நெட்ப்ளிக்ஸ், அமேசான், சோனி லைவ், ஆஹா, சன் நெக்ஸ்ட், டிஸ்னிப் ஹாட்ஸ்டார்
என்று படம் பார்க்க நிறைய தளங்களுக்கு சப்ஸ்கிரைப் செய்து வைத்திருப்பதால் ஏராளமான படங்கள் பார்க்க வாய்ப்பு. எல்லாவற்றையும் பார்க்க மாட்டேன். மெல்ல ஓட்டி, அல்லது கதைச்சுருக்கம் படித்து செலெக்டடாக அவ்வப்போது சில படங்கள் பார்க்கிறேன்.பார்க்கும் எல்லா படங்களை பற்றியும் எழுதவில்லை. நிறைய குப்பைப் படங்கள் பார்க்கக் கிடைக்கும். அல்லது சாதாரண த்ரில்லர், காமெடிகள் இருக்கும். சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்கள் என்றால் ஒரே மாதிரி இருக்கும். ஒரு சுவரில் சிறு சிறு பேப்பர் துணுக்குகள் ஒட்டுவது, அதையே உற்று உற்றுப் பார்த்து க்ளூ தேடுவது, சிசி டிவி ஃபுட்டேஜ் பார்ப்பது, க்ளூவே கிடைக்காமல் இருக்கும்போது உடன் இருப்பவர் அல்லது யாரோ பேசும் பேச்சில் திடீரென ஒரு க்ளூ கிடைத்து வீறு கொண்டு புறப்படுவது என்று க்ளீஷேக்கள் இருக்கும். நமக்கே கதையமைப்பு பிடிபட்டு போகும். எல்லா கேரக்டரும் சந்தேகப்படுவது போலவே பேசுவார்கள், நடந்து கொள்வார்கள்.
"கிச்சான்னாலே இளிச்சவாய்தானே?" என்று கடைசியில் வசனங்களில் விளையாடுவார்கள்!
சில படங்களை பார்த்தபின் மட்டும் இதைப்பற்றி எழுதினால் என்ன என்று தோன்றும். அப்படி மூன்று படங்கள் பற்றி இங்கே.. முதலாவதாக 'குட் பை' என்னும் படம். ஹிந்தியில் வந்த படம். அமிதாப் முகம் பார்த்ததும் பார்க்கத் தோன்றியது. படம் ஏமாற்றவில்லை. படத்தைப் பற்றி சொல்ல, எங்கிருந்து தொடங்குவது?
குடும்பம் என்று எதைச் சொல்லலாம்? மூன்று பாகமாக பிரிக்கலாமா? முதலில் குழந்தைகளுடன் அப்பா அம்மா அல்லது அப்பா அம்மாவுடன் பள்ளி செல்லும் வயதில் குழந்தைகளுடன் கூடிய காலங்கள். அப்பா அம்மாவின் அன்பு தனக்கே கிடைக்காதா, அல்லது தனக்கு ஸ்பெஷலாகக் கிடைக்காதா, அப்புறம் சகோதர, சகோதரிகளுடன் சண்டை என்று செல்லும் இந்தப் பருவம் அப்படியே தலைகீழாக மாறும் இரண்டாவது பாகத்தில்.
குழந்தைகள் பெரியவர்களாகி விடுகிறார்கள். தனித்தனிக் குடும்பமாகிறார்கள். அப்போது சகோதர உறவுகளின் முக்கியத்துவம் நிறைய குடும்பங்களில் குறைந்து விடுகிறது. சில இடங்களில் அப்பா அம்மாவை கூட கவனிப்பதில்லை.
வளர்ந்த குஞ்சுகள் பிரிந்து, தனியாகி, அவர்களுக்கென்று தனிக் குடும்பமாகி விடும் நேரத்தில் முன்னர் இருந்த சகோதர சகோதரிகளுடனான நெருக்கமான உறவை அதே அளவு நேசத்துடன் அப்புறமும் கடைசிவரை தொடர்பவர்கள் நூற்றுக்கு இருபது சதவிகிதம் இருப்பார்களா? அதுவும் அந்த சகோதர, சகோதரிகளுக்கு புதிய உறவுகள் ஏற்பட்டு, குடும்பங்கள் உருவாகி அவர்கள் நலம், போட்டி என்று வளரும்போது?
தன் முதல் கேசின் வெற்றியைக் கொண்டாட லிவிங் டுகெதரில் இருக்கும் (முஸ்லீம்) நண்பனுடன் பார்ட்டி சென்று வந்து (ஒன்றாக) உறங்கி விடும் ராஷ்மிகா தவற விட்டு விட்டு வரும் ஃபோனைக் கொண்டு வந்து கொடுக்கும் 'பப்' ஊழியன் அவளின் தாய் இறந்து விட்ட செய்தி இரவு முதல் அவள் அலைபேசியில் வந்து கொண்டிருப்பதைச் சொல்கிறான்.
மகளின் முதல் கேஸ் என்ன ஆனது என்று தெரிந்து கொள்ள அம்மா முதல்நாள் ஃபோன் செய்திருந்தும் எடுத்திருக்காத குற்ற உணர்வில் மகள் தந்தைக்கு ஃபோன் செய்ய, அப்பா அமிதாப் மௌனமான கோபத்தை வெளிப்படுத்துகிறார். 'தேவையான நேரத்தில் உதவத்தான், தொடர்பு கொள்ளதானே போன்.. அதை எடுக்காமல் இருந்தால் எப்படி' என்று கேட்கிறார். அவருக்கும் மகளின் முஸ்லீம் நன்பனுடனான லிவின் வாழ்க்கை பிடிப்பதுமில்லை.
இன்னொரு மகன் வெளிநாட்டிலிருந்து அம்மாவின் மறைவுக்கு வரும் வழியில் தங்கி இருக்கும் ஹோட்டலில் மதிய உணவாக பிரியாணி அது இது என்று வெளுத்துக் கட்டுவதை ஃபோனின் மூலமாகவே கேட்டு கடுப்பாகிறார் அமிதாப். இயல்பான காட்சிகள்... மலையேற்றத்தில் இருக்கும் இன்னொரு மகனுக்கு அம்மா காலமானது கூட தெரியாத நிலை.
இப்போது அம்மாவின் மறைவினால் எல்லோரும் சில நாட்கள் ஒரே வீட்டில் இருக்க வேண்டிய சூழ்நிலையில் தலைமுறை இடைவெளி, மகளின் முஸ்லீம் ஆண் நண்பனுடன் இருக்கும் லிவின் வாழ்க்கை போன்ற அதிருப்திகள் எப்படி என்ன என்ன நிலையை அடைகின்றன என்பது கதை. அம்மா மறைவுக்கு செய்யப்படும் சம்பிரதாயங்கள் மீது மகளுக்கு நம்பிக்கை இல்லை, பிடிக்கவில்லை. ஆனால் தடுக்கவும் முடியவில்லை. வயதில் குறைந்த பண்டிட் குருஜியின் மீது அவளுக்கு வரும் கோபம், அதிருப்தி.. அதன் விளைவுகள்..
மனைவியை சிறு வயதில் கரெக்ட் செய்த நினைவுகளை அமிதாப் பகிர்ந்து கொள்வது (உண்மையில் அக்காவுக்குதான் நான் ரூட் விட்டேன்!), மகன்கள் சம்பிரதாயங்களில் ஒன்றாக மொட்டை போட்டுக் கொள்வது பற்றிய காட்சிகள், மகளுடன் அமிதாப் மனம் விட்டு பேசும் காட்சிகள்.. பழைய காட்சிகளில் அபிமான், ஜன்ஜீர் அமிதாப் படங்களை வைத்து அனிமேஷன் பாணியில் காட்சிகளை சொல்வதும் ரசிக்க வைத்தது.
மனைவியாக விவியன் ரிச்சர்ட்ஸ் புகழ் நீனா குப்தா. கங்கைக் கரையில் அமிதாப் சம்பிரதாயங்களின் இறுதி நாளன்று மனைவியின் அஸ்தியிடம் பேசுவது நெகிழ்ச்சி. அர்த்தமில்லாத கண்ட படங்களையும் பார்த்ததாலோ என்னவோ சற்றே மாறுதலான, ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி. மறுபடி மறுபடி மரண காட்சிகள் நீண்டு கொண்டே இருப்பது முதலில் சற்று நெருடலாக இருந்தாலும் பின்னர் பழகி விடுகிறது. எல்லோரும் ஒருமுறை பார்க்கலாம் என்கிற வகையான படம். பெரிய குறைகள் இருக்காது. சொந்த உணர்வுகளோடு தொடர்பு படுத்திக்கொண்டு அங்கங்கே சற்று நெகிழலாம்.
குடும்ப வாழ்க்கையின் மூன்றாவது பாகத்துக்கும் படத்துக்கும் நேரடியாக சம்பந்தமில்லை. எனினும் அது முதியோர்களின் தனிமை.
நான் பார்த்த படமாக அடுத்ததாக நான் சொல்ல இருப்பது..
============================== ============================== ============================== ======
படித்ததில் ஆச்சர்யப்பட்டது..
பிணங்களுடன் சாதாரணமாக வாழும் இந்தோனேஷிய மலைவாழ் மக்கள்!...
============================== ============================== ==================
தனது புகைப் பழக்கம் பற்றி பாலகுமாரன் எழுதியது.
“என்னுடைய நுரையீரல்கள் சரியாக இல்லாது, அதன் அடிப்பக்கம் முழுவதும் நிகோடினால் ஏற்பட்ட சளி அடைப்புகள் சூழ்ந்து கொண்டன. நுரையீரல்கள் முழுவதுமான திறனோடு வேலை செய்யவில்லை.
வயதான காரணத்தால், நுரையீரல்கள் மெல்ல மெல்ல வேலை செய்யும் திறனை இழக்க, இந்த நுரையீரல் அடைப்பும் சேர்ந்து கொண்டு என்னை பழி வாங்கியது. மூச்சுத் திணறல் ஏற்பட்டது. ஒரு பிடி சாதத்திற்கு நான் அவஸ்தைப்படும்படி ஆயிற்று. முகம் முழுவதும் மூடி, ஆக்ஸிஜனை வேகமாக செலுத்தினால் தான் நான் உயிரோடு இருப்பேன் என்கிற நிலைமை ஏற்பட்டது.
என்.ஐ.வி.என்கிற அந்த விஷயத்தோடு தான் இரவு தூங்க முடியும் என்ற நிலைமை ஏற்பட்டது.
ப்ராங்கோஸ்கோபி என்று மூச்சுக்குழலுக்குள் கருவியை விட்டு சோதனை செய்து – அங்கே அடி நுரையீரலில் அடர்த்தியாக அசைக்க முடியாதபடிக்கு கெட்டியாக சளி இருப்பதை தெரிந்து கொண்டார்கள்.
இதை வேறு எப்படி சரி செய்வது? வலியை பொறுத்துக் கொள்ளலாம். வேறு ஏதேனும் பத்தியமாக இருந்தால் அவ்விதமே நடந்து கொள்ளலாம். ஆனால், ஒரு பிடி மூச்சு பிராணவாயு உள்ளே போய் வெளியே வருவது என்பது கடினமாக இருந்தால் என்ன செய்வது? எப்படிச் சமாளிப்பது. தினசரி மரண போராட்டமாக அது மாறி விட்டது. மூச்சு வேக வேகமாக இழுத்து இன்னும் சில நிமிடங்களில் பாலகுமாரன் செத்து விடுவான் என்ற எண்ணத்தை மற்றவருக்கு ஏற்படுத்தியது.
பத்தொன்பது வயதிலிருந்து குடித்த சிகரெட்டுகள் அறுபத்தாறு வயதில் தன் விஷத்தன்மையை காட்டியது. தன் வக்கிரத்தை நிரூபித்தது.
ஸ்கூட்டர் எடுத்துக்கொண்டு மைலாபூர் பூராவும் சுற்றித்திரிந்த எனக்கு சிறை தண்டனை போல வீட்டில் அதே அறையில் இருக்கும்படி நேரிட்டது. மிகப்பெரிய வலி இல்லை. ஜூரம் இல்லை. ஆனால், அந்த ஆக்ஸிஜன் குழாயை எடுத்து விட்டால் மூச்சுத் திணற ஆரம்பிக்கும். ஆக்ஸிஜன் இல்லாமல் நடக்க முடியாது. பேச முடியாது. உணவு உண்ண முடியாது. எதுவுமே செய்ய முடியாது. இது காலில் சங்கிலி கட்டி கையில் பெரிய இரும்பு குண்டை கொடுத்தது போன்ற மிகப்பெரிய தண்டனை. மரணம் எல்லாருக்கும் வரும். எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வரும். ஆனால், மூச்சுத் திணறி இதோ.. இதோ.. என்று பயம் காட்டுகின்ற நிலைமை யாருக்கும் வரக்கூடாது. உள்ளுக்குள் போன மூச்சை வெளியே விட முடியாமல், வெளியே இருக்கின்ற பிராணவாயுவை உள்ளே இழுக்க முடியாமல், திணறி கதறுகின்ற ஒரு வேதனை யாருக்கும்வரக்கூடாது.
சிகரெட் இன்று உங்களை ஒன்றும் செய்யாது. பிற்பாடு ஒரு நாள் மிக நிதானமாக கொல்லுகின்ற ஒரு விஷம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
நன்றி: விகடகவி. இன்
இந்த மூச்சுத்திணறலின் அவஸ்தை பற்றி அவர் முன்னரே இரும்புக் குதிரைகள் புத்தகத்திலோ, மெர்க்குரிப் பூக்கள் புத்தகத்திலோ எழுதி இருப்பார். "ஆஸ்துமா இருப்பவர்கள் பார்த்தால் மூச்சுத்திணறலில் ஆள் செத்து விடுவான் போல இருக்கும். ஆனால் பிழைத்து விடுவார்கள். நித்யகண்டம் பூர்ணாயுசு" என்பது போல எழுதி இருப்பார்.
============================================================================================================
அப்போது வந்த ஒரு ஆங்கிலப்படத்தின் இந்தக் காட்சியை படமாக இணையத்தில் பார்த்தபோது பிடித்துப்போனது. அப்போது மனதில் தோன்றிய வரிகளை அதனுடன் சேர்த்தேன்.
=====================================================================================================
பொக்கிஷம்..
பிலோ இருதயநாத் கட்டுரைகள் மிகவும் சுவாரஸ்யமானவை. அவரது நீண்ட தொடர் கட்டுரைகளே எங்கோ வீட்டில் இருக்கின்றன. இது ஒரு சிறு பகுதி. படிக்க முடிகிறதா பாருங்கள். அவர் எப்போதும் காடுகள், விலங்குகள் பற்றி எழுதுபவர்.
எவ்வளவு மதிப்பு வாய்ந்த பரிசாக ஒரு சமயத்தில் இவை கொண்டாடப்பட்டு என்று நினைவிருக்கிறதா?
பாருங்கள் ஓவியரின் பெயர் என்னவென்று...
சுருளி அண்ணா... சுருளி அண்ணா....
OTT நோ கமெண்ட்ஸ்.
பதிலளிநீக்குபாலகுமாரன் கஷ்டப்பட்ட அளவில் இல்லையென்றாலும் மூச்சு திணறல் எனக்கும் உண்டு. நான் 21வயதில் துடங்கி 62 வயதில் சிகெரெட், பீடி பிடிப்பதை விட்டவன். அதன் தாக்கம் 70 வயதில் தீவிரம் ஆனது. மேலும் 39 வருட அலுவலக வாழ்க்கை முழுதும் AC அறையில் இருந்ததால் தற்போதும் அலர்ஜி, ஆஸ்துமா தொந்தரவுகளுக்கு மருந்துகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
கவிதை பாலகுமாரனுக்கு எழுதியது போல் தொடர்கிறது.
இரண்டுலகம் கண்டேன்.
செயலற்ற நிலை
கண்ணீர் தளும்ப
சுற்றிலும் கண்டது;
நிஜ உலகம்;
மனத்திரையில்
மாய உலகம்;
மேகக் கூட்டத்தின் இடையே
மனைவியின் முகம்
பிலோ இருதயநாத் கதை படிக்க முடிகிறது.
ஜோக்ஸ் ஒன்றையும் காணோம்.
என்னுடைய பொக்கிஷ பேணா சாம்பியன் இந்தி அரக்கி சிதையில் விழுந்து எரிந்து விட்டது.
OTT நோ கமெண்ட்ஸ்? Y?!
நீக்குபுகைப்பழக்கம் இல்லாமலேயே எனக்கு மூச்சுத் தொந்தரவுகள் சில வருடங்களாய்...
பதில் கவிதை அவரவர் பார்வையில் படியும் காட்சி பிம்பங்களை வைத்து...
//ஜோக்ஸ் ஒன்றையும் காணோமே//
ஹா.. ஹா.. ஹா...
ஆ.. இந்தி போராட்டமா?!
இரண்டுலகம் கண்டேன் கவிதை சமீபத்தில் நான் அனுபவித்தது. புரியும் என்று நினைக்கிறேன்.
நீக்குநன்றாகவே...
நீக்குஇருக்கும் அரிக்கன் லைட் ஜோக் ஜோக்காக தென்படவில்லை.
பதிலளிநீக்குஅச்சச்சோ..
நீக்குதலைப்பு நல்லால்ல, ஸ்ரீராம்
பதிலளிநீக்குகீதா
இருக்கட்டுமே என்றுதான் வைத்தேன்.
நீக்குப்ளீஸ் தலைப்பு மாத்துங்க.....
பதிலளிநீக்குகீதா
என்ன மாற்ற,,?
நீக்குஸ்ரீராம், படத்தின் கதையையே கூட சில சொற்களில் உங்கள் பாணியில்...
நீக்குகீதா
ஓ வைச்சிட்டீங்களா? இப்பதான் பார்த்தேன்....நன்றி ஸ்ரீராம்
நீக்குகீதா
அவ்வளவாக திருப்தி தராத அவசர மாற்றம்!
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம் கோமதி அக்கா... வாங்க..
நீக்குபடம் செமையா இருக்கும் போல!! கதை அருமை, யதார்த்த கதையாக இருக்கிறதே!!! ஆனால் நான் எந்த ஓடிடி யிலும் இல்லையே.....ம்ம்ம் அப்புறம்தான் பார்க்க முடியும் போல....ஓடிடியில் இல்லை என்பதோடு மனமும் எதிலும் ஒன்றி ஈடுபட மாட்டேன் என்கிறது...
பதிலளிநீக்குகீதா
உண்மை. படத்தை கண்டிப்பா நீங்களும் ரசிப்பீங்க..
நீக்குஅரிக்கேன் விளக்கு ஜோக்... ரசிக்கும்படி இருந்தது.
பதிலளிநீக்குஹா.. ஹா.. ஹா.. சில ஜோக் இப்படி அமைந்து விடும்.
நீக்கு//எல்லோரும் ஒருமுறை பார்க்கலாம் என்கிற வகையான படம். பெரிய குறைகள் இருக்காது. சொந்த உணர்வுகளோடு தொடர்பு படுத்திக்கொண்டு அங்கங்கே சற்று நெகிழலாம். //
பதிலளிநீக்குஅமிதாப் தான் நெகிழவைப்பார் என்று நினைக்கிறேன். அபிதாப் நடிப்பு நன்றாக இருப்பதாக சொன்னார்கள்.
அமிதாப் பண்பட்ட நடிப்பு. அனைவருமே நெகிழ வைக்கிறார்கள்.
நீக்குதியேட்டருக்குப் போனாலொழிய ஓடிடி தளத்திலோ தொலைக்காட்சியிலோ படம் பார்க்கும் ஆர்வம் இல்லை.
பதிலளிநீக்குஅவதார், காந்தாரா, அவதார்2, பொசெ சமீபத்தில் இரண்டிரண்டு முறை தியேட்டரில் பார்த்தேன். வீட்டை அடுத்தது சினிபோலிஸ் காம்ப்ளக்ஸ் என்பதால் முதலில் டிக்கெட் வாங்கிக்கொண்டு, படம் ஆரம்பிக்கும்போது போவேன்
நான் தியேட்டர் போவதுதான் அபூர்வம் என்றாலும் சென்ற சனி ஞாயிறில் இரண்டு பெரிய படங்களும் பார்த்தேன். OTT யில் பார்க்கும் வகையில் படம் வந்தால் விடமாட்டேன்! வடிவேலுவின் புதிய படம் நாய். சேகரை பத்து நிமிடம் கூட பார்க்க முடியவில்லை.
நீக்குபொன்னியின் செல்வன் தொலைக்காட்சியில் கூடப் போட்டாச்சு. ஆனாலும் பார்க்கப் பிடிக்கலை. :(
நீக்குநான் தியேட்டரில் பார்த்ததோடு சரி!
நீக்குபைலட் பேனா... பதின்ம வயதில், டயல் நிறத்தைப் பலவாறு மாற்றும் ஆறு கலர் டயலுடன் அம்மாவிற்கு மாமா அமெரிக்காவிலிருந்து கொடுத்த வாட்சை நான் கட்டிக்கொண்டு திரிந்தது நினைவுக்கு வருது.
பதிலளிநீக்குமிடில் ஈஸ்டில் க்ராஸ் பேனாக்கள் (3500 ரூ) நிறைய இலவசமா வந்து ஒண்ணையும் உபயோகித்ததில்லை.
அதிருஷ்டவசமாக எப்படியோ ஸெகன்ட் ஹேண்டில் (!) எனக்கொரு பைலட் பேனா சிறுவயதில் கிடைத்திருக்கிறது!
நீக்குநீங்க சொல்றாப்போல் பேனா வானவில் வண்ணங்களில் எங்க பெண் காலேஜ் முதலாம் ஆண்டு போகும்போது வாங்கிக் கொடுத்திருந்தேன். ஆனாலும் அவளுக்கு என்னோட "காமி" வாட்ச் தான் பிடிக்கும். அதைத் தான் கட்டிப்பா. இப்போத் தான் இரு வருஷங்களுக்கு முன்னர் அந்தக் கைக்கடிகாரத்தை ஐநூறு ரூபாய்க்குப் பழைய சாமான் எடுப்பவரிடம் கொடுத்தேன். :)))))
நீக்குசிகரெட் குடிப்பவன், குடித்தவனைப் பற்றி அக்கறை இல்லை. பாவிப்பய ஊதி ஊதி புகையை வெளிய விட்டு எத்தனை அப்பாவிகளின் துன்பத்திற்குக் காரணமாயிருந்திருப்பானோ (யாரையும் குறிப்பிட்டுச் சொல்லலை)
பதிலளிநீக்குஎங்க குடும்பத்தில் என்ன் இரு மாமாக்கள் மற்றும் கடைசி நாத்தனார் கணவர் ஆகியோர் இந்த புகைப்பழக்கத்தினால் உயிரையே இழந்தனர். அதிலும் கடைசி நாத்தனார் கணவர் 53 வயது தான். :( இப்போவும் பெரிய நாத்தனார் மாப்பிள்ளை ஒருத்தர் இதனால் வியாதி வந்து அவதிப்படுகிறார்.
நீக்குஉண்மை நெல்லை, புகை பிடிப்பவர்களைவிட உடனிருந்து சுவாசிப்பவர்களுக்குதான் அதிக ஆபத்தாம்.
நீக்குசோகம் கீதா அக்கா.
நீக்குஉறவுகள்..... பட்டும் படாமலும் இருக்கும் வரைதான் நன்றாக இருக்கும்.
பதிலளிநீக்குமகன், மகள் உறவு கூடவா நெல்லை? "வளர்ந்த குஞ்சுகள் பிரிந்த போதிலும் வருந்தவில்லையே தாயடா..
நீக்குமனித ஜாதியில் துயரம் யாவுமே மனதினால் வந்த நோயடா" வரிகள் நினைவுக்கு வருகின்றன. சிறுவயதில் ஒன்றாய்ப் படுத்து, ஒன்றாய்ச் சாப்பிட்டு வளர்ந்த சகோதரர்கள் பின்னர் தனியாகிப் போனாலும்குடும்ப நிகழ்வுகளில். ஒன்று கூடும் உரிமை உள்ளது. தந்தை மறைந்தால் கூட மூன்று நாள்தான் துக்கம் என்று சகோதரிகளை விடக்கூடாது என்றுதான் குடும்ப நிகழ்வுகளில் வீட்டுப்பெண் என்று அந்தஸ்து கொடுத்து மரியாதை செய்து மகிழ்கிறோம்.
இப்போதெல்லாம் உறவுகள் ஒட்டிப் பழகுவதே இல்லை தான். வெட்டித்தான் பழகுகின்றனர். அவ்வளவு ஏன்? பெற்ற தாயை ஏமாற்றி வெளிநாடு அழைத்துச் செல்லுவதாகப் பொய்யெல்லாம் சொல்லிக் கொண்டு விமான நிலையத்திலேயே அநாதையாக விட்டுச் சென்ற மகனையும், தாய் இறந்தும் நான்கு நாட்களுக்கு மேலாகியும் தாயின் உடலைப் பார்க்க வராத மகனையும் இந்த நாடு பார்த்துத் தானே இருக்கு? இப்படியும் மனிதர்கள் உண்டு அல்லவா?
நீக்குசுயநலமிகள் கீதா அக்கா. கொடுமை்
நீக்கு//மகன், மகள் உறவு கூடவா நெல்லை? // - எல்லா உறவுகளுமே.. The moment they get married (ஏன்...வேலைக்குப் போக ஆரம்பித்துவிட்டாலே, அவர்கள் அடல்ட் ஆகிவிடுகின்றனர். Generation gap இருக்கும். நம் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி அவங்க இருக்கமாட்டாங்க), அவங்க வேற, நம் குடும்பம் (ஹிஹி மனைவிதான் வேற யாரு?) வேற என்ற நிலையில் இருப்பதுதான் எல்லோருக்குமே நல்லது. அவங்களுக்கு திருமணம் ஆயிடுச்சுன்னா, நிச்சயமே குளிர்காலத்தில் நெருப்பில் குளிர்காய்வது போலத்தான் இருக்கணும். ரொம்பப் பக்கத்துல போனா சுடும், நமக்கு ஆபத்து, ரொம்ப விலகினால், குளிர் தாக்கும், நமக்கு ஆபத்து. அவங்களுக்காகத்தானே நம் வாழ்வின் பெரும்பகுதியைச் செலவழித்திருக்கிறோம். அதனால் ஆலோசனை கேட்கும் நிலையில் நம்மை வச்சுக்கணும். அவ்ளோதான்.
நீக்குநாற்பது வயது வரை அபப்டி சொல்லிக்கொள்ளலாம். வயதாக வயாதாக ஜீரணிப்பது சிரமம்!
நீக்கு//சிகரெட் இன்று உங்களை ஒன்றும் செய்யாது. பிற்பாடு ஒரு நாள் மிக நிதானமாக கொல்லுகின்ற ஒரு விஷம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.//
பதிலளிநீக்குபாலகுமரன் சொன்ன புகைபழக்கத்தால் ஏற்பட்ட உடல்நல பாதிப்பு புகைபிடிப்பவர்கள் புரிந்து கொண்டால் நல்லது.
கவிதை சோகம்.
பிலோ இருதயநாத் கதை படிக்க முடிகிறது, அதுவும் சோகம்.
ஓவியரின் பெயர் ராமுதானே!
ஜோக் சுருளியின் கருமிதனம் படத்தை சொல்கிறதோ!
ஓவியர் ராமுவா? மறுபடி பார்த்துதான் சொல்லவேண்டும்.
நீக்குஓவியர் ராஜ் என்று இருக்கிறதோ!
நீக்குராமுதான்.
நீக்குபைல்ட் பேனா வெல்வட் பெட்டியில் வைத்து பரிசாக வந்தது இன்னும் இருக்கிறது என்னிடம்.
பதிலளிநீக்குஅடடே.. எழுதுகிறீர்களா அதால் இன்னும்?
நீக்குஎங்களுக்கு முன்னெல்லாம் ஆங்கிலப் புத்தாண்டு சமயம் இம்மாதிரிப் பேனாக்கள், டயரிகள் என வந்து கொண்டிருந்தன. அவற்றை எல்லாம் பங்கு போடுவதற்குள்ளாகப் போதும் போதும்னு ஆயிடும். நல்லவேளையா இங்கே வந்ததில் இருந்து தினசரித் தேதி கிழிக்கும் காலண்டர்கள், மாதாந்திரக் காலண்டர்கள்னு வருது. யாருக்கானும் கொடுத்துடுவோம். தினசரி மட்டும் நாலோ/ஐந்தோ வந்தன. முன்னெல்லாம் காலண்டர்களுக்கு அடித்துக் கொண்டது நினைவில் வரும். காலண்டர் கிடைச்சால் அதை ரகசியமாக வீட்டுக்குக் கடத்துவோம். பயங்கர த்ரில்லிங்காக இருக்கும். அனுபவிச்சு ரசிச்சுச் சொல்லிப்போம் எப்படிக் கொண்டு வந்தோம் என்பதை!
நீக்குநான் முன்னர் இருந்த அலுவலகத்தில் ஜனவரி சமயம் கேலண்டர் டைரி எல்லாம் கிடைக்கும். இப்போது சீந்துவாரில்லை! இத்தனைக்கும் நான் ப்ரமோஷனில் வந்திருக்கிறேன்!
நீக்குஇப்போதைய சூழலில், படத்தில் உள்ளது போன்று பல குடும்பங்களில் தாறுமாறான பிள்ளைகள் இல்ல்லை என்றாலும் யதார்த்த வாழ்வு வயிற்றுப் பிழைப்பு, தொழில் என்பது பிரித்து விடுகிறது. இக்காலகட்டம் அப்படியாக இருக்கு...
பதிலளிநீக்குகீதா
சுயநல உலகில் உழலும் பிள்ளைகள் யதார்த்த பாச உலகுக்கு திரும்பும் கதை. அமிதாப்புமே பாடம் படித்துக் கொள்கிறார்.
நீக்குஆனால் அமிதாப் குடும்பம் பத்தி வரும் செய்திகளில் அமிதாப்பின் மகனும், மகளும் அமிதாப்பின் பேரன் பேத்திகளும் குடும்ப பாசத்துடன் இருப்பதாகத்தான் வருகின்றன. உள்மாந்திரம் தெரியாது,.
நீக்குகீதா
அமிதாபின் மகள் வயிற்றுப் பேரனும் ஷாருக் கானின் மகளும் காதலர்கள் எனச் செய்திகளில் வருகின்றன.
நீக்குஅட கஷ்ட காலமே... இபப்டிதான் இன்னொரு வதந்தி சச்சின் மகளுக்கும் சுப்மான் கில்லுக்கும்!
நீக்குமுதலில் என்ன தலைப்பு வைத்திருந்தீர்களோ தெரியலை. இந்தத் தலைப்பும் அவ்வளவாய்க் கவரவில்லை. ஆனால் படம் மனதைக் கவர்ந்தது. நான் எதுக்கும் சந்தா கட்டலைனாலும் பிஎஸ் என் எல் ஃபைபர் கனெக்ஷனில் டிஸ்னி எல்லாம் கொடுத்திருக்காங்க. பயன்படுத்தியதே இல்லை. முயற்சி செய்து பார்க்கணும். அது என்னமோ திரைப்படம் பார்ப்பது எனில் இங்கே (இந்தியாவில்) மனம் பதியவே இல்லை. அதே அம்பேரிக்கா எனில் மத்தியானங்களில் படங்கள் தான் பார்ப்பேன். :))))) இப்போ இதுக்குனு அம்பேரிக்காவா போக முடியும்? இந்தப் படத்தையாவது பார்க்க முடியுமா யோசிக்கிறேன்.
பதிலளிநீக்குமுதலில் படத்தின் தலைப்பையே வைத்திருந்தேன். மாற்றச் சொன்னதும் ஆபீஸ் வரும் வழியில் எதையோ போட்டேன்.
நீக்குஎனக்கு அரக்கு நிறத்தில் தங்க நிப் போட்ட ஒரு பைலட் பேனா தெருவில் கண்டெடுத்தது நினைவில் உள்ளது. உடனேயே வீட்டில் கொண்டு வந்து கொடுத்துவிட்டேன். அப்பாவும் யாரானும் வந்து கேட்டால் கொடுக்கலாம்னு வைச்சிருந்தார். ஆனால் அந்தப் பேனாவை எழுதிப் பார்க்கக் கூடக் கொடுத்தது இல்லை. கடைசியில் நான் எஸ் எஸ் எல்சி எழுதும்போது பரிக்ஷை எழுதவென அந்தப் பேனாவைக் கொடுத்தார். அதன் பின்னர் என்னிடமே இருந்தது. பல வங்கித்தேர்வுகள், அரசுத்தேர்வுகள் என எழுதினேன் அந்தப் பேனாவில். நான் வேலையில் சேர்ந்தப்போ கையெழுத்துப் போட்டதும் அந்தப் பேனாவில் தான். ஆனால் என்.ஆர். கீதானு போடாமல் (அப்போக் கல்யாணம் ஆகிவிட்டதால்) கீதா சாம்பசிவம்னு கையெழுத்துப் போட்டு அது திரும்பி வந்துவிட்டது. பின்னர் என்.ஆர்.கீதா எனப் பெயர் சான்றிதழ்களில் உள்ளது போல் எழுதிக் கையெழுத்துப் போட்டேன். இப்போ சமீபத்தில் தான் ஆதார் கார்டிலும் நம்மவர் பெயரை கீதா சாம்பசிவம்னு மாத்தினார். ஆனால் பாஸ்போர்ட்டில் மாற்றச் சொல்லியும் மாற்றித் தரலை. :))))
பதிலளிநீக்குஅடடே.. என்ன ஒரு அனுபவங்கள்.. யாரோ உங்களுக்காக வாங்கிய பேனா!
நீக்குஆமா இல்ல? ஆனால் அந்தப் பேனாவின் கதை சீக்கிரமே முடிஞ்சுடுத்தே! மாமா அலுவலகப் பரிக்ஷை எழுதும்போது அந்தப் பேனாவைக் கொடுத்திருந்தேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தொலைச்சுட்டார். ஆனாலும் நான் ஆறாவது படிக்கையில் கண்டெடுத்த அந்தப் பேனா கல்யாணம் ஆகி இரண்டு வருஷங்கள் வரை இருந்தது.
நீக்குயோசித்துப் பாருங்கள். நாமே வாங்கி இருந்தால் கூட இவ்வளவு வருடங்கள் உழைத்திருக்காது!!!
நீக்குஎந்தவிதமான கெட்ட பழக்கங்களும் இல்லாமலும் ஆஸ்த்மாவினால் அவதிப்படுபவர்கள் இருக்கோமே! நல்லவேளையாக நான் திருச்சி வந்ததால் இங்கே உள்ள சீதோஷ்ணம் அதிகப் பாதிப்பை ஏற்படுத்துவது இல்லை. இதுவே சென்னை எனில் வருஷத்துக்கு 3 முறையாவது ஆக்சிஜன் வைச்சுக் கொள்ளும்படியா இருக்கும். நெபுலைசரும் வீட்டிலேயே வைத்துக் கொண்டிருக்கேன். இப்போத் தான் பிரச்னை அதிகம் இல்லை.
பதிலளிநீக்குகீதாக்கா ஆமாம், சென்னையில் ஏசியில் வேறு இருக்க் வேண்டிய சூழலில் கீழே சொன்ன உறவினருக்கு அதிகமாகியது. ஏசி கூடாது அவர்களுக்கு. குளிர்ச்சி என்பதோடு, ஏசி மெஷினில் அடையும் தூசும் பாதிப்பை உண்டாக்குகிறது.
நீக்குகீதா
வீஸிங் படுத்துகிறது எனக்கும். இதே பிரச்னைபளால் குறட்டை.. அதனால் பாஸ் படும் பாடு!
நீக்குபுகைப்பிடிப்பது என்பது சிலர் சிறு வயதில் எப்படியோ கற்றுக் கொண்டு விடுகிறார்கள். குடிப்பழக்கம் உள்ளவர்களும் சரி....மூளைதான் முதலில் பாதிக்கப்படும் என்று மருத்துவம் சொல்கிறது....(சோசியல் டிரிங்கிங்க் என்று சொல்லிக் கொண்டு குடிப்பவர்களுக்கும் சேர்த்துத்தான்) நான் சொல்வது இதுதான், முடிந்தால் நிறுத்தப் பாருங்கள் இல்லைனா மூச்சுப் பயிற்சி செய்யத் தொடங்குங்க....ஆழ்நிலை மூச்சுப் பயிற்சி....நடைப்பயிற்சி, உடற்பயிற்சி...அப்படியாச்சும் நுரையீரல் கல்லீரல், மூளை, இதயம், சிறுநீரகம் கொஞ்சம் சந்தோஷமா இருக்கட்டுமே!!!!
பதிலளிநீக்குகீதா
நான் கூடியவரையிலும் கூட்டமான இடங்களைத் தவிர்த்துவிடுவேன். மருத்துவர் கண்டிப்பு. நெருங்கிய சொந்தங்களின் திருமணங்களிலும் கூட ரிசப்ஷனைத் தவிர்ப்பேன். முன் கூட்டியே கூட்டம் இல்லாத நேரமாகப் பார்த்துச் சாப்பிட்டுவிட்டு அறைக்குப் போயிடுவேன்.
நீக்குவிளையாட்டாய் ஆரம்பித்தாலும் நிறுத்துவது கஷ்டம்.
நீக்குவர்ணத்தின் சாயலில் படம் வரைந்திருக்கும் ஓவியர் ராமுவோ?
பதிலளிநீக்குஅப்புறம் பார்த்து சொல்கிறேன்!
நீக்குஇன்னொன்று, ஆஸ்துமா என்பது கெட்டப்பழக்கங்கள் இல்லாமலும் வருகிறது...அப்படி எந்தவிதக் கெட்டப்பழக்கமும் இல்லாமல் வந்தவங்க இப்படியான பழக்கங்களைப் பழகிவிட்டால் அது ஆஸ்துமாவை அதிகரிக்கிறது.
பதிலளிநீக்குஎங்கள் வீட்டில் ஆஸ்துமா ரொம்ப சிவியராக இருந்தவங்க பதின்ம வயதில் ஆயுர்வேத மருந்துகளுடன் யோகா, மூச்சுப்பயிற்சி, உடற்பயிற்சி செய்து சில உணவுப் பழக்கங்களும் கடைபிடித்து இன்று ஆஸ்துமா தொல்லை இல்லாம இருக்காங்க. விதிவிலக்குகள் உண்டு......ஆனால் வெளியில் செல்லும் போது மாஸ்க் அணிந்து கொண்டுதான் செல்லச் சொல்றாங்க மருத்துவர்கள். வண்டிப் புகை கூட அவர்களுக்குக் கெடுதல் விளைவிக்கும். முப்பது ப்ளஸ் வயதில் இருக்கும் என் நெருங்கிய உறவுக்கு இப்போதுதான் தொடங்கி ஆஸ்துமா தொடங்கிய நிலையில் சில உணவுப் பழக்கங்கள், வெளியில் செல்லும் போது மாஸ்க் அணிந்து கொண்டு செல்தல் என்று சுகமாக இருக்கிறார்.
கீதா
சுற்றுப்புற மாசுகளால் இந்த அவஸ்தை நிறைய பேருக்கு வருகிறது.
நீக்குஇந்நாள் இனிய நாள்..
பதிலளிநீக்குஎல்லாருக்கும் இறைவன் அருளட்டும்..
நலம் வாழ்க..
வாழ்க.. வாங்க துரை செல்வராஜு அண்ணா.. வணக்கம்.
நீக்குஆஸ்துமாவின் அவஸ்தைகள் நடுக்கம் கொள்ளச் செய்கின்றன..
பதிலளிநீக்குஎல்லாரையும் இறைவன் காத்தருளட்டும்..
அதே.. அதே...
நீக்குஆஸ்துமா என்றில்லை, நம் உடல் பிரச்சனைகள் பலவற்றிற்கும், உடல் பராமரிப்பிற்கும் மூச்சுப் பயிற்சி, நடைப்பயிற்சி, உடற்பயிற்சிகள் யோகா உதவும்...
பதிலளிநீக்குஇதைத்தான் இப்ப, நெல்லை என்னிடம் எழுதச் சொல்லிட்டே கலாய்த்தும் கொண்டு இருக்க, அவரின் உபயத்தில் எழுதத் தொடங்கியிருக்கிறேன்... தொடர்ந்து எழுதி முடிக்கணுமே....
கீதா
காலை உங்கள் பதிவு கூட வந்திருக்கிறதே... கிளம்பியபிறகு பார்த்தேன். படிக்கணும்.
நீக்குமெதுவா பாருங்க ஸ்ரீராம்.....உங்க வேலை, டென்ஷன் தெரியும்...
நீக்குகீதா
அந்தக் காலத்தில் அரிக்கேன் விளக்கைத் தேடுவதற்கு மட்டும் மின் விளக்கு..
பதிலளிநீக்குஇன்றைக்கு அப்படி முடியுமோ?..
ஆனாலும் சிந்திக்க வைக்கின்றது..
இப்போது சாத்தியமில்லை.
நீக்குபடித்ததில் ஆச்சரியப்பட்ட விஷயம் ஆமாம் ஆச்சரியமாக இருக்கு.
பதிலளிநீக்குநம்மூர்ல கூட முதுமக்கள் தாழி என்பது இருந்ததே... புதைத்து இப்படிப் பராமரிப்பாங்களோ?
கீதா
ரொம்பவே ஆச்சர்யம். அதுதான் பகிர்ந்தேன்.
நீக்கு//முதுமக்கள் தாழி என்பது இருந்ததே... புதைத்து இப்படிப் பராமரிப்பாங்களோ?// - ஆளு போகலையா..ரொம்ப வயசாயிடுச்சா... இரண்டு மூன்று நாட்கள் உணவோடு முதுமக்கள் தாழில வச்சுட்டு வந்துடுவாங்க. போய்ச் சேர்ந்ததும் புதைச்சுடுவாங்க. இதுல பராமரிப்பாமே
நீக்குவாசனையான மக்கள்!
நீக்கு
பதிலளிநீக்குபாலகுமாரனின் அவஸ்தைகள் பற்றி எழுத்தாளர் வித்யா சுப்ரமணியம் மூலம் முன்பே அறிந்திருக்கிறேன். சும்மா இருக்கும்போதே உடம்பு இப்படியெல்லாம் பாதிக்கிறது. மருத்துவர்கள் air pollution என்று காரணம் சொல்கிறார்கள். சளி பிடித்தால் சரியாக இப்போதெல்லாம் முன்பை விட அதிகம் நாட்கள் பிடிக்கின்றன. கோவிட் பாதிப்பின் after effect என்றும் அதைப்பற்றிய ஆராய்ச்சிகள் தீவிரமாக நடக்கினன என்றும் சொல்கிறார்கள். அப்படியென்றால் வருடக்கணக்கான சிகிரெட் பழக்கம் எங்கே போய் முடியும்? மனம் இருந்தால் மட்டுமே மார்க்கம் இருக்கும்.
ஆமாம். 2020 க்குமுன் நான் இருந்ததற்கும், இப்போதைக்கு எனக்குள் இருக்கும் மாற்றங்களுக்கும் நான் கோவிட் மேல்தான் பழி போடுகிறேன்!
நீக்குபட விமர்சனம் அருமை. சில நாட்கள் முன்பு இந்தப்படத்தின் ஸ்டில்ஸ் பார்த்து ரசித்தது நினைவுக்கு வருகிறது. ஆனால் படம் மெதுவாகப் போகுமோ? கொஞ்சம் பொறுமை வேண்டும் பார்க்க என்று தோன்றுகிறது.
பதிலளிநீக்குஇல்லை. போர் அடிக்கும் அளவு ஸ்லோ எல்லாம் இல்லை. பார்க்கலாம்.
நீக்குவணக்கம் ஜி
பதிலளிநீக்குநான் இந்தியா வந்து நெல்லைத்தமிழருக்காக பார்த்த ஒரேபடம் 2022-ன் மொக்கையில் முதலிடம் பிடித்த "தி லெஜண்ட்" மட்டுமே...
நிச்சயம் ஊர்வசி ராவ்டேலா (கதாநாயகி)க்காகப் பார்த்திருக்க மாட்டீர்கள். அப்புறம் யாருக்காகப் பார்த்தீர்கள்?
நீக்குலெஜெண்ட்டுக்காகத்தான்!
நீக்குகவிதையை மிகவும் ரசித்தேன் ஸ்ரீராம்....ரொம்பப் பிடித்தது அதன் அர்த்தம்.
பதிலளிநீக்குகீதா
கவிதைக்கான படம் அழகு ...அந்தக் கண்கள். இடது கண்ணில் ஒரு வெள்ளை ஒளி....மனித உருவம் கையைத் தூக்கி ஹாய் சொல்றது போல!!!!!!!!!!!!!!!!!
நீக்குகீதா
நன்றி கீதா. அது ஒரு ஆங்கிலப் படத்தில் வரும் காட்சி. முன்பு வல்லிம்மா படத்தின் பெயரைக் கூட சொல்லி இருந்தார்கள். நினைவில்லை.
நீக்குபாலகுமாரன் பட்ட அவஸ்தையை வாசித்ததும், சட்டென்று ஜெ கே அண்ணாதான் நினைவுக்கு வந்தார். சமீபத்து அவஸ்தை இத்தனை இல்லை அவருக்கு என்றாலும்...
பதிலளிநீக்குகீதா
ஆமாம்.
நீக்குபிலோ இருதயநாத் //
பதிலளிநீக்குஆமாம் ஆதிவாசிகள், நாடோடிகள் பற்றியும் காடுகள் விலங்குகள் பற்றி எழுதக் கூடியவர். அவர் எழுதியவற்றில் ஒன்றிரண்டு எப்போதோ வாசித்திருக்கிறேன்.
நீங்கள் கொடுத்திருக்கும் பகுதியைப் பெரிது செய்து வாசிக்க முடிகிறது....மீண்டும் பன்றியைத் தேடிச் சென்றவர் என்ன ஆனார்....சுவாரசியமாகப் போற வேளைல தொடரும்னு மாதிரி நீங்க கட் பண்ணிட்டீங்களே!!! ஹாஹாஹாஹா
கீதா
அடுத்தாப்ல இருக்கா....அது முதல்ல படம் வரலையா அதான் கட் பண்ணிட்டீங்களேன்னு கொடுத்தேன் வந்துவிட்டது படம்...
நீக்குபன்றியால் துரை இறந்ததை வாசித்ததும்.....அந்தப் பன்றி அத்தருணத்துக்காகத்தான் உயிரை வைச்சிட்டிருந்ததோ என்று தோன்றியது....பாவம் இல்லையா? எனக்கு என்னவோ இப்படி வேட்டை ஆடுவது மனதிற்கு ஒப்பாத செயல்.
கீதா
இரண்டையுமே கொடுத்திருக்கேன். பிலோ நிறைய சுவாரஸ்யமாக எழுதக்கூடியவர்.
நீக்குஇந்த பைலட் பேனா ம்ஹூம். கனவு யாவும் கலைந்த மேகங்கள்!!! ஹாஹாஹா கேட்டதைக் கொடுப்பவரா நம்ம வீட்டவங்க!! அந்தக் கிருஷ்ணன் கிட்ட கேட்டும் கொடுக்கலையாக்கும்....
பதிலளிநீக்குகீதா
எப்படியோ எனக்கு கிடைச்சுதுப்பா...
நீக்குஅரிக்கேன் லைட் தேடறதுக்கு லைட்...ஹாஹாஹா ஆனாலும் எவ்வளவு உதவியா இருந்திருக்கு..அது சரி அதை ஒரே இடத்துல தினமும் வைக்கறதா இருந்தா தேட வேண்டாமே அந்தக்கரண்டும் மிச்சமாகியிருக்குமே!! ஹிஹிஹிஹிஹி
பதிலளிநீக்குகீதா
பாருங்க... உங்களுக்கு இருக்கற ஐடியா அவங்களுக்கு இல்லே... நீங்கள் சுருளிக்கு அம்மாவா இருப்பீங்க போல..
நீக்குநிறையபேருக்கு சுருளி என்றால் சுருளிராஜன், அவர் சம்பந்தப்பட்ட காமெடி நினைவுக்கு வந்திருக்காது (பேசும்போது லைட்டை அணைப்பது. லைட்தான் இல்லையே என்று கட்டியிருந்த வேட்டி கசங்கக்கூடாது என்று அவிழ்த்து மடித்து வைத்துக்கொள்வது)
நீக்குமாந்தோப்பு கிளியே!
நீக்குபடத்தின் விமர்சனம் அருமை... பார்க்கலாம் போல...!
பதிலளிநீக்குகண்ணீர் வரிகள் அருமை...
நன்றி DD.
நீக்குVikas Bahl. படத்தின் இயக்குனர். ஒரு வரி சொல்லியிருக்கலாமே இவரைப்பற்றி.
பதிலளிநீக்குஇந்த மாதிரி non-stereo type films or off-beat film-களில் இயக்குனரின் பங்களிப்பு பிரதானம். அவரின்றி ஆக்டர்கள் அசைவதில்லை இங்கே!
//ஒரு வரி சொல்லியிருக்கலாமே இவரைப்பற்றி.//
நீக்குதெரிந்திருந்தால் சொல்லியிருக்க மாட்டேனா?
வேண்டாத பழக்கங்களை ஆரம்பிக்கும்போது நாம் நினைப்பது, நாம் எப்போது வேண்டுமானாலும் இந்த பழக்கத்தை விட்டுவிடலாம் என்று நம்மையே ஏமாற்றிக்கொள்கிறோம். ஆனால் அப்படி நடக்கிறதா என்ன?
பதிலளிநீக்குMan drinks wine.
Wine drinks wine.
Wine drinks man.
என்கிற கதைதான்.
வைஷ்ணவி
உண்மைதான். இதையெல்லாம் யோசித்தா தொடங்குகிறோம், தொடர்கிறோம்?!
நீக்குஉங்கள் கவிதை நன்று மனதுக்கு பிடித்தது.
பதிலளிநீக்குபடம் பார்க்கவில்லை.
ஜோக்ஸ், கட்டுரை என அருமை.
நன்றி மாதேவி
நீக்குபடம் பார்க்கத் தூண்டும் விமர்சனம். அருமை
பதிலளிநீக்குநன்றி நண்பரே.
நீக்குபடத்தைப் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது தங்கள் விமர்சனம்.
பதிலளிநீக்குகவிதை அருமை.
தொகுப்பு நன்று.
நன்றி ராமலக்ஷ்மி
நீக்கு