வெள்ளி, 13 ஜூலை, 2018

வெள்ளி வீடியோ 180713 : நாணத்திலே முந் தானை நனைந்தது நாயகனை எண்ணி எண்ணி


உரிமை கீதம்.  1988 இல் வெளிவந்த படம்.  இயக்குனராக ஆர் வி உதயகுமாரின் முதல் படம். 

இந்தப் படத்துக்கு இசை மனோஜ் கியான்.  பாடல்களை ஆர் வி உதயகுமாரே எழுதி விடுவார்!  



மனோஜ் கியான் என்பது இரட்டையர்கள்.  மனோஜ் சரண் பட்நாகர், மற்றும் கியான் வர்மா.  முறையே உ.பி,   பஞ்சாபைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் தமிழில் ஊமை விழிகள், செந்தூரப் பூவே, இணைந்த கைகள் போன்ற திரைப்படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார்கள்.

ஊமை விழிகள் படத்தில் வரும் பி பி ஸ்ரீனிவாஸ் பாடிய 'தோல்வி நிலையென நினைத்தால்' பாடல் செம ஹிட்.  அதே போல இணைந்த கைகள் படத்தில் வரும் எஸ் பி பி - ஜெயச்சந்திரன் முதல் முறை இணைந்து பாடிய "அந்தி நேரத் தென்றல் காற்று".    செந்தூரப் பூவே படத்தின் டைட்டில் பாடலும் நன்றாக இருக்கும். (இணைந்த கைகள் கியான் வர்மா மட்டும் இசை அமைத்தது என்கிறது விக்கி)

80 களில் இணைந்திருந்த இவர்கள் 89 வாக்கில் பிரிந்து விட்டார்களாம்.  மனோஜ் மட்டும் பின்னாளில் விஜய் நடித்த 'என்றென்றும் காதல்' படத்துக்கும், பிரசாந்த் நடித்த 'குட்லக்' உட்பட சில படங்களுக்கு இசை அமைத்திருக்கிறாராம்.



இன்றைய பாடல் "மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம்...  எஸ் பி பியும் ....  உடன் பாடி இருப்பது சுனந்தா என்று நினைக்கிறேன்.  சரியாகத் தெரியவில்லை.  

இந்த இடத்தில் சுசீலாம்மா, ஜானகியம்மா எல்லாம் நினைவுக்கு வருகிறார்கள்.  பாடல் வரிகளைத் தெளிவாக உச்சரித்துப் பாடுவார்கள்.  இதில் பாடி இருக்கும் பெண் குரல் மேல் (Male அல்ல!) ஸ்தாயியில் பாடும்போது கீச்சிட்டு என்ன வரி சொல்கிறார் என்பதே புரியாமல் கடுப்பேற்றினார்.  குறிப்பாக இரண்டாவது சரணத்தில் மோகத்திலே நேசம் துடித்ததா, பேசத் துடித்ததா...  

இந்த வரியும் அதைத் தொடரும் வரியும்..



ஆயினும் மனதை மயக்கும் டியூனும், குரலும் (நான் எஸ் பி பியைச் சொல்கிறேன்!) பாடலுக்கு மெருகூட்டுகின்றன.



 காட்சியில் சற்றே ஒல்லியான பிரபுவும் ரஞ்சனியும்!



மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம்...  அதைச் 
சொல்லக் சொல்ல நெஞ்சில் எழுந்தது கீதம் 

கன்னங்கரு விழிகள் பேசும் 
புத்தம் புது மொழிகள் 

கன்னங்கரு விழிகள் பேசும் 
புத்தம் புது மொழிகள் - கோடி 


சின்ன இடையினில் மின்னலென ஒரு கோடு-  போடும் 
அதைக் கண்டதும் மேகங்கள் மந்திரப்பூமழை  தூவும் - தூவும் 

நாணத்திலே முந்தானை நனைந்தது நாயகனை எண்ணி எண்ணி  
கன்னியிவள் தேகம் சிவந்தது கைவிரல்கள் பின்னிப்பின்னி 

வஞ்சியின் அழகைச் சொல்லச் சொல்ல இங்கு 
செந்தமிழும் கொஞ்சம் சிந்தித்தது 


கன்னி  முகம் புது வண்ண மலர்களின் தோட்டம் - தோட்டம் 
அங்கு கட்டளைக்கு வந்து வட்டமிடும் வண்டுக் கூட்டம் 

மோகத்திலே நேசம் துடித்தது மாலையிடும் நாளை எண்ணி 
பூவிதழோ தந்தியடித்தது புன்னகையில் தேனெழுதி.

பேச மொழியில்லை வார்த்தை வரவில்லை 
இன்பத்திலே மனம் தித்தித்தது..


65 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, கீதாக்கா, பானுக்கா எல்லோருக்கும் பாடலுடன் அழகாக மலர்ந்திருக்கிறது வெள்ளி! புதியநாள்.!!
    பிறரை மாற்ற புத்தி சொல்லும் மனிதன் தன்னை மாற்றிக் கொள்ள நினைப்பதே இல்லை
    கீதா

    பதிலளிநீக்கு
  2. அன்பின் ஸ்ரீராம் கீ/ கீ மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
  3. இனிய காலை வணக்கம் மெசேஜ் கீதா!

    பதிலளிநீக்கு
  4. இனிய காலை வணக்கம் கீதா அக்கா.. உடல்நலம் சீராகி விட்டதா?

    பதிலளிநீக்கு
  5. இந்தப் படமும் இப்பத்தான் அறிகிறேன். இசையமைப்பாளர் பற்றியும் இப்பத்தான் தெரிஞ்சுக்கறேன்...உங்க வெள்ளி பதிவுகள் தான் சிகே எனக்கு...

    ஊமை விழிகள் படம் தெரியும். பார்த்ததில்லை. அந்தப் பாடலினால் தெரியும் //'தோல்வி நிலையென நினைத்தால்' பாடல் செம ஹிட். // செம பாட்டு ஸ்ரீராம்....நல்ல வரிகள் உத்வேகமான பாட்டு!

    இணைந்த கைகள் படம் பெயர் தெரியும்...

    கீதா

    பதிலளிநீக்கு
  6. மெசேஜ் கீதா!//

    ஹா அஹ ஹா ஹாஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  7. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்... நேற்றிரவு உங்கள் பிரார்த்தனை கண்டு நெகிழ்ச்சியுற்றேன்.

    கீதாக்கா(வும்) எனக்கும் என்னுடைய பிரச்னைகளுக்கு சில தேவாரப் பாடல்கள் தினசரி பாராயணம் செய்யச் சிபாரிசு செய்திருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  8. கீ/ கீ//

    ஹா ஹா ஹா ஹா ஹா சிரிச்சுட்டேன் துரை அண்ணா...

    கீதா

    பதிலளிநீக்கு
  9. // .உங்க வெள்ளி பதிவுகள் தான் சிகே எனக்கு..//

    சிகே? சினிமா.......? யோசித்துக் கொண்டிருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  10. // இணைந்த கைகள் படம் பெயர் தெரியும்..//

    படம் தெரியும் சரி, அந்தப்பாட்டு கேட்டிருக்கிறீர்களா? ஆரம்ப இசையே மிகவும் கவர்ந்து விடும் (அந்தி நேரத் தென்றல் காற்று...)

    பதிலளிநீக்கு
  11. ஸ்ரீராம் தஞ்சையில், நேற்றைய எபி முத்த மழையின் தொடர்ச்சி உங்களுக்குக் கேட்டுருக்குமே!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  12. // ஸ்ரீராம் தஞ்சையில், நேற்றைய எபி முத்த மழையின் தொடர்ச்சி உங்களுக்குக் கேட்டுருக்குமே!!!/

    இப்போதான் மிச்சம் மீதி இருப்பது கேட்கிறது..! நானா நேற்று மதியத்துக்குப்பின் இப்போதான் இணையத்துக்கு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  13. நேற்றைய முத்தத்தின் சத்தம்
    இன்னிக்கு நம்ம தளத்தில்
    எதிரொலிக்குதே - கேக்கலையா!?....

    பதிலளிநீக்கு
  14. படம் தெரியும் சரி, அந்தப்பாட்டு கேட்டிருக்கிறீர்களா? ஆரம்ப இசையே மிகவும் கவர்ந்து விடும் (அந்தி நேரத் தென்றல் காற்று...)//

    டக்குனு வரிகள் நினைவில் இல்லாததால் மெட்டு னினைவுக்கு வரலை...இப்ப கேட்டுட்டு வரேன் செம பாட்டு ஸ்ரீராம்....நினைவுக்கு வந்துருச்சு...

    கீதா

    பதிலளிநீக்கு
  15. // நேற்றைய முத்தத்தின் சத்தம்
    இன்னிக்கு நம்ம தளத்தில்
    எதிரொலிக்குதே - கேக்கலையா!?.... //

    இதோ வருகிறேன் ஸார்... காலை எழுந்து பார்த்தால் ஜீவி ஸார் வேற பீதியைக் கிளப்பிட்டுப் போயிருக்கார். முகம் தவிர கைகளிலும் முத்தம் கொடுக்கலாம் என்று உங்களுக்குத் தெரியாதாக்கும்!!!!!!!

    பதிலளிநீக்கு
  16. //இப்ப கேட்டுட்டு வரேன் செம பாட்டு ஸ்ரீராம்....நினைவுக்கு வந்துருச்சு...//

    அதற்குள் போய் கேட்டு விட்டு வந்து விட்டீர்களா!! அட.. நானும் ஒரு தாட்டி கேட்கிறேன்!!

    பதிலளிநீக்கு
  17. பாடல் கேட்டேன் ஸ்ரீராம்....ப்ரீலூடே நன்றாக இருக்கிறது...மெட்டும் நன்றாக இருக்கிறது. ப்ரீலூட் வேறு ஏதோ ஒரு பாடலையும் நினைவு படுத்துகிறது. சட்டென்று தெரியவில்லை....பாடல்கள் அடிக்கடிக் கேட்காததால்..வரிகள் எதுவும் நினைவில் இருப்பதில்லை.....பார்க்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  18. அதற்குள் போய் கேட்டு விட்டு வந்து விட்டீர்களா!! அட.. நானும் ஒரு தாட்டி கேட்கிறேன்!!//

    பாட்டு ஓடும் பின்னணியில்..அப்படியே தஞ்சையில் முத்தக்கவிதை மழையை ரசித்தேன்.....கூடவே அடுத்தாபுல திருப்பதி ஸ்லோகமும் ஓடுகிறது...ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  19. ஓ ஜீவி அண்ணாவும் பதிவு போட்டுருக்காரா....

    பார்க்கிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  20. எல்லோருக்கும் காலை வணக்கம். நான் மறந்து விட்டேன். தளமும் திறக்காமல் படுத்தல். பின்னர் வருகிறேன்

    பதிலளிநீக்கு
  21. // பாடல் கேட்டேன் ஸ்ரீராம்....ப்ரீலூடே நன்றாக இருக்கிறது...மெட்டும் நன்றாக இருக்கிறது. ப்ரீலூட் வேறு ஏதோ ஒரு பாடலையும் நினைவு படுத்துகிறது.//

    நீங்கள் இன்றைய பாடலைத்தான் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அந்தி நேரத் தென்றல் காற்று இல்லையே...!!

    // ஓ ஜீவி அண்ணாவும் பதிவு போட்டுருக்காரா....//

    நோ... அவர் கமெண்ட் நேற்றைய வியாழப்பகிர்வில்!

    பதிலளிநீக்கு
  22. இனிய காலை வணக்கம் பானு அக்கா.

    பதிலளிநீக்கு
  23. அந்தி நேரத் தென்றல் காற்று மிக மிகப் பிடித்தது ஸ்ரீராம். மனோஜ் க்யான் பற்றி இப்போதுதான்
    தெரியும். ரயில் போகும் ஒலியும்,அருண் பாண்டியன்,அந்த இன்னோரு நடிகர் பெயர் மறந்துவிட்டது
    முக பாவங்கள் மிக நன்றாக இருக்கும்.
    இந்தப் பாடலை. இப்போதுதான் கேட்கிறேன்.
    இனிமையாக இருக்கிறது.
    எங்கிருந்துதான் தேடிப் பிடிப்பீர்களோ.

    பதிலளிநீக்கு

  24. நன்றி வல்லிம்மா... அருண் பாண்டியனை நினைவு வைத்திருக்கிறீர்கள்... ராம்கியை மறந்து விட்டீர்களே!!! எனக்கு மி....க.....வு.....ம் பிடித்த பாடல் அது!

    இந்தப் பாடலும் பிடிக்கும். எஸ் பி பி யின் குரல் குழைவு... ஆஹா...

    நன்றி வல்லிம்மா...

    பதிலளிநீக்கு
  25. இந்த பாடல் கேட்டு இருக்கிறேன்.

    ஆர்.வி.உதயகுமார் தானே எல்லா பாடலும் எழுதிக்கொள்வார். பிற பாடலாசியர்களை நம்ம மாட்டார்.

    காரணம் அவர்களைவிட இவர் ரசனையானவரே...

    பதிலளிநீக்கு
  26. ஆமாம் கில்லர்ஜி... அவர் பாடல்களும் நன்றாகவே இருக்கும். தன் எண்ணங்களை பிறரிடம் சொல்லி பாடல் எழுதி வாங்குவதைவிட, தானே எழுத்தில் கொண்டு வந்து விடுவது எளிது போலும்! எஜமான் படத்திலும் பாடல்கள் எழுதி இருப்பார்.

    பதிலளிநீக்கு
  27. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்.

    மனோஜ் கியான் படம் சந்திர போஸ் மாதிரி இருந்தது.

    பாடல் கேட்டு இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  28. நீங்கள் இன்றைய பாடலைத்தான் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அந்தி நேரத் தென்றல் காற்று இல்லையே...!!// ஆஆம் இன்றைய பாடலைத்தான் சொல்றேன்.....அ நே தெ கா இல்லை...

    ஜீவி அண்ணாவின் கமென்ட் பார்க்கிறேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  29. ஆர் வி உதயகுமார் பாடல்களை அவரே எழுதுவார் என்பது எங்கோ எப்போதோ வாசித்த நினைவுண்டு. ஆனால் என்ன பாடல்கள் அவர் எழுதியவை வரிகள் எதுவும் தெரிந்ததில்லை. இப்பத்தான் உங்கள் பதிவின் மூலம் வாசிக்கிறேன். வரிகள் ரொம்பவே அழகா இருக்கு ஸ்ரீராம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  30. ரஞ்சனி அதுக்கு அப்புறம் என்ன ஆனாங்க..ந்னு தெரியலை...

    ஆனாலும் அந்தப் பாடல்...

    // தோல்வி நிலையென நினைத்து..//
    மனதில் உத்வேகத்தை எழுப்பும்...

    சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் இரண்டு தரம் பார்த்த படம்...

    அந்தக் கிழவியம்மா, ஸ்ரீ வித்யா, சரிதா தவிர மற்ற பெண்கள் அனைவருக்கும் உடை தாராளம்...

    பதிலளிநீக்கு
  31. // ஆர் வி உதயகுமார் பாடல்களை அவரே எழுதுவார் என்பது எங்கோ எப்போதோ வாசித்த நினைவுண்டு. ஆனால் என்ன பாடல்கள் அவர் எழுதியவை வரிகள் எதுவும் தெரிந்ததில்லை. இப்பத்தான் உங்கள் பதிவின் மூலம் வாசிக்கிறேன். வரிகள் ரொம்பவே அழகா இருக்கு ஸ்ரீராம். //

    அதனால்தான் அவ்வப்போது சில விவரங்களைத் தேடி எடுத்து இதனுடன் இணைத்து விடுகிறேன் கீதா.. எடுக்கும்போது சில விவரங்கள் எனக்குமே புதுசாக இருக்கும். உதாரணமாக மனோஜ் கியான் இரட்டையர் பற்றிய விவரங்கள்!

    பதிலளிநீக்கு
  32. ஊமை விழிகள் படத்தை நான் மதுரையில் பார்த்தேன் துரை செல்வராஜூ ஸார்...என்ன தியேட்டர் என்று நினைவில்லை!

    // மற்ற பெண்கள் அனைவருக்கும் உடை தாராளம்... /

    "ராத்திரி நேரத்து பூஜையில்..."

    "நிலைமாறும் உலகில்" பாடலும் ஒரு நல்ல பாடல் அந்தப் படத்தில்.

    பதிலளிநீக்கு
  33. ஊமை விழிகள் படத்தில் நடிக்கும்போது அருண்பாண்டியனுக்கு மனதுக்குள் தான் தென்னகத்து அமிதாப்பாக வருவோம் என்ற நினைப்பு இருந்திருக்கும். அவர் முடியலங்காரம், ஸ்டைல், ஷோலே ஸ்டைலில் மவுத் ஆர்கன் வாசிப்பது...உயரம்... அமிதாப் அப்போது வடநாட்டில் உச்சநட்சத்திரம்.

    பதிலளிநீக்கு
  34. தோல்வி நிலையென நினைத்தால் என்னும் பாடல் எனக்குப் பிடித்தது

    பதிலளிநீக்கு
  35. காலை வணக்கம் 🙏.

    சொன்ன பாடல்கள் எனக்கும் பிடித்தவை.

    பதிலளிநீக்கு
  36. ஜீவி ஸார் வேற பீதியைக் கிளப்பிட்டுப் போயிருக்கார். முகம் தவிர கைகளிலும் முத்தம் கொடுக்கலாம் என்று//

    ஆம் பார்த்தேன் ஸ்ரீராம் அதுவும் ஜீவி அண்ணா சின்னக்குழந்தைகள்னு வேற சொல்லிருக்கார்.....ஆ! நேக்குப் புரியலை கேட்டேளா...ஜீவி அண்ணாதான் விளக்கம் சொல்லணும்...ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  37. ரசனையான பாடல் அருமையான வர்ணனைகளுடன். ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  38. @ கீதா: .. சின்னக்குழந்தைகள்னு வேற சொல்லிருக்கார்.....ஆ! நேக்குப் புரியலை கேட்டேளா...//
    & @ ஸ்ரீராம்:

    ஆர்.வி.உதயகுமார்னு ஒரு - இயக்குனர், பாடலாசிரியர்? தமிழ் சினிமாவில் எதுவும் சாத்தியம். அவரது பாடல்வரிகளை(!) ஆஹா..ஓஹோ என்று இங்கே மெச்சி மகிழ்வதும் மேல்சொன்ன ரகம்தான்!

    மெல்ல ‘சின்னக்குழந்தைகள் ப்ளாக்’ என்று பெயர் மாற்றிவிடுங்கள்!

    பதிலளிநீக்கு
  39. ஊமை விழிகள் படத்தை கேகே நகர் உதயம் தியேட்டரில் பார்த்தேன். எங்க அப்பாவிடம் படம் போகணும்னு சொல்லி நான் காசு வாங்கிப் பார்த்த முதல் படம். இது பெற்ற வெற்றியைப் பார்த்து ஆபாவாணன் பிறகு 'இணைந்த கைகள்' தயாரித்து கையைச் சுட்டுக்கொண்டார். ஊமை விழிகளில் எல்லாப் பாடல்களும் மிக நன்றாக இருக்கும். கிளைமாக்ஸ் தவிர படம் முழுவதும் நல்லா இருக்கும். பொதுவா மர்மப் படங்கள்ல/திகில் படங்கள்ல கிளைமாக்ஸ் சொதப்பும் என்பதற்கு இந்தப் படமும் உதாரணம்.

    உரிமை கீதம் படம் நான் பார்த்ததில்லை. இந்தப் பாட்டும் கேட்டதில்லை.

    @கீதா ரங்கன் - //பிறரை மாற்ற புத்தி சொல்லும் மனிதன் தன்னை மாற்றிக் கொள்ள நினைப்பதே இல்லை// - வாத்தியார், பிள்ளைகளுக்கு அறிவுரை சொல்லுவார், வாழ்க்கையில் முன்னேற ஐடியா கொடுப்பார். அதை அவர் உபயோகப்படுத்தி முன்னேறவில்லையே என்று கேட்டால் என்ன சொல்றது? விளக்கு மற்ற இடங்களில் வெளிச்சமிட்டுக் காட்டும். தன்னை வெளிச்சமிட்டுக்கொள்ளாது (இன்னும் appropriate உதாரணம் மனசுல இருக்கு, வரலை)

    பதிலளிநீக்கு
  40. ஊமைவிழிகள்ல எல்லாப் பாட்டும் நல்லா இருக்கும். கண்மணி நில்லு, நிலைமாறும் உலகில், மாமரத்துப் பூ பாடல்களும் நல்லா இருக்கும். என்ன ஒண்ணு, ஸ்ரீராம், வெற்றிபெற்ற பாடல்களைப் போடமாட்டார்.....

    அருண்பாண்டியன் - நல்லா நடிக்கமாட்டார், மெஜஸ்டிக்கா இருந்தாலும்.

    பதிலளிநீக்கு
  41. வாங்க ஜி எம் பி ஸார்.. முதல் முறை ஒரு பாடலைப் பற்றிக் குறிப்பிட்டு தெரியும் என்ற அளவில் சொல்லி இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  42. நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஸார்.

    பதிலளிநீக்கு
  43. வாங்க ஏகாந்தன் ஸார்..

    // பாடல்வரிகளை(!) ஆஹா..ஓஹோ என்று இங்கே மெச்சி மகிழ்வதும் மேல்சொன்ன ரகம்தான்! //

    ஒப்பீட்டளவில் ஓகே என்றுதான் தோன்றுகிறது! இல்லையா?!!

    // மெல்ல ‘சின்னக்குழந்தைகள் ப்ளாக்’ என்று பெயர் மாற்றிவிடுங்கள்! /

    ஹிஹிஹி...

    பதிலளிநீக்கு
  44. வாங்க நெல்லைத்தமிழன்..

    உங்கள் ஐடியை நெ த என்பதிலிருந்து முழுசாக நெல்லைத்தமிழன் என்று எப்போது மாற்றப்போகிறீர்கள்? அவசரத்துக்கு ஒரு புது ஐடி உண்டாக்கினீர்கள் என்று நினைத்தேன். அப்புறம் முழுசாக மாற்றிக் கொள்வீர்கள் என்று பார்த்தேன்.

    .// பொதுவா மர்மப் படங்கள்ல/திகில் படங்கள்ல கிளைமாக்ஸ் சொதப்பும் என்பதற்கு இந்தப் படமும் உதாரணம்.//

    எப்படி முடிவு வைத்தாலும் எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது என்று தோன்றுகிறது. இன்றைய ஹிந்து தமிழில் கிளைமேக்ஸ் காட்சிகள் பற்றிய ஒரு கட்டுரை படித்தேன். சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
  45. நெல்லைத்தமிழன்..

    // என்ன ஒண்ணு, ஸ்ரீராம், வெற்றிபெற்ற பாடல்களைப் போடமாட்டார்.....//

    இதெல்லாம்தான் உங்களுக்கே தெரியும், நீங்கள் கேட்டிருப்பீர்கள்... இப்படிப் போட்டால்தானே இவற்றையெல்லாம் நினைவு "படுத்தலாம்"?!!

    பதிலளிநீக்கு
  46. நன்றி திண்டுக்கல் தனபாலன். ஒரு பதிவு எழுதிக்கொண்டு இருப்பதாக ஜி எம் பி ஸார் பதிவில் சொல்லி இருக்கிறீர்கள். காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  47. ////
    எப்படி முடிவு வைத்தாலும் எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது என்று தோன்றுகிறது. ///

    ஶ்ரீராம்.... எல்லோரையும் திருப்திப் படுத்தியே அடுத்தபடி ஏற வேண்டும் என நினைச்சால், வாழ்க்கையில் யாரும் முன்னேறவே முடியாது.

    பதிலளிநீக்கு
  48. @ தெரிந்திருந்தால் தெரியும் என்கிறேன் அவ்வளவுதான்

    பதிலளிநீக்கு
  49. ஏகாந்தன் சின்னக் குழந்தைகள் னு சொல்லி இருக்கார். எங்க குட்டிக் குஞ்சுலுவுக்கு ஹனுமான் சாலீஸாவும், பிபரே ராமரஸமும், சஷ்டி கவசமும் தான் பிடிக்கிறது. சஷ்டி கவசம்போடும்போது முருகனைப் பார்த்துக் கொண்டு கூப்பிய கைகளோடு நின்னுண்டு இருக்கும். :)))))அதனாலே இதைச் சின்னக் குழந்தைகள் ப்ளாக்னு சொல்வதைக் கன்னா&பின்னாவெனக் கண்டிக்கிறேன். :)))))

    பதிலளிநீக்கு
  50. காலம்பரத்திலே இருந்து மின் விநியோகம் இல்லை. இப்போ 3-30க்குத் தான் வந்தது. ஊமை விழிகள் படத்தைப் பத்துத் தரம் பார்க்க முயன்று ஒரு சில காட்சிகளுக்கு மேல் பார்க்கவே முடியாமல் போனது! மற்றபடி பாடல்கள் எல்லாம் அப்போவே தமிழ்நாட்டின் தேசிய கீதமாக ஒலிபரப்பாகும்! ஆர்.வி. உதய்குமார் பொதுவாகக் குடும்பப் படங்கள் தானே எடுப்பார்? அருண் பாண்டியன், எஸ்.வி.சேகர் அப்பாவியாக நடித்த "சிதம்பரம்"படத்தில் துப்பறிவாளராக வருவார்! இவரும் சரி இன்னொருத்தர் அஜய் ரத்னமா? (ஏதோ வரும்!) னு ஒருத்தரும் நல்ல உயரம். இரண்டு பேருமே எதிர்பார்ப்புடன் வந்திருப்பாங்க! ஆனால் ஒளிரவில்லை. அதே போல் பாரதிராஜா கண்டுபிடிப்பான ரஞ்சனியும் அதிகம் பிரகாசிக்கவில்லை. ரேவதி, ரதி, ரோஹிணி, ரேகா போல் ரஞ்சனி வரலை! :)))) ரோஹிணி காமெடியில் பிச்சு உதறுவாங்க! :) ரேவதி எப்போவுமே அறிவுஜீவி காரக்டர் தான்! :)

    பதிலளிநீக்கு
  51. உடம்பு இப்போப் பரவாயில்லைனு எல்லோருக்கும் அறிவிச்சுக்கறேன். :))))

    பதிலளிநீக்கு
  52. ஏஞ்சலை எங்கே பல நாட்களாய்க் காணவில்லை? உடம்பு நல்லா இருக்காங்க தானே! அதிரடி, உங்களுக்குத் தெரிஞ்சிருக்குமே!

    பதிலளிநீக்கு
  53. @ கீதா சாம்பசிவம்:

    ..எங்க குட்டிக் குஞ்சுலுவுக்கு ஹனுமான் சாலீஸாவும், பிபரே ராமரஸமும், சஷ்டி கவசமும் தான் பிடிக்கிறது. சஷ்டி கவசம்போடும்போது முருகனைப் பார்த்துக் கொண்டு கூப்பிய கைகளோடு நின்னுண்டு இருக்கும். :))))) //

    வாங்க! ஒங்க குட்டிக் குஞ்சுலு பக்த பிரஹலாதனைப்போல ஒரு Bhakta prodigy ! அதன் லெவலே வேறே.. அது அவன் செஞ்ச வேலே !

    பதிலளிநீக்கு
  54. இனிமையான பாடல். பள்ளிப்பருவத்தில் கேட்டு ரசித்தது நினைவுக்கு வருகிறது.நினைவூட்டியமைக்கு நன்றி.

    இசையமைப்பாளர் பெயர் கேள்விப்பட்டு இருந்தாலும், அது ஒருவரின் பெயர் என்று நினைத்திருந்தேன். மேல் தகவல் அறிந்ததில் மகிழ்ச்சி. அக்காலத்தில் வானொலியில் இவர்கள் இசையமைத்த பாடல் வரும்போது இவர்கள் பெயரை மனோஜ் கியான் (KIYAN) என்றே உச்சரிப்பார்கள். இந்த பதிவின் மூலமே அது கியான் அல்ல ஞான் (ஞானம் என்பதின் சமஸ்க்ருத/ஹிந்தி சொல்) என்று தெளிவடைந்தேன்.

    பதிலளிநீக்கு
  55. ////
    Geetha SambasivamJuly 13, 2018 at 4:26 PM
    உடம்பு இப்போப் பரவாயில்லைனு எல்லோருக்கும் அறிவிச்சுக்கறேன். :))))///
    இது இது இதைத்தான் ஜொன்னேன்:) இதை விட்டுப்போட்டு 15 பந்தியில தன்னைப்பற்றி எழுதி, அதுக்கொரு பொஸ்ட் கர்ர்ர்ர்ர்ர்:)...

    ஹையோ கீசாக்கா கலைக்கிறா:)

    பதிலளிநீக்கு
  56. ///Geetha SambasivamJuly 13, 2018 at 5:00 PM
    ஏஞ்சலை எங்கே பல நாட்களாய்க் காணவில்லை? உடம்பு நல்லா இருக்காங்க தானே! அதிரடி, உங்களுக்குத் தெரிஞ்சிருக்குமே!///

    அது கீசாக்கா இங்கிலாண்டூஊஊ தோத்த கவலையில தாடி வளர்த்து ... சிட்டுவேசன் சோங் கேட்டுக்கொண்டிருக்கிறா என தேம்ஸ் கரையில பேசினாங்க:) மீ ஒட்டுக் கேட்டேன் :) மற்றும்படி ஒண்ணும் தெரியாது நேக்கு:).. அஞ்சு கெதியா வாங்க:)...

    இப்பூடி என்னை ஆரும் தேடும் வேலை வைக்கக்கூடாது என்பதற்காகவே நான் முடியும்போது ஓடி ஓடி சைன் வைக்கிறேன்:)

    பதிலளிநீக்கு
  57. எங்க ஏரியாவிலும் கரன்ட் இல்லை இன்றும். 5 மணிக்கு மேலதான் குடிகாரன் போல தள்ளாடி தள்ளாடி வந்தது. அப்புறம் தான் ஸ்டெடியா வந்தது...

    ஏஞ்சல் வருவார்கள்! சீக்கிரம் என்பதை இங்குச் சொல்லிக் கொள்கிறேன்.

    நெல்லை நீங்க சொன்ன அந்த வாத்தியார் எக்ஸாம்பிள் பொருந்தலைனு தோணுது. மாற்றம் என்று சொல்வது வேறு.

    நானே எல்லோருக்கும் குப்பையை குப்பைத் தொட்டியில் போடணும் என்று சொல்லிவிட்டு நான் குப்பையை கீழே போட்டால்? கோபப்படக் கூடாதுனு சொல்லிட்டு நானே கோபப்பட்டால்? என் மகன் சிலவற்றை மாற்றிகொள்ள வேண்டும் என்று நினைத்து மாற்ற நினைத்து நானே மாறவில்லை என்றால்? (அதனால் நான் யாரையும் மாற்ற நினைப்பதில்லை ஹிஹிஹிஹி...)

    இங்கு காந்தியின் ஒரு கதையைச் சொல்லலாம். காந்தியிடம் ஒரு அம்மா தன் மகனைக் கூட்டிக் கொண்டு வந்து அவன் சர்க்கரை நிறைய தின்கிறான் அட்வைஸ் சொல்லுங்கள் என்றாரராம். அப்போது காந்தி இரண்டு வாரம் கழித்து வரச் சொன்னாராம். தாய்க்குப் புரியலை. அப்புறம் தான் தெரிந்தது காந்தியும் சர்க்கரை சாப்பிடுவேன் நான் உங்கள் மகனுக்கு அட்வைஸ் செய்யணும்னா நான் முதலில் சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்த வேண்டும் என்றாராம்.

    நல்ல அறிவுரை சொல்லும் எல்லா ஆசிரியர்களும் நல்ல ஆசிரியர்கள்/பெரியவர்கள்/ என்று சொல்ல முடியாதுதான். ஆனால் நாம் அவரை நீ ஒழுங்கா என்று கேட்காமல் அந்த அறிவுரைகளை எடுத்துக் கொள்வது உசிதம்.

    இந்த கமென்டை ராத்திரி அடித்து மீண்டு கரன்ட் போயிட போட முடியாம இப்ப...

    கீதா

    பதிலளிநீக்கு
  58. இந்தப் படம் பற்றியும் தெரியவில்லை. பாடலும் கேட்டதில்லை.

    1985 ல் தமிழ்நாட்டிலிருந்து, நான் கேரளாவில் அம்மா அப்பாவுடன் செட்டில்ட். தமிழ்நாட்டில்தான் வேலை செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அது முடியாமற் போனது. 85 ற்குப் பிறகு தமிழ்ப்படங்கள் பார்க்கும் வாய்ப்பு குறைந்துவிட்டது. ஆனால் 92ல் பாலக்காடு வந்த பிறகுதான் மீண்டும் தமிழ்ப்படங்கள்.

    பாடல் நன்றாக இருக்கிறது ஸ்ரீராம்ஜி.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  59. பாதங்களும் கொலுசும் ரசித்தேன் பாடல் அருமை பதிவிற்கு மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  60. இசை அமைப்பாளர்கள் மனோஜ் கியான் என்று சொல்லிவிட்டு சந்திரபோஸின் புகைப்படத்தை
    போட்டு இருக்கீங்க

    பாடல் மிக மிக அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இணையத்தில் தேடியபோது இந்தப்படம்தான் கிடைத்தது தமிழ்மைந்தன். வருகைக்கு நன்றி. நீங்கள் சொல்லியபிறகு பார்த்தல் அது சந்திரபோஸ் மாதிரியும் தெரிகிறது!

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!