திருநெல்வேலி – கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோவில் – பகுதி 1
திருநெல்வேலியில் இருக்கும் புகழ்பெற்ற கோவில் இது. இதன் புகழ், கோவிலுக்காக இல்லை. அங்கு இருக்கும் சிற்பங்களுக்காக. நெல்லையில் இருந்தபோது பலர் இந்தக் கோவிலைப்பற்றியும் சிற்பங்கள் பற்றியும் பேசியிருக்கிறார்கள். ஆனால் அப்போது எனக்கு அதில் ஆர்வமோ, வசதியோ இல்லை. ஆனால் மனத்தில் இந்தக் கோவில் இருந்திருக்கிறது.
80ல் பாளையங்கோட்டையில் வசித்தபோது, தெற்கு பஜார் லாலாக்கடைக்கு ஒருநாள் போயிருந்தபோது அருகிலிருந்த பழையபுத்தகக் கடையிலோ இல்லை லாலாக்கடையிலோ, சில்பியின் கோட்டோவியங்கள் இருந்த ஒரு புத்தகத்தை வைத்திருந்தார் (ஒருவேளை மிக்சர் மடித்துக்கொடுப்பதற்காக இருக்கும்). என் ஆர்வத்தால் அவரிடம் அந்தப் புத்தகத்தை வாங்கினேன் (இலவசம்தான் என்று நினைவு). அந்தப் புத்தகத்தில் இருந்த ஒரு ஓவியத்தையும் நான் வரைந்திருக்கிறேன், இந்தியன் இங்க் துணைகொண்டு. அப்போது வாங்கிய அந்தப் புத்தகம் என்னுடன், சென்னை, துபாய், பஹ்ரைன் என்று பயணித்து சென்னையில் இருந்தது (2019). நிச்சயம் பெங்களூர் வீட்டிற்குக் கொண்டுவந்திருப்பேன். எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்கமுடியவில்லை. அதன் இன்னொரு xerox நான்பஹ்ரைனில் இருந்தபோது எடுத்த நினைவு. என்றைக்காவது கிடைத்தால், அதனையே சில பதிவுகளாகப் போடுகிறேன்.
மதுரை நாயக்க மரபை நிறுவிய விஸ்வநாத நாயக்கரின் மகனான கிருஷ்ணப்ப நாயக்கரால் (15ம் நூற்றாண்டு) இந்தக் கோவில் கட்டப்பட்டது. கிருஷ்ணப்ப நாயக்கருக்கு முன்பு திருவேங்கடராயபுரம் என்று அழைக்கப்பட்ட இந்த ஊர், பிறகு கிருஷ்ணாபுரம் என்று பெயர் மாற்றப்பட்ட து.
கோயில் முன்பு மூன்று பிராகாரங்களைக் கொண்தாக இருந்து. ஆற்காடு நவாப்பின் உத்தரவால் சந்தா சாஹிப்பால் வெளிப்புறப் பிரகாரம் இடிக்கப்பட்து. அந்தக் கற்கள் பாளையங்கோட்டையில் கோட்டை கட்டுவதற்காக உபயோகிக்கப்பட்டன.
கோவில் கருவறையில் கருங்கல்லாலான வெங்கடாசலபதி சிலை உள்ளது. ஸ்ரீதேவி பூமாதேவியுடன், நான்கு கரங்களில் இருக்கிறார். இந்த வெங்கடாசலபதி சிற்பம், திருப்பதியைப் போன்றே இருக்கிறது என்றும், ஆனால் அளவில் சிறிது சிறிய மூர்த்தி என்றும் அர்ச்சகர் சொன்னார்.
இந்தக் கோவிலின் மண்டபத்தில் உள்ள சிற்பங்கள் மிகவும் புகழ் வாய்ந்தவை. இங்குள்ள ரதி சிற்பம் மிகவும் புகழ்பெற்றது. ஆனால் இதைப்போன்ற ரதி சிற்பத்தை நான் பல கோவில்களில் கண்டிருக்கிறேன். இருந்தாலும், ஆறு நூற்றாண்டுகளுக்கு முந்தைய இந்தக் கோவில் சிற்பம் சிதைவுறாமலும் அழகாகவும் இருக்கிறது என்பது என் எண்ணம். (அவற்றிலும் சில சிற்பங்களின் வில், விரல் போன்றவை சிதைந்திருக்கின்றன, ஆர்வக்கோளாறு உடைய பார்வையாளர்களால். பிறகு எல்லாவற்றிற்கும் தடுப்புப் போட்டிருக்கிறார்கள்)
இந்தச் சிற்பங்களின் அழகியலை நீங்கள் எல்லோரும் ரசிக்கணும் என்றே நினைக்கிறேன். அதனால் பதிவை இத்துடன் முடித்துக்கொண்டு, அடுத்த வாரம் இரண்டாவது பகுதியில் தொடர்வோம்.
= = = = =
எல்லோருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.
பொங்கும் மங்களம்
தங்குக எங்கும் !!
= =
காலை வணக்கம்.
பதிலளிநீக்குவணக்கம் ஜீவி சார்.
நீக்குஅனைவருக்கும் தமிழர் திருநாளாகிய பொங்கல் நல் வாழ்த்துகள்.
அந்தக் காலத்தில் கிருஷ்ண தேவராயரும் நாயக்க மன்னர்களும் கோயில்களை சீரமைத்து கலைஞர்களுக்கு வாழ்வும் கொடுத்தனர். அவ்வாறு செய்ததால் தான் தமிழ்நாடு இந்தியப் பாரம்பரியத்தின் பொக்கிஷம் ஆகி இருக்கிறது,
பதிலளிநீக்குசிற்பங்கள் அழகு. நுணுக்க வேலைகள் அதிகம். படங்களும் நன்றாக உள்ளன.
Jayakumar
நாயக்க மன்னர்கள் காலத்தில் நிறைய கோவில் திருப்பணிகளில் அழகிய சிற்பங்கள் உருவாக்குவது முக்கியமானதாக இருந்திருக்கிறது.
நீக்குகோவில்கள், கருவறை விமானங்கள் போன்றவை கருங்கல்லினால் ஆனவை.
கர்நாடகாவின் சில பல கோவில்களின் வடிவமைப்புகள், சிற்பங்கள் மிகவும் ஆச்சர்யகரமானவை
தங்களது ஆலய தரிசன விவரங்களும் படங்களும் சிறப்பு. விவரங்கள் அறிந்தேன். நன்றி
பதிலளிநீக்குமிக்க நன்றி ஜீவி சார்
நீக்குஅனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!
பதிலளிநீக்குஇனிய பொங்கல் நல்வாழ்த்துகள் கோமதி அரசு மேடம்.
நீக்குஅன்பின் வணக்கம்
பதிலளிநீக்குஅனைவருக்கும்..
அன்பின்
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்!..
இன்றைக்கு சூடான நெகிழ இருக்கும் சர்க்கரைப் பொங்கல் தயார் செய்யும் நேரத்தில் என் பல கடமைகளை முடிக்க வேண்டும். பார்ப்போம் முடிகிறதா என்று.
நீக்குஆலய தரிசனம் மிக அருமை.அந்தக்கால தீபாவளி மலரில் கிருஷ்ணாபுர சிலைகளின் ஓவியம் இடம்பெறும்.
பதிலளிநீக்குபடங்கள் மிக நன்றாக இருக்கிறதாம்.
அழகு சிலைகளை உடைக்க மனசு எப்படி வருகிறது என்று தெரியவில்லை. பேரூரில் உள்ள சிலைகளுக்கு கம்பி தடுப்பு இன்னும் பாதுகாப்பாக இருக்கிறது. இங்கு பாதி மட்டும் இருக்கிறது, தொடமுடிகிறதே!
இப்போதுமே, தீபாவளி மலர்களில் சில்பி அவர்களின் ஓவியங்கள் இடம்பெறுகின்றன.
நீக்குசிலைகளைத் தட்டினால் டங் என்ற அழகிய ஓசை எழும். இவைகளின் மதிப்புத் தெரியாமல், பல வருடங்களுக்கு முன்பு பார்வையாளர்கள் செய்த வேலை அது.
நான் பள்ளிக்காலத்தில் இருந்தபோது, நண்பர்கள் சைக்கிளில் சென்று கிருஷ்ணாபுரம் கோவில் சிற்பங்களைப் பார்த்திருக்கின்றனல் (70களில்).
புகழ் பெற்ற கிருஷ்ணாபுரம் கோயிலின் அழகிய சிற்பங்களைப் பற்றிய சிறப்பான பதிவு..
பதிலளிநீக்குஉண்மையில் ஞாயிற்றுக் கிழமைகள் அர்த்தமுள்ளதாக ஆகின்றன..
நெல்லை அவர்களுக்கு நன்றி..
நன்றி துரை செல்வராஜு சார். இந்தக் கோவிலைப் போன்ற சிறப்புடைய சிற்பங்களை இன்னும் பல கோவில்களில் கண்டிருக்கிறேன். வாய்ப்பு கிடைத்து புகைப்படங்கள் எடுத்தவை இந்தப் பகுதியில் வரும்.
நீக்குஎன்ன ஒன்று... படங்களைத் தேர்ந்தெடுத்து பதிவு தயார் செய்ய நிறைய நேரம் பிடிக்கிறது.
கோயில் பிரகாரத்தை இடித்தவன் வீரத் தியாகி..
பதிலளிநீக்குநாளைய உலகம் சொல்லும்..
இதைப் பற்றி நிறைய எழுதமுடியும்.
நீக்குஉலகிலேயே Secular பேசும் ஒரே மதம் இந்து மதம்தான். அதனால்தான் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதும், உயர்ந்த அறநெறிகளான, சிறயோரை இகழ்தல் அதனிலும் இலமே போன்றவை இந்து மதம் ஒன்றில்தான் காணக்கிடைக்கும். நன்நெறிகள் பிற மதங்களுக்கு இல்லை.
நல்லதொரு தரிசனம் கிடைத்தது நன்றி.
பதிலளிநீக்குஅனைவரும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். - கில்லர்ஜி
மிக்க நன்றி கில்லர்ஜி... இன்று பொங்கல், எங்கே கொண்டாடுகிறீர்கள்?
நீக்குஇந்தக் கோயில் திராவிட கட்டிடக் கலையின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ளதாக விக்கிப்பீடியாவில் பதியப்பட்டுள்ளது. இது பற்றி விளக்கமாக தங்கள் கருத்தைச் சொல்ல முடியுமா, நெல்லை?
பதிலளிநீக்குதிராவிடக் கட்டடக் கலை என்பதில் பீடம், க்ரீவம் என்று என்னென்னவோ இருக்கிறது. அது பற்றிய தெளிவு எனக்குக் குறைவு.
நீக்குதிராவிட என்பதே, தமிழை மட்டும்தான் குறிக்கிறது என்பது என் அனுமானம். இந்தியாவில் வடமொழியான சமஸ்கிருதம், திராவிட மொழியான தமிழ் ஆகிய இரண்டு மொழிகளே கோலோச்சின. அதனால்தான் வேத்த்தை வடமறை நூல் எனவும், திவ்யப் பிரபந்தங்களை திராவிட வேதம் எனவும் வழங்குகின்றனர். மற்ற எல்லா மொழிகளும், கிளை மொழிகளாக ஜனித்தவையே.
அதனால்தான் திராவிட கட்டிடக் கலை என்ற பெயரே வந்தது.
நன்றி. நெல்லை. தி.க. கலை பற்றி
நீக்குசில குறிப்புகள் கொடுத்து எபியில் ஒரு கட்டுரை எழுதலாம் என்றிருக்கிறேன். அப்பொழுது அது பற்றி நாமெல்லாம் விரிவாக கருத்துக்களை பரிமாறிக் கொள்ளலாம்.
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள்.
அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் திருதாள் நல் வாழ்த்துகள். பொங்கும் மங்கலம் எங்கும் தங்கட்டும். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரிஹரன் மேடம்.
நீக்குஅது சரி... பொங்கும் மங்கலமா இல்லை மங்களமா? உங்கள் கருத்தைப் படிக்கும்போது இந்தச் சந்தேகம் வந்தது. ஹா ஹா ஹா
வணக்கம் நெல்லை தமிழர் சகோதரரே
நீக்குஹா ஹா ஹா. உங்களுக்கு இந்த சந்தேகம் வருமென்று சந்தேகமற எனக்கு தெரிந்ததால்தான் இந்த வரியையும் சேர்த்து எழுதினேன். ஓர் எழுத்து வித்தியாசந்தானே..! எப்படியும் இரண்டும் பொருள் தந்து விடும்.
பொங்கல் சிறப்பாக நடந்ததா? "பால் பொங்கி வயிறு வீங்கியாச்சா?" நம்மூரில் கேட்பது போல் கேட்டிருக்கிறேன். நீங்கள் இந்த பொங்கல் விசாரிப்பான வாக்கியத்தை கேட்டிருக்கிறீர்களோ என்னவோ? நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பால் பொங்கித்தா வயிறு வீங்கித்தா...ஹா ஹா. சிறு வயதில் கேட்டிருக்கிறேன். பொங்கல்லதான் அடுத்த வீட்டுக்குப் போனாலும் நமக்கு பொங்கல்தான் கிடைக்கும்.
நீக்குஹா ஹா ஹா. பொங்கலன்று அடுத்த வீட்டுக்கு போய் வாழ்த்துச் சொல்லி இப்படி விசாரித்தால் அவர்கள் வீட்டிலுள்ள பொங்கல்தான் கிடைக்கும். தீபாவளியன்றாவது வேறு வேறு வகையறா இனிப்பு காரங்களை செய்திருப்பார்கள். அப்போது வீட்டுக்கு வீடு மாறுபடும்.
நீக்குநான் இன்று சர்க்கரைப்பொங்கலுடன்வெண்பொங்கல் உ. வடை, பறங்கி காய் சாம்பாருமாக இறைவனுக்கு நிவேதனமாக செய்திருந்தேன்.
ஆமாம்.. வெல்லம் போட்டு செய்யும் இந்த பொங்கலை ஏன் சர்க்கரைப் பொங்கல் எனச் சொல்கிறோம்? பு. கே. ப. போல உள்ளதா? :))) நன்றி.
நாம photocopy எடுத்துட்டு வா என்று சொல்லாமல், xerox எடுத்துட்டு வா என்றுதானே சொல்கிறோம். Xerox என்பது photocopy methodஐ முதன் முதலில் கண்டுபிடித்து மார்க்கெட் பண்ணின கம்பெனி/பிராண்ட் என்பதை நாம் நினைப்பதில்லை.
நீக்குசர்க்கரைப் பொங்கல், பிறகு ரொம்ப காலம் கழித்து கல்கண்டு பொங்கல் என்று இருவிதம் செய்தார்கள். இலக்கியத்தில் அக்காரம் என்பது வெல்லத்தின் பெயர். கூடாரை பாசுரத்திலும் பால்சோறு என்றுதான் பெயர். ஜீனி என்பது சமீப காலத்தில் வந்த பொருள்தானே.
அது சரி..கேள்விக்கு பதில் கேள்வியாக.... சர்க்கரைப் பொங்கல் என்று சொன்னால் உப்பு பொங்கல் என்று சொல்லாமல் ஏன் வெண்பொங்கல் என்று சொல்கிறோம்? வெண்பொங்கல்னா, கரும்பொங்கல் என்றுதானே கருப்பஞ்சாற்றின் மூலம் வரும் சர்க்கரையை உபயோகித்துச் செய்யும் பொங்கலுக்குப் பெயர் இருக்கணும்?
பரவாயில்லை...இரவு நிம்மதியாக நித்திரை கொள்ளவிடாமல், உங்க மைண்ட் யோசித்துக்கொண்டிருக்கும்படி செய்துவிட்டேன்.
திராவிட கட்டிடக் கலை பற்றி நான் ஆய்வொன்றை மேற்கொண்டிருக்கிறேன். அதற்கு உதவக் கூடும் உங்கள் கருத்துக்கள். அதற்காகவே கேட்டுள்ளேன்.
பதிலளிநீக்குநீங்கள் நெடிய அனுபவம் கொண்டவர். உங்களுக்கு நானென்ன சொல்வது?
நீக்குதமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்
பதிலளிநீக்குவாங்க கரந்தை சார். தமிழர் திருநாள் வாழ்த்துகள்.
நீக்குபடங்கள் அருமை...
பதிலளிநீக்குஇனிய பொங்கல் வாழ்த்துகள்...
நன்றி திண்டுக்கல் தனபாலன். பொங்கல் சாப்பிட்டாயிற்றா?
நீக்குஅழகு சிற்பங்களின் அருமையான படங்கள், போ திருநெல்வேலிக்கு. போய்ப் பாரு.. என விரட்டுகின்றன! ரொம்பநாட்களாக நினைத்துவருகிறேன், திருநெல்வேலிக்கு போகவேண்டுமென்று. இதுவரை வாய்க்காத ஊர்களில் ஒன்று அது!
பதிலளிநீக்கு//..கோயில் முன்பு மூன்று பிராகாரங்களைக் கொண்டதாக இருந்து, ஆற்காடு நவாப்பின் உத்தரவால் சந்தா சாஹிப்பால், வெளிப்புறப் பிரகாரம் இடிக்கப்பட்டது.//
இந்த நவாபுகள் இந்தியாவுக்குக் காலங்காலமாக செய்துவந்திருக்கும் கைங்கர்யங்கள் கொஞ்சநஞ்சமல்ல. இருந்தும், இருக்கின்றன நமது கோவில்கள். தொடர்கிறது வலிமையான பாரம்பர்யம்.
..இதுவும், இப்போது அமர்ந்திருக்கும் லோக்கல் நவாபுகளுக்குத் தலைவலியாகப்போய்விட்டிருக்கிறது. படுத்தால் தூக்கம் வரமாட்டேன் என்கிறது. பாவம்!
//போ திருநெல்வேலிக்கு. போய்ப் பாரு.. என விரட்டுகின்றன! // வாங்க ஏகாந்தன் சார்....திருநெல்வேலியில் இன்னும் பல கோவில்கள், கலைக்கூடங்களாக இருக்கின்றன. அவைகளைப்பற்றியும் தொடர்ந்து எழுதுவேன்.
நீக்குநம்மை மறந்தாலும் நாம் மறக்காத வை.கோபாலகிருஷ்ணன் சார், ஜிஎம்பி சார், முனைவர் ஜம்புலிங்கம் சார், காமாட்சியம்மா, வல்லிம்மா, அதிரடி அதிரா, இனிமை ஏஞ்சலின் போன்ற பலருக்கும் இந்த நாளின் இனிய பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பதிலளிநீக்குஇந்த நாளில் கோவை முனைவர் கந்தசாமி சார், திருநாவுக்கரசு சார் (கோமதி அரசு மேடம் கணவர்), திருச்சி தமிழ் இளங்கோ சார் போன்றோரையும் நினைத்துக்கொள்கிறேன்.
நானும் சேர்ந்துகொள்கிறேன், நெல்லையுடன் வாழ்த்துகளுக்கும், நினைவுகளுக்கும்...சிலருக்குத் தனியா கொடுத்தாச்சு....அவங்களோடு தொடர்பில் இருப்பதால்
நீக்குகீதா
நானும் உங்களுடன் சேர்ந்து கொள்கிறேன்,
நீக்குநெல்லை அவர்களின் வாழ்த்துகளுக்கும், நினைவுகளுக்கும்!...
கிருஷ்ணாபுரம் !!! ஆஹா எத்தனையோ யுகங்களுக்கு!!!!!!! முன் பார்த்த கோயில்! அட்டகாசமான சிற்பங்கள் உங்கள் புகைப்படங்களும் செமையா இருக்கு நெல்லை.
பதிலளிநீக்குரசித்துப் பார்த்தேன். ஆமாம் இப்படி லைட் எல்லாம் இருந்தா வெளிச்சம் ஃபோட்டோல வந்துடும் எரிச்சலா வரும்....
என்றாலும் படங்கள் செமையா இருக்கு...நெல்லை...
சர்க்கரைப் பொங்கலாயிருக்குமே....இங்க கொஞ்சமே கொஞ்சம்...ஸ்டிரிக்ட் டயட்....
தயிர் வடை செய்தேன்....அதுதான் மதியத்துக்கு..ரெண்டே ரெண்டு அளவு எல்லாமே. அப்பாக்கு ரொம்பவே கட்டுப்பாடு...எனக்கும் தான்.
கீதா
நன்றி கீதா ரங்கன்(க்கா ஹாஹா). இந்தத் தடவை வாய்ப்பு கிடைத்தது. வளைத்து வளைத்து புகைப்படங்கள் எடுத்தேன்.
நீக்குதயிர் வடை எனக்குப் பிடிக்கும். டயட்டில் இருப்பதால் 5க்கு மேல் என்னால் சாப்பிடமுடியாது.
கை துரு துருன்னு வருது. கேமராவ கொண்டு தனியா பயணம் போகணும்.....அப்பத்தான் எடுக்க முடியும்....அங்க யாராவது ஏய் ஊய்ன்னு சொன்னாங்கன்னா நைஸா, ஹாங்க் அதெப்படிவே இப்ப கொஞ்ச மாசம் முன்னதான் என் அண்ணன் இந்த ஊர் (நெல்லை) பெயர்க்காரரு வந்து ஃபோட்டோ புடிச்சுட்டு போனாரு....இந்தாரும் ஃபோன் போடட்டான்னு சொல்லி ஃபோட்டோ எடுத்துட்டா போச்சு!!!!!
பதிலளிநீக்குகீதா
நீங்க வேற..எனக்கும் டென்ஷனாத்தான் இருக்கும். போட்டோ எடுக்கக்கூடாதுன்னு ஸ்டிரிக்டா சொல்லுவாங்களோன்னு. அதிசயமா இந்தத் தடவை ஸ்ரீரங்கத்துல, பயங்கர பயங்கரக் கூட்டத்துல மூலவரைச் சேவித்துவிட்டு, வெளியே வந்து போனை எடுத்தால், ஒரு காவலர் வந்து, மூலவரை எங்கானும் வீடியோ எடுத்துட்டீங்களான்னு கேட்டாங்க. நான் சொன்னேன், கர்பக்ரஹத்துல அதன் முன் மண்டபத்துல யாருமே போனை உபயோகிக்ககூடாதுன்னு. ஆமாம் சார் என்று சொல்லிவிட்டுப் போனாள் அந்தப் பெண் காவலர்.
நீக்குஎவ்வளவு உடைச்சிருக்காங்க...ஹூம் எப்படி உடைக்க மனசு வந்ததோ...
பதிலளிநீக்குஇதுல தட்டினா ணங்க் ணங்குனு சத்தம் வரும்...
ஒற்றைக் கல் வாவ்!! என்ன அழகா க்ருங்கல் சிலை வடிச்சிருக்காங்க...பாராட்ட வார்த்தைகளே இல்லை.
நெல்லையப்பர் கோயிலிலும் செமையா இருக்கும் சிற்பங்கள். அது போல மதுரை கோயில்களிலும். சுசீந்திரம் கோயில்....
கலை நயம்!!
கீதா
சுசீந்திரம், திருவண்பரிசாரம், திருவட்டாறு...என்று பல கோவில்கள் (நாஞ்சில்) மலையாள கலாச்சாரம். அதாவது போனை எடுத்து போட்டோ எடுக்க யாருமே விடமாட்டாங்க. அவங்களுக்குத் தெரியாமல் எடுத்தால்தான் உண்டு.
நீக்குஅடுத்தது திருக்குறுங்குடியா இல்லை பத்ரி பயணத்தை அனுப்பலாமான்னு யோசிச்சுக்கிட்டிருக்கேன்.
இதே வேலையா!?..
பதிலளிநீக்கு// பொங்கும் மங்கலமா இல்லை மங்களமா?.. //
மங்களத்திற்கு மங்கலம்!..
மங்கலம் கொண்டாள் மங்களம்!..
/இதே வேலையா!?..
நீக்கு// பொங்கும் மங்கலமா இல்லை மங்களமா?.. //
அதானே..ஹா ஹா ஹா.
"தமிழர் பண்டிகைகளின் போதும் திருமண நிகழ்வுகளின் போதும் மண் கலயத்தை வைத்து வழிபடுவது சிந்து சமவெளி காலம் தொட்டு இன்றும் தொடரும் மரபு, எனவே தான் நல்ல நிகழ்வுகளின் போது மண் கலம் பெருகட்டும் என்று வாழ்த்துவது மரபு, அதுவே பின்பு மண் + கலம் மங்கலம் , பின்பு மங்களம் என்று ஆனதென கூறுகிறார்."
நன்றி விக்கி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அப்போ மங்களம்னு வாழ்த்தினா, மங்களம் என்ற பெயருடைய பெண்ணைத் தேடவேண்டியதுதான் போலிருக்கு.
நீக்குஹா ஹா ஹா.
நீக்குhttps://sivamgss.blogspot.com/2019/02/blog-post_15.html
பதிலளிநீக்குhttps://sivamgss.blogspot.com/2019/02/blog-post_17.html
அவைகளை நான் படித்த நினைவு இருக்கிறது. மீண்டும் சென்று உறுதிப்படுத்திக்கொண்டேன்.
நீக்கு2019 ஆம் ஆண்டில் செப்பறை போயிட்டுக் கிருஷ்ணாபுரமும் போனோம். அப்போப் போட்ட பதிவுகள்.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரி
நீக்குநலமா? இப்போதெல்லாம் உங்களை பார்ப்பதே முன்பு போல் அல்லாமல் அரிதாகி விட்டது. உடல் நலம் பெற்று விட்டீர்களா?
நீங்கள் தந்த சுட்டிகளுக்கு சென்று பதிவை படித்து வந்தேன். அழகான கோவில்கள். நல்ல படங்களுடன் நல்ல தரிசனங்கள். கிருஷ்ணாபுரம் பதிவில் நானும் கருத்துரை தந்துள்ளேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கீசா மேடம். நலமா?
நீக்குஉங்கள் செப்பறை மற்றும் கிருஷ்ணாபுரம் பதிவுகளைப் படித்திருக்கிறேன். இரண்டு இடங்களுக்கும் நானும் சென்றுவந்திருக்கிறேன் (செப்பறையிலும் அதிகமான படங்கள் எடுத்திருக்கிறேன்) வாய்ப்பு வரும்போது எழுதுகிறேன்.
நீங்கள் நிறைய இடங்களுக்குச் சென்றுவந்திருக்கிறீர்கள். அப்போதெல்லாம் கேமராவும் இருந்திருந்தால் நிறைய பதிவுகளில் படங்களுடன் போட்டிருப்பீர்கள்.
வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கோவில் தரிசன பகிர்வு நன்றாக உள்ளது. சிற்பங்கள் ஒவ்வொன்றும் அழகாக உள்ளன. நான் இந்த கோவிலுக்கெல்லாம் போனதில்லை.புரட்டாசி சனிக்கிழமையன்று விஷேடமாக கொண்டாடப்படும் ஒரு பெரிய பெருமாள் கோவிலுக்கு வருடந்தோறும் ஒரு தடவையாவது அக்கம்பக்கத்து உறவுகளுடன் எங்கள் வீட்டிலிருந்தும் அம்மா, பாட்டியுடன் சென்றுள்ளோம். அதன் பெயர் கூட திருநாங்கோவில் என்று வருமென நினைக்கிறேன். அங்குள்ள பெருமாளுக்கும் திருப்பதி கோவிந்தனை போன்று புரட்டாசி சனிதோறும் சிறப்பாக அலங்காரம், வீதி உலா என நடைபெறும். அந்தக் கோவிலைப்பற்றிய வேறு நிகழ்வுகள் மறந்து விட்டது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன். .
திருநாங்கோவில், என் அம்மா வீட்டினருக்கு குலதெய்வம். அதனால் அந்தக் கோவிலுக்கு ஓரிரு முறைகள் சென்றிருக்கிறேன். ஏன் அந்தக் கோவிலுக்கு சமீபத்தைய பயணங்களில் செல்லவில்லை என்று தெரியவில்லை. அடுத்த முறை நிச்சயம் செல்லவேண்டும்.
நீக்குஎன் மாமா பையனுக்கு அங்குதான் காது குத்தினார்கள் என்று நினைவு (மாமா அமெரிக்காவில் அவரது 25வது வயதிலிருந்து வேலை பார்த்தார்). இந்த நிகழ்வு, நான் 7வது படிக்கும்போது நிகழ்ந்திருக்கலாம். பெரியம்மா கொடுத்த சூடான் இட்லி சட்னிதான் எனக்கு நினைவில் இருக்கிறது.
கீதா அக்கா அவர்களுக்கு..
பதிலளிநீக்குதங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..
இந்தத் தடவையில் கீசா மேடம், சாம்பசிவம் சார், மற்றும் அவரது மகன், மருமகள் மற்றும் கு.கு வைப் பார்த்துப் பேசும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. கீசா மேடம் கொஞ்சம் சோர்வுற்று இருந்தார் என்று தோன்றியது. விரைவில் வலிமையுடன் இணையத்தைக் கலக்கணும் என்று நினைத்துக்கொள்கிறேன்.
நீக்குஅனைவருக்கும் தைப்பொங்கல் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஎத்தனை விதமான சிற்பங்கள் காண கிடைத்தன.நன்றி.
மிக்க நன்றி மாதேவி. உங்களுக்கும் தைப்பொங்கல் வாழ்த்துகள்
நீக்குஎங்கள் ப்ளாகினர் அனைவருக்கும் இனிய பொங்கல் பண்டிகை நல்வாழ்த்துகள். துன்பங்கள் விலகி, இன்பம் பொங்கட்டும் எங்கும்!
பதிலளிநீக்குதகவல்களுடன் படங்கள் அருமை. சில முறைகள் சென்றுள்ளேன். சிற்பங்களில் நகைக்கணுக்கள் கூட நுணுக்கமாக செதுக்கப்பட்டிருக்கும். இங்குள்ள யுதிஷ்டிரர், பீமன் மற்றும் அர்ஜுனர் சிலைகள் அதே உயரத்தில், கலைநயத்தில் நெல்லையப்பர் கோவில் வெளிச் சுற்றுப் பிரகாரத்தில் காணக் கிடைக்கின்றன. நிறம் மட்டும் வேறு. இங்கே கருங்கல்லில் உள்ளன. அங்கே சாம்பல் நிறத்தில் இருக்கும். கிருஷ்ணாபுரத்துக்கு சில ஆண்டுகள் முன்பு சென்றிருந்த போது படங்கள் எடுக்க விடாமல் நிறைய கெடுபிடிகள் இருந்தன. இப்போது எப்படி? அனுமதி என வழங்காவிட்டாலும் கண்டு கொள்ளாமல் இருந்தால் நமக்கு அதிர்ஷ்டம் :).
பதிலளிநீக்குவாங்க ராமலக்ஷ்மி மேடம். மூன்று பகுதிகளாக சிற்பத் தொகுதிகள் வர இருக்கின்றன
நீக்கு*நகக்கணுக்கள்
நீக்குமகிழ்ச்சி. காணக் காத்திருக்கிறேன்.
நீக்கு