வெள்ளி, 20 ஜனவரி, 2023

வெள்ளி வீடியோ : அழுதவர் சிரிப்பதும் சிரிப்பவர் அழுததும் விதி வழி வந்ததில்லை ஒருவருக்கென்றே உள்ளதை எல்லாம் இறைவன் தந்ததில்லை

 திருநீறில் மருந்திருக்கு தெரியுமா பாடல் போலவே அமைந்துள்ள இன்னொரு பாடல் இந்த கந்தன் திருநீறணிந்தால் பாடல்.  

எம் பி சிவன் எழுதியுள்ள பாடலுக்கு டி எம் எஸ் இசை அமைத்து பாடி இருக்கிறார்.  அனைவரும் ரசித்த பாடல், கேட்ட பாடல்.  இப்போது மீண்டும் ரசிக்கலாம்.


கந்தன் திருநீறு அணிந்தால் கண்டபிணி ஓடிவிடும்
குந்தகங்கள் மாறி இன்பம் குடும்பத்தை நாடிவரும். (கந்தன்).

சுந்தரவேல் அபிஷேக சுத்தத் திருநீறு அணிந்தால்
வந்தமர்ந்த மூத்தவளும் வழிபார்த்து போய்விடுவாள்
அந்தநேரம் பார்த்திருந்த அன்னை செல்வம் ஓடிவந்து
சிந்தையை குளிரவைக்க சொந்தம் கொண்டாடிடுவாள். (கந்தன்).

மணம் மிகுந்த சாம்பலிலே மகிமை இருக்குதடா
மனமுடன் அணிவோர்க்கு மகிழ்ச்சியை பெருக்குதடா
தினம் தினம் நெற்றியிலே திருநீறு அணிந்திடுடா
தீர்ந்திடும் அச்சமெல்லாம் தெய்வம் துணை காட்டுமடா. (கந்தன்)


===========================================================================================



It Happened One Night என்று ஒரு அமெரிக்க ஆங்கிலப்படம் 1934 ல் வந்தது. அதைத்தழுவி 1966 ல் எடுக்கப்பட்ட படம் எம் ஜி ஆர், ஜெயலலிதா, நாகேஷ் நடித்த சந்திரோதயம் படம்.

வாலியின் பாடல்களுக்கு இசை எம் எஸ் விஸ்வநாதன். இதில் உள்ள பாடல்கள் அத்தனையுமே இனிமையானவை, ஹிட் நம்பர்ஸ்.

நீங்கள் எதிர்பார்த்த பாடலை விட்டு விட்டு இன்று நான் பகிரும் பாடல் 'புத்தன் இயேசு, காந்தி பிறந்தது' பாடல். டி எம் எஸ் பாடியிருக்கும் இந்தப் பாடல் ஆரம்ப இசையிலிருந்தே அதிரடியாய் நன்றாய் இருக்கும். வரிகளும் மனத்தைக் கவரும்.

                                              புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக
தோழா ஏழை நமக்காக
கங்கை யமுனை காவிரி வைகை ஓடுவது எதற்காக
நாளும் உழைத்து தாகம் எடுத்த தோழர்கள் நமக்காக
கேள்விக்குறி போல் முதுகு வளைந்து உழைப்பது எதற்காக
மானம் ஒன்றே பெரிதென எண்ணி பிழைக்கும் நமக்காக
புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக
தோழா ஏழை நமக்காக

நிழல் வேண்டும்போது மரம் ஒன்று உண்டு
பகை வந்தபோது துணை ஒன்று உண்டு
இருள் வந்தபோது விளக்கொன்று உண்டு
எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு
உண்மை என்பது என்றும் உள்ளது
தெய்வத்தின் மொழியாகும்
நன்மை என்பது நாளை வருவது நம்பிக்கை ஒளியாகும்

புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக
தோழா ஏழை நமக்காக

பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை
தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை
மனம் என்ற கோயில் திறக்கின்ற நேரம்
அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும்
அழுதவர் சிரிப்பதும் சிரிப்பவர் அழுததும்
விதி வழி வந்ததில்லை
ஒருவருக்கென்றே உள்ளதை எல்லாம் இறைவன் தந்ததில்லை

புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக
தோழா ஏழை நமக்காக

53 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. நமஸ்காரம் ஜீவி ஸார்...   இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.  சிறப்பான 80 வது அகவையில் அடியெடுத்து வைத்திருக்கிறீர்கள்.

      நீக்கு
    2. வாழ்த்துகளுக்கு நன்றி ஸ்ரீராம்..
      இறைவன் கருணையில் நமக்கு
      எல்லாமே நன்மையாகட்டும்..

      நீக்கு
    3. வணக்கம் ஜீவி சகோதரரே.

      தங்கள் இனிய பிறந்த நாளுக்கு என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துகளும். வணக்கங்களும்.

      இன்று பிறந்த நாள் காணும் தங்களுக்கு இறைவன் பல நல்லதுகளையும், சிறப்பான ஆரோக்கியத்தையும் தருவார். நானும் மனம் நிறைவோடு பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    4. தங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி சகோதரி.
      தங்கள் நலன் களுக்காக நானும் இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

      நீக்கு
    5. ஜீவி அண்ணா வணக்கம். உங்களின் இனிய 80 பூர்த்தி ஆகும் இன்றைய தினத்தில் உங்களின் ஆசிகள் வேண்டி நமஸ்காரம். நீங்கள் பல்லாண்டு ஆரோக்கியத்துடன், மகிழ்வுடன் வாழ்ந்திட பிரார்த்தனைகளுடனும் வாழ்த்துகளுடனும்

      கீதா

      நீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். இறைவன் அனைவருக்கும் அனைத்தையுமே நலமாக நடத்தி தருவார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா. வணக்கம். பிரார்த்திப்போம்.

      நீக்கு
  3. கந்தன் திருநீர் அணிந்தால்
    கண்ட பிணி ஓடிவிடும்.

    ஆஹா. ஐயா, சரணம் !!

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளியில் இருப்பாடல்களும் அருமை. இரு பாடல்களுமே அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன். முதல் பக்திப்பாடல் அனைவரும் விரும்பி கேட்டு கொண்டதற்கிணங்கி உடனே பகிர்ந்தமைக்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. நிழல் வேண்டும் பொழுது
    மரம் ஒன்று உண்டு
    ------------
    நன்மை என்பது நாளை வருவது அதுவே
    நம்பிக்கை ஒளியாகும்..

    அடுத்த வேளை வாழ்க்கைப் போராட்டத்திற்கு
    எவ்வளவு நம்பிக்கை தரும் வரிகள்..

    வாலி ஐயா நன்றி.. நன்றி

    பதிலளிநீக்கு
  6. இந்நாள் இனிய நாள்..

    எல்லாருக்கும் இறைவன் அருளட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க நலம். வாங்க துரை செல்வராஜு அண்ணா.. வணக்கம்.

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    இரண்டாவது திரைப்பட பாடல் வரிகளை இப்போது சேர்ந்தாற் போல படிக்கும் போது அதில் எத்தனை அர்த்தங்கள். வாலியின் பாடல் வரிகள் நன்றாக உள்ளது. பாட்டு கேட்கும் போது கூட அதன் ராகம், இசையுடன் நம் பிற மன சிந்தனை, அருகிலிருப்பவரின் பேச்சுக்கள் இத்யாதிகளுடன் வரிகள் கரைந்து ஓடி விடும். இப்போது அவைகளின் அர்த்தங்கள் மனதில் பதிகிறது. நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா. வசீகர வரிகளைக் கொண்ட பாடல்...

      நீக்கு
  8. ஜீவி அண்ணா...

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..

    ஆயுள் ஆரோக்யம் ஐஸ்வர்யம் பெற்று பல்லாண்டு வாழ்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி தம்பி. நம் எல்லோர் நலனுக்காகவும் நானும் இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

      நீக்கு
    2. தங்கள் வாழ்த்துக்ளுக்கு
      நன்றி, தம்பி.
      நம் எல்லோர் நலனுக்காகவும் நானும் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

      நீக்கு
  9. நாயகேஷ் - என்று வந்திருக்கு..

    பிழை திருத்தவும்..

    பதிலளிநீக்கு

  10. இனிய பாடல்கள்..

    இன்றைய பதிவு அருமை. அருமை..

    பதிலளிநீக்கு
  11. ஜீவி சார், வணக்கம் , வாழ்க வளமுடன்
    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
    உங்கள் ஆசீர்வாதம் எங்கள் எல்லோருக்கும் வேண்டும்.
    வணங்கி கொள்கிறோம்.

    பதிலளிநீக்கு
  12. இரண்டு பாடலும் மிகவும் பிடித்த பாடல்.
    அடிக்கடி கேட்கும் பாடல்கள். இரண்டும்.

    //தினம் தினம் நெற்றியிலே திருநீறு அணிந்திடுடா
    தீர்ந்திடும் அச்சமெல்லாம் தெய்வம் துணை காட்டுமாடா.//

    துணையாக வர வேண்டும் முருகன்.

    //மனம் என்ற கோயில் திறக்கின்ற நேரம்
    அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும்//

    அருமையான வரிகள்.
    பகிர்வுக்கு நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோதரி.
      'வாழ்க வளமுடன்' என்ற வேதாத்திரி மகரிஷியின் அருள் நிறைந்த வாழ்த்துரைக்களைக் கேட்டாலே உங்கள் நினைவுகள் வரும்.
      தங்கள் அன்பான வாழ்த்துக்ளுக்கு நன்றி. நம் எல்லோருடைய ஆரோக்கிய வாழ்க்கைக்கு நானும் இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

      நீக்கு
  13. இரண்டும் பலமுறை கேட்ட பாடல்கள், "சந்திரோதயம்" திரைப்படம் கோயில் திருவிழாவக்கு, தெருவில் பலமுறை பார்த்ததுண்டு.

    பதிலளிநீக்கு
  14. அன்பு நண்பர், எங்கள் ப்ளாக் குடும்ப உறுப்பினர், மூத்த சகோதரர் ஜீவி அவர்களுக்கு எங்கள் ப்ளாக் ஆசிரியர்கள் குழு சார்பில் இனிய சதாபிஷேக வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  15. G.V. sirr அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு நண்பர் தேவகோட்டையாரின் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி. தங்கள் மற்றும் நம் எபி குடும்ப நண்பர்கள் அனைவரின் நலனுக்காக நானும் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

      நீக்கு
  16. ஜீவி சார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    வாழ்க்கையின் அடுத்த இருபது ஆண்டுகளை ஆரம்பிக்கும் அவருக்கு, இறைவன் பரிபூர்ண உடல் நலத்தையும், மகிழ்ச்சியையும் தருவானாகுக

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி முரளி. உடல் ஆரோக்கியத்தைத் தவிர வேறு வேண்டுதல் இல்லை என்று தெளியும் காலமிது. நம் எல்லோருக்குமான
      அந்த நலனுக்கு நானும் பிரார்த்திக்கிறேன்.

      நீக்கு
  17. இரண்டு பாடல்களும் மிக அருமையானவை

    பதிலளிநீக்கு
  18. அன்பு சகோதரர் கேஜிஜியின் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி.
    நம்ம வூடான எபி ஆசிரிய குழு நண்பர்களுக்கு நன்றி.
    எபியும் நாமும் வேறில்லை என்ற அன்புப்
    பிணைப்பில் வாசக உடன் பிறப்புகளான நாமும் ஒருவருக்கொருவராக எல்லோரும் ஒன்றானோம்.
    அந்த அன்பின் திளைப்பில் நம் எல்லோரின் ஆரோக்கிய நலன்களுக்காக நானும் பிரார்த்துக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  19. திரு.ஜிவி அவர்களுக்கு, நல் ஆரோக்கியத்துடனும் அனைத்து வளங்களுடனும் என்றும் மகிழ்ந்திருக்க மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி, சகோதரி.
      தங்களின் தங்களின் குடும்பத்தினரின் நலனுக்காக நானும் பிரார்த்திக்கிறேன்.

      நீக்கு
  20. சதாபிஷேகம் என்பது 80 தொடங்கும்போது கொண்டாட வேண்டுமா? அல்லது 80 நிறையும்போது கொண்டாட வேண்டுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 80 வயது பூர்த்தி ஆனவுடன் சதாபிஷேகம் செய்வார்கள்

      நீக்கு
  21. // பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை
    தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை
    மனம் என்ற கோயில் திறக்கின்ற நேரம்
    அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும்.. //

    இப்படியெல்லாம் எழுதிய வாலி அவர்கள் தான் கடைசி காலத்தில் எப்படி எப்படியோ எழுதி கெட்ட பெயரை தேடிக் கொண்டார்..

    அதுவும் காலத்தின் கோலம் தான்..

    பதிலளிநீக்கு
  22. இரு பாடல்களுமே கேட்டு ரசித்த பாடல்கள் ஸ்ரீராம்.

    முதல் பாடலின் வரிகளுக்கு உருக்கமான ரஞ்சனி ராகம்!!! என்ன பொருத்தம்!
    '
    கீதா

    பதிலளிநீக்கு
  23. இரண்டாவது பாடல் வரிகள் அத்தனையும் அருமை....எம் ஜி ஆருக்கான பாடல்கள் வரிசையில் இதுவும். அப்படித்தான் இல்லையா? அவருக்காகவே எழுதப்பட்ட பாடல்?

    அருமையான பாடல்...

    கீதா

    பதிலளிநீக்கு
  24. இரண்டு பாடல்களுமே பிரபலமான பாடல்கள். கேட்டிருக்கிறேன். முதலாவது பக்தி என்றால் இரண்டாவது தத்துவம்.

    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  25. இரண்டும் சிறப்பான பாடல்கள்

    திருமிகு. ஜிவி ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  26. இரண்டு பாடல்களுமே அடிக்கடி கேட்டு ரசித்தவை. கந்தன் திருநீற்றை விட உயர்வானது உலகில் உண்டோ?

    திரு ஜீவி அவர்களுக்கு இனிய 80 ஆம் பிறந்த நாள் வாழ்த்துகள். பூரண ஆரோக்கியத்துடனும், மன மகிழ்ச்சியுடனும் வாழப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  27. ஜீவி அய்யா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். 

    Jayakumar

    பதிலளிநீக்கு
  28. ஜீவி ஐயா அவர்களுக்கு பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். 
    ஐயா தான் இங்கு மூத்தவரோ? 80 அகவை கடக்கும்போது அஷ்ட திக் பாலர்களில் ஒருவராக கருதப்படுவார்களாம். நானும் அவ்வாறே கருதி வணங்குகிறேன்!

    வைஷ்ணவி

    பதிலளிநீக்கு
  29. @ வைஷ்ணவி

    // எண்பது அகவை கடக்கும்போது அஷ்ட திக் பாலர்களில் ஒருவராக கருதப்படுவார்களாம். நானும் அவ்வாறே கருதி வணங்குகிறேன்!..//

    அரிய தகவல்..

    நானும் அவ்வாறே வணங்குகிறேன்!.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!