சனி, 14 ஜனவரி, 2023

ஜெர்லின் அனிகா மற்றும் நான் படிச்ச கதை

 



===================================================================================================

 

நான் படிச்ச கதை தகவல்கள் (JK)

சொன்னவர்: தென்கச்சி



தகவல் என்றாலே தென்கச்சி சுவாமிநாதன் (1946-2009) பெயர் நினைவில் வரும்அவருடையஇன்று ஒரு தகவல்தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் ஓரம் கட்டி 1988 முதல் 14 ஆண்டுகள் வானொலியில் ஒளிபரப்பானது.

ஆற்றொழுக்கான நடையில் ஏற்ற இறக்கம் இல்லாமல் சாதாரண பேச்சு வழக்காகப் பேசிக் கொண்டே சென்று கடைசியில் அவர் சிரிக்காமல், மற்றவர்களின் சிரிப்பைநெல்லிக்காய் மூட்டையை அவிழ்ப்பது போன்று குபீரென்று அவிழ்த்து விடும் தனித்  திறமை அவருடையது. 

இன்றைய பதிவில் அவர் சொன்ன இரண்டு தகவல்கள் இடம் பெறுகின்றன….கதைக்கும் தகவலுக்கும் வித்தியாசம் உண்டு. கதையில் கற்பனை உண்டு. தகவலில் கற்பனை இல்லை. கற்பனை இருந்தால் அது “fake” ஆகி விடும்……முதல் தகவல் மாலை மலரில் இருந்தும் இரண்டாவது தகவல் சிறுகதைகள் தளத்தில் இருந்தும் எடுக்கப்பட்டவை. இரண்டாவது தகவல் இக்காலத்திற்கும்  மிகவும் பொருந்தும்

இன்று ஒரு தகவல்பிறந்த கதை! தகவல்.

 மாலை மலர்

 

மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற தென்கச்சி கோ.சுவாமிநாதனின்இன்று ஒரு தகவல்சென்னை வானொலியில் தொடர்ந்து பதினான்கு ஆண்டுகள் ஒலிபரப்பானது

 

இந்தஇன்று ஒரு தகவல்நிகழ்ச்சி உருவானதே ஒரு சுவாரசியமான சம்பவம். அது குறித்து தென்கச்சி சுவாமிநாதன் கூறியதை காது கொடுத்து கேட்போமா....

 

சென்னை வானொலியில் வேலை பார்த்த சமயம் ஒரு நாள் கேன்டீனுக்கு சாப்பிட சென்றேன். அப்போது சக ஊழியர்களிடம் பேசிக்கொண்டிருந்த போதுஇனி நீங்கள் ரேடியோவுல சிரமப்பட்டு நிகழ்ச்சிகளை தயார் செய்ய வேண்டாம். ஏனா தொலைக்காட்சி வந்து விட்டது. எல்லாரும் ……அதைத்தான் பார்க்கப் போறாங்க... நாம ஒண்ணும் அதிகமா சிரமப்பட வேண்டாம்... என்று வேடிக்கையா சொல்லிக்கிட்டு இருந்தேன்.

 

இது எப்படியோ எங்கள் இயக்குனர் காதுக்கு போயிட்டுது. உடனே அவர் என்னைக் கூப்பிட்டுஇது மாதிரி பேசிக்கிட்டு இருந்தியாமேஎன்றார். ஆமா சார் என்றேன்.

 

நாளையில இருந்து தினமும்  காலையில ஒரு ஐந்து நிமிசம் நேரத்தை ஒதுக்கி தர்றோம். ஜனங்களுக்கு உபயோகமான ஏதாவது ஒரு விஷயத்தை சொல்லுனு கூறினார்.

 

தவளை தன்வாயால கெடும்னு சொல்லுவாங்களே... அப்படி ஆயிட்டுது என்னோட நெலம...

 

அவர், ஆரம்பிக்கும் போதேஇன்று ஒரு தகவல்ன்னு ஆரம்பிக்கலாம், தினமும் ஐஞ்சி நிமிஷம் பேசுன்னார்.

 

அப்போது விவசாய ஒலிபரப்பின் பொறுப்பாளராகவும்  நான் இருந்ததால், தினமும் இந்த நிகழ்ச்சியை தயாரிப்பது சிரமாக இருக்கும். அதனால வாரத்துக்கு ஒரு நிகழ்ச்சின்னு வச்சிக்கலாமே என்றேன்.

 

அதற்கு அவர், இல்ல இல்ல... நீயே தொடர்ந்து சொல்ல வேண்டாம். ஒரு மாதம் சொன்னால் போதும். அடுத்த மாசத்துக்கு வேறொரு பொறுப்பாளரை நியமிச்சுடலாம்... அப்படின்னு சொல்லிதான் அந்த பொறுப்பை எங்கிட்ட ஒப்படைச்சார்.

 

1988 ஜூலை முதல் தேதி இதை தொடங்கினோம். ஜூலை 30-ந்தேதி கடைசி நேரத்தில இயக்குனரிடம் கிட்ட போய் சொன்னேன். என்னோட கடமை முடிஞ்சுது. அடுத்தவரை ஏற்பாடு செய்யுங்கள் என்றேன்.

 

அப்ப அய்யய்யோ... நான் மறந்துட்டேனே. திடீர்னு இந்த நிகழ்ச்சியை வேறு ஒருத்தர் கிட்ட ஒப்படைச்சோம்னா அவர் சிரமப்படுவார். அதனால ஆகஸ்ட் மாதமும் நீயே சொல்லிக்கிட்டு வா... செப்டம்பர்ல மாத்திக்கிடலாம் என்றார்.

 

வேறு வழியில்லாததால் ஒத்துக்கிட்டு வந்தேன். இந்த முறை ஆகஸ்ட் 15-ந்தேதியில் இருந்தே எனக்கு சுதந்திரம் கொடுங்க, எனக்கு சுதந்திரம் கொடுங்கன்னு... சொல்ல ஆரம்பிச்சேன்.

 

அவரு என்ன பண்ணினார்... 28-ந்தேதி வாக்கில் என்னை கூப்பிட்டு சிற்றுண்டி வாங்கி கொடுத்தார். ஒரு இயக்குனர் ஊழியருக்கு வாங்கி கொடுப்பது ரொம்ப ஆச்சரியம்.

 

எதுக்கு இப்படி வாங்கிக் கொடுக்கிறார் என்று யோசிச்சுக்கிட்டு இருந்தேன்.

 

வெளியில போகுற இடமெல்லாம்இன்று ஒரு தகவல்நிகழ்ச்சி நல்லா இருக்குன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க. அதனால நீயே இதைத் தொடர்ந்து பண்ணினா நல்லா இருக்கும்... அப்படின்னு சொல்லி தொடரதுக்காக அந்த ரெண்டு வடையும் ஒரு டீயும் வாங்கி கொடுத்தார்.

 

அந்த வடைக்கும் டீக்கும் நன்றியுள்ளவனாக இதுவரை 14 ஆண்டுகள் சொல்லிக்கிட்டு இருக்கேன்.

 

தொடர்ந்து சொல்ல சிரமமா இருக்கும்... நீ எப்ப வேண்டாம்னு சொல்லுறியோ அப்ப நிறுத்திக்கலாம் என்றார்.

 

நான் வேண்டாம்னு சொல்ற கட்டத்துக்கு வரும் போது அவர் டிரான்ஸ்பராகி சென்றுவிட்டார். அதனால அதையும் சொல்ல முடியல.

 

ஆரம்பத்துல இது சுமையா தெரிஞ்சது. ஏனா ஒரே நிகழ்ச்சியை தினந்தோறும் சொல்ல வேண்டி இருக்குதுன்னு... அப்புறம் அது சுகமா போச்சு. ஏன்னா அது பழக்கப்பட்டு போச்சு.

 

அதுக்கு இடையில பார்வையற்றவர்கள் எல்லாம் என்னை தேடிவர ஆரம்பிச்சாங்க. அது யாரு இன்று ஒரு தகவல் சொல்றவர்னு? என்னை தடவி பார்க்கிறது... முகத்தை தடவி பார்க்கிறது... அப்படி ஒரு ஆர்வம் அவர்களுக்கு.

 

என்னனு கேட்டா, எங்களுக்கு பல புத்தகங்களை படிக்கிறதுக்கு சாத்தியமில்ல. எங்களுக்காக நீங்க பல புத்தகங்கள படிச்சுட்டு சொல்லுறீங்க... அதனால இதை நிறுத்திடாதீங்க சார். தொடர்ந்து நடத்தனும்னு சொல்லி... அவர்கள் தான் எனக்கு ஊக்கம் கொடுத்தாங்க. அதனால இதனை உற்சாகத்தோடு செய்ய ஆரம்பிச்சிட்டேன்.

 

--தொகுப்பு கோவசந்த்

அரசியல் நாகரிகம்!

கதையாசிரியர்: தென்கச்சி கோ.சுவாமிநாதன் 



அண்மையில் என் நண்பரான ஓர் அரசியல்வாதியைச் சந்தித்தேன். மிகவும் கவலையோடு காணப்பட்டார்.

என்ன காரணம்?” என்று கேட்டேன்.

என் சொந்தக்காரன் ஒருத்தன் உடம்பு சுகமில்லாம ஆஸ்பத்திரியில் இருக்கான்!”

சரி.. போய்ப் பார்த்துட்டு வர வேண்டியதுதானே?”

முடியாதே. அவன் வேற கட்சியில யில்ல இருக்கான்.”

கட்சி எதுவா இருந்தா என்னசொந்தம் இல்லன்னு ஆயிடுமா?”

இது உங்களுக்குத் தெரியுதுஎங்க தலைவருக்குத் தெரியலையே! நான் போய் அவனைப் பார்த்தேன்னு தெரிஞ்சா போதும்எங்கள் கட்சிக்குள்ளே பெரிய விவகாரமாயிடும்!”

அரசியல், நட்பையும் உறவையும்கூட பிரித்து விடுகிற அதிசய உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!

அந்தக் காலத்தில் புதுக்கோட்டை ராமையா என்றொருவர் பத்தாண்டுகள் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தார். ஆனாலும் கடைசி வரையில் அவருக்குச் சொந்தமாக ஒரு வீடு இல்லை. பிற்காலத்தில் அவர் இந்திரா காங்கிரஸில் சேர்ந்தார்.

அப்போது நடந்த ஒரு நிகழ்ச்சி இப்போது நினைவுக்கு வருகிறது

சென்னை விமான நிலையம்.

எல்லோரும்  காத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சற்று நேரத்தில் இந்திராகாந்தி வரப் போகிறார்.

காமராசரும் அவர் பக்கத்தில் சுராசாராமும் நின்று கொண்டிருக்கின்றனர். இந்தச் சமயத்தில் ஒரு பெரிய மாலையைத் தூக்கிக் கொண்டு ராமையா அங்கே ஓடி வருகிறார். இதைப் பார்த்த ராசாராம், காமராசரிடம், “இவ்வளவு பயபக்தியுடன் இருக்கிறாரேஇவரை ஏன் உங்க கட்சியிலேயே வைத்துக் கொள்ளாமல் இந்திரா காங்கிரஸில் சேர விட்டீர்கள்!” என்று கேட்கிறார்.

அதற்கு காமராசர்ராமையாகிட்டே காலணாகூட இல்லயாருகிட்டேயாவது சொல்லி அவருக்கு மாசம் 500 ரூபாய் கொடுக்க ஏற்பாடு செய்யலாம், தலைவர் பதவியும் கொடுத்து, மாதம் 15000 ரூபாய் செலவுக்கும் கொடுப்பதாக இந்திரா காங்கிரஸ் கட்சி கூறியதாக என்னிடம் சொன்னார்.”

சரிஅதுக்காக

நான்தான் போய்ச் சேருங்கள் என்று சொன்னேன். அந்த அளவுக்குக் காசு இங்கே கொடுக்க முடியாதே! அதனால நான்தான் அவரை அனுப்பி வச்சேன்!”

சுட்டி

தென்கச்சி

இவருடைய பேட்டி ஒன்று  தென்றலில் வந்துள்ளது. அதில் இவரைப் பற்றிய விவரங்கள் யாவையும் காணலாம். அதில் இருந்து ஒரு சுவாரசியமான தகவல். 

முதல் நேர்காணல் 

முதல் நேர்காணல் சினிமா நடிகர் தங்கவேலுவை நேர்காணல் செய்தது தான். நான் அப்போதுதான் திருநெல்வேலி வானொலி நிலையத்தில் சேர்ந்திருந்தேன். தங்கவேலுவும் அவர் மனைவி எம். சரோஜாவும் திருநெல்வேலியில் நாடகம் நடத்துறதுக்காக வந்திருந்தாங்க. நான் வேலைக்கு சேர்ந்த புதுசு. எங்க டைரக்டர் கிட்டசார் நான் புதுசு. நேர்காணல் செய்த அனுபவம் எல்லாம் ஏதும் இல்ல அப்படின்னேன். “அப்புறம் எப்படி நீ எல்லாத்தையும் கத்துக்கிறது. நீயே போய் பண்ணிட்டு வான்னார். நானும் கொஞ்சம் பயந்து கிட்டே தான் போனேன் 

தங்கவேலுபயப்படாம கேள்வி கேளப்பா பதில் சொல்றேன்ன்னார். நானும் கொஞ்சம் தைரியத்தை வரவழைச்க்கிட்டுமுதல் தடவை நீங்க எப்ப சார் மேடை ஏறினீங்க. அந்த அனுபவத்தைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்ன்னேன் 

அதுக்கு அவர்அத ஏன் கேட்கிறீங்க தம்பி. எனக்கு அனுமார் வேசத்தைப் போட்டு மேடையிலே ஏத்திட்டாங்க. பேசறதுக்கு வசனமே கொடுக்கல. என்னை ஸ்டூல்ல ஒரு மூலைல பேசாம உட்கார வச்சிட்டாங்க. இதுதான் நான் முதல்லே போட்ட வேஷம்”. அப்படின்னார். 

ரொம்ப கஷ்டப்பட்டு நடிச்சிருப்பீங்க போல சார்அப்படின்னேன். “அதுல என்ன தம்பி கஷ்டம். வசனமே இல்ல. சும்மாதானே உட்கார்ந்திருக்கணும்." அப்படின்னார். "அனுமார் வேஷம் போட்டு சும்மா உட்கார்ந்திருக்கறது கஷ்டம் இல்லையா" அப்படின்னேன்.

உடனேஹா ஹா ன்னு  ன்னு சிரிச்சார். பரவாயில்லையே, என்னை மாதிரியே பேசறயே நீஅப்படின்னார். அப்புறம் கொஞ்சம் நல்ல தைரியம் வந்து நிறைய கேள்விகளை கேட்டு அந்த நேர்காணலை முடிச்சேன். 

என்ன மாதிரியே பேசுறியே நீ ன்னு அன்னிக்கு அவர் சொன்னார். பிற்காலத்தில் அவர் கடைசியா நடிச்ச படம் ஒண்ணுக்கு அவர் மறைவுக்குப் பின்னாடி நான் டப்பிங் பேச வேண்டி வந்தது.

சுட்டி

 


24 கருத்துகள்:

  1. காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  2. சிவாஜி கணேசன் தினமும் தவறாது வானொலியில் 'இன்றொரு தகவல்' கேட்பாராம். ஒரு பேட்டியில் சொன்னது நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
  3. தென்றல் பத்திரிகை என்றால் கண்ணதாசனின் நினைவு தான் வரும். ஆனால் இங்கு குறிப்பிடப் பட்டிருக்கும் தென்றல் வட அமெரிக்காவிலிருந்து வெளிவரும் தமிழ் பத்திரிகை. 60 பக்கங்களுக்குக் குறையாமல் கலைமகள் அளவில் வெளிவரும் அற்புதமான இலவச இதழ். இந்திய கடைகளில் வெளிப்பக்கம் கட்டு கட்டாக அடுக்கப்பட்டிருக்கும். பொருள்கள் வாங்கிக் கொண்டு வெளிவரும் பொழுது எடுத்து வரலாம்.
    நானும் இந்தப் பத்திரிகைக்கு எழுதியிருக்கிறேன். எபியில் 'கேட்டு வாங்கிப் போட்ட' முதல் கதை இந்தப் பத்திரிகையில் வெளிவந்தது தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தென்றல் பற்றிய தகவலுக்கு நன்றி அய்யா. இந்த பதிவு அவசரமாகத் தயாரிக்கப் பட்டது. குளத்தங்கரை அடுத்தவாரம். பொதுவே எந்த செய்தியானாலும், கதையானாலும் சுவாரசியம் சொல்லும் விதத்தில் அடங்கியுள்ளது என்பது உங்களுக்குத் தெரியும். தென்கச்சி அந்த சொல்லும் கலையை சிறப்பாகச் செய்வார். 

      நீக்கு
    2. ஆமாம். அவர் சொல்லிக் கொண்டு வரும் பொழுதே கடைசியில் நகைச்சுவையுடன் எப்படி முடிக்கப் போறாரோ என்று ஆவல் கூடும். நானும் தினமும் கேட்டு ரசித்தவன் தான்.

      நீக்கு
  4. இந்திரா காந்தி அமைச்சரவையில் அற்புதமாக செயல்பட்ட தமிழகத்து தவபுதல்வர்கள் சி.சுப்பிரமணியமும்
    ஆர். வெங்கட்ராமனும்.
    இவர்களையும் காமராஜர்
    தான் அனுப்பி வைத்தார் என்று யாராவது நினைத்து விடப் போகிறார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருவரும் யோசித்து, எது தங்கள் வாழ்க்கைக்கு உபயோகமாக இருக்கும் எனத் தீர்மானித்திருப்பார்கள்.

      நீக்கு
  5. முதல் பாசிடிவ் செய்தி கவர்ந்தது.

    இன்று ஒரு தகவல் தென்கச்சி பற்றிய தொகுப்பும் நன்றாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நெல்லை சார். ஞாயிறு அன்று பார்க்கலாம். திங்கள் அன்று உங்கள் இடத்தை நான் பிடித்திருப்பேன் என்பது தகவல்.

      நீக்கு
  6. தென்கச்சி சுவாமிநாதன் அவர்களின் பேச்சுக்களை நான் விரும்பி கேட்பேன்.

    பதிலளிநீக்கு
  7. ஜெர்லின் செய்த முயற்சி, பயிற்சி வெற்றிகளை பெற்று தந்துள்ளது , வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  8. இன்றளவும் கோடை பண்பலையில் தென்கச்சி சுவாமிநாதன் அவர்களின் பேச்சை கேட்கலாம்...

    பதிலளிநீக்கு
  9. தென்கச்சி சுவாமிநாதன் அவர்களின் இன்று ஒரு தகவலை விரும்பி கேட்பேன். பகிர்வு அருமை.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான வணக்கங்கள். அனைவருக்கும் போகி, மற்றும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

    இன்றைய பாஸிடிவ் செய்தியும், திரு தென்கச்சி சுவாமிநாதன் அவர்களைப் பற்றிய தொகுப்பும் நன்றாக உள்ளது. நாங்களும் முன்பு அவரின் இன்று ஒரு தகவல் நிகழ்ச்சியை தினமும் விரும்பி கேட்போம்.

    சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்கள் பூரண நலமடைந்து இருப்பார் என நம்புகிறேன். அவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றிகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரார்த்தனைகளுக்கும் பாராட்டுகளும் நன்றி அம்மா. பூர்ண குணம் அடையவில்லை, படிப்படியாகத் தான் சரியாகும். 

      நீக்கு
  11. தென்கச்சி சுவாமிநாதன் அவர்களின் பகிர்வு நன்று.
    முயற்சி வெற்றி தரும் என்று செயல்பட்ட ஜெர்லின் அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  12. தென்கச்சி சுவாமிநாதன் அவர்கள் மக்கள் மனங்களில் நிறைந்தவர்..

    என்றும் அவர் புகழ் வாழ்க..

    பதிலளிநீக்கு
  13. ஜெர்லின் அனிகா செய்தி மனதைத் தொட்டது! வாழ்த்துகளும் பாராட்டுகளும். என்ன ஒரு ஊக்கம்! தன்னம்பிக்கை! தன் இயலாமையால் மூலையில் முடங்காமல் சாதிக்கிறார்.

    கீதா

    பதிலளிநீக்கு
  14. தென்கச்சி அவர்களைப் பற்றிய தகவல்க வெகு சுவாரசியம். அவரது இன்று ஒரு தகவல் விரும்பிக் கேட்டதுண்டு. ஜெ கே அண்ணா வின் முயற்சியைப் பாராட்ட வேண்டும். கதைகள் மட்டுமின்றி இப்படியானவற்றையும் தேடி வாசித்துப் பகிர்வது சிறப்பு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு மாறுதல் இல்லையேல் பதிவுகளும் புளிக்கும் நன்றி பாராட்டுகளுக்கு,

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!