நாம் புக் செய்ததும் நமக்கு செய்தியாக வந்திருக்கும் எண் கொண்ட வண்டி இல்லாமல் வேறு எண் கொண்ட வண்டி வருவது பற்றி சென்ற வாரம் சொல்லி இருந்தேன்.
பெரும்பாலான சமயங்களில் அது உண்மையான காரணமாக இருக்கலாம்.
ஆனால் -
ஒருநாள் என் ஆ ஆ என்னை இறக்கிவிட்டு விட்டு, ஒரு வாரமாக உபயோகிக்காமல் இருந்த தனது ஊபர் கணக்கில் லாகின் செய்ய முயன்றார். பலமுறை முயன்றும் முடியாமல் போகவே, ஊபர் அலுவலகத்துக்கு அலைபேசி இருக்கிறார்.
"லாகின் செய்ய முடியவில்லையா? நீங்கள் லாகின்லதானே இருக்கீங்க... இப்போ கூட மாம்பலத்திலிருந்து மவுண்ட்ரோடு க்கு ட்ரிப் போயிகிட்டு இருக்கீங்க.."
"என்னது.. நான் மீனம்பாக்கத்துல இருக்கேன். ஒரு வாரமா நான் இதை உபயோகிக்கவே இல்லை"
"கொண்டித்தோப்பு போனது நேற்று ராத்திரி உங்களோட கடைசி ட்ரிப். 325 ரூபாய் சார்ஜ். நேற்று முழுக்க உங்க கலெக்ஷன் .............................. . ரூபாய்"
நம்மாள் அதிர்ந்து விட்டார். கிண்டியிலிருந்து மிக அருகில்தான் ஊபர் அலுவலகம். உடனே நேரில் சென்று விட்டார்.
இதை எனக்கு பின்னர் சொன்னபோது ஊபரில் தன் ஆட்டோவை இணைத்துக்கொள்ளும் வழி முழுவதும் விளக்கமாகச் சொன்னார்.
இவர் ஆட்டோவின் எண், அலைபேசி எண் ஓட்டுநர் உரிமம், இவர் ஃபோட்டோ இவற்றுடன் அங்கு பதிவாகி இருக்கும். இவருக்கென்று அங்கு ஒரு கணக்கும், லாகின் செய்ய ஐடியும் இருக்கும். இவர், தான் ஒரு பாஸ்வேர்ட் தயார் செய்து, அதைக் கொடுத்து உள்நுழைய வேண்டும்.
இந்த நடைமுறை உள்ள இடத்தில் இவர் ஐடியை வைத்து இன்னொரு ஆட்டோ ஓடிக்கொண்டிருந்திருக்கிறது. இதற்கு ஊபர் அலுவலகத்தில் உள்ளவர்கள் துணை இல்லாமல் நடந்திருக்க முடியாது. ஏனென்றால் பாஸ்வர்ட், வேறு மொபைலிலிருந்து அதைத் தந்தால் வரும் எச்சரிக்கைச் செய்தி, அப்ரூவல் எல்லாம் உள்துணை இல்லாமல் நடந்திருக்க முடியாது என்பதால் அங்கு அலுவலகத்தில் மழுப்பி இருக்கிறார்கள்.
இரண்டு நாள் பொறுமையாக இருக்கச் சொல்லி இருக்கிறார்கள். ஆவன செய்கிறார்களாம்.
இத்தனை நாள் வராமல் இப்போது திடீரென இவர் அலைபேசி எண்ணுக்கு கஸ்டமர் யாரோ கால் செய்து 'எங்கு இருக்கிறீர்கள்' என்று கேட்பது சில முறை நடந்திருக்கிறது. ஒருமுறை அந்த 'ஊழல் ஆட்டோக்காரர்' அலைபேசி 'எவ்வளவு ரூபாய்' என்றோ அல்லது வேறு ஏதோ கேட்டிருக்கிறார். மண்டை காய்ந்து கடுப்பான என் ஆ ஆ சில நண்பர்களுடன் சேர்ந்து ஊபர் அலுவலகம் சென்று இந்தப் பிரச்னையைத் தீர்த்திருக்கிறார் .
ஒரு வழியாய் பிரச்னை முடிந்த நாளில் "ஒருவழியாய் சரியாகி இன்று லாகின் செய்ய முடிகிறது ஸார்.. ஓலாவில் இதெல்லாம் செய்ய முடியாது என்று அவர் சொன்ன அரைமணி நேரத்தில் ஓலாவில் இதே ப்ரச்னை தொடங்க, ஆனால் அதை ஒரு அலைபேசி உரையாடலிலேயே சரி செய்திருக்கிறார். அவர்கள் வெளிப்படையாக "சரி, உங்கள் எண்ணில் இனி இது நடைபெறாது" என்பது போல சொல்லி இருக்கிறார்கள்.
இது அவர்களுக்குள் பிரச்னை... கஸ்டமரான உனக்கு என்ன என்று கேட்கிறீர்களா? பிரச்சனை வராதவரை சரி.. ஒருநாள் ஏதோ சட்டப் பிரச்னையில் மாட்டி கேஸ், சாட்சி என்று சென்றால் நமக்கு அந்த வண்டியில் சென்றதற்கான சான்றே இருக்காதே... மேலு இப்படி செய்வது தவறு தவறுதானே...
ஓட்டுநர்கள் தரப்பிலிருந்து தங்கள் குறைகளை சொல்லும்போது, தான் இருக்கும் இடத்திலிருந்து பிக்கப் செய்ய வரும் தூரத்துக்கான நஷ்டத்தை தாங்கள் சுமக்க வேண்டி இருக்கிறது என்கிறார்கள். கிட்டத்தில் வந்ததும் கஸ்டமர் கேன்சல் செய்து விட்டால் அவர்களுக்கு நஷ்டமாகிறதாம். ஆனால் நிறுவனங்கள் கஸ்டமர்களிடமிருந்து இதற்காக ஒரு அபராதத்தொகையை வசூலிக்கிறார்கள். அது அவர்களுக்குச் சென்று சேருமா, நமக்குத் தெரியாது. ஓட்டுனர்கள் எல்லா விஷயங்களையும், என்னதான் தெரிந்தவர்களாயிருந்தாலும் நம் மிடம் சொல்வதில்லை. நிறுவனங்கள் நிறைய கமிஷன் அடிக்கின்றன என்று புகார் செய்வார்கள். ஆனால் ஊபர் ஐந்து ரைட் ஆனபிறகு 150 ரூபாய்க்கு ஒரு போனஸ் தருகிறது. அதற்கு ஏதாவது கிலோமீட்டர் கணக்கு உண்டா, அல்லது தொடர்ந்து ஐந்து பயணங்களா என்று தெரியாது.
இவர்கள் எல்லாம் இந்த மாதிரி கண்டிஷன்களுக்கு ஒத்துக்கொண்டுதான் ஊபர், ஓலா போன்ற நிறுவனங்களில் இணைகிறார்கள். அப்புறம் என்ன குறை, புகார் சொல்லுதல்?
ஒருமுறை ஓலா வண்டியில் வந்தபோது இறங்கும் சமயம் ஓட்டுநர் மொபைல் மின்ன அடுத்த கஸ்டமர் விருப்பம் திரையில் தெரிந்தது. அதில் கூடுதல் 21 ரூபாய் என்ற வாசகம் தெரிந்தது. அது என்ன என்று அவரிடம் கேட்டபோது, சில பயணங்களுக்கு வழக்கமாக வரும் கமிஷனை விட கூடுதலாக கொஞ்சம் ரூபாய் கிடைக்கும் என்றார். அது எவ்வளவு என்று அழைப்பை ஏற்கும் முன்னரே நமக்கு தெரியும் வண்ணம் டிஸ்பிளே ஆகும் என்றார்.
நல்ல மழை நேரத்தில் எக்மோருக்கோ, சென்ட்ரலுக்கோ செல்லவேண்டும் என்று அழைத்தால் பெரும்பாலும் யாரும் வரமாட்டார்கள்.கடுமையான நெரிசலும், மோசமான சாலைகளாய் இருக்கும் என்பதால் அவாய்ட் செய்து விடுவார்கள். கஸ்டமர்கள் பொறுத்து பொறுத்து பிபி ஏறி அவஸ்தைப்பட வேண்டியதிருக்கும்!
சரி, இது மாதிரி பயணங்களில் கேஷ் என்று சொல்லி இருக்கிறீர்கள். பயணத்தை முடிக்கிறீர்கள். ஓட்டுனரிடம் பணமும் தருகிறீர்கள். 112 ரூபாய் என்று காட்டுகிறது. சரியாக 112 ரூபாய் தந்தால் எத்தனை ஓட்டுநர்கள் பேசாமல் வாங்கிச் செல்வார்கள் என்று நினைக்கிறீர்கள்? பெரும்பாலும் 120 அல்லது குறைந்த பட்சம் 115 ரூபாய் தரவேண்டும்!
சரி, உங்களிடம் சில்லறை இல்லை என்றோ, அல்லது கையிருப்பே 100 ரூபாய்தான் என்றோ குறைத்து தந்துவிட்டு நீங்கள் நகர முடியுமா? விடுவாரா அந்த ஓட்டுநர்? கீழே உள்ள மெசேஜைப் பாருங்கள். இதுமாதிரி என் மெயிலுக்கு, மொபைலுக்கு இரண்டு முறை மெசேஜ் வந்துள்ளது. அடுத்த முறை கட்டணத்தில் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது..
============================== ============================== ============================== ============================== ============================== ==========
உணவுப்பொருட்கள் என்கிற தளத்திலிருந்து ஐந்து வருடங்களுக்கு முன்னர் நண்பர் பேஸ்புக்கில் என் பக்கத்தில் பகிர்ந்த ஒரு விஷயம்...
சமையல் பொருள் மட்டுமல்ல பூண்டு
நமது சமையலறை அலமாரியில் இருக்கும் ஒவ்வொரு பொருட்களுக்கும் ஒவ்வொரு மருத்துவ குணம் இருக்கும். அதில் பூண்டிற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே மிகவும் நல்லது. பூச்சிக்கடி உள்ள இடத்தில் பூண்டை வைத்து தேய்த்து விடலாம. பூச்சிக்கடியினால் உண்டான விஷம் பலவீனமடையும். பூண்டு சாறும், எலுமிச்சை சாறினையும் கலந்து தேமல் உள்ள இடங்களில் தேய்த்து வந்தால் தேமல் காணாமல் போய் விடும்.
பூண்டை சாப்பிடப் பிடிக்காதவர்களுக்கு, பூண்டு, தக்காளி, வெங்காயம் போன்றவற்றை நசுக்கிப் போட்டு சூப் வைத்துக் கொடுக்கலாம். இந்த சூப் குடித்தால் சளி பிடிப்பது குறையும்.
பாக்டீரியா, வைரஸ் மூலம் பரவும் காய்ச்சல், இருமல், தொற்றுநோய்கள், காயங்கள் எதுவும் பூண்டு சாப்பிட்டு வந்தால் வரவே வராது. வந்தாலும் உடனே பறந்து விடும். உணவில் சேர்த்தால் நல்லது தான் ஆனால், அதில் சத்துக்கள் குறைந்து விடுகின்றன; அதனால், அப்படியே கடித்து விழுங்குவது நல்லதே.
தொண்டை கரகரப்பா? கவலையே வேண்டாம்; டாக்டரிடம் போக வேண்டாம்; நான்கு பூண்டு விழுதுகளை கடித்து விழுங்கி விடுங்கள். சர்க்கரை நோயுள்ளவர்கள் பூண்டு உட்கொண் டால், சர்க்கரை அளவை சீராக்குகிறது; இன்சுலின் சுரப்பதை அதிகரிக்கிறது. ஐந்து மாதம் தொடர்ந்து பூண்டு சாப்பிட்டு வந்தால், ரத்த அழுத்தம் குறைந்து விடும்.
பூண்டில் , அலிசின் என்ற ஆன்டிஆக்சிடண்ட் உள்ளது. இந்த சத்து, உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கழலை, மரு போன்றவை நீங்குவதற்கும் பூண்டு கைகொடுக்கிறது. இரவு தூங்கும் முன், சிறிது அரைத்து அதன் மீது பூசினால் போதும், நாளடைவில் மரு காணாமல் போய்விடும்.
அலர்ஜியை விரட்ட அருமையான மருந்து பூண்டு; மூன்று வாரம் தொடர்ந்து ஒரு நாளைக்கு மூன்று பூண்டு விழுது சாப்பிட்டு வந்தால் போதும், அலர்ஜி போய் விடும். பல்வலியா, அதற்கும் பூண்டு போதும். ஒரு விழுதை கடித்து அதன் ரசம் பட்டால் போதும், பல்வலி போய்விடும்.
தினமும் மூன்று பூண்டு விழுதுகளை கடித்து சாப்பிட்டாலே போதும்; ஜலதோஷம் முதல் தொற்றுக்கிருமிகள், வயிற்று பிரச்னைகள் எதுவும் வராது.
பூண்டு சாப்பிட்டால், மூச்சு விட்டாலும், அதன் மணம் தான் வீசும். மூக்கை பிடிக்க வைக்கும் வாசனை தான் பலரையும் சாப்பிட விடாமல் பயமுறுத்துகிறது.
==============================================================================================
அப்போது தேர்தல் சமயம்.. இந்தப் பாடலை உல்டா செய்து பேஸ்புக்கில் வெளியிட்டதன் பகிர்வு.
ஃபோட்டோ எடுத்த வகையினால் மட்டுமல்ல, அவர் செயலாலும்தான் அவர் உயரமாகத் தெரிகிறார்...
கொத்தாய் சில ஜோக்ஸ்.... வழக்கமான கேள்விதான்.. படிக்க முடிகிறதோ...
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஆரோக்யம் நிறை வாழ்வு அனைவருக்கும் இறைவன்
அருள வேண்டும்
பிரார்த்திப்போம். வாங்க வல்லிம்மா.. வணக்கம்.
நீக்குவாசன் அவர்களது நகைச்சுவை ரசிக்கும்படி இருக்கிறது. குடிசைத்
பதிலளிநீக்குதொழில் ஹாஹாஹா. இந்த கார்ட்டூன்
படித்த நினைவு இருக்கிறது. நன்றி மா.
நன்றி அம்மா.
நீக்குகஷ்டப்பட்டு ஜோக்ஸ் படித்தாச்சு.
பதிலளிநீக்குஅட்டகாசமான அரசியல். தொண்டர்களை எண்ணுவது,
கால் நடைப்பயணம்,
குடும்பத்தைக் கவனிக்கும் அரசியல்வாதி,
மனைவி ஒரு மந்திரி அனைத்துமே
எண்ணி எண்ணி சிரிக்கிறேன்.
மிக நன்றி மா.
நிறைய ஜோக்ஸ் ஒரே பக்கத்தில் இருப்பதால் படிப்பது சிரமமோ...
நீக்குநன்றி அம்மா.
மனிதம் படம் அருமை. மண்ணையும்
பதிலளிநீக்குசேர்த்து குட்டிச் செல்லங்கள் சாப்பிட வேண்டுமே.
நல்ல எண்ணம் தான்.
தார் ரோடாயிருந்தால் அவ்வளவு பாதிப்பு இருக்காது!
நீக்குநன்றி அம்மா.
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅன்பான என் சகோதரத்துவ உறவுகள் அனைவருக்கும் என் அன்பான இனிய காலை வணக்கங்கள். அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமைத்திட வேண்டுமாய் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஸ்ரீமதி கமலா ஹரிஹரன் அவர்களுக்கு நல்வரவு..
நீக்குநலமே வாழ்க..
ஆஹா.. வாங்க கமலா அக்கா... பிரார்த்திப்போம். வணக்கம்.
நீக்குவணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே
நீக்குநலமா? உங்கள் அனைவரின் அன்பிற்கும் நான் எப்போதும் கடமை பட்டுள்ளேன். என்றும் நலமே வாழ்க.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அட்டா..ரொம்ப நாள் கழித்து... நலமா கமலா ஹரிஹரன் மேடம்?
நீக்குஹை வாங்க கமலாக்கா...
நீக்குஉங்களின் "வணக்கம் சகோதரரே" "வணக்கம் சகோதரி" பார்த்து ரொம்ப நாளாயிற்று!!! உடல்நலன் பரவாயில்லையா? மகனோடு எஞ்சாய் செய்ங்க அக்கா. பார்த்துக்கோங்க உடம்பையும். மகன் ஊருக்குப் போவது வரை அவரோடு எஞ்சாய் செய்துவிட்டு வாங்க...மெதுவா. நாங்கள் காத்திருக்கிறோம்.
கீதா
பூண்டு சாப்பிட்டால், மூச்சு விட்டாலும், அதன் மணம் தான் வீசும். மூக்கை பிடிக்க வைக்கும் வாசனை தான் பலரையும் சாப்பிட விடாமல் பயமுறுத்துகிறது.''
பதிலளிநீக்குஎனக்கு பூண்டு சாப்பிடுவதில் தயக்கமில்லை அம்மா...! பாஸும், மாமியாரும் சாப்பிட மாட்டார்கள்!
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குஇறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..
வாழ்க நலம்..
வாழ்க தமிழ்..
வாழ்க.. வாழ்க..
நீக்குஅனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள்.
பதிலளிநீக்குஅனைவரும் எப்படியுள்ளீர்கள்? உங்கள் அனைவரையும் இதுநாள் வரை வந்து காணாமல் இருந்ததற்கு அன்பு கூர்ந்து மன்னிக்கவும்.
சிறிய உடல்நல குறைவுதானே விரைவில் சரியாகி விடும் என எண்ணிய என்னை இயல்பாக இருக்க விடாது, விதி கடந்த ஒரு மாதத்திற்கும் மேல் ஏதோ வாட்டி வதைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டுள்ளது. அதைவிட இரண்டு வருடங்களுக்குப் பிறகு இங்கு வந்திருக்கும் என் மகனுடன் சந்தோஷமாக பேசி மகிழ்வாக இருக்க விடாமல் செய்வதுதான் கொடுமை. வலைத்தளத்திற்கு வந்து உங்கள் அனைவரையும் சந்தித்து பேசி மகிழ்வாக இருந்ததையும் தடை செய்தது அதை விட கொடுமை.என்ன செய்வது? விதி வலியதுதான்.
இப்போது நலம் பெற்று வருகிறேன். அடுத்த
மாதம் ஊருக்கு திரும்பி விடும் மகனுடன் சந்தோஷமாக பேசி அளவளாவி இருக்கவும், முன்பு போல் நம் சகோதர,சகோதரிகளை கண்டு தினமும் மனம் விட்டு பேசி, ஒரே குடும்பமாக மகிழ்வாக இருக்கவும், இனி இறைவன் தடையேதும் இன்றி நல்லருள் புரிவான் என்ற நம்பிக்கையுடன் இன்று இங்கு தீடிர் பிரவேசம் செய்துள்ளேன். எனக்கு இந்த அன்பான உறவுகளை தந்த இறைவனுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கமலா அக்கா... உங்கள் உடல்நலம் தேறி வருகிறது என்று கூறிய நிலையில் இன்னும் அதிகம் சிரமப்பட்டது வருத்தத்தைத் தருகிறது. இப்போது பூரண நலம் பெற்றிருப்பீர்கள் என்று நம்புகிறேன், பிரார்த்திக்கிறேன். விரைவில் நீங்கள் பழைய உற்சாகத்துடன் வருவதை எதிர்பார்க்கிறோம்.
நீக்குஅதைவிட இரண்டு வருடங்களுக்குப் பிறகு இங்கு வந்திருக்கும் என் மகனுடன் சந்தோஷமாக பேசி மகிழ்வாக இருக்க விடாமல் செய்வதுதான் கொடுமை.//
நீக்குஅக்கா வருத்தமாக இருக்கிறது. எல்லாம் சரியாகிவிடும் கமலாக்கா. கூடியவரை மகனோடு நேரம் செலவிடுங்கள். ஹாஹாஹா விதி பத்தி இதேதான் நானும் அடிக்கடி சொல்கிறேன். மகனோடு சந்தோஷமாக இருந்து ஃபுல் எனர்ஜி பெற்று வாங்க...காத்திருக்கிறோம்..
கீதா
உடல்நிலை விரைவில் நலமாக பிரார்த்தனைகள்.
நீக்குமகனுக்கு பிடித்தவைகளை செய்து கொடுக்க உடல் விரைவில் நலம் அடைய வேண்டும்.
கீதா சாம்பசிவம் வலைத்தளத்தில் உங்களை பற்றி பேசி கொண்டோம், ஸ்ரீராம் இடையில் ஒரு முறை வலைத்தளம் வந்தால் நன்றாக இருக்கும் என்றார். வந்து விட்டீர்கள்.
மகிழ்ச்சி.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஎப்போதும் போல் வியாழன் கதம்பம் அருமையாக உள்ளது. இன்னமும் முழுதாக படிக்கவில்லை. பூண்டு தினமும் பழகி விட்டால், நல்லதுதான். உல்லி, தல்லி (பெற்ற அம்மாவை போன்ற அக்கறையான அரவணைப்பு என்ற அர்த்தத்தில்) என்றொரு பேச்சு வழக்கும் உண்டு. எப்போதாவது தயாரிக்கும் தக்காளி பூண்டு ரசம் சில சமயம் ஒத்துக் கொண்டு, சில சமயம் ஒத்து வராமல் போவதுண்டு. சிலருக்கு தினமும் ஏதோ ஒரு வகையில் சேர்த்துக் கொண்டாலும் ஒத்துப் போய் விடும். இது அவரவரின் உடம்பு வாக்கைப் பொறுத்தது. . அனைத்தையும் படித்து விட்டு பிறகு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா.
நீக்குபூண்டு என்றதும் எனக்கு நினைவுக்கு வருவது.. நான் 7ம் வகுப்பு, தாளவாடியில் படுத்துக்கொண்டிருந்தபோது, எங்கள் ஆங்கில ஆசிரியரின் திருமணமாகாத மச்சினி. முக அழகாக இருப்பார். ஆனால் பேச ஆரம்பித்தால் பூண்டு வாசனை சகிக்காது. (அவர்கள் கன்னடக் கார்ர்கள். லிங்காயத்தாக இருக்கலாம்)
பதிலளிநீக்குபெங்களூரில் நாங்கள் இருக்கும் இடத்திலிருந்து இரு கிமீ தூரத்தில் சாரதி ஹோட்டல் என்று ஒன்று இருக்கிறது. கூகுளிலும் அதைப்பற்றி ஆஹா ஓஹோ என்றிருந்ததால் அங்கிருந்து மசால் தோசை இட்லி எல்லாம் பார்சல் வாங்கிக்கொண்டுவந்தேன் (அது லிங்காயத் நடத்தும் ஹோட்டல்). மசால் தோசையில் தடவியிருந்த பூண்டுச் சட்னி வாசனையும், சாம்பாரின் அதீத பூண்டு சட்னி வாசனையும் யாருக்குமே பிடிக்கலை.
இதுல, மருந்தாக்கூட இத்தனை நாள் பூண்டு சாப்பிடுவது எப்படி?
இங்கேயும் ஒரு ஓட்டலில் நல்ல சுவையான கொத்துமல்லிச் சட்னியில் போய்ப்பூண்டைப் போட்டு அரைத்திருந்தார்கள். அப்படியே கொட்டினோம். :(
நீக்குஉண்மைதான். பூண்டு எதில் போடுவது என்கிற விவஸ்தை இல்லாமல் எல்லாவற்றிலும் போட்டாலும் வெறுத்துப் போய்விடும்.
நீக்குமனித நேயம் நெகிழ்ச்சி.. இது போன்ற செய்கைகளை நிறையப் பார்த்திருக்கிறேன்.
பதிலளிநீக்குசில நாட்கள் முன்பு, லிப்ட்க்குக் காத்திருந்த போது எங்கள் தளத்திலிருந்த ஒரு வீட்டிலிருந்து நாய் லிப்ட் அருகே வந்துவிட்டது. பையை முகர்ந்து கார்த்தது. நான் கையில் வைத்திருந்த லக்கேஜ் கொண்டு தள்ளிவிட்டேன். பின்னாலேயே ஓடி வந்த நாய் வளர்க்கும் வீட்டிலிருந்த பெண்ணை யூஸ்லெஸ் என்றெல்லாம் திட்டினேன். இடையில் ஓடிவந்த என் பெண் நாயைக் கொஞ்ச ஆரம்பித்துவிட்டாள்.
உயிர்களிடத்தான நேயமும் இரத்தத்தில் ஊறியது என்று எனக்குத் தோன்றியது.
இடையில் ஓடிவந்த என் பெண் நாயைக் கொஞ்ச ஆரம்பித்துவிட்டாள்.//
நீக்குஹக்ஸ் அண்ட் பூங்கொத்து உங்க பொண்ணுக்கு!!! சொல்லிடுங்க உங்க பொண்ணுகிட்ட.!!!!!!!.
கீதா
ஐயே...சீய்.... என்பது என் ரியாக்ஷன். ஹா ஹா
நீக்குஅடடா... நாய் லிப்டில் மாட்டி இருந்தால் என்ன ஆவது... பாவம்..
நீக்குஊபர்்ஓலா கதையைப் படித்தபின் சென்னையில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் அனேகம்பேர் திருடர்கள், பேராசை உடைய குடிகார்ர்கள் என்ற எண்ணம்தான் வந்துபோனது.
பதிலளிநீக்குஹா.. ஹா.. ஹா... அப்படியும் சொல்ல முடியாது.
நீக்கு//வாக்களிக்க விருப்பமில்லை, பிடிச்சவங்க யாருமில்லை/- அது எப்படி.. தொகுதில நிற்பவங்க பத்து பேரும் மோசமானவங்களாக இருக்க முடியும்?
பதிலளிநீக்குஇருந்ததால்தானே பாட்டு..!
நீக்குஓலா ஊபர் போன்றவை இல்லைனா... இந்த ஆட்டோக்கார்ர்கள் கொள்ளையர்களாகவே ஆகியருப்பாங்களே என்பதை எண்ணி சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான்
பதிலளிநீக்குஎல்லா ஆட்டோக்காரர்களும் கிட்டத்தட்ட இந்த ஓலா ஊபரில் இருக்கிறார்கள். பெரும்பாலான சமயங்களில் அதை ஆஃப் செய்துவிட்டு கஸ்டமர்கள் பிடிப்பார்கள்.
நீக்குஓலா, ஊபர் இவ்வளவு பிரச்சனைகளா? உள் ஊழலா!!?
பதிலளிநீக்குஆனால் மற்ற ஆட்டோக்கள் டாக்சிகள் அதிகமாகக் கேட்பதைப் பார்க்கும் போது இவை ரொம்பவே தேவலாம்.
கீதா
அப்படியும் சொல்லலாம்.
நீக்குபூண்டின் பயன்பாடு இங்கும் உண்டு. சங்கு சக்கரம் இல்லாமல் சமையல் குறைவுதான். ஏதேனும் ஒரு வேளைக்கேனும் கண்டிப்பாக இருக்கும். ஒரு சில நாட்களைத் தவிர்த்து.
பதிலளிநீக்குகீதா
பரவாயில்லையே...!
நீக்குஏதோ பாக்கி என்று எனக்கும் ஒரு சமயத்தில் ஊபரில் இருந்து வந்தது. ஆச்சரியம். அதன் பின் புக் செய்ய முடியவில்லை. இதைக் கட்டு கட்டு என்று வந்தது. அவர்கள் கான்சல் செய்துவிட்டு அந்த அமௌன்ட் எனக்கு நான் கான்சல் செய்ததாக வந்தது. அப்புறம் அவர்களுக்கு மெயில் அனுப்பியும் நோ ரிப்ளை. நான் கண்டுக்கவே இல்லை.
பதிலளிநீக்குகீதா
நீங்கள் அடுத்தமுறை பயணம் புக் செய்யும்போது அதில்தான் சேர்ப்பார்கள்.
நீக்குஆமாம் ஸ்ரீராம் ஒரே வழிக்கு ஒவ்வொரு ஊபர் ஓலா வண்டிகளும் ஒவ்வொரு ரேட். அது சரி இத்தனை கிலோமிட்டருக்கு இந்த இடத்திலிருந்து இந்த இடத்திற்கு இந்த சார்ஜ் எல்லா வண்டிகளுக்கும் என்று ஒரு ஸ்டாண்டர்ட் சார்ஜ் இருக்காதோ? ஏன் அப்படிச் செய்வதில்லை?
பதிலளிநீக்குகீதா
அது அந்த குறிப்பிட்ட இடத்தில் அவைலபிளாக இருக்கும் வண்டிகள் எண்ணிக்கையையும், பீக் அவர் பிரச்னையையும் பொறுத்தது.
நீக்குஊபர் ஓலாவே பயன்படுத்துவது ரொம்பக் குறைவு.....ஃபாஸ்ட் ட்ராக் அனுபவம் இல்லை. ஆனால் எல்லாம் ஒரே குட்டைதான்....ஹாஹாஹா
பதிலளிநீக்குகீதா
பாஸ்ட் ட்ராக் - சசிகலா கும்பல் பங்கு அதில் உண்டு என்று படித்திருக்கிறேன். அநியாயத்துக்கு சார்ஜ் செய்வார்கள். ஆடிக்கொண்டிருந்தார்கள் ஊபர் ஓலா வரும் வரை
நீக்குஓஹோ....இதிலயும் அரசியல் கும்பலா? நெல்லை இவங்க கால் பதிக்காத இடமே இல்லையோ? சந்திரன், செவ்வாய்ல கூட வைச்சிருவாங்க போல!!!!
நீக்குகீதா
ஊபர் ஓலாவுக்கு முன்பு அவைதானே? செல்போனுக்கு முன்னால் பேஜர் போல!
நீக்குஅனைவரின் ஆரோக்கியத்திற்காகப் பிரார்த்தித்துக் கொள்கிறேன். திருமதி கமலா ஹரிஹரன் நீண்ட நாட்களுக்குப் பின்னர் வருகை தந்தமைக்கு வாழ்த்துகள். விரைவில் உடல் நலம் முன்போல் நல்லபடியாகக் குணமாகி மகன், மருமகள், பேரன், பேத்திகளுடன் இனிய பொழுதுகளைக் கழிக்கவும் பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குவாங்க கீதா அக்கா.. பிரார்த்திப்போம். வணக்கம்.
நீக்குஇந்த ஓலா, ஊபர் பற்றியெல்லாம் அவ்வளவாத் தெரியாது, கூப்பிடுவதே இல்லை. ஊபரில் என் தம்பி பையருக்கு திருச்சி ஜங்க்ஷன் செல்ல டாக்சி புக் செய்துவிட்டுக் கடைசி நிமிஷத்தில் அவங்களே கான்சல் பண்ணினார்கள். அதற்கு 25 ரூபாயோ என்னமோ அபராதம்னு வந்தது. எங்க கிட்டே எந்தவிதமான பணம் செலுத்தும் முறைகளும் மொபைலில் இல்லை. அப்படியே விட்டுட்டோம்.
பதிலளிநீக்குஅப்படி பணம் செலுத்த முடியாது. அடுத்த ட்ரிப் எத்தனை நாட்கள் கழித்துப் போட்டாலும் அப்போது அதில் சேர்ப்பார்கள்.
நீக்குஅது ஆச்சு ஒரு 2 வருஷம். அதுக்கப்புறமா ஆன்லைனிலேயே எதுவும் புக் செய்வதில்லை. பையர் மட்டும் ரெட் டாக்சியை ஆன்லைனில் கூப்பிட்டுப்பார் உள்ளூருக்குள் போக வேண்டிய இடங்களுக்கு.
நீக்குID மாற்றாமல் இப்பது புக் செய்தாலும் ஞாபகமாகக் கழிப்பார்கள்!
நீக்குஒரு காலத்தில் ஃபாஸ்ட் ட்ராக் நல்ல பெயரில் ஓடிக் கொண்டிருந்தது. திடீர்னு என்ன ஆச்சோ தெரியலை.
பதிலளிநீக்குகாதலிக்க நேரமில்லை பாடலை உல்டாவாகப் போட்ட இந்த முகநூல்ப் பக்கம் நான் இன்று வரை பார்க்கலை.
//காதலிக்க நேரமில்லை பாடலை உல்டாவாகப் போட்ட இந்த முகநூல்ப் பக்கம் நான் இன்று வரை பார்க்கலை.//
நீக்குஅது ரொம்பப் பழசு கீதா அக்கா.
நகைச்சுவைத்துணுக்குகள் எல்லாம் பொடிப்பொடியாக இருந்தாலும் கூடியவரை பெரிசு பண்ணிப் படிச்சேன். எல்லாம் ஆனந்த விகடனில் வாணி வரைந்தவை அல்லவா? பால்காரர்கள் பலர் இப்படிச் செய்வதை நிறையக் கண்டிருக்கேன். இதற்கு மனிதாபிமானம் ஒரு காரணம் என்றாலும் இன்னொரு முக்கியக் காரணம் இதே செல்லங்கள் பெரிதானதும் அவரைத் துரத்தாமல் இருக்கும்.
பதிலளிநீக்குதனித்தனி ஜோக்காக கட் செய்து போட்டிருந்தால் படிக்க முடிந்திருக்கும். நானும் அப்படியே போட்டு விட்டேன்!
நீக்குஓலா ரீலா விட்டு சாம்பாரிக்குது...
பதிலளிநீக்குசகோ கமலா ஹரிஹரன் அவர்கள் நலம் பெற்று வந்ததில் மகிழ்ச்சி. நேற்று கூட நினைவு வந்தது. இன்று வந்து விட்டார்.
//ஓலா ரீலா விட்டு சாம்பாரிக்குது..//
நீக்குஹா.. ஹா.. ஹா... ஊபரும்தான்.
மாமனார் இருந்தவரை வாரம் ஒரு நாள் பூண்டு ரசம் கட்டாயமாய் உண்டு. அன்னிக்கு மாமியார் மோர் சாதமே சாப்பிட்டுக்கறேன்னு கோவிச்சுப்பாங்க. அம்பத்தூரிலே இருக்கையில் சின்ன வெங்காயம், பூண்டு போட்ட குழம்பு பக்கத்து வீட்டு மாமி அடிக்கடி பண்ணுவாங்க. ஒரு கிண்ணத்தில் குழம்பு எங்க வீட்டுக்கும் வரும். மாமனார் அதுக்காகக் காத்திருந்து சாப்பிடுவார். நாங்க எப்போவானும் பூண்டு சாப்பிட்டுக் கொண்டு இருந்தோம். ஆனால் அது கமலா சொல்றாப்போல் எங்களுக்கு ஒத்துக்கலை. அதே போல் கண்டந்திப்பிலி, பிரண்டை போன்றவையும் ஒத்துக்கறதில்லை. ஓமவல்லி இலையைப் போட்டு ரசம் வைத்துச் சாப்பிட்டேன் சில நாட்கள் முன்னால். ஒரு வாரத்துக்கு வயிற்றுப் போக்கு, வயிற்றில் வலி! அப்புறமா அதையும் விட்டுட்டேன். :(
பதிலளிநீக்கு//சின்ன வெங்காயம், பூண்டு போட்ட குழம்பு பக்கத்து வீட்டு மாமி அடிக்கடி பண்ணுவாங்க.//
நீக்குநாங்களும். குறிப்பக அப்படி நான் வைக்கும் குழம்பு முன்னர் எங்கள் அலுவலகத்தில் கூட பேமஸ்!
நீங்கள் சொல்லும் மற்ற ஐட்டங்கள் நான் உபயோகம் செய்வதில்லை. நேற்று அம்மா திதி. அதில் பிரண்டைத்துவையல் சாப்பிட்டேன்.
பூஸார் குட்டிகளுக்கு பாலூற்றும் மனிதர் வாழ்க!
பதிலளிநீக்குகீதா
பஹ்ரைனில் நான் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பூங்காவில், ஒரு வட இந்தியப் பெண் காலையில் பூனை உணவு கொண்டுவந்து (ஏதோ கார்ன்ஃப்ளக்ஸ் போல இருக்கும்), நடைபாதையின் ஓரத்தில் ஐந்து ஆறு இடங்களில் வைப்பார். அவர் வரும்போது ஏகப்பட்ட பூனைகள் அவர் பின்னாலேயே ஓடும். சில சாப்பிடும் ஆனால் அவைகள் தங்கள் அன்பைத் தெரிவிப்பது ஆச்சர்யமாக இருக்கும்.
நீக்குயு டியூபில் இதுபோன்ற நிறைய காணொளிகள் அவ்வப்போது பார்த்ததுண்டு.. ரசிக்க வைக்கும்.
நீக்குமனித நேயம் நெகிழ்ச்சி
பதிலளிநீக்குநன்றி.
நீக்குவழமை போல சுவையான கதம்பம். ஓலா, ஊபர் ஃபாஸ்ட் ட்ராக் சில சமயம் ரெட் டாக்சி என அனைத்திலும் இப்படியான சில Gகப்லா சம்பவங்கள் உண்டு.
பதிலளிநீக்குஅனைத்தும் ரசித்தேன்.
ரெட் டாக்சி எங்களுக்கு ஒத்துப் போகும். ஆனால் பையர் குற்றம் சொல்லுவார். :))))
நீக்குரெட் டாக்சி கேள்விப்பட்டதில்லை. சமீபத்தில் சென்னையில் ஒரு ஆட்டோவில் திருச்சி மீட்டர் கட்டணம் என்று பின்னால் ஒரு போர்ட் பார்த்தேன். அது ஊபர் போல திருச்சியில் ஓடுவது என்று எங்கள் ஆ ஆ சொன்னார்.
நீக்குஅதுசரி, Gகப்லா என்றால் என்ன?
Gகப்லா என்றால் Scam!:)
நீக்குஓ... நன்றி வெங்கட்..
நீக்குஜோக்ஸ் வாசிக்க முடிந்தது ஸ்ரீராம்...எல்லாமே
பதிலளிநீக்குகூட்டத்துக்கு வந்ததெ அவன் ஒருத்தன், மனைவி மந்திரி, குடிசைத்தொழில், பலூன்.....சிரித்துவிட்டேன்
கீதா
நன்றி கீதா.
நீக்குஉல்டா பாடல் செம....பொருத்தமா எழுதியிருக்கீங்க
பதிலளிநீக்குகீதா
நன்றி கீதா.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா.. வணக்கம்.
நீக்குகதம்பம் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குவாடகை வாகனங்களால் ஏற்படும் தொல்லைகள் , அனுபவங்கள் நிறைய இருக்கிறது உங்களுக்கு.
உடலில் ஏற்படும் வலிகளுக்கு கடுகு எண்ணெய் அல்லது விளக்கெண்ணையில் பூண்டு தட்டிப்போட்டு காய்ச்சி தேய்க்க சொன்னார் முகநூல் சகோதரி மீரா பாலாஜி. அதை கடைபிடிக்கிறேன். என் கால், கை, இடுப்புவலிக்கு.
பூண்டுக்களி, பூண்டு குழம்பு, நடை காயம் எனும் மருந்தில் பூண்டு உண்டு. என்று குழந்தைபெற்ற வீட்டில் அம்மா தருவார்கள் மருந்துதாக விழுங்கி வைத்து இருக்கிறேன். வீட்டில் செய்யும் துவரம், கூட்டிலில் ஒரு பல் பூண்டு, கொஞ்சம் சீரகம் அரைத்து சேர்ப்பார்கள்.பண்டிகை, விரத நாட்களில் பூண்டு சேர்க்க மாட்டார்கள். ரசத்தில் பூண்டு தட்டி போடுவார்கள்.
பூண்டு பகிர்வு பயன்கள் நன்று.
உங்கள் உல்டா பாடல் நன்றாக இருக்கிறது.
பூனைக்கு பால்வார்ப்பது அவரின் இரக்க சிந்தனையை காட்டுது. ஆனால் மண்லாக இருக்கே! அந்த இடம் பூனை குடித்து இருக்குமா?
நகைச்சுவை பகிர்வும் அருமை.
//அனுபவங்கள் நிறைய இருக்கிறது உங்களுக்கு.//
நீக்குஅலுவலகம் போவதற்கே அவர்கள் உதவி தேவையாச்சே...!
ஆம், பூண்டு கைகால் வலியை எடுக்கும் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
உல்ட்டா பாடலையும் மற்றவற்றையும் ரசித்ததற்கு நன்றி கோமதி அக்கா.
பூண்டு மருத்துவம் ஓரளவுக்குத் தெரிந்ததே..
பதிலளிநீக்குநகைச்சுவைக் கொத்து அருமை.. படித்த நினைவு...
நன்றி துரை செல்வராஜூ ஸார்.
நீக்குஸ்ரீமதி கமலா ஹரிஹரன் அவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் என்றென்றும் துணையிருப்பானாக!..
பதிலளிநீக்குநலமே வாழ்க...
வாழ்க நலம்.
நீக்குஊபர்னு ஒரு புத்தகமே போடலாம் போல இருக்கு. சங்கடமான சென்னை ஆகிவிட்டதே.:(
பதிலளிநீக்கு:)))
நீக்குஇந்த வியாழனில் ஜெயக்குமார் சந்திரசேகரன் ஸாரையும் காணோம். DD யையும் காணோம்.
பதிலளிநீக்குகதம்பம் ஜோக்ஸ், பால் ஊத்தும் மனிதம் என நன்று.
பதிலளிநீக்குFast track-ம் ஓலா, உபேர் ட்ராக்தான். நொந்து கொள்வதைத் தவிர வேறு வழிகள் இருப்பதில்லை. பூண்டின் பயன்கள், நல்லதொரு பகிர்வு. புகைப்படமும் படத்தின் செய்தியும் அருமை.
பதிலளிநீக்கு