வியாழன், 26 ஜனவரி, 2023

கசோவரி ராம்சேது

 சென்ற வாரம் அமிதாப் படம் பற்றிச் சொன்னேன்.  இந்த வாரம் அக்ஷய் குமார் படம்.  ராம்சேது.

படத்தில் அரசியலை எந்த அளவு கலக்க வேண்டுமோ அந்த அளவு கலக்கியும் பெரிய வெற்றி பெறாத படம்!  ஆனால் நான் ரசித்தே பார்த்தேன்.  தமிழில் வசனங்களுடன் வேறு கிடைத்தது.

ஆர்யன் ஒரு ஆர்கியாலஜிஸ்ட்.  கடவுள் நம்பிக்கை இல்லாதவன்.  உண்மைகள் மீது மட்டுமே நம்பிக்கை வைத்திருப்பவன்.  

அரசாங்கம் கார்ப்பரேட் கப்பல் நிறுவனம் ஒன்றிற்கு ஆதரவாக ராமசேது பாலத்தை இடிப்பதற்கு ஆவன செய்ய தீர்மானிக்கிறது.  அதற்கான ரிப்போர்ட்டை அதாவது ராமர் பாலம் மனிதனால் உருவானது அல்ல, தானாக உருவானது என்று அறிக்கை வாங்க ஆர்யனை நியமிக்கிறது.  அவனும் அதேபோல அறிக்கை தந்தாலும் அதில் ஒரு வரியாக ராமாயணத்தையும், ராமரையும் இழுத்து விட்டிருக்க, ஏற்கெனவே முணுமுணுப்பில் இருக்கும் மக்கள், அரசியல் கட்சிகள் மூலம் விஷயம் கோர்ட்டுக்கு வருகிறது.

அரசாங்கம், அதாவது ஆதாயத்தை எதிர்பார்க்கும் அரசு யந்திரத்தின் அதிகார வர்க்க அதிகாரிகள் அதிருப்தி அடைகிறார்கள்.  இந்நிலைக்கு காரணமான ஆர்யன் அரசாங்கத் பணியிலிருந்து நீக்கப்படுகிறான்.  நாடு முழுவதும் ஆர்யனுக்கு கெட்ட பேர்.  விஷயத்தை இறுதி முடிவு செய்ய அரசாங்கத்துக்கு கோர்ட் கெடு விதிக்கிறது.  கார்ப்பரேட் கப்பல் கம்பெனி நிறுவனர் நாசர் ஆர்யனை அழைத்து தங்கள் சார்பில் அறிக்கையை வாங்க அதிகாரியாக நியமிக்கிறார்.   ராமர் பாலம் ராமன் காலத்துக்கும் முற்பட்டது,  ராமரால் கட்டப்பட்டது அல்ல என்று அறிக்கை தரச் சொல்கிறார்.   அரசாங்கம் வைத்திருப்பதைவிட வசதிகள் அவரிடம் இருக்கிறது.  அரசாங்கமே அவருக்கு வளைகிறது.

'இப்படி ஒரு பாலம் கட்ட ராமர் என்ன எஞ்சினியரா' போன்ற வசனங்களும் படத்தில் உண்டு.  ஆடம் பிரிட்ஜ் என்று எப்போது, ஏன் பெயர் வந்தது என்கிற விவாதமும் வருகிறது.

இதில் ஆராய்ச்சியில் ஈடுபடும் ஆர்யனுக்கு வேறு முடிவு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.  சேதுபாலம் தானாக உருவாகி இருக்க வாய்ப்பில்லை என்பது போல ரிசல்ட் வருகிறது.  அதை நேர்மையாக சொல்ல வரும்போது நாசரும் அவரது ஆட்களும் ஆர்யனையும் அவரைச் சேர்ந்தவர்களையும் கொல்ல முற்படுகிறார்கள்.

இறுதித் தீர்ப்பு நாளுக்குள் ஆர்யன் வெளியில் வராமல் இருக்கவும், தேவையான நிரூபணங்களை பெறாமல் இருக்கவும் வில்லன் கோஷ்டி பார்த்துக் கொள்கிறது.  கடைசியில் என்ன ஆகிறது என்பது கதை.

நம்ப முடியாத காட்சிகளும்,யார் வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் உள்ளே வந்து சாட்சி சொல்லலாம் என்பது போல திறந்த ஹாலில் நடக்கும் கோர்ட் காட்சிகளும், தீர்ப்பு சொல்லும் கடைசி கணத்தில் உள் நுழையும் ஆர்யன் என்று எதிர்பார்க்கும் காட்சிகள் வந்தாலும் கோர்ட் காட்சிகள்  கலகல.

இப்போது மறுபடியும் அரசியல்வியாதிகள் சரியாக இந்தப் பிரச்னையைக் கையில் எடுத்திருக்கிறார்கள்!  நிறைய கேள்விகளுக்கு பதில் இந்தப் படத்தில் சொல்கிறார்கள்.

இந்தப் படம் வெளியானதும் இதன் நம்ப முடியாத தன்மை குறித்து நிறைய மீம்ஸ் வெளியாகின.  படம் தீபாவளிக்கு வெளிவந்தது.  எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லையாம்.  ஆர்யனாக அக்ஷய் குமார்.  

நான் அமேசானில் பார்த்தேன்.  என்னால் படத்தை ரசிக்க முடிந்தது.  ராமர்பாலம் என்று அவர்கள் காட்டுவது செட்டிங்ஸ்சா, ராமர் பாலமேவா என்று தெரியவில்லை.  மிதக்கும் பாறையை தோளில் சுமந்தபடி அக்ஷய் நடுக்கடலில் நடந்து வருவது சிலிர்ப்புக்கு பதில் சிரிப்பை வரவழைத்தது.  பாஹுபலி பாதிப்பு.   ஆஞ்சநேயன் புஷ்பகுமாரன் கேரக்டர் ஒரு சுவாரஸ்யம்.  இறுதிக் காட்சியில் வேறு வடிவமும் தருகிறார்கள்.

கடைசிக் காட்சியில் ஒரு குரங்கு வந்து காப்பாற்றுவதாக விக்கியில் சொல்கிறார்கள்.  அமேசானில் அந்தக் காட்சியை கட் செய்து விட்டார்கள் போலும்.  நான் பார்க்கவில்லை.  விடுதலைப்புலிகள், பெரிய கரங்கள் தாங்கிப் பிடித்திருப்பது போல ராமர் பாலம், மிதக்கும் பாறைகள், பிரம்மாண்டமான ஆராய்ச்சிக் கப்பல், திரிகோண மலை, ஓலைச்சுவடி, டன்னல் போன்ற ரகசிய வழிகள், சஞ்சீவினி மூலிகை என்று கண்களையும் கருத்தையும் கவர நிறையவே கதாசிரியர், ஆர்ட் இயக்குனர், இயக்குனர்  சிரமப் பட்டிருக்கிறார்கள்.  ஒருமுறை பார்க்கலாம்.  பார்க்கவேண்டும்!

ந்த வரிசையில் நான் இந்தப் படங்களுக்கெல்லாம் முன்னாலேயே பார்த்து விட்ட யசோதா படம் பற்றி இப்போது மூன்றாவதாகப் பகிர்கிறேன்.

ஏழைத் தங்கையின் லட்சியத்தை ஈடேற்ற யசோதா வாடகைத் தாயாகிறார்.  அதற்காக அவர் ஏகப்பட்ட கெடுபிடிகளை சந்திக்க வேண்டி இருக்கிறது.  இதற்காக ஏகப்பட்ட பணத்தை அவர் கூலியாக வாங்கியதும், திடீரென அவர் ஒரு மிக மிக வசதியான இடத்தில் கொண்டு வந்து இருக்க வைக்கப் படுகிறார்.  நேரத்துக்கு செக்கப், மருந்து, டயட் யோகா, உடற்பயிற்சி என்று மிகுந்த உயர்தர வசதிகளுடன் இருக்கும் பல வாடகைத் தாய்களில் இவரும் ஒருவர்.

ஏன் அங்கு பல வாடகைத் தாய்கள் இருக்கிறார்கள் என்கிற சந்தேகம் நமக்கு வருகிறது.  அதற்குத் தகுந்தாற்போல சம்பவங்களும் நடக்கின்றன.  அங்கு செக்கப்புக்கு வரும் டாக்டரை அவர் விரும்புவது போல தெரிகிறது.அவரும் இவர் பக்கம் விருப்பம் இருப்பது போல பேசுகிறார்.

நடுவில் வலி வந்த ஒரு பெண்ணை பிரசவ செக்ஷனுக்கு அழைத்துச் செல்கிறார்கள்.  பின்னர் அவர் இறந்து விட்டதாக அறிவிக்கப்படுகிறார்.  இரண்டாவது பெண்ணுக்கும் அதே போல நேர்கையில் யசோதாவுக்கு சந்தேகம் வருகிறது.  விசாரிக்கத் தொடங்குகிறார்.  பயப்பட வைக்கும் பல காட்சிகள் அரங்கேறுகின்றன.

ஒருகட்டத்தில் யசோதா உண்மையைத் தெரிந்துகொள்ளும் நேரத்தில் மாட்டிக் கொள்கிறார்.  அவர் விரும்பும் டாக்டர்தான் மெயின் வில்லன்!  அப்புறம் என்ன ஆகிறது என்பதுதான் கதை.

யசோதாவாக சமந்தா.  மறுபடி அவருக்கு ஒரு ஆக்ஷன் படம்.  படத்தில் வரும் திருப்பங்களை ஓரளவு எதிர்பார்க்க முடிகிறது.  வரலக்ஷ்மி சரத்குமார் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
=========================================================================================================

ஃபேஸ்புக் கந்தசாமி ஸார் பதிவிலிருந்து...  

ஓஹோவென படங்கள் ஓடிய சேலம் ஓரியண்டல் தியேட்டர்...!

சேலத்திலேயே,ஏன் தமிழகத்திலேயே மிக முக்கியமான திரையரங்கமாக திகழ்ந்தது சேலம் பழைய பஸ்நிலையம் அருகிலிருந்த ஓரியண்டல் தியேட்டர்..!

1-11-1926 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த பழைமையான தியேட்டரில் முதல் 5 ஆண்டுகள் மெளனமொழி படங்கள் திரையிடப்பட்டு வந்தன..! பின்பு 31-10-1931 முதல் பேசும் படங்கள் திரையிடப்பட்டன..!

முதல்படமாக அந்தந்த மொழி கலைஞர்கள் அந்தந்த மொழி பேசி நடித்த காளிதாஸ் படம் திரையிடப்பட்டு சிறப்பாக ஓடியது..! பின்பு கிருஷ்ணலீலா, வள்ளி, பிரகலாதா,
சத்தியவான் சாவித்திரி, ஸ்ரீநிவாசா கல்யாணம், லவகுசா போன்ற ஆரம்ப காலப் பழைய படங்கள் திரையிடப்பட்ட தியேட்டர் ஓரியண்டல் ஆகும்..! குறவஞ்சி படம் காலைகாட்சியாக 52 வாரம் ஓடியது..!

எம்.ஜி.ஆரின் முதல்படம் சதிலீலாவதி ஒரியண்டலில் தான் 28-3-1936 இல் ரிலீசானது..! சிவாஜியின் வீரபாண்டிய கட்டபொம்மன் 1959 ஆம் ஆண்டு ரிலீசாகி ஓஹோவென ஓடியது..! கமல் அறிமுகமான களத்தூர் கண்ணம்மா ஓரியண்டலில் தான் ரிலீஸானது..!

சிவாஜி, ஜெயலலிதா நடித்த சுமதி என் சுந்தரி 1971 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது...! சிவாஜி 3 வேடங்களில் நடித்த திரிசூலம் 200 நாட்கள் ஓடியது சாதனை சரித்திரம்..! கல்தூண் படமும் நன்கு ஓடியது..! அமிதாப்பச்சன் நடித்த ஷோலே இந்திபடம் ஒரு வருடம் ஓடி இமாலய சாதனை படைத்தது இந்த ஓரியண்டல் திரையரங்கில் தான்..! குர்பானி நன்கு ஓடியது..!
மாடர்ன் தியேட்டர்ஸ் படங்கள் ரெகுலராக ஓரியண்டலில் தான் வெளியாகும்...!.
பிற்காலத்தில் A.V.M படங்களின் இராசியான தியேட்டராக ஓரியண்டல் ஆகி விட்டது..!
கமலின் சகலகலாவல்லவன், சூப்பர் ஸ்டார் ரஜினியின் முரட்டுக்காளை இரண்டும் ரசிகர்களின் பேராதரவோடு அரங்கம் நிரம்பி வழிய ஓடி வசூலில் சாதனை படைத்தன..!

கமலின் 100 வது படம் ராஜபார்வை இங்கு நன்கு ஓடியது...!

போக்கிரி ராஜா ரஜினியின் வெற்றிபடமாக சிறப்பாக ஒடிய தியேட்டர்..!
ஏ.வி.எம் படமான சம்சாரம் அது மின்சாரம் மாபெரும் வெற்றி பெற்று வசூலை குவித்த தியேட்டர் இந்த ஓரியண்டல் தியேட்டர்...!

நவீன வசதிகள் இல்லாவிட்டாலும், சேலம் பஸ்நிலையம் அருகே இருந்ததால் மாவட்டம் முழுவதும்இருந்து மக்கள் வந்து படம் பார்த்து ரசித்தனர்..!

புதுபட வெளியீடு போது தியேட்டரே திருவிழா கோலம் காணும்..!

ஓரியண்டல் தியேட்டரில் வைக்கப்படும் கட்அவுட்கள் பிரமாண்டமாக இருக்கும்..!
டிக்கட் கொடுக்க ஆரம்பித்த சில நிமிடங்களில் ஹவுஸ்ஃபுல் போர்டு தொங்கும்..!
நீண்ட கியூவரிசையில் நின்று மக்கள் டிக்கட் பெற்று படம் பார்ப்பர்...!

இன்று ஓரியண்டல் தியேட்டர் இல்லாவிட்டாலும், அங்கு வணிக வளாகம் வந்து விட்டாலும், முக்கிய லேண்ட் மார்க் ஆக திகழ்கிறது..! இன்றும் அந்தப் பகுதியை கடக்கும் போதெல்லாம் அங்கு படம் பார்த்த நினைவுகள் மனதில் இனிமையாக வந்து செல்கின்றன..!

மீண்டும் அப்படி, ஞாயிறு மாலை வேளைகளில் என் அன்பு நண்பன் செல்வகீதனுடன் அவர்களுடைய நியூ ஆரியபவனில் சூடாக டீ அருந்தி விட்டு ஓரியண்டல் தியேட்டரில் மாலை காட்சி பார்க்கும் காலம் வாராதோ? என மனம் ஏங்குகிறது...!
- ஈசன் எழில் விழியன்,
சேலம்.
==================================================================================================

தினமலரில் படித்த சுவாரஸ்ய செய்தி. அவர்கள் அதிலிருந்து காபி பேஸ்ட் செய்ய முடியாதவாறு செய்திருப்பதால் இப்படி எடுத்துப் போடுகிறேன்! ஹிஹிஹி.. விடமாட்டோம்ல....



================================================================================================

கிடைக்காத துணையை, அல்லது கிடைத்தும் பிரிந்து போன துணையை எண்ணி மனதில் இறுக்கம். கண்களில் கண்ணீர். பகல்களில் பலவிதமாய் பொழுதுகள் கழிந்து விடுகின்றன... தனிமையான இரவுகளில்..?


==================================================================================================

என்ன கொடுமை... மறக்க முடியாத புகைப்பட வரிசையில் இணையத்திலிருந்து...

2015 ஆம் ஆண்டில்அவரது கொலையாளிக்கு அவரே பணம் கொடுக்க வேண்டிய கட்டாயம்.  ​​சுவிட்ஸர்லாந்தின் அமைதியான நகரமான ரப்பர்ஸ்வில் நகரில் ஒரு நபர், ஒரு தாய், அவரது இரண்டு மகன்கள் மற்றும் அவரது மகனின் காதலி ஒருவரை மணிக்கணக்கில் பணயக் கைதிகளாக வைத்திருந்த ஒரு பயங்கரமான சம்பவம் நடந்தது. இந்த நேரத்தில் அவர்கள் தங்கள் குற்றவாளியின் கைகளால் மிகுந்த துஷ்பிரயோகத்திற்கு ஆளானார்கள், பின்னர் அவர் தங்கள் வாழ்க்கையை முடிப்பதற்கு முன்பு தனது வங்கியில் பணத்தை எடுக்குமாறு அந்தத் தாயை கட்டாயப்படுத்தினார்.

===========================================================================================


பொக்கிஷம்...


அந்தப் பெண்ணின் பெயர் காவேரி அல்ல..  அவரை யாரும் "காவேரி (இங்கே) பார்" என்று சொல்லவில்லை!  இந்த மாதிரி 'சவர்க்காரம் பார்' நீங்களும் உங்கள் வீட்டில் முன்பு உபயோகித்திருப்பீர்கள்.  நீல பார்களாக வாங்கி சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்வோம்.  லேசில் கரையாது!  முரட்டுத் துணிகளுக்கு ஏற்ற பார் சோப்!

நாம் அறிந்த ஓவியர்களின் ஆரம்ப கால ஓவியங்களை பாருங்கள்.  நாம் பின்னர் அறிந்த அவர்கள் வரையும் முகங்களின் சாயலே இருக்காது.  சென்ற வாரம் ஜெயராஜ் மற்றும் ராமு பார்த்தோம்.  இந்த வாரமும் ராமு!

கணவனே ஏற்பாடு செய்திருக்கிறானோ...!

இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்....

பானுமதி ராமகிருஷ்ணா தம்பதியினரின் சொந்தப படம் போல.  அல்லது தெலுங்கு டப்பிங்கோ என்னவோ..  நான் இப்படி ஒரு படம் கேள்விப்பட்டதில்லை!


84 கருத்துகள்:

  1. காலை வணகம் ஸ்ரீராம்...

    படம் நல்லாருக்கும் போல இருக்கே... ஓடிடியா?

    கீதா

    பதிலளிநீக்கு
  2. தீர்ப்பு சொல்லும் கடைசி கணத்தில் உள் நுழையும் ஆர்யன் என்று எதிர்பார்க்கும் காட்சிகள் //

    ஹாஹாஹாஹா எல்லாப் படத்துலயும் இப்படித்தான் வைப்பாங்க போல!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  3. யசோதாவும் செமையா இருக்கும் போல!

    கீதா

    பதிலளிநீக்கு
  4. என்னாச்சு ஸ்ரீராம்? லீவு மஜாவா? காணலை....யாரையும் காணலை இன்னும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லீவா? ஓட்டத்தில்இருக்கிறேன்.

      நீக்கு
    2. ஓ! இன்னிக்கும் ட்யூட்டி! ஆமா உங்கள் துறை அப்படியானதாச்சே

      கீதா

      நீக்கு
  5. நியூசிலாந்தில் இந்தப் பறவை இருக்கிறதோ? ஆவேசமாகத் தாக்கக்கூடியது என்று படித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கலாம். படங்கள் பற்றி நெல்லை நோ கமெண்ட்ஸா..

      நீக்கு
  6. காவேரி பார்... முன்பு பெரிய பார்களாக வாங்கி, நூலை உபயோகித்து சிறிதாக வெட்டிக்கொண்டு உபயோகித்த சோப்புக் கட்டிகள் நினைவுக்கு வருகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நூல் கொண்டு வெட்டி ... ஆம், அதைச் சொல்ல மறந்து விட்டேன்.

      நீக்கு
  7. ஆரம்பகாலப் படங்கள் வரைய எத்தனை உறவினர்களை போஸுக்கு உபயோகித்தாரோ ஓவியர் ராமு

    பதிலளிநீக்கு
  8. பழைய நினைவுகள் பற்றிப் பேச ஒவ்வொருவருக்கும் எவ்வளவு அனுபவ நினைவுகள்! சுவாரசியம் சேலம் ஓரியண்டல் தியேட்டர் பற்றியும் சினிமாக்கள் பற்றியும் சொல்லியது.

    புதுபட வெளியீடு போது தியேட்டரே திருவிழா கோலம் காணும்..!//

    இப்ப ஓடிடி யில கொண்டாடுவதில்லையோ!!!! ஹிஹிஹிஹி...பண்ணிட மாட்டாங்க? நம்ம மக்கள்?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சேலத்துக்காரங்களுக்கு அதன் அருமை தெரியும்! நான் சும்மா ஷேரிங்கோட சரி.

      நீக்கு
  9. ஆ! நெல்லை வந்தாச்சா? எந்த ஒரு மெசேஜுக்கும் பதில் இல்லை....கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வந்தாச்சு....திரும்பவும் போக ஆசை வந்தாச்சு. நாளை மறுநாள் செல்லலாமா என்று யோசிக்கிறேன், மனைவி அனுமதி கிடைக்கலை

      நீக்கு
  10. ஆஹா! தலைப்பு கசோவரி ராம் சேது ன்னு பார்த்ததும் எனக்கு முதல்ல குழப்பம் என்ன இது படம் பெயர்ன்னு....கசோவெரி ஏதோ ஒரு பறவையின் பெயராச்சேன்னு கீழ வந்தாதான் புரியுது.....கமா இல்லாத குழப்பம்??!!! ஹிஹிஹிஹி

    ஸ்ரீராம் ரொம்பவே டென்ஷன் பரபரப்பில் இருக்கார்னு தெரிகிறது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதெல்லாம் இல்லை !தலைப்பில் கொஞ்சம் குழப்பலாமே என்று தான்...

      நீக்கு
  11. கசோவெரி பத்தி வாசித்த நினைவு வருகிறது. மகனுக்காக வாங்கிய விலங்குகள் பறவைகள் என்சைக்ளோபீடியாவில்.

    பெங்குவின் இனங்களிலும் ஆண் பறவைதான் முட்டையைக் காத்து குஞ்சு பொரிக்க உதவும். பெண்கள் கடல்ல போய் இரை தேடி எடுத்துக் கொண்டு வருவாங்க!!

    பாருங்க ஆணும் பொண்ணும் சமம்னு..ரெண்டு பேரும் வேலை செய்யணும்னு..இப்ப உள்ள தலைமுறைக் குடும்பங்களை நினைவுபடுத்துகின்றது இல்லையா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பறவைகள் என்னமோ ஒண்ணுக்கொண்ணு ஆதரவா தான் இருக்காங்க... மனிதர்கள் தான்...

      நீக்கு
    2. ஆமா ஆமா அதென்னவோ சரிதான் ஸ்ரீராம்...

      கீதா

      நீக்கு
  12. கசோவெரி - கசோவெறி ன்னு சொல்லலாமோ!! பார்க்க என்ன அழகு இல்லையா! அழகில் இருக்கும் ஆபத்து..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏய் கிட்ட வராதே...வந்தா விட மாட்டேன்னு!!! சாது மிரண்டால்ன்ற ரேஞ்ச்!!!

      கீதா

      நீக்கு
  13. கவிதை அருமை.

    வெப்பத்தைக்....க் அங்கு வந்ததன் காரணம் அடுத்த வரி வேறு வார்த்தை போட்டிருந்தீங்களோ கண்ணீர் மட்டும்...அப்புறம் இமைகளின் சேர்த்தீங்களோ!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ! அப்படித்தானா!!!!

      கீதா

      நீக்கு
    2. சமயங்களில் சில வார்த்தைகளில் க் ஒற்றெழுத்தை அதுவாகவே நிரப்பிக் கொள்கிறது.  இப்போது கூட பறவையின் அறிமுக வரிகளில் இருந்த வார்த்தைகளில் ஒரு க் வந்திருந்தது.  நீக்கினேன்.

      நீக்கு
  14. சாதாரண மக்களின் தீராக்கனவுகளின் வடிகால்கள் இந்தவகை சினிமா தியேட்டர்கள். இதற்கும் வெடிவைத்துவிடுகிறார்களே பாவிகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மக்கள் வரவில்லை, காசு கிடைக்கவில்லை என்றால் அவர்கள் தான் என்ன செய்வார்கள் பாவம்!

      நீக்கு
  15. இந்த நாளும் இனிய நாள்..

    எல்லாருக்கும் இறைவன் அருளட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க... வாங்க துரை செல்வராஜூ அண்ணா... வணக்கம்.

      நீக்கு
  16. சினிமா பகுதியை தள்ளி வைத்தாயிற்று..

    இன்றைய பதிவு சிறப்பு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி.  உண்மையில் இன்றைய சினிமா பதிவு தவிர்க்கக் கூடாதது!

      நீக்கு
  17. //பாறையை தோளில் சுமந்தபடி அக்ஷய் நடுக்கடலில் நடந்து வருவது//

    இன்னும் எத்தனை காலம் தான் ரசிகர்களை கோமாளிகளாக நினைப்பார்கள் ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை, நீங்கள் நினைக்கும் அளவு அப்படி காபியாக இல்லை ஜி. உங்களுக்கு அந்தக் காட்சி நினைவுக்கு வரும்! அவ்வளவுதான்.

      நீக்கு
  18. ஸ்விஸ் கொலை - கடவுளே கொடூரமடா.....இத்தனைக்கும் கொலையாளிக்கும் அந்தக் குடுமப்த்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னுதான் தகவல்கள் சொல்கின்றன. 13 வயசுப் பையன் அந்தக் குடும்பத்தில் இருந்தான்றதுக்காக அந்தக் குடும்பத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறான்னு செய்தியில்...ஹூம் சைக்கோ சீரியல் கில்லர் போல...கொடுமை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகவும் கொடுமை இல்லை? படிக்கும் போதே கலங்க வைத்தது.

      நீக்கு
  19. ஆஹா காவேரி பார் - அதே நாங்க காவேரிய பார்த்திருக்கோமே!!!

    அந்த பார் சோப் நம்ம வீடு குடும்பம் ரொம்பப் பெரிசா......இப்படித்தான் ஏதோ வண்ணான் வீடு போல ஏகப்பட்ட சோப் வாங்கிப் போட்டுடுவாங்க. (காதில கூட வாங்கிய நினைவு) அதை வாங்கி சின்ன சின்ன பாரா வெட்டி அதுவும் நூல் கொண்டு அறுத்து...அப்புறம் எங்க வீட்டுல இதுக்குன்னு ஒரு கத்தி (ரம்பம் போல ஹாஹாஹா) இருக்கும் அதை வைச்சுக் கட் பண்ணி, தோய்ப்போம் தோய்ப்போம்....ஹூம் நீ விடாத்ய் தேய்த்தாலும் நான் அடாது கரைய மாட்டேன்னு....அப்புறம் தோய்க்கும் கல்லுல அதை ஈஷி நன்றாகப் பதிய வைத்து அதுக்கு மேல டப் டப்னு துணிய குறிப்பா பெட்ஷீட்டை தூக்கி அடித்து அடித்து துவைத்து....

    அத்தனை எளிதாக நுரை வந்துவிடாது. சவுக்காரம் கூடுதல் எண்ணையும் கூடுதலாக இருக்கும் பார்கள்....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைய சோப்கள் கொழகொழ என்று ஆகிவிடும்.  அந்த பார்கள் எவ்வளவு தண்ணீர் பட்டாலும் கல் போல இருக்கும்!

      நீக்கு
  20. ராமு வரைந்திருக்கும் படங்கள் அழகாக இருக்கு. பார்க்கும் முகங்கள் மனசுல பதிஞ்சு வரைந்த காலகட்டமா இருக்கும்...முதல்ல அப்படித்தானே வரைவது இல்லையா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உடல் பொருள் ஆனந்தி கதைக்கு ரமதான் ஓவியம் என்று நினைவு.  அந்த ஜாடை இதில் தெரிகிறாற்போல் தோன்றியது.

      நீக்கு
  21. கணவனே ஏற்பாடு செய்திருந்தாலும் பணம் போய்டாதா? இல்லை கணவனும் திருடனும் கூட்டுக் களவாணிகளா!!?

    பையன் புத்திய பாருங்க!

    ஒன்லைன் கதை நல்லாருக்கும் போல இருக்கே....கானல்நீர். யுட்யூப்ல வள்ளல்கள் அப்லோட் பண்ணிருக்காங்களானு பார்க்கணும். 1961 வருஷத்துப் படம் என்று தெரிகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாருடைய ஆசைகளுக்கு வளைந்து கொடுக்காத பெண்?  தன் ஆசைகளுக்கா?  காதலனின் ஆசைகளுக்கா?  எபப்டியோ இதை வைத்து ஒரு கதை புனைய முடியுமா?  கீதா..   நீங்கள் ரொம்ப நாட்களாக கதைகள் டியூ..

      நீக்கு
  22. சவுக்காரம் என்று சுத்தமான தேங்காய் எண்ணெய் கூடுதலாக இருக்கும் சோப்புக் கட்டிகள்..

    இப்படியான சோப்புக் கம்பெனிகள் -
    ஐம்பது வருடங்களுக்கு முன்பு சிறு தொழில்களாக ஊர் முழுவதும் இருந்தன..

    தஞ்சாவூர் டவர் லைட், கும்பகோணம் பவர் லைட், மதுரை செல்லம் சோப், சர்வோதய சங்கத்தின் அழுக்கு விரட்டும் சோப் (எதோ ஒரு பெயரில்) இன்னும் பலப்பல...

    வடக்கேயிருந்து அதீத நுரையுடன் சந்தைக்கு வந்த 501, ரின், வீல் - போன்றவை நம்ம ஊர்த் தயாரிப்புகள் அத்தனையையும் அழித்து ஒழித்தன...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், இந்தப் பெயர்கள் அறிமுகமானவை. அதீத நுரையுடன் வந்த இந்த சோப்கள் மிக வேகமாக கரையக்கூடியவை.  அதனாலேயே காசு பார்ப்பவை.

      நீக்கு
  23. காவேரி சவுக்காரம்...

    மேட்டூர் கெமிக்கல்ஸ், சேலம் தயாரிப்பு..

    ஆகா!..

    பதிலளிநீக்கு
  24. அன்றைக்கு சோப் விளம்பரத்தில் பூவும் பொட்டுமாக இல்லாள்!..

    இன்றைக்கு பாழ் நெற்றியும் தலைவிரி கோலமுமாக ஹவுஸ் வைஃப்!..

    அடக் காலக் கொடுமையே!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Fashion ங்க... வேலைக்குச் செல்லும் பெண்களின் சௌகர்யம்!

      நீக்கு
  25. இங்கே நகர் முழுவதிலும் நகைக் கடையின் பெரிய பெரிய விளம்பரங்கள்..

    மூக்கு நுனியிலும் தொங்கல்கள்.. ஆனால்,

    நெற்றி மட்டும் பாழ்!..

    பதிலளிநீக்கு
  26. ராம்சேது பார்க்க தொடங்கி, முழுதாக பார்க்கவில்லை...

    யசோதா - விறுவிறுப்பான படம்...

    பதிலளிநீக்கு
  27. வெளிர் மஞ்சள் நிற சன்லைட் பார் சோப்பு நன்றாகவே இருந்தது. துவைக்கும்போது கைகளுக்கு பாதுகாப்பாகவே இருந்தது

    பதிலளிநீக்கு
  28. ராம்சேது படக்கதை பற்றி விவரங்களைப் படித்துத் தெரிந்து கொண்டேன். எனக்குப் பிடித்திருந்தது.

    அரசியல்வாதிகளின் சொந்த நலன்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற அடாவடி செயல்களைத் தொட்டு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தமுயற்சிகள் இருந்தாலே பாராட்ட வேண்டியது தான். ஒரிரு குறைபாடுகளைப் பெரிது படுத்தக் கூடாது என்பது என் கட்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை.  என் கட்சியும் அதுதான்.  அதனாலேயே நான் ரசித்துப் பார்த்த படங்கள் இவை.

      நீக்கு
  29. இதே வியாழன் பகுதியில் சில நாட்களுக்கு முன்
    வீர பாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் சேலம் ஓரியண்டல் தியேட்டரில் திரையிட்ட செய்திகள் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டிருந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதான் சொல்லி இருக்கிறேனே..  எனக்குதான் தெரியாதே தவிர, அந்த தியேட்டருக்குச் சென்றவர்கள் உணர்வோடு கலந்தது அது.

      நீக்கு
  30. தனிமையான இரவுகளில்?....

    இது என்ன கேள்வி?

    பாலும் கசந்ததடி
    படுக்கையும் நொந்ததடி..

    - என்று இந்தக் கவிஞர்கள் படுத்துகிற பாடு இருக்கிறதே..

    என்னைக் கேட்டால்
    அந்தப்பெண் படத்திற்குப் பதில் ஒரு ஆணின் முகப்படம் இருந்திருக்கலாம் என்பேன்..

    அந்த அளவுக்கு ஆண்களின் மீதான பெண் கொடுமைகள்
    வலுத்திருக்கும் காலமிது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக் கண்கள் பெண்ணின் கண்கள் என்று சொல்கின்றனவா?!! ஆணுக்கும் கண்ணீர் உண்டு. தாபங்கள் உண்டு.

      நீக்கு
    2. அந்த முகம் பெம்ணின் முகம். அதற்குப் பதில் ஆணின் முகமாய் இருந்திருக்கலாம் என் மனம் சேதி சொன்னது. எது எப்படியோ எனக்கு அடுத்த கதைக்கு ஒரு கரு கிடைத்து விட்டது.
      ஆணின் மீதான பெண்ணின் ஆக்கிரமிப்புகளைச் சொல்லும் கதையாக உருவாகும் அது.

      நீக்கு
  31. ராம்சேது. பெயர் எதுவாயினும் இலங்கையுடன் ஒரு தொப்புள் கொடி உறவு இருப்பது வெளிப்படை. 

    காசாவரி ஈமு கோழி பித்தலாட்டத்தை நினைவூட்டியது. 

    பாட்டுக்கு பாட்டு 

    மூடி திறந்த இமை
    இரண்டும் பார் பார் என்றன

    60களில் பார் சோப் உபயோகித்த அனுபவம் உண்டு. ஒரு பார் 4 அணா என்று நினைவு. 

    பரணி தயாரிப்பு என்று விளம்பரத்தில் இருக்கிறது. ஆகவே இது பானுமதி அவர்களின் சொந்த தயாரிப்பு எனலாம். 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படம் நல்ல படம்.  ஆம் ஈமுவை கொஞ்சம் நினைவு படுத்துகிறது.  பாட்டுக்கு பாட்டு சினிமா பாட்டு!  ஆம், பரணி அவர்கள் மகன்.

      நீக்கு
  32. கானல்நீர், பானுமதி - நாகேஸ்வர ராவ் நடித்த
    அற்புதமான திரைப்படம்.

    லைலாமஜ்னு
    தேவதாஸ்
    கானல் நீர்

    -- இந்த மூன்றும் மறக்க முடியாத காதல் ஓவியங்கள்.

    காதலின் வெற்றி அல்லது சோகம் அது நிறைவேறாமல் போவதில் தான் என்று நினைக்க வைக்கும் கதையமைப்பு கொண்ட கதைகள் இவை.

    கல்யாண(ப்)பரிசு கூட ஸ்ரீதரின் மனசில் மேற்கண்ட திரைப்படங்களின் பாதிப்பில் தான் உருவாகியிருக்கும் என்று நான் நினைப்பதுண்டு.

    இந்த எல்லாக் கதைகளிடமிருந்தும்
    கானல்நீரில் வேறுப்பட்ட. அம்சம் என்னவென்றால்
    கடைசி வரை காதலர்கள்
    (நாகேஸ்வர ராவும் பானுமதியும்) ஒருவரை ஒருவர் நேரடியாகப் பார்த்துக் கொண்டதில்லை என்பது தான்!
    அவர்கள் உரையாடல் காட்சி வரும். ஆனால் அந்த மாதிரி சந்தர்ப்பங்களில் இருவருக்கும் இடையில்
    ஒரு திரைச்சீலை இருக்கும். சோக முடிவைக் கொண்ட வங்காள மொழிக்கென்றே வாய்த்த உருக்கமான கதை.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ..  அந்தப் படம் பார்த்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது.  பானுமதி கொஞ்சம் அலட்டலான நடிப்புக்கு பெயர்போனவர்.  அவர் இது மாதிரி உருகும் பாத்திரத்தில் சோபித்திருப்பாரா என்பது சந்தேகம் எனக்கு!

      நீக்கு
  33. யசோதா பார்த்து விட்டேன்.
    '
    'என்ன தவம் செய்தேன் ' ஹா...ஹா...சிறுவர்களுக்கு வரும் சந்தேகக் கேள்விகள் தான் இருந்தாலும் ரசனை.

    திறக்க முடியாத அலுமாரி .....ஹா...ஹா.

    சோப் விளம்பரங்கள் இங்கும் பார் சோப்புகள் இருந்தன. சன்லைட் பிரபலமான சோப்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படித்து ரசித்து கருத்திட்டதற்கு நன்றி மாதேவி.

      நீக்கு
  34. சேலம் தியேட்டர் பற்றிய குறிப்புகள் சுவாரசியம். கவிதை அருமை. நகைச்சுவை ஏற்கெனவே படிச்சாச்சு. கந்தசாமியின் கட்டுரை வழக்கம் போல். பார் சோப்பெல்லாம் உபயோகித்ததில்லை. சன்லைட் சோப் தான். அதையே நான்காக வெட்டிப் பயன்படுத்தி இருக்கோம்.

    பதிலளிநீக்கு
  35. பார்க்க மயிலைப் போல் அழகாக இருக்கும் பறவையிடம் இத்தனை கொடூரமா? ராம்சேது படமும் லிஸ்டில் இருக்கு. பார்க்கணும். காஷ்மீரி ஃபைல்ஸ் பார்த்த அதிர்ச்சியிலிருந்து இன்னமும் மீளவில்லை. :( அதோடு மருத்துவர்களிடம் படை எடுப்பு. எல்லாச் சோதனைகளும் எடுக்கணும். சனிக்கிழமையன்று போகணும். இதுக்கே நேரம் சரியாய்ப் போயிடுது. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​காஷ்மீரி பைல்ஸ் படம் வெகு முன்னரே பார்த்து விட்டேன். காந்தாரா பார்க்கும் துணிவு வரவில்லை. இந்தப் படம் பார்க்கலாம்.

      நீக்கு
  36. அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  37. கமலா அக்கா காணோமே...  பானு அக்கா மதியமர் தளத்திலிருந்து விடுபட்டு விட்டதாக அலைபேசினார்.  அவரையும் காணோம்!

    பதிலளிநீக்கு
  38. சினிமா விமர்சனம் நன்றாக இருக்கிறது.
    பேஸ்புக் கந்தசாமி ஸார் பதிவிலிருந்து பகிர்வு நிறைய தெரிந்து கொள்ள முடிகிறது.
    தினமலர் செய்தி புது பறவையை தெரிந்து கொண்டேன். மயில் மாதிரி அழகாய் இருந்தாலும் நெருப்பு கோழி போல சண்டையிடும் போல!

    கவிதை உண்மையை சொல்கிறது.
    பொக்கிஷ பகிர்வு அனைத்தும் அருமை.
    பானுமதி நிறைய படங்களில் உருக்கமாக நடித்து இருக்கிறார் ஸ்ரீராம்.
    நன்றாக நடித்து இருப்பார். "அன்னை" படம் பார்த்து இருப்பீர்கள்.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அக்கா.   ரசித்ததற்கு நன்றி.  பானுமதி அன்னையாக உருக்கமாக நடித்திருக்கலாம்.  காதல் காட்சிகளில் அவரிடம் பெண்மைக்கு பதில் ஒரு ஆண்மையான டாமினேஷன் தெரிவது போல தோன்றும் எனக்கு.

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      தங்கள் கருத்துந்தான் என்னுடையதும். ஆனால், பானுமதி அவர்கள் நல்ல நடிகை. பல துறையிலும் திறமைசாலி. அவரின் இந்தப்படம் கேள்வி பட்டதில்லை என்றுதான் நினைக்கிறேன்.

      இன்றைய வியாழன் பதிவு நன்றாக உள்ளது. நீங்கள் அலசி தந்த திரைப்படங்களின் விமர்சனங்கள் நன்றாக இருக்கின்றன. இனிதான் அவைகளை பார்க்க வேண்டும். குழந்தைகள் அவர்களின் நேரத்திற்கேற்ப பார்த்து ரசிக்கும் போது அநேகமாக நான் உறங்கி விடுவேன். ஹா ஹா.

      கவிதை அருமை. தனிமை கஷ்டம் என்றால், முதுமையில் தனிமை மிக கஷ்டம். என்னசெய்வது? சில சமயம் இறைவன் வகுப்பதை மாற்ற முடியவில்லை.

      அந்தப்பறவையின் பார்வையே பயமுறுத்துகிறது. அதன் விபரங்கள் தெரிந்து கொண்டேன்.

      பதிவின் பிற எல்லா விபரமும், பொக்கிஷ பகிர்வும் அருமை. நகைசுவைகளை படித்து ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. நன்றி கமலா அக்கா..   மகன் வந்து நேரமில்லாமல் இருக்கும்போதும் நேரம் எடுத்து பதிவை வாசித்து வழக்கம்போல நீண்ட பின்னூட்டம் இட்டிருப்பதற்கு நன்றி.    நேரம் இருந்தால் இந்தப் படங்களை பாருங்கள்.  நல்ல படங்கள்தான்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!