ஞாயிறு, 1 ஜனவரி, 2023

நான் தரிசனம் செய்த கோவில்கள் :: நெல்லைத்தமிழன்

 

கோபுர தரிசனம் கோடி புண்ணியம். 2023ஐ கோபுர தரிசனத்துடன் வரவேற்போம்.

2023வருடம் இன்று பிறக்கிறது. சென்ற வருடங்களின் நல்லனவைகள் இந்த வருடமும் தொடரவேண்டும்,  சென்ற வருடத்தின் அல்லனவைகள் இந்த வருடம்  தொடரக்கூடாது என்ற ப்ரார்த்தனைகளோடு இந்த வருடத்தை நாம் வரவேற்போம்.

2022ம் வருடம் பஞ்ச துவாரகா  (கோகுலம், விருந்தாவன், குருக்ஷேத்திரம் உட்பட), மேல்கோட்டை (திருநாராயணபுரம்), பத்ரி (ரிஷிகேஷ், தேவப் பிரயாகை, ஜோஷிமட், பத்ரிநாத், ஹரித்வார்), கும்பகோணம் மற்றும் சுற்றுப்புற வைணவ திவ்யதேசங்கள் மற்றும் பாடல் பெற்ற சிவாலயங்கள், திருக்கோவிலூர், திருவஹிந்திரபுரம், திருப்பதி, மன்னார்குடி, வடுவூர், திருநெல்வேலியில் பதினொரு திவ்யதேசங்கள் மற்றும் பல கோவில்களின் தரிசனம் வாய்த்தது. ஒரே நாளில், ஸ்ரீரங்கபட்டினம் காவிரியில் துலா ஸ்நாநம் செய்து, பிறகு ஸ்ரீரங்கபட்டினம் ரங்கநாதர், மத்திய ரங்கம் எனப்படும் சத்தியாகாலத்தில் ஸ்ரீரங்கநாதர் மற்றும் இரவு திருவரங்கத்தை அடைந்து அங்கு அரங்கநாதர் தரிசனம் என்று மூன்று ரங்க சேவையும் கிடைத்தது.  இப்படி, 2022 வருடம் முழுவதுமே பல கோயில்களின் தரிசங்கள் எனக்கு (எங்களுக்கு) வாய்த்தது.  ‘அதுவும் அவனது இன்னருளே’ 2023ம் வருடமும் அப்படியே அமையும் என்று நம்புகிறேன்.

இந்த வருடம் ஞாயிறு அன்று ஆரம்பிக்கிறது.  எந்தப் படத் தொகுப்பை இந்த வருடத்தின் ஆரம்பத்தில் வெளியிட அனுப்பலாம் என்று யோசித்தேன். ஓரிரண்டு திருக்கோயில்கள் தவிர மற்ற அனைத்து வைணவ திவ்யதேசங்கள் என்று அழைக்கப்படும் திருத்தலங்களையும், பல அபிமான தலங்களையும், பாடல் பெற்ற பல சிவாலயங்களையும், வரலாற்றுச் சிறப்புகளைத் தன்னுடனே கொண்டுள்ள இடங்கள்  பலவற்றையும் தரிசிக்கும் பெரும்பேறு எனக்குக் கிடைத்திருக்கிறது. இதற்கு என்னிடம் இருந்த ஆர்வம், முனைந்து பல இடங்களுக்கும் அயராது செல்லும் ஊக்கம் மற்றும் இறை அருளே காரணம். ஒரு தலத்தை நாம் தரிசிக்க முடிவது, அந்த இறைவனின் கருணையால்தான் என்பது என் நம்பிக்கை. இதற்கெல்லாம் ஆரம்பப் புள்ளியாக அமைந்தது 2008ல் நாங்கள் தரிசனம் செய்த முக்திநாராயணர். (நேபாள் சாளக்கிராமம்)

யாத்திரைக் குழுவினருடனோ இல்லை தனியாகவோ பயணிக்கும்போது ஒரு இடத்தில் தங்கிக்கொண்டு, பல திருத்தலங்களையும் தரிசித்துவிடுவேன். அப்படித் தரிசிக்கும்போது முடிந்தவரையில் அந்த இடங்களின் படங்களையும் நினைவுக்காக எடுத்துவிடுவேன். அதுவே இந்த மாதிரி பதிவுகள் எழுதும்போது எனக்குக் கைகொடுக்கின்றன.

இன்றைக்கு ஒரு குறிப்பிட்ட கோயில் என்று எழுதாமல், படங்களின் தொகுப்பாகவே அமைக்க விரும்புகிறேன்.  இதில் இடம் பெற்றுள்ள படங்கள், இனி வரும் காலங்களில் நான் எழுதும் அந்த அந்தக் கோயில் பதிவுகளில் இடம்பெறும்.  கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்ற வழக்குமொழிக்கு இணங்க, அந்த அந்தக் கோவில்களின் கோபுரங்களின் படங்களையும் இணைத்துள்ளேன்.

திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் ஆலய கோபுரம் மற்றும் வெள்ளை விநாயகர். இந்தக் கோவிலைத் தரிசிக்கும் வாய்ப்பு 2022 டிசம்பரில் கிடைத்தது.  இந்த வருடத்தை வினைகளை வேரறுக்கும் விநாயக தரிசனத்துடன் ஆரம்பிப்போம்.

பாடல் பெற்ற சிவாலயம் இது (கபர்தீஸ்வரர்  வலஞ்சுழிநாதர் கோவில்). காவிரி வலமாகச் சுழித்துக்கொண்டு சென்ற காரணத்தால் தலப்பெயர் திருவலஞ்சுழி. இந்தப் பிள்ளையார், பாற்கடலிலிருந்து வெளிவந்து, இந்திரன் பூஜித்தது என்பது தலபுராணம்.

வைணவத்தின் தலைமை இருப்பிடம் ஸ்ரீரங்கம்.  சமீபத்தில் கட்டப்பட்ட மிகப் பெரிய தெற்குக் கோபுரம் மற்றும் வெள்ளை கோபுரம். பலமுறை இங்கு தரிசனம் வாய்த்திருக்கிறது. சமீபத்தில் ஒரே நாளில் மூன்று ரங்கனைத் தரிசிக்கணும் என்ற திட்டத்தில், இரவு 8 மணிக்கு திருவரங்கத்தை அடைந்து, அந்த அரங்கனின் தரிசனம் வாய்க்கப்பெற்றோம். (2022, நவம்பர்).

வைணவர்களுக்கு திருவரங்கம், காஞ்சீபுரம், திருப்பதி ஆகிய மூன்று வைணவத் தலங்கள் மிக முக்கியமானவை.  இப்போது வைகுண்ட ஏகாதசி நேரம்.  எதேச்சையாகக் கிடைத்த மூலவர் படங்களை இங்கு பகிர்கிறேன். பொதுவாக மூலவரை படங்கள் எடுப்பதில்லை, அதற்கான அனுமதியும் இல்லை.  திருஅரங்கத்தில் இந்த 20 நாட்கள் மூலவருக்கு முத்தங்கி (முத்தினால் கோர்க்கப்பட்ட ஆடை) அணிவித்திருப்பார்கள். நாங்கள் இருவரும் ஜனவரி 2,3ம் தேதிகளில் திருவரங்க தரிசனத்திற்காகச் (வைகுண்ட ஏகாதசி) செல்ல எல்லா ஏற்பாடுகளையும் (பயணம், தங்குதல்) செய்திருந்தோம். ஆனால் வைகுண்ட வாசல், மூலவர் தரிசனம் போன்றவை மிக மிகக் கடினம் என்று எல்லோரும் சொன்னதால் அதற்குப் பதிலாக 5,6ம் தேதிகளில் செல்ல நிச்சயத்திருக்கிறோம். திருவரங்கனின் தரிசனம் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்ற ஆசையில், வாட்சப்பில் வந்த படங்களை இங்கு பகிர்கிறேன். (மனைவி இந்தப் படங்களைப் பகிரக்கூடாது என்று சொன்னாள். யாம் பெற்ற இன்பம் என்ற முறையில் அவற்றைப் பகிர்கிறேன்.)



மைசூர், ஸ்ரீரங்கபட்டினம். அரங்கன் அறிதுயிலில் இருக்கும் இடம். அதனை ஒட்டிய, காவிரி அன்னை. அவளாலல்லவோ சோழ வள நாடு சோறுடைத்ததாகியது? பெங்களூர் வந்த பிறகு, காவிரி துலா ஸ்நாநம், பெரும்பாலும் ஸ்ரீரங்கபட்டினத்தில்தான் வாய்க்கிறது. 2019ல், திருவரங்கக் காவிரியிலும் துலா ஸ்நாநம் வாய்த்தது.  


மத்தியரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில், சிவணசமுத்திரம், கொள்ளேகால் (மைசூரிலிருந்து 70 கிமீ தூரத்தில்). காவேரியின் கரையில் அமைந்த திருத்தலம்.  ஒரே நாளில், காவேரி நதிக்கரையில் அமைந்திருக்கும், ஸ்ரீரங்கபட்டினம் (ஆதிரங்கம்), சத்யாகாலம் (மத்யரங்கம்) மற்றும் ஸ்ரீரங்கம் (அந்த்யரங்கம்) சேவிப்பது மிகவும் விசேஷம் என்று கூறப்படுகிறது.  மூன்று அரங்கத் தலங்களில் இளையவராக க் காட்சியளிப்பது மத்தியரங்கத்தில் அமைந்துள்ள ரங்கநாதர் என்பதால் அவரை மோஹன ரங்கர் என்று கூறுவார்கள்.  


மத்தியரங்கத்தில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் (தற்போது உபயோகத்தில் இல்லை), மிகப் பழைமையான கற்பாலம்.


வருட ஆரம்பத்தில் தரிசித்த கோமதி த்வாரகா மற்றும் ருக்மணி த்வாரகா.  கடற்கரைக் காற்றின் பாதிப்பில் ருக்மணி துவாரகா கோயிலின் அழகிய சிற்பங்கள் சிறிது உருக்குலைந்து காணப்படுகின்றன. (இது தவிர சிலைகள் பல உடைக்கப்பட்டிருக்கின்றன). இந்தச் சிற்பங்களைச் செய்துக்கிய சிற்பி(கள்) எப்படிப்பட்ட திறமைசாலிகள். செதுக்கிய சமயத்தில் இவற்றின் அழகு பார்ப்பவர்கள் மனதைக் கொள்ளைகொண்டிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.





ஜோஷிமட் நரசிம்ஹர் கோவில். அருகிலிருக்கும் ஸ்ரீவேணுகோபாலன் கோவில். (ஜோஷிமட், ஆதிசங்கரர் ஜோதிர்மடம் என்ற பெயர் வைத்து, பிறகு மருவியது. இங்குதான் குளிர்காலத்தில் பத்ரிநாத் மூலவர் இருப்பார். இந்த ஊரில்தான் பத்ரிநாத் கோவில் பூசாரிகள்-நம்பூதிரிகள், ராவல்ஜி என அழைக்கப்படுபவர்கள் தங்குவார்கள்)

இங்கிருந்து (ஜோஷிமட்), மலைப்பாதை, கிடுகிடு பள்ளம், தொடர்ந்து பல இடங்களில் ஆர்ப்பரித்து வரும் கங்கை, சிறிய பேருந்தின் தலைப்பகுதியை உரசிச் செல்லும் பாறைகள் என்று கொஞ்சம் பயம் கலந்த பயணம் நம்மை முடிவில் பத்ரிநாத் கோவிலில் கொண்டுபோய்ச் சேர்க்கும்.






ஆர்ப்பரித்து வரும் கங்கை நதி, மிகச் சுத்தமாக இருப்பது ஹரித்வாரில்தான். இங்கு நாம் எடுத்துக்கொள்ளும் கங்கை நீர் ஒரு வருடம் ஆனாலும் அப்படியே தெளிவாக இருக்கும். ஹரித்வாரின் கங்கை நதி மற்றும், மாலையில் கங்கை ஆரத்திக்காகக் காத்திருக்கும் மக்கள்.

உங்களுடன் பகிர எத்தனையோ கோவில் தரிசனங்கள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக 2023 ஞாயிறுகளில் பார்ப்போம்.



102 கருத்துகள்:

  1. காலை வணக்கம்
    எபி ஆசிரியர் குழாமிற்கும்
    அன்பர்கள் அனைவருக்கும்
    இனிய அங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.
    பொங்கும் மங்களம் எங்கும் தங்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஜீவி சார்... அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு மங்கலம் அளிக்கட்டும்.

      நீக்கு
  2. புத்தாண்டு முதல் நாளில்
    ஸ்ரீரங்கநாதர் தரிசனமும்
    பல திருக்கோயில்களின் கோபுர தரிசனமும் அருள பெற்றேன். இந்தப் பேற்றிற்குத் துணையாக இருந்த எபி குழுமத்திற்கும் அன்பு நண்பர் முரளிக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஜீவி சார். ஒரு கோவிலா இல்லை பல கோவில்களா என யோசித்து, வைகுண்ட ஏகாதசி நாளையொட்டி பல கோவில்கள், புண்ணிய ந்திகளின் தரிசனமாக இருக்கட்டும் என நினைத்தேன்.

      நீக்கு
  3. புத்தாண்டு வாழ்த்துகள். 
    படப் பதிவு ஒரு theme இல் அமையவில்லை. தனக்கு பிடித்த படங்களை வெளியிட விரும்பிய ஆசிரியர் அவற்றை தொகுத்து அளிக்கும் முறையில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் என்பது என் எண்ணம். படங்களின் எண்ணிக்கையும் கொஞ்சம் அதிகம் தான், இரண்டு  பதிவுகளுக்கு உள்ள படங்கள் இருக்கின்றன. 

    படம் பிடிக்க முடியாத மூலவர் படங்களையும் வெளியிட்டிருப்பது நல்ல முயற்சி, சந்தோசம். 
     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயகுமார் சார். தனக்குப் பிடித்த படம் என்பது தீம் அல்ல. நான் 2022ல் தரிசனம் செய்த கோவில்கள், அல்லது கண்டு மகிழ்ந்த சிற்பங்கள், இடங்கள் என எதை அமைத்தாலும் ஒரு பதிவில் அடங்காது.

      ஆரம்பம் விநாயகர், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைணவக் கோவில்கள், கங்கு, காவிரி என அமைக்க விரும்பினேன். இனி வரும் ஞாயிறுகள் படப் பதிவாகவே அமையும் என நினைக்கிறேன்.

      நீக்கு
  4. அனைவருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க, அவர்கள் உண்மைகள் மதுரைத் தமிழன். ஒரு வாரத்திற்கு முன் நெல்லையில் மூன்று நாட்கள் சுற்றினேன். செங்கோட்டை அருகே வரை சென்றேன். மதுரைத் தமிழன் ஊராச்சே என உங்களை நினைத்துக்கொண்டேன்.

      உங்களுக்கு, ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

      நீக்கு
    2. நன்றி மதுரை.  உங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்.

      நீக்கு
  5. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதி அக்கா..  உங்களுக்கும் எங்கள் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      நீக்கு
    2. நன்றி கோமதி அரசு மேடம். ஆங்கில வருடத்தின் தொடக்கநாள் வாழ்த்துகள்.

      நீக்கு
  6. 2023ம் வருடமும் ஆலயதரிசனங்கள் இறையருளால் கிடைக்கட்டும் உங்களுக்கு.
    அருமையான பதிவு. முதல் தேதியில் மகிழ்ச்சியாக தரிசனம் செய்து கொண்டேன்.
    அனைத்து படங்களும் அருமை. கடைசியில் உங்கள் மகளும், நீங்களும் வரைந்த படமா? நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு படங்களும் பெண் வரைந்தது கோமதி அரசு மேடம்.

      2023ம் ஆலய தரிசனங்கள் கிடைக்கட்டும் என்று வாழ்த்தியதற்கு நன்றி. நான் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கிளம்பிவிடுவேன்.

      நீக்கு
  7. (ஜோஷிமட்), மலைப்பாதை, கிடுகிடு பள்ளம், தொடர்ந்து பல இடங்களில் ஆர்ப்பரித்து வரும் கங்கை, சிறிய பேருந்தின் தலைப்பகுதியை உரசிச் செல்லும் பாறைகள் என்று கொஞ்சம் பயம் கலந்த பயணம் நம்மை முடிவில் பத்ரிநாத் கோவிலில் கொண்டுபோய்ச் சேர்க்கும்.//

    ஜோஷி மட் பள்ளதாக்கில் பெரிய லாரி விழுவதை என் கணவர் படம் எடுத்தார்கள் . எதிர் திசையில் நின்று கொண்டு இருந்தோம்.
    பத்ரிநாத் சென்று வந்த நினைவுகள் வந்து போகிறது.
    தேவப்பிரயாகையில் அலகநந்தா , பாகீரதி நதிகள் இணையும் நீரின் நிறம் இருவிதமாக இருப்பது அழகாய் படம் எடுத்து இருக்கிறீர்கள்.
    அலகநந்தா கறுப்பு(கறும் பச்சை) நிறத்திலும் பாகீரதி வெள்ளை நிறத்திலும்
    சார் அதை காணொளி எடுத்து இருந்தார்கள்.
    ஜோஷிமட்டில்தான் தங்கினோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அரசு மேடம்.

      பத்ரி யாத்திரை, கோவில் பற்றி வரும் ஞாயிறுகளில் எழுதுவேன். நாங்களும் ஜோஷிமட்டில் தங்கினோம்.

      நீக்கு
  8. நடைமுறை நாட்களின் புத்தாண்டு என இன்றைய நாள் மலர்கின்றது..

    நமக்கென புத்தாண்டு சூர்யோதயத்துடன் உண்டு..

    அந்நாளை எதிர் நோக்கியவாறு இந்நாளை வரவேற்போம்..

    இந்நாள் அனைவருக்கும் இனிய நாளாக அமைவதற்கு இறையருள் கூடிவருமாக!..

    எங்கெங்கும்
    நலம் வாழ்க!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதே தமிழ் புத்தாண்டு என்ன தினத்தில் வருகிறது, செவ்வாயாக இருந்தால் துரை செல்வராஜு சார் பாணியில் கதை எழுதலாமா என மனம் யோசிக்கிறது.

      நீக்கு
  9. காலை வணக்கம் சகோதரரே

    தங்களுக்கும், மற்றும் நம் குடும்ப சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    அனைவரும் வளமுடனும் நலமுடனும் வாழ இந்த நன்னாளில் இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி... ஏன் சகோதரி சகோதர்ர்களுக்கு எனச் சொல்வதுல்லை? வாழ்த்திலும் நம்மவர்கள் ஆணாதிக்கச் சிந்தனையையே புகுத்தியிருக்கிறார்களோ?

      நீக்கு
    2. ஆகா....! வருடத்தின் முதல் நாளிலேயே வார்த்தைகளின் இணைப்புகள் குறித்த விவாத பிரச்சனைகளின் துவக்கமா? :))))

      நீக்கு
    3. வாங்க கமலா அக்கா..  நலம்தானே?  எங்கோ ஊருக்குச் செல்ல வேண்டும் என்று சொல்லி இருந்தீர்களே,  சென்று வந்தாயிற்றா?  கால் வலி குணமாகி விட்டதா?

      நீக்கு
  10. கோபுர தரிசனம் கோடி புண்ணியம்..

    திருவலஞ்சுழியில் தொடங்கி பத்ரிநாத், ஜோதிர் மடம் என தரிசிக்க வைத்த இறைவனுக்கு வணக்கம்..

    மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  11. நல்லவேளை..

    புத்தாண்டும்
    முதல் பதிவும் ஞாயிற்றுக் கிழமையில் அமைந்திருக்கின்றன..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது திங்களில் அமைந்திருந்தாலும், சனியில் அமைந்திருந்தாலும் நுழைந்திருப்பேன். புதன் வியாழனைத் தொடமுடியாது. செவ்வாய்க்கும் எனக்குமான இடைவெளி, வயது காரணமாக அதிகமாகிவிட்டது. ஹா ஹா ஹா

      நீக்கு
    2. வியான் வெள்ளியாக இருந்திருந்தால் புத்தாண்டு கவனிக்கப்பட்டிருக்காது என்று சொல்ல வருகிறார் துரை அண்ணா.

      நீக்கு
    3. அது எப்படி? வியாழன், வெள்ளியாக இருந்தால், புத்தாண்டு themeஐ ஒட்டித்தானே பதிவும் இருக்கும்.

      நீக்கு
    4. இல்லையே..   அதையெல்லாம் நான் கவனிப்பதில்லையே...!!

      நீக்கு
  12. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே.

    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    அருமையான படங்களுடன் இன்றைய தெய்வீக பதிவு நன்றாக உள்ளது. நாளைய வைகுண்ட ஏகாதசியை ஒட்டிய பக்திப் பகிர்வாகவும் தந்திருப்பதற்கும் மிக்க நன்றி. ஸ்ரீரங்கநாதனை மனமுருக தரிசித்துக் கொண்டேன். பரந்தாமன் அனைவருக்கும் நல்லதையே நடத்தி தர அவன் பாதாரவிந்தங்களை பணிந்து சேவித்துக் கொண்டேன்.
    ஓம் நமோ நாராயணா.. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உலகம் சுற்றிய வாலிபி கமலா ஹரிஹரன் மேடம் மீண்டும் இணையத்தில் உலாவர ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சி.

      ஶ்ரீரங்கநாதன் படங்கள் எனக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சி.

      வைகுண்ட ஏகாதசி அன்று அங்கு நான் இருப்பதாகப் பயணத்திட்டங்கள் எல்லாம் அமைந்தும், தரிசனம் கிட்டுமா என்ற சந்தேகம் ஆழமாக வந்ததால் 5,6 தேதிகளுக்கு பயணம் செய்கிறோம். அவன் தரிசனம் கிடைக்கும் என நம்புகிறோம்.

      நீக்கு
    2. /உலகம் சுற்றிய வாலிபி கமலா ஹரிஹரன் மேடம் மீண்டும் இணையத்தில் உலாவர ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சி./

      ஹா ஹா ஹா. தங்கள் மகிழ்ச்சிக்கு என் மனம் நிறைந்த நன்றி. தங்களைப் போலவே உலகத்தில் உள்ள அனைத்து கோவில்களையும் சுற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தாலும் மகிழ்ச்சியே..!

      வரும் வாரத்தில் தங்கள் எண்ணப்படி கண்டிப்பாக ஸ்ரீ ரங்கநாதனின் தரிசனம் தங்களுக்கு கிடைக்கும். எந்த ரங்கனை காணச் செல்கிறீர்கள்?பதிவில் குறிப்பிட்டபடி ஸ்ரீ ரங்கபட்டினமா..? சிவனசமுத்திரமா ? திருச்சி ஸ்ரீரங்கமா?

      தாங்கள் பதிவில் குறிப்பிட்டபடி மூன்று கோவில்களுக்கும் ஒரே நாளில் சென்று ரங்கனை தரிசித்து வந்தால் மிகவும் நல்லதென தற்சமயந்தான் நானும் அறிந்தேன். தாங்களும் அவ்விதம் சென்று வந்திருப்பது அறிந்து மகிழ்ச்சி.

      எங்களுக்கும் ஸ்ரீ ரங்கபட்டின ஸ்ரீரங்கநாதர் தரிசனம் அவனருளால் சென்ற திங்களன்று ஆனந்தமாக கிடைத்தது. இந்த மாதிரி மூன்று ரங்கநாதரையும் தரிசிக்கும் வாய்ப்பும் கிடைத்தால் நலம். அதற்கும் அவனருள் கிடைக்க வேண்டுமென பிராத்தனை செய்து கொள்கிறேன். நன்றி.

      நீக்கு
    3. இந்த முறை திருவரங்கன் தரிசனம்தான். ஸ்ரீரங்கத்தில்தான் தங்குமிடம் ஏற்பாடு செய்திருக்கிறேன்.

      மூன்று ரங்கநாதரையும் சேவிக்கணும்னா, கார்லதான் போகணும். வழியில் உணவு என்றெல்லாம் பல இடங்களில் நிறுத்தினால் நேரத்துக்கு திருச்சி போகமுடியாது. நாங்கள் திருவரங்கன் கோவிலுக்கு இரவு 8:10க்குப் போய்ச்சேர்ந்தோம். தரிசனம், அவனருளால் நிறைவாகவே கிட்டியது.

      நீக்கு
    4. வாவ்!!!! கமலாக்கா உங்கள் வலிகள் குறைந்து உலா போய் வந்திருப்பது மகிழ்ச்சியான விஷயம்!

      இந்தப் புத்தாண்டில் எல்லாம் நல்லபடியாக அமையும்....ஆரோக்கியமான ஆண்டாக அமைந்திடும்

      கீதா

      நீக்கு
    5. மனதில் வலிமையையும், வலியை மறக்கும் தன்மையையும் அவன் அளிப்பான். புத்தாண்டிலிருந்து எல்லோருக்கும் நன்மை கிட்டட்டும்.

      நீக்கு
  13. இந்த நாளில் காமாட்சியம்மாவிற்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். விரைவில் உடல்நலம் பெற்று மீண்டும் உற்சாகமாக இணையத்தில் அவர் உலா வர வேண்டும் எனப் ப்ரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மாவை வெகு நாட்களாக இணையம் பக்கம் காணோம்.  கீதா அக்காவும் நிறைய இடைவெளி விடுகிறார்.  பா வெ மாதத்துக்கொருமுறை வருகிறார்!

      நீக்கு
    2. கீதா சாம்பசிவம் மேடம், கு.கு வுடன் பிஸி. அப்புறம் உணவு தயாரிப்புப் பணிகளிலும் என்று நினைக்கிறேன்.

      பா.வெ? இப்போதெல்லாம் பெயரில்லாமல் வருபவர்கள் லிஸ்டில் ஆட்கள் கூடிக்கொண்டே போகிறது.

      நீக்கு
    3. பானுக்கா ரொம்ப பிஸி இந்த மத்தியமரில் மாட்டிக் கொண்டு விழி பிதுங்கி!!!! ஹாஹாஹாஹாஹா....

      கீதாக்காவுக்கு வேலைகள், குட்டி குஞ்சுலுவோடு நேரம் செலவிடுதல் என்று பிசி...

      வல்லிம்மாவும் ஆரோக்கியப் பிரச்சனைகள்

      காமாட்சிம்மா நலம்தானே....அவங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

      கீதா

      நீக்கு
  14. @ நெல்லை..

    // செவ்வாய்க்கும் எனக்குமான இடைவெளி, வயது காரணமாக //

    தங்களது பார்வையிலும் செவ்வாய்கள் அமைய வேண்டும் என்பது எனது விருப்பம்..

    (கவனிக்கவும் - செவ்வாய்கள்!..

    அருஞ்சொற்
    பொருள் தேவையில்லை..)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெங்களூரில் இருந்துகொண்டு, செவ்வாயைக் காண ஒரு பிரச்சனையும் இல்லை. அதனால்தான் பலர் பெண்களூர் என்று எழுதுகிறார்கள். ஆனால், என்னதான் தித்திக்கும் செவ்வாய் என்று கவிஞர்கள் பாடியிருந்தாலும், நம்மை அங்கிள் அவர்கள் என்று அழைக்கும்போது, இந்தக் கவிஞர்கள் பழைய அனுபவத்தில் எழுதுகிறார்கள் என்று நினைத்து ஆறுதல் பட்டுக்கொள்வேன். ஹா ஹா ஹா

      நீக்கு
  15. புத்தாண்டும்
    முதல் பதிவும் ஞாயிற்றுக் கிழமையில் அமைந்திருக்கின்றன..

    - என்று சொல்லப்பட்டிருப்பது வேறொரு அர்த்தத்தில்!..

    அறிந்தாரே
    அறிவார்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது எல்லோருக்குமே புரியும் துரை செல்வராஜு சார்.

      நீக்கு
  16. @ நெல்லை

    // செவ்வாயாக இருந்தால் துரை செல்வராஜு சார் பாணியில் கதை எழுதலாமா என மனம்.. //

    ஆகா..
    எழுதலாமே!..

    பதிலளிநீக்கு
  17. @ நெல்லை

    // செவ்வாயாக இருந்தால் துரை செல்வராஜு சார் பாணியில் கதை எழுதலாமா என மனம்.. //

    ஆகா..
    எழுதலாமே!..

    பதிலளிநீக்கு
  18. @ நெல்லை

    // செவ்வாயாக இருந்தால் துரை செல்வராஜு சார் பாணியில் கதை எழுதலாமா என மனம்.. //

    ஆகா..
    எழுதலாமே!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தம்பி துரையே அவரது வழக்..
      கமான
      ஒரு பக்கக் கதைப் பாணியிலிருந்து விடுபட்டு கொஞ்சம்
      திரட்சியான கதைப் படைப்புகளுக்கு மாற வேண்டும் என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது.. நீங்கள்
      அவர் பாணியில் எழுதலாம் என்கிறீர்களே!

      நீக்கு
    2. நான் கடைசியாக எழுதிய கதை, மனதில் வன்மமும் பொறாமையும் பிடித்த ஒருவனது கதை (இங்கு வெளிவந்தது). அதற்கு பா.வெ. மேடம், என்னைக் கூப்பிட்டு, இப்படிப்பட்ட கதைகளை எழுதாதீர்கள் என்று சொல்லிவிட்டார். மனிதர்களின் நல்ல குணத்தை வெளிப்படுத்தும்விதமாகத்தான் கதைகள் அமையவேண்டும் என்றார்.

      நீக்கு
    3. விரைவில் இரண்டு மூன்று பாதைகள் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன் நெல்லை.  கீதா வேறு பாதி பாதி கதை எழுதி வைத்துக்கொண்டு இருக்கிறார்..  அவர் எப்போது முடித்து அனுப்புவாரோ...

      நீக்கு
    4. இந்தப் பாதிக் கதை எழுதி வைக்கறவங்கல்லாம் கதையாசிரியர்கள் கிடையாது. அவங்களுக்கு நேரம் கிடைக்கும்போது, முன்பு நினைத்திருந்த தீம் மறந்து போய், என்னன்னவோ எழுதி கதையை முடித்துவிடுவாங்க. நான்கூட கதை எழுத ஆரம்பித்தால் ஒன்று முழுவதும் எழுதிவிடுவேன் இல்லைனா பாதி முடித்து, மீதி பாயிண்டுகளாக எழுதிவைத்திருப்பேன். எப்போதும் ஒரே சிட்டிங்கில் எழுதினாத்தான் கதை நன்றாக வரும் என்பது என் அபிப்ராயம்

      நீக்கு
    5. முன்பு நினைத்திருந்த தீம் மறந்து போய், என்னன்னவோ எழுதி கதையை முடித்துவிடுவாங்க.//

      இல்லை அப்படிச் சொல்ல முடியாது நெல்லை.....அதற்கான குறிப்புகள் எழுதி வைத்திருப்பேன்....கோர்வையாக எழுத வேண்டும் அவ்வளவே அதுக்கு என்னால் எனக்கு நேரம் ஒதுக்க இயலவில்லை....

      கல்கியே கூட கடைசியில் அச்சில் ஏறுவதற்குச் சென்ற பிறகு கூட (ஜீவி அண்ணா சொல்லியிருந்ததாக நினைவு...) திருத்தங்கள் செய்து அனுப்புவார் என்று இங்கு சொல்லியிருந்தார்...

      இந்தப் பாதிக் கதை எழுதி வைக்கறவங்கல்லாம் கதையாசிரியர்கள் கிடையாது. //

      கதாசிரியர் என்று சொல்லிக் கொண்டதும் இல்லை என்றுமே....கதாசிரியரும் இல்லை.....அதனால்தான் நான் எழுதுவதும் இல்லை நெல்லை...

      கீதா

      நீக்கு
    6. சும்மா உங்களை வம்புக்கு இழுத்தேன் கீதா ரங்கன். உங்கள் உழைப்பு, முனைப்பு மிக அசாத்தியமானது. உங்களுக்குள்ள பிரச்சனைகளையும் வேலைகளையும் நீங்கள் கையாளும் விதம் எனக்கு ஆச்சர்யமாக இருக்கும்.

      நீக்கு
  19. ஒன்று ஓடி ஒளிந்தாலும் மற்றொன்று தங்குமே என்ற எண்ணத்தில் தான்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாமே தங்கி இருக்கிறது!  காணாமல் போனாலும் கொண்டு வந்து விடுவோம்ல...

      நீக்கு
    2. என்ன. படிச்சீங்களா, தம்பி?

      நீக்கு
  20. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

    பதிவின் இறுதியில், தங்களாலும், தங்கள் மகளாலும் வரையப்பட்டிருக்கும் கிருஷ்ணன், ஒப்பிலியப்பன் ஓவியங்கள் மிக அழகாக உள்ளது. ( ஓவியம் வரைவதில் ஆர்வம் உள்ள உங்கள் இருவரால்தான் வரையப்பட்டிருக்கும் என நினைக்கிறேன்) இருவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      இப்போதைக்கு நலமாக உள்ளேன். நம் நெல்லை சகோதரர் மாதிரி சில கோவில்களுக்கு நல்லபடியாக சென்று வர வீட்டில் மகன், மற்றும் குடும்பத்தினர் பயணதிட்டம் மேற்கொண்டார்கள். ஆனால் எனக்கு தீடிரென உண்டான வலிகளினால் வரவில்லையென மறுப்பேதும் சொல்ல முடியாமலும், அப்போதிருந்த மோசமான உடல்நல குறைவினாலும் நான் தவித்தேன். ஆனால், இறைவன் ஊருக்கும் கிளம்பும் ஒரு தினத்திற்கு முன்பு என் வலிகளைப் போக்கி எங்களை பயணம் செய்ய வைத்ததை நினைக்க இன்னமும் எனக்கு ஆச்சரியமாக உள்ளது. அவனருளால் நல்லபடியாக சென்று வந்தோம். எல்லாம் அவன் செயல்தான்..! இறைவனுக்கு நன்றி கூறிக் கொண்டேயிருக்கிறேன்.
      அக்கறையாக விசாரித்தமைக்கு உங்களுக்கும் மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. வணக்கம் ஸ்ரீராம் சகோதரரே

      இது உங்களுக்கான பதில் கருத்துரைதான். சற்று தள்ளி கீழே பதிந்து விட்டேன். மன்னிக்கவும். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. கமலா ஹரிஹரன் மேடம்... இரண்டுமே என் மகள் வரைந்ததுதான். முதல் கிருஷ்ணர், என்னுடைய deity. அதாவது தினமும் விஷ்ணு சஹஸ்ரநாமம் ஆரம்பிக்கும்போது திருவேங்கடமுடையானின் திருவுருவம் மனதில் வரணும், முடியும்போது (வனமாலீ கதீ..) இந்தக் கிருஷ்ணனின் உருவம் மூன்று முறை மனதில் வரணும். அப்போதுதான் அன்றைய பாராயணம் சரியாக அமைந்தது என்று மனம் சொல்லும். அந்த கிருஷ்ணர் சன்னிதியில் இருக்கிறார். அதே மாதிரி இன்னொன்று வரைந்துகொடு என்று கேட்டதற்கு இணங்க இந்த இரண்டாவதை வரைந்தாள்.

      இரண்டாவது படம் ஒப்பிலியப்பன். அவள் இன்னும் அதனை வரைந்து முடிக்கவில்லை (ஒரு மாதம் இடைவெளி வந்துவிட்டது). பூவை எந்த மாதிரி வரையலாம் என்று யோசிக்கிறாளாம். அந்தப் படத்தில் மிகச் சிறிய அளவில், பதக்கங்களில் மஹாலக்ஷ்மியும், ஒப்பிலியப்பனையுமே வரைந்திருக்கிறாள். பெரிதுபடுத்திப் பார்த்தால் தெரியும்.

      நீக்கு
    4. எந்த எந்தக் கோவில்களின் தரிசனம் கிடைத்தது என்று இங்கே எழுதிவிட்டால், ஒரு பெரிய பதிவாக உங்கள் தளத்தில் வெளியிட முடியாது என்பதால் அவற்றைக் குறிப்பிடவில்லையா கமலா ஹரிஹரன் மேடம்?

      நீக்கு
    5. விவரங்கள் தெரிந்து கொண்டேன் கமலா அக்கா.. நன்றி.

      நீக்கு
  21. சிறப்பான தரிசனம் கிடைத்தது.

    அனைவருக்கும், இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கில்லர்ஜி. உங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்

      நீக்கு
    2. உங்களுக்கு எழுதிய பதிலை, கூகுளார் காணாமலடித்துவிட்டார். எபி ஆசிரியர்கள்தாம் ரிலீஸ் செய்யவேண்டும்.

      நீக்கு
  22. அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்...

    பதிவின் படங்களும் விளக்கங்களும் வெகு அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி திண்டுக்கல் தனபாலன். உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் எங்களின் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

      நீக்கு
  23. ஆங்கில புத்தாண்டு நாளில் கோவில் தரிசனம் சிறப்பு.

    நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். பிறந்திருக்கும் ஆண்டு அனைவருக்கும் சகல நலன்களையும் தரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மாதேவி. உங்களுக்கும் எங்களது வாழ்த்துகள்

      நீக்கு
  24. கட்டுரையில் நிறைய சங்கதிகள். படங்கள் நன்று. அழகிய சிற்பங்கள் உடைந்தும் சிதைந்தும் காணப்படுவது மனதைத் துயரில் தள்ளுகிறது. அழகை வேண்டுமென்றே சிதைத்தவன், சிதைப்பவன் உழலுவான் துன்பத்தில் - அழகின் வடிவம் எதுவாகிலும்.

    பத்ரிநாத் பற்றி நிறைய கேள்விப்படுகிறேன். போனதில்லை. அங்கும் கோவிலே தெரியாத அளவுக்கு சுற்றிலும் கட்டிடங்கள், இங்கே கடைகண்ணிகளைப்போல.

    உங்கள் பெண் வரைந்த ஓவியங்கள் அழகாக உள்ளன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஏகாந்தன் சார். பத்ரிநாத்தில் கோவிலைச் சுற்றி கொஞ்சம் இடம் இருக்கிறது. கோவிலுக்கு எதிரே ஹோ என்ற இரைச்சலோடு ஓடும் அலக்நந்தா (நாங்கள் குளித்தது சுடுநீர் உடைய தப்த் குண்டத்தில்). ஆற்றுக்கு அந்தக் கரையில்தான் தங்குமிடங்கள்.

      நீக்கு
  25. அன்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  26. நெல்லை, படங்கள் எல்லாம் ...என்ன சொல்ல? வார்த்தைகள் இல்லை....கோபுரம் படங்கள் (நானும் பல கோபுரங்கள் எடுத்து வைத்திருக்கிறேன்...) அத்தனையும் அழகு.

    துவாரகா கோயில் சிற்பங்கள் வாவ் போட வைக்கின்றன. அரங்கன், துவாரகா கிருஷ், படங்கள் எல்லாம் அழகு, ரசித்துப் பார்த்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  27. உங்கள் அனுபவங்களும் சூப்பர், நெல்லை.

    நதிகள் தெற்கும் வடக்கும் பிரமித்துப் பார்த்தேன். மத்தியரங்கம் அந்தப் பாலம் ஆமாம் நேரில் பார்த்திருக்கிறேன் பல வருடங்களுக்கு முன்.

    //மலைப்பாதை, கிடுகிடு பள்ளம், தொடர்ந்து பல இடங்களில் ஆர்ப்பரித்து வரும் கங்கை, சிறிய பேருந்தின் தலைப்பகுதியை உரசிச் செல்லும் பாறைகள் என்று கொஞ்சம் பயம் கலந்த பயணம் நம்மை முடிவில் பத்ரிநாத் கோவிலில் கொண்டுபோய்ச் சேர்க்கும்.//

    திரில்லிங்க்! ஆமாம். எங்கள் வீட்டில் பத்ரி எல்லாம் போனவங்க நிறைய சொல்லியிருக்காங்க அது போல நேபால் சாளக்கிராமம் கண்டு வந்தவங்களும் நிறைய சொல்லிருக்காங்க...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் இப்போ வசதிகள்லாம் இருப்பதால் (பேருந்து, பாதை, எப்படி இருக்கு என்ற கம்யூனிகேஷன் போன்று), ரொம்ப கஷ்டம் கிடையாது. என்ன ஒண்ணு...பத்ரில இரண்டு மூன்று நாட்கள் இருந்தோம்னு இருக்காது. யாத்திரையில் ஒரு நாளைலயே இடத்தைக் காலி செய்துவிடுவார்கள். அடுத்த முறை (இந்த வருடம்) வேறொரு குழுவுடன் செல்ல நினைத்திருக்கிறேன்.

      நீக்கு
  28. அந்தப் பனி மூடிய மலை உச்சி இமாலய மலை ...அப்படியே பார்த்துக் கொண்டிருந்தேன் அழகு...

    பத்ரிநாத் கோயில் ரொம்பவே வளர்ந்திருக்கிறது தெரிகிறது. முன்பு இப்படிப் பார்த்த நினைவில்லை (எங்கள் வீட்டில் உள்ளவங்க எடுத்த படங்கள் கறுப்பு வெள்ளைக் காலப்படங்கள்...மிகச் சிறியவையாக...அருகில் அவ்வளவாக எதுவும் இல்லாமல்....எப்படி அங்கெல்லாம் சென்று கட்டி பிரதிஷ்டை செய்திருக்காங்க என்பது ரொம்ப ஆச்சரியமான விஷயம்தான்....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்கள் கோயிலில் இருந்தபோது, இமயமலையில் இருக்கும் துறவி போன்றவர் வந்திருந்தார். எனக்கு அவர் துறவி என்று தெரிந்தது. நான் அவரைப் பார்த்தேன். அவர் என்னைப் பார்க்கவில்லை.

      நாங்கள் தங்கிய விடுதியில் ஒரு படுக்கை 500 ரூ, இரண்டு பேர் கொண்ட படுக்கை அறை 1200 ரூபாய்

      நீக்கு
  29. ஓ! ஹரித்வார் கங்கை நீர் ஒருவருடம் ஆனாலும் தெளிவாக இருக்குமோ அதுதான் அந்தச் சிறிய பானைகளில் அடைக்கப்ப்ட்டு கிடைக்கிறதோ? எங்க வீட்டுல அப்படி 4, 5 இருந்தன...வருஷக் கணக்கா....ஒவ்வொருவர் மரணத்திற்கும் அதை உடைத்து தெளிச்சாங்க...ஸ்மெல் எதுவுமெ வரலை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கலாம். அலஹாபாத் திரிவேணி சங்கமத்துல அவ்வளவு தெளிவில்லைனு நினைக்கிறேன்.

      நீக்கு
  30. உங்க பொண்ணு வரைஞ்ச படம் உங்களுக்கு கிஃப்ட் கொடுத்தது தெரியும்....அழகு அழகு! சௌம்யாவுக்கு வாழ்த்துகள் பாராட்டுகள் சொல்லிடுங்க நெல்லை....ஏற்கனவே பார்த்திருக்கிறேன் என்றாலும் மீண்டும்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று எனக்கு பட்டாணி குருமா, நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, செய்து தந்தாள். படங்கள் எடுத்திருக்கேன். இருந்தாலும் நான் ரொம்ப பாராட்டுவதில்லை. (சின்ன வயசிலிருந்தே). அதனால் இப்போ பாராட்டினாலும், இது ச்சும்மா என்று அவளுக்குத் தோன்றும். ஹாஹாஹா

      நீக்கு
    2. //இருந்தாலும் நான் ரொம்ப பாராட்டுவதில்லை. (சின்ன வயசிலிருந்தே).// krrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

      நீக்கு
    3. உண்மையைச் சொன்னா... கர்ர்ர்ர்ர்ர் ?

      நீக்கு
  31. எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்! ஆரோக்கியமான நல்ல ஆண்டாக அமையட்டும் எண்டே ஈஸ்வரா!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில நாட்கள் முன்னர்தான் 'சனீஸ்வரன்' 'சனைச்சரன்' என்று ஒரு கருத்துச் சங்கிலி ஓடியது. இதில் End day ஈஸ்வரா வா?

      நீக்கு
    2. ஹாஹாஹாஹா நெல்லை எனக்கு இந்த விஷயம் எல்லாம் மனதில் ஏறாது சுட்டுப் போட்டாலும்....நான் சொன்ன ஈஸ்வரன் - பகவான்----அதுவும் இப்ப என்னவோ கொரோனா அது இதுன்னு சொல்லறாங்களே இந்த வருஷம் எந்த தடையும் இல்லாமல் போகணும்...

      கீதா

      நீக்கு
    3. நீங்க இப்படிப் ப்ரார்த்தனை பண்ணறீங்க. மருத்துவர்கள், மருத்துவமனைகள், மாஸ்க் தயார் பண்ணறவன்....என்று பெரிய லிஸ்ட் இருக்கு, எந்த மாதிரி ப்ரார்த்தனை செய்வார்கள் என்று. கடவுள் என்னதான் செய்வார்? உங்களை மாதிரி சாதாரணர்கள் வேண்டுவதைச் செய்வதா இல்லை, வரும் ஆயிரம் கோடியில் அரைக்கோடி உண்டியலில் போடுபவனுக்கு/அல்லது ஏழைகளுக்கு உதவுபவனுக்கு வேண்டுவதைச் செய்வதா? நீங்களே ஒரு ஐடியா அவருக்குக் கொடுங்க

      நீக்கு
  32. அடுத்த படமும் சௌம்யா வரைந்தது தான் இல்லையா? செம...அப்பா 8 அடி பொண்ணு 32க்கும் மேல பாய்கிறாள் போல!!! வாழ்த்துகள் வாழ்த்துகள்! பாராட்டுகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா. இதெல்லாம் ஜீன்ல வருது...உன் திறமை இல்லை என்று நான் சொல்லிடுவேன் (அவள் கடுப்பாவதற்கு)

      நீக்கு
    2. 90 பெர்சன்ட் அதுதான் நெல்லை.....உண்மைதான். ஒரு சில விதி விலக்குகள் இருக்கலாம். அல்லது முந்தைய தலைமுறை ஜீன்களில் இருந்திருக்கும் அலல்து முந்தைய தலைமுறை அல்லது தாத்தா பாட்டிகள் அவர்களின் திறமைகள் வெளிப்படாமல் இருந்திருக்கும்......

      என் அம்மா மிக நன்றாகக் கார்ட்டூன் வரைவார் என்பதே அவர் இறந்த பிறகுதான் அவர் ஏதோ ஒரு நோட் புக்கில் வரைந்ததைப் பார்த்தப்ப அதை வைத்துத் தெரிந்தது.

      என் தம்பி ஆஞ்சநேயர் படம் மிக நன்றாக வரைவான், அது போல சிவாஜி (நடிகர்) மிக நன்றாக வரைவான். நானும் வரைவதுண்டு ஆனால் எங்கள் திறமைகள் வளர்க்கப்படாமல் போய்விட்டது நாங்களூம் முனையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். என் திறமை என் மகனுக்கு இருக்கு ஆனால் அவன் அதை முன்னெடுத்துச் செல்லவில்லை அவன் தொழில் அப்படி ...

      என் அப்பாவுக்கு சங்கீத ஞானம் உண்டு ஆலாபனை செய்வார் ஆனால் யாருக்கும் கேட்காத அளவில்....வளர்த்துக் கொள்ளவில்லை....சூழலும் இல்லை அது போல எனக்கும்....என் மகன் வரை வந்திருக்கிறது. அவனுக்கு என் பக்கத்திலிருந்தும் அவன் அப்பா பக்கத்தில் தாத்தா பாட்டி, அத்தைகள் சித்தாப்பக்கள் என்று ஞானம் வந்திருக்கு. ஆனால் அவன் வளர்த்துக் கொள்ள முடியாத சூழல் இப்போது. கிட்டாரில் ஸ்வரம் அவ்வப்போது வாசிக்கிறான்....அதிகம் இல்லை

      கீதா

      நீக்கு
    3. ஜீன்ல திறமைகள் கடத்தப்பட்டாலும், அது பிரகாசிப்பது பலப் பல தலைமுறைகளுக்கு ஒரு முறைதான். அந்த வாழ்க்கையும் சுகமானதாக இருக்கமுடியாது. ஒருவன் ஒரு துறையில் பிரகாசிக்க உழைத்தால், பல கஷ்டங்களைப் படவேண்டியிருக்கும்.

      நீக்கு
  33. ஸ்ரீ க்ருஷ்ணர் ஓவியம் மனதைக் கொள்ளை கொள்கின்றது..

    ஒப்பிலியப்பன் ஓவியமும் சிறப்பு..

    தங்கள் அன்பு மகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வாழ்த்துக்கு நன்றி துரை செல்வராஜு சார்.

      நீக்கு
    2. கதைகளுக்கு இலக்கணம் variety. நெல்லை. வாழ்க்கை எப்படியிருக்கோ அப்படி. அப்படி இல்லாவிட்டால் இல்லாததைச் சொல்கிற மாதிரி ஒரு செயற்கைத்தன்மை கதைகளுக்கு வந்து விடும்.

      அதுவும் எபி.மாதிரி செவ்வாய் என்றால் கதை தான் வாசிக்கப் போகிறோம் என்று தீர்மானமான தளங்களில் ஒரே மாதிரி கதைகள் வாசிப்பு சலிப்பைத் தான் ஏற்படுத்தும்.

      பா.வெ. எந்த அர்த்தத்தில் அப்படிச் சொன்னாரோ தெரியவில்லை.

      நீக்கு
    3. https://engalblog.blogspot.com/2020/01/blog-post_14.html

      இதைத் திரும்பப் படித்துப் பார்த்து உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும். நன்றி

      நீக்கு
    4. நான் சொன்னது பொதுவானது. உங்கள் கதைக்கு மட்டும் என்றில்லை. அதனால் அது பற்றி கருத்து ஒரு காரணத்திற்காக அவசியமானது. இந்த புத்தாண்டிலிருந்தாவது எபி கதைப் பகுதியில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்ற காரணத்திற்கானது.

      நீக்கு
    5. கதையில் எதிர்மறை இருந்தால் அதில் என்ன? யதார்த்தம் தானே? நெல்லை அதனால் நீங்கள் சுற்றிப் பார்ப்பவற்றில், தெரிந்த நடப்புகளை அடிப்படையாக வைத்துக் கதை எழுதலாம் என்பது என் அபிப்ராயம். இப்படியும் உலகில் நடக்கின்றன என்பதும் தெரியலாம், மனித குணங்கள் உணர்வுகள் என்று அமையலாமே..

      கீதா

      நீக்கு
  34. அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!