இன்றைய மூன்று பாடல்களில் விழி பிரதானம்!
விழியை வைத்து பல பாடல்கள் வந்திருந்த போதும் இன்று, இங்கு மூன்று பாடல்களை பகிர்கிறேன். மூன்று வெவ்வேறு ஆண் குரல்கள். ஆனால் சுசீலாம்மாவுடன் ஜோடி சேர்ந்து! டி எம் எஸ் சுசீலா, கே ஜே யேசுதாஸ் சுசீலா, எஸ் பி பாலசுப்ரமணியம் சுசீலா குரல்களில் பாடல்கள்.
1965 ஆம் வருடம். பல விருதைகளைப் பெற்று சூப்பர்ஹிட் ஆன 'ஹிமாலய் கி கோத் மெயின்' (இமயத்தின் மடியில் என்று அர்த்தம்!) என்கிற படம் வெளிவந்த ஆண்டு. கதாநாயகனாக மனோஜ்குமார் ஹிந்தியில் செய்த பாத்திரத்தை தமிழில் எம் ஜி ஆர் செய்ய, புதிய பூமி என்று 1968 ல் எடுத்தார்கள். ஹிந்தியில் மாலா சின்ஹா செய்த பாத்திரத்தை தமிழில் ஜெயலலிதா செய்தார். எம் ஜி ஆருக்கு நிச்சயம் செய்யப்பட பெண்ணாக ஷீலா.
ஹிந்தியில் வில்லன் ரோலில் நடித்தவர் ஜெயந்த். அவரது இயற்பெயர் ஜக்கரியா கான். இவரை ஏன் விசேஷமாகக் குறிப்பிடுகிறேன் என்றால் இவர்தான் புகழ்பெற்ற ஷோலே புகழ் அம்ஜத்கானின் அப்பா!
சரி.. தமிழ் புதிய பூமியில் எம் ஜி ஆரும் ஜெயலலிதாவும் தோன்றும் பாடலைப் பார்ப்போம். பாடலில் பின்னணி இசையும், ஜெயலலிதாவின் சுறுசுறு நடனமும் ஸ்பெஷல். இளமையான டி எம் எஸ் குரல்.
கண்ணதாசன் பாடலுக்கு எம் எஸ் விஸ்வநாதன் இசை. இந்தப் படத்துக்கு வசனம் எழுதி இருப்பவர் எஸ் எஸ் தென்னரசு. இயக்கம் சாணக்யா. 1973 ல் மறைந்த சாணக்யா இந்திய ராணுவத்தில் ரேடியோ டெலிகிராபிஸ்ட்டாக பணிபுரிந்தவராம். ஒரு ஜெமினி கணேசன் படம்(புதிய பாதை) , ஒரு எம் ஆர் ராதா, ஏ வி எம் ராஜன் (எங்க வீட்டுப் பெண்) படம் தவிர அவர் தமிழியில் இயக்கி இருக்கும் மூன்று நான்கு படங்கள் ஒளிவிளக்கு, எங்க வீட்டுப் பிள்ளை உட்பட எம் ஜி ஆர் நடித்தவை.
'எங்க வீட்டுப்பெண்' படம் பற்றி ஒரு சுவையான தகவல். தெலுங்கிலிருந்து தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் நடிக்க வந்த எஸ் வி ரெங்காராவ் படத்தில் நடிக்கும் விஜயநிர்மலா, அவர் ஏற்று நடிக்கும் பாத்திரத்துக்கு பொருத்தமில்லை என்று சொல்லி அவரைத் தூக்கச் சொன்னாராம். மறுநாள் விஜயநிர்மலா படப்பிடிப்புக்கு வந்தபோது ரெங்காராவுக்கு பதிலாக எஸ் வி சுப்பையா நடித்துக் கொண்டிருந்தாராம்!!! இந்தப் படத்தில் ஒரு மிக இனிமையான பாடல் உண்டு. "கால்களே நில்லுங்கள்..." (க்ளிக் செய்தால் அங்கு சென்று பாடலைக் கேட்கலாம்!) இதே டியூனில் ஒரு எம் ஜி ஆர் பாடலும் உண்டு!
விழியே விழியே உனக்கென்ன வேலை
விழியே விழியே உனக்கென்ன வேலை
விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை
தூது சொல்லடி மெதுவாக நீ
தூது சொல்லடி மெதுவாக
இளம் தோள்களிலே அசைந்தாடட்டுமா
நெஞ்சை கேட்டுச் சொல்லடி சுவையாக
நெஞ்சை கேட்டுச் சொல்லடி சுவையாக
விருந்து என்றாலும் வரலாம் வரலாம்
மருந்து தந்தாலும் தரலாம்
விருந்து என்றாலும் வரலாம் வரலாம்
மருந்து தந்தாலும் தரலாம்
இதில் நாளை என்ன நல்ல வேளை என்ன
இங்கு நான்கு கண்களும் உறவாட
இங்கு நான்கு கண்களும் உறவாட
கன்னம் என்னும் ஒரு கிண்ணத்திலே
கறந்த பாலிருக்கும் வண்ணத்திலே
கரும்புச்சாறு கொண்டு வருவாயோ
கிளியே கொஞ்சம் தருவாயோ (2)
கேட்டுத் தருவது சரிதானா
கிளியின் சொந்தம் என்ன அதுதானா
கேட்டுத் தருவது சரிதானா
கிளியின் சொந்தம் என்ன அதுதானா
பாலும் பழமும் தேனும் தினையும்
நாலும் தருவேன் மேலும் தருவேன்
என்ன வேண்டும் இன்னும் சொல்லலாமா
காவேரி கரையின் ஓரத்திலே
தாலாட்டும் தென்றல் நேரத்திலே
கலந்து பேசிக் கொள்ள வரலாமா
தனியே கொஞ்சம் தரலாமா
ஆற்றங்கரை என்ன அவசியமா
அதிலும் கொஞ்சம் என்ன ரகசியமா
ஆற்றங்கரை என்ன அவசியமா
அதிலும் கொஞ்சம் என்ன ரகசியமா
தேதி குறித்து ஊரை அழைத்து
காலம் அறிந்து மாலை அணிந்து
தர வேண்டும் தந்து பெற வேண்டும்
ஜெயச்சந்திரன் குரலில் விழியே விளக்கொன்று என்கிற பாடல் ஒன்று உண்டு. அது கூட நன்றாயிருக்கும். ஜெயச்சந்திரன் குரல் என்று சேர்க்கலாம். வேண்டாம் என்று விட்டு விட்டு இன்னொரு எம் ஜி ஆர் படத்துக்குப் போகிறேன். யேசுதாஸ் குரலில் விழியே கதை எழுது!
1972 ல் ஸ்ரீதர் இயக்கத்தில் உருவான படம் உரிமைக்குரல். ஸ்ரீதர் பணக்கஷ்டத்தில் இருக்கும்போது அதை சரி செய்து கொள்ள எம் ஜி ஆர் உதவியை நாடி எடுத்த படம் என்பது அனைவருக்கும் தெரியும். அதே போல இந்தப் பாடல் கண்ணதாசன் எழுதியது என்பதும், எம் ஜி ஆர் - கண்ணதாசன் மனத்தாங்கல் பிரிவுக்கு நீண்ட நாட்களுக்குப்பின் ஸ்ரீதர் முயற்சியால் இந்தப் படத்தில் அவருக்கு இவர் பாட்டெழுத்தினார் என்பதும் உங்களுக்கு....
படம் 25 வாரங்கள் ஓடி வசூலை அள்ளிக் குவித்ததாம்.
இந்தப் பாடல் காம்போதி என்கிறது விக்கி. காணொளி பஹாடி என்கிறது. பாடல் நன்றாயிருக்கிறதா, விடுங்கள் என்ன ராகமாயிருந்தால் என்ன!
கே ஜே யேசுதாஸ் - சுசீலாம்மா குரலில் பாடல். காட்சியில் எம் ஜி ஆர்-லதா.
விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான் வாழ்கிறேன்
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான் வாழ்கிறேன்
மனதில் வடித்து வைத்த சிலைகள்
அதில் மயக்கம் பிறக்க வைத்த கலைகள்
மேகங்கள் போல் நெஞ்சில் ஓடும்
வானத்தை யார் மூடக் கூடும்
கோவில் பெண் கொண்டது
தெய்வம் கண் தந்தது
பூஜை யார் செய்வது
இந்தப்பூவை யார் கொள்வது
ஊமைக்கு வேறேது பாஷை
உள்ளத்தில் ஏதேதோ ஆசை
தீபம் எரிகின்றது ஜோதி தெரிகின்றது
காலம் மலர்கின்றது கனவு பலிக்கின்றது
எண்ணத்தில் என்னென்ன தோற்றம்
என்நெஞ்சத்தில் நீ தந்த மாற்றம்
எஸ் பி பி விழிகள் பாடலுக்கு இன்னும் இரண்டு பாடல்கள் போட்டி. 'விழியிலே மலர்ந்தது' பாடலும் 'விழிகளே விழிகளே' பாடலும் சட்டென நினைவுக்கு வந்தாலும் இன்று பகிரப்போவது 'கடைக்கண் பார்வை' படப் பாடலான 'விழிதீபம் உனைத்தேடும்' பாடல்.
படம் பற்றி சொல்ல விவரங்கள் அதிகமில்லை, கிடைக்கவில்லை! 1986 ல் வெளியான இந்தத் திரைப்படத்தில் பாண்டியனும் இளவரசியும் நடித்திருக்கிறார்கள்.
வி எஸ் நரசிம்மன் இசை. இந்தப் படத்தில் இன்னுமொரு சுமாரான பாடல் பெண்குரல் ஒன்றுடன் ஜெயச்சந்திரன் பாடும் பாடல் ஒண்டு உண்டு.
இவ்வளவுபேர் பாடல்கள் எழுதியிருக்க இந்தப் பாடலை எழுதி இருப்பவர் கட்டாயம் இவர்களில் ஒருவராகத்தான் இருக்கவேண்டும்! இணையத்தில் ஒரு இடத்தில உதயன் என்று இருக்கிறது.
எஸ் பி பி குரல், சுசீலாம்மாவின் குரல், இசை, டியூன் இவை பாடலின் சிறப்புகள். நல்லதொரு இசையமைப்பாளர் நரசிம்மன். அவருக்கு அதிகமாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கதை திரைக்கதை இயக்கம் ராஜ்ஸ்ரீதராம்.
விழி தீபம் உனைத் தேடும்
புது ராகம் மனம் பாடும்
சங்கீத மேடை தெய்வீக ஜாடை
விழி தீபம் உனைத் தேடும்
புது ராகம் மனம் பாடும்
சங்கீத மேடை தெய்வீக ஜாடை
விழி தீபம் உனைத் தேடும்
புது ராகம் மனம் பாடும்....
உன் பாடல் கேட்டு தென்றல் இளங்காற்று
உரசும் தழுவும் தினந்தோறும்
உன் பாடல் கேட்டு தென்றல் இளங்காற்று
உரசும் தழுவும் தினந்தோறும்
பூவான எந்தன் நெஞ்சம்
எந்நாளும் உந்தன் சொந்தம்
பூவான எந்தன் நெஞ்சம்
எந்நாளும் உந்தன் சொந்தம்
கடைக்கண் பார்வை பேசாதோ..
விழி தீபம் உனைத் தேடும்
புது ராகம் மனம் பாடும்
சங்கீத மேடை தெய்வீக ஜாடை
விழி தீபம் உனைத் தேடும்
புது ராகம் மனம் பாடும்....
ஆனந்த வெள்ளம் பொங்கி வரும் நேரம்
அடடா இது போல் சுகம் எது
ஆனந்த வெள்ளம் பொங்கி வரும் நேரம்
அடடா இது போல் சுகம் எது
சந்தோஷ மாலைப் போட்டு
சங்கீத வீணை மீட்டு
சந்தோஷ மாலைப் போட்டு
சங்கீத வீணை மீட்டு
இதயம் கனவில் நீந்தாதோ
விழி தீபம் உனைத் தேடும்
புது ராகம் மனம் பாடும்
சங்கீத மேடை தெய்வீக ஜாடை
விழி தீபம் உனைத் தேடும்
புது ராகம் மனம் பாடும்....
சங்கீத மேடை தெய்வீக ஜாடை
காலை வணக்கம்
பதிலளிநீக்குஎனக்கு, விழுகள் மீனோ மொழிகள் தேனோ பாடலதான் மனதில் வந்தது
வணக்கம்.. வாங்க நெல்லை.... விழிகள் மீனோ அற்புதமான பாடல். ஆனால் சரியான தரத்தில் கிடைக்கவில்லை.
நீக்குபேசாம சூப்பர் சிங்கர்ல அந்தக் குட்டிப் பெண் பாடினதை எடுத்துப் போட்டிருக்கலாம்
நீக்குமுதல் பாடல் வரிகளே நினைவுக்கு வருகின்றன
பதிலளிநீக்குஇரண்டாம் பாடல் ரொம்பவே பிரசித்தம்
ஆமாம்.. அவரவர்கள் மனதில் நிற்கும் பாடல்..
நீக்குஎல்லாமே அருமையான பாடல்களே ஜி...
பதிலளிநீக்குதகவல்கள் பிரமிப்பு.
ரசித்ததற்கும், பாராட்டுக்கும் நன்றி ஜி.
நீக்குஅன்பின் ஸ்ரீராம்.
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம்.
அனைவருக்கும் நல்ல நாளுக்கான வாழ்த்துகளும் எப்போதும் இறை அருள்
நம்முடன் இருக்க பிரார்த்தனைகள்.
வாங்க வல்லிம்மா... வணக்கம்.
நீக்குஅருமையான ரசனை. முதல் பாடல்
பதிலளிநீக்குஅவ்வளவு பிடிக்கும்.
என்ன ஒரு நடனம். இத்தனை திறமை
இன்னும் நன்றாக ஜொலித்திருக்க வேண்டும்.
அந்தப் படத்தில் எல்லாப் பாடல்களும் நன்றாக இருக்கும்.
சிறப்பான விழிப் பாடல். மனம் நிறை வாழ்த்துகள்.
இசையும், கவிதை வரிகளும்
பாட அழைக்கின்றன.
நன்றி வல்லிம்மா.
நீக்குஉரிமைக் குரல் பாடல் திருச்சி மொட்டை மாடியில்
பதிலளிநீக்குமாலை வேளைகளில் ரசித்தது. மிக மிக இனிமை.
அப்படியொரு ஈர்ப்பை கொடுக்கும்.
இந்தப் பாடலின் வரிகளும் மனதுக்கு வலிமை கொடுத்து
மென்மையாக தட்டிக் கொடுக்கும்.
திரையில் காணாமலேயே மனத்தில் இந்த ஓவியம் .
ஆமாம் அம்மா.. மிகவும் மென்மையான பாடல். இடையில் வரும் கொஞ்சம் தேவை இல்லாதை இசையைத் தவிர்த்துவிடலாம் என்று எனக்குத் தோன்றும்.
நீக்குதொ.க வரும் முன்னால் கேட்டு ரசித்ததால்
நீக்குபிரச்சினை இல்லை.
சினிமாவுக்காக எல்லாம் போட்டூப் பின்னுவார்கள்.
விட்டு விட வேண்டியது தான் மா.
அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள். பிரார்த்தனைகள். இதே போன்ற தொற்றுக்குறைந்த நிலை நீடிக்கவும் பரவும் புதிய வகைக் காய்ச்சலான டெங்கு குறையவும் பிரார்த்திக்கிறோம்.
பதிலளிநீக்குவணக்கம் கீதா அக்கா.. வாங்க.
நீக்குஎல்லாப் பாடல்களுமே அடிக்கடி கேட்டவை. ஆனால் "கடைக்கண் பார்வை" என்றெல்லாம் படம் வந்திருப்பதே தெரியாது.
பதிலளிநீக்குமூன்றாவது பாடலும் கேட்டிருக்கிறீர்களா?
நீக்கு//ஆனால் "கடைக்கண் பார்வை" என்றெல்லாம் படம் வந்திருப்பதே தெரியாது.// படம் வந்திருந்ததே தெரியாதப்போ பாடல் எப்படித் தெரியும்? :))))) கேட்டது இல்லை.
நீக்குமூன்றாவது பாடல் இது வரை கேட்டதில்லை.
பதிலளிநீக்குதிரு .நரசிம்மன் இசை எப்பொழுதுமே புதிய இசையாகத் தெரியும்.
பாடல் வரிகளும் இனிமை.
எல்லாப் பாடல்களிலும் சுசீலா அம்மாவின் குரலுக்குத் தான்
என்ன ஒரு காந்த மகிமை.!!!!
எஸ் பி பி சாரும் சேரும்போது இணையே இல்லாத
சங்கீதம் பிறக்கிறது. அருமையான சிறப்பான பாடல். மூன்றுமே
காதுகளுக்கு ஆனந்தம். மிக மிக நன்றி ஸ்ரீராம்.
ஆமாம் அம்மா. நரசிம்மன் இசை எப்போதுமெனிமையாகஇருக்கும். சுசீலாம்மா பாலு சார் குரல்களுக்கு கேட்கவும் வேண்டுமா?!
நீக்குஹிந்தியில் வில்லன் ரோலில் நடித்தவர் ஜெயந்த். அவரது இயற்பெயர் ஜக்கரியா கான். இவரை ஏன் விசேஷமாகக் குறிப்பிடுகிறேன் என்றால் இவர்தான் புகழ்பெற்ற ஷோலே புகழ் அம்ஜத்கானின் அப்பா! """"இது தெரியாத நியூஸ்.!!
பதிலளிநீக்குஏதோ ஒரு செய்தியாவது புதிதாக, சுவாரஸ்யமாக இருக்க வேண்டுமே என்றுதான்...!
நீக்குஎல்லா செய்தியுமே புதிது தான் மா. பொறுமையாகச் சேரத்துக் கொடுக்கிறீர்களே. நன்றி மா.
நீக்குசுவாரஸ்யமாக படிப்பதோடு பாராட்டவும் செய்வதற்கு நன்றி வல்லிம்மா.
நீக்கு😄😃😃😃😃😃😃😃😃😃😃😃😃
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்கம்.
நீக்குகடைசிப் பாட்டு,
பதிலளிநீக்குசின்னப்பூவே மெல்லப் பேசு பாட்டு... இதன் ஜாடை.
இருக்கோ?
அடடே.. கொஞ்சம் அப்படி இருக்கிறதுதான்.
நீக்குஅனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குவணக்கம் கோமதி அக்கா.. வாங்க..
நீக்குஅடிக்கடி கேட்ட பாடல்கள். இனிமையான பாடல்கள் கேட்டேன்.
பதிலளிநீக்குசினிமா செய்திகள் பகிர்வு தெரியாத செய்திகள் .
நன்றி கோமதி அக்கா.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வெள்ளி பாடல்கள் தேர்வு அருமை. தேடித் தேடி நடுநடுவே படங்கள் பற்றிய விபரங்களுடன் பாடல்களை பகிரும் விதங்கள் வாராவாரம் முன்னேற்றங்களுடன் மிகவும் நன்றாக உள்ளது. வெள்ளி பாடல்களை இந்த முறைகள் சிறப்பானதாக ஆக்குகிறது. பாடல்களின் இனிமையை விட அதைப்பற்றி விபரமாக தாங்கள் செய்திகளுடன் நாங்கள் அறியாதனவற்றை படிக்க தருவது சுவாரஷ்யமாக உள்ளது. உங்களின் இந்த திறமைகளுக்கு முதலில் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
இன்றைய விழி பற்றிய பாடல்கள் அனைத்தும் அருமை. மேலும் மூவருடனும், பெண்குரலாக திருமதி. சுசீலா அவர்கள் இணைந்து பாடியுள்ள இனிமையான பாடல்களாக வேறு பகிர்ந்திருப்பது சிறப்பாக உள்ளது. முதலும், இரண்டாவதும் அடிக்கடி கேட்டு ரசித்த பாடல்கள். அதிலும் இரண்டாவது மறக்க முடியாத இனிமையுடன் ரசித்த பாடல். மூன்றாவது கேட்டதாக நினைவில்லை. படமும் கேள்விபட்டதாக ஞாபகமில்லை. ஆனால், எஸ் பி பி பாடல் நன்றாகத்தான் இருக்கும். கேட்டு விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பாராட்டுக்கும், ரசனைக்கும் நன்றி கமலா அக்கா.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குஇறையருள் சூழ்க எங்கெங்கும்..
வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்..
வாங்க துரை செல்வராஜு ஸார்.. வணக்கம்.
நீக்குஇனிமையான ரசித்த பாடல்கள்...
பதிலளிநீக்குநன்றி DD.
நீக்குஅருமையான பாடல்கள்
பதிலளிநீக்குநன்றி நண்பரே..
நீக்குமுதல் பாடல் கேட்டதில்லை. இரண்டாவது பாடல் சொல்லவே தேவையில்லை அதிகம் கேட்டிருக்கிறேன். ரொம்ப ஃபேமஸ் பாட்டாச்செ.
பதிலளிநீக்குமூன்றாவது பாடல் கேட்ட நினைவு இருக்கு.
கீதா
முதல் பாடலும் மூன்றாவது பாடலும் நன்றாகவே இருக்கிறது.
நீக்குவிழியே கதை எழுது பாடல் ரொம்பப் பிடித்த பாடல். ரசிக்கும் பாடலும் கூட
கீதா
வாங்க கீதா... முதல் பாடல் கேட்டதில்லை என்பது ஆச்சர்யம்.
நீக்கு"கால்களே நில்லுங்கள்...//
பதிலளிநீக்குஆமாம் ஸ்ரீராம் பாடல் கேட்டதும் வேறொரு பாடல் இருப்பது தெரிகிறது ஆனால் வரிகள் தான் வழக்கம் போல நினைவில் வரவில்லை!!
கீதா
பட்டிக்காடா பட்டணமா...
நீக்குஆ கரீக்டு கரீக்டு!! ஆனா இது திரும்பக் கேட்டாலும் அதே ட்யூன் என்று தோன்றினாலும் அலுக்காதது...ஆனால் பாருங்க
நீக்குஸ்ரீராம் அதே ட்யூன்ல ந்னு தேடினப்ப நில்லுங்கள்னு அந்த வார்த்தைய மட்டும் கூகுள் எடுத்துக்கிட்டு ஒரு பாட்டு கூகுள் கொடுத்துச்சு "ஓ பறவைகளே பறவைகளே நில்லுங்கள்" ன்னு எஸ்பிபி, சுவர்ணலதா பாடியிருக்கும் பாடல் கேட்டதும் அதே ட்யூன்ல நிறைய கேட்டு கேட்டுப் புளிச்சுப் போயிடுச்சுன்னு ஓடி வந்திட்டேன் ....
கீதா
'எங்க வீட்டுப்பெண்' படம் பற்றி ஒரு சுவையான தகவல். தெலுங்கிலிருந்து தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் நடிக்க வந்த எஸ் வி ரெங்காராவ் படத்தில் நடிக்கும் விஜயநிர்மலா, அவர் ஏற்று நடிக்கும் பாத்திரத்துக்கு பொருத்தமில்லை என்று சொல்லி அவரைத் தூக்கச் சொன்னாராம். மறுநாள் விஜயநிர்மலா படப்பிடிப்புக்கு வந்தபோது ரெங்காராவுக்கு பதிலாக எஸ் வி சுப்பையா நடித்துக் கொண்டிருந்தாராம்!!! //
பதிலளிநீக்குஅட! ரொம்பவே சுவாரசியமான செய்தி தான் இது. அப்போ எல்லாம் டைரக்டருக்கு சுதந்திரம் இருந்தது போலும்!!!
கீதா
அது அவர்கள் காலம்!!! நன்றி கீதா.
நீக்குமூன்று பாடல்களுமே கேட்டிருக்கிறேன் ஸ்ரீராம்ஜி.
பதிலளிநீக்குஅதிலும் விழியே கதை எழுது அடிக்கடி கேட்ட பாடல். படமும் பார்த்திருக்கிறேன்.
துளசிதரன்
ஸ்ரீராம் விழியே கதை எழுது பாடல் விக்கி காம்போதி என்று சொகிறது என்றாலும் அதுகாம்போதி இல்லை பஹாடி தான். பஹாடி ஆலாபனை கேட்டேன்..அழகான ராகம்.
பதிலளிநீக்குநீங்கள் சொல்லியிருப்பது போல் எந்த ராகமா இருந்தா என்ன கேட்க இனிமை அம்புட்டுத்தான்...கொஞ்சம் மோகனம் டச்பண்ணிப் போவது போல இருக்கும்..
கீதா
ஹரிகாம்போதியும் கரகரப்ரியாவும் கலந்து, மேல மோகனம் தூவின மாதிரி இல்லையா கீதா ரங்கன்(க்கா)
நீக்குமுதலாவது பாடல் பெரிதாக கேட்டதில்லை. மற்றைய இரண்டும் கேட்டிருக்கிறேன் நல்ல இனிமையான பாடல்கள்.
பதிலளிநீக்கு