றார்.  கொஞ்சம் செய்வேன் என்றது அவர் தொழில் கற்றுக்கொள்கிறார் என்று தெரியாமல் அவரிடம் சில எலெக்ட்ரிக் வேலைகள் கொடுத்து அவதிப்பட்டது ஒரு கதை!  அதை இன்னொருநாள் கதைப்போம்!

நான் பள்ளியில் படிக்கும்போது சில 'நல்லாப் படிக்கும் பசங்க' பரீட்சை எழுதும் பேப்பரைப் பார்த்தால் ஒரு பேப்பரை வாங்கி அதில் இரண்டு பக்கமும் சிவப்பு நிறத்தில் மார்ஜின் போட்டு நடுவில் விடைகளை எழுதுவார்கள்.  'லெஜிபிளா, அழகா' எழுதுகிறார்களாம்!   எனக்கென்னவோ அப்படி எழுதி இருந்தால் பார்க்க பிடிக்காது.  அப்படி எழுதுபவர்கள் ஐந்து நிமிடத்துக்கொருமுறை எழுந்து எழுந்து, சுற்றி வரும் சூப்பர்வைசரிடம் பேப்பர் வாங்குவார்கள்.  சூப்பர்வைசர் வகுப்பாசிரியராய் இருந்துவிட்டால் தன் நன்றாய்ப் படிக்கும்  மாணவனைப் பார்த்து பூரித்துப் போவார்.  அந்த மாணவன் / மாணவி தமிழ்ப் பரீட்சைக்குக் கூட டெஸ்க்கில் ஜாமெட்ரி பாக்ஸ், கலர் பென்சில் எல்லாம் வைத்துக் கொண்டு பந்தா காட்டுவர்! பின்னால் உட்கார்ந்திருக்கும் என் போன்றோருக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும்.  மூன்று பேப்பர்களை ஃபில்லப் செய்யவே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் கோஷ்டி நான்.

நான் பதினைந்து மார்க் கேள்விக்கு ஐந்து மார்க் பதிலளவும், ஐந்து மார்க் கேள்விக்கு இரண்டு மார்க் பதிலளவும் எழுதுவேன்.  அவ்வளவுதான் புத்தகத்திலேயே இருக்கும்.  அவர்கள் ஒரு மார்க் கேள்விக்கு ஐந்து மார்க் பதிலளவும், பதினைந்து மார்க் கேள்விகளுக்கு இரண்டு பக்கமும் பதில் எழுதுவார்கள்!

நல்லவேளையாய் அலுவலக டிபார்ட்மென்ட் தேர்வில் இதே மாதிரி பேப்பர் பேப்பராய் வாங்கி எழுதியவர் சாதாரணமாய்த் தேர்ச்சி பெற, அவர்கள் கொடுத்த பேப்பர்கள் தவிர எக்ஸ்டரா ஷீட் வாங்காமல் எழுதிய நான் முதல் வகுப்பிலும் தேர்வானேன்.  இதில் எனக்கு ஒரு அல்ப சந்தோஷம்.  எப்போதோ பள்ளிக்காலத்தில் பரீட்சைகளில் அப்படி பேப்பர் வாங்கிய பிரகாஷ் பாபுவையும், பிரான்சிஸ்காவையும் தோற்கடித்து விட்ட சந்தோஷம்!!!

அந்த மாணவர்கள் பேப்பரில் மார்ஜின் போட்டது போலதான் இப்போதெல்லாம் நிறைய இடங்களில் சாலை போடுகிறார்கள்.  இரண்டு பக்கமும் பெரிய இடைவெளி.  நடுவில் கொஞ்சம் மெலிசாய், நீளமாய் தார் ரோடு!  எப்படி காசை மிச்சப்படுத்துகிறார்கள் பாருங்கள்.  ஒரு பக்கம் யோசித்தால் இந்த கான்டராக்ட்டை வாங்க அவர்கள் எத்தனை பேருக்கு எத்தனைமுறை கமிஷன் கொடுத்தார்களோ...  மிஞ்சிய காசில் அவ்வளவு தரமாகத்தான் ரோடு போடமுடியும்!  இன்னொரு விஷயம், எடிசனோ யாரோ சொன்னதுபோல (நூறு ஆண்டுகள் எரியும் பல்ப் தயாரிக்க முடியும்..  அப்புறம் சம்பந்தப்பட்ட வியாபாரம் படுத்துவிடுமே!) ரொம்ப நல்ல சாலையாய்ப் போட்டு விட்டால் அடுத்த வருஷ கான்ட்ராக்ட் எடுக்க முடியாதே...  வேலை இல்லாமல் - சம்பாத்தியம் இல்லாமல் - போகுமே...

கொஞ்ச நாட்களில் பார்த்தால் புதிதாகப் போடப்பட்ட அந்த சாலை ரவா தோசை போல ஆங்காங்கே பொத்தல்களாக இருக்கும்.  அப்புறம் சில பொத்தல்கள் பெரிதாகி பள்ளங்களாக மாறிவிடும்.  அவற்றை லேசில் சரி செய்ய மாட்டார்கள்.


ஆனால் அப்புறமா ஒருநாள் அவற்றை சரிசெய்கிறேன் என்று செய்வார்கள் பாருங்கள்..  அதற்கு தனி காண்ட்ராக்ட் போலும்!  அது என்ன திறமையோ, அது என்ன லாஜிக்கோ...  மற்ற இடங்களிலிருந்து பள்ளமாய் இருந்த இடம் இப்போது சற்றே மேடாய் காட்சி அளிக்கும்.  அதுவும் கொரகொரவென்று பார்த்தாலே தனியாய், அசிங்கமாய்த் தெரியும் அளவு.  ஒருவகையில் அதுவும் நல்லதுதான்.  முன்பு பள்ளத்தைத் தவிர்த்து ஓட்டிச் செல்வது போல இப்போது அந்தத் மேட்டைத் தவிர்த்து ஓட்டிச் செல்வது எளிது.  அதைத் தாண்டும்போது ஆட்டோ ஏறி குதிக்கும் பாருங்கள்...  அம்மாடி!


கொஞ்ச நாளானால் அந்த இடம் அமுங்கிவிடும் என்று மேடாய் அமைக்கிறார்களாம்....   ஒருமுறை அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்களிடம் விசாரித்தபோது வந்த பதில்.  ஆக, நம்மூர்ச் சாலைகள் எப்போதும் மேடும் பள்ளமுமாய்தான் இருக்கும்!


அப்போதுதான் இதுமாதிரி சந்தேகங்கள் வந்ததது...  வேலை தெரிந்தவர்கள்தான் இதுமாதிரி வேலைகளையும் செய்கிறார்களா?  இல்லை, கான்ட்ராக்ட் கிடைத்ததும்  ஏனோதானோ என்று யாரிடமாவது பொறுப்பை ஒப்படைத்து செய்யச் சொல்லி விடுகிறார்களா என்று!  அவர்கள் அவர்கள் லாஜிக்கின்படி ஏதோ செய்து வைக்கிறார்கள்.  யாரும் கேட்பதும் இல்லை.  படித்தவன் பாட்டை...

நான் புது வீட்டுக்கு வந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகப்போகின்றன.  எங்கள் நகரில் எல்லா தெருக்களிலும் தார் ரோட் போட்டிருக்க, எங்கள் தெரு மட்டும் மண்ரோடாய் இருந்தது.  சொல்லிச் சொல்லி இப்போதுதான் இரண்டு நாட்களுக்கு முன் தார்ரோடு போட ஆரம்பித்தார்கள்.  உடனேயே எதிர் வீட்டு கரண்ட் கேபிளை ஜேஸிபி அறுத்துத் தள்ளிவிட, அவர்களுக்கும் (நகராட்சிக்காரர்களுக்கும்), அந்த பில்டிங் காரர்களுக்கும் குடுமிபிடி சண்டை நடந்து வருகிறது.  இது முடிந்துதான் தார்ரோடு!.

==============================================================================================================



"ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனின்னா அது ஜெகந்நாதய்யர் கம்பெனிதான்.  காலையில் எழுந்ததும் குளிக்கறது, தோத்திரப்பாடல் பாடறது, வேளா வேளைக்கு சாப்பிடறது எல்லாமே அங்கே ஒழுங்காய் நடந்து வந்தது.அது மட்டும் இல்லெ, சமபந்தி போஜனம்னா அந்தக் காலத்திலே பெரிய விஷயம்.  அது ஜெகந்நாதய்யர் கம்பெனியிலே சர்வ சாதாரணம்.  எந்த விதமான பேதமும் இல்லாம அவர் எங்களோடு உட்கார்ந்து சாப்பிடுவார்.  சில பிராமனாப் பிள்ளைக அப்படி சாப்பிட மாட்டேன்னு சொல்லும்.  அதுகளை மட்டும் தனியா உட்கார்ந்த்து சாப்பிடச் சொல்லி விடுவார்.  எதையும் வற்புறுத்தித் திணிக்க அவர் விரும்ப மாட்டார்.  நான் சந்தித்த முதல் சீர்திருத்தவாதி அவர்தான். அவருடைய கம்பெனியிலேதான் எஸ் இ வெங்கடராமன், பி டி சம்பந்தம், கே சாரங்கபாணி, சி எஸ் ஜெயராமன், யதார்த்தம் பொன்னுசாமிப்பிள்ளை, நவாப் ராஜமாணிக்கம்பிள்ளை 
எல்லோரும் இருந்தாங்க..." 

"கிட்டப்பா இல்லையா?"

"அவரும் ஒருசமயம் ஜெகந்நாதன் கம்பெனியில் சேர வந்தார்.  ஆனா அவர் மட்டும் வரல்லே..  அஞ்சு அண்ணன் தம்பிகளை கூட அழைச்சுக்கிட்டு வந்தார்.  "ஒருத்தனுக்காக இத்தனை பேரை வச்சு என்னாலே சமாளிக்க முடியாது"ன்னு சொல்லி, அய்யர் அவரை அனுப்பிட்டார்."

"சங்கரதாஸ் ஸ்வாமிகள்...?"

"வருவார்.  இருப்பார்.  குடித்துவிட்டு ஆடினால் "இது நமக்குத் பிடிக்காது.  நீ போயிட்டு வா" என்று அய்யர் அவரை வெளியே அனுப்பி விடுவார்..."

"அவரை சிலர் நாடக உலகின் தந்தை என்கிறார்களே.."

"அதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்.  அவர் நல்ல நாடகாசிரியர்.  பாடலாசிரியர்.  எழுத ஆரம்பித்தால் தங்கு தடையில்லாமல் எழுதுவார்.  அதெல்லாம் சரி..  ஆனால் இப்போதே இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்ட  புராண இதிகாச கதைகளுக்கு வேண்டுமானால் அவர் தந்தையாயிருக்கலாமே தவிர நாடக உலகத்துக்கு ஒருநாளும் தந்தையாயிருக்க முடியாது.  அப்படி யாராவது இருந்தால் அது ஜெகந்நாதய்யராகத்தான் இருக்க முடியும்.  என்ன இன்னிக்கி இருக்கற அத்தனை கலைஞர்களும் அவருடைய வழி வந்த கலைஞர்களே.  இதை யாராலும் மறுக்க முடியாது..."

"ஜெகந்நாதய்யர் கம்பெனிக்கு ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி என்கிற பெயர் உண்டா?"

"கிடையாது.  அது வேற.  அதிலேதான் எம் ஜி ராமச்சந்திரன், பி யு சின்னப்பா எல்லாம் இருந்தாங்க..  ஏன், நான் கூட சிலகாலம் இருந்தேன்..  ஜெகந்நாதய்யர் கம்பெனி பேர் "மதுரை ஸ்ரீ பால மீன ரஞ்சனி சங்கீத  சபா"




- விந்தனுக்கு எம் ஆர் ராதா கொடுத்த பேட்டி... -

====================================================================================================================

கேள்விக்கவிதை!




எங்கள் குடும்பத்தின்
எத்தனாவது 
தலைமுறை நான்?
எங்கு, என்று
தொடங்கியது என்
மூத்தோரின் 
முதல் பயணம்?
எந்த ஊரில் இருந்திருப்பார்கள்?
இப்போதென்னை
அறிவார்களா அவர்கள்?
நானே
மீண்டும் வந்த 
அவர்களில் ஒருவன்தானோ?
வாரிசற்றுப் போன 
வரிசை 
இருந்திருக்குமா?
ஆயின்,
துணைக் கிளைகளிலிருந்து
உறவுப்பூ மலர்ந்திருக்குமா?
ஏழு தலைமுறைகளுக்கொரு
முற்றுப்புள்ளி உண்டாமே
எப்படித் 
தெரிந்து கொள்வது
அறுந்த கண்ணியின்
அன்றைய தொடர்ச்சியை?
வியர்த்தமாகின்றன
விடைகளற்ற வினாக்கள்

=========================================================================================================

மின்வாரியக்காரர்களுக்கு சுண்டைக்காய் பிடிக்காது...  எப்படி சொல்கிறேன் என்கிறீர்களா?  எங்கள் தெருமுனையில் தானாய் வளர்ந்து வந்து காய்களை கொத்துக்கொத்தாய் கொடுத்துக் கொண்டிருந்தது இந்த சுண்டைச்செடி.  சில நாட்களுக்குப் பிறகு...


இதுதான் அந்த தானாய் தோன்றி வாரி வழங்கிய சுண்டைச்செடி!


சில நாட்களுக்குப் பின் அந்த இடம் இப்படி வெறுமையாய் இருந்தது...  செடி எங்கே காணோம் ன்று தேடினால்....


வெட்டி வீசப்பட்டு கொஞ்ச தூரத்தில்  காய்ந்து கிடந்தது...


=====================================================================================================================================

மதன்...   மதன்....  மு ஜா மு...

ஹிஹிஹி...   எங்கள் ஆபீஸும் இப்படிதான்!  தேடுவது தேடும்போது கிடைக்காது!


அதுதானே...  அதுலயும் நகசுத்தி வந்த விரலனா இன்னும் விசேஷம்!


ஒரு பூகம்பம் வெடிக்கக் காத்திருக்கிறது!


நல்லவேளை..  நாலோட நிறுத்திகிட்டாரே....!

124 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. இனிய காலை வணக்கம் அன்பின் கமலாமா, அன்பு ஸ்ரீராம்.
    குருவாரம் அனைவருக்கும் நன்மை அளிக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  3. முதலில் முன் ஜாக்கிரதை முத்தண்ணாவுக்கு ஹை
    சொல்லிக்கலாம். காஃபி ஜோக், தராசு இரண்டுமே

    தூள்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா...  பின்னால் தராசை மறைத்து வித்துக் கொண்டு நின்றிருப்பது டாப்.

      நீக்கு
    2. //மறைத்து வித்துக்//

      * மறைத்து "வைத்து"க்கொண்டு!

      நீக்கு
  4. ராமச்சந்த்ரா:(
    சுண்டைக்காய்ச் செடியை வீச வேண்டிய அவசியம் என்ன. அது மின் கடத்தலுக்குத் தடை செய்யும் என்று நினைத்தார்களோ:(
    அனியாயம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதைப் பறிக்க வருபவர்கள் மின்தாக்குதலுக்கு ஆளாவார்களோ எகிற முன்ஜாக்கிரதை(முத்தண்ணாவாக)யாக இருக்கலாம்!!

      நீக்கு
  5. மொத்தம் 7 தடவை ஏழு.. 49 பிறவிகள். 21 தலை முறைகள்.

    நமக்குத் தெரிந்தது என்னவோ மூன்று தலைமுறைகள்தான்.

    அறுந்த சங்கிலிகள் மோக்ஷம் அடைந்திருக்கும்.
    நாம் எல்லாம் மீண்டும் மீண்டும் பிறக்கிறோம்.

    கவிதைக் கேள்விகள் யோசிக்க வைக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏழேழு பிறவிகள் என்று சொல்வார்கள் இல்லையா?  ஆம், மூன்று தலைமுறைகள்தான் நமக்குத் தெரியும்.

      எங்கள் வீட்டில் கேஜிஜி இந்த Family Tree   ஒன்று அரும்பாடுபட்டு பலவருடங்களாக சேர்த்து வருகிறார்.  குடும்பத்தில் எல்லோருக்கும் கொடுத்திருக்கிறார்.

      நீக்கு
    2. என் கணவரும் Family Tree தயார் செய்து என் மாமனார் அவர்களின் 100 வது பிறந்த நாள் அன்று வெளியிட்டார்கள்.

      நீக்கு
    3. ஓ...    எந்த அளவு முந்தைய தலைமுறைகள் பற்றிய விவரங்கள் கிடைத்தது என்பதுதான் சுவாரஸ்யம்.  வீட்டிலிருக்கும் வயதில் மூத்தவர்களிடம் விடாமல் பேட்டி எடுக்கவேண்டும்.

      நீக்கு
  6. அருமையான கவிதைச் சிந்தனைக்கு வாழ்த்துகள் ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  7. கொஞ்ச நாட்களில் பார்த்தால் புதிதாகப் போடப்பட்ட அந்த சாலை ரவா தோசை போல ஆங்காங்கே பொத்தல்களாக இருக்கும். அப்புறம் சில பொத்தல்கள் பெரிதாகி பள்ளங்களாக மாறிவிடும். அவற்றை லேசில் சரி செய்ய மாட்டார்கள்."
    இதுதான் தருமமிகு சென்னை.:(
    மேலே மேலே சாலை போட்டு, நன்றக இருந்த ரோடும் கிராமத்து வண்டிப் பாதை
    கூட நன்றாக இருக்கும். எங்கள் ரோட்டில்

    பஸ் போகும் அது கூடப் பழகிவிட்டது.
    பஸ் இந்த மேட்டிம் மேல் குதித்து ஏறும்.
    அப்போது கட்டிலே ஆடும்.
    ரவாதோசை அருமையான சுவையான உதாரணம்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா...   நிறைய இடங்களில் சாலைக்கு அரிப்பு, சொறி வந்தது போல இருக்கிறது.  வண்டி தாண்டிச் செல்லும்போது கடகடகடகடவென்று ஓடும்!

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    வழக்கம் போல் வியாழன் கதம்ப பதிவு அருமை. "படித்தவன் பாட்டை கொடுத்தான்." (ஒரு துணை எழுத்துதான் எத்தனை அர்த்தத்தை மாற்றித் தருகிறது.) என்பதிலிருந்து கோடு போட்டு ரோடு போடும் கதை வரை ஸ்வாரஸ்யமாக எழுதியிருக்கிறீர்கள்.உண்மைதான்.. இப்போதுள்ள காலகட்டத்தில் எந்த வேலையும் துச்சமில்லை. அந்த காலத்தில் அவரவர் வேலைகளை அவரவர் செய்தால் திறம்பட இருக்குமென ஒரு கணிப்பு. இதிலிருந்துதான் குலத்தொழில் கல்லாமலே வரும் என்ற நம்பிக்கை இருந்தது போலும். இப்போது எதற்கும் ஒரு படிப்பு, சான்றிதழ் என வந்து விட்டது.

    ஏழுதலைமுறைகள் கவிதை அருமை. நாம் எத்தனையென ஆராய்ந்து எப்படி கண்டு கொள்வது? நன்றாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    சுண்டைக்காய் செடி பாவம்.. அவர்கள் நினைத்தால் எல்லா செடிகளுககுமே எளிதில் மோட்சம் கிடைத்து விடும் என்பது தெரியாமல்தான் அவைகளும் அங்குமிங்கும் வளர்ந்து பயன்களை தந்து வருகின்றன. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா..   அவரவர் வேலையை அவரவர் பார்ப்பது என்பது நிம்மதியான வாழ்வைத் தரும்.  மனிதன் இப்போது பணத்தின் பின்னால் அலைகிறான்!  அகவிதையைப் பாராட்டி இருப்பதற்கு நன்றி.  சுண்டைச்செடி..  நானாய் வளர்ந்தேன்..  நானாய்க் காய்த்தேன்..  நானே கொடுத்தேன்.  நானா கெடுத்தேன்?  என்ன பாவம் செய்தேன்?  என்னை ஏன் யாரும் பாதுகாக்கவில்லை? என்று கர்ணன் போல கேட்கிறது!  வளர்ந்த இடம் தப்பல்லவா!

      நீக்கு
  9. பிளம்பர் கம் எலெக்ட்ரீஷியன்.....
    நாங்களும் அவஸ்தைப் பட்டிருக்கிறோம்.
    எர்த் இல்லாத கனெஷன் கொடுத்து என்னை ஷாக் வாங்க வைத்த புண்ணியாவன் எங்கள்
    ஊர்ப்பக்கமே வரவில்லை அப்புறம்.:(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா..  இதில் கற்றுக்கொண்ட தவறை அடுத்த வீட்டில் சரிசெய்வார்!

      நீக்கு
  10. "கவிதை நல்லாயிருக்கே, யார் எழுதினது" என்பார் தேங்காய். 'பாரதியார்' என்பார் கமல். 'இதெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கியே நீ என்ன படிச்சிருக்கே?' என்று தேங்காய் கேட்பார். இவர் 'எம் ஏ' என்றதும் 'அய்யய்யோ... ஆளை விடப்பா' எழுந்து ஓட முயற்சிப்பார்!""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""வ நி ச கடைசி ஸீன்!!!

    ஸிங்கத்தின் தோழர், ஏம் ஏ படித்த தன் மகனை,
    மெக்கானிக் தொலில் (!) கற்றுக் கொள்ள
    இவரிடம் அனுப்பினார். அந்தப் பையன்
    தன் காரில் வந்து இறங்கும்.
    அழுக்கையும்,க்ரீசையும் பார்த்துப் பழகிய நாங்கள் ,,

    கொஞ்சம் அவரைப் பார்த்து நகர்ந்து விடுவோம்:))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா...  ஹா...  ஹா...  

      //தொலில் (!) //

      //அழுக்கையும்,க்ரீசையும் பார்த்துப் பழகிய நாங்கள் ,,//

      ஹா..  ஹா..  ஹா...   பையனை எப்படியாவது 'தேற்றி'விட வேண்டும் என்ற தந்தையின் தவிப்பு!

      நீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    பாய்ஸ் சினிமா கம்பெனி பற்றி எம் ஆர் ராதா தந்த பேட்டி சுவாரஸ்யமாக இருந்தது. மதன் ஜோக்கான மு.ஜா.மு எல்லாம் நல்ல நகைச்சுவை.
    அந்த ஃபைலை எப்போதுதான் தேடி கண்டு பிடிப்பது:)
    தராசு பின்பக்கம் மறைத்து வைத்துக் கொண்டிருப்பவர் வரும் ஜோக்கிற்கு நீங்கள் தந்த விமர்சனம் அருமை. மற்ற எல்லாவற்றிக்குந்தான். ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  12. மீன ரஞ்சனி சபா. அழகாக இருக்கிறதே பெயர்.
    எம் ஆர் ராதா கொடுத்திருக்கும் விவரங்கள்
    சிறப்பு.
    ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி பற்றித்தான் நிறையக் கேள்விப் பட்டிருக்கிறோம்.
    ஜெகன்னாதையர் பற்றித் தெரியாது.

    எங்கிருந்துதான் எடுக்கிறீர்களோ இவ்வளவு விவரங்கள்.!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எம் ஆர் ராதாவின் சுவாரஸ்யமான சில கருத்துகளை, அவர் சிறையிலிருந்து மீண்டதும் தந்த பேட்டியிலிருந்து எடுத்தேன்மா.

      நீக்கு
  13. இந்த வார வியாழன் முழுவதுமே வெகு சுவாரஸ்யம்.

    பாட்டைக் கொடுத்தவனும் ஏட்டைக் கொடுத்தவனும்
    நன்றாக வாழ வேண்டும்.
    நல்ல பதிவுக்கு வாழ்த்துகள் ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  14. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  15. மஹாளயபட்ச காலத்தில் மலைக்கவைக்கிறது முன்னோரின் முதற்புள்ளியை ஆராய முயற்சிக்கும் கவிதை !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. மாளயபட்சம் என்று எண்ணிப் பகிரவில்லை. யதேச்சையாகத்தான்...

      நீக்கு
  16. பெரிய விஞ்ஞானியாய் இருப்பார். ஆனால் வீட்டில் பியூஸ் போனால் போடத்தெரியாது என்றும் சொல்வார்கள்.//

    இது பெரும்பாலும் சரிதான் என்றாலும் விஞ்ஞானி பிசியாய் பல சிந்தனைகளில் இருப்பாரே..அதனால் அதற்கு என்று இருப்பவர்கள் அவரவர் வேலையை ஒழுங்கா செய்தாலே போதுமில்லையோ...நுனிப்புல் மேய்வது இல்லாமல் இருக்கும்தானே

    கீதா

    பதிலளிநீக்கு
  17. அறியாத பல செய்திகள் அறிந்தேன்
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  18. இப்போது "அர்பன் ஆப்" தளத்தில் பதிவு செய்துகொண்டும், //

    ஆமாம் இப்ப இது ரொம்ப பிராபல்யமாகியிருக்கிறது. சமையல் கற்றுக் கொள்ளக் கூட ஆள் தேவை என்று போடுகிறார்கள்!!!!

    இதை ஏற்ற இறக்கமாய், கத்தியைத் தீட்டிக் கொண்டே சொல்வார் கமல்.//

    ஆமாம்...அதெல்லாம் நல்லாத்தான் செய்வார்!!!!!!!!!!!!!!!!!!!

    "கவிதை நல்லாயிருக்கே, யார் எழுதினது" //

    பாலச்சந்தரின் டச்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாலச்சந்தர் பள்ளியில் பயின்ற அத்தனை நடிகர்களும் நடிக்கும்போது பார்த்தீர்கள் என்றால் சில பொது மேனரிஸங்களைப் பார்க்கலாம்!

      நீக்கு
  19. நம் நண்பரின் வலைப்பூவிலும் படித்த ஞாபகம் :-

    சமணர்கள் காலம் :

    அன்றைக்கு படியெடுத்தல் (வித்யாதானம்) என்பது : ஏட்டை (ஓலைச்சுவடி) ஒருவர் படிக்க, மற்றவர்கள் அதை அவரவர் ஏட்டில் எழுதிக் கொள்வார்கள்...

    படிப்பவர் தவறாகப் படித்தார் என்றால், (பாட்டைக் கெடுத்தால்) அதை படியெடுப்பவர்கள் (எழுதுபவர்கள்) தவறாகப் பதிந்துவிடுவார்கள் (ஏட்டைக் கெடுப்பார்)

    படிச்சவன் பாட்டைக் கெடுத்தான் (ல்,) எழுதியவன் ஏட்டைக் கெடுப்பான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ...   அப்படி தொடர் வாக்கியமாகப் பார்த்தால் இப்படி அர்த்தம் வருமோ...   நன்றி DD.

      நீக்கு
  20. நான் பள்ளியில் படிக்கும்போது .........மூன்று பேப்பர்களை ஃபில்லப் செய்யவே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் கோஷ்டி நான்.//

    இந்த பாரா முழுசும்!! ஹையோஹையோ....என்ன சொல்ல நானும் மகனும் இந்த லிஸ்டில்!!! எங்களையும் சேர்த்துக்குங்க...ஹாஹாஹாஹா

    ஆனா இப்படிப்பட்ட எனக்கு கல்லூரியில் எக்கனாமிக்ஸ் ஹையோ கதை கதையா எழுதணும் பக்கம் பக்கமா எழுதணும்...ஆனா முடிக்க முடியாது...கஷ்டப்படுவேன்...அதனால் மதிப்பெண் குறைந்தது!! பி ஏ படித்த போது பெரில் மிஸ், எம் ஏ படிச்சப்ப எஸ் எஸ் பி சார், சிஎஸ்பி சார், நாகம்மாள் மிஸ் நினைவுக்கு வராங்க.!!!! அவர்கள் சொன்ன அதே கமென்ட் என் மகனுக்கும் அப்படியே அவன் கல்லூரி ஆசிரியர்கள் சொன்னது எனக்கு ஆச்சரியம்.

    அது என்ன என்பது பற்றி நான் கல்வி பற்றி பதிவிட்ட பகுதியின் அடுத்த பகுதியில் சொல்ல எழுதி வைத்திருக்கிறேன் ஆனால் வழக்கம் போல முடிக்காமல்..ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தஞ்சையில் எனக்கு செபஸ்தியான் என்று ஒரு தமிழாசிரியர் இருந்தார்.  செவுத்தியான் என்று அழைக்கப்படுவார்!  அவர் பதில்களை ஸ்கேல் வைத்து அளந்து மதிப்பெண் போடுவார்!  மாணவர்கள் அவர் திருத்தும் பேப்பர்களில் இல்லாத கூத்தும் அடிப்பார்கள்.

      நீக்கு
  21. நான் பதினைந்து மார்க் கேள்விக்கு ஐந்து மார்க் பதிலளவும், ஐந்து மார்க் கேள்விக்கு இரண்டு மார்க் பதிலளவும் எழுதுவேன். அவ்வளவுதான் புத்தகத்திலேயே இருக்கும். அவர்கள் ஒரு மார்க் கேள்விக்கு ஐந்து மார்க் பதிலளவும், பதினைந்து மார்க் கேள்விகளுக்கு இரண்டு பக்கமும் பதில் எழுதுவார்கள்!//

    மீண்டும் முதல் பாராக்கு சொன்ன அதே அதே பதில்..அந்த லிஸ்ட்!!!.ஹைஃபைவ்!!! கூட..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனா பாருங்க அப்ப பக்கம் பக்கமா எழுதக் கஷ்டபட்ட நான் இப்ப கதை மட்டும் பக்கம் பக்கமாக எழுதறேனே !!!!!!!!!! சுருக்க எழுதத் தெரியாமல் ஹாஹாஹாஹா

      கீதா

      நீக்கு
    2. ஹா... ஹா.. ஹா... வயதாக ஆக எல்லாம் மாறுகிறது கீதா!

      நீக்கு
  22. நல்லவேளையாய் அலுவலக டிபார்ட்மென்ட் தேர்வில் இதே மாதிரி பேபாப்ர் பேப்பராய் வாங்கி எழுதியவர் சாதாரணமாய்த் தேர்ச்சி பெற, அவர்கள் கொடுத்த பேப்பர்கள் தவிர எக்ஸ்டரா ஷீட் வாங்காமல் எழுதிய நான் முதல் வகுப்பிலும் தேர்வானேன். //

    சூப்பர் ஸ்ரீராம்.

    ஏட்டுக் கல்வி என்பது வேறு யதார்த்தம் என்பது வேறு. ஏட்டுக் கல்வியில் வருவது எல்லாவற்றையும் யதார்த்தத்தில் அப்படியே அப்ளை செய்யமுடியாது அதற்குக் கொஞ்சம் காமன்சென்சும் வேண்டுமே...வித்தியாசமான சிந்தனைகளும் அவசியம்..

    கோட் பண்ணியிருப்பது மகனுக்கு ரொம்பப் பொருத்தம்...எழுத கஷ்டப்பட்டதனோடு கூடவே வேறு சில பிரச்சனைகளும் இருந்ததே..
    இது பற்றியும் என் பதிவில் சொல்லியிருப்பதால் இங்கு சொல்லாமல் போகிறேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். உங்கள் பதிவில் படித்த நினைவு இருக்கிறது கீதா.

      நீக்கு
  23. அப்புறம் சம்பந்தப்பட்ட வியாபாரம் படுத்துவிடுமே!) ரொம்ப நல்ல சாலையாய்ப் போட்டு விட்டால் அடுத்த வருஷ கான்ட்ராக்ட் எடுக்க முடியாதே... வேலை இல்லாமல் - சம்பாத்தியம் இல்லாமல் - போகுமே...//

    அதே அதே சபாபதே! கமிஷன் என்பது உள்ளே புகுவதால்தான் எல்லா ஊழல்களும். கணக்கு காட்டிரலாம்ல!!

    கொஞ்ச நாட்களில் பார்த்தால் புதிதாகப் போடப்பட்ட அந்த சாலை ரவா தோசை போல ஆங்காங்கே பொத்தல்களாக இருக்கும். //

    ஹாஹாஹாஹா நல்ல ஒப்பீடு!!! கணக்கு காட்டிருவாங்க ஆனா இப்படிப் பொத்தலாகும் போது கேள்விகள் எழாதோ? எழலியே கவர்ன்மென்ட்ல. என்னய்யா ரோடு போட்டீங்கன்னு சம்பந்தப்பட்ட மந்திரி கேட்கணும் இல்லையோ?!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //என்னய்யா ரோடு போட்டீங்கன்னு சம்பந்தப்பட்ட மந்திரி கேட்கணும் இல்லையோ?!!//

      என்னது...  மந்திரி கேட்கணுமா?  கேட்பாரா என்ன!  எந்த உலகத்தில் இருக்கீங்க...?  இவங்க பதிலுக்கு கேட்க மாட்டாங்களா, நீ வாங்கிகிட்ட காசுக்கு மிச்சம் இவ்வளவுதான் முடியும்னு!

      நீக்கு
    2. தெரிய்மெ ஸ்ரீராம் சும்மா கற்பனைதான்...அட்லீஸ்ட் கற்பனையிலாவது இப்படி..

      மலையாளத்தில் ஒரு படம் வந்தது மம்மூட்டியின் படம் ...நல்ல முதன்மந்திரியாக.right to recall ந்ற பாலிஸி கொண்டு வந்து ஐடியாலஜியோடு ஆள்வார்..அதுவும் ஒரு கற்பனையில் இப்படி இருந்தா எவ்வளவு நலலருக்கும்னு எடுக்கப்பட்ட படம்... வைச்சுக்கோங்க ஆனால் அவருக்கும் வரும் ஆப்பு உள்ளேயே அவர் கட்சியிலேயே..அவரை முன்னிருத்திப் பேசிய கட்சித் தலைமையே...படம் பெயர் 'ஒன்'

      கீதா

      நீக்கு
    3. ஆமாம்.  ஹிந்தியில் இன்குலாப்.  தமிழில் மக்களாட்சி...  சினிமாக்களில்தான் இதெல்லாம் சாத்தியம்..  அதாவது கற்பனையில்!  நல்ல மந்திரி என்னும் வார்த்தை ஆக்சிமோரான்!

      நீக்கு
  24. இரண்டு படங்களுக்கும் நடுவில் சொன்ன பாரா அதேதான் ஸ்ரீராம் ஒட்டு போட்ட துணி மாதிரி அசிங்கமா இருக்கும். அந்த ஒட்டை கொஞ்சம் அழகா டார்னிங்க் செய்வது போல் போட்டாக் கூடப் பரவாயில்லை. கடனே என்று போட்டுவிட்டு...என்ன சொல்ல? இதுவும் சிலநாட்களி அரித்துவிடும். பிளந்து நிற்கும்.

    பல பள்ளங்கள் இரவு நேரங்களில் தெரு விளக்கு இல்லாமல், மழைக்காலத்தில், அபாயகரமாக இருப்பதோடு பல விபத்துகளையும் ஏற்படுத்துவதுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், உண்மைதான்.  அந்த இரண்டாவது படத்தைப் பாருங்களேன்..   சாலையில் மெகா சைஸ் அடை வார்த்தது போல..!

      நீக்கு
    2. ஹாஹாஹா....ஹையோ ஸ்ரீராம் இன்னிக்கு என்ன எல்லாமே ஒரே திங்க ஒப்பீடாவே இருக்கே!!!!!!!

      கீதா

      நீக்கு
    3. நிலவையே இட்லியாய் பார்ப்பவர்கள் நாம்!

      நீக்கு
  25. விரிசல் சாலையை ரவா தோசைக்கு ஒப்பிட்டிருக்கிறீர்களே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா அப்பாதுரை ஜி அப்ப இனி ரவா தோசை சாப்பிடறப்ப எல்லாம் இது நினைவுக்கு வந்து வாயில மண்ணு/கல்லு அகப்படறா மாதிரி தோணுமோ!!!!!!

      கீதா

      நீக்கு
    2. ஆமாம்!  மேலும், இப்படிக் கூட சொல்லலாம்...   அரிப்பு வந்து சொறிந்தால் உடம்பெங்கும் தடிப்பு தடிப்பாய்  வருமே..  அப்படிக் கூட ஒப்பிடலாம்!

      நீக்கு
  26. வேலை தெரிந்தவர்கள்தான் இதுமாதிரி வேலைகளையும் செய்கிறார்களா? இல்லை, கான்ட்ராக்ட் கிடைத்ததும் ஏனோதானோ என்று யாரிடமாவது பொறுப்பை ஒப்படைத்து செய்யச் சொல்லி விடுகிறார்களா என்று! //

    இது நானும் யோசித்ததுண்டு. இதோ இப்போது இங்கும்.

    எனக்குத் தெரிந்தவரையில் இவர்கள் யாரும் பயிற்சி பெற்றவர்கள் கிடையாது. சர்டிஃபிக்கெட் அனுபவம் பார்த்தா எடுக்கறாங்க? கிடையாது. ஓரிருவர் இருக்கலாம் அப்படிப்பட்டவர்கள் கூட ஏனோ தான, என்று அலட்சியமாகத்தான் செய்கிறார்கள் யாருக்கென்ன? எப்படிப் போட்டா என்ன? ஏனோதானொ...செய்தாச்சு என்று சொன்னால் கூலி கிடைக்கும். அதைச் செக் செய்பவர் செய்யமாட்டார்...

    வேலையில் நேர்த்தி, ஈடுபாடு, நேர்மை, உழைப்பு எதுவும் கிடையாது பெரும்பான்மையோருக்கு...நான் பார்த்த வரையில். சிமென்ட் பூசுவது கூட நேர்த்தியாகச் செய்யமாட்டார்கள். ஸ்லாபை ஒழுங்காக மூட மாட்டார்கள். பணியில் இருக்கும் போதே குடித்துவிட்டுச் செய்வார்கள். மதிய நேர சாப்பாடு நேரத்தில் குடித்துவிட்டுப் படுத்துத் தூங்குவார்கள் அதன் பின் எழுந்து மூளை எப்படி வேலை செய்யும்? நேரில் கண்டு வருகிறேன்.

    வேலையைப் பாதியில் செய்துவிட்டுக் காணாமல் போய்விடுவார்கள். மறுநாள் யாரேனும் வேறு ஒரு கூலியாள் புலம்பிக் கொண்டே வருவார்...

    பொதுவாகவே இந்தக் கான்ட்ராட்டுகளில் மாமன், மச்சான் தெரிந்தவர் நட்பு என்று தான் சேர்க்கப்படுகிறார்கள். இந்தக் கூட்டத்துக்குத் தலைமை இருப்பாரே அவர் மட்டும் தான் பயிற்சி பெற்றவராக இருப்பார் ஆனால் அவர் வேலை செய்யமாட்டார் மேற்பார்வையும் இடமாட்டார். சும்மா கத்திவிட்டுச் செல்வார்!!!!!

    கீதா



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  கான்டராக்டர்கள் கதை அப்படிதான் இருக்கும்.  சாலை போடுதல் என்று இல்லை.  எல்லா வேலைகளிலும்.
        
      சமீபத்தில் புளியந்தோப்பில் கட்டியிருந்த வீட்டு வசதிக் குடியிருப்பு பற்றி செய்தி வநததே...  கவனித்திருப்பீர்கள்..

      நீக்கு
    2. ஓ புளியந்தோப்பு வீடு செய்தி புதியது ஸ்ரீராம் ரொம்பச் செய்திகளே பார்க்கறதில்லை...சமீபகாலமாய்

      கீதா

      நீக்கு
  27. உடனேயே எதிர் வீட்டு கரண்ட் கேபிளை ஜேஸிபி அறுத்துத் தள்ளிவிட, அவர்களுக்கும் (நகராட்சிக்காரர்களுக்கும்), அந்த பில்டிங் காரர்களுக்கும் குடுமிபிடி சண்டை நடந்து வருகிறது. இது முடிந்துதான் தார்ரோடு!.//

    அட இந்தக் குடுமிபிடி சண்டை ரொம்பவே உண்டு போல எல்லா இடங்களிலும்!!!

    இதிலிருந்தே தெரியவில்லையா வேலை செய்பவர்களுக்கு என்ன தெரிகிறது என்று?!!
    உதாசீனம், அலட்சியம்..நகராட்சி வழி நடத்திச் செய்ய வேண்டிய வேலை...வழிநடத்தல் கிடையாது ரூல்ஸ் ஒழுங்காகப் பின்பற்றப்படமாட்டாது...இதுதான் அலங்கோலம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்கள் அலட்சியம் என்றால் இவர்கள் அராஜகம்.  தட்டிக்கொடுத்து வேலை வாங்கத் தெரியாதவர்கள்.

      நீக்கு
  28. "ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனின்னா அது ஜெகந்நாதய்யர் கம்பெனிதான். //

    //"ஜெகந்நாதய்யர் கம்பெனிக்கு ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி என்கிற பெயர் உண்டா?"

    "கிடையாது. அது வேற. //

    முதல் வரிக்கும் இதுக்கும் முரணாக இருக்கிறதே...புரியவில்லை.

    சுவாரசியமான தகவல்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிம்பிள் கீதா...   உண்மையில் ஜெகந்நாதய்யர் கம்பெனியைகாண் ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி என்று சொல்லவேண்டும் என்று உயர்வு நவிற்சி அணியில் சொல்கிறார்.

      நீக்கு
    2. ஓ புரிந்தது...ஹூம் பாருங்க என் மூளை ஏற்கனவே ட்யூப் லைட் அதுல இப்ப ரொம்ப மங்கிப் போச்சு!!!!!!!

      கீதா

      நீக்கு
    3. அதெல்லாம் இல்லை.. மொத்தக் கட்டுரையில் கொஞ்சத்தை மட்டும் எடுத்துக் போட்டால் எல்லோருக்கும் அப்படிதான் தோன்றும்!

      நீக்கு
  29. நானே
    மீண்டும் வந்த
    அவர்களில் ஒருவன்தானோ?
    வாரிசற்றுப் போன
    வரிசை
    இருந்திருக்குமா?
    ஆயின்,
    துணைக் கிளைகளிலிருந்து
    உறவுப்பூ மலர்ந்திருக்குமா?//

    ஸ்ரீராம் கவிதை மிக மிக ரசித்தேன். கடைசி வரிகளும்..அதானே புரியாத விடைகள். இந்தத் தலைமுறை பற்றி நானும் பலமுறை யோசித்திருக்கிறேன். எங்கே தொடங்கியிருக்கும்..எக்காலகட்டத்தில் என்றெல்லாம்.நம் பாட்டியின் பாட்டி, தாத்தாவின் தாத்தா எப்படி இருந்திருப்பார்கள்? இதே கலாச்சாரம் இருந்திருக்குமா? இப்படிப் பலவகையில்!!!

    புகுந்த வீட்டில் யாரோ ஒருவர் இந்தக் குடும்ப மரம்?!! கிளைகள் எல்லாம் ஆராய்ந்துக் கண்டுபிடித்து 5 தலைமுறை வரை எடுத்திருக்கிறார். எல்லோருக்கும் அனுப்பவும் செய்தார்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா.  ஓ..   உங்கள் வீட்டிலும் ஒரு கேஜிஜி இருக்கிறாரா?!

      நீக்கு
    2. எங்கள் சின்ன தாத்தா, இப்படி ஒரு பேமிலி ட்ரீ(Pedigree chart) தயாரித்து வைத்திருந்தார்.

      நீக்கு
    3. ஓ..   அப்புறம் யாரும் தொடரவில்லையா?  அப்டேட் செய்யவில்லையா?

      நீக்கு
    4. திருச்சி வை.கோபாலகிருஷ்ணன் சார், 12 தலைமுறைக்கு மேல் முழு விவரங்களும் வைத்திருப்பதாகச் சொன்ன நினைவு.

      அப்படி இருந்தாலும், முழு குடும்பப் பிரிவுகள், அவர்கள் வாரிசுகள் என்றெல்லாம் எழுதி வைத்திருப்பாரா என்று தெரியவில்லை

      நீக்கு
  30. ஆஹா சுண்டைக்காய்...இதோ எங்கள் வீட்டில் சுண்டைக்காய் காய்த்து காய்த்து (படம் எல்லாம் எடுத்து வைத்திருக்கிறேன் பதிவிற்கு!!) இப்போது 5 வது அறுவடை. பக்கத்தில் விநியோகம் செய்தோம். அடுத்த அறுவடைக்குக் காய்கள் தயாராகிவருகின்றன.

    இடையில் பச்சைச் சுண்டைக்காய்க் குழம்பு, கிரேவி, உசிலி, கறி என்று சாப்பிட்டுக் காயவும் வைத்து எடுத்து வைத்தாயிற்று.

    முதல் அறுவடை உறவினர் பையன் படிக்க வெளிநாடு சென்றதால் அவனுக்கு, இரண்டாவது விநியோகம், மூன்றாவது மகனுக்கு வற்றலாக, நான்காவது வீட்டுப் பயன்பாட்டிற்குகாய வைத்து...இப்போது ஐந்தாவது விநியோகம். மழை என்பதால் காய வைக்க முடியவில்லை. 6 வது வற்றல் போடமுடியுமா என்று பார்க்க வேண்டும்.

    அடப் பாவிங்களா இதைப் போய் வெட்டிப் போட்டு,,,கஷ்டமாக இருக்கிறது ஸ்ரீராம்.
    அதன் மதிப்பே தெரியாத... என்ன சொல்ல...ஸ்ரீராம் நீங்களாவது காய்களை எடுக்க முடியலையோ?!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் ஊபருக்காக காத்திருக்கும் இடம்! நான் அங்கு காய்கள் கொஞ்சம் பெரிதாகட்டும் என்று விட்டால், அருகாமை வீட்டுக்காரர்கள் எனக்கு முன்பே பறித்து எடுத்துக் கொண்டிருந்தார்கள் போல..  

      நீக்கு
    2. ஆ!! பாருங்க நீங்க கணக்குப் போட்டதை அருகாமை கவனிச்சிருக்காங்க!!!

      கீதா

      நீக்கு
  31. தராசு மறைத்து வைத்திருப்பது....தெர்மோமீட்டர்...அலுவலக டாக்குமென்ட்ஸ்...ஹாஹாஹா மதன் ஜோக்ஸ்!! செம ரசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  32. பாட்டில் ஆரம்பித்து ஷேவிங்கிற்கு கொண்டு போய் பாரதியையும் துணைக்கு அழைத்,து, நடுவில் பரீட்சை எழுதியதைக் கதைத்து, கடைசியில் ரோடு போடுவதில் முடித்திருக்கிறீர்கள். சம்பந்தம் இல்லாதவையை கோர்த்து அன்று பக்கம் பக்கமாக மற்றவர்கள் எழுதியது போல் உள்ளது இந்த கதம்பம். இதைத்தான் நான் கோடு போடுகிறேன் நீ ரோடு போடு என்பதோ? வேடிக்கை தான். 

    காலையில் எழுந்து குளித்து தோத்திரப்பாடல் பாடி ஜகந்நாத ஐயர் என்ற பிராமணர் கவனிப்பில் வளர்ந்த M R ராதா பிற்காலத்தில் பிராமண வெறுப்பு, கடவுள் மறுப்பு இயக்கத்தில் இணைந்தது வினோதம் தான். 

    விடைகளற்ற வினாக்கள் பலவும் உண்டு. விடை கிடைத்தால் வினா இல்லை. குழந்தையின் "நட்சத்திரங்கள்  ஏன் கீழே விழுவதில்லை?" முதல் முதுமையில் "நான் யார்" என்ற ஆத்ம விசாரம் வரை வினாக்கள் தான். ஏன் ஏழு தலைமுறை என்று வைத்தனர் என்பதுவும் விடையற்ற வினாதான். 

    மதன் ஜோக்குகளை தனியாக பைண்ட் செய்து வைத்திருக்கிறீர்களா? ஒவ்வொரு வாரமும் எளிதில் எடுத்து விட? 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா...  ஹா..  ஹா...  ஜெயக்குமார் சந்திரசேகர் ஸார்...  "ரோடு சரியாகவே போடவில்லை..  பள்ளமாயிருந்த இடத்தை குன்று மாதிரி மேடாக்கி வித்திருக்காங்க...  என்ன ரோடு போடுகிறார்கள்?  வேலை தெரிந்த யாருமே அங்கில்லையா?" என்கிற ஒரு வரிப் பேச்சை வைத்து உருவானது இந்த வாரக் கட்டுரை!  

      எம் ஆர் ராதா...   வளர்ந்த கலை மறந்து விட்டார் கேளுங்க ஸார்...!
      விடை கிடைத்து விட்டால் வினா இல்லை?  உண்மைதான்.  உண்மைதானா?

      ஆம்.  மதன் ஜோக்ஸ் கலெக்ஷன் இருக்கிறது!

      நன்றி JC ஸார்.

      நீக்கு
    2. //குன்று மாதிரி மேடாக்கி வித்திருக்காங்க..//

      * வைத்திருக்காங்க...

      நீக்கு
  33. விட்டுப்போன விமரிசனம். 

    After all இது ஒரு சுண்டக்காய் மேட்டர் இதுக்கு போய் வருந்தலாமோ? 

    Jayakumar

    பதிலளிநீக்கு
  34. இன்னிக்கு மஹாலயம் தர்ப்பணம் செய்ததால் புரோகிதர்கள் வந்துவிட்டுப் போகப் பத்தரை மணி ஆனது. எப்போவும் ஐந்து பேர்களாவது சாப்பிடுவாங்க. இந்த வருஷம் முடியலை. சமையல் மாமி வந்தாலும் நாமும் கூட நிற்க வேண்டி இருக்கு. ஆகவே அதிகம் சிரமப்படுத்திக்க முடியலை என்பதால் அரிசி+பருப்பு+வாழைக்காய்+வெல்லம், வெற்றிலை, பாக்கு, பழத்துடன் தக்ஷிணையும் வைத்துக் கொடுத்தோம். அதன் பின்னர் சாப்பிட்டுவிட்டு மற்ற வேலைகளையும் முடித்துக்கொண்டு இப்போத் தான் உட்கார்ந்தேன். பதிவு சுவாரசியம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா...  இதையே நாங்கள் வரும் செவ்வாய் செய்யப்போகிறோம்!

      நீக்கு
  35. தலைமுறைக் கணக்கெல்லாம் எங்க வீட்டிலும்/குடும்பத்திலும் எடுத்திருக்காங்க. எங்க மாமனாரின் முன்னோர்கள் பரம்பரையை எங்க பெண் குடும்ப மரமாக்கி வைத்திருக்கிறாள். எங்க (சாமவேத) ஶ்ரீவத்ஸ கோத்ரப் பரம்பரையின் வரலாற்றை தாயாதி ஒருத்தர் எழுதி வைச்சிருக்கார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே... நான் யஜுர் ஸ்ரீவத்ஸம்!

      நீக்கு
    2. நாங்களும் ஸ்ரீவத்சம் தான் .யஜுர்:) லோகத்தில பாதி வாதூல கோத்ரம்.மீதி ஸ்ரீவத்சம்:)

      நீக்கு
  36. ஶ்ரீராமின் கவிதை நன்று. அநாயாசமாக வார்த்தைகள் வந்து விழுகின்றன. மு.ஜா. மு.அண்ணாவை நேற்றுக் கூட நினைத்துக் கொண்டேன். இன்னிக்கு வந்து நிற்கிறார். காஃபி ஜோக் என் கண்களில் படவே இல்லை. தெர்மாமீட்டர், ஃபைல், தராசு, தண்ணீர் தம்பளர் ஆகியவை ஏற்கெனவே ரசித்த நினைவும் இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா அக்கா... தண்ணீர் டம்ளர் எடுத்து வருவதைத்தான் காஃபி ஜோக் என்று சொல்லி இருக்கிறார் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  37. இது என்ன சுண்டைக்காய் விஷயம்னு அலட்சியமா இருந்துட்டாங்க போல. முன்னாடியே பறிச்சு வைச்சிருக்கக் கூடாதோ! மாவடு ஜலம் இருந்தால் அதில் போட்டு ஊற வைத்து வற்றலாகக் காய வைத்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். நல்லெண்ணெயில் நன்கு வறுத்து மோர் சாதம், குழம்பு சாதம் ஆகியவற்றுக்குத் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். அப்படியே வேப்பம்பூவுடன் சேர்த்து நொறுக்கிச் சூடான சாதத்தில் போட்டுக்கொண்டும் சாப்பிடலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது பலமுறை மற்றவர்களால் பறிக்கப்பட்டு விட்டது. என்னதான் பொது இடமாக இருந்தாலும் நான்தான் பறிக்கவில்லை. நமக்கு சொந்தமில்லாத இடத்தில் எப்படி எடுப்பது என்று தயக்கம்.

      நீக்கு
  38. ஜெகந்நாதையர் நாடகக் கம்பெனி பற்றித் தெரியாது. புதிய விஷயம். ஆனால் ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி பற்றி நிறையப் படிச்சிருக்கேன். எம்.ஆர்.ராதா இத்தனை கட்டுப்பாட்டுடன் இருந்துட்டுப் பின்னாட்களில் மாறினது ஆச்சரியமான ஒன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோருமே ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி பற்றிய பிரஸ்தாபத்தைதான் படித்திருப்பார்கள்!

      நீக்கு
  39. மதன் ஜோக்குகள் மட்டும் தனியான பைன்டிங்கில் இருக்கோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அக்கா..   ரொம்ப இல்லை.  சின்ன சைஸ்!  அப்போ நான்தான் கிடைத்தவரை எடுத்துத் தொகுத்தேன்.

      நீக்கு
  40. வறுமையின் நிறம் சிவப்பில் ஆரம்பித்துப் பள்ளிநாட்களுக்குப் போய்ப் பின்னர் அலுவலகத்தையும் நினைவு கூர்ந்துக் கடைசியில் சாலைகளில் முடித்த விதம் கோர்வையாய் வந்துள்ளது. சென்னை சாலைகள் பற்றிக் கேட்கவே வேண்டாம்! இங்கே கொஞ்சம் பரவாயில்லை ரகம். அடிக்கடி சாலைகளில் வேலைகள் செய்து பார்க்கவில்லை. ஆனால் ஶ்ரீரங்கம்/திருச்சி காவிரிப்பாலம் அடிக்கடி பழுதாகிவிடும். அதை அடிக்கடிச் சரி பண்ணுவார்கள். ஒன்றும் பலன் இல்லை. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடிக்கடி பழுது பார்த்தால்தான் காசு!  பழுது பாக்கும்படி செய்தால்தான் கான்ராக்ட்!

      நீக்கு
  41. ஸ்ரீராம்ஜி உங்கள் கவிதையைப் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை. அருமையாக இருக்கிறது. அறுந்த கண்ணியை என்ற வரி பலதையும் யோசிக்க வைக்கிறது. மிகவும் ரசித்தேன்.

    மதன் ஜோக்ஸ் எல்லாமே ரசனையாக இருக்கின்றன. நகைச்சுவை கார்ட்டூன் தனிக் கலை திறமை.

    எம் ஆர் ராதாவின் பேட்டி சுவாரசியத்தோடு அவரது பேச்சு இப்படித்தான் இருக்கும் என்பதும் தெரிகிறது.

    பக்கம் பக்கமாக எழுதுவதில் எந்தத் தயக்கமும் இருந்ததில்லை. ஆனால் நான் சுமாரான மாணவன்தான். ஆனால் கல்லூரியில் கொஞ்சம் பரவாயில்லை அவ்வளவே. கொஞ்சம் கற்பனை உலகில் மிதப்பவன். கொஞ்சம் நாடகம், மோனோ ஆக்டிங்க் கட்டுரைகள், பேச்சு என்று காலம் ஓட்டியதுண்டு.

    ரோடுகள் போடுவதில் பல ஊழல்கள் என்பதால், மழை பெய்யும் போது அரித்துப் பள்ளங்கள் என்றாகிவிடும். குழியும் தோண்டுவார்கள். கேரளத்தில் கொஞ்சம் பரவாயில்லையோ என்றும் தோன்றுகிறது.

    வறுமையின் நிறம் சிகப்பு பிடித்திருந்தது. பல வசனங்கள் நறுக்குத் தெரித்தாற்போல இருக்கும். நானும் சரியான வேலை கிடைக்காமல் சில வருடங்கள் கஷ்டப்பட்டதுண்டு என்பதால் இருக்கலாம்.

    வியாழன் வழக்கம் போல் சுவாரசியம் ஸ்ரீராம்ஜி.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவ்வையார் போல ஒன்று இரண்டு என வரிசைப்படுத்தி எல்லாவற்றையும் ரசித்திருப்பதற்கு நன்றி துளஸிஜி!

      :)))

      நீக்கு
  42. தராசு நகைச்சுவை சூப்பர் ஜி.

    வருமையின் நிறம் சிவப்பு படம் அன்று புரட்சிகரமான திரைப்படம்தான் ஜி

    பதிலளிநீக்கு
  43. கவிதை அருமை! நம்ம ஊர் சாலைகளை என்ன சொல்ல? இங்கு எலக்ட்ரானிக் சிடியில் எல்சிடாவால் பராமரிக்கப்படும் சாலைகள் ஓஹோ! அந்த எல்லை தாண்டினால் குண்டும்,குழியும்தான். நாங்கள் முன்பு வசித்த இடத்தில் ஓலா புக் பண்ணி விட்டு காத்திருப்போம், கேன்சல் செய்து விடுவார்கள்,காரணம் சாலையின் நிலை. முன்ஜாக்கிரதை முத்தண்ணா..ஹாஹாஹா! 

    பதிலளிநீக்கு
  44. இடையில் அறுந்திருந்தால் எப்படித் தொடர்ந்திருக்கும் வம்சாவளி//

    மனதில் பல தோன்றியது உண்டு. ஸ்ரீராம் காலையில் சொல்ல விட்டுப் போனது..இதற்குத்தான் நதிமூலம் ரிஷி மூலம் ஆராயக் கூடாது என்று சொல்கிறார்களோ

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணன் தம்பி முறையிலிருந்து, அல்லது உறவிலிருந்தோ, வெளியிலிருந்தோ  தத்தெடுத்திருப்பார்கள் கீதா...

      நீக்கு
  45. கதம்ப பதிவு அருமை.
    வறுமையின் நிறம் சிவப்பு படத்தின் காட்சிகள் , பாரதியார் கவிதை, தார் ரோடு ரோடு போடுவதில் உள்ள தொழில் நுட்பங்கள், மற்றும் உங்கள் எடுத்துக்காட்டு படங்கள் எல்லாம் அருமை.

    ஜெகந்நாதய்யர் கம்பெனி பேர் இப்போதுதான் அறிகிறேன். எம்.ஆர் ராதா அவர்கள் விந்தனுக்கு அளித்த பேட்டி நன்றாக இருக்கிறது.

    உங்கள் கவிதை அருமை.

    மதன் ஜோக்ஸ் (மதன்... மதன்.... மு ஜா மு..)

    ரசித்தேன், சிரித்தேன்.

    சுண்டைக்காய் இருந்த இடம் வெறுமையாக இருப்பது பார்க்க கஷ்டமாக இருக்கிறது. என்ன செய்வது! மின்வாரியக்காரர்களுக்கு புதருக்குள் போய் வேலை செய்ய பயமாக இருக்கும் அதனால் வெட்டி இருப்பார்கள். எங்கள் வீட்டில்(கோவையில்) பவளமல்லியை அடிக்கடி வெட்டிவிடுவார்கள் மின் வாரியத்திலிருந்து வந்து . அவர்களுக்கு வேலை செய்ய இடையூரு தரும் மரம், செடி, கொடிகள் வெட்டபடும்தான்.

    ரோடு போடும் வேலை தடை படும் காரணம் படித்த போது இதற்கு எப்போது விடிவு காலம் என்று நினைக்க வைக்கிறது.


    பதிலளிநீக்கு
  46. //அவருடைய கம்பெனியிலேதான் எஸ் இ வெங்கடராமன், // எஸ். இ. வெங்கடராமன்..? எஸ்.வி. சேகரின் அப்பாவா?

    பதிலளிநீக்கு
  47. இப்பதான் ஞாபகம் வருது. பாக்கியராஜ் மு ஜா மு பார்த்துதான் மு மு எடுத்தாரோ?

    Jayakumar

    பதிலளிநீக்கு
  48. சாலைகளுக்கும் காண்ட்ராக்டர்களுக்கும் நல்ல புரிதல் உண்டு.திடீரென்று ஒரு சாலையின் நடுவே 'டிவைடர் வால்' முளைக்கும்.சமயங்களில் அதில் செடிகளும் (பெரும்பாலும் செவ்வரளி) நடுவார்கள். திடீரென்று ஒருநாள் அவற்றை இடித்து விட்டு தற்காலிகத் தடுப்பு அமைப்பார்கள். மீண்டும்.. ஒருநாள் பழையபடி டிவைடர் வால் கட்ட ஆரம்பிப்பார்கள். பாவம்.. காண்டிராக்டர்களுக்கும் பிழைப்பு நடக்க வேண்டுமே...??
    சாம்பார் சுண்டையையும் வற்றல் போடுவார்களா, என்ன...?? மலைச் சுண்டைதானே வற்றலுக்கு...??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  மதுரை சுண்டைக்காய்தான் வற்றல் போடமுடியும்.  அல்லது அதுதான் வற்றலுக்கு ஸ்பெஷல்.  ஆனால் இதிலும் போடலாம்.  நன்றி பாரதி.

      நீக்கு
  49. விடைகள் இருப்பதாலேயே அவை
    வினாக்கள் என்று பெயர் பெறுகிறதோ
    விடைகளுக்காக வினாக்களா அன்றி
    வினாக்களுக்காக விடையா என்பது
    புரியாத புதிர்
    முல்லை மலருக்காக மயக்கும் மணமா?
    இல்லை மயக்கும் மணத்துக்காக முல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கா கா என்று கத்துவதால் காக்கையா காக்கா என்பதால் கா கா என்று கத்துகிறதா?!!!!

      ஹா..  ஹா..  ஹா...   நன்றி ஜீவி ஸார்...

      நீக்கு
  50. இன்றைய கதம்பத்தை ரசித்தேன்.

    தலைமுறை கவிதை மிகவும் கவர்ந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கே காணோமே என்று பார்த்தேன்.  சுருக்கமாக முடித்து விட்டீர்கள்!  நன்றி நெல்லை.

      நீக்கு
  51. இன்றைய பகிர்வுகள் சிரிக்க...சிரிக்க.... ரசனை.

    பதிலளிநீக்கு
  52. வேலை புதிதாக தெரிந்து கொள்பவர்கள், கற்றுக் கொள்பவர்கள் என நிறைய பார்த்தாகிவிட்டது. அதுவும் தில்லியில்! கையில் தராசுடன் நிற்கும் அந்த மனிதர் கலக்கல். பதிவின் மற்ற பகுதிகளும் நன்று. மிகவும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!