நெல்லைத்தமிழன் :
பெண்ணுக்கு இதுதான் அங்க லட்சணம்னு யார் தீர்மானித்திருப்பார்கள்? (உடுக்கை இடைக்கு சிலை படம்தான் போடவேண்டியிருக்கும். இணையத்தில் அப்படிப்பட்ட பெண்கள் படம் கிடைக்காது)
# நாட்டிய சாஸ்திரத்தில் பரதமுனி அங்க லட்சணம் குறித்து எழுதியுள்ளதாக பிரசங்கம் கேட்டிருக்கிறேன்.
& உடுக்கை இடை என்பது உடுக்கை வடிவத்திற்கு சொல்லப்பட்ட சமாச்சாரம். அது 900 - 700 - 900 ஆக இருந்தாலும் உடுக்கைதான்!
இது நல்ல பழக்கம், இது கெட்ட பழக்கம் என்பதற்கு எது அளவுகோல்?
# பழக்கம் நம் ஆரோக்கியத்துக்கு அல்லது சமூகத்துக்கு ஊறு செய்தால் கெட்ட பழக்கம். அடுத்தவருக்கு நன்மை/திருப்தி/மகிழ்ச்சி உண்டானால் நல்ல பழக்கம்.
கடந்த ஒரு நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் கண்டுபிடிப்புகளில் உங்களை ஆச்சர்யப்படுத்துவது எது? எந்த கண்டுபிடிப்பு மிக்க இடைஞ்சலாக ஆகிவிட்டது? எது தேவையில்லாதது? அதாவது கண்டுபிடிக்கலைனா ஒண்ணும் ஆயிருக்காது, நாம் இன்னும் நல்லாவே இருந்திருப்போம் என்று நினைக்கவைப்பது.
# டிரான்ஸிஸ்டர், மைக்ரோ சில்லுகள். இணையப்பயன்பாடுகள் ஆச்சரியம் . அணு ஆயுதம் மகா இடைஞ்சல். சமூக வலைதளம் வராமலே இருந்திருக்கலாம்.
போதைப்பழக்கம் ஏன் குடிப்பழக்கத்தைவிட மோசமானது என்று அரசாங்கம் சொல்கிறது?
# போதைப் படுக்கம் சிறு களவு போன்ற குற்றங்கள் முதல் தற்கொலை வரை ஒருவரைக் கொண்டு செல்லும் என்பதால் அது கொடிதிலும் கொடியதுதான்.
சமீபத்தில் திருநெல்வேலியில் வாழைப்பழம் வாங்கியபோது, ஒரு பழத்துக்கு இன்ன விலை என்றார்கள் (மொந்தன் பழம் 7 ரூபாய், செவ்வாழைப்பழம் 15 ரூபாய்). கிலோ கணக்கில் விற்பனை செய்வதில்லை என்று சொன்னார்கள். பெங்களூரில் கிலோவில்தான் விற்கிறார்கள். நீங்கள் எப்படி வாங்குகிறீர்கள்?
# நான் பெங்களூருதான்.
& கிலோ கணக்கில்தான்.
உழைப்பு என்பதற்கான விளக்கம் என்ன? சைக்கிளில் சேலை விற்று வளமாக வாழ்பவன் அந்தச் சேலையை நெய்பவனைவிட உழைப்பாளியா? இல்லை அதே சேலையை ஏசி கடையில் விற்று இன்னும் வளமுடன் வாழ்பவன் பெரிய உழைப்பாளியா? நெய்பவன் கண்ணில், உழைப்பில்ஙாமல் அதிகம் சம்பாதிக்கும் இவர்கள் சோம்பேறிகள், பிறர் உழைப்பில் வாழ்பவர்கள் என்ற எண்ணம் வராதா?
$ நானும் என் சகோதரரும் இருவரும் நடந்து சென்று கீரை வாங்கி வந்தால் அவர் வாங்கி வந்த கீரை 33% அதிக விலையோ பலனோ உடையதாக ஆகுமா ?
இல்லை அவர் என்னை விட அதிகம் படித்ததால் அவர் வீட்டுக் கீரை அதிகம் ருசிக்குமோ ?
உழைப்பு என்பது உடல் உழைப்பு மட்டுமே அல்ல!
# எல்லாரும் உழைப்பாளிகள்தாம். உடல் வருந்த வேலை செய்ய வரும் , நாற்காலியில் அமர்ந்து யோசித்து பிரச்சினைக்குத் தீர்வு காண்பவரும், நின்றபடி, அல்லது தொலைபேசியில் பேசியபடி பணி நன்கு நடைபெற வழிசெய்பவரும் உழைப்பாளிகளே.
தம் உழைப்புக்கேற்ற ஊதியம் வருவதில்லை என்ற குறை எல்லா தளங்களிலும் இருக்கும். அவற்றில் சில நியாயமானவையாகவும் இருக்கும்.
இந்த உலகில் உழைப்புக்கேற்ற ஊதியம் என்று ஏன் இல்லாமல்போய்விட்டது? அடைப்பைச் சரி செய்பவர், வீடு கட்டுபவர், சாலையைப் பராமரிப்பவர், ஏசியில் அமர்ந்து வேலைபார்ப்பவர் என கூலியில் ஏன் இத்தனை வித்தியாசம்?
$ எல்லா பிச்சையும் சுந்தர் பிச்சை ஆக முடியுமா !
# எல்லாவற்றிலும் ஏற்றத்தாழ்வுகள் இருப்பது உலக நியதி. நமக்கு நல்ல ஊதியம் கிடைக்கும்வரை "ஏற்றத் தாழ்வுகள்" நம் கண்ணில்படுவதில்லை.
ஜெயக்குமார் சந்திரசேகரன்:
கோவில் சிலைகளிலேயே சிற்பிகள் உடை அலங்காரங்களை வடித்திருக்கும்போது மீண்டும் ஒரு புடவையோ, வேட்டியோ சுற்றுவதன் காரணம் என்ன? அதுவும் திருமஞ்சனம், அபிஷேகம் போன்ற சமயங்களில்?
# குளிக்கும்போது உடம்பில் துணி சுற்றியிருக்கவேண்டும் என்பது சாஸ்திரம். கல்லில் வடிக்கப்பட்ட ஆடை துணி அல்ல என்பதால் பருத்தி/பட்டு அணிவிக்கப்படுகிறது. அதே காரணமாக தங்க நகைகளும் அணிவிக்கிறார்கள்.
பூமியில் கிடைக்கும் இயற்கைப் பொருட்களில் இருந்தே உலோகம், பிளாஸ்டிக் போன்றவை உண்டாக்கப்படுகின்றன. ஆனால் அவற்றை மீண்டும் பூமியில் குப்பையாகப் போடப்படும்போது கேடு உண்டாகிறது என்று கூறுகிறோம். ஏன் ?
# பிளாஸ்டிக் காலக்கிரமத்தில் அழிந்துபோவதில்லை என்பது உண்மைதானே.
சிறுகதை, குறுங்கதை வித்யாசம் என்ன, எப்படி?
# குறுங்கதை என்று தனியாக ஒன்று இல்லை. சிறுகதை நெடுங்கதை குறுநாவல் நாவல்-அவ்வளவே.
தமிழ் கதைகளில் வரும் துப்பறிபவர்களான, துப்பறியும் சாம்பு, சங்கர்லால், இன்ஸ்பெக்டர் சிங், கணேஷ்/வசந்த் ஆகியோரில் எந்த துப்பறிபவர் உங்களைக் கவர்கிறார்?
# சாம்பு குருட்டு அதிர்ஷ்டம். சங்கர்லால் துப்பறிவதைவிட டீ குடிப்பதும் ஹட்சன் காரில் விரைவாகச் செல்வதும்தான் அதிகம் செய்வார். இன்ஸ்பெக்டர் சிங் எனக்கு அறிமுகம் இல்லை. எனவே என் வோட்டு லாயர் கணேஷுக்கு தான்.
= = = = = = =
சு நா மீ 06 : சுந்தரம், நாகேஸ்வரன், மீரா
இந்தக் கதையின் முந்தைய பகுதி பதிவின் சுட்டி : பகுதி 05
டிசம்பர் 25 - 2004
சுந்தரம் " மீகாம் எக்ஸ்போர்ட்ஸ் & இம்போர்ட்ஸ் கம்பெனி " உரிமையாளர். அவர் மனைவி மீரா.
சுந்தரம், மீரா தம்பதியினருக்கு உலகமே இருண்டு போனது போல இருந்தது.
நாகூர் நாகநாதர் கோவில் இறைவனுக்கு வேண்டிக்கொண்டு, விரதம் இருந்து பெற்ற பையனுக்கு நாகேஸ்வரன் என்று பெயரிட்டு அருமையாக வளர்த்து வந்தார்கள்.
பையன் என்ன கேட்டாலும் வாங்கிக் கொடுத்து, அவனுக்கு எல்லா வகையிலும் சுதந்திரம் கொடுத்து வளர்த்து வந்தனர்.
அன்று மாலை தன் நண்பர்களுடன், நாகூர் ரயில் நிலையத்திற்கு அருகில் கடற்கரையில் விளையாடச் சென்றான், நாகேஸ்வரன். அன்று சூரியன் மறையும் முன்பு, விளையாட்டுக் குழுவின் தலைவனாக இருக்கும் பாபுவிடம் சொல்லிவிட்டு, குழுவிலிருந்து விடுபட்டு, வீட்டுக்குக் கிளம்பினான்.
கடற்கரையிலிருந்து வீட்டை நோக்கி ஓடி வந்த நாகேஸ்வரன் ரயில் நிலையத்திற்கு அருகே தனியே நின்றிருந்த ரயில் பெட்டி ஒன்றைப் பார்த்தான். அந்த ரயில் பெட்டியின் ஒரு கதவு சற்று திறந்து இருந்தது. மற்ற கதவுகளைப் பூட்டிய ரயில்வே ஊழியர், கடைசியாக இந்தக் கதவை மட்டும் பூட்ட மறந்து சென்றிருக்கிறார். அதன் அருகே சென்று பார்த்தான். ஆர்வத்தில், ரயில் பெட்டியின் படிகளில் கிடுகிடுவென ஏறி உள்ளே சென்று பார்த்தான்.
அவனுடைய துரதிர்ஷ்டம் - அவன் ஏறி உள்ளே சென்ற கதவு சற்று நேரத்தில் காற்றில் மூடிக்கொண்டுவிட்டது.
திரும்ப கதவருகே வந்த நாகேஸ்வரன், செய்வதறியாமல் திகைத்தான். ரயில் பெட்டியின் மற்ற கதவுகள் எல்லாம் பூட்டப் பட்டிருந்தது.
மிகவும் கஷ்டப்பட்டு, கதவை இழுத்துத் திறக்க முயற்சித்த நாகேஸ்வரன் கதவு திடீரென்று திறந்துகொண்டவுடன், அந்த அதிர்ச்சியில் ரயில் பெட்டியின் உள்ளே விழுந்தான்.
= = = =
இருட்டிய பின்னும் நாகேஸ்வரன் வீடு திரும்பாததால், சுந்தரம், மீரா இருவரும் பாபுவின் வீட்டிற்குச் சென்று விஜாரித்தனர். பாபு, அவர்களிடம், 'நாகேஸ்வரன் மாலையே வீட்டிற்குப் போகிறேன் என்று சொல்லிக் கிளம்பி வந்துவிட்டானே' என்று கூறினான்.
சுந்தரம், மீரா இருவரும், தங்கள் வீட்டிற்கு அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடமும், மற்ற நண்பர்களின் வீடுகளுக்கும் சென்று விஜாரித்தனர். எல்லோரும் கூறிய ஒரே பதில். 'தங்களுக்குத் தெரியாது, அவன் முன்பே கிளம்பி வீட்டுக்குப் போகிறேன் என்று சொல்லிப் போனான்'
இறுதியில், போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று, புகார் கொடுத்துவிட்டு வீடு திரும்பினர்.
== = = =
நாகூரில் இருக்கும் தன் பெரியப்பா பையனைப் பார்த்து ஆசை தீர பழங்கதைகள் பேசி அவருடனேயே தங்கிய சுப்பா ராவ், சுந்தரி நாகராஜ் பற்றி எந்த விவரமும் அவரிடம் கூறவில்லை. 'தப்பித் தவறி காந்தாமணியும், தயாளனும், குழந்தைகளை, தான் அழைத்துவந்து நாகூரில் உள்ள தன் சகோதரன் வீட்டில் விட்டிருக்கலாம் என்று சந்தேகப்பட்டு ஆட்களை அனுப்பினால், அவர்களிடம் சுந்தரி, நாகராஜ் இருவரும் கிடைக்கக் கூடாது' என்று நினைத்தார் அவர்.
சகோதரனைப் பார்த்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டதால், அவரைப் பார்க்க வந்ததாகவும், மறுநாள், கடலில் பௌர்ணமி ஸ்நானம் செய்துவிட்டு திருவாரூர் செல்வதாகவும் கூறினார்.
= = = = = =
(தொடரும்)
வெறும் சிற்பம், சிலைக்கு கட்டுப்பாடுகள் கிடையாது. வழிபடப்படும் சிலை, சிற்பத்திற்கு ஆடை ;வஸ்திரம் சாற்றுதல்), புஷ்பம், அலங்காரம் போன்றவை உண்டு. உற்சவருக்கு திருமஞ்சனத்திற்கு வஸ்திரம் சாற்றுவது ஆகம்ம்தான்.
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி.
நீக்குபூமியில் கிடைப்பது..... ப்ராசஸ் செய்யாத மெர்க்குரி, சயனைடு போன்றவையும் பூமியில் கிடைப்பவைதான். நாம் ப்ராசஸ் செய்து உருவாக்குபவைகளில் பல, இயற்கையோடு மக்கி ஒன்றாவதற்கு காலம் பிடிக்கும். அணுஉலைக் கழிவு, பிளாஸ்டிக் போன்றவைகளுக்கு பல்லாயிரம் ஆண்டுகள். உரங்களுக்குச் சில ஆண்டுகள் (அவை பூமியை மலடாக்கும்), எண்ணெய் போன்றவை இதில் அடங்கும்.
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி.
நீக்குநல்லவேளை... எல்லாமே தண்ணீரின் அல்லது இயற்கையின் ஒரு பகுதிதானே.. ஏன் எச்சில்...... போன்றவை மேலே பட்டால் அசூயை அடைகிறோம், தண்ணீர் பட்டால் அப்படித் தோன்றுவதில்லை என்ற சந்தேகம் ஜெயக்குமார் சாருக்கு எழவில்லையே
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி.
நீக்குஎனக்கு ஒரு சந்தேகம். சு நா மீ பகுதி இன்று வெளியிடவில்லை என்றால் இன்னும் ஆறு, ஒன்பது படங்களை பதிவில் கௌதமன் சார் சேர்த்து, பதிவைக் குளிர்ச்சியாக்க முயன்றிருப்பாரோ?
பதிலளிநீக்கு:))))
நீக்குநல்ல கேள்விகள் , பதில்களும் நன்று. சநாமீயை தொடர்ந்து வருகிறேன்...
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி. சநாமீ ??
நீக்குஅனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம் , வாழ்க வளமுடன்
நீக்குகேள்விகளும், பதில்களும் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குகதை படித்து வருகிறேன். நாகேஸ்வரனுக்கு என்ன ஆச்சு அடுத்து படிக்க ஆவல்.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குஇந்நாளும் இனிய நாளாய் அமைந்திடட்டும்..
பதிலளிநீக்குஎங்கும் நலம் வாழ்க..
கருத்துரைக்கு நன்றி.
நீக்குகேள்வியும் பதிலும் நன்று.. நன்று..
பதிலளிநீக்குநன்றி, நன்றி.
நீக்குஏதோ நெல்லை அவர்களின் தயவால் #₹#₹#₹#₹#₹..
பதிலளிநீக்குஆனாலும்
இவற்றில் ஒன்று மட்டுமே உடுக்கை!..
உடுக்கை இல்லா ஊருக்கு உரலே உத்தமம்..
அது எது?
நீக்குஅது இலியானா என்று ஒருவர் சொல்லித்தானா கௌதமன் சாருக்குத் தெரியணும்?
நீக்குஅது இல்லையானா எது?
நீக்குபரபரப்பான நிமிடங்களை நோக்கி - சுநாமீ!..
பதிலளிநீக்குஆம்!!
நீக்கு//தமிழ் கதைகளில் வரும் துப்பறிபவர்களான, துப்பறியும் சாம்பு, சங்கர்லால், இன்ஸ்பெக்டர் சிங், கணேஷ்/வசந்த் ஆகியோரில் எந்த துப்பறிபவர் உங்களைக் கவர்கிறார்?
பதிலளிநீக்கு# சாம்பு குருட்டு அதிர்ஷ்டம். சங்கர்லால் துப்பறிவதைவிட டீ குடிப்பதும் ஹட்சன் காரில் விரைவாகச் செல்வதும்தான் அதிகம் செய்வார். இன்ஸ்பெக்டர் சிங் எனக்கு அறிமுகம் இல்லை. எனவே என் வோட்டு லாயர் கணேஷுக்கு தான்.//
லாயர் கணேஷ் கூட பெரும்பாலாலான கதைகளில் தான் துப்பு துலக்கியதை பற்றி கூறும்போது ஒரு hunch-ல் கண்டுபிடித்ததாகவே சொல்வார். Hunch = Guess or Intuition. முடிச்சுகளை அவிழ்த்து அவர் துப்பு துலக்கிய கதைகள் மிக குறைவே என்று நினைக்கிறேன்.
சங்கர்லால் க்ளூகோஸ் மாத்திரை சாப்பிடுவாரா இல்லை தமிழ்வாணனா?
நீக்குஅடுத்த புதன் கேள்வியா!
நீக்குக்ளுகோஸ் மாத்திரை தமிழ்வாணன்தான் சாப்பிடுவார்! சங்கர்லால் கால்களைத் தூக்கி மொடா மேல் போட்டுக்கொண்டு தளர்ந்த டையுடன் தேநீர் அருந்துவார். மாது போடும் தேநீர் அவருக்கு பிடிக்கும்!
நீக்குகேள்விகள் பதில்கள் நன்று.
பதிலளிநீக்குகதை அடுத்து என்ன என்ற ஆவலில் ....தொடர்கிறேன் .
கருத்துரைக்கு நன்றி.
நீக்குகேள்வி பதில்கள் நன்று...
பதிலளிநீக்குநன்றி.
நீக்குசாம்புவை எத்தனை வருடங்கள் ஆனாலும் ரசிக்க முடியும். மற்றவர்களை அப்படி ரசிக்க முடியுமா?
பதிலளிநீக்குஅது சரி, உள்ளே நாகேஸ்வரன் தானாக விழுந்தானா? அல்லது பிடித்து இழுத்தாங்களா?
சாம்பு MAMA வை எத்தனை வருடங்கள் ஆனாலும் ரசிக்க முடியும். மற்றவர்களை அப்படி ரசிக்க முடியுமா?
நீக்குJayakumar
கீதா அக்கா..
நீக்குநான் சாம்புவையும் ரசிப்பேன். கணேஷ் வசந்த்தையும் ரசிப்பேன்!
JKC .ஸார்....!
//சாம்பு MAMA வை எத்தனை வருடங்கள் ஆனாலும் ரசிக்க முடியும்.// @கீதா அக்கா . ரைட்?
நீக்கு:)))
நீக்குஉழைப்பு என்பதற்கான விளக்கம் சிறப்பு!
பதிலளிநீக்குகவர்ச்சிக் கன்னிகளின் படங்களை எ.பி.யில் போடும் புண்ணியத்தை நெல்லை கட்டிக் கொண்டாரா? பேஷ்! பேஷ்! நடக்கட்டும். வியாழக்கிழமைகளில் அனுஷ்காவின் படங்களை போடுவதை ஸ்ரீராம் நிறுத்தி விட்டார்.
ஸ்ரீராம் கவனிக்கவும்!
நீக்கு:))
நீக்குசெவ்வாய் சிறுகதைக்கான தீர்ப்பு அன்றைய கருத்துரையில் வெளியாகி இருக்கின்றது..
பதிலளிநீக்குஎதற்கும் இருக்கட்டும் என்று கதையின் நிறைவைச் சொல்லாமல் இருந்தேன்..
எனக்கும் இப்போது நிம்மதியாயிற்று..
ஆனாலும் அது ஓடி ஒளிந்து கொண்டது..
அன்பின் ஸ்ரீராம் தான் அதை விடுவிக்க வேண்டும்..
இரண்டு நாட்களாக
உடல் வேதனை அதிகம்.. எனவே தாமதம் ஆயிற்று..
அனைவருக்கும் நன்றி.. மகிழ்ச்சி..
//அன்பின் ஸ்ரீராம் தான் அதை விடுவிக்க வேண்டும்..//
நீக்குDone.
வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே
நீக்குகதையின் இந்த முடிவு நன்றாக உள்ளது.
புனிதமான பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் நல்லவர்களின் கண்களுக்கு முன் தீய செயல்களை காட்ட விரும்பாத சக்ராயுதம்... பரந்தாமனின் கட்டளைப்படி அவரிடமே சரணடைந்த சக்ராயுதம்... மீண்டும் ஒருநாள் அதர்மம் அந்த பாவிகளால் தலை விரித்தாடும் போது, அந்த பாவிகளை மட்டும் தண்டிக்காமல் விடாது. அப்போது பரந்தாமனின் விருப்பபடி புறப்பட்டு வந்து அவர்களுக்கான தண்டனையை நிச்சயம் தரும். அதுதான் நிதர்சனமானது. சத்தியமானது. நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் எப்போதும் போல் அருமை. இப்போதுள்ள சினிமா நட்சத்திரங்கள் பெயர்களே இன்னமும் எனக்கு சரிவர தெரியவில்லை. ( இருவர் மட்டும் எபியில் இதுவரை அடிக்கடி கண்களில் பட்டதினால் அவர்களின் பெயர் மட்டும் தெரியும். :)))) கதைப்பகுதி சென்ற வாரமே நான் படிக்கவில்லை. அதையும் படித்து விட்டு இன்று உள்ளதையும் சேர்த்து படிக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குநெல்லைக்கு ரொம்ப வருத்தம் போல!!! படங்கள் கம்மியாகிடுச்சுன்னு!!! ஹிஹிஹிஹி
பதிலளிநீக்குகதை ல இப்ப மீ காம் வந்திருக்கு...இது எப்படி தொடர்பு ஆகிறது என்று அடுத்த தொடர் வரை காத்திருக்கணும் போல!!!
கீதா
ஏற்கெனவே மீகாம் இரண்டு தடவை வந்துள்ளது. இரண்டாம் பகுதியில், மற்றும் ஐந்தாம் பகுதியில்.
நீக்கு