பாரதியார் பாடல் ஒன்று. ஒரே பாடல் இரு டியூன்களில்!
முதலில் சூலமங்கலம் ராஜலக்ஷ்மி குரலில்.
சூலமங்கலம் சகோதரிகள் என்று புகழ் பெற்றவர்கள் திருமதி ராஜலக்ஷ்மியும், ஜெயலக்ஷ்மியும். பக்தி பாடல்களுக்கு பெயர் போனவர்கள். குறிப்பாக முருகன் பாடல்கள். இவர்கள் வழங்கிய கந்த சஷ்டி கவசமும் ஸ்கந்தகுரு கவசமும் ரொம்ப பிரபலம்.
கந்தர் சஷ்டி கவசம் முதல் அப்பகுதி (துதிப்போர்க்கு வல்வினைபோம்) நேரிசை வெண்பா வகையிலும், ஐந்தாவது ஆறாவது வரிகள் (அமரரிடம் தீர அமரம் புரிந்த) குறள் வெண்பா வகையிலும், கவசம் நிலைமண்டில ஆசிரியப்பா வகையிலும் அமைக்கப்பட்டதாம். இதை இயற்றியவர் 1820 ல் பிறந்த தேவராய ஸ்வாமிகள். கவசத்தில் இவர் பெயரும் இடம்பெறும்.
சகோதரிகள் என்கிற வகையில் இவர்கள்தான் முதல் என்கிறது விக்கி. பின்னர்தான் ராதா ஜெயலட்சுமி, பாம்பே சிஸ்டர்ஸ், ப்ரியா சிஸ்டர்ஸ், மாம்பலம் ஸிஸ்டர்ஸ் என்றெல்லாம் பிரபலம் ஆனார்கள்.
திரைப்படங்களில் சேர்ந்தும் தனித்தனியாகவும் நிறைய பாடல்கள் பாடி இருக்கிறார்கள். 1948 லேயே மூத்தவர் ஜெயலட்சுமி டி ஆர் மகாலிங்கத்துடனும், இளையவர் ராஜலக்ஷ்மி தனியாகவும் பாடி இருக்கிறார்கள்.
இளையவரான ராஜலக்ஷ்மி தனது 51 வது வயதில் 1992 ல் மறைந்து விட, அதனால் மனம் ஒடிந்து போன ஜெயலட்சுமி 2017 ல் 80 வயதில் காலமானார்.
சூலமங்கலம் ராஜலக்ஷ்மி பாடிய பாடல்கள் சில எனக்குத் தெரியும். ஜெயலக்ஷ்மி குரலில் பாடல்கள் எதுவும் நினைவில்லை. லிஸ்ட் பார்த்தால் தெரியலாம்!
இந்தப் பாடல் இடம்பெற்ற திரைப்படம் திருமால் பெருமை. ஏ பி நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம். கே வி மகாதேவன் இசை. சிவாஜி கணேசன் பத்மினி முதலியோர் நடித்த திரைப்படம்.
காக்கைச் சிறகினிலே நந்தலாலா-
நின்றன் கரியநிறந் தோன்றுதையே நந்தலாலா
பார்க்கு மரங்களெல்லாம் நந்தலாலா -
நின்றன் பச்சைநிறந் தோன்றுதையே நந்தலாலா
கேட்கு மொலியிலெல்லாம் நந்தலாலா -
நின்றன் கீத மிசைக்குதடா நந்தலாலா
தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா-
நின்னைத் தீண்டுமின்பம்ந் தோன்றுதடா நந்தலாலா.
இரண்டாவது வெர்ஷன் எல் வைத்தியநாதன் இசையில் கே ஜே யேசுதாஸ் பாடியது. ஏழாவது மனிதன் படத்துக்காக. கே ஹரிஹரன் இயக்கத்தில் ரகுவரன் அறிமுகமான படம். படத்தின் கதாநாயகன் அவர்.
பாரதியாரின் நூற்றாண்டை ஒட்டி பாளை என் ஷண்முகம் தயாரித்த திரைப்படத்துக்கு எல் வைத்தியநாதன் ஏற்கெனவே வைத்திருந்த ஆல்பத்திலிருந்து பாடல்களை எடுத்துக் கொண்டார்கள் என்று நினைக்கிறேன்.
பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றை எடுக்கலாம் என்று ஆரம்பித்தார்களாம். ஆனால் அப்படி எடுத்தால் சில உண்மைகளை சொல்ல வேண்டி இருக்கும், அப்படி சொன்னால், அதற்கு எதிர்ப்பு வரும் என்று அதை கைவிட்டு, கிரிமினல் லாயரான பாளை ஷண்முகம் தான் சம்பந்தப்பட்ட வழக்கு ஒன்றையே கதையாக எடுத்தார்களாம்.
இரண்டு பாடல்களுக்கும் வரிகள் ஒன்றே. இரண்டும் இரண்டு டியூன். இரண்டில் எது பிடித்திருக்கிறது என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்?
செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை..
பதிலளிநீக்குகுறள் நெறி வாழ்க..
வாழ்க...
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குஇறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..
வாழ்க நலம்..
வாழ்க தமிழ்..
வாழ்க வாழ்கவே..
நீக்குவாங்க துரை செல்வராஜூ ஸார்... வணக்கம்.
// மாம்பழம் சிஸ்டர்ஸ்..//
பதிலளிநீக்கு!?..
பலம் பழமாகிப்போகிறது!
நீக்குமாம்பலம் சிஸ்டர்ஸ் என்று திருத்தி விடுங்கள் என்று சொல்லியிருக்கலாம்.
நீக்கு// இஐற்றையவர்..//
பதிலளிநீக்குய காணாமல்போய்விட்டது!
நீக்குமுதல் பாடல் -
பதிலளிநீக்குஆனந்தப் பூந்தோப்பில் ஆனை
உலவுவதை போல்!...
இரண்டாவது -
அதே ஆனையை பானைக்குள் அடைத்ததைப் போல!..
அவர் பாடினார் என்பதற்காக எல்லாம் ரசிப்புக்குள்ளாகி விடுமா?..
என்னைப்பொறுத்த வரை அதையும் ரசிக்கிறேன். நன்றாகவே இருக்கிறது. உங்கள் உவமையை ரசித்தேன்.
நீக்குதெய்வத்திரு
பதிலளிநீக்குசூலமங்கலம் சகோதரிகள் பாடிய பிறகே கந்த சஷ்டி கவசம் என்று ஒரு பாராயணம் இருப்பது இறையன்பர்கள் 99℅ பேருக்குத் தெரியும்..
ஈற்றடிகளைக் கேட்கும் போதெல்லாம் எழுந்து நின்று விடுவேன்...
//இறையன்பர்கள் 99℅ பேருக்குத் தெரியும்..//
நீக்குஉண்மை.
TMS, சீர்காழியார் கூட கந்த சஷ்டி கவசம் தனைப் பாடி வைத்தார்கள்..
பதிலளிநீக்குசூலமங்கலம் சகோதரிகளது பதிவுக்கு முன் அவை எடுபடாமல் போயின..
அவர்கள் மட்டுமா, மகாநதி ஷோபனா உட்பல பலர் பாடி இருக்கிறார்கள்.
நீக்குவியாபாரிகள் கந்தசஷ்டி பாடலைத் திருடி கேசட் போட்டு சகோதரிகளுக்கு மன உளைச்சலையும் பொருள் நட்டத்தையும் ஏற்படுத்தினரா
நீக்குஸ்கந்த குரு கவசத்தில் என் மனம் ஏனோ ஒன்றுவதில்லை..
பதிலளிநீக்குஅப்பப்பா.. முருகனப்பா!..
சிறுவயதில் எங்கள் வீட்டில் இரண்டும் ஒலிக்கும். ஒரு கேஸ்ட்டின் முன்புறம் கந்தர் சஷ்டி கவசம், பின்புறம் கலியுகத்தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே மூஷிக வாகனனே மூலப்பெருமானே என்று ஸ்கந்தகுரு கவசம்..
நீக்குசஷ்டி கவசங்கள் ஒவ்வொரு படை வீட்டிற்கும் ஒவ்வொன்று உள்ளது. இந்தப் பிரபலமான சஷ்டி கவசம், "துதிப்போர்க்கு வல்வினை போம்!" என ஆரம்பிப்பது இரண்டாவது கவசம், திருச்செந்தூர்க் கவசம். முதல் கவசம் திருப்பரங்குன்றம். இரண்டாவது தான் நாம் சொல்லிக் கொண்டிருக்கும் திருச்செந்தூர்க் கவசம். மூன்றாவது திருவாவினன்குடி என்னும் பழனிமலை கவசம், நான்காவது சுவாமி மலை என்னும் திருவேரகம்/(திருவேடகம் இல்லை)சிவகுருநாதன் மேல், ஐந்தாவது குன்றுதோறாடும் குமரன் (திருத்தணிகை), ஆறாவது பழமுதிர்ச்சோலைப் பரமகுரு
நீக்குஷடாக்ஷர மந்திரத்தின் ஆறு எழுத்துக்களையும் குறிக்கும் வண்ணம் "சரவணபவ" என்னும் ஆறெழுத்து மந்திரத்தின் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு ஆதாரங்களைச் சுட்டிக்காட்டும். திருப்பரங்குன்றம் மூலாதாரம், திருச்செந்தூர், ஸ்வாதிஷ்டானம், பழனி என்னும் திருவாவினன்குடி மணிபூரகம், திருவேரகம் என்னும் ஸ்வாமி மலை அநாகதம், திருத்தணிகை என்னும் குன்றுதோறாடும் குமரன் கோயில் விசுத்தி, பழமுதிர்சோலை, ஆக்ஞா சக்கரம். கொஞ்சம் யோசிச்சால் புரியும். :)
நீக்குஆனா, விதை நான் போட்டது..
பதிலளிநீக்கு- என்கிற மாதிரி, சூலமங்கலம் சகோதரிகளின் இசைப் பதிவு..
இன்றைக்கு குழாயடியில் பார்த்தால் -
இதுதான் ஒரிஜினல் முனியாண்டி விலாஸ் என்கிற அளவில் போட்டுத் தாக்கிக் கொண்டிருக்கின்றார்கள்..
நவீன இசைக் கோர்வையினால் சில பதிவுகள் மட்டும் மனதைக் கவர்கின்றன..
மற்றவைகளைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை..
உண்மைதான்.
நீக்குசூலமங்கலம் சகோதரிகள் வழங்கிய மூலப் பதிவினை கிறித்தவ கிரிப்டோக்கள் கைப் பற்றிக் கொண்டு (சுப்ர பாதத்தைப் போல) ஒரு பக்கம் உருட்டிக் கொண்டு இருக்கின்றார்கள்..
பதிலளிநீக்குமகிஷாசுரமர்த்தினியை விட்டு வைத்திருக்கின்றார்கள் என்று நினைக்கின்றேன்..
இன்னும் சொல்லலாம்.. நம்மவர்களுக்குப் பிடிக்காது..
(எல்லாம் அரசியல்..)
நம்முடையதை நம்முடையது என்று சொல்வதற்கே அச்சம்..
ஆம். வேறொரு பிரச்னையும் ஒரு கூட்டத்தால் வந்தது!
நீக்குஅச்சமில்லை.. அச்சமில்லை என்று கவி பாடிய தமிழ்நாட்டில், உண்மையை சந்திக்கவே அச்சம். பேசவோ.. பேரச்சம் !
நீக்குகல்லெறிந்தால் மேலே தெறிக்குமே என்பதால்தான்...!
நீக்குகம்புக்குக களை எடுத்தாற் போலும் ஆயிற்று..
பதிலளிநீக்குதம்பிக்குப் பெண் பார்த்தது போலவும் ஆயிற்று..
இன்றைக்கு பங்குனி உத்திர நாள்..
இறைக்கு இறையும் ஆயிற்று..
திரைக்கு திரையும் ஆயிற்று!..
அதே.. அதே...
நீக்குமுதல் பாடல் மிகவும் சிறப்பாக இருக்கும்.
பதிலளிநீக்குஇரண்டாவது இரண்டாவது ரகமே...
இரண்டுமே நான் விரும்பும் பாடலே...
நன்றி ஜி.
நீக்குஸ்ரீ பைரவருடைய த்யான ஸ்லோகத்திலேயே அவரது திருத் தோற்றம் சொல்லப்பட்டு விடுகின்றது.. ஆனால் இன்றைக்கு பற்பல சிவாலயங்களில் வைரவருக்கு வஸ்திரம் சாத்தப்படுகின்றது..
பதிலளிநீக்குஅதைப் போல சஷ்டி கவசத்தின் மூல வார்த்தைப் பிரயோகங்களை சிலர் மாற்றிச் சொல்லிக் கொண்டு இருக்கின்றார்கள்..
அதைக் கூட ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளலாம்.. ஆத்ம திருப்தி..
ஆனால் சிலதுகள் அதிலே விழுந்து புரண்டு தங்களை அடையாளம் காட்டிக் கொண்டிருக்கின்றன..
அப்படி மாற்றிச் சொல்வது தெரிந்தா, தெரியாமலா?
நீக்குதெரிந்து தான் செய்கின்றார்கள்.
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஇறைவன் அருளால் ஆரோக்கியம் நிறை வாழ்வு தொடர வேண்டும்.
வாங்க வல்லிம்மா.. வணக்கம். பிரார்த்திப்போம்.
நீக்குகந்த சஷ்டி ஒலிக்காத நாட்களே இல்லை.
பதிலளிநீக்குஅதுவும் தினமும் ஜயா டிவியில் காலை
நாலு மணியிலிருந்து கேட்டுக் கேட்டு மகிழ்ந்த நாட்களை
நினைக்கிறேன்.
கவசம் என்றால் இவர்கள் குரலில் ஒலித்த கவசம் தான்.
தெய்வம், துணைவன், கந்தன் கருணை இன்னும் எத்தனையோ
பக்திப் படங்களிலும்,
பழைய திரைப்படங்களிலும் நிறையக் கேட்டிருக்கிறேன்.
மாடப் புறா என்ற படத்தில் ஊருக்கும் தெரியாது பாடல் அப்போது
பிரபலம்.
நல்ல தமிழ் வளமும் குரல் வளமும்
கொண்டவர்களால் நம் மனமும் நிறைந்தது.
மாடப்புறா பாடல் என்ன என்று பார்க்கிறேன்.
நீக்கு@ ஸ்ரீராம்..
பதிலளிநீக்கு// அப்படி மாற்றிச் சொல்வது தெரிந்தா, தெரியாமலா?.. //
இறவாமல் பிறவாமல்..
எனும் அவிநாசித் திருப்புகழ் பாடலில் அவிநாசி எனும் தலப் பெயரை எடுத்து விட்டு கதிர்காமம் எனும் பெயரைச் சேர்த்து ஒரு இசைப் பதிவு குழாயடியில் இருக்கின்றது.. அதற்கு ஒரு மறுப்பு எழுதினேன்.. அவ்வளவு தான்!..
என்ன மனிதர்களோ...!
நீக்குகாக்கைச் சிறகினிலே இனிமையான பாடல்.
பதிலளிநீக்குசூலமங்கலம் குரலில் அமிர்தம்.
ஸ்ரீ ஆண்டாள் அதை நாச்சியார் திருமொழியிலேயே
சொல்லி இருக்கிறாள்.
அதிர வைக்கும் உருவங்களை, கண் கூசும் நிறங்களை
ஆண்டாளாகப் பார்க்கத்தான் கொஞ்சம்
தயக்கமாக இருக்கிறது.:)
//அதிர வைக்கும் உருவங்களை//
நீக்குஹா.. ஹா.. ஹா... நான் சொல்லாமல் விட்டேன். நீங்கள் சொல்லி விட்டீர்கள்!
காசு கொடுத்துப் பார்த்தோமே:( அதனால் சொல்ல உரிமை
நீக்குஉண்டு மா.
ஜேசுதாசின் குரலும் அருமைதான்.
பதிலளிநீக்குபாரதியாரைப் பற்றி எத்தனையோ எண்ணங்கள்.
நன்மையை மட்டும் எடுத்துக் கொள்வோம்.
அதேதான் என் எண்ணமும்.
நீக்கு..பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றை எடுக்கலாம் என்று ஆரம்பித்தார்களாம். ஆனால் அப்படி எடுத்தால் சில உண்மைகளை சொல்ல வேண்டி இருக்கும், அப்படி சொன்னால், அதற்கு எதிர்ப்பு வரும் என்று ..//
பதிலளிநீக்குதவறிக்கூட உண்மையை சந்தித்துவிடலாகாது.. உண்மை என்பது உடனே மூடி மறைக்கப்படவேண்டியது. அதனிடத்தில் பொலிவான பொய்கள் பலப்பலவாகப் புழங்கலாம்! தமிழ்நாட்டின் கோலாகலம்!
அப்படி இல்லை.. அவரைக் கேவலப்படுத்துகிறார்கள் என்று எல்லோரும் வரிந்து கட்டிக் கொண்டு வந்து விடுவார்கள்..
நீக்குகாக்கைச் சிறகினிலே.. அழகான பாடல். சூலமங்கலம் சகோதரிகள் போன்றோரையெல்லாம் நமது தமிழ்த்திருநாட்டில் மதித்து யாராவது பாராட்டியிருக்கிறார்களா? சந்தேகந்தான்.
பதிலளிநீக்குஅவங்க -
நீக்குகுடியே குடியாய்..
நல்லக் குடியே!...
- ந்னு ஒரு பாமால பாடி உட்டுருந்தா டமில் கூரும் நல்லுளகம் பாராட்டி இருக்குமோ.. என்னவோ!..
அவரது நிறைய பாடல்கள் ரசிக்கப்பட்டிருக்கின்றன...
நீக்குஅனைவருக்கும் வணக்கம். கந்தசஷ்டிக் கவசம் சுமார் ஏழு/எட்டு வயதிலிருந்து சொல்லிக் கொண்டிருக்கேன். தனிவழி செல்லும்போதெல்லாம் இது தான் எனக்கு நற்றுணை. ஆனால் திருமணம் ஆகி வந்ததும் மாமியாரிடமிருந்து பலத்த எதிர்ப்பு. சுமார் பத்துவருஷங்களுக்குத் திருட்டுத்தனமாகச் சொல்லி வந்தேன். பின்னர் தான் அவங்களும் ஒத்துக் கொண்டாங்க முருகன் அருளால். இப்போவும் யாருக்கானும் உடல்நலமில்லை எனில் சஷ்டி கவசம் தான் பாராயணம்.
பதிலளிநீக்குநானும் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.
நீக்குஎத்தனையோ இக்கட்டுகளில் இருந்து காப்பாற்றி வருகிறது.
நீக்குபாம்பே சிஸ்டர்ஸ் குரலில் ஸ்கந்தகுரு கவசம் கேட்க நன்றாய் இருக்கும். மெய் சிலிர்க்கும். என்றாலும் முதலிடம் சூலமங்கலம் சகோதரிகளுக்கே!
பதிலளிநீக்குஅதெல்லாம் நான் கேட்டதில்லை.
நீக்குஅது என்ன "அதெல்லாம்" என்று சொல்றீங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! வருஷா வருஷம் ராகவேந்திரா ஆராதனை சமயம் அம்பத்தூரில் எங்க தெருவுக்குப் பின் தெருவில் இருந்த ராகவேந்திரா கோயிலில் பாடுவதற்கு என பாம்பே சிஸ்டர்ஸ் வருவாங்க. நேரில் பார்க்க ரொம்பவே ஜிம்பிள்/ கச்சேரி நிறையக் கேட்டிருக்கேன்.
நீக்குபாம்பே சகோதரிகளின் குரல்கள் இனிமையோ இனிமை.
நீக்குமாம்பலம் சகோதரிகளின் மன்னு புகழ் கோசலை
மிக மிகப் பிரபலம்.
ஜேசுதாஸின் குரலிலும் இந்தப்பாடல்/காட்சிகள் எல்லாம் நன்றாகவே வந்திருக்கு. ஏழாவது மனிதன்/ஊமை விழிகள் இரண்டு படங்களையும் பல முறை பார்க்க உட்கார்ந்துப் பத்து நிமிஷங்கள் மட்டுமே பார்க்க முடிந்தது. எப்போவானும் பார்த்துடணும். :))))
பதிலளிநீக்குஏழாவது மனிதன் பார்க்கும் பொறுமை இல்லை. ஊமை விழிகள் பார்த்திருக்கிறேன்.
நீக்குஅருமையான பாடல்
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா.. வணக்கம்.
நீக்குசூலமங்கலம் சகோதரிகள் பாடிய கந்த சஷ்டி பாடல் தவிர வேறு யார் பாடியது பிடிக்கவில்லை.
பதிலளிநீக்குமுருகன் பாடல்கள் இன்று பங்குனி உத்திர நாளில் கேட்டுக் கொண்டு இருக்கிறேன்.
இருவர் பாடிய பாடல்களும் அருமை, ஆனால் திருமால் பெருமையில் ஜெயலட்சுமி அவர்கள் பாடிய பாடல்தான் மிகவும் பிடிக்கும். இனிமை குழைவு எல்லாம் இருக்கும் அதில்.
//சூலமங்கலம் சகோதரிகள் பாடிய கந்த சஷ்டி பாடல் தவிர வேறு யார் பாடியது பிடிக்கவில்லை.//
நீக்குஅப்படியேதான் எனக்கும்!
// திருமால் பெருமையில் ஜெயலட்சுமி அவர்கள் பாடிய பாடல்தான் மிகவும் பிடிக்கும்.//
பாடி இருப்பது ஜெயலட்சுமி இல்லை, ராஜலக்ஷ்மி
நன்றி கோமதி அக்கா.
ராஜலக்ஷ்மி பாடிய பாடல்
நீக்குஇரண்டாவது பாடலில் இயற்கை காட்சிகள் அருமை.
பதிலளிநீக்குநன்றி கோமதி அக்கா.
நீக்குஅனைவருக்கும் முகம் மலர இனிய காலை வணக்கங்கள்! இரண்டாவது பாடல், ஜேசுதாஸ் குரலில் மிக இனிமை. பாரதியாரின் கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். பாடல் பகிர்ந்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குவாங்க வானம்பாடி.. வணக்கம். ரசித்ததற்கு நன்றி.
நீக்குஇவர்கள் வழங்கிய கந்த சஷ்டி கவசமும் ஸ்கந்தகுரு கவசமும் ரொம்ப பிரபலம்.//
பதிலளிநீக்குஆமாம் இவர்கள் குரலில் இதைக் கேட்டுவிட்டு, மற்றவர்கள் நன்றாகப் பாடியிருந்தாலும் கேட்டாலும், இவர்கள் பாடியதைத்தான் இதோ இப்போதும் கேட்டுக் கொண்டே தட்டச்சுகிறேன். திரும்ப திரும்பக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். யுட்யூப் லூப் போட்டு ஒலிக்க வைத்துக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
கீதா
பங்குனி உத்திரம் எங்கள் ஊரில் சாஸ்தா பூஜை நடக்கும். ஒருவர் மீது சாஸ்தா வருவார். இது பற்றி எழுதிய ஒன்று பாதியில் இருக்கிறது. கிராமத்தில் சாப்பாடு எல்லோருக்கும்.
பதிலளிநீக்குஅதெல்லாம் நினைவுக்கு வந்தது.
கீதா
நீங்கள் எழுதும் எதுவும் பாதியில் நிற்காவிட்டால்தான் ஆசாசர்யம் ஹாஹா
நீக்குசகோதரிகள் என்கிற வகையில் இவர்கள்தான் முதல் என்கிறது விக்கி. //
பதிலளிநீக்குவிக்கி சொல்கிறாரோ இல்லையோ என் அறிவிற்கு சகோதரிகள் என்றால் சூலமங்கலம்தான் அதன் பின் ரா-ஜெ. நீங்கள் சொல்லியிருப்பது மற்றவர்கள் அப்புறம் பிராபல்யம்..
கீதா
இரண்டு வெர்ஷனும் கேட்டிருக்கிறேன் ஸ்ரீராம். ஆனால் அதிகம் கேட்டது சேஷு (டி என் சேஷகோபாலன் வெர்ஷன்) பாடிய காக்கைச்சிறகினிலே ரொம்பப் பிடிக்கும். இந்தப் பாடலும் அவர் பாடிய ராம மந்த்ரவ ஜபிதோ பாடலையும் - ஏதாவது ஒன்றை - அடிக்கடி சிலோன் ரேடியோவில் இரு நிகழ்ச்சிய்களுக்கு இடையே இடைவெளி நிரப்ப போடுவார்கள். பிருந்தாவனசாரங்காவில் காக்கைச் சிறகினிலே நல்லாருக்கும்.
பதிலளிநீக்குகீதா
இளையவரான ராஜலட்சுமி 52ல் மறைந்து போக........ இந்த வாக்கியமே நகைச்சுவையாக இருக்கே
பதிலளிநீக்கு52 ஆம் வயதில் மறைந்து போனார். ஆனாலும் நகைச்சுவையாய்த் தான் எனக்கும் இருந்தது/இருக்கு.
நீக்குஇரண்டு டியூனுமே அருமை. 7வது மனிதன் ட்யூன் புதுமை
பதிலளிநீக்குசூலமங்கலம் கந்தசஷ்டி எம்எஸ் வி ச தா, போன்றவை காலத்தால் அழியாதவை நகலெடுத்தால் பல்லிளிப்பவை
பதிலளிநீக்குஎங்கள் வீட்டிலும் ஒலித்த பாடல் அப்பாவுக்கு பிடிக்கும்.
பதிலளிநீக்குசிறப்பான பாடல். ஜேசுதாஸ் குரலில் கேட்ட பாடல் தான் பிடித்ததாக சொல்ல வேண்டும்.
பதிலளிநீக்கு