செவ்வாய், 24 ஜனவரி, 2023

மொழிபெயர்ப்புச் சிறுகதை : குஞ்சமண் போத்தியும் மட்டப்பள்ளி நம்பூதிரியும். - JKC

 

 கொட்டாரத்தில் சங்குண்ணி எழுதிய

ஐதீக மாலை என்ற தொகுப்பிலிருந்து ஒரு கதை

மலையாளத்தில் இருந்து மொழிபெயர்ப்பு - JK

குஞ்சமண் போத்தியும் மட்டப்பள்ளி நம்பூதிரியும்.

சாத்தானை வழிபட்டு நேரில் வரவழைக்கும் சித்தி பெற்றவர் குஞ்சமண் போத்தி. ஸ்ரீ போர்க்கலியில் சென்று பத்ரகாளியை வழிபட்டு அருளாசி பெற்ற பெரிய விதக்தன் மட்டப்பள்ளி நம்பூதிரி. இவர் இருவரும் சமகாலத்தவர். மட்டப்பள்ளி நம்பூதிரி இல்லத்தின் பெயர் மட்டப்பள்ளி என்று மாத்திரம் இருந்தது. அக்குடும்பத்தில் ஒருவர் ஸ்ரீ போர்க்கலியில் சென்று பத்ரகாளியைத் தொழுது நேரில் பிரசன்னமாகக் கண்டு வந்தமையால் அந்த இல்லத்தின் பெயர் பத்ரகாளிப் பள்ளி என்றும் அறியப்பட்டது.

குட்டிச்சாத்தான் (உதவி இணையம்)

பத்ரகாளி (இணையத்தில் இருந்து)

பத்ரகாளிப்பள்ளி மட்டப்பள்ளி நம்பூதிரி ஒரு தடவை திருவனந்தபுரம் செல்ல வேண்டி வேம்பநாட்டு காயலில் இருந்து ஒரு தோணியில் புறப்பட்டார். வைக்கம் அடுத்தபோது வைக்கம் கோவிலில் இருந்து செண்டை கொட்டும் சப்தம் கேட்டது. அந்த கொட்டு ஒரு அசாதாரணமான ரீதியில் இருந்ததால் இப்படி சாஸ்திர சுத்தமாக கொட்டுபவர் யார் என்று அறிய விரும்பினார். “இது மனிதர் ஆக இருக்க முடியாது. தேவர் ஆக இருக்கலாம்.” ஏதாயாலும் “தோணி கரைக்கு ஒதுங்கட்டும்” என்று கூறி கரையில் இறங்கினார். குளித்து முடித்து கோயிலுக்குச் சென்றார். அப்போது அங்கு உற்சவ காலம்.  அந்த உற்சவத்தின்  செண்டை கொட்டுதான் நம்பூதிரியின் காதில் விழுந்தது. ஒரு ஸ்திரீ செண்டை கொட்டிக் கொண்டிருந்தாள்.

வைக்கம் கோயிலில் கொட்டு கொட்ட கட்டளை உரிமம் பெற்ற மாரார் (தொழில்/குலப்  பெயர்) வீட்டில் ஆண்கள் யாரும் இல்லாமல் இருந்தது. ஒரு பெண்ணும், அவருடைய மக்களான இரண்டு சிறுமிகளும் மாத்திரமே இருந்தனர். அவர்களுக்கு கோயில் படியாக கிடைக்கும் சோறு மாத்திரமே ஆகாரம். வேறு உப ஜீவனம் இல்லை. அந்த வீட்டில் உள்ளவர்கள் செய்ய வேண்டிய கொட்டுதல் கடமையை மற்ற சில மாரார்களைக் கொண்டு நடத்தி கோயிலில் இருந்து சோறு வாங்கி ஜீவித்தனர்.


அப்படி இருக்கும்போது ஒரு உற்சவ காலத்தில் ஊரில் இருந்த எல்லா மாரார்களும் ஒன்று கூடி அந்த ஸ்திரீயின் வகையாக கோயிலில் கொட்டுவதற்கு யாரும் செல்ல வேண்டாம் என்று முடிவு செய்தனர். கொட்டும் உரிமை அவகாசம் அந்தக் குடும்பத்தில் இருந்து  நீக்கப்பட்டு வேறு மாரார்க்கு மாற்றிக் கிடைக்க வேண்டியே  இங்ஙனம் முடிவு எடுத்தனர். ஆகையால் அவர்களில் யாரும் அந்த ஸ்த்ரீக்கு பதில் கொட்டச் செல்லக் கூடாது என்ற பொதுக் கட்டுப்பாடு விதித்தனர்.

பின்னர் அவர்கள் அந்த ஸ்திரீயை விளித்து “உங்களுடைய வகையாகக் கோயில் காரியங்களைச்  செய்ய எங்களில் யாருக்கும் விருப்பமில்லை. நாளை உற்சவம் தொடங்குகிறது. அதில் கொட்டும் பிரதான உரிமை உங்களுடையது அல்லவா. அதற்கு வேறு யாரையாவது வரவழைத்து கடமையை நிறைவேற்றிக் கொள்ளுங்கள். நாங்கள் சொல்ல வேண்டியதை முன் கூட்டியே சொல்லி விட்டோம். எங்களைக் குற்றம் சொல்ல வேண்டாம். உற்சவ கொட்டு முடங்காமல் நடக்க வேண்டும்." என்று கூறினர்.

அக்காலத்தில் வைக்கம் கோயில் நிர்வாகம் சில நம்பூதிரிகளுடையவும், வடக்கும்கூர் மஹாராஜாவுடைய காரியஸ்தருடையவும் கீழ் இருந்தது. ஆகவே மாரார்கள் அவர்களிடமும் மேற்கூறிய விவரங்களைத் தெரியப்படுத்தினர். ஸ்திரீ கெஞ்சிக் கேட்டும் மாரார்கள் முடிவை மாற்ற முடியாது என்றனர். இரவாகி விட்டது. ஆகையால் தூர பிரதேசங்களுக்கு ஆள் அனுப்பி மாற்று ஏற்பாடும் செய்ய முடியவில்லை.

வைக்கம் மகாதேவர் கோயில்

அந்த ஸ்திரீ என்ன செய்வது என்று திகைத்தாள். அத்தாழம் உண்ணவில்லை. “பெரும் திருக்கோயில் அப்பா, அன்னதானப் பிரபு, நான் ஜீவிக்கணும். நீங்கள் தான் ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டும்.  நான் எவ்வளவு ஆலோசித்தும் ஒரு மார்க்கமும் புலப்படவில்லை.” என்று முறையிட்டு விட்டு படுத்தார்.

அவளுடைய உறக்கத்தில், கனவில் வைக்கத்து அப்பன் தோன்றி “நீ இப்போது கர்ப்பம் தரித்திருக்கிறாய். கர்ப்பத்தில் உள்ளது ஆண் சிசு, அவகாசம் மாறாமல் இருக்க நீயே நாளை உற்சவக் கொட்டு கொட்ட வேண்டும். விடியற்காலையில் எழுந்து குளித்து கோயிலுக்கு செல்ல வேண்டும். அப்போது உனக்கு கொட்டும் முறை, தாளம் ஆகியவற்றை உன் மனதில் தோன்ற வைப்பேன். அப்பிரகாரம் கொட்டினால் போதும்." என்று பெரும் திருக்கோயில் அப்பன் உரைத்தார். அப்பிரகாரமே கோயில் நிர்வாகிகளின் கனவிலும் தோன்றி “நாளை ஸ்திரீ உற்சவக் கொட்டு கொட்டுவாள். அதை நீங்கள் அனுமதிக்க வேண்டும்" என்று கூறினார்.

அடுத்த நாள் காலை ஸ்திரீ எழுந்து குளித்து கோயிலுக்குச் சென்று ராஜாவிடம் கொட்டுவதற்கு அனுமதி கேட்டுப் பெற்று கொட்டத் தொடங்கினார்.

அப்போது முதல் உற்சவம் தீரும் வரை அவளுக்கு சாதாரண உணர்வு இல்லை பெரும் திருக்கோயில் அப்பன் அவளை ஆட்கொண்டிருந்தார். பகவான் தீர்மானித்த செண்டை கொட்டு சாஸ்த்ரீயமாகவும் அசாதாரணமாகவும் இருந்தது.

செண்டை கொட்டு விதிப் பிரகாரம் இருந்தமையால் உற்சவ பலி ஏற்க பூதகணங்கள் யாவும் வந்தன. அன்று கோயில் தந்திரி (பூஜாரி) “மேக்காட்டு நம்பூதிரி”. அவர் பூஜா கர்மங்கள் ஒரு விதம் ஒப்பேற்றுவார், அன்றி தந்திர முறை சரியாக செய்ய அனுபவம் போதாது. பூதங்களை நேரில் கண்டபோது பயந்து நடுங்கினார். உற்சவ பலி சரியாக அமையாவிட்டால் பூதங்கள் தந்திரியைப் பிடித்து சாப்பிட்டு விடும். தந்திரி நம்பூதிரி “மட்டப்பள்ளி நம்பூதிரி” யோடு ”நம்பூரி என்னைக் காப்பாற்ற வேண்டும். இவைகள் என்னை புசித்து விடுவார்கள். தந்திரம் (பூஜை) வகை பாதி நான் உங்களுக்குத் தந்து விடுகிறேன்.” என்று வேண்டினார்”.

மட்டப்பள்ளி நம்பூதிரி மண்டபத்தில் ஜபித்துக் கொண்டிருந்தார். தந்திரி நம்பூதிரி வேண்டுதலின்  படி மண்டபத்தில் இருந்து இறங்கி தார் உடுத்து,  கைப்பட்டகையும் (நீர் சொம்பு/கிண்டி) பூப்பாலிகையும் வாங்கி சரியான ரீதியில் பலி இட்டார். பூதங்கள் சந்தோசத்தோடு பலியை ஏற்றுத் திரும்பிப் போயின.

பத்ரகாளியைச் சேவித்து நேரில் தரிசித்தவரும், மந்திர தந்திரங்களில் சிறந்தவருமான மட்டப்பள்ளி நம்பூதிரி பூதங்களைக் கண்டு பயப்படாமல் இருந்ததில் வியப்பில்லை. இப்பிரகாரம் பத்ரகாளி மட்டப்பள்ளி நம்பூதிரி பரம்பரைக்கு வைக்கம் தந்திரத்தில் (பூஜை செய்வதில்) பாதி பங்கு கிடைத்தது. தற்போதும் மேக்காட்டு நம்பூதிரியும், மட்டப்பள்ளி நம்பூதிரியும் சேர்ந்தே வைக்கம் கோயில் பூஜைகளை செய்து வருகின்றனர்.

பத்திரகாளி மட்டப்பள்ளி நம்பூதிரி வைக்கம் கோயிலில் தந்திரியாக (பூஜாரியாக) இருக்கும் போது ஒருநாள் குஞ்சமண் போத்தி அங்கு வந்தார். உண்டு முடித்து இருவரும் மண்டபத்தில் இருந்து பேசிக்கொண்டிருந்தனர். 


அவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போது போத்தி “ஒரு மூர்த்தியை சேவிக்கும்போது சாத்தானையும் கூடச் சேவிக்க வேண்டும். சாத்தான் மனது வைத்தால் சாதிக்க முடியாத காரியம் ஒன்றும் இல்லை.” என்று கூறினார். இது ஒரு வாதத்தில் சென்று முடிந்தது. வாதம் முற்றியபோது போத்தி "என்றால் அதை இப்போதே பரீட்சித்து பார்க்கலாம்." என்றார்.

போத்தி “யாரங்கே தாம்பூலம் (வெற்றிலை பாக்கு) கொண்டு வா” என்று விளித்தார். ஒரு குட்டிச்சாத்தான் ஒரு கிழவன் வேடத்தில் வெற்றிலையில் சுண்ணாம்பும் தடவி பாக்குடன் தாம்பூலம் ஆக போத்திக்கு கொடுத்தார்.


அடுத்து மட்டப்பள்ளி நம்பூதிரி “காளி எங்கே. தாம்பூலம் கொண்டு வா” என்று கூறினார். அப்போது சாட்சாத் பத்திரகாளி ஒரு அழகான பெண் வேடத்தில் தாம்பூலம் சரியாக்கி நம்பூதிரியிடம் தந்தார்.

போத்தி “யாரங்கே கோலாம்பி (எச்சில் துப்பும் பாத்திரம்) கொண்டு வா” என்று கூவினார். அப்போது ஒரு ஆள் கோலாம்பியைத் கையில் தொடாமல் அந்தரத்தில் எடுத்துக் கொண்டு வந்து போத்தியின் பக்கம் வைத்தான்.  போத்தி கோலாம்பியில் துப்பியவுடன் கோலாம்பியை கொண்டு சென்று மறைந்தான். நம்பூதிரியும் “கோலாம்பி கொண்டு வா” என்று கூவ ஒரு அழகிய பெண் நிலத்தில் கால் பாவாமல் அந்தரத்தில் கோலாம்பியைக் கொண்டு வந்து நம்பூதிரியை அடுத்து வைத்தாள். நம்பூதிரி துப்பியதும் கோலாம்பியை எடுத்துச் சென்றாள்.

இவ்வாறு பரீட்சை முடிந்தவுடன் குஞ்சமண் போத்தி “நான் சொல்லியது தவறு. இப்படி நடக்கும் என்று நான் நினைக்கவில்லை. நீங்கள் ஜெயித்து விட்டீர்கள்." என்று கூறி விடை பெற்றார்.

அவர் சென்றவுடன் பத்ரகாளி, நம்பூதிரிக்கு  முன் தோன்றி “இவ்வாறு என்னைக் கொண்டு இத்தகைய கீழ்த்தரமான செயல்களைச் செய்ய வைத்தது சரியில்லை, இது போன்ற காரியங்கள் செய்ய எனக்கு இஷ்டம் இல்லை. அதனால் இனி உங்கள் முன் தோன்ற மாட்டேன். இனி என்னைக் காண முடியாது. ஆனாலும் நீங்கள் நினைக்கும் நியாயமான காரியங்களை செய்ய மனப்பூர்வமாக வேண்டினால் நிறைவேற்றித் தருவேன்” என்று கூறி மறைந்தாள். அன்று முதல் நம்பூதிரிக்கு பத்ரகாளி நேரில் தோன்றவில்லை.

ஊசி இணைப்பு

பெரியாரும் வைக்கமும்

சுட்டி


17 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவருக்கும் இந்த நாளை நல்லதொரு நாளாக இறைவன் அமைத்து தருவார். அதற்காக இறைவனுக்கு நன்றிகளை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்வோம்.. நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. இந் நாளும் இனிய நாளே..

    எல்லாருக்கும் இறைவன் அருளட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. இதுவரை வெளியான சங்குண்ணி கதைகளில் மனதுக்குப் பிடித்திருந்த கதை இதுவே..

    ஜெய் பத்ர காளி!..

    பதிலளிநீக்கு
  4. அப்பாடா... இன்று நம்பூதிரி லீலைகள் பற்றி கீழ்த்தரமாக இல்லை...

    பதிலளிநீக்கு
  5. பத்திரகாளிப் பள்ளி படித்து அறிந்தோம்.

    பதிலளிநீக்கு
  6. சங்குண்ணியை முழுமையாக ரசிக்க மலையாள ஒரிஜினல் தேவைப்படுகிறது என்று நினைக்கிறேன், மொழிபெயர்ப்பிலே நன்றாக வந்திருக்கிறது என்றாலும். என்ன செய்ய, மலையாளம் தெரியாதே!

    மலையாள நாட்டில் சாத்தானுக்கு முக்கியத்துவம் தொன்றுதொட்டு கொடுக்கப்பட்டுவந்திருக்கிறதோ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஏகாந்தன் அண்ணா அங்கு மாந்த்ரீகம் எல்லாம் கூடுதல் எங்கள் ஊர் உட்பட பின்ன கேரளத்தை ஒட்டிக் கொண்டுதானே இருக்கு முன்ன திருவிதாங்கூர் சமஸ்தானத்துல இருந்ததுதானே...சின்ன வயசுல இந்த மாந்த்ரீகம் கேட்டு பயந்ததும் உண்டு.

      கீதா

      நீக்கு
  7. நூற்றாண்டுகளுக்கு முன் வாரப் பத்திரிகையில் தொடராக வந்த இந்தக் கதைகள் தற்போதும் அச்சு நூல்களாக விற்பனையாகின்றன. 200க்கும் மேற்பட்ட கதைகள். 

    பதிலளிநீக்கு
  8. ஜெ கே அண்ணா இதை வாசித்ததும், படம் போன்று இருக்கே, இன்னும் இப்படியான படங்கள் இயக்கும் இயக்குநரின் கண்களில் சிக்கலை போல என்று தோன்றியது.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. குட்டிச்சாத்தானுக்கும் சிலை வடிவமா ?

    பதிலளிநீக்கு
  10. பெரியாரும் வைக்கமும்//

    வைக்கம் போராட்டம் பத்தி வாசித்ததுண்டு, பாடத்தில் படித்ததும் உண்டு.. ஆனால், ஜெ கே அண்ணா நீங்கள் கொடுத்திருக்கும் இது இன்னும் விரிவான பல நிகழ்வுகளுடன் இருக்கு. முழுவதும் வாசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடவுள் மறுப்பும் பிராமண வெறுப்பும் இல்லாமலிருந்தால் பெரியார் சிறந்த தலைவர் என போற்றலாம். 

      கேரளத்தில் உள்ள நம்பூதிரிகளின் நிலை தற்போது மிகவும் மோசம்.  
      ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம். 
      Jayakumar

      நீக்கு
  11. நீங்கள் நினைக்கும் நியாயமான காரியங்களை செய்ய மனப்பூர்வமாக வேண்டினால் நிறைவேற்றித் தருவேன்”//
    தெய்வத்தை கீழ்தரமான பணிகளை செய்ய வைத்தால்
    எப்படி வருவார்!

    'குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே' என்று பெரியவர்கள் சொன்னது சரியே .
    கதை நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!