செவ்வாய், 31 ஜனவரி, 2023

சிறுகதை : றெக்கை கட்டி பறக்குதையா - ஜீவி

 றெக்கை கட்டி பறக்குதையா...

ஜீவி

அன்று புதன் கிழமை.

சம்பத் டிபன் பாக்ஸைத் திறக்கும் பொழுதே வாசனை தூள் பறந்தது.

"என்னடா  ஸ்பெஷல் அயிட்டமா?  எங்களுக்கும் தம்மாத்துண்டு எடுத்து வையேண்டா" என்றான்  நஞ்சுண்டன்.  கன்னடக்காரன். காரசாரமாய் எதையாவது உள்ளே தள்ள நாக்கு அலைந்தது.

இரண்டு மணி நேரம் ஆபிஸ் மதிய இடைவெளி நேரம். அரைமணி நேத்தில் மதிய உணவுக் கடை முடிந்து விட்டதென்றால் டார்மெண்டரி ஹாலில் கொண்டாட்டம் கொடி கட்டிப் பறக்கும்.

எங்க டீம் மொத்தம் பன்னிரண்டு பேர். அத்தனை பேரும் மென்பொருள் வல்லுனர்கள்.  நகரின் வெளிப்புற பழைய மஹாபலிபுரம் ரோடின் இன்றைய ராஜிவ் காந்தி சாலையின் கடைக்கோடி
ஒதுக்குப்புறத்தில் பிர்மாண்ட கட்டிடத்தின் முழுச் சொந்தக்காரர்களாய் எங்கள் நிருவனம் இருந்தது.  பெங்களூர் ஹைதராபாத், மும்பை, தில்லி என்று கிளை பரப்பியிருந்தது.  கை நிறைய சம்பளம். 

கேண்டினில்  வாங்கிக் கொள்பவர்கள், நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக விசேஷ அயிட்டங்களை வீட்டிலிருந்து கொண்டு வருபவர்கள் என்று உள்ளே தள்ளுவதற்கு கொடுக்கும் முக்கியத்துவம் கூடுதலாக இருந்தாலும்  இந்த இடைவேளையில் அவர்கள் அடிக்கும் அரட்டை தான் தூக்கலாக அமைந்து இதற்காகத் தானே இத்தனையும் என்கிற மாதிரி இருக்கும்.

புதன் கிழமை வந்ததுன்னா கொண்டாட்டம் அலாதியா இருக்கும்.  அன்னைக்குத் தான் கேள்வி--பதில் நாள்.

ஒருத்தர் ஒரு கேள்வி கேட்டு அதுக்கு இன்னொருத்தர் இன்னொரு பதில் சொல்லி நேரம் போகிறதே தெரியாத உற்சாகம்  பீறிட்டுக் கிளம்பும். 

இதிலென்ன சுவாரஸ்யம், பத்திரிகைகளை திருப்பினா,  இணையத் தொடர்புகளில் மேய்ந்தால், யாரிடம் மைக்கை நீட்டினாலும் என்று இன்று நாட்டுலே இப்ப எங்க பார்த்தாலும் இந்த கேள்வி- பதில் டிரெண்டாத் தானே இருக்கு,  இவங்க இவங்களோட கேள்வி--பதில் கொண்டாட்டத்திலே உற்சாகம் அடைய அப்படி என்ன ஸ்பெஷல் சுவாரஸ்யம் இருக்கு என்கிறீர்களா? 

நியாயமான கேள்வி.  என்ன சுவாரஸ்யம்ன்னு சொல்றேன்.  அது தெரிஞ்சா நாம்பளும் அதே மாதிரி கேள்வி-பதில் விளையாட்டை விளையாடிப் பார்க்க மாட்டோமோன்னு தோணும்.

அந்தாதிப் பாடல்கள் மாதிரி கேள்விகள் ஒன்றைத் தொட்டு அடுத்தது தொடர்வது வித்தியாசமாய் இருக்கும்.

ஒருத்தர் கேள்வி கேட்க அதுக்கு இன்னொருத்தர் பதில் சொல்ல அவர் சொன்ன பதிலுக்குத் தொடர்ச்சியா அடுத்தவர் கேள்வி இருக்கும்.  சொன்னா தெரியாது. விளையாடிப் பார்த்துத் தெரிஞ்சிக்கத் தான் இந்தக் கதையே. 

ரெடி.. ஸ்டார்ட்..

"உஷா.. என்ன இன்னிக்குத் தான் குளிச்சையா? பார்த்தாலே தெரியுதே.." என்று குரல் தாழ்த்திக் கேட்டாள் சுகுமாரி.

"ஆமாண்டி.. எப்படிக் கண்டு பிடிச்சே? ஏன் டல்லடிக்கிற மாதிரி இருக்கேனா?" என்று அவள் பக்கம் திரும்பி கிசுகிசுத்தாள் உஷா.

"நோ.. நோ.. தலை முடி காட்டிக் கொடுத்திடுச்சு.." என்று நாணய உண்டியலைக் குலுக்கிய மாதிரி கலகலத்தாள் சுகுமாரி.  "எங்களை மாதிரி எல்லாத்துக்கும் தேங்காய் எண்ணையை யூஸ் பண்ணிப் பாரு..  தொட்ட இடமெல்லாம் துலங்குகிற் மாதிரி ப்ர்ஷ்ஷா மினுமினுப்பாயிடும்.." என்று கூடுதல் ஆலோசனையையும் சொன்னாள். கேரளத்து தேங்காய் எண்ணை அவள் தேகத்தையே மினுமினுப்பாக்கியிருப்பதில் அவளுக்கு ஏகப்பட்ட பெருமை.  தன்னுடல் அழகைத் தானே நேசிப்பதில் ஒரு சந்துஷ்டி.

"தேங்காய் எண்ணை தலைக்குத் தடவிக்க சரி.  உடலுக்குக் கூடவா?" எனறு இவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த உமாபதி முறுவலித்தபடியே கேட்டான்.  

"என்ன அப்படிக் கேட்டுட்டீங்க உமா? எங்களுக்கு எல்லாத்துக்கும் தேங்காய் எண்ணை தான்.." எனறு சொல்லிச் சிரித்தாள் சுகுமாரி.  "துவையலில் இருந்து மிதியடி வரை..எங்களோட தென்னைமரக்கதை ரொம்பப் பெரிசு. தென்னைமரக் காதல்ன்னு சொல்றதைத் தாண்டிய ஒரு மோகம்".

"தென்னை மரம் இருக்கட்டும்... நேத்திக்கு 'ஒரு புளியமரத்தின் கதை'ன்னு  பழைய நாவல் ஒண்ணு படிச்சேன். யார் எழுதினதுன்னு யாருக்கானும் ஞாபகம் இருக்கா?" என்று குறுக்கிட்டான் சுந்தரேசன்.

"சுந்தர ராமசாமி எழுதினது தானே! ரொம்ப ஃபேமஸான நாவல் ஆச்சே.." என்று விமலா சொன்ன போது "புளியமரம்ங்கறே?... ஏதாவது பேய்க்கதையா?"ன்னு  பயந்த பாவத்தில் பிரமிளா கேட்டதும் அடக்க முடியாமல் சிரித்தே விட்டாள் விமலா.

"எதுக்கு சிரிக்கறே? பேய்ன்னா ஒங்களுக்கெல்லாம் பயமேயில்லையா?" என்று பிரமிளா சிணுங்க,

"பேய்ப்படம்ன்னா Sinister - தாங்க.. கொஞ்சம் பழைய படம் தான். போன மாசம் புரசைவாக்கத்திலே ஒரு தியேட்டர்லே போட்டாங்க . பார்த்திட்டு அரண்டு போயிட்டேங்க.." என்றான் நஞ்சுண்டன்.

"கதையென்ன? டிராகுலா பட ங்களை விட மிரள்ற மாதிரி படம் வந்திருக்கா என்ன?" என்றாள் விமலா 

"இது வேற மாதிரி கதை.." என்றான் நஞ்சுண்டன். " கதாநாயகன் க்ரைம் நாவல்லாம் எழுதற ரைட்டர். கதைக்கான மேட்டருக்காக கொலை நடந்த ஒரு வீட்டுக்குக் குடிபோறான். அந்த வீட்லே யாரோ விட்டுட்டுப் போன பழைய விடியோ டேப்புகள் சில அவனுக்குக் கிடைக்குது. என்னதான் இருக்கும்ன்னு போட்டுப் பார்த்தா எல்லாமே  ஏற்கனவே இறந்து போன கொலை செய்யப்பட்ட காட்சிகளா டேப்லேலாம் நிரம்பிக் கிடக்குது. ஒரு குடும்பமே தூக்கிலே தொங்கறது.. அந்த குடும்பத்துப் பெண் குழந்தை ஒன்று இந்த சம்பவத்திற்குப் பிறகு காணாமப் போறது, அது தவிர அகோரமான ஒரு நபரே எல்லா விடியோ காட்சிலேயும் வர்றதைப் பார்த்து திகைச்சுப் போறான். தொடர்ந்து சில அமானுஷய நிகழ்வுகள் நடக்குது. மகனுக்கு பயமுறுத்தும் கனவுகள் வர்றது. சின்ன மகளோ அச்சு அசலா அந்தக் காணாமல் போனக் குழந்தையின் படத்தை சுவரில் வரைகிறாள்..

அப்புறம்.."

"ப்ளீஸ்.. இதுக்கு மேலே வேண்டாங்க.. கேட்கவே என்னவோ போலிருக்கு" என்று உஷா படபடத்தாள்.

"ஹார்ட் வீக் காரங்களுக்கும் பேய்ப் பட ங்களுக்கும் ஜென்மப் பொருத்தம் தான் போலிருக்கு.  ஏதோ தியேட்டர்லே பேய்ப்படம் போடும் போதெல்லாம் படம் பாக்கறவங்க வேணும்னா அவங்க ஹார்ட் பீட்டை செக் பண்ணிக்க மிஷின் பொருத்தியிருப்பாங்கன்னு படிச்ச ஞாபகம் வர்றது.." என்றான் ராகவன்.

"பேய்ன்னா மகளிர் பேய்கள் தான் அதிகம் போலிருக்கு.  மோகினி, யட்சிணிலாம் அவங்கள்லே சிலரோட இனப் பேருங்க.  மோகினிப் பேய்லே ரெண்டு வகை.  ஒண்ணு மஸ்லின் துணி மாதிரி வெள்ளை வெளேர் டிரஸை புடவைங்கற பேர்லே சுத்திண்டு இருக்கும்.  கால்லாம் தெரியாதபடிக்கு காத்துலே மிதந்து வரும். கிட்டத்தட்ட பாரதிராஜா படங்கள் சிலதிலே பாடல் காட்சிகள்லே பாத்திருப்பீங்களே.. அதே மாதிரி தான்.  இன்னொரு வெரைட்டி கிளுகிளுப்பு ரகம்.  இதுகளுக்கும் வெள்ளை டிரஸ்னாலும் இதுங்க தலை நிறைய பூ வைச்சிருக்கும். பெரும்பாலும்  ஜாதி மல்லி தான். கும்முனு வாசனை ஆளைக் கிறங்கடிக்கும்.  நமக்கு ரொம்ப பக்கத்லே வரச்சேலாம் ஜல்ஜல்ன்னு சலங்கை ஒலி மெல்லிசா கேட்கும்." என்று நஞ்சுண்டன் புன்னகைக்காமல் சொன்னான். அவன் இதைச் சொன்ன பொழுது அவன் கன்னம் லேசா சிவந்ததை உஷா பார்த்து விட்டாள்.  உடனே சடக்கென்று, "என்னங்க? ஏதோ அந்த மோகினிகளோட குடும்பம் நடத்தின மாதிரி விவரிக்கிறீங்க?" என்று சிரித்தாள்.

"அதுக்கெல்லாம் ஆண் பேய்ங்க விடாதுங்க.." என்று ரொம்ப சர்வ சாதாரணமாக அவன் சொன்ன போது பேய்ங்க ஜாதகத்தையே அலசி ஆராய்ந்த வித்வத் கர்வம் அவன் முகத்தில் பளிச்சிட்டது.

"ஆண் பேய்ங்களா.." என்று ஸ்ரீதரன் குளறினான்.

"எஸ். பெண் பேய்ங்க எண்ணிக்கைலே பாதியாவது ஆண் பேய்ங்க எண்ணிக்கை தேறும். 2:1 ங்கற விகிதாச்சாரம்ன்னு வெச்சுக்கோயேன். பேய் இனங்களின் வளர்ச்சியே அப்படித்தான்.  இரண்டு மகளிர்ன்னா ஒரு ஆண்...' என்று ஏதோ தீஸிஸை விளக்கிச் சொல்ற பாணிலே நஞ்சுண்டனின் முழுக்கவனமும் அவன் சொல்ற விஷயத்தில் உன்னிப்பாகப் பதிந்திருந்தது.

திடீரென்று " இந்த ஆண் பேய்ங்க பாடு பரவாயில்லைப்பா.." என்றான் சுந்தரேசன்.

"எப்படிச் சொல்றே?" என்று சடக்கென்று கேட்டான் உமாபதி.

"ஒருத்தருக்கு ரெண்டு பேர் இல்லியா?" என்று அவன் சொன்ன குரலில் ஏக்கம் படிந்திருந்தது.

நஞ்சுண்டனே தொடர்ந்தான். "ஸோ.. ஆண் - பெண் பேய்கள் உயிர் சுமக்காமல் உலாவறதாலே நேச்சுரலி குழந்தைப் பேய்களும் உண்டு.  அதிலேயும் இந்த 2:1 ங்கற ரேஷ்யோ தப்பாம அப்படியே மெயின்டெயின் ஆகும்."

"உயிர் சுமக்காமலேயேவா?  அப்படீன்னா.  உயிர்ன்னு ஒண்ணு அதுகளுக்கு இல்லியா? அப்படி இல்லாத பட்சத்திலே எப்படி ஃபங்ஷன் பண்ண அதுகளாலே முடியறது? தட் டூ இனப்பெருக்க சந்தோஷம் வேறே இருக்குன்னு சொல்றே?" என்று படபடப்பாகக் கேள்விகளை அடுக்கினான் ராகவன்.

"ஸீ.. ராகவன்! சொல்லப் போனா பேய்ங்கன்னா பூலோகத்லே இருந்த நிஜ ங்களோட நிழல்கள் தானே? ஸோ ஸிம்பிள்.  நிஜங்களா இருந்தவங்க  தங்களுக்குன்னு நிர்ணயிக்கப்பட்ட காலம் முடியற வரைக்கும் நிழல்களா உலாவறாங்க.."

"உலாவ சாத்தியம் இருக்குன்னு ஒத்துக்கறே..  அப்போ இனப்பெருக்கம்
செய்ய மட்டும்  சாத்தியம் இல்லாமப் போயிடுமா?"

"உன் கேள்வி உனக்கே பைத்தியக்காரத்தனமா படலே? ஒரு கொஸ்டின்னு இருந்தா, அதைக் கேக்கறத்துக்கு ஒரு லாஜிக் வேணும். இல்லியா? ஒண்ணை ஒத்துப்பேன், இன்னொண்ணை ஒத்துக்க மாட்டேன்ங்கற முரட்டுத்தனம்லாம் கூடாது.  அப்படியிருந்தா லோகத்லே நடக்கற எது ஒண்ணு பத்தியும் நம்மாலே சிந்திக்க முடியாமலேயே போய்டும்.. தெரிஞ்சிக்கோ." என்று விரல் உயர்த்தி அவனுக்கு அட்வைஸ் பண்ற தோரணையில் சொன்னான் நஞ்சுண்டன்.

நஞ்சுண்டன் போட்ட போடில் ராகவனும் ஏதோ புரிந்தும் புரியாத தோரணையில் லேசாகத் தன் தாடையைத் தடவி விட்டபடி இருந்தான்.
அடுத்த சந்தேகத்தைக் கேட்க அவன் தயாராக இல்லை என்பது மட்டும் அவன் முகபாவத்தில் தெளிவாகத் தெரிந்தது.

அந்த இறுக்க சூழ்நிலையை மாற்றவோ என்னவோ,

"பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடின ஒரு பாட்லே கூட பேய் வரும். தெரியுமா?" என்றான் ரகு.

"ஆனா இதுலே தென்னை மரம், புளிய மரம் இல்லாம இன்னொரு மரம்.  

"வேப்பமர உச்சியிலே பேயொன்று ஆடுது'ன்னு பாட்டு வருமே, ஆங்.. அந்தப் பாட்டோட ஆரம்ப வரி என்ன?' என்று சுரேஷ் யோசனையில் ஆழ்ந்த பொழுது, " சின்னப் பயலே.. சின்னப்பயலே.. சேதி கேளடா ." ராகத்தோடு முதல் வரியை சுகன்யா பாடிக் காட்டினாள்

"என்ன படம் தெரியுமா?" என்று  ஸ்ரீதரன் கேட்டு விட்டு, யார் பதிலுக்கும் காத்திராமல், "அரசிளங்குமரி.." என்று அவனே கட்டை விரல் உயர்த்தி விடை சொன்ன பொழுது கைத்தட்டல் லேசாக எழுந்தது.

"குமரின்னா என்ன வயசு இருக்கும்ங்கிறீங்க?.." சுந்தரேசன் விழிகள் என்ன காரணத்தினாலோ இதைக் கேட்கும் பொழுது மினுமினுத்தன.

"என்ன 18 வயசுன்னு சொல்லலாமா?" என்றான் ராகவன்.

"பெண்கள் வயசு சார்ட் ஒண்ணு இருக்கு. ரெஃபர் பண்ணினா தெரியலாம்" என்றான் ஸ்ரீதர்.

ஸ்ரீதேவி உதட்டைப் பிதுக்கினாள். "பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் --இதான் பொம்பளைங்க வயசு சார்ட்.  இதுலே குமரின்னு ஏதும் லேது.." 

"ஏங்க இப்படி அழிச்சாட்டியம் பண்ணுறீங்க?  குமரின்னா அர்த்தம் என்னன்னு சொல்லுங்க.  ஸ்ரீதேவி சொன்னதிலிருந்து நான் அந்தப் பருவத்தைத் கண்டுபிடிக்கிறேன் "
என்றான் உமாபதி.

"குமரின்னா கன்னிப் பொண்ணுன்னு அர்த்தம் கொள்ளலாமா?" என்று ரகு சொன்ன போது, "இதெல்லாம் கரீட்டா சொல்லிடுவியே.." என்று அவனை கலாய்த்தான் ராகவன்.

"அப்போ குமரின்னா 18 வயசு. ஸ்ரீதர் சொன்னது சரி.. சார்ட்டோட கம்ப்பேர் பண்ணினா மடந்தை. அப்போ மடந்தை தான் குமரி. ஓக்கேவா?" என்று ஸ்ரீதேவி சொல்ல "இங்கே மடந்தைகள் யாருமில்லையே? எதுக்கும் தெரிஞ்சிக்கலாமேன்னு தான்.." என்றான் உமாபதி.

"உமா.. அப்போ ஆம்பளைகளுக்கு இந்த மாதிரி பருவப் பெயர்கள் இல்லேன்னு சொல்ல வர்றீங்களா?" என்றாள் சுகன்யா.

"ஏன் இல்லாமல்? சொல்லட்டுமா?" என்று ஸ்ரீதேவி கேட்ட போது "யா.. யா.. " என்று பெண்கள் கூட்டமே கூப்பாடு போட்டது.

"இவங்களுக்கும் ஏழு பருவங்கள்..." என்றவள் "பாலகன், விடலை, காளை, மீளி, மறவோன், திறலோன், முதுமகன்.." என்று ஒவ்வொரு பருவத்திற்கும் விரலை மடக்கிக் கொண்டே வந்தவள் "ஏழு ஆச்சா?" என்றாள்.

"அது என்ன மீளி? ஏதாவது கிண்டலுக்கு எடுத்து விடுறீங்களா?" என்றான் சுந்தரேசன்.

"மீளிங்கறது 36 லிருந்து 48 வயசுக்கான ஆண்களின் பருவம். மறவன், வீரன்னு அர்த்தம்.  சங்க இலக்கிய சான்று வேண்டுமா?" என்று ஸ்ரீதேவி சவால் விட்டாள்.

"வேண்டாங்க.. வீரன்ன்னு சொல்லிட்டீங்கள்லே.. அது போதுங்க.." என்று கெஞ்சுகிற பாவனையில் சுந்தரேசன் குரல் தழைய "மாதுன்னா என்னடா இவ்வளவு பயம் உனக்கு?" என்று சீண்டினான் ரகு.

"மாதுவா? என்ன அவ்வளவு கிண்டலா? அந்த வயசு இங்கே யாருக்கும் ஆகலே மிஸ்டர்.." என்று ஆவேசமானாள் சுகுமாரி.

"வயசா? மாதுன்னா கட்டிளம் குமரி அல்லவோ?"  சுரேஷ் இடையில் நுழைய,

"எங்க கண்ணதாசனே மாதுன்னா கனவுக்கன்னின்னு சான்றிதழ் கொடுத்திருக்கிறார்ங்க.."  என்றான் ஸ்ரீதர்.

"பாட்டுச் சான்றிதழாக்கும்?"  என்று சுகுமாரி சந்தேகத்தோடு பின்வாங்க, "ஆமாங்க.. மயங்குகிறாள் ஒரு மாது.. தன் மனதுக்கும் செயலுக்கும் உறவு இல்லாது மயங்குகிறாள் ஒரு மாது..
பாசமலர் பாடல்ங்க... அத்தான்.. அத்தான்ன்னு கொஞ்சல் கூட இருக்குமே.."

"அவ்வளவு பழைய.. நான் பிறக்காத காலத்து வெரி ஓல்ட் சமாசாரம்லாம்.." என்று சுகுமாரி நெளிய

"மாதுன்னவுடனே ஏதோ சமையல்காரனோன்னு நெனைச்சேன்.." ஸ்ரீதேவி விஷமமாக சிரிக்க, " அது என்னடி புதுக்கதை?" என்று ஆர்வமானாள் விமலா.

"மாது.. சங்கர்லால் வீட்டு சமையல்காரர்.. தெரியாது?" என்று ஸ்ரீதேவி புதிர் போலச் சொல்ல, 'அது யார்டீ சங்கர்லால்?  தெருக் கோடிலே இருக்காரே, அந்த அடகுக்கடை சேட்ஜியா?" என்று உஷா விழிக்க, "ஏதோ துப்பறியும் கதை ஆளுன்னு நெனைக்கிறேன்..என்ன சுஜாதா கதை ஆசாமியா?" என்று உதடு சுழித்தாள் சுகன்யா.

"சரியா போச்சு.." என்று நெட்டுயிர்த்தாள் ஸ்ரீதேவி.

"சரியாச் சொல்லியும் சுஜாதான்னு சொதப்பிட்டியே.."

"அதான் நானும் பார்த்தேன்..  சுஜாதான்னா கணேஷ், வசந்த் தானேன்னு பார்த்தேன்..' என்று உமாபதி சொல்ல

" தமிழ்வாணன் தெரியுமா?" என்று ஸ்ரீதேவி கேட்க, "ஓ.. அந்த கூலிங்கிளாஸ் ரைட்டர்..." என்று நினைவுக்கு வந்த ஜோரில் சுகன்யா கைதட்டினாள்.

"முப்படை மாதிரி மூணு ரைட்டர்ஸ்.. தமிழ்வாணன், சிரஞ்சீவி  ராஜேஷ் குமார் 
மறக்கவே முடியாத மர்மக் கதை மன்னர்கள்.. அதுசரி, இந்தக் கதை எழுதற சமாசாரத்திற்கும் மன்னர்களுக்கும் என்ன சம்பந்தம்?" என்று உமாபதி  ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்க, 

"முப்படை சரி.. எனக்கு நம்ம நாட்டு தரைப்படையின் கோஷம் கேட்டாலே உற்சாகம் பிறக்கும்.." என்றாள் உஷா.

"அது என்னவோ, எனக்கும் தான் சொல்லேன்டி.." என்றாள் சுகுமாரி.

சடாரென்று எழுந்து சல்யூட் அடித்தபடி, "பாரத் மாதா கீ ஜே..  வந்தேமாதரம்" என்று ராணுவ தோரணையில் ரகு முழங்க உணர்வு பூர்வமான உற்சாகம் அங்கே பீறீட்டது.

"சுழலும் கால்கள், பிடிக்க இரு கைகள், கிணுகிணு மணிக்குரல்.. அது என்னவோ?" என்று சுகன்யா விடுகதை போட...

"றெக்கை கட்டி பறக்குதையா..." என்று உஷா இசைக்க அந்த இடமே கரவொலியில் கலகலத்தது.

"அம்மாடி.. டைம் ஆச்சு.. அடுத்த புதன் வைச்சிக்கலாம்.." என்று கை அசைத்தாள் ஸ்ரீதேவி.

56 கருத்துகள்:

  1. ஆபீஸ் இடைநேர அரட்டையையே கதைவடிவில் கொடுத்திருக்கிறார் ஜீவி சார்... அந்த அரட்டை உலகில் நாமும் கூட இருப்பது போன்ற உணர்வு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'கதை வடிவில்'
      'நாமும் கூட இருப்பது போன்ற'
      -- உங்கள் தன்னுணர்வு பின்னூட்டம் தொடர்ந்து எபியில் எழுத உற்சாகமூட்டியிருக்கிறது. நன்றி, நெல்லை.

      நீக்கு
  2. அது சரி... புதன்தோறும்தான் அரட்டை உலகமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹி..ஹி.. எபியின்
      உள்ளடக்க விஷயங்களுக்கு
      வாரப்பத்திரிகைகளின் பாணியில் சுவாரஸ்ய பங்களிப்புகள் செய்யலாம் என்ற எண்ணத்தில் தான் இதெல்லாம், நெல்லை.

      நீக்கு
    2. ஹி..ஹி.. எபியின்
      உள்ளடக்க விஷயங்களுக்கு
      வாரப்பத்திரிகைகளின் பாணியில் சுவாரஸ்ய பங்களிப்புகள் செய்யலாம் என்ற எண்ணத்தில் தான் இதெல்லாம், நெல்லை.

      நீக்கு
  3. அரட்டை அரங்கம் நனறாக உள்ளது.  ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாமல் இருப்பதை முடிச்சு போட்டு கயிறாகத் திரித்து விட்டீர்கள். குளித்தலில் துவங்கி, தேங்காய் எண்ணெய், தென்னை மரம், புளிய மரம், வேப்ப மரம், பேய், ஆண் பேய், பெண் பேய், குழந்தை பேய், குமரி, ஆண்களின் பருவம், சங்கர்லால், தமிழ்வாணன், முப்படை என்று போய், கடைசியில் தலைப்புக்கு  ஏற்ப நேரம் "றெக்கை கட்டிப் பறக்கிறது" என்று சுட் பண்ணி விட்டீர்கள். இது போன்ற பதிவு ஒரு தொடராக கூட விரிவாக்கம் செய்ய முடியும். 

    குமுதம் ரா கி ரங்கராஜன் இது போன்ற அரட்டையை குமுதத்தில் எழுதினார் என்பது என் நினைவு. இது சரியோ தப்போ என்று தெரியாது. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பானுமதி வெங்கடேஸ்வரன்31 ஜனவரி, 2023 அன்று 12:12 PM

      //குமுதம் ரா கி ரங்கராஜன் இது போன்ற அரட்டையை குமுதத்தில் எழுதினார் என்பது என் நினைவு. இது சரியோ தப்போ என்று தெரியாது. // 100%சரிதான்.

      நீக்கு
    2. 'ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாததை முடிச்சு போட்டு' என்பது தான் பின்பலம். 'சனிக்கிழமை தோறும்
      வாசிப்பு அனுபவிப்பை எபியில் பகிர்ந்து கொள்பவரின் வரிசை படுத்துதலை மனசில் அசை போட்டு ரசித்தேன்.

      தலைப்பை முதலிலேயே தீர்மானித்து விட்டேன்.
      அங்கு கொண்டு வந்து நிறுத்தி அதற்கு மேல் சொல்லாமல் விட்ட விஷயத்தை வாசிப்பவர் யோசிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஏனோ அதற்குத் தொடர்ச்சியாக யாரும் யோசித்ததாக, எதற்காக அந்த 'றெக்கை கட்டி..' வந்தது என்று கூட பின்னூட்டத்தில் சொல்லவில்லை. 'பாரத் மாதா கீ ஜெய், வந்தேமாதரம்' கோஷத்தின் தொடர்ச்சி அது.

      நீக்கு
    3. ஜெஸி ஸார், உங்கள் நினைவாற்றல் பிரமாதம். Consolidate பண்ணி பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லலாம் என்று நினைத்தேன். அதற்குள் பா வெ. முந்திக் கொண்டு விட்டார்
      நீங்கள் சொன்னது சரி தான். ரா.கி.ரங்கராஜன் குமுதத்தில் தொடராக எழுதியது தான் inspiration. அதே மாதிரி ஆனால் கதைவடிவு கொடுக்கத் தூண்டல்.
      குமுதத்தில் வந்த அந்தப் பகுதிக்குப் பெயர்: கேள்வி நேரம்.
      பெரியண்ணா என்ற குடும்பத் தலைவர் பெயரைச் சொன்னால் இன்னும் நன்றாக உங்கள் நினைவுக்கு வரும்.

      நீக்கு
    4. சைக்கிள் கூட தெரியாதவர்கள் எபி வாசகர்கள் என்று நினைக்கலாமா ஜீவி சார்? புரிந்துவிட்டது என்பதால் அதைப்பற்றி நானும் குறிப்பிடவில்லை மற்றவர்களும்

      நீக்கு
    5. ஆம், பெரியண்ணாவை நானும் மறக்கவில்லை.

      நீக்கு

    6. கொஞ்சம் யோசியுங்கள் நெல்லை. சைக்கிளுக்கும்
      பாரத் மாதாவுக்கும்
      ஏதாவது தொடர்பு இருக்கா என்ன?

      நீக்கு
    7. //ஆம் பெரிய்ண்ணாவை//
      சில பாத்திரப் படைப்புகள் அப்படி.
      எவ்வளவு காலத்திற்கு முந்திய சமாசாரம் இது?
      தேர்ந்த வாசகர்கள் என்பது உங்களைப் போன்றவர்கள் தான்.

      நீக்கு
    8. நெல்லை, சைக்கிள் முக்கியமில்லை. யாருடைய சைக்கிள்,
      அவருக்கும் 'பாரத் மா கீ ஜெய்' கோஷத்திற்கும் என்ன பிபைப்பு என்பது தான் முக்கியம்.

      நீக்கு
  4. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  5. அலுவலகத்தில் மதியம் சாப்பிடும் நேரம் எல்லாம் கலந்துரைடால் தானே!
    ஒன்றை தொட்டு ஒன்று என்று போய் கொண்டே தானே இருக்கும்.
    கேள்விகளும் பதில்களும் என்று உரையாடல் தொய்வு இல்லாமல் போனது.
    கதைகளம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதைக்களம் -- என்ற உங்கள் உணர்தல் தான் இனிமேலும் இந்த மாதிரி புதுமைகளை எபியில் செய்ய மன ஒப்புதல்களைத் தந்திருக்கிறது. நன்றி, சகோதரி.

      நீக்கு
    2. கதைக்களம் -- என்ற உங்கள் உணர்தல் தான் இனிமேலும் இந்த மாதிரி புதுமைகளை எபியில் செய்ய மன ஒப்புதல்களைத் தந்திருக்கிறது. நன்றி, சகோதரி.

      நீக்கு
  6. புதன் அரட்டையே ஒரு கதையாய் றெக்கை கட்டி பறந்து இருக்கிறது, ஜீவி அண்ணா.

    பறக்கறப்ப ஆங்காங்கே இறகு உதிர்வது போல் விஷய சமாச்சாரங்கள்.....பெண்களின் ஆண்களின் வயதைக் குறிக்கும் சொற்கள, திரை இசைப்பாடல்கள் என்று கலக்கல் அந்தாட்சரி போன்ற அரட்டை,

    என்னவோ நம்ம நட்புகள் இங்கு அரட்டை அடிப்பது போல ஒரு உணர்வு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. றெக்கை கட்டி பறக்குதையா... அதற்கு அடுத்த வரி என்ன சகோ?..

      நீக்கு
  7. நஞ்சுண்டன் பேய் கதை விவரங்கள்னு விரிவா பேசிட்டு வர உரையாடல்கள் பார்த்ததும் கடைசில கதைல டிவிஸ்ட் வைச்சிருப்பாரோ அல்லது ஒரு வித அமானுஷ்ய திருப்பம் வைச்சிருப்பாரோ ஜீவி அண்ணா ன்னு நினைத்துக் கொண்டே வாசித்தேன் அப்படியான ஒரு உணர்வு அப்பகுதிகளை வாசிச்சப்ப தோன்றியது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அமானுஷ்ய திருப்பம்? அதுக்கு வேறொன்று எழுதினா போச்சு.

      நீக்கு
  8. இந்த நாளும் இனிய நாளே..

    எல்லாருக்கும் இறைவன் அருளட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  9. காலை ஆறு மணி வரையிலும் ஒருவரையும் காணோம்...

    நான் ஐந்து மணிக்கு வந்தும் கதையை வாசிக்க முடியாதபடி சில பிரச்னைகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில பிரச்னைகள் -- சரி. அதற்கு மேலே?
      சொல்ல வந்ததை சொல்லிடணும். அப்பத்தான் அது என்ன சொல்ல நினைச்சோமோ அதற்குத் தொடர்ச்சியா இருக்கும். இல்லேனா அதற்கு ஒரு செயற்கை முலாம் கிடைச்சுடும்.
      நீங்க இந்த செவ்வாய்க் கிழமை பகுதிக்கு தொடர்ச்சியா எழுதறவர். அதனாலே இந்தப் பகுதியில் வெளியாகிற விஷயங்களில் ஒரு கதாசிரியர் என்ற கோணத்தில்
      உங்கள் கருத்து முக்கியம் தம்பி.

      நீக்கு
    2. இன்றுதான் ஒரு வருடத்திற்குப் பிறகு யோகாவிற்கு 7 மணிக்குச் செல்லவேண்டும். அவசர அவசரமாகக் குளித்து, அதற்கு வேகமாகச் செல்லவேண்டியிருந்ததால், அதற்கு முன் கருத்து போட இயலவில்லை.

      நீக்கு
    3. இன்றுதான் ஒரு வருடத்திற்குப் பிறகு யோகாவிற்கு 7 மணிக்குச் செல்லவேண்டும். //

      ஆஹா!! சூப்பர்! நெல்லை. தொடர்ந்து போய் வாங்க. மகிழ்ச்சியாக இருக்கு. All the Best!

      கீதா

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களுக்கு பிடித்த விஷயங்களை அறிவேன். நன்றி, டி.டி.

      நீக்கு
  11. அரட்டை கச்சேரி நன்று.
    நஞ்சுன்டான் பெயரே கிலியாக்குகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நஞ்சுண்டான் என்ற பெயர் கர்நாடகா மாநிலத்தில் சாதாரணமாகப் புழங்கும் வார்த்தை. சிவனைக் குறிக்கும் பெயர் அது. என் 8ம் வகுப்பு ஆசிரியர் (தாளவாடியில்) பெயர் நஞ்சுண்டசாமி.

      நீக்கு
    2. கிலியா? தேவகோட்டையாருக்கா?

      நீக்கு
  12. சில பிரச்னைகள் -- சரி. அதற்கு மேலே?...

    அதைச் சொல்லுவதற்குள்
    காலை உணவின் அழைப்பு..

    இதோ வந்து விட்டேன்...

    பதிலளிநீக்கு
  13. வித்தியாசமான அரட்டை அரங்கம்..

    கலகலப்பு..

    இதற்குள்ளேயே
    நாகினி,
    மோகினி, யட்க்ஷிணி விஜயம்..

    ஒரு காலத்தில் இப்படித் தான் இருந்தது எபியும்!..

    மாறுபட்ட செவ்வாய்!..

    பதிலளிநீக்கு
  14. தெள்ளேணம் கொட்டுதல் என்றொரு வார்த்தை திருவாசகத்தில் வருகின்றது..

    குறிக்கோள் இன்றி கூடிக் கும்மி அடித்தல் என்று கொள்ளலாம்..

    அறம் சார்ந்த உணர்வுகளைக் கதை என்று ஆக்கினால் உபதேசங்கள் எல்லாம் கதை ஆகக் கூடாது என்று கருத்து வரும்...

    இன்றைய உரையாடல் கோர்வை மிகவும் சிறப்பு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதைகளில் உபதேசங்கள் கூடாது என்றில்லை. அந்த உபதேசங்களை கதாசிரியரோ, கதாபாத்திரமோ preach பண்ணுவது போல அமையாமல்
      கதைப்பொருளாக்கி
      அந்த உபதேசம் வெற்று உபதேசமாகத் தெரியாமல் கலாரூபம் கொள்ள வேண்டும். இந்த அர்த்தத்தில் யாரோ சொன்னதை மாறாகப் அர்த்தம் கொண்டிருக்கிறீர்கள் போலிருக்கு.

      நீக்கு
    2. // இந்த அர்த்தத்தில் யாரோ சொன்னதை மாறாகப் அர்த்தம் கொண்டிருக்கிறீர்கள் போலிருக்கு.//

      தாங்கள் சொல்லியது தான் அண்ணா..

      நறுமணம் மலர் மலர்ந்ததும் அதுவாகப் பரவும்..

      நல்ல சொல் மனம் மலர்ந்தால் தான்..

      நீக்கு
    3. கதைகள் என்றால் தான் என்ன?
      இதற்கு யாராவது இலக்கணம் வகுத்திருக்கிறார்களா, என்ன?
      நிச்சயமாக இல்லை.
      ஆனால் கதை என்று
      வாசிப்பவரை நம்ப வைப்பதற்கு ஏதோ ஒன்று தேவையாக
      இருக்கத்தான் செய்கிறது.
      அது என்ன?..
      'வாசிப்பவரை வேறு ஒன்றில் அவர் கவனம் செல்லாது ஒரு பத்து நிமிஷம் நீங்கள் எழுதிச் சொல்லும் விஷயத்தில் பிடித்து வைத்திருந்தால் போதும். அதுவே கதை என்று பெயரிடப் படும்' என்று சுஜாதா
      அனுபவித்துச் சொல்லியிருக்கிறார்.
      'இந்த பிடித்து வைத்திருப்பதில்' முழு வெற்றியும் பெற்றவரும் அவரே.
      இந்த பிடித்து வைத்திருத்தலுக்கு எது ஒன்றையும் சுவாரஸ்யமாகச் சொல்லும் கலை அத்தியாவசிய தேவையாகத் தெரிகிறது.
      அது இல்லையென்றால்
      எழுத எடுத்துக் கொள்ளும் எதுவும்
      பல்லிளித்து விடும்.
      'சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்' என்பார்கள். அதே மாதிரி சுஜாதா அவர்களின் வெற்றியும் சும்மா கிடைத்திடவில்லை.
      அந்தக் கலை கைவசபட அவர் என்ன பாடு பட்டிருப்பார் என்பதைக் கற்பனைப் பண்ணிப் பார்க்கவாவது நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
      இந்த செவ்வாய் கதைப்பகுதிக்கு நான் எழுதியது கதையா, இல்லை உரையாடல் கோர்வையா என்று
      தீர்மானிப்பதும் வாசக வாசிப்பு அனுபவ சம்பந்தப்பட்டதே.

      நீக்கு
    4. அறம் சார்ந்த விஷயங்களா?
      அதைத் தாண்டி வாருங்கள், தம்பி.
      நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பது மாதிரி தான்.
      அறமின்மை என்று நீங்கள் நினைப்பதை சொல்லித் தான் நீங்கள் நினைக்கும் அறத்தை நிலை நாட்ட வேண்டும். அறம் என்பதும் ஆளாளாக்கு மாறும்.
      பெரும்பான்மையோருக்கான அறம், முள்ளை முள்ளால் எடுப்பது தான். தீங்கு செய்தவனுக்கு அதே மாதிரியான தீங்கைச் செய்து அவனுக்குப் புரியவை என்பது தான் இந்த கால கட்டத்தில் பல பேருக்கான அறம்.
      அது எப்படி நியாயமாகும் என்று கேட்டீர்கள் என்றால் திருக்குறளிலிருந்து கூட எடுத்துக்காட்டை எடுத்து விடும் கில்லாடிகள் இருக்கிறார்கள்.

      நீக்கு
    5. தம்பி,

      நீங்கள் எழுதும் கதைகளில் மாற்றம் வேண்டும் என்பதற்காகத் தான் மேற்கண்ட பின்னூட்டம். இதில் உங்களுக்குத் தெளிவான பார்வை வேண்டும். ஏதாவது விளக்கம் வேண்டுமானால் கேளுங்கள். சொல்கிறேன்.

      நீக்கு
  15. @ கில்லர் ஜி..

    // நஞ்சுண்டான் பெயரே கிலியாக்குகிறது.. //

    நடுவாப்பட்டி நஞ்சுண்டான் நல்லதம்பி - என்று ஒரு அரட்டையை போட்டு தூள் கிளப்பி விடுங்களேன்!..

    மீன் குட்டிக்கா நீச்சல் சொல்லித் தர வேண்டும்!..

    பதிலளிநீக்கு
  16. மீன் குட்டியா!.. இலக்கணப்படி மீன்குஞ்சு என்று தான் சொல்ல வேண்டும்..

    நீ யார்யா?.. நாங்க மனுசன் பெத்ததுகளையே குட்டீசு..ன்னு தான் சொல்லுவோம்.. மான் குஞ்சு.. மீன் குட்டி.. இதான் இன்னிக்கு டமிள்..

    போய்யா வேலயப் பார்த்துக்கிட்டு!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முட்டையிலிருந்து வருபவை குஞ்சு. அது இல்லாமல் வருபவை குட்டி. (தாயின் கருவறையில் இருந்து வெளியே வருபவை)

      நீக்கு
    2. //முட்டையிலிருந்து வருபவை குஞ்சு. அது இல்லாமல் வருபவை குட்டி//

      இதன் தெரியுமே..

      அந்தக் கருத்து சும்மா அரட்டைக்கு!..

      நீக்கு
  17. சுவாரஸ்யமான கட்டுரைதான். ஆனால் கதை என்று சொல்ல முடியுமா?

    பதிலளிநீக்கு
  18. மேலே சந்தேகம் எழுப்பியிருப்பது பா.வெ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பா.வெ. நீங்கள் கட்டுரை என்கிறீர்கள்.
      முதல் பின்னூட்டத்தில் நம்ம
      நெல்லையோ 'அரட்டையையே கதை வடிவில் கொடுத்திருக்கிறார்'
      என்கிறார். ஆக கட்டுரைக்கும்
      கதை வடிவு கொண்டிருக்கும் ஒரு விஷயத்திற்கும் அவரவர் வாசிப்பு அனுபவத்தில் தான் வித்தியாசம் இருப்பதாகத் தெரிகிறது. இல்லையா?..

      நீக்கு
  19. வெளிர் பச்சை நிற எழுத்துப் படிக்கச் சிரமமாய் இருந்தது. அதே நீலம்/கறுப்பில் படிக்கக் கஷ்டமாய் இல்லை.

    பதிலளிநீக்கு
  20. பொதுவாக எ.பியில் செவ்வாய்க்கிழமைக் கதை பற்றிய கருத்துரைகளில் இம்மாதிரி ஒன்றிலிருந்து ஒன்றிற்குத் தாவினால் கருத்து கதையை விட்டு எங்கோ போகிறது என்று சொல்லிக் கொண்டிருந்தோம். கதையை ஒட்டியே கருத்துரை அமையணும்னு வற்புறுத்திச் சொல்லிக் கொண்டிருப்போம்! இன்றோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றோ? புரியலே. ஓரிரு (மீன் குட்டி மீன் குஞ்சு பற்றியவை) பின்னூட்டம் தவிர மற்றவையெல்லாம் கதையை ஒட்டித் தானே அமைந்திருக்கின்றன?

      நீக்கு
  21. புதன் அரட்டை தொட்டு தொட்டுப் பல விடயங்களை அசத்திக் கொண்டே செல்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசித்துக் கருத்திட்டமைக்கு நன்றி மாதேவி.

      நீக்கு
  22. கதையின் இறுதிப் பகுதி பற்றி :

    'றெக்கை கட்டிப் பறக்குதையா' க்கு அடுத்த வரி திரைப்பாடலில் என்ன?

    'அண்ணாமலை சைக்கிள்' -- இல்லையா?

    இந்த அண்ணாமலைக்காகத் தான் எல்லாம். 'பாரத் மாதாக்கி ஜெய் -- றெக்கைக் கட்டிப் பறக்குதையா கதைத் தலைப்பு எல்லாம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!