சம்பா பச்சரிசி (சிவப்பு அரிசி) நீர் தோசை (JK )
எளிய முறையில் செய்யக்கூடிய ஒரு டிபன் ஐட்டம் தான் நீர் தோசை. இதற்கு வேண்டிய பொருட்கள் இரண்டே. பச்சரிசி, தேங்காய். ஓணத்திற்கு இங்கு அரசால் கொடுக்கப்பட்ட ரேஷன் சிவப்பு பச்சரிசி இருந்தது. அதை முதல் நாள் இரவே ஊற வைத்துவிட்டேன்.
அடுத்த நாள்
காலை இரண்டையும் மிக்சியில்
நன்றாக அரைத்து உப்பு சேர்த்து கொள்ளவும்.
மாவு ரவா
தோசைக்கு உள்ளது போல் கொஞ்சம் நீர்க்கவே இருக்கட்டும். ரவா தோசை
சுடுவது போல் மெல்லிசாக ஊற்றி எடுக்கவும். ஓரங்கள் முருகலாவும் நடுவில் மெத்தெனவும் இருக்கும்.
இதற்கு தொட்டுக்கொள்ள
கார சட்னி.
பெங்களூரில் பல ரெஸ்டாரன்டுகளில் நீர் தோசை கிடைக்கிறது (50ரூ). இதற்கு தேங்காய் வெல்லக் கலவை தொட்டுக்கொள்ளக் கொடுக்கிறார்கள்.
பதிலளிநீக்குகாரச் சட்டினியும் நன்றாக இருக்கும். தோசை முழுவதுமாக சாஃப்ட்டா இருக்கும்.
50 ரூ வாயா? 3,4 இருக்குமோ? ரொம்ப மெலிசாகத்தானே இருக்கும் அதான் கேட்கிறேன்...
நீக்குகீதா
1 தோசைதான். நல்ல பெருசா இருக்கும். மனைவிக்கு வாங்கித்தந்தேன். நான் சாப்பிட்டுப் பார்க்கலை.
நீக்கு50 ரூபாய்க்கு 3,4 தோசையாம். நல்ல ஆசைதான். இவங்களை தினம் காலை உணவுக்கு சரவண பவனுக்குத்தான் அனுப்பணும். அவன் 1 அடி தோசை 130 ரூபாய்னு கூசாமல் சொல்லுவான்
நல்ல ரெசிப்பி, ஜெ கே அண்ணா.
பதிலளிநீக்குநல்லா வந்திருக்கு.
கீதா
நீர் தோசைக்குத் தேங்காய் சேர்ப்பதில்லை. மங்களூர் உடுப்பி கர்நாடகாவில். வெறும் பச்சரிசிதான். தொட்டுக் கொள்ள தேங்காய் வெல்லம் கொடுப்பதுண்டு.
பதிலளிநீக்குஇந்தச் செய்முறை தேங்காய் தோசைன்னு நம்ம வீட்டில் சொல்வதுண்டு.
இந்தத் தேங்காய்த் தோசையிலேயே அரைத்து முடித்து கழுவி எடுக்கும் தண்ணீருடன் ஒரு ஸ்பூன் அரைத்த மாவைச் சேர்த்து கூழ் போன்று காய்ச்சி மாவுடன் சேர்த்துச் செய்வது களிக்கஞ்சி தோசை என்று நம்ம வீட்டில் சொல்வதுண்டு.
இந்த மாவையே புளிக்க வைத்துச் செஞ்சா ஆப்பம்!!!!!!!!!!!!!!!!!!!
இப்படிச் சின்ன சின்ன வித்தியாசங்களில் இரட்டையர், மூவர் போன்று ஒவ்வொரு பெயருடன் ஒரு ரெசிப்பி!!!!!
கீதா
காரச் சட்னி நன்றாக இருக்கும்.
பதிலளிநீக்குதேங்காய்ச் சட்னியும்....
இதே ரெசிப்பியில் வெள்ளரிக்காய் சேர்த்து அரைத்துச் செஞ்சா வெள்ளரிக்காய் தோசை, உடுப்பி மங்களூர்ப் பகுதியில் கோவாவில், கேரளா காசரகோட்டில் - துளு பேசும் மக்கள் கூடச் செய்வது....
இங்கு கூட ஒரு திங்கவில் பகிர்ந்த நினைவு....
கீதா
செய்முறை சுலபமாக இருக்கும் போல்...
பதிலளிநீக்குஅருமை... மிகவும் பிடித்த தோசை...
பதிலளிநீக்குஇந்த நாள் இனிய நாள்..
பதிலளிநீக்குஎல்லாருக்கும் இறைவன் அருளட்டும்..
நலம் வாழ்க..
இன்றைய உடல் நிலைக்கு இந்த மாதிரி எல்லாம் எடுபடாது..
பதிலளிநீக்குஇளந்தோசை இருந்தால்!..
காரச்சட்னி கூடவே கூடாது!..
நீக்குநாஞ்சில் நாடின் பக்குவமா?..
பதிலளிநீக்குஅருமை!..
நன்று.இலகுவான செய்முறை.
பதிலளிநீக்குநாங்கள் இதற்குள் தேங்காய் சீனி வைத்து உருட்டி செய்வோம்.
இதை மைதாவிலும் செய்வோம். உருளை காரக்கறியும், பச்சை மிளகாய் சட்னியும் காரப் பிரியர்களுக்கு நன்றாக இருக்கும் .
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான வணக்கங்கள். இனிய உழவர் திருநாள் வாழ்த்துகள்.
இன்றைய "திங்க"ப்பதிவு நீர் தோசை படங்களுடன் செய்முறை விளக்கமும் நன்றாக உள்ளது. தேங்காய் சேர்வதால் தோசை மெல்லிசாக மிருதுவாக வரும். தோசைக்கு தொட்டுக் கொள்ள என்ன இருந்தாலும், ஒத்து வரும். காரசட்னி என்றால் வெங்காயம் தக்காளி சேர்த்தா? இரண்டுமே நன்றாக உள்ளது.
இதை இங்கு அழகாக செய்து படங்களுடன் பகிர்ந்த சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. பகிர்வுக்கு உங்களுக்கும் நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கீதா ரங்கன் அவர்கள் ரெசிபியின் ரகசியத்தை சொல்லிவிட்டார். புளிக்காத ஆப்பமாவில் தோசை.
பதிலளிநீக்குJayakumar
http://sivamgss.blogspot.com/2015/05/blog-post_17.html இந்த தோசையைச் சாதாரணப் பச்சரிசியிலேயும் பண்ணலாம். இட்லிக்கு அரைந்து மிஞ்சிப் போகும் மாவுடன் கொஞ்சம் பச்சரிசி+தேங்காய்த் துருவல் சேர்த்துக் கொண்டு நன்கு அரைத்துக் கலந்து நீர்க்கக் கரைத்தும் இப்படி தோசை வார்க்கலாம். மாவு மிஞ்சுவதைப் பொறுத்து நீர் தோசை அல்லது ரவா இட்லி என மாற்றி விடுவேன். :))))) இதுக்குனு தனியாவும் அரைச்சுப் பண்ணலாம். அதை மேற்கண்ட சுட்டியில் பார்க்கலாம்.
பதிலளிநீக்குஇப்போல்லாம் பதிவுக்கு கருத்துகள்லாம் கீசா மேடம் எழுதறதில்லை. போற போக்கைப் பார்த்தால், பதிவில் தன் போன் நம்பர் தந்து, தன் கருத்தை போன் செய்து கேட்டுக்கொள்ளவும்னு சொன்னாலும் சொல்லிடுவாங்க போலிருக்கு
நீக்குஐயோ வட போச்சு. கீதா சாம்பசிவம் மேடம் அப்பவே (2015இல்) 'சுட்டுட்டாங்க'
நீக்குJayakumar
மிக அருமையான தோசை. சூடாக செய்து உடனே சாப்பிட வேண்டும் சிவப்பு அரிசியில் என்றால் மேலும் சுவை.
பதிலளிநீக்குபடங்களுடன் செய்முறை அருமை.