ஞாயிறு, 8 ஜனவரி, 2023

நான் பயணம் செய்த இடங்களின் படங்கள் தொகுதி :: நெல்லைத்தமிழன்

 

 குற்றாலம்   பகுதி 1   

என்னது..குற்றாலமா? நாங்கள்லாம் சின்னப் பசங்கன்னு நினைப்பா? நாங்க பார்க்காத குற்றாலமா? அப்படீன்னெல்லாம் கேள்விகள் கேட்காதீங்க.  பதிவு முடிந்தும் சொல்லுங்க. உங்கள்ல பெரும்பாலானவர்கள் பார்க்காதவற்றைப் பகிர்ந்திருக்கிறேனா இல்லையா என்று.

குற்றாலத்துக்கு எங்கேயிருந்து தண்ணீர் வருது, குறவஞ்சி, மூலிகை…. என்றெல்லாம் ஏதேனும் எதிர்பார்த்தீங்கன்னா, அவைகள் இங்கு இல்லை. படப்பகிர்வுதான்.

குற்றாலத்தில் என்னைக் கவர்ந்த விஷயம் நான் சென்றிருந்த மே மாதத்தில் அங்கு கிடைத்த இளம் நுங்கு. பனையோலையில் வைத்து 50 ரூபாய்க்கு பத்து நுங்கு கொடுத்தார்கள். சித்திர சபை. தென்காசியில் பார்த்த காசி விஸ்வநாதர் கோவில்.  மற்றபடி, பல்வேறு அருவிகள் இருக்கின்றன. நெல்லையில் இருந்தபோது சில தடவைகள் குற்றால அருவியில் குளிக்கச் சென்றிருக்கிறேன். 2019ல், வேறொரு விஷயத்துக்காக தென்காசி அருகில் சென்றிருந்தேன். நெல்லையில் தங்கின நாங்கள், தென்காசி இன்னபிற இடங்களுக்குச் செல்ல ஒரு ஆட்டோ அமர்த்தியிருந்தோம். அந்தப் பையன் முந்தினநாள் இரவு நேரம் தாழ்ந்து, குற்றாலத்தில் இன்னும் சீசன் ஆரம்பிக்கலை சார், தண்ணீர் வரத்து இல்லை. காசு வாங்கிக்கொண்டு, உங்களை அவ்வளவு தூரம் கூட்டிச்சென்று அருவிகளில் நீர் இல்லைனா, அது நியாயமில்ல. அதுனால நீங்க பஸ்ஸுலயே போயிடுங்க என்று சொல்லிவிட்டான். (பாருங்க நேர்மையை)

ஆனால் அதுவே எனக்கு ஒரு புது அனுபவத்தைக் கொடுத்தது. நான் அதுவரை பார்த்திராத குற்றாலம். வாருங்கள் பார்ப்போம்.













பொதுவா ஜூன் 1ம் தேதிலேர்ந்துதான் குற்றாலத்துல சீசன் ஆரம்பிக்கும். நாங்க போயிருந்தது 8 நாள் முன்பு. சீசன் ஆரம்பிச்சாச்சுன்னா..கூட்டம் சொல்லிமாளாது. நிறைய பழக்கடைகள், புரோட்டா கடைகள்லாம் முளச்சுடும். இப்படி ஜிலோன்னு இருக்காது.

சரிஅருவியைத்தான் காமிக்கலைநுங்கையாவது காமிச்சிருக்கலாமே என்பவர்களுக்காக….

குற்றாலம் சம்பந்தமான இன்னொரு பதிவில் சந்திப்போம்.

= = = = = =

2022 ஆம் ஆண்டு எங்கள் Blog புள்ளி விவரங்களை இன்றிலிருந்து தொடர்ந்து அந்தந்த நாளுக்கு சம்பந்தப்பட்ட குறிப்புகளோடு ஒரு வாரத்திற்கு தொடர்ந்து கொடுத்துவிடுவோம். 

2022 ஆம் ஆண்டின் மொத்த பதிவுகள் : 365. (2019 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து நாலாவது வருடமாக ஒவ்வொரு நாளைக்கும் ஒரு பதிவு என்பதை உங்கள் ஆதரவோடு செய்து வருகிறோம். )

சென்ற ஆண்டின் ஐம்பத்து இரண்டு ஞாயிறுகளில், ஆஸ்தான ஆசிரியப் பதிவுகளை கணக்கில் எடுக்காமல், மற்ற பதிவுகளை மட்டும் கணக்கில் எடுத்தால், 

நெல்லைத்தமிழன் 17 வாரங்களிலும், கீதா ரெங்கன் ஒரு வாரமும் படங்கள் பதிவு செய்துள்ளனர். 

2022 ஆம் ஆண்டின் EBSPPK (Engal Blog Sunday Picture Posts King) award goes to நெல்லைத்தமிழன். 

திங்கள் பதிவுகள் பற்றி நாளை பார்ப்போம். 

= = = = = = = 


82 கருத்துகள்:

  1. குற்றாலத்திற்கு வெகு அருகில் காட்டுப்பாதையில் உள்ளே உள்ளே சென்றால் திருமுருகன் கோயில் ஒன்று உண்டு.
    நெடிதுயர்ந்த மரங்கள், மாலை மங்கிய நேரம்,
    குறுகிய நீண்ட வளைவுப் பாதை, ஹோவென்று சுழன்றடித்த காற்று என்று
    ஒரு த்ரில்லிங் அனுபவத்துடன் காட்டுப் பாதையில் நுழைந்து மாதவன் மருகனை தரிசித்தோம். அழகு கொஞ்சும் குமார குருபரன். என்ன தவம் செய்தோம் என்று இப்பொழுதும்
    நினைவுகள் நீள்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு இது செய்தி. குன்றுப் பகுதியில் அவன் குடிகொண்டிருப்பான். அடுத்த முறை நினைவில் வைத்துக்கொள்கிறேன்.

      நீக்கு
    2. குற்றாலத்திலிருந்து ஆட்டோவில் போய் அதே ஆட்டோவில் திரும்பும் வசதி கிடைக்கிறது. ஒரு ஆட்டோ ஓட்டுனர்
      "வாங்க சார்.. நா கூட்டிப் போய் வாரேன்.." என்று சொல்லியே இந்த தரிசனப் பேறு கிடைத்தது.

      நீக்கு
    3. இறை தரிசனம் என்பதே அவனருளால் கிடைப்பது.

      நான் ரொம்ப வருடங்களாக ஆளவந்தார் (வைணவ ஆச்சார்யர்) தினமும் காவிரியில் குளித்த படித்துறை மற்றும் மணவாளமாமுநிகளின் திருவரசுக்குச் செல்லவேண்டும் என நினைத்திருந்தேன். இந்தமுறை இருவரின் திருவரசு தரிசனம் கிட்டியது.

      நீக்கு
  2. தெரியாதவைகளை தெரியப்படுத்தும் பாங்கு,
    திருக்கோயில்களில் தெய்வ தரிசன அனுபவங்கள், அந்தந்த கோயில்களில் இருக்கும் நடைமுறைகள், மற்றவர் தரிசனத்திற்கும் வழிகாட்டும் குறிப்புகள்
    இதெல்லாம் படங்களில்
    கிடைப்பதில்லை. எழுதி எழுதிச் சொல்லும் அழகில் தான் இருக்கின்றன. இது என் தனிப்பட்ட கருத்து..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்ல வருவது புரிகிறது. மெதுவாக ஞாயிறு படப்பதிவிலிருந்து பயணக் குறிப்புகளாக.... இதைப்பற்றி யோசிக்கிறேன். ஆனால் ஞாயிறு பதிவின் நோக்கமாக அதனை நினைக்கவில்லை. எனக்கும் கோவில் நடைமுறைகள் போன்றவை தெரியாது

      நீக்கு
  3. இந்த நாள் இனிய நாள்..

    எல்லாருக்கும் இறைவன் அருளட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. //உங்கள்ல பெரும்பாலானவர்கள் பார்க்காதவற்றைப் பகிர்ந்திருக்கிறேனா இல்லையா என்று.//

    குற்றாலம் அரிதான படங்கள். மலையில் சிவலிங்கம், நிறைய தெய்வ உருவங்கள் இருப்பதை பார்த்தது இல்லை. அருவி கொட்டும் போது போய் இருக்கிறோம். நீர் வரத்து இல்லா நேரத்தில் போய் பார்க்க வேண்டும்.

    சித்திரசபையை படம் எடுக்க விட மாட்டார்கள். ஆனால் முன்னால் உள்ள தெப்பக்குளத்தில் நீராழி மண்டபம் மிக அழகாய் இருக்கும் அதை எடுத்தீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அரசு மேடம். நன்றி. படம் எடுக்க விடாத இடங்கள் உண்டோ? சித்திர சபையின் சில பகுதிகளைப் படமெடுத்திருக்கிறேன். பின்னொரு ஞாயிறில் வரும். இப்போது அடுத்த ஞாயிறுக்கு எது என யோசிக்கிறேன்.

      நீக்கு
  5. நுங்கு படம் அருமை.

    //2022 ஆம் ஆண்டின் EBSPPK (Engal Blog Sunday Picture Posts King) award goes to நெல்லைத்தமிழன். //

    வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நுங்கு சுவை சொல்லி மாளாது.

      கூடாரத்தில் நுழைந்த ஒட்டகம்போல, ஞாயிறு பதிவுகள் இந்த வருடம் என்னிடத்தில்தான் இருக்கும் எனத் தோன்றுகிறது.

      நீக்கு
  6. எஸ். நீங்கள் நினைப்பது தான் நெல்லை.

    கோயில் சென்றோம், சுவாமியை தரிசித்தோம் என்ற நிலை இன்றில்லை. திருக்கோயில்களை ஏதோ அரசு அலுவலகங்களை போல நடைமுறைப்படுத்த அரசு
    முயல்வதாகத் தோன்றுகிறது. மதியம் நீண்ட நேரம் நடை சாத்தியிருக்கிறது. நடை திறந்ததும் ஜனக்கூட்டத்தின் தள்ளு முள்ளுகள், செயற்கையாக கூட்ட நெருக்கடி ஏற்படுத்தி சிறப்பு தரிசன டிக்கெட் விற்பனையை அதிகரித்தல்.. நடை சாத்தியிருக்கும் நீண்ட நேரம் என்பது பக்கத்து வியாபார நிருவனங்களின் விற்பனைகளுக்கு ஏதுவாகவே என்று தோன்றுகிறது.


    எந்த நேரத்தில் அருகிலிருக்கும் எந்தக் கோயில் திறந்திருக்கும் என்ற சின்ன விவரம் கூட தெரிந்தால் போதும் பக்தர்களுக்கு.
    எந்தக் கோயில் திறம்திருக்கும்

    பஸ்களில் வரும் வெளியூர் பக்தர்கள் படும் அவதி சொல்லி மாளாது.
    கோயில்கள் நிறைந்திருக்கும் ஏதாவது ஊருக்கு போய் விட்டால் இரண்டு கோயில்களில் உள் நுழைந்து வெளி வரும் காரியம் மட்டுமே அவர்களால் முடியும் என்கிற நிலை. கைகுவித்து இறை தரிசன பேறு நிம்மதியாகக் கிடைத்த காலம் இன்றில்லை. அர்ச்சனை கூட இறைவன் சந்நியில் பல கோயில்களில் இல்லை. வெளியேயே தேங்காய் உடைத்து உள்ளே அனுப்பும் வேலை நடக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுபற்றி இன்று எழுதுகிறேன். தங்கள் கருத்துக்கு மாற்றுக்கருத்தாக

      நீக்கு
    2. //மதியம் நீண்ட நேரம் நடை சாத்தியிருக்கிறது// - இது சரியானதுதான் எனத் தோன்றுகிறது. பல கோவில்களுக்கு பக்தர்கள் வருகை மிகவும் குறைவு. அதுவும்தவிர, அதிகாலை கோயிலைத் திறந்து, இரவு வரை தொடர்ந்து திறந்துவைத்திருப்பதும் சாத்தியமல்ல. நிறைய கோவில்களில் ஒரு அர்ச்சகர், ஒரு காவலர் என்றுதான் நிலைமை.

      நீக்கு
    3. //செயற்கையாக கூட்ட நெருக்கடி ஏற்படுத்தி சிறப்பு தரிசன டிக்கெட் விற்பனையை அதிகரித்தல்..// - இது நிச்சயமாக இல்லை என்றே நான் நினைக்கிறேன். 2-3 நாட்கள் ஸ்ரீரங்கத்தில் இருந்தேன். நேற்றுப் பார்த்த கூட்டம் ரொம்பவே அதிகம். இரண்டு வரிசையாக (இலவச தரிசனம், 100 ரூ சிறப்பு வரிசை) என்று இருந்தாலும் இரண்டுமே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது (of course, we can't compare with Tirupathi). த்வஜஸ்தம்பத்திற்கு வந்துவிட்டால், அங்கு சிலர் 500 ரூ டிக்கெட் வாங்கிக்கொண்டால் இன்னும் கொஞ்சம் சீக்கிரமாக தரிசனம் கிட்டும். ஆனால் 500 ரூ டிக்கெட்டைக் கூவிக் கூவி விற்பதில்லை. அதுவும் தவிர, நாம் தங்கியிருக்கும் இடத்திலிருந்து கோவிலுக்குச் சென்றுவர 200 ரூ ஆகும். இதில் 100 ரூ சிறப்பு தரிசன டிக்கெட் என்பது ஒரு செலவு இல்லை. இவ்வளவு பெரும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த ஏகப்பட்ட பேர் (காவலர்களும் உள்ளடக்கம்). அதில் இந்த வரவு எம்மாத்திரம். அதனால் பணத்துக்காகவே இதைச் செய்கிறார்கள் என நான் எண்ணவில்லை. திருவரங்கத்தில், நிறைய இடங்களில் ப்ரசாத விற்பனை நடந்தது. RO குடிநீர், என்று ஓரளவு வசதிகளும் பக்தர்களுக்காக இருக்கிறது. Nothing to complain, though there is room for improvement everywhere.

      நீக்கு
    4. //எந்த நேரத்தில் அருகிலிருக்கும் எந்தக் கோயில் திறந்திருக்கும் என்ற சின்ன விவரம் கூட தெரிந்தால் போதும் பக்தர்களுக்கு.// இணையத்தில் இந்த விவரங்கள் தெளிவாக இருக்கின்றன. சந்தேகம் இருந்தால், யாரையேனும் தொடர்புகொண்டு கேட்டுக்கொள்ளவேண்டும். உதாரணமா இப்படிக் கேட்டுக்கொண்டுதான் நான் சமீபத்தில் நெல்லையில் மன்னார்கோயில் விஸ்வரூப தரிசனத்துக்கு காலை 5 மணிக்குச் சென்றேன் (பாளையங்கோட்டையிலிருந்து 4 மணிக்குப் புறப்பட்டோம்..அதாவது 2 1/2க்கு எழுந்துகொண்டு குளித்துத் தயாராகி)

      நீக்கு
    5. //கைகுவித்து இறை தரிசன பேறு நிம்மதியாகக் கிடைத்த காலம் இன்றில்லை. // இதற்குக் காரணம் பக்தர்கள் கூட்டம்தான். ஆள் அரவமற்ற கோவில்கள் நிறைய இருக்கின்றன (பாடல் பெற்றவை). நாம் அத்தகைய கோயில்களுக்குச் செல்லும்போது நிம்மதியான தரிசனம் நமக்குக் கிட்டும் (ஆனால் பொதுவா நாம், உடனே கிளம்பி அடுத்ததுத்த கோவில்களுக்குச் செல்லலாம் என்ற திட்டத்தோடு இருப்போம்)

      நீக்கு
    6. //வெளியேயே தேங்காய் உடைத்து உள்ளே அனுப்பும் வேலை நடக்கிறது.// Logistics, number of Sivacharyars என்று பல்வேறு காரணிகள்தாம் இதற்குக் காரணம். எனக்கு இவைகள் குறையாகப் படவில்லை.

      நீக்கு
  7. //EBSPPK.. //

    நெல்லைத் தமிழனுக்கு
    ஆங்கிலத்தில் தெரியப் படுத்தி ஒரு விருது..

    :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி சார்.... தமிழகத்தில் ஆங்கிலம் வளரணும், ஹிந்தி வரக்கூடாது என்பதுதான் ட்ரெண்ட். இல்லைனா ஏதாவது யோஜனா என்றல்லவா பட்டம் கொடுத்திருப்பார். ஹா ஹா ஹா

      நீக்கு
  8. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் நல்லதொரு நாளாக அமைய வேண்டுமென இறைவனை பக்தியுடன் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பக்தியுடன் ப்ரார்த்திக்கிறேன்// - பக்தியில்லாமல் ப்ரார்த்திக்க முடியாது என்பதால் 'பக்தி'யை எடுத்துவிடலாம். என்ன சொல்றீங்க கமலா ஹரிஹரன் மேடம்?

      நீக்கு
    2. காலையில் இறைவனைப் பார்த்தால், ப்ரார்த்திக்கத்தான் செய்வோம். அதனால் 'ப்ரார்த்திக்கிறேன்' என்ற வார்த்தையும் வெளிப்படையாக எழுதவேண்டாம். அது சரி.. யாரிடம் நாம் ப்ரார்த்திப்பது? 'இறைவன்' என்று எழுதித்தான் தெரியவேண்டுமா என்ன? இதுக்கு மேல் வம்பை வளர்த்த வேண்டாம்.

      நீக்கு
    3. தங்களின் ஒவ்வொரு வரியிலும் உண்மை புலப்படுகிறது....
      எந்த ஒரு ஆத்மாவுக்கும், நம் ஆத்மாவுக்கும் எந்த வித தொடர்புமில்லை. நம் கண் பார்வையில் மற்றவர் என்பது வெறும் உடலை வைத்துதான். மற்றவர்களுக்காக பிரார்த்திக்கிறேன் என்பதே மனதின் ஆசைகளின் ... அதன் விளைவால் உள்ளத்தில் எழும் "நான்" என்ற கர்வத்தின் அடித்தளத்தில் எழுவதுதான். இறைவனுக்கு தெரியாதா தன் குழந்தைகளை, அவர்களின் பாப புண்ணியங்களுகேற்ப அவர்களை கவனிக்க நலமளிக்க என.....! இதில் நாம் அநாவசியமாக இறைவனை வறுப்புறுத்தி வலியுறுத்திக் கூடாது. ஆழ்ந்து சிந்திக்கும் போது இது வாஸவந்தான் என்ற எண்ணமும் வருகிறது. /வலுக்கிறது

      எப்போதுமே வம்பெனும் விவாதத்தில்தான் பல உண்மைகள் புரிய வரும். நன்றி சகோதரரே. 🙏.

      நீக்கு
    4. ஆழ்ந்த சிந்தனை கமலா அக்கா.

      நீக்கு
  9. இதற்கு சகோதரர் நெல்லைத்தமிழர் விமர்சனம் ஒன்றும் சொல்ல மாட்டார் என நினைக்கிறேன். ஒரு வேளை பக்தி எனும் நூல் பிடித்து ஏறி வருவாரோ என்னமோ? ஹா ஹா ஹா. (ஆஹா. நானே நூலைத்தேடி அவர் கையில் தந்து விட்டேனோ.!!) இந்த வம்பு சும்மா ஜோக்குக்குத்தான்.. ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீ ரங்கநாதனை நல்லபடியாக தரிசித்து வந்த சகோதரருக்கு வாழ்த்துகள். மேலும் எபியில் சிறப்பான அவார்டு பெற்றிருப்பதற்கும் மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருவரங்கப் பயணம் சிறப்பாக இருந்தது. ஐயப்ப பக்தர்கள், மேல்மருவத்தூர் பக்தைகள் என கூட்டம் சொல்லி மாளாது.

      இந்தமுறை இரவு 10ல் ஆரம்பித்து 11:30 வரை நம்பெருமாளின் அருகில் அவர் வீணை, கர்நாடக பாடல்கள், இசையோடு கூடிய பிரபந்தம் கேட்டுக்கொண்டிருக்கும்போது, நின்றுகொண்டு தரிசனம் செய்யும் வாய்ப்பு அவனருளால் எங்களுக்குக் கிடைத்தது. திருச்சுற்றின் கதவை அடைத்தபின், அமைதியான சூழலில் 150 பேருக்கு வாய்க்கும் சந்தர்ப்பம் அது.

      நீக்கு
  10. அருவி ஓய்வில் இருந்த காலம் என்று ஒரு முறை குற்றாலத்துக்குச் சென்றிருக்கின்றேன்.. அப்பொழுது புகைப்படம் எடுக்கும் வசதி இருந்ததில்லை..

    பதிவில் உள்ள படங்கள் எல்லாம் கொள்ளை அழகு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி துரை செல்வராஜு சார்...நான் ரொம்பவுமே ரசித்தேன்.

      நீக்கு
  11. மலைப் பாறைகளில் செதுக்கப்பட்டிருக்கும் சிவலிங்கங்களின் மீது வழிந்த நீர் அப்படியே நம் மீது வழியும் போது...

    ஆகா..

    அதுவல்லவோ சொர்க்கம்..

    பாபநாசம் தாமிரபரணி படித்துறையிலும் இப்படித்தான்...

    பாறைகளில் சிவலிங்கங்கள்.. எப்போது சென்றாலும் நீரெடுத்து அபிஷேகம் செய்வதுண்டு..

    என்னே என் தமிழகம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் துரை செல்வராஜு சார். இவற்றைக் கண்டபிறகு அருவி பற்றிய என் கண்ணோட்டமே மாறிவிட்டது. நம் தமிழகத்தில், பக்தி எப்படியெல்லாம் வீசியிருக்கிறது.

      நீக்கு
    2. இப்பேர்ப்பட்ட தமிழ் மண்ணைத்தான் - இது யாருக்கானது என்பதில் அடித்துக் கொள்கின்றார்கள்!..

      நீக்கு
  12. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

    இன்றைய படங்கள் அதன் விளக்கங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. குற்றால மலையில் உள்ள சிவலிங்கம் மஹாலக்ஷ்மியின் சிலைகள் நான் இதுவரை அறிந்ததில்லை.குறற்றாலத்திற்கே நான் ஒரு தடவைதான் சென்றிருக்கிறேன். அதுவும் அங்கிருக்கும் நீர் வீழ்ச்சிகளில் குளித்ததில்லை. ஒரு உறவினரை பார்ப்பதற்காக சென்று குற்றாலநாதேஸ்வரர் கோவிலுக்கு மட்டும் சென்று வந்தோம். நீர்வரத்து இல்லாத நிலையில் இந்த அரிய புகைப்படங்களை படமெடுத்து நாங்கள் அறிய தந்தமைக்கு மிக்க நன்றி.

    ஞாயிறு பதிவுகளில் சிறப்பாக பங்களித்து வரும் உங்களுக்கு மீண்டும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகள். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில நேரங்களில் அருவிகள் அல்லது நதி இருக்கும் இடத்திற்குச் சென்றிருந்தாலும் அப்போது மாற்றுத்துணிகள் கைவசம் இருக்காது. அதனால் குளிக்கும் வாய்ப்பு இல்லாது போய்விடும்.

      நீக்கு
    2. ஆம்.. உண்மை.. ஆனால் முன்பு (நான்கு ஆண்டுகளுக்கு முன்பு) தி. லி சென்றிருந்த போது, அகஸ்தியர் அருவிக்கு எங்கள் அண்ணாவின் மகன் அவர் குடும்பத்துடன் அவர் காரில் அழைத்துச் சென்றார். எனக்கு மூச்சு திணறும் என்பதால் அருவியில் குளிக்கவில்லை. பார்த்து ரசித்ததோடு சரி.. அப்புறம் வேறொரு இடத்தில் தாமிரவருணி ஒடும் நீரில் (முழங்கால் அளவு இருந்தது) குளிக்க வைத்து விட்டார்கள். அருகில் உள்ள கோவிலின் பெயர் சொரிமுத்து நயினார் கோவில் எனச் சொன்னார்கள். (நான் பிறந்தது தி. லி என்றாலும் எனக்கு இந்த இடங்கள் எல்லாமே புதிதுதான்.சின்ன வயதில் அம்மா வீட்டில் இருந்த போது எங்கும் வெளியில் சென்றதில்லை. திருமணமானவுடன் சென்னைதான்.) அப்போது மாற்றுத்துணிகள் எதுவும் நான் எடுத்துச் செல்லவில்லை.நீண்ட நேரம் குளித்து ஈரத்துடனே காரில் பயணித்து வீடு வந்து சேர்ந்தோம். அது ஒரு நல்ல மறக்க முடியாத அனுபவமாக எனக்கு இருந்தது. மீண்டும் எங்கள் குடும்பத்துடன் தி. லி சென்றால் இந்த மாதிரி அனுபவங்களைப் பெறலாம். நன்றி.

      நீக்கு
    3. சொரிமுத்து ஐயனார் என்று நினைவு. பெண்களுக்கும் ஆண்களுக்கும் இதுதான் அனுபவத்தில் வித்தியாசம். பசங்கன்னா, அவுத்து விட்ட கழுதைகள். எல்லா இடங்களும் சுற்றலாம். பெண்களுக்கு முந்தைய ஜெனெரேஷனில் நிறைய கட்டுப்பாடுகள் இருந்தன. தி.லி போங்க. நிறைய இடங்கள் சொல்றேன். நிச்சயம் நல்ல அனுபவம் கிடைக்கும்.

      நீக்கு
    4. ஆம்.. . சொரிமுத்து ஐயனார்தான்.

      /பெண்களுக்கு முந்தைய ஜெனெரேஷனில் நிறைய கட்டுப்பாடுகள் இருந்தன. /

      ஆம். ஆனால் எங்கள் அம்மா வீட்டில் கண்டிப்பு ஜாஸ்தி. வீட்டை விட்டு வெளியில் எங்கும் விடாமல்தான் வளர்த்தார்கள். அதனால் தி. லியிலேயே நிறைய இடங்கள் இருப்பதை தெரிந்து கொள்ளாமல் தான் வளர்ந்தேன்.

      நீக்கு
  13. படங்கள் எல்லாமே மிகவும் தெளிவாக இருக்கிறது.
    பிறகு கணினியில் பெரிதாக பார்க்க வேண்டும்.

    ஞாயிறு மலர் சிறப்பு

    பதிலளிநீக்கு
  14. நெல்லை - பெயருக்கேத்த பாஷைல படத்துக்கான கமென்ட்!!ஹாஹாஹா...ரசித்தேன் நெல்லை...

    படங்கள் செம....தண்ணியில்லா குத்தாலம் பார்த்தடுண்டு அங்கு செதுக்கப்பட்டிருக்கும் சிற்பங்கள் உட்பட. ஆனா அப்பல்லாம் படம் எடுக்க மூணாவது இல்லை....

    செண்பகா அருவி வரைக்கும் போயிருக்கேன் ட்ரெக் செஞ்சு....

    இருங்க வரேன் இன்னும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //படம் எடுக்க மூணாவது இல்லை....// - படம் எடுக்க சுண்ணாம்பு எதுக்கு?

      நீக்கு
    2. ஹஹாஹாஹா நெல்லை நீங்க நம்ப மாட்டீங்க இதை டைப்பும் போது விழின்னு சேர்த்துடைப்பிட்டு அப்புறம் வேண்டுமென்றே அழித்தேன்....காரணம்.....கண்டிப்பா உங்ககிட்டருந்து இது வரும்னு தோன்றியதால்.......கரெக்ட்டா கேட்டிட்டீங்க!!!

      எதனால சுண்ணாம்புன்னு சொல்றதில்லை? சொல்லக் கூடாதுன்னு சொல்றாங்க?

      கீதா

      நீக்கு
    3. வெத்தலை போட, வெத்தலை, பாக்கு, சுண்ணாம்பு வேண்டும். சுண்ணாம்பு 3வதாக வருவதால் அது 3வது

      நீக்கு
  15. பொங்குமாங்கடல் என்பது கீழே விழும் அருவிக்கு மேலே உள்ள ஆழமான ஆபத்தான பெரிய சுனை.. இதற்கு உள்ளே குகைகள் இருக்கின்றன.. அதனுள் காலத்தை வென்ற சிவயோகிகள் நித்ய தவத்தில் இருக்கின்றனர் என்பது தொன் நம்பிக்கை..

    இதை நிரூபித்த சம்பவம் இதோ..

    இதெல்லாம் இன்றைய குழாயடியான்களின் உளறுவாய்ப் பிதற்றல்கள் இல்லை என்பதை நினைவில் கொள்க. ம்

    1970 களில் சுற்றுலா வந்த வாலிபர் கூட்டம் பொங்குமாகடல் பாறைக்குச் சென்றபோது ஒருவர்
    கால் வழுக்கி சுனைக்கு உள்ளே விழுந்து மூழ்கி விட்டார்..

    சில நாட்கள் கழித்து
    அவரது உடலை மீட்பதற்கு தூத்துக்குடியில் இருந்து ஆழ்கடல் முக்குளிப்பான்கள் சிலர் வந்து முயன்றனர்..

    அப்போது இரண்டாவது முயற்சியின் போது சுனைக்குள் குகை ஒன்றையும் அதனுள் வாலிபர் ஒருவரையும் கண்டு அதிர்ந்து போய் மேலே வந்து விவரம் சொல்லி -

    மூன்றாவது முயற்சியில் மேலும் சிலருடன் சுனைக்குள் மூழ்கி குகையில் இருந்து வாலிபரை உயிருடன் மீட்டுக் கொண்டு மேலே வந்தனர்..

    உயிர் பிழைத்து கரைக்கு வந்தவர் சொன்னார் - பொங்குமாகடல் சுனைக்குள் நான் மூழ்கிக் கொண்டிருந்த போது முனிவர்கள் சிலர் என் கையைப் பிடித்து இழுத்து குகைக்குள் போட்டனர் - என்று..

    இச்சம்பவம் 1970 வாக்கில் நடந்திருக்கலாம்.. நினைவுப் பேழையில் இருந்து தந்திருக்கின்றேன்..

    அதுவும் அன்பின் நெல்லை அவர்களது பதிவு என்பதால்..

    நேர்மையான அச்சு ஊடகங்களில் இச்செய்தி அப்போது பரபரப்பாகியது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை அண்ணா இப்படியான நிகழ்வு பாணதீர்த்ததில் நடந்ததாகக் கேட்டதுண்டு.

      கீதா

      நீக்கு
    2. நமக்குத் தெரியாதது, நம் பார்வைக்கு வசப்படாதது எத்தனையோ இருக்கின்றன. அவற்றைக் காண நமக்குக் கொடுப்பினை இருந்திருக்காது. நானும் சித்தர்கள் பற்றிப் படித்திருப்பதால், பல இடங்களில், நமக்கு அவர்களைக் காணும் பாக்கியம் இல்லையே என்று நினைத்திருக்கிறேன்.

      நீக்கு
    3. //பொங்குமாங்கடல் என்பது// கவிஞர் கண்ணதாசன் தன்னுடைய இயேசு காவியத்தில் பாயிரமாக
      'பொங்குமாங்கடல் புகுந்தளவெடுக்கப் போயினன் வெற்றிபெற்றேனா' என்று எழுதிய வரி நினைவுக்கு வருகிறது.

      நீக்கு
    4. பொங்குமாங்கடல் என்பது ஹிந்து சமயம் ஒன்றே...

      அவரே அர்த்தமுள்ள இந்து சமயத்தில் கூறியிருக்கின்றார்..

      நீக்கு
    5. பொங்குமாங்கடல் என்று கல்கி நாவல் ஒன்று இருக்கிறது.

      நீக்கு
  16. // தவம் செய்வது போல ஒருவர் இருக்கின்றாரே.. சமண முனிவரோ..//

    அன்பின் நெல்லை.. நீங்களுமா?..

    வெள்ளைக்காரன் வந்து தான் பாரதத்திற்குப் படிப்பு சொல்லிக் கொடுத்தான் - என்ற உருட்டல் வேலை நடந்து கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் இந்த வார்த்தைகள் வேறு மாதிரி ஆகிவிடக்கூடும்..

    மேலைத் தேச நாடு பிடுங்கிகள் தான் சிவ வழிபாடு சொல்லிக் கொடுத்தார்கள் - என்று, மேற்கொண்டு எவனாவது வந்து விடப் போகின்றான்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒருவர் மாத்திரம் நெஞ்சில் உள்ளங்கையைக் காண்பிப்பதுபோல இருந்ததால் அந்தச் சந்தேகம் வந்தது. ஒருவேளை, சமண மதத்தினரில் ஒருவரும் அப்படி ஒரு சிற்பத்தைச் செய்திருக்கலாமோ என்று.

      நீக்கு
  17. 2022 ஆம் ஆண்டின் EBSPPK (Engal Blog Sunday Picture Posts King) award goes to நெல்லைத்தமிழன். //

    வாழ்த்துகள் நெல்லை!! இந்த வருடமும் என்சாய்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேள்வி கேட்டே கொல்லுபவர்கள் என்ற அவார்ட் வராமல் இருந்தால் சரிதான்.

      நீக்கு
  18. சீனனிலும் குளித்ததுண்டு....தடை நேரத்தில் கிட்ட வரை போய் பார்த்ததும் உ ண்டு.....அப்போதெல்லாம் கை கொடுப்பது இந்த ஐந்தருவி.....குத்தாலத்தில் நிறைய தண்ணீர் பாய்ந்து தடை என்றால் மேலேயும் போகத் தடை இருக்கும். ஆனா பாருங்க மலைல எல்லா இடத்திலும் காவலுக்கு இருக்க முடியாதே காடு....அதனால வேறு பக்கம் வழியாக நுழைந்து வந்துருவாங்க. ...அப்படி நடக்கும் விபத்துகள் நிறைய.

    பாணதீர்த்தம் அருவிலயும் நிறைய விபத்துகள் ஏற்பட்டதுண்டு. அங்கு அப்படி வீழ்ந்த ஒரு வாலிபர் நீரில் மூழ்க, சில நாட்கள் கழித்து அவரைத் தேடும் போது அவர் நீர் வீழும் பின்பக்கம் உள்ள ஒரு குகைக்குள் ஒரு வாரமோ 10 நாட்களோ கழித்தும் உயிருடன் இருந்தது தெரிந்து மீட்கப்பட்டார் என்று வாசித்தேனா அலல்து திருநெல்வேலியில் இருக்கும், அடிக்கடி சென்று வந்த என் அத்தை மகள், மகன் சொன்னதா என்று நினைவில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம் பொதுவாக, rulesஐ follow செய்வதைவிட, அதனை மீறுவதில்தான் ஆர்வமாக இருக்கிறோம். சில நேரங்களில் அது நியாயமாக இருக்கும். பல நேரங்களில் தவறாகவே இருக்கும்.

      நீக்கு
    2. ஆமாம்...நியாயமா இருக்கறது குறிப்பா ஃபோட்டோ எடுக்கறப்ப..ஹிஹிஹிஹிஹி....ஆனா ரிஸ்க்கா இருக்க இடத்துல கண்டிப்பா தவறாக இருக்கும்.. 50%

      கீதா

      நீக்கு
    3. போட்டோ எடுக்கறப்ப... நியாயம்தான். பாருங்க ஸ்ரீரங்கம் கோவில் மியூசியம் சென்றிருந்தேன். அதில் நான் பழங்கால ஆயுதங்கள் வைக்கும் அமைப்பு, செப்பேடு (பெரிய, அதாவது 1 1/2 அடிக்கு 2 அடி, தெலுங்கு எழுத்தில்) போன்றவை, மிக மிக அழகிய தந்தச் சிற்பங்கள், நாயக்கர், மனைவியோடு இவற்றை கொஞ்சம் தூரத்திலிருந்துதான் படம் எடுத்துக்கொண்டேன்..ஞாயிறில் எழுதணும் இல்லையா? நம்ம கவலை நம்மளுக்கு.

      நீக்கு
  19. படங்கள் அட்டகாசம் நெல்லை....ஹூம் இப்ப அங்கெல்லாம் போகும் வாய்ப்பு கிடைக்காதே....

    எனக்குப் பிடித்த இடங்கள். திருநெல்வேலில ஒரு மாசமேனும் தங்க வேண்டும் அப்போதுதான் அங்குச் சுற்றியுள்ள நம்பி மலை, மகேந்திரகிரி, பொதிகை என்று முழுவதும் சுற்றி வர முடியும். காட்டினுள்ளேயும் சிறிய சிறிய தெய்வங்கள் உண்டு. லோக்கல் மக்கள் சில விசேஷ தினங்கள், பௌர்ணமி தினங்கள் என்று அங்கு பொங்கல் படையல் வைப்பது போன்ற நிகழ்வுகள் நடக்கும். மகேந்திர மலையில் இப்படியான வழிகாட்டியுடன் செல்லும் பக்தி சுற்றுலா ஏற்பாடு செய்யறாங்க. முழுவதும் ட்ரெக்கிங்க் இரு நாட்கள் என்று நினைக்கிறேன். இரு வகை உள்ளன. ஒன்று மகேந்திரமலையிலிருந்து அப்பால அப்படியே நடந்து திருவனந்தபுரத்துல இருக்கற பொன்முடி மலை அருகில் வழுக்கம்பாறா அகஸ்தியர் கூடம் வரை சென்று வரலாம்.

    என் பதிவில் மகேந்திரகிரி மலை பற்றி எழுதியதில் சொல்லியிருந்த நினைவு. இணையம் வழி பதிவு செய்யும் சுட்டியும் கொடுத்திருந்த நினைவு.

    முடிஞ்சா போய்வாங்க நெல்லை. என்னால் போக இயலாது இப்போதைக்கு....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. களக்காடு பகுதியை விட்டுவிட்டேன். அதுவும் இப்பகுதிதானே....அருமையான இடங்கள்...

      இவற்றோடு அப்படியே நாரோயில் காளிகேசம், கோதையார், திருவனந்தபுரம் பொன்முடி என்று கவர் செய்ய முடியும்...மேற்குத் தொடர்ச்சிக்குள் போனால் பல பல இயற்கை ரகசியங்கள்!!!

      கீதா

      நீக்கு
    2. //திருநெல்வேலில ஒரு மாசமேனும் தங்க வேண்டும்// - இதற்கெல்லாம் வாய்ப்பு மிகவும் குறைவு அல்லவா? பசங்க கமிட்மெண்ட் முடிந்ததும், நாங்கள் இருவரும் இதுபோல ஒவ்வொரு இடத்திற்கும் செல்லலாம் என்று நான் நினைத்திருக்கிறேன். பார்ப்போம் எது எது சாத்தியமாகிறது என்று.

      நீக்கு
    3. கண்டிப்பா நடக்கும் நெல்லை....ஆரோக்கியத்தையும் நல்லா வைச்சுக்கோங்க ட்ரெக் பண்ண....

      நான் என் பையன் கிட்ட சொல்வேன்....நெட்டில் ஒவ்வொரு இடத்தையும் பார்க்கும் போது சொல்வேன்...டேய் குட்டிப்பா இந்த இடம் சூப்பரா இருக்குடா....என்னை கூட்டிட்டுப் போணும்டா நோட் பண்ணி வைச்சுக்கடா என்பேன்....அவன் சொல்வான் கண்டிப்பா கூட்டிட்டுப் போறேன் ஆனா நீ உன் ஹெல்த் நல்லா இந்த மாதிரி இடத்துக்கெல்லாம் போறா மாதிரி வைச்சுக்கணும்னு.....

      கீதா

      நீக்கு
    4. ட்ரெக்கிங் பண்ணணும்னா உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கணும். என்னால் கடுமையான ட்ரெக்கிங் செய்யமுடியாது என்பது உண்மைதான்.

      நீக்கு
  20. படங்கள் அருமை...

    குற்றாலத்திற்கு போகாத ஆண்டு குறைவு தான்...

    பதிலளிநீக்கு
  21. ஞாயிறு புகைப்பட பதிவுகளுக்கு வெற்றி கிடைத்த நெல்லை தமிழன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

    குற்றாலத்துக்கு செல்ல நினைத்தும் கிடைக்கவில்லை. படத்தில்தான் ரசித்ததுண்டு.

    அழகிய பாறை சிற்பங்கள் கண்டு மகிழ்ந்தோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மாதேவி..... குற்றாலம், ஹொகேனக்கல், திற்பரப்பு போன்ற பல இடங்களை நாம் தவறவிடக் கூடாது.

      நீக்கு
  22. @ நெல்லை..

    சமணத்திற்கும் சைவத்திற்கும் என்றுமே ஆகாது..

    இன்றைய கிரிப்டோக்களைப் போல குருமார்கள் பெயர்கள் மட்டும் சிவ சாயலாக வரும்..

    கோமதேஸ்வரர் உதாரணம்...

    அங்கே அவர் அப்படி என்றால் இங்கே ஸ்ரீ பைரவர் இப்படி..

    பதிலளிநீக்கு
  23. பின்னாளில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் கவியரசர் அந்நூலின் அவையடக்கத்தில் அப்படி எழுதினாலும் தனது நெற்றித் திலகத்தை மாற்றிக் கொள்ளவே இல்லை!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொஞ்சம் விட்டால், கவிஞரையும் மதமாற்றிவிடுவார்கள்.

      நீக்கு
  24. பல கருத்துக்களை எபி ஆசிரியர் குழுதான் இழுத்துக்கொண்டு வரவேண்டும். (செவ்வாய், வியாழன் பதிவுகள் உட்பட)

    பதிலளிநீக்கு
  25. அருமையான படங்கள்.

    EBSPPK விருதுக்கு நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  26. நிறைய கருத்துகள் காணாமல்போய்விட்டன. எபி ஆசிரியர் குழு விடுவித்தால்தான் உண்டு

    பதிலளிநீக்கு
  27. தண்ணீர் இல்லாத குற்றால அருவி மேக்கப் இல்லாத கதாநாயகி போன்று உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க சொல்றதைப் பார்த்தால், நடிகைகள் பத்மினி, அனுஷ்கா போன்றவர்கள் மேக்கப் இல்லை என்றால் நன்றாக இல்லை என்று சொல்றீங்க போலிருக்கு

      நீக்கு
  28. குற்றாலப் படங்கள் குளுமை.
    ஏதேதோ சாமிகள், தவயோகிகள்... கும்பிடுபோடுவதே உசிதம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா...ஏகாந்தன் சார்...இருந்தாலும் அவர்கள் இந்துமதத்திற்கு உரியவர்கள். நம் கலாச்சாரத்தின் அங்கம் அவர்கள்

      நீக்கு
  29. @ நெல்லை

    // கொஞ்சம் விட்டால், கவிஞரையும் மதமாற்றி விடுவார்கள்.. //

    ?????..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இயேசு காவியம் எழுதியதால், கண்ணதாசனும் கடைசி காலத்தில் மதம் மாறிவிட்டார் என்று கூசாமல் எழுதிவிடுவார்கள். நல்லவேளை இந்து மதத்தைப் பற்றி விஸ்தாரமாக புத்தகம் எழுதினார் பேசினார்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!