செவ்வாய், 15 மார்ச், 2022

தாச்சித் தாத்தா ( 2 / 3 ) :: K G கௌதமன்

 

முந்தைய பகுதி : பகுதி 1 

சில நாட்கள் கழித்து அக்கரையிலிருந்து புதிதாக ஒரு பையன் இவர்கள் விளையாடும் இடத்திற்கு வந்தான். முதலில் அவன் ஆற்று மணலில் தனியாக கோபுரம் கட்டி, அதன் மீது இலைகள் பூ என்று வைத்து அதன் அழகை அவனே பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான்.

அப்பொழுது மற்றவர்களுடன் கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டிருந்த தென்கரை சோமு வேகமாக ஓடி வந்து புதியவன் கட்டியிருந்த கோபுரத்தை கவனிக்காமல் அதன் மீது தடுக்கி விழுந்ததில் அந்த மண் கோபுரம் உருக்குலைந்து போனது.

பயந்து போன சோமு, புதிய பையனிடம் சாரி - கவனிக்காம வந்து கோபுரத்தைக் கலைச்சிட்டேன் - மன்னிச்சுக்க என்றான்.

புதிய பையன், “ அதனால் என்ன பரவாயில்லை. என் பெயர் குமார். உன் பெயர் என்ன? என்னையும் உங்களோடு விளையாட சேர்த்துக்குங்க என்றான் சுற்றிலும் வந்து நின்ற சிறுவர்களைப் பார்த்து.

சிறுவர் பட்டாளத்துக்கு தலைமைப் பொறுப்பில் இருந்த ரூல்ஸ் ராகவன், ஆட்டத்தின் சட்ட திட்டங்களை எடுத்துக் கூறி - “ புதுசா சேருபவர்கள்தான் முதலில் கண் பொத்திக்கொள்ளவேண்டும்   என்றான்.

குமார் இந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டான்.

அப்படியானால் அந்தத் தாத்தா பக்கத்துல போய் உட்கார்ந்து கண்ணு பொத்திக்கோ

இல்லை - நான் இந்த மாமரத்திலேயே கண்ணு பொத்திக்கிறேன்

மரத்துல எறும்பு நிறைய இருக்கு - மூஞ்சில கடிச்சுடும். “

பரவாயில்லை - எனக்கு எறும்புக்கெல்லாம் பயம் கிடையாது

குமார் கண் பொத்திக்கொள்ள வேண்டிய சந்தர்ப்பங்களில் மாமரம்தான் தாச்சி என்று ரூல் மாற்றப்பட்டது. எறும்புக்கு பயப்படும் சிறுமிகள் மட்டும் தாத்தாவை தாச்சியாகக் கொண்டு விளையாட்டைத் தொடர்ந்தார்கள். குமார் கண் பொத்தி விளையாடும் சமயங்களில் பையன்களை மட்டும்தான் அவுட் செய்வதற்கு முனைவான். சிறுமிகள் மற்றும் ஓடமுடியாத சிறு பையன்கள் யாரையும் அவன் துரத்தமாட்டான்.

தாச்சித் தாத்தா பக்கம் அவன் திரும்பிக்கூட பார்க்கமாட்டான். அவர் திண்பதற்காகக் கொடுக்கின்றவை எதையும் அவன் வாங்கவும் மாட்டான். மற்ற சிறுவர்களுக்கு குமாரின் இந்த வைராக்கியம் ஆச்சரியமாக இருந்தது.

ஒருநாள் ரூல்ஸ் ராகவன் குமாரிடம் இதைப்பற்றி கேட்டான். குமார் அதற்கு“ இந்தத் தாத்தா இதற்கு முன்பு மாப்ளசாமி கோவில் வாசலில்தான் எப்போதும் உட்கார்ந்திருப்பார். அங்கு விளையாடிக் கொண்டிருக்கும் பசங்களுக்கு இந்த மாதிரி ஏதாவது திண்பதற்குக் கொடுப்பார். ஒருநாள் சில பேர் வந்து, இவரிடம் ஏன் கண்ட கண்ட பொருட்களையும் சாப்பிடக் கொடுத்து எங்க புள்ளைங்கள கெடுக்கறீங்க?’ என்று சத்தம் போட்டு போனாங்க. அன்றிலிருந்து இவர் அந்தக் கோவில்பக்கம் வரவில்லை. இப்போ இங்கே வந்து உட்கார ஆரம்பித்துவிட்டார். “

சரி அதற்கும் நீ அவரிடம் எதுவும் வாங்கி சாப்பிடாததற்கும் என்ன சம்பந்தம்?”

அவரு மூக்குப்பொடி போட்டுக்குவார். கை எல்லாம் மூக்குப்பொடி - அந்தக் கையாலேயே அவர் எல்லோருக்கும் மிட்டாய் கொடுக்கிறார். அதனால நான் அவர் கொடுப்பது எதையும் வாங்கித் திங்கமாட்டேன்.”

ஆனால், மற்ற சிறுவர்களுக்கு ‘மூக்குப்பொடி கை’ என்பது ஒன்றும் பெரிய குற்றமாகத் தோன்றவில்லை. “ என்னுடைய தாத்தா கூட மூக்குப் பொடி போட்டுக்குவார் – ஆனால், அவர் தருகின்ற எல்லாத்தையும் நானும் என் தம்பி முரளியும் வாங்கி சாப்பிடுவோம்” என்றாள் அகிலா.

அவர்கள் தொடர்ந்து தாச்சித் தாத்தா தருகின்ற மிட்டாய்களை வாங்கி சுவைத்து மகிழ்ச்சியாக விளையாடிக்கொண்டிருந்தனர்.

மாலை மயங்கி இருள் கவியத் தொடங்கும்போது ஒவ்வொருவராக நான் வீட்டுக்குப் போறேன் - அம்மா தேடுவாங்க என்று சொல்லி நாளைக்குப் பார்ப்போம் - அதுவரைக்கும் இந்த அடியை மறக்காதே - “ என்று சொல்லி மற்றவர்களை செல்லமாக ஓர் அடி அடித்துவிட்டு ஓட்டம் பிடிப்பார்கள். எல்லோரும் புறப்பட்டுச் சென்றபின் தாச்சித் தாத்தாவும் அவர் பின்னால் சற்று தூரத்தில் குமாரும் செல்வார்கள்.

கோடை விடுமுறை முடிந்தது. பள்ளிக்கூடங்கள் திறந்துவிட்டார்கள். சில வாரங்களில் ஆற்றில் தண்ணீர் வரத் தொடங்கி, தண்ணீர் மட்டம் அதிகரித்தது.

ஆற்று மணலில் விளையாடிய சிறுவர்கள் அதற்குப்பின் ஆற்றுப்பக்கம் வராமல், தங்கள் தெருவில் மட்டும் மாலை நேரங்களில் சிறிது விளையாடிவிட்டு, ஹோம் வொர்க் / டியூஷன் / வீடு என்று சென்றுவிடுவார்கள்.

இப்படி ஓர் ஆண்டு கடந்துவிட்டது. 

(தொடரும்)

பின் குறிப்பு : 

சென்ற வாரப் பதிவின் பின்னூட்டங்களில் காத்தாடிக்காய் பற்றிக் கேள்விப்பட்டதில்லை என்று சொன்னவர்களுக்காக இந்தக் காணொளி. இதைப் பார்த்து விவரம் தெரிந்துகொள்ளலாம். 


= = = = 

59 கருத்துகள்:

  1. வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்
    குறிஎதிர்ப்பை நீரது உடைத்து..

    வாழ்க குறள் நெறி..

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

    வாழ்க நலம்..
    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
  3. @ கௌதமன்..

    // வாக்காளர்களுக்கு ஈவது?.. //

    அதான் ரெண்டாயிரம் வருசத்துக்கு முன்னாலயே சொல்லிட்டாரே!..

    குறியெதிர்ப்பு..

    ' C., C., C..'

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மு.வரதராசனார்
      வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது, மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயன் எதிர்பார்த்து கொடுக்கும் தன்மை உடையது.

      நீக்கு
  4. ஒரு காலத்துல -

    ககக., அதாவது DDD..

    இப்பவும் ககக - தான்..
    அதாவது - CCC.,

    பதிலளிநீக்கு
  5. அனைவரும் நலமுடன் வாழ இறைவன் அருள வேண்டும். இனிய காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  6. கதை விளையாடும் பிள்ளைகளோடு தொடர்கிறது.
    என்ன நடக்கப் போகிறதென்று பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  7. "அதுவரைக்கும் இந்த அடியை மறக்காதே...."

    அட, ஆமாம்...   அப்போக்கு அப்புறம் இப்போதான் எனக்கு நினைவுக்கு வரும் ஒரு விஷயம்!

    பதிலளிநீக்கு
  8. காத்தாடிக்காய் மரக் காணொளி அருமை.

    பதிலளிநீக்கு
  9. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள். பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் அமைதி பெருகட்டும். ஆரோக்கியம் மேலோங்கட்டும்.

    பதிலளிநீக்கு
  10. காத்தாடிக்காய் பற்றிய விரிவான காணொளிக்கு நன்றி. எப்படி இருந்தாலும் நான் இப்போத்தான் போன வாரத்தில் இருந்து கேள்விப் படறேன். நன்றி மறுபடி.

    பதிலளிநீக்கு
  11. புதுசா வந்திருக்கும் பையருக்கும் தாச்சித்தாத்தாவுக்கும் உள்ள தொடர்பு தான் கதையில் முடிச்சோ? தொடர்ந்து படிக்கக் காத்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
  12. புதிய பையனுக்கும், தாத்தாவுக்கும் ஏதோ வாய்க்கால் தகராறு இருக்கு பார்க்கலாம்...

    காத்தாடிக்காய் இன்று பார்க்கிறேன் அற்புதமான காணொளி நாம்தான் இதனை உயரத்தில் இருந்து போடணுமோ ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மரத்திலிருந்து விழும்போதே சுழன்றுக்கொண்டு கீழே விழும். அதற்கு வாகாக, மரமும் நல்ல உயரமாக வளரும்.

      நீக்கு
    2. இந்த மரங்கள் எந்த வகையான மண்ணில் வளரும்? அதாவது நான் இப்போக் கும்பகோணம் அருகே உள்ள எங்க கிராமப்பகுதிகளில் கூடப்பார்க்க முடியுமா? வீடியோவில் வறண்ட பூமியாகத் தெரிகிறதே!

      நீக்கு
    3. ஆற்றோரங்களில் பார்த்திருக்கிறேன்.

      நீக்கு
    4. ம்ம்ம்ம்ம், நான் தான் கேள்விப்படலைனா நம்ம ரங்க்ஸும் கேட்டதில்லை என்கிறாரே!!!!!!!!!!!!!!!

      நீக்கு
  13. கதை சுவாரஸ்யமாக செல்கிறது.
    காணொளி அருமை.
    "இந்த அடியை மறக்காதே" மட்டுமல்ல "இந்த கிள்ளை மறக்காதே" என்றும் நீண்ட விடுமுறைகளுக்கு முன்பு அழுந்த கிள்ளி விடுவார்கள்.

    பதிலளிநீக்கு
  14. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  15. கதை நன்றாக இருக்கிறது. புதிய பையனின் வரவு , அவன் தாத்தாவை பற்றி சொல்வது எல்லாம் அவனுக்கும், தாத்தாவிற்கும் உறவு இருக்குமோ என்று தோன்றுகிறது.
    படங்கள் நன்றாக பொருத்தமாக வரைந்து இருக்கிறார் சார்.

    ஒரு ஆண்டுக்கு பின் கதை எப்படி போக போகிறது என்று அறிய ஆவல். தாத்தா குழந்தைகளை பார்க்காமல் எப்படி இருந்தாரோ!

    பதிலளிநீக்கு
  16. காத்தாடி மரம் காணொளி அருமை.
    அது பறந்து வருவது அழகு.

    பதிலளிநீக்கு
  17. அதுவரைக்கும் இந்த அடியை மறக்காதே.//

    அதே அதே அதைப் போல இந்த நுள்ளை மறக்காதே ன்னும் நாங்க சொல்வதுண்டு. குத்தை மறக்காதே...இப்படி ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொன்று. பள்ளியில் என்றால் நோட்டில் பெயர் எல்லாம் கூட எழுதி அல்லது படம் வரைந்து மறக்காதே என்று பெரிய விடுமுறைக்கு முன் சொல்வது.

    பல நினைவுகள் கிளறிய கதை கௌ அண்ணா. யதார்த்தமாகச் செல்கிறது. ரசித்து வாசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  18. குமாருக்கும் தாத்தாவிற்கும் என்ன பிணைப்பு ஏதோ மனம் சொல்கிறது. அடுத்த வாரம் தெரிந்துவிடும் என்று நினைக்கிறேன். பார்ப்போம் என் யூகம் சரியா இல்லையா என்று.

    அடுத்த வாரம் வாசித்துவிட்டு, யூகம் பொருந்திப் போச்சா இல்லையா என்று உண்மையாத்தான் சொல்லுவேனாக்கும்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  19. காத்தாடிக் காய் காணொளி சூப்பர். நான் நேரடியாகவே பாத்திருக்கிறேன் தான்...

    கீதா

    பதிலளிநீக்கு
  20. அனைவருக்கும் முகம் மலர இனிய காலை வணக்கங்கள்! குழந்தைகளின் விளையாட்டு, நாம் சிறு வயதில் விளையாடியதை நினைவு படுத்துகிறது! அந்த சிறுவன் தாத்தாவின் பேரனோ? என நினைக்கத் தோன்றுகிறது. காற்றாடி மரமும் கதையில் ஒரு பாத்திரமாக இடம் பெறுகிறது. மரத்திற்கு பதிலாக, தாத்தாவை தாச்சி என கருதுவதும் ஏதோ ஒரு அர்த்தம் பொதிந்ததாகவே தோன்றுகிறது. அடுத்த வார தொடர்ச்சிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். நல்லதொரு கதைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  21. இன்று அனைவரும் சிறுவயது காலத்துக்கு சென்று வந்திருப்பார்கள் இனிய கனாக்காலமாக செல்கிறது கதை ஒருவருட மாற்றம் காண .....காத்திருக்கிறோம்....

    காத்தாடிக்காய் பாடல்பெற்ற சிவ தலமான மன்னாரிலுள்ள திருக்கேதீச்சரத்தில் இருந்தது இப்பொழுது சில பகுதிகள் மக்கள் செல்லமுடியாமல் தடுக்கப்பட்டுள்ளது. சிறுவயதில் நாங்கள் காத்தாடிக் காய்கள் வீட்டில் வைத்து விளையாடுவோம்.

    பதிலளிநீக்கு
  22. கதை மிக நன்று..

    ஆறும் மணலும் மரமும் நிழலும்
    மறக்கக் கூடியவைகளா?..

    பதிலளிநீக்கு
  23. வயதான வரும் தெ புதிய பையனும் மனதில் நிற்கிறார்கள் ஏதோ ஒரு பந்தம் இருக்கிறது சிறிய வயது நினைவுகள் கதையைப் படிக்கும்போது மனதில் ஓடி வருகிறது கதை மனதிலே நிற்கிறது அடுத்த வாரம் எப்போது முடிவு என்ன அருமையாக இருக்கிறது அன்புடன்

    பதிலளிநீக்கு
  24. தாச்சி தாத்தா பின்னாடியே சென்ற சிறுவன் - என்ன தொடர்பு இருக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். அடுத்த பகுதியில் தெரிந்து விடுமே - காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!