சோலே படூரா
காமாட்சி மகாலிங்கம்
இன்று டிபன் இதுதான். நான் எழுதி வெகு நாட்களாகிவிட்டபடியால் இதை எழுதுகிறேன்.
மிகவும் ருசியானது. மைதாவில் எப்பொழுதாகிலும் ஒரு நாள் செய்து சாப்பிடலாம்.. படூராவிற்கு முதலில் வேண்டியவைகளைப் பார்ப்போம்.
மைதா—1கப், மெல்லியரவை—3 டீஸ்பூன், ருசிக்கு உப்பு, சர்க்கரை 1டீஸ்பூன், எண்ணெய் 5 டீஸ்பூன், ஒரு கரண்டி புளிப்புத்தயிர் மேலும் படூரா பொரிப்பதற்கு வேண்டிய எண்ணெய்.
செய் முறை.-------
தயிரில் உப்பு, சர்க்கரையைக் கலந்து வைக்கவும். ரவை,மைதாவையும் கலந்து எண்ணெயச் சேர்த்து அதில்கலவையைச் சேர்த்துச் சற்றுத் தளர்வான கலவையாகப் பிசையவும்., போதாதற்கு தண்ணீர் சேர்த்துப் பிசையவும்.
மாவைச் சிறிது நேரம் நன்றாகப் பிசைதல் அவசியம்.மேலாக சிறிது எண்ணெயைத் தொட்டுத் தடவி 1மணி நேரத்திற்கு அதிகமாகவே மூடி வைத்து ஊறவிடவும். கலவை உப்பிக் கொண்டு ஊறி இருக்கும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைக்கவும்.
மாவை உருட்டிப் பிரித்து பூரிகளாக இடவும்..தளர்வான மாவு ஆதலால், நிதானமாகத் தயாரிக்கவும். காயும் எண்ணெயில் ஒவ்வொன்றாகப் பொரித்து எடுக்கவும். அழகாக உப்பிக் கொண்டு படூரா தயாராகிவிடும். தயாராகச் செய்திருக்கும் சோலே மஸாலாவுடன் சுடச்சுட படூராவையும் பொரித்துக் கொண்டிருக்கும் போதே கொடுக்கவும். ருசி நீங்கள்தான் ரஸித்துச் சொல்ல வேண்டும்!!!!!!!!!!!!!!
சோலே.செனாமஸாலா.
இது செய்வதற்கு காபூலி செனா என்கிற வெள்ளைக் கொண்டைக் கடலை தேவை. இபோது நாம் வேண்டியதைப் பார்ப்போம்.
வெள்ளைக் கடலை---2கப், அரைப்பதற்கு வெங்காயம் பெரியதாக-1அல்லது 2 பூண்டு இதழ்கள்.4 .இஞ்சி ½ அங்குலத் துண்டு ஒன்று தக்காளிப்பழம் பெரியதாகஒன்று.
பொடிகள் :
மிளகாய்ப்பொடி ஒரு டீஸ்பூன், தனியாப்பொடி 2 டீஸ்பூன்., 1/2 ஸ்பூன் மஞ்சள்பொடி பொடிக்க ---மிளகு 1டீஸ்பூன்,லவங்கம் 4 ,ஏலக்காய் 2, பட்டைசிறியதுண்டு
தாளிக்க 4டேபிள்ஸ்பூன் எண்ணெய்.,பிரிஞ்சி இலை 1.
புளி---ஒரு பெரிய நெல்லிக்காயளவு, சிறிது தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ளவும்.
இனி செய்முறை.--
கடலையைத் தண்ணீர் விட்டுக் களைந்து ஐந்து ஆறு மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
ஊறவைத்த கடலையை பிரஷர் குக்கரில் 4கப் தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைக்கவும் இரண்டு மூன்று விஸில் வந்தபிறகு தீயை ஸிம்மில் வைத்து, 5 நிமிஷம் கழித்து இறக்கவும்.
அரைக்கக் கொடுத்த ஸாமான்களை மிக்ஸியிலிட்டு அரைத்துக் கொள்ளவும்.
பொடிக்கக் கொடுத்தவைகளையும் பொடித்துக் கொள்ளவும்.அடுத்து அடி கனமான வாணலியில் எண்ணெயை விட்டு பிரிஞ்சி இலையைத் தாளித்து,வெங்காயக்கலவை அரைத்ததைக் கொட்டி வதக்கவும்.
எண்ணெய் பிரிந்துவரும் அளவிற்கு சுருள வதக்கவும். தீயை மட்டுப்படுத்தி எல்லாப் பொடிகளையும் சேர்க்கவும்
வேண்டிய உப்பைச் சேர்த்து, ஒரு கரண்டி தண்ணீரில் புளியையும் கெட்டியாகக்கரைத்துச் சேர்த்துக் கிளறி நன்றாகப் பத்து நிமிஷம் கொதிக்க விடவும். எந்த அளவிற்குத் தளர வேண்டுமோ அந்த அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து இறக்கவும். சோலே மஸாலா ரெடி.
இதை எல்லாவற்றுடனும் சேர்த்துச் சாப்பிடலாம். வெந்த கடலையில் இரண்டு டீஸ்பூன் எடுத்து அரைத்தும் சேர்க்கலாம். திக்காக வரும். செய்து பாருங்கள்..
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்..
பதிலளிநீக்குவாழ்க தமிழ்..
வாழ்க..
நீக்குஇன்று இப்பதிவை வெளியிட்ட எங்கள் ப்ளாக் ஆசிரியர்களுக்கு மிகவும் நன்றி அன்புடன்
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குஇறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..
வாழ்க நலம்..
வாழ்க தமிழ்..
வாழ்க வாழ்கவே...
நீக்குஸ்ரீராம் உங்களுக்கும் கௌதம் சார் அவர்களுக்கும் விசேஷ நன்றிகள் அன்புடன்
நீக்குவணக்கம் உங்களுக்கு வாழ்க உங்கள் தமிழில் அன்புடன்
நீக்குகுவைத்தில் இருந்த காலத்தில் இதை பல தடவை சாப்பிட்டிருக்கின்றேன்...
பதிலளிநீக்குநண்பர் கைவண்ணத்திலும்/ உணவகங்களிலும்!...
நலமே வாழ்க...
நான் எப்போதாவது...
நீக்குநானும் வந்திருக்கிறேன் இன்று இதையும் சாப்பிட்டுப் பாருங்கள் நலமாகவே இருக்கும் அன்புடன்
நீக்குமிக்க நன்றி நல்ல வார்த்தைகள் சொல்வதற்கும் தினம் ஒரு குரல் அளிப்பதற்கும் மிக்க நன்றி அன்புடன்
நீக்குஅழகான விளக்கவுரை நன்று.
பதிலளிநீக்குபடங்கள் அருமை ஜி
மிகவும் நன்றி உங்கள் பின்னூட்டம் மனதுக்கு சந்தோஷத்தை அளித்தது அன்புடன்
நீக்குஅனைவருக்கும் காரடையான் நோன்பு வாழ்த்துகள். அனைவர் வாழ்விலும் ஆரோக்கியமும், மன அமைதியும் மேலோங்கி மகிழ்ச்சியான மனோநிலை நிலவி மகிழ்வுடன் வாழவும் பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குகாரடையான் நோன்பிற்கான இதயபூர்வமான ஆசீர்வாதம் அன்புடன்
நீக்குநமஸ்காரங்கள் அம்மா.
நீக்குநான்காவது அலை/நான்காவது ஊரடங்கு எனப் பயமுறுத்திக் கொண்டிருக்கும் சூழ்நிலை மாறி அனைவரும் அச்சமின்றி ஆரோக்கியமான வாழ்க்கை வாழவும் பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குஉலகத்திலே யாவரின் பிரார்த்தனையும் இ.துவாகவே இருக்கிறது நல்லதே நடக்கட்டும் அன்புடன்
நீக்குஎங்க பையருக்கு ரொம்பப் பிடிச்சது இந்தச் சோலே பட்டூரா தான். கல்லூரியில் படிக்கையில் விடுதியிலிருந்து வீட்டுக்கு வரும்போதெல்லாம் அன்னிக்கு இதைத் தான் செய்து வைக்கச் சொல்லுவார். இப்போல்லாம் தொந்திரவு செய்யக் கூடாது என எண்ணி என்னிடம் எதையும் செய்து தரும்படி கேட்பதே இல்லை! :( ஓட்டல்களில் வாங்கிக்கறார். நானும் பண்ணிச் சில ஆண்டுகள் ஆகிவிட்டன. :) இதைப் பார்த்ததும் ஒரு நாள் பண்ணவேண்டும் என்னும் ஆசை வந்துவிட்டது. பார்க்கலாம். நம்மவர் என்ன சொல்றார் என! :)))))) போணி ஆகணுமே! :))))
பதிலளிநீக்குமைதா மாவு உபயோகித்து நான் செய்வதில்லை என்று எழுதுவீர்கள் எனப் பார்த்தேன் இது ஒரு ருசியாக அமையும் பண்டம் ஆதலால் இங்கு அடிக்கடி செய்யப்படுகிறது போணிஆவது கட்டம் என்றால் செய்ய மனது வராது பார்ப்போம் இந்த குறிப்பின் அதிர்ஷ்டம் எப்படி என்று விரும்பி சாப்பிடும் உங்கள் பையருக்கு வரும்போது செய்து கொடுங்கள் அல்லது யாராவது வந்தால் அவர்களுக்காக செய்யுங்கள் உங்களுக்கும் ஆகிவிடும் என்னுடையதும் விளம்பரம் ஆகும் என்றோ ஒரு நாள் வந்தாள் வியாபாரம் ஆக வேண்டும் சிபாரிசு கேட்கிறேன் அன்புடன்
நீக்குஆமாம் அம்மா. மைதா மாவு இப்போல்லாம் வாங்குவதே இல்லை தான். ஆனால் நான் பண்ணினது எல்லாம் சுமார் 20/25 வருஷங்களுக்கு முன்னர். அதன் பின்னர் இணையத்துக்கு வந்ததும் ஒரு புதுவிதத்தில் மாவு பிசையும் முறை கிடைத்தது, அதற்கு மைதா மாவு அதிகம் சேர்க்க வேண்டாம். கோதுமை மாவிலேயே பண்ணலாம். இங்கே இந்தப் பதிவில் பாருங்கள். https://sivamgss.blogspot.com/2015/04/p.html இது ராத்திரியே பிசைந்து வைத்ததாகச் சொல்லி இருப்பேன். காலையில் பூரி பண்ணணும்னால் ராத்திரி. மாலை/இரவு ப்ண்ணணும்னால் காலையில் மைதாமாவுக் கலவையைத் தயார் செய்துக்கலாம். பூரிக்கும் மாவு பிசைந்து ரொம்ப ஊற வைக்க வேண்டாம். அந்த மைதாக்கலவையில் கோதுமை மாவைச் சேர்த்துப் பிசைந்து 2 மணி நேரம் ஊற வைத்துவிட்டுப் பின்னர் பூரி பண்ணினால் நன்றாக உப்பிக் கொண்டும்/எண்ணெய் குடிக்காமலும் வருது.
நீக்குமுதல்நாள் கலந்து வைப்பதும் தயிரும் சர்க்கரையும் சேர்த்த மாவு கலவை அதிலும் ஈஸ்ட் தானாகவே உண்டாகிறது நிறைய மாதிரிகள் இருக்கிறது சந்தோஷம் அன்புடன்
நீக்குகாமாட்சி அம்மாவின் கைவண்ணத்தில் இரண்டுமே நன்றாக வந்திருக்கின்றன.
பதிலளிநீக்குஜெய் போலோ ஜெய் செய்தும் யோசித்தும் பார்க்கலாம்
நீக்குசாப்பிட்டும் பார்க்கலாம் அன்புடன்
நீக்குவரும் வாரத்தில் ஒரு நாள் பண்ணிட்டுப் படங்கள் எடுத்துப் போடணும். பார்க்கலாம் அம்மா/
நீக்குநான் அவ்வப்போது இதை செய்வதுண்டு.. சென்னாவை சாப்பிடும்போது அதன் அருகில் வெங்காயத்தை பொடி நறுக்கி அதனுடன் பச்சை மிளாகயும் மிக மிக சிறியதாக நறுக்கி அத்ன் மீது சிறிது சால்ட் மற்றும் எலுமிச்சம் பழச்சாற்றை ஊற்றி அதனை சென்னாவுடன் சேர்த்து சாப்பிட்டால் இன்னும் அறுமையாக இருக்கும்
பதிலளிநீக்குஆமாம் ஏங்கும் என் பிள்ளை வெங்காயத்தை சிறியதாக நறுக்கி கொடுக்கச்சொல்லி சேர்த்து சாப்பிடுவான் ருசியைக் கூட்டும் விதங்கள் மிகவும் நன்றி
நீக்குஎங்கும் என்பது ஏங்கும் என்று வந்திருக்கிறது அன்புடன்
நீக்குகொண்டைக்கடலை மட்டும் போட்டுச் சாட் செய்யும்போது இம்மாதிரி எலுமிச்சம்பழத்தோடு நறுக்கிய வெங்காயம், உப்பு, சாட் மசாலாப் பொடி சேர்ப்போம். நறுக்கிய பச்சைக் கொத்துமல்லியும் போட்டுச் சாப்பிடுவோம்.
நீக்குசோலே பட்டூரா!படங்களும் விளக்கமான செய்முறை குறிப்பும் மிக அருமை!
பதிலளிநீக்குஅருமை என்று பின்னூட்டம் கொடுத்த உங்களுக்கு மிக்க நன்றி எப்பொழுதாவது எழுதுகிறோம் நன்றாக இருந்தாள் இரட்டிப்பு சந்தோஷம் அன்புடன்
நீக்குசோலே படூரா பார்க்கவே நன்றாக இருக்கிறது. சொன்னா செய்யும் பொழுது மசாலா அணைக்காமல் ரெடிமேட் மசாலா பொடியை சேர்த்து விடுவேன்.
பதிலளிநீக்குஅவசரமாக செய்தால் ரெடிமேடு பொடிகள் புதியதாக செய்து போட்டால் மணமும் ருசியும் சற்று அதிகம் விருவிருப்பு இருக்கும் அது செய்வது சமயத்தை பொருத்தது மிக்க நன்றி அன்புடன்
நீக்குவாவ் ...சுவையான ரெசிப்பி ..
பதிலளிநீக்குரசித்தீர்களா மிக்க நன்றி அன்புடன்
நீக்குஎனக்கு மிக மிகப் பிடித்த உணவு
பதிலளிநீக்குகோவில் தரிசன பிரயாணத்தில் இந்த மாதிரி சாப்பிட முடிந்திருக்காது ஏதோ பிரயாணங்கள் தரிசனங்கள் முடிந்து ஊர் வந்த பிறகு நிதானமாகச் செய்து ருசியுங்கள் தீண்ட உங்கள் பதில் எழுத முடியாமைக்கு பரவாயில்லை என்னுடைய நமஸ்காரங்கள் கடவுளுக்கு பிடித்த உணவு அதுவே ஆயிரம் கதை சொல்லும் அன்புடன் நன்றி
நீக்குநீண்ட
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குநன்றி அன்புடன்
நீக்குநிறைய எழுதமுடியாமல் வைரமுடி சேவையில்
பதிலளிநீக்குஅதனால் என்ன வைரமுடி சேவைகளில் நாங்கள் யாவரும் பங்கு கொள்கிறோம் வந்து எழுதினால் போதும் நன்றி அன்புடன்
நீக்குவைரமுடி சேவையை மட்டும் நினைங்க நெல்லை! :)))))
நீக்குஇரவு 9 மணிக்கு ஆரம்பித்தது. நள்ளிரவில் வெகு அருகில் நெருக்கமான தரிசனம். அதிகாலை 1 மணிக்கு மூலவர் செல்வநாராயணன் தரிசனம். இன்னும் இரண்டு மூன்று மணி நேரத்தில் ராஜமுடி தரிசனம் கிடைக்கலாம்
நீக்கு_/\_ எங்களுக்காகவும் சேர்த்துப் பிரார்த்திக் கொண்டிருப்பீர்கள். நாராயணா என்னாத நாவென்ன நாவே!
நீக்குசோலே படூராவின் படங்களும் செய்முறை விளக்கமும் மிக அருமை அம்மா.
பதிலளிநீக்குமுன்பு எல்லாம் பூரி என்றால் மைதாவில் தான் செய்வார்கள் அம்மா. அப்போது நன்றாக உப்பி இருக்க ரவையை சேர்த்து பிசைவது உண்டு. அப்போது எல்லாம் ரவை பொடியாக இருக்காது அதை பொடி செய்து மைதாமாவுடன் கலப்பார்கள் அம்மா.
செய்முறை அருமை.செனாமஸாலாவுக்கு
புளி சேர்த்து செய்தது இல்லை அடுத்த முறை செய்யும் போது புளி சேர்க்கிறேன்.
எனக்குத் தெரிந்த சட்டா ஃபேமிலி வீட்டில் கடலையை வேக விடும் போது சிறிது புளியை ஒரு துணி மூட்டையில் கட்டி அதனுடன் போட்டுவிடுவார்கள் அதே மாதிரி அரை ஸ்பூன் தேயிலையும் ஒரு வெள்ளைத் துணியில் கெட்டியாக மூட்டைகட்டி வேகும் கடலையுடன் போட்டுவிடுவார்கள் பிறகு அந்த முடிச்சை வெளியில் எடுத்து போட்டுவிடுவார்கள் அதன் சாரம் இறங்கி கலரும் ருசியும் லேசாக அதனுடன் கலக்கும் இப்படியும் ஒரு மாதிரி உங்கள் நீண்ட பின்னூட்டத்திற்கும் அன்பிற்கும் மிகவும் நன்றி நான் அடிக்கடி இங்கு வருவதில்லை ஆதலால் எனக்கும் பின்னூட்டங்கள் அதிகம் வராது நீங்கள் எழுதியது மிக்க சந்தோஷம் நன்றி அன்புடன்
நீக்குஎங்க வீட்டில் அம்மா மைதாமாவு வாங்கினால் போளி செய்யவென்று மட்டும் வாங்குவார். அதிகம் பழக்கம் இல்லை. ஆனால் நான் கல்யாணம் ஆகிக் குடித்தனத்தின் போது வாங்குவேன். பின்னாட்களில் நிறுத்தி ஆச்சு. ஆனாலும் பூரி எப்போப் பண்ணினாலும் கோதுமை மாவு தான். அதிலும் சிலர் இப்போதெல்லாம் ரவை சேர்க்கிறார்கள். நான் உப்புச் சேர்த்துப் பிசையும்போது ஒரு தேக்கரண்டி வெள்ளைச் சர்க்கரை சேர்ப்பேன். பூரி உப்பலாகவும் மேலே சிவந்து மொறுமொறுவெனவும் வரும்.
நீக்குபுளி சேர்த்தும் செய்யலாம். நாங்கல்லாம் வடக்கே இருந்தப்போ இந்தப் புளிச்சட்னி தயாரித்து ஊறுகாய் போலவே மாதக்கணக்காகப் பயன்பாட்டில் வைச்சிருப்போம். எப்போவானும் குழந்தைகள் பேல்பூரி, பானிபூரி கேட்டால் அதில் விடவென்று எப்போதும் தயார் நிலையில் இருக்கும் பச்சைச் சட்னி மட்டும் அவ்வப்போது பண்ணிப்போம். ஆகவே சனா படூராவுக்குச் சனா பண்ணும்போது இறக்கியதும் பச்சைக் கொத்துமல்லி, பச்சை வெங்காயம் பொடியாக நறுக்கிச் சேர்த்து அதன் மேல் புளிச் சட்னியும் பச்சைச் சட்னியும் ஊற்றிக் கொடுப்போம். அப்படியேவும் சாப்பிடலாம் படுராவுடனும் சாப்பிடலாம். இப்போவும் பேல் பூரிக்கெனப் பண்ணின புளிச் சட்னி இருக்கு. அவசரமாகப் புளிச்சட்னி பண்ணணும்னால் பேரிச்சம்பழம்+ ஒரு சுண்டைக்காய்ப் புளி+மிளகாத்தூள் தேவைக்கு+உப்பு தேவைக்கு+வெல்லம் பொடித்தது சின்னக் கிண்ணம். எல்லாவற்றையும் போட்டு நன்கு அரைத்து வறுத்த ஜீரகப் பொடியைக் கலந்து வைத்தால் புளிச்சட்னி தயார். எல்லா சாமான்களும் இருந்தால் பத்தே நிமிஷத்தில் பண்ணிடலாம்.
நீக்குகாமாட்சி அம்மா சொல்றாப்போல் பஞ்சாபியர் சனாவை வேக வைக்கையிலேயே தேநீர்த்தூள்/புளி உருண்டை எனப் போடுவார்கள். பார்த்திருக்கேன்/சாப்பிட்டும் இருக்கேன். இன்னும் பைங்கன் பர்த்தா பண்ணினால் கத்திரிக்காயை நீள வாட்டில் ஏழெட்டு இடங்களில் கீறிவிட்டுப் பச்சை மிளகாயைக் கீறி உப்புத் தடவி அதில் உள்ளே வைப்பார்கள். அந்தக் கத்திரிக்காயைத் தான் அப்படியே சுட்டு பர்த்தா பண்ணுவார்கள்.
நீக்குஇங்கு குறிப்புகள் எழுதினவர்களுடயதும்,மற்றும் விசேஷமான மற்றவர்கள் குறிப்புகளும் போனஸாகக் கிடைக்கும். உங்கள் குறிப்புகளும் அப்படியே. வரவேற்கிறேன்.மற்றவர்களும் பயனடைவார்கள்.மிக்கஸந்தோஷம். அன்புடன்
நீக்குபடங்களும் விளக்கமும் மிக மிக அருமை காமாட்சிமா. அதுவும் பொடிகள் ஃப்ரெஷ்ஷாக பொடி செய்து போடும் போது அதன் சுவை நன்றாக இருக்கும்.
பதிலளிநீக்குஇதே முறைதான்.
சாப்பிடும் போது சன்னாவுடன் பச்சை வெங்காயமும் கால் மூடி எலுமிச்சம் பழமும் பிழிந்து சாப்பிடுவதுண்டு.
மிகவும் பிடிக்கும். வீட்டிலும் எல்லோருக்கும் பிடிக்கும். இரு வாரங்களுக்கு முன் செய்தேன்.
கீதா
இங்கு என் மருமகள்கள் பல விதங்களில் செய்வார்கள் நீயும் செய்வதற்கு கேட்பானேன் எதையும் அழகாக செய்யும் ருசியாகவும் இருக்கும் பல விதங்களை செய்து பார்த்து எழுதுபவர் நீங்கள் பின்னூட்டத்திற்கு மிகவும் சந்தோஷம் விவரங்கள் அறிந்ததே நன்றி அன்புடன்
நீக்குபார்த்தவுடன் சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது
பதிலளிநீக்குபிரமாதம் ஒன்றும் இல்லை செய்து சாப்பிட்டுப் பார் அன்புடன்
பதிலளிநீக்குசோலே படூரா நல்ல விளக்கத்துடன் அருமை. நாங்கள் மைதா உபயோகிப்பதால் செய்வோம்.
பதிலளிநீக்குஎங்கள் நாட்டில் மைதாபயன்படுத்துவது கூட ரொட்டி, இடியப்பம்,பிட்டு, பூரி,சப்பாத்தி, பரோட்டா,கொத்து ரொட்டி, கறி ரொட்டி ,தேங்காய் பால் பான் கேக்,என செய்வோம்.
மிக்க நன்றி அன்புடன்
நீக்குசோலே படூரா செய்முறையும், சன்னா செய்முறையும் மிக மிக அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள்
பதிலளிநீக்குஅன்பு காமாட்சிமா.
மைதாமாவு என்று இங்கே கிடைப்பதில்லை. ஆல் பர்ப்பஸ் மாவுதான்.
வண்ண வண்ணமாகச் செய்து கொடுக்கும் பாட்டி இருக்கும் வீடு சந்தோஷமயமானது.
எல்லா செய்முறைகளையும் ரசித்தேன் மா.
நன்றி.
ரசித்துப் படித்ததற்கு மிகவும் நன்றி அன்புடன்
நீக்குசோலே பட்டூரே - வடக்கில் பிரபலம் தான். பலருடைய காலை உணவு!
பதிலளிநீக்குகுறிப்புகள் சிறப்பாக இருக்கிறது. வீட்டில் தயாரிப்பது இல்லை என்றாலும் உணவகங்களில் பல முறை உண்டதுண்டு.