வெள்ளி, 4 மார்ச், 2022

வெள்ளி வீடியோ : என் மேனியில் உன்னைப் பிள்ளையைப் போலே - நான் வாரியணைத்தேன் ஆசையினாலே

 இன்று இரண்டு பி சுசீலா பாடல்கள். 

வானம்பாடி 1963 ல் வெளிவந்த திரைப்படம்.  

கண்ணதாசனும் இந்தப் படத்தின் ஒரு தயாரிப்பாளர்.  பாடல்கள் அவரது கைவண்ணம்தான்.  இசை  கே வி மகாதேவன்,  ஒரு வங்காளத் திரைப்படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம்..  

டி ஆர் ராஜகுமாரியின் கடைசி படம் இது என்று விக்குகிறது விக்கி.  எஸ் எஸ் ராஜேந்திரன், தேவிகா, முத்துராமன் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்துமே எல்லோரும் எப்போதும் விரும்பக்கூடியவை.

இந்தப் படத்திலிருந்து இரண்டு பாடல்கள் ஏற்கெனவே பகிர்ந்திருக்கிறேன்.  பாடல் ஆரம்பிக்கும்போது ஒரு பரவசம்.  'அதே பாட்டு, அதே குரல்,' என்று வயதான அம்மா சொன்னதும் ஆரம்பிக்கும் குரலில் ஒரு உற்சாகத்தோடு கூடிய துள்ளல் பரவசம்..  


கங்கைக் கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம்
கண்ணன் நடுவினிலே
ஓ.. ஓ.. கண்ணன் நடுவினிலே

காலை இளங்காற்று பாடிவரும் பாட்டு
எதிலும் அவன் குரலே
ஓ.. ஓ..  எதிலும் அவன் குரலே

ஆ... ஆ... ஆ...

கங்கைக் கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம்
கண்ணன் நடுவினிலே
ஓ.. ஓ.. கண்ணன் நடுவினிலே

காலை இளங்காற்று பாடிவரும் பாட்டு
எதிலும் அவன் குரலே
ஓ.. ஓ..  எதிலும் அவன் குரலே

கண்ணன் முகத் தோற்றம் கண்டேன்
கண்டவுடன் மாற்றம் கொண்டேன்
கண்ணன் முகத்தோட்டம் கண்டேன்
கண்டவுடன் மாற்றம் கொண்டேன்
கண்மயங்கி ஏங்கி நின்றேன்
கன்னி சிலையாகி நின்றேன்

கண்மயங்கி ஏங்கி நின்றேன்
கன்னி சிலையாகி நின்றேன்
என்ன நினைந்தேனோ? தன்னை மறந்தேனோ..
கண்ணீர் பெருகியதே..
ஓ.. ஓ.. கண்ணீர் பெருகியதே..

கங்கைக் கரைத் தோட்டம்
கன்னிப் பெண்கள் கூட்டம்
கண்ணன் நடுவினிலே
ஓ.. ஓ.. கண்ணன் நடுவினிலே

கண்ணன் என்னை கண்டு கொண்டான்
கையிரண்டில் அள்ளிக்கொண்டான்
கண்ணன் என்னை கண்டு கொண்டான்
கையிரண்டில் அள்ளிக்கொண்டான்
பொன்னழகு மேனி என்றான்
பூச்சரங்கள் கோடி தந்தான்
பொன்னழகு மேனி என்றான்
பூச்சரங்கள் கோடி தந்தான்
கண் திறந்து பார்த்தேன் கண்ணன் அங்கு இல்லை
கண்ணீர் பெருகியதே..
ஓ.. ஓ.. கண்ணீர் பெருகியதே..

அன்று வந்த கண்ணன்
இன்று வரவில்லை
என்றோ அவன் வருவான்..
ஓ.. ஓ.. என்றோ அவன் வருவான்..

கண்ணன் முகம் கண்ட கண்கள்
மன்னர் முகம் காண்பதில்லை
கண்ணன் முகம் கண்ட கண்கள்
மன்னர் முகம் காண்பதில்லை
கண்ணனுக்குத் தந்த உள்ளம்
இன்னொருவர் கொள்வதில்லை
கண்ணனுக்குத் தந்த உள்ளம்
இன்னொருவர் கொள்வதில்லை
கண்ணன் வரும் நாளில் கன்னி இருப்பேனோ...
காற்றில் மறைவேனோ
ஓ.. ஓ.. காற்றில் மறைவேனோ

நாடி வரும் கண்ணன் கோலமணி மார்பில்
நானே தவழ்ந்திருப்பேன்
ஓ.. ஓ...நானே தவழ்ந்திருப்பேன்




ஸ்ரீகாந்த் (நடிகர் அல்ல!) இயக்கத்தில் எல் வி பிரசாத் தயாரிப்பில் கே ஆர் விஜயா, ரவிச்சந்திரன் நடிப்பில் 1965 ல் வெளியான படம் இதயக்கமலம்.  அந்த நேரத்தில் வந்த கேவா கலர்ப்படம்  போலும்.  பாடல்களுக்காக ஜெயித்த படம் என்றே நினைக்கிறேன்.  ராண்டார் கை கே ஆர் விஜயா நடிப்பைப் புகழ்ந்திருந்தாராம்.

இந்தப் படத்திலிருந்து ஒரு பாடல் சில வாரங்களுக்கு முன் பகிரப்பட்டது.  இப்படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

பி சுசீலாவின் குரலில் வரும் கண்ணதாசனின் வரிகளுக்கு இதயத்தை அசைக்கும் வண்ணம் இசை அமைத்திருக்கிறார் கே வி மகாதேவன்.

இந்தப் பாடலை முழுமையாகவே ரசிக்கலாம் எனினும், சரணங்களில் ,வரும் வரிகளும், டியூனும், சுசீலாவின் குரலும் நம்மை என்னவோ செய்யும்.  

இரண்டு பாடல்களுமே இதயத்தை வருடும் இன்னிசைப் பாடல்கள்.

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல


 
இங்கு நீயொரு பாதி நானொரு பாதி
இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி
காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்
காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல

 

 
ஒரு தெய்வமில்லமல் கோவிலுமில்லை
ஒரு கோவில்லாமல் தீபமுமில்லை
நீ அந்தக் கோவில் நான் அங்கு தீபம்
தெய்வத்தின் முன்னே நீயும் நானும் வேறல்ல
 

 
என் மேனியில் உன்னைப் பிள்ளையைப் போலே - நான்
வாரியணைத்தேன் ஆசையினாலே
நீ தருவயோ நான் தருவேனோ
யார் தந்த போதும் நீயும் நானும் வேறல்ல

 
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல



= = =  =

GV ( Golden verses) in SS (Silver Screen) by KGG. 
 
GV & SS பற்றிய விளக்கம் வாசகர்களிடம் இரண்டு வாரங்கள் முன்பு கேட்டிருந்தேன். யாரும் கண்டுகொள்ளவில்லை. அதனால் நானே மேலே விளக்கம் கொடுத்துவிட்டேன். இலக்கியத்தையும், இலக்கிய வல்லுனர்களையும் தலைப்பில் கொண்டுவராமல் தப்பித்துவிட்டேன். 



காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் கரியும் உமியும் 

‘கரி என்று எடுத்து உமி என்று முடிக்கவும், என்று ஒருவர் வினவ, 
காளமேகம், 
 

கரியதனை யேயுரித்த கையா வளையேந்
தரியயற்கு மெட்டா தவையா – பரிவாக
அண்டரெல்லாங் கூடி யமுதங் கடைந்தபொழு
துண்டநஞ்சை யிங்கே யுமி 

என்று வெண்பா பாடினார். 

இதன் பொருள் : 

கரியை (யானையை) தோல் உரித்த கையை உடையவனே! சிவனே!
வளை என்னும் சங்கினை ஏந்துபவன் அரி. அவன் காட்சிக்கு எட்டாத அவையில் இருப்பவனே! (சித்து அம்பர அவை)
அண்டத்தில் இருப்பவர்களெல்லாம் கூடி அமுதம் கடைந்தபோது நஞ்சை உண்டாயே, அதனை இங்கே உமிந்துவிடு. (துப்பிவிடு)


அப்போது அந்த அவையிலிருந்த மற்றொரு புலவர், அதனையே (' கரி - உமி ') மீண்டும் சமிக்ஞையாகக் கொடுக்கவே, கவி காளமேகம், இப்படிப் பாடுகின்றார்.

கரிக்காய் பொரித்தாள் கன்னிக்கா யைத்தீய்த்தாள் 
பரிக்காயைப் பச்சடியாப் பண்ணாள்-உருக்கமுள்ள 
அப்பைக்காய் நெய்துவட்ட லாக்கினாள் 
அத்தைமகள் உப்புக்காண் சிச்சி யுமி.  

இதன் பொருள் : 

அத்தை மகள் என் அத்தை பெற்ற மகளானவள், கரிக்காய் பொரித்தாள் - அத்திக் காயைப் பொரித்து வைத்தாள், கன்னிக் காயைத் தீய்த்தாள் - வாழைக்காயை வதக்கி வைத்தாள்; பரிக் காயைப் பச்சடியாப் பண்ணாள் - மாங்காயைப் பச்சடியாகச் செய்து வைத்தாள் உருக்கமுள்ள அப்பைக்காயை நெய் துவட்டல் ஆக்கினாள் - அனைவருக்கும் விருப்பமுள்ள கத்தரிக்காயை நெய் துவட்டலாகச் செய்து வைத்தாள்; (ஆனால் எல்லாவற்றிலும்) உப்புக்காண் சீசீ யுமி - உப்பு அதிகம்; அதனால் அவை எல்லாம் சீசீ என்று துப்பி விடுவதற்குத்தக்கனவே (அன்றித்தின்பதற்கு ஆகா) அத்தை மகள் ஆசையுடன் செய்தவை என்று உண்டால் எல்லாவற்றிலும் உப்பு அதிகம்! சீச்சீ' என்று சொல்லித் துப்பத்தான் வேண்டும். இப்படிப் பொருள் அமைகின்றது.
**** **** 
கண்ணதாசன் காய் பாடல் நாம் அறிந்ததே !

படம் : பலே பாண்டியா 
ஆண்டு : 1962. 

அத் திக்காய் காய் காய் 
ஆலங்காய் வெண்ணிலவே
இத் திக்காய் காயாதே 
என்னைப் போல் பெண்ணல்லவோ
நீ என்னைப் போல் பெண்ணல்லவோ 

கன்னிக் காய் ஆசைக் காய் 
காதல் கொண்ட பாவைக் காய்
அங்கே காய் அவரைக் காய் 
மங்கை எந்தன் கோவைக் காய் 

மாதுளங்காய் ஆனாலும் 
என்னுளங்காய் ஆகுமோ 
எனை நீ காயாதே 
என்னுயிரும் நீ அல்லவோ

இத் திக்காய் காயாதே 
என்னைப் போல் பெண்ணல்லவோ 

இரவுக்காய் உறவுக்காய் 
ஏங்கும் இந்த ஏழைக்காய்
நீயும் காய் நிதமும் காய் 
நேரில் நிற்கும் இவளைக் காய் 

உருவங்காய் ஆனாலும் பருவங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ

ஏலக் காய் வாசனை போல் 
எங்கள் உள்ளம் வாழக் காய்
ஜாதிக் காய் பெட்டகம் போல் 
தனிமை இன்பம் கனியக் காய் 

சொன்னதெல்லாம் விளங்காயோ 
தூதுளங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே 
என்னுயிரும் நீயல்லவோ


உள்ளமெலாம் மிளகாயோ 
ஒவ்வொரு பேர் சுரைக்காயோ
வெள்ளரிக் காய் பிளந்தது போல் 
வெண்ணிலவே சிரிக்காயோ 

கோதை என்னை காயாதே 
கொற்றவரைக்காய் வெண்ணிலா
இருவரையும் காயாதே 
தனிமையிலேங்காய் வெண்ணிலா

அத் திக்காய் காய் காய் 
ஆலங்காய் வெண்ணிலவே
இத் திக்காய் காயாதே 
என்னுயிரும் நீ அல்லவோ


= = = = 

148 கருத்துகள்:

  1. பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மை உண் டாகப்பெறின்..

    குறள் நெறி வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

    வாழ்க நலம்..
    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
  3. காலத்தை வென்றிருக்கும் பாடல்களுடன் இன்றைய பதிவு..

    பதிலளிநீக்கு
  4. " அதே பாட்டு, அதே குரல் "

    பாடலின் தொடக்கத்தில் வரும் இந்த வார்த்தைகளைப் பேசுபவர் - T,R, ராஜகுமாரி அவர்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே...   அந்தக்கால கவர்ச்சிக்கன்னி!  இது எனக்குத் தகவல்.

      நீக்கு
    2. // அடடே... அந்தக்கால கவர்ச்சிக்கன்னி!.. //

      அவங்க.. எங்கே கவிர்ச்சி.. காட்டினார்கள்?..

      காந்தக் கண்களையும்ம் மோகனப் புன்னகையையும் கண்டு ஆடாத மனங்கள் ஆடித் தகர்ந்தன..

      நீக்கு
    3. அ...   முத்தம் கொடுத்தாக இல்ல...!

      நீக்கு
    4. நேரில் பார்க்க நல்ல கருத்த நிறத்துடன் இருப்பார் எனச் சொல்லிக் கேள்வி. பல வருடங்கள் அவர் பெயரில் இருந்த "ராஜ்குமாரி" தியேட்டருக்கு அருகே உள்ள பஸ் நிறுத்தம் (தி.நகரில்) ராஜ்குமாரி நிறுத்தம் என்றே சொல்லப்பட்டது.

      நீக்கு
    5. நின் மதி வதனமும் நீள் விழியும் கண்டு பாடலில்
      கண்ணாலயே நடித்திருப்பார், ஸ்வாமி ....என்று ஃப்ளையிங்க் கிஸ்:)

      நீக்கு
  5. //கண்ணன் முகத் தோட்டம் கண்டேன்..//

    கண்ணன் முகத் தோற்றம் கண்டேன்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம் எழுதாமல் காபி செய்து போட்டால் இதுதான் கதி!! மாற்றி விட்டேன்... வேறு ஏதாவது?

      நீக்கு
    2. இவங்க -
      நம்ம தஞ்சாவூர்க்காரங்க.. தெரியுமோ!..

      நீக்கு
    3. அடடே...   அவுக பேர்ல தியேட்டர் இருக்கறது தெரியும்.

      நீக்கு
    4. //அந்த என்றதில் வந்த கேவா கலர்ப்படம் போலும்.// இது என்ன பொருளில் வருதுனு புரியலை. இதயக்கமலம் பாடலைக் குறிப்பிடும் இடத்தில் சொல்லி இருக்கீங்க. :)

      நீக்கு
    5. ////அந்த என்றதில் வந்த கேவா கலர்ப்படம் போலும்.// //

      அந்த நேரத்தில் என்று இருக்க வேண்டும்.

      நீக்கு
  6. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    எல்லோருக்கும் ஆரோக்கிய வாழ்வு தொடர இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரார்த்திப்போம். வாங்க வல்லிம்மா.. வணக்கம்.

      நீக்கு
  7. இரண்டுமே முத்தான பாடல்கள்.
    பாடிப் பாடி மகிழ்வித்த காலங்களும் உண்டு.

    பதிலளிநீக்கு
  8. // கரியதனை யேயரித்த .. //

    கரியதனை யேயுரித்த!..

    பதிலளிநீக்கு
  9. // வெள்ளரிக்காய் பிளந்தது போல்
    வெண்ணிலவே சிரித்தாயோ.. //

    வெள்ளரிக்காய் பிளந்தது போல்
    வெண்ணிலவே சிரிக்காயோ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கென்னவோ 'சிரித்தாயோ' பொருத்தமாக இருக்கிறது.  எனினும் மாற்றிவிட்டேன்.  அடுத்து?

      நீக்கு
  10. திண்டுக்கல்லில் பார்த்த படம் வானம்பாடி.
    டி.ஆர் ,ராஜகுமாரி அவர்களின் முகத்தை மறக்க முடியாது.

    ஆயிரம் Bhaவங்கள் ஓடும் அவர் நடிப்பில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹி.. நான் இரண்டு படங்களுமே பார்க்கவில்லை. பாட்டுக்கு மட்டும் ரசிகன். கேட்காமல் விட்டதில்லை!

      நீக்கு
  11. // கோதை என்னை காயாதே
    கொற்றவரங்காய் வெண்ணிலா.. //

    கோதை எனைக் காயாதே
    கொற்றவரைக்காய் வெண்ணிலா..

    பதிலளிநீக்கு
  12. //னக்கென்னவோ 'சிரித்தாயோ' பொருத்தமாக இருக்கிறது. எனினும்..//

    இப்பாடலின் ஈற்று எல்லாமே காய் - தான்..

    அதனால் தான் கனியாக இனிக்கின்றது..

    இன்றைய டகர டப்பாக்கள் வெட்கப்பட வேண்டும்..

    ஆனால் அதற்கெல்லாம் வழியே இல்லை..

    பதிலளிநீக்கு
  13. வானம்பாடியில் எல்லாப் பாடல்களுமே
    சிறப்பாகப் பேசப்பட்டவை.
    'கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்'

    ஊமைப் பெண்,

    தூக்கணாங்குருவிக் கூடு,

    எஸெஸார், தேவிகா ஜோடியின் போட்டிப் பாடலும் சிறப்பாக
    இருக்கும்.
    கமல் பாகவதரின் துடுக்கு நடிப்பும் சொல்லும் விதத்தில்
    இருக்கும்.
    தேவிகா ஸிதாருடன் நடித்த இரண்டாவது படமோ.

    அப்படியே சொன்னது நீதானா பாடல் நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
  14. தேவிகா அவர்களது கண்கள் அழகு.. அதில் நாணம் கலந்த நடிப்பு அழகோ அழகு..

    பதிலளிநீக்கு
  15. கண்ணதாசன் பக்தி ரசம் பிழிந்து கண்ணனைப் பூஜித்த பாடல்களில்
    மிகச் சிறந்தது இது.

    எத்தனையோ மனத் துயரங்களைப் போக்கும்
    இசை,
    எண்ண்ங்களைச் சொல்லக் கண்ணதாசன் போல் இனி ஒருவர்
    பிறந்து வரவேண்டும்.
    சுசீலா அம்மா போல் உணர்வுகளைத் தோய்த்துக் குரல் கொடுக்கவும்
    யாரால் முடியும்.
    தேவிகாவின் கண்கள் சொல்லும் சோகமும்
    சிறப்பு. நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்ணதாசன் பாடல்களையும் சொல்ல வேண்டும்.  சுசீலாம்மாவின் குரலையும் சொல்லவேண்டும்.

      நீக்கு
    2. ஜமுனா ராணி.... வசந்தி, பாலாஜி பி பி எஸ் விட்டுப் போய் விட்டது!!!!!
      நன்றி கேஜிஜீ ஸார்.

      நீக்கு
    3. குழந்தைக்குரலில் பாடும் எம்.எஸ்.ராஜேஸ்வரி. மீ த குழந்தை என்பதால் நினைவு வைச்சிருக்கேன். :))))

      நீக்கு
  16. முதல் பாடல் எனில் அந்தக் கால கட்டத்தில் மிகவும் உயிராக/உணர்வாக இருந்த பாடல். வீட்டுக்குத் தெரிந்தால் அம்புடுதேன்! எங்கே போட்டாலும் நின்று/கேட்டு மனதுக்குள்ளாக ரசித்திருக்கேன். இப்போதும் இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் மனம் லேசாகிவிடும். இந்தப் பாடல்களின் வரிகளை வைத்தே என்னுடைய "கண்ணன் வந்தான்" தொடரில் ருக்மிணி/கிருஷ்ணர் கல்யாணம் பற்றி எழுதும்போது ருக்மிணியின் எண்ணங்களாகப் பாடல் வரிகளைத் தலைப்பாக்கி எழுதி இருக்கேன். பலரும் அப்போ ரசித்தார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுவையான தகவல்களுக்கு நன்றி.

      நீக்கு
    2. ஆமாம். பாடலை எப்போது எங்கே கேட்டாலும் ரசிக்கலாம். கண்ணன் வந்தான் தொடர் கொஞ்சம் படித்திருக்கிறேன்.

      நீக்கு
    3. https://kannanvaruvan.blogspot.com/2011/12/blog-post_09.html

      நீக்கு
    4. ஏழு பாகங்கள் ஒவ்வொன்றும் ஆயிரம் பக்கங்களுக்குக் கிட்டத்தட்ட வரும். நீங்க படித்திருக்க வாய்ப்பில்லை. கடைசி ஒன்றிரண்டில் வைகோ அவர்கள் மிகவும் ஆவலுடன் கருத்துரைகள் கொடுத்திருப்பார். பீமன்/இடும்பி பற்றிய பாகத்தில்.

      நீக்கு
  17. ஆனால் படம் பார்த்ததில்லை. அதே போல் பலே பாண்டியா பாடலும் பிடிக்கும். படம் பார்த்தது இல்லை. இதயக்கமலம் படத்தின் ஹிந்திப்பதிப்பு பார்த்திருக்கேன். இதயக்கமலம் மதுரையில் நியூ சினிமாவில் வந்திருந்தது என நினைக்கிறேன். கே.ஆர்.விஜயா உச்சத்தில் இருந்த நேரம். அப்போத் தான்மதுரையில் மேல கோபுர வாசலில் மேலாவணி மூல வீதியில் இருந்து இடப்பக்கம் திரும்பினால் வரும் ஓர் கடையில் "இசையகம்" என ஆரம்பித்திருந்தார்கள். மதுரை ஃபன்ட் ஆபீஸ் அதற்கு நேர் எதிரே இருந்தது. அந்த இசையகத்தைத் திறக்கக் கே.ஆர்.விஜயா வந்திருந்தார். கூட்ட நெரிசல். பின்னால் அந்த இசையகம் உஷா தையல் மிஷினின் ஷோரூமாக மாறி இருந்தது. அதன் பின்னர் என்னவெல்லாம் மாறி இப்போ என்னவா இருக்கோ! :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாற்றங்கள் ஒன்றே நிலையானது.

      நீக்கு
    2. நிலையானது என்றால்
      அது மட்டும் மாறாததா?

      நீக்கு
    3. ஓ.. இதெல்லாம் புதிய தகவல்கள். எனக்கும் மதுரை .ஞாபகம் வருகிறது.

      நீக்கு
  18. கேஜிஜி இதைக் கேட்டிருந்ததே மறந்து போச்சு எஸ்.எஸ். என்பது ஸ்டெயின்லெஸ் ஸ்டீலுக்கும் பொருந்தும். காளமேகத்தின் திறமையைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா? இங்கே அகிலாண்டேஸ்வரி கோயில் போகும்போதெல்லாம் காளமேகம் நினைவில் வருவார்.

    பதிலளிநீக்கு
  19. தேவிகாவின் நடிப்பில் எனக்குப் பிடித்த படம் "நீல வானம்" ஜிவாஜி தான் ஜோடினு நினைக்கிறேன். ஆனால் முற்றிலும் தேவிகாவின் படம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீதரின் நெஞ்சில் ஓர் ஆலயம்
      கூடத் தான் மு.தே.ப.

      ஆனால் நெஞ்சம் மறப்பதில்லையை
      அப்படி மு.தே.ப. என்று சொல்லி விட முடியாது.

      நீக்கு
    2. இப்படியெல்லாம் (மு.தே.ப. மாதிரி) எனக்கு எழதக் கற்றுக் கொடுத்தது ஸ்ரீராம் தான்! அவருக்கு யார் என்றால் இன்னொருத்தரைக் கைகாட்டுகிறார்!

      எழுதுவதில் சில 'நேக்கு'கள் வாசிப்புகளில் கற்றதும் பெற்றதுமாய்
      வரும் அதிசயத்தை எங்கே போய்ச் சொல்ல?...

      நீக்கு
    3. தேவிகாவுக்கென்றே சில படங்கள்...   ஜீவி சார்..  நானும் இது மாதிரி எழுதுவேன்.  கீதா அக்காவும் இதுபோல எழுதுவார்.

      நீக்கு
    4. //கீதா அக்காவும் இதுபோல எழுதுவார்.// க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நான் தான் ஆரம்பிச்சு வைச்சேனாக்கும். என் ஆரம்பகாலப் பதிவுகளைப் பார்த்தால் சிஷ்யகோடிகளிடம் இப்படித் தான் பேசி இருப்பேன் அநேகமாக. :)))) விவிசி அவசி எல்லாம் அப்போவே வந்தாச்சு. பையர் மட்டும் கொஞ்சம் தாமதமாக 2007இல் வந்தார்னு நினைக்கிறேன். அப்போல்லாம் ம.பா. என்றே ரங்க்ஸைக் குறிப்பிட்டுக் கொண்டிருந்தேன். நம்ம டுபுக்குவின் ரங்கமணி/தங்கமணி படிச்சதில் இருந்து ரங்க்ஸ். இணையம் மொத்தமும் ர.ம. வெர்சஸ் த.ம. என ஆகிவிட்டது.

      நீக்கு
    5. நான் அந்த ஆரம்ப காலங்களில் உங்கள் தளம் வந்ததில்லை.  ஆனாலும் நீங்கள் அவசி விவிசி எல்லாம் அடிக்கடி போடுவீர்கள்!

      நீக்கு
    6. நானும் எழுதியிருக்கிறேன், ஸ்ரீராம்.
      இதெல்லாம் எதற்காக என்றால் இப்படியெல்லாம் எழுதிக் காட்டிய முன்னோடியை சந்தர்ப்பம் வரும் போது நினைவு கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான்.

      மறைமுகமாகவேனும் அவரை நான் நினைவு கொள்கிறேன். நீங்கள் இருவரும் இல்லை. அவ்வளவு தான் வித்தியாசம்.

      நீக்கு
    7. 'கற்றதும் பெற்றதும்' என்று சொன்னாலே நினைவுக்கு வருவார் அவர்!

      நீக்கு
    8. //இப்படியெல்லாம் எழுதிக் காட்டிய முன்னோடியை சந்தர்ப்பம் வரும் போது நினைவு கொள்ள வேண்டும்// யார் எஸ்.ஏ.பி.யா? அவர்தான் அரசு கேள்வி பதில்களில் இப்படி நிறைய எழுதுவார்.

      நீக்கு
  20. கீதா சொன்னதும் மதுரை நினைவுகள் அதிகம் வருகிறது. நியூ
    சினிமாவும் தான்.

    விஜயாவின் பஞ்ச வர்ணக் கிளியும் மதுரையில்
    பார்த்தது தான்.
    கீதா சொல்வது போல விஜயா காலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். விஜயா வேவ் காலம்.

      நீக்கு
    2. வி யை எனக்குப் பிடிக்காது!!!


      நியூ சினிமா தியேட்டர் அருகில் பழைய புத்தகக் கடைகள் சில இருக்கும். அது நினைவுக்கு வருகிறது. நான் நியூ சினிமாவில் பார்த்த கடைசிப் படம் கீழ்வானம் சிவக்கும் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    3. ஆமாம். பழைய புத்தகங்களின் சொர்க்கம். நான் மதிய வேளையில் அடிக்கடி அங்கே போய்ப் புத்தகங்கள் பொறுக்கிக் கொண்டு வருவேன். பல பொக்கிஷங்கள் கிடைத்திருக்கின்றன. சுமார் பத்து, பதினைந்து கடைகள் இருந்திருக்குமோ என்னமோ. அங்கே இருந்து தெற்காவணி மூல வீதி திரும்பினால் நகைக்கடைகளுக்கு எதிர்சாரியில் ஓர் மண்டகப்படி மண்டபம் இருக்கும். மதனகோபால ஸ்வாமி கோயிலைச் சேர்ந்த மண்டகப்படி மண்டபம்னு நினைக்கிறேன். அங்கே ஒரு பெரிய புத்தகசாலையே உண்டு. நாமம் போட்ட ஒரு நாயுடு/நாயக்கர் தாத்தா தான் அங்கே புத்தகங்கள் கொடுப்பவர். யாருமே வர மாட்டாங்க. அதை முதல் முதலாக அதைப் பார்த்ததும் நான் அடைந்த மகிழ்ச்சி! ஈடு இணை இல்லை. மொத்த வாயிலும் திறந்திருக்காது. சின்னத் திட்டி வாசல் வழியாத் தான் உள்ளே போகணும். கை நிறைய மனம் நிறையப் புத்தகங்களை அள்ளிக் கொண்டு வருவேன்.

      நீக்கு
    4. ஆமாம், ஆமாம் எனக்கும் நினைவு இருக்கிறது.  மிகவும் குறுகிய தெருக்கள். வலது ஓரத்தில் ஒரு டீக்கடை.

      நீக்கு
    5. அங்கே வளையல்காரத்தெருவில் இருந்த பிரசவ ஆஸ்பத்திரி கிரிஜாபாய் நர்சிங் ஹோம்! அங்கே இருந்த உள் நோயாளிகளுக்கு அந்தத் தேநீர்க்கடையிலிருந்து தான் காஃபி, தேநீர் போகும். என் இரண்டு குழந்தைகளும் அங்கே தான் பிறந்தனர். இப்போ அந்த இடமே முழுதும் மாறிப்போ ஏதோ குழந்தைகள் பூங்காவோ, மாலோ வந்துவிட்டது. :( அடையாளமே தெரியலை. நியூ சினிமாக்கு எதிரே இருந்த பார்க்கை முற்றிலும் அழித்துவிட்டுக் கார் பார்க்கிங்காக மாற்றி இருந்தார்கள். இப்போத் தெரியலை.

      நீக்கு
  21. ஓஹோ. இந்த வாரம் தேவிகா வாரமா:)

    எங்கள் வீட்டிற்கு எதிர் வீட்டில் இருந்ததால்
    வயதான் தேவிகாவையும்,
    அவர் மகள் கனகாவையும்
    பார்த்து கேட்டு பழைய கனவுகள் கலைந்து விட்டன.

    நல்ல நடிகை என்பதில் துளியும் மறுப்பில்லை.
    நெஞ்சம் மறப்பதில்லை மறக்க முடியுமா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேவிகா சேலத்துக்காரர். இவரை திரைப்படத்திற்கு கொண்டு வந்தவர் எம்.ஏ.வேணு. அவர் தயாரித்த முதலாளி தான் இவர் முதல் படம்.
      (ஏரிக்கரை மேலே போறவளே, பெண் மயிலே..)

      நீக்கு
    2. //எங்கள் வீட்டிற்கு எதிர் வீட்டில் இருந்ததால் வயதான் தேவிகாவையும்,
      அவர் மகள் கனகாவையும் பார்த்து கேட்டு பழைய கனவுகள் கலைந்து விட்டன.//

      ஏனம்மா?  திரைக்கு நேருக்கும் நிறைய வித்தியாசங்கள் எதிர்ப்பார்க்கக் கூடியதுதானே?

      நீக்கு
    3. ஜீவி ஸார்..  நிறைய விஷயங்கள் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்.

      :))

      நீக்கு
    4. கனகா வீட்டில் ஒரு சின்ன மி.கா.சா இருந்தது எனக் கேள்விப் பட்டிருக்கேன். யாரோ படங்களும் எடுத்துப் போட்டிருந்தனர். நன்றாய் வர வேண்டியவர். ஏனோ அம்மா மாதிரி சோபிக்கவில்லை.

      நீக்கு
    5. ஹிஹிஹி...   கண்டுபிடிச்சுடுவேன்..   சீக்கிரமே மி கா சா ன்னா என்ன என்று கண்டுபிடிச்சுடுவேன்!  மிளகாய் காரசாரம் என்று நினைத்துக் கொள்ள மாட்டேன்!

      நீக்கு
    6. யெஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸோ யெஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸு கேஜிஜி சார்.

      நீக்கு
    7. சொல்ல வந்தேன்..    கேஜிஜி சொல்லி விட்டார்!!

      நீக்கு
    8. Yes GauthamanG. D Silva Road just opposite to our house. Devika's ex husband
      Dhevadhas was living there. close friend of my husband. A very good man. They filmed KB's Mazhalai pattaalam there. Thallu model vandi song.:) Did hear shouting matches between D And D.

      நீக்கு
  22. கௌதமன் ஜி யின்
    காய் ஆராய்ச்சிமிக அருமை.
    உப்புக் காண் சீச்சி உமி
    எல்லார் வாயிலும் புறப்பட்டு வெளியே வரும் வசனம்.
    உண்மையான பொருளை அறிய மகிழ்ச்சி.

    அத்திக்காய் பாடல் மிக மிக விரும்பிக் கேட்கும்
    பாடல்.
    ஏலக்காய் வாசனை போல் எந்தன் உள்ளம் வாழக் காய்.''

    மாது உளம் காய் ஆனாலும் என்னுளம் காய் ஆகுமோ''
    அத் திக்காய், இத் திக்காய் இன்னும் அருமை.
    பாடலுக்கும் இலக்கியத்துக்கும் மிக சிறப்பாகக்
    கொடுத்திருப்பது ரசிக்கும் படியாக இருக்கிறது. நன்றி.
    அனைத்துப் பாடல்களும் தேனாக இனித்தன.

    பதிலளிநீக்கு
  23. பதில்கள்
    1. ஆம், சரிதான். எனக்கும் அந்த வரியில் சந்தேகம் இருந்தது.

      நீக்கு
    2. ஓ..  இன்னொரு திருத்தமா?  சரிசெய்யப்பட்டிருக்கும்.

      நீக்கு
  24. @ கீதாக்கா..

    // இங்கே அகிலாண்டேஸ்வரி கோயில் போகும்போதெல்லாம் காளமேகம் நினைவில் வருவார்..//

    @ கௌதம்..

    // ஏன் என்பதையும் சொல்லிவிடுங்கள்!.. //

    திரு ஆனைக்கா கோயிலில் தானே திரு அரங்கத்துப் பரிசாரகர் வரதன் அம்பிகையின் தாம்பூல சேஷத்தினால் கவி காளமேகம் என்றானது!..

    பதிலளிநீக்கு
  25. எல்லா பாடல்களுமே சிறப்பானவை.
    இதயக்ஙமலம் கவிஞர் வாலிக்கு முதல்படம் இல்லையா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லையே..   கண்ணதாசன் அல்லவோ எழுதி இருக்கிறார்.  வாலி 1958 லேயே திரையுலகப் பிரவேசம் செய்து விட்டார்.

      நீக்கு
    2. // இதயக்ஙமலம் // அந்தப் படம் இன்னும் வெளிவரவில்லை என்று நினைக்கிறேன். புதுமையான பெயர்!!

      நீக்கு
  26. //விக்குகிறது விக்கி//

    ஈது ஆர் ஸ்டைலானும்?..

    பதிலளிநீக்கு
  27. //கண்ணனுக்குத் தந்த உள்ளம்
    இன்னொருவர் கொள்வதில்லை //

    அது ஒரு கனாக்காலம். பழங்கதையாய் பாடல் வரிகளாய்
    போன காலம்.

    இன்றைய நீதி மன்றங்களில் விவாக ரத்து கேஸ்கள் தாம் டாப்பாம்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த வரியைப் படிக்கும்போதே பாடல் மனதில் ஓட,  உருகுகிறது..

      நீக்கு
  28. //Golden verses in silver screen //

    ஹி..ஹி...

    இலக்கிய சாரல் என்னாயிற்று?

    பதிலளிநீக்கு
  29. பாடல்கள் அனைத்தும் மிக அருமையான தேர்வு.
    இனிமையான பாடல்களை கேட்டு மகிழ்ந்தேன்.

    பதிலளிநீக்கு
  30. காளமேக புலவரின் பாடலும், விளக்கமும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  31. ஆஹா இன்றைய மூன்று பாடல்களுமே எந்தவித யோசிப்பும் இல்லாமல் தெரிந்த ரசித்த பாடல்கள். ஆனால் எந்தப் படம் யார் பாடம் என்பதெல்லாம் தெரியாது, பாடல்கள் மட்டுமே.

    மிகவும் பிடித்த ரசித்த பாடல்கள்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமக்கு படம்பெயரும் கொஞ்சம் தெரியுமாக்கும்!  பாடல்கள் உயிர்!

      நீக்கு
  32. கம்பனும் கண்ணதாசனும் வரிசையில் சேர்க்கலாம். ஒரு சாம்பிள் எஸ்ட்ராக்ட் கீழே. 

    https://old.thinnai.com/?p=60807314


    தாடகை வதத்தில் இராமன்
    தடக்கையின் உரங்கண்டு
    மேடைக் கல் மாதவளாய் மாறியதில்
    அவன் காலின் திறங்கண்டு;
    விசுவாமித்திரன் பாடுகின்றான்
    வியப்பின் எல்லையில் நின்று
    “மைவண்ணத் தரக்கி போரில்
    மழைவண்ணத் தண்ணலே
    கைவண்ணம் அங்குக் கண்டேன்
    கால் வண்ணம் இங்குக் கண்டேன்” என்று!
    இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் கம்பன் எழுதியது.


    பால் வண்ணம் பருவம் கண்டு
    வேல் வண்ணம் விழிகள் கண்டு
    மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்
    பெண் :
    கண் வண்ணம் அங்கே கண்டேன்
    கைவண்ணம் இங்கே கண்டேன்
    பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்

    Jayakumar

    பதிலளிநீக்கு
  33. கௌ அண்ணா வெரி ஸாரி....அன்று நீங்கள் கேட்டிருந்ததுக்கு யோசித்துப் பதில் சொல்ல நினைத்து அப்புறம் மறந்தே விட்டது ஹிஹிஹி...மறதித்திலகம் ஆன இந்த கீதா!!

    காளமேகப் புலவர் பாடலையும் பொருளையும் வாசித்து வரும் போதே அட இது அத்திக்காய் பாடலோ என்று நினைத்தால் நீங்களும் சொல்லியிருக்கீங்க!!

    கீதா.....ஹூரே!!

    காய் காய் என்று என்ன அழகான பாடல்...கவிஞர் கவிஞர்தான்!! நான் அதற்காகவும், அதனோடு இழைந்த இசைக்குமாய் ரசித்த, ரசிக்கும் பாடல்!

    கீதா

    பதிலளிநீக்கு
  34. மூன்று பாடல்களுமே காலத்தால் அழியாத பாடல்கள்! ஆச்சரியம் என்னவென்றால் இந்தப்படங்களின் பாடல்கள் அனைத்துமே இனிமையாக இருக்கும்.

    வானம்பாடியில் நடித்த டி.ஆர்.ராஜகுமாரி தான் மிகவும் புகழ் பெற்ற ' மனோகரா' படத்தின் வில்லியாக நடித்து அப்ளாஸ் வாங்கியிருப்பார்.

    இதய கமலம் சாதனா, சுனில் தத் நடிக்க மேரா சாயா என்ற ஹிந்திப்படமாக வெளி வந்தது. அதிலும் பாடல்கள் முழுவதும் லதா மிக இனிமையாக பாடியிருப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //படமும் "கோப"ப்பட்டிருக்கிறேன்.// ஹெஹெஹெஹெஹெஹெ விவிசி விவிசி விவிசி. நீங்க அவசி, அவசி ரோபோ துரத்துவதால் கோவிச்சுண்டு வெளிநடப்புச் செய்கிறேன்.

      நீக்கு
    2. மேரே சாயா பாடல்கள் கேட்டிருக்கிறேன்.  படமும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

      நன்றி மனோ அக்கா.

      நீக்கு
  35. மூன்றுமே முத்தான பாடல்கள். இலங்கை வானொலி உபயத்தில் கேட்டுக் கேட்டு ரசித்த பாடல்கள்.

    காளமேகப் புலவரின் பாடலும் விளக்கமும் அதற்கு ஒத்த ரசனையான திரைப்படப்பாடலைப் பகிர்ந்திருப்பது அருமை. காளமேகப் புலவரை பள்ளிக்குப் பிறகு இப்போதுதான் பார்க்கிறேன். பகிர்விற்கு மிக்க நன்றி கௌதமன் சார் மற்றும் ஸ்ரீராம் ஜி

    துளசிதரன்



    பதிலளிநீக்கு
  36. கங்கைக்கரைத்தோட்டம் பாடலை ஒவ்வொரு முறையும் ரசித்துக் கேட்பேன், கேட்டு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  37. பாடல்கள் அனைத்தும் நன்று.

    எனக்கு பிடித்தது 'கங்கைகரைத் தோட்டம்.....'
    இப்பொழுது தான் வரமுடிந்தது
    மின்வெட்டு 7 1/2 மணித்தியாலம் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ! அப்படியா!! வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  38. கங்கை கரை தோட்டம் பாடலை கேட்கும் பொழுதெல்லாம் ஏனோ ஒரு இனம் புரியாத சோகம் வரும்.

    'அத்திக்காய் காய் காய்..'பாடல் மிகவும் அழகான பாடல்.

    இதே போல விஜய் படம் ஒன்றில் ஏதோ காய் காய் என்று ஒரு பாடல் வரும் என்றால் எல்லோரும் என்னை அடிக்க வருவார்கள். ஏன் என் மகளே,"அம்மா அந்த பாடலை சொல்லி விட்டு இந்தப் பாடலை சொல்லாதே" என்பாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விஜய் படப்பாடல் எஸ் பி பி பாடியது.  அதில் காய் கம்மி!  படம் ஆதி!  பா விஜய் பாடல்.  வித்யாசாகர் இசை.

      https://www.youtube.com/watch?v=ZND2fcCSW18

      நீக்கு
    2. இல்லை, இந்தப் பாடல் இல்லை. யோசித்து சொல்கிறேன்.

      நீக்கு
  39. வாலியின் முதல் சினிமா பாடல் கற்பகம் படத்தில் வரும் 'அத்தை மணி மெத்தையடி..'பாடல்.‌

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அத்தை மடி என்று நினைக்கிறேன்!

      நீக்கு
    2. வாலி கற்பகம் படத்துக்கு முன்னரே 1958 ல் அழகுமலைக்கள்ளன் படத்தில் பாடல் எழுதி இருக்கிறார்.  பி சுசீலா பாடி இருக்கிறார்.  பிறகு சந்திரகாந்த், நல்லவன் வாழ்வான், இதயத்தில் நீ, எதையும் தாங்கும் இதயம் போன்ற படங்கள் எல்லாம் தாண்டிதான் கற்பகம்.  1963.

      நீக்கு
    3. ஓ! கற்பகம் தான் ப்ரேக் கொடுத்த படமோ?

      நீக்கு
  40. என்றென்றும் மனதில் நிற்கும் பாடல்கள

    பதிலளிநீக்கு
  41. கேட்டுக் கேட்டு ரசித்த பாடல்கள்.... மீண்டும் கேட்க வேண்டும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!