செவ்வாய், 10 ஜூலை, 2018

கேட்டு வாங்கிப் போடும் கதை : காசு வரை பிள்ளை - கீதா ரெங்கன்




காசு வரை பிள்ளை
கீதா ரெங்கன் 


“அப்பா! அம்மாவை இன்னைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க. எல்லாமே நார்மல். பெரிசா ஒன்னுமில்லை. ஹார்ட்தான் கொஞ்சம் வீக்கா இருக்கு. ட்யூ டு ஏஜ் னு டாக்டர் சொல்லிட்டார்”

“இறைவா!” என்று கண்ணை மூடிக் கொண்டு கையை நெஞ்சில் வைத்துக் கொண்டார் வேதமூர்த்தி. “கணேசன், ராஜா, லலிதா எல்லார்க்கிட்டயும் சொல்லிட்டியா சுந்தர்!? அம்மா மூணு நாளா சரியா பேசமுடிலைல. அதனால எல்லாரையும் பாத்து பேச ஆசைப்படுவா”

“சொல்லியாச்சுப்பா. எல்லாரும் ஈவ்னிங்க் வீட்டுக்கு வந்துருவோம்னிருக்காங்க”

மாலை அம்மாவை வீட்டிற்கு அழைத்து வந்ததும் எல்லோரையும் பார்த்து சந்தோஷப்பட்டார். உள் ரூமில் படுக்க வைத்ததும் மீனாட்சி உறங்கியதும் தான் வருவதாக வேதமூர்த்தி சொல்லவும் கதவை மூடி வைத்துவிட்டு எல்லாரும் ஹாலில் கூடினர். எல்லோரும் என்றால் வேதமூர்த்தியின் மூன்று பிள்ளைகள், மருமகள்கள், மகள், மாப்பிள்ளை.  அங்கு ஒரு மயான அமைதி நிலவியது. எப்படித் தொடங்குவது? யார் தொடங்குவது என்று இருக்கலாம்.

முதலில் மூத்தவன் சுந்தர்தான் தொடங்கினான். “இந்த 3 நாள் அம்மா ஆஸ்பத்திரியில இருந்ததுக்கு 2 லட்சம் செலவாகியிருக்கு. இதோ மெடிக்கல் பில் எல்லாம்.”

மீண்டும் அமைதி. “சரி இப்ப என்ன சொல்ல வர? நாங்க மூணு பேரும் ஷேர் பண்ணிக்கணும்னு சொல்ல வரியா?” பெண் லலிதா அமைதியைக் கலைத்தாள்.

“எங்களால இப்ப முடியாது. குழந்தைங்க படிப்பு அது இதுனு. நிறைய செலவு இருக்கு” – மூன்றாவது மருமகள்

“எங்களாலயும் இப்ப முடியாது.” இது இரண்டாவது மருமகள், மகன்.

“அப்ப நாங்க இப்ப 2 லட்சம் செலவு செஞ்சுருக்கோமே அதுக்கு என்ன சொல்லறீங்க? எங்களுக்கு மட்டும் செலவு இல்லையாக்கும்? பெரிய பையன் இன்னும் செட்டில் ஆகலை. அவன் படிப்பு செலவே ஒரு தொகை ஆகிருச்சு. அடுத்து ரெண்டு பேரு. ஏங்க சும்மா வாய மூடிட்டுருக்கீங்க. சொல்ல வேண்டியதுதானே. – இது மூத்த மருமகள் சுந்தரின் மனைவி.

“அண்ணி. அப்பாகிட்டயே சொல்லிடலாம். இத்தனை செலவாச்சுனு”

மீனாட்சியின் தேவைகளைக் கவனித்துவிட்டு எழுந்து வந்தவரின் காதில் இந்த உரையாடல்கள் விழவும், மீண்டும் உள்ளே சென்றார்.  பண விஷயம் பற்றிப் பேசப்பட்டது மீனாட்சியின் காதில் விழவில்லை. நல்லகாலம் மருந்துகள் அவளை அசத்தியிருக்கிறது.

“சரி..பணத்தைப் பத்தி அவர்கிட்ட சொல்லிடலாம்.….அப்புறம்? இப்ப ரெகுலர் செக்கப்னு சொல்லிருக்காங்கல்ல. யாரு இவங்களை இங்க வைச்சுக்கறதாம்?”

மீண்டும் அமைதி.

“இப்படி இருந்தா எப்படி? ஏதாவது ஒரு முடிவு எடுத்துதானே ஆகணும்.” என்று லலிதா சொல்லவும் பெரிய மருமகள் முந்திக் கொண்டாள். “நான் வேலைக்குப் போயிட்டிருக்கேன். அதனால…..” என்று இழுத்தாள்.

இரண்டாவது மருமகளும், மூன்றாவது மருமகளும் அதே காரணத்தையும் இன்னும் ஏதோ பல காரணங்களையும் எல்லோரும் சொன்னார்கள்.

“அண்ணா அப்ப யாரு பாத்துக்குவாங்க? பாவமில்லை?”

“ஏன் நீ தான் கொண்டு வைச்சுக்கயேன்”

“என்ன அண்ணா இப்படிச் சொல்லற. நீங்க மூணு பேரும் இருக்கறப்ப பொண்ணு நான் கொண்டு வைச்சுக்கிட்டா நல்லாருக்காது. என் அத்தையும், மாமாவும் எங்கூடத்தானே இருக்காங்க”

“பொண்ணுனா அம்மா அப்பாவை பாத்துக்கக் கூடாதாக்கும்? மாப்பிள்ளை நீங்க இதுக்குப் பதில் சொல்லுங்க. நாங்க இப்ப எங்க பொண்டாட்டிங்களோட அம்மா அப்பாவை பார்த்துக்கலை?”

பதிலில்லை.

“அண்ணா ஊர்ல இருக்கற வீட்டை வித்துட்டு, இங்க நல்லதா நம்ம வீட்டுப் பக்கத்துலயே ஒரு வீடு பார்த்து வைச்சா?”

“இங்க வீட்டு விலையும் சரி, வீட்டு வாடகையும் சரி…உள்ள ரூபாய் அத்தனையும் போகும். கைவிட்டுப் போட வேண்டி வரும். அப்புறம் ஹாஸ்பிட்டல் செலவு யாரு பாப்பாங்க.? நீ கொடுப்பியா? உங்களுக்குத்தான் இன்னொரு வீடு இருக்குதே அதைக் கொடேன்”

உள்ளே சென்றிருந்த சுந்தரின் மனைவி, “ஏங்க கொஞ்சம் இங்க வரீங்களா? காப்பி கலந்திருக்கேன் எல்லாருக்கும்…” என்று கூப்பிட்டாள். கூப்பிட்டது காபி எடுத்துக் போக அல்ல என்பதும் சுந்தருக்குத் தெரியாதா என்ன?

“அத்தையையும் மாமாவையும் நாம பாத்துக்கிட்டா நாளைக்கு நாமதான் பாத்துக்கிட்டோம்னு ஊர்ல உள்ள வீட்டை நம்ம பேருக்கு மாத்திக்கலாம்ல. அதையும் இப்ப சொல்லிடுங்க …அப்படி இல்லைனா உயில் எழுதச் சொல்லுங்க”

“ம்”

சுந்தர் ஸ்னாக்ஸுடன் ஹாலுக்கு வந்தான். “நாங்க அம்மா அப்பாவை பாத்துக்கிட்டா அவங்க காலத்துக்குப் பிறகு அவங்க வீட்டை நாங்க எடுத்துக்குவோம்”
மற்ற இரு மருமகள்களும், “அதெப்படி? எங்களுக்கும் அதுல பங்கு உண்டுல்ல?”

சுந்தரின் மனைவி காபியுடன் வந்தாள், “அத்தைக்குத்தான் ஒன்னுமில்லைல. அவங்க ஊர்லயே இருக்கட்டும்”

இப்படிப் பணம்தான் பேசப்பட்டதே ஒழிய அங்கு அம்மா அப்பா என்ற நேயம் எதுவும் பேசப்படவில்லை.

இன்று இவர்கள் அனைவரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் வேதமூர்த்தியும், மீனாட்சியும்தான். பிள்ளைகள் எது கேட்டாலும் பணத்தினால் மட்டுமின்றி உடல் உழைப்பாலும் செய்து கொடுத்துவந்தனர்.

இப்போதும் கூட மீனாட்சிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட போது ஊரில் உள்ள மருத்துவரின் பரிந்துரையின் பேரில்தான் பெரிய மகனுடன் பேசி இங்கு வந்தனர். நல்லகாலம் இவர்களை வைத்துக் கொள்வதைப் பற்றிப் பேசியது வேதமூர்த்தியின் காதில் விழுந்திருக்கவில்லை.

பில் பற்றி பேசப்பட்டது கேட்காதது போல் ஹாலுக்கு வந்தார் வேதமூர்த்தி. “சுந்தர்! நான் கேக்கணும்னு நினைச்சேன். டென்ஷன்ல கேக்க விட்டுப் போச்சு. மெடிக்கல் பில் எவ்வளவு ஆச்சு?” வேதமூர்த்தி கேட்டதும் அனைவரும் ஸ்தம்பித்தனர்.

“எங்கிட்ட அமௌன்ட் பத்தி சொல்ல உங்களுக்கு மனசு ரொம்பக் கஷ்டப்படும்னு எனக்குத் தெரியும். உங்களுக்கும் எவ்வளவோ செலவு இருக்கும். இந்தக்காலத்துல ஒவ்வொண்ணும் எவ்வளவு செலவாகுது. அதனால எவ்வளவு ஆச்சுனு சொல்லுப்பா”

சுந்தருக்கு கொஞ்சம் குற்ற உணர்வு வந்ததுதான். ஆனால் தனது மனைவியை மீறி அவனால் எதுவும் செய்ய முடியாது. மெடிக்கல் பில்லை நீட்டியதும் வேதமூர்த்தி அதற்குச் செக் எழுதிக் கொடுத்தார்.

“அடுத்த செக்கப் தேதி டாக்டர் எழுதிக் கொடுத்துருக்காரா?”

“ஆமாப்பா. இதே தேதி அடுத்த மாசம்.”

“ஆனா, நான் பிள்ளைங்க எல்லாரும் ஊருக்குப் போறோம்.” இது சுந்தரின் மனைவி.

“அதனாலென்னம்மா. நீங்க போய்ட்டு வாங்க”

“அப்பா நாங்களும் வெக்கேஷனுக்கு பிள்ளைங்கள கூட்டிட்டு ஊருக்குப் போறோம்பா.”

“இந்தச் சின்ன வயசுலதான் ஊருக்கு எல்லாம் போய்ட்டு வரமுடியும் போய்ட்டு வாங்கப்பா சந்தோஷமா”

இதென்ன இவர் நாம் சொல்வதைப் புரிந்து கொண்டாரா? இல்ல புரிஞ்சும் புரியாத மாதிரி பேசுகிறாரா? என்று எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“அம்மாக்குத்தான் ஒன்னுமில்லைன்னு சொல்லிட்டாங்களேப்பா. ஊர்லயே பாத்துக்கலாம். அப்புறம்….அப்பா அந்த வீடு அம்மா பேர்லதான் இருக்குல்ல? அம்மாக்கு ஒன்னுமில்லைதான்….இருந்தாலும்… உயில் எழுதிரலாமாப்பா?”

“……………………………………………………………..   எழுதிடலாம்.. நாளைக்கு ஊருக்குப் போக டிக்கெட் புக் பண்ணனுமே கிடைக்குமா”

“டிக்கெட் புக் பண்ணியாச்சுப்பா தத்கல்ல. நாளைக்குக் காலைல ட்ரெயின்…”

“…………………………………………………………………..”




ரயிலில் வேதமூர்த்தியின் மடியில் மீனாட்சி படுத்திருக்க, வேதமூர்த்தி முந்தைய நாள் நடந்த இத்தனையையும் வேதனையுடன் நினைத்தார். ‘நல்ல காலம் மீனாட்சிக்கு நேத்து பிள்ளைங்க பேசினது எதுவுமே தெரியாது. பாவம். மருந்து சாப்பிட்டதுல நல்ல தூக்கம்” மீனாட்சியின் தலையை வருடிக் கொடுத்தார்.

“எதுக்கு இப்பவே ஊருக்குப் போகணும். இங்க எல்லாரும் இருக்காங்ங்கல்ல…மனசு தெம்பாயிடும்” என்று சொன்னவளை, “ஊர்ல வேலை இருக்குதுனு” சொல்லி எப்படியோ சமாளிச்சுக் கூட்டி வந்தாச்சு. இதோ இப்பவும் நல்ல தூக்கம் தான். எப்படி ஒரு நிம்மதியான தூக்கம்! தெரியாமலே போகட்டும். வேதனை என்னோடயே போகட்டும். இறைவா! எங்க குழந்தைங்கள தண்டிச்சுராதப்பா! அவங்க எல்லாருக்கும் நல்ல மனசைக் கொடு.. எனக்கு முன்னாடி மீனாட்சிய கூப்பிட்டுரு. அவளால இந்த வேதனை எல்லாம் தாங்கிட்டு தனியா இருக்க முடியாது. இல்லைனா எங்க ரெண்டு பேரையும் ஒரே சமயத்துல அழைச்சிடு.” வேதமூர்த்தி கண்ணை மூடிக் கொண்டு மீனாட்சியின் கைகளுடன் தன் கைகளைக் கோர்த்துக் கொண்டார்.

வேதமூர்த்தியின் மொபைல் அடிக்கவும் பார்த்தால் பெரிய பேரன். 

“ஹை! தாத்தா! எப்படி இருக்கீங்க? பாட்டி எப்படி இருக்காங்க?”

“பரவால்லடா என் பேராண்டி... செல்லம். நீ எப்படி இருக்கடா?”

“நான் நல்லாருக்கேன் தாத்தா. நீங்க ஊருக்குப் போயிட்டுருக்கீங்கனு தம்பியும் தங்கச்சியும் அங்க நடந்ததெல்லாம் சொல்லிட்டாங்க. கவலைப்படாதீங்க. என் படிப்பு ஓவர். அடுத்த வாரம் லேண்டிங்க். நான் உங்க கூடத்தான் இருக்கப் போறேன். எனக்கு வேலை கிடைச்சதும் எங்கூடத்தான் நீங்க ரெண்டு பேரும் இருக்கப் போறீங்க. ஓகே? மற்றவை நேரில்! டேக் கேர் தாத்தா…”

வேதமூர்த்திக்கு மனமும் உடலும் பரவசமாகி பல வருடங்கள் குறைந்து இளமையானது போல் துள்ளியது. இறைவா! கண்களில் நீர் பனித்தது.. சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ள மீனாட்சி எழுவதற்குக் காத்திருந்தார்.

83 கருத்துகள்:

  1. grrrrrrrrrrrrrrrrrrr எங்கே இருந்து வந்தார் ஞானி? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மொபைலில் இருந்து....

      பூனை பத்துக்கதான் வருவார்...சத்தமே கேக்காது....ஆனா வந்தா..இருத்தல் பேராட்டல் னு .அப்புறம் அமர்க்களம் தான்..ஹாஹாஹா....

      கீதா

      நீக்கு
  2. நித்திரை கொஞ்சம் கலைஞ்சுதா மெதுவா குல்ட்டால எட்டிப்பார்த்தென் 29 காட்டிச்சுது ... ஓஓஓ 30 ஆகப்போகுதூஊஊ என மொபைல் ஜம்ப்:) பண்ணினேன்ன்ன்ன்:)...

    பதிலளிநீக்கு
  3. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அதிரடியாய் வந்திருக்கும் அதிரடி அனைவருக்கும் நல்வரவு....

    பதிலளிநீக்கு
  4. பொயிங்கும், பொயிங்கும்! கதைக்கு அப்புறமா வரேன். :)

    பதிலளிநீக்கு
  5. இன்னைக்கு காலையிலேயே
    காஃபி ஆத்தியாச்சு போல!...

    பதிலளிநீக்கு
  6. ஓ... மை... இனிய காலை வணக்கம் அதிரா...!

    பதிலளிநீக்கு
  7. இனிய காலை வணக்கம் கீதா .அக்கா அக்கா... அதிரா அதிரடி ஆகிட்டாங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நான் லேட்டா ஆஜர் வைக்க வரப்ப கூட அதிர்வு நிக்கல.. ஹாஹாஹா

      கீதா

      நீக்கு
  8. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார். கீதா ரெங்கனுக்கு இணையபிரச்னை. என்னவோ அவர் ராசி, அவர் பதிவுகள் வரும்போதெல்லாம் உடனே வரமுடியாமல் போகிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா..ஆமாம் ல ஸ்ரீரராம்.....என்.ராசிதான் நல்ல ராசிதான். 7.5, பாம்புகள் எல்லோரும் நல்லவரே...விடமாட்டோம்ல...சுருக்கமா சொல்லி போய்ட்டே இருக்கேன்..ஜல்லி, கும்மி க்கு வழி இல்லை.ஹாஹாஹா...மொபைல் வழி...

      கீதா

      நீக்கு
  9. ஒரே படத்துக்கு கீத்ஸ் டமிருந்து ரெண்டு கதைகளோ அவ்வ்வ்வ்வ்வ்வ்:)... நாளைக்குத்தான் படிப்பேன் இன்று முண்டியடிச்சதில கீசாக்கா என் ஒரு கையை நெளிச்சிட்டா:) துரை அண்ணன் மற்றக் கையை நெளிச்சிட்டார்ர்ர்ர்ர்ர் நேக்கு நஸ்ட ஈடு வேணும்ம்ம்ம்ம்ம்:)...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பின்னே..வயஸானாலும் நான் ரன்னிங்ல ஃபஸ்ட்னு ஜம்பமா....கீதாக்காவையும், துரை அண்ணனையும் தள்ளிட்டு மூச்சிரைக்க ஓடி வந்தா.?..ஹாஹாஹா

      பாவம் அவங்க..ஹாஹாஹா

      கீதா

      நீக்கு
  10. // நித்திரை கொஞ்சம் கலைஞ்சது..//

    .... ந்டால் நரி கனவு கண்டதுவோ!?...

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

    பதிலளிநீக்கு
  11. ஒரு படத்துக்கு எத்தனை கதைகள் வேண்டுமானாலும் எழுதலாம் அதிரா. அப்புறம் நம்ம ஏரியாவைப் பாருங்கள்... அனுஷ்க்காவுக்கு வயதாகி விட்டதாம். கௌ அங்கிள் சொல்றார்!

    பதிலளிநீக்கு
  12. ஹா ஹா ஹா கீசாக்காவையும் துரை அண்ணனையும் பார்க்க நேக்கு அழுகை அழுகையா வருது:) ஹையோ ஜாமத்தில ஜத்தமா சீக்கவும் முடியல்ல:)...

    குட்மோனிங் ஶ்ரீரம் துரை அண்ணன் கீசாக்கா மற்றும் எல்லோருக்கும்....

    பதிலளிநீக்கு
  13. // ஹா ஹா ஹா கீசாக்காவையும் துரை அண்ணனையும் பார்க்க நேக்கு அழுகை அழுகையா வருது:)//

    ஏனோ அழுகை அதிரா? அவங்க சிரிக்கறாங்க!

    பதிலளிநீக்கு
  14. காலம் செய்த கோலமடி..
    கடவுள் செய்த குற்றமடி!...

    அதுசரி...
    மீனாட்சி எழுந்துட்டாங்களா..இல்லையா!..

    பதிலளிநீக்கு
  15. ஓஓஓ நம்ம ஏரியா தூசு தட்டப்பட்டிருக்கோ.. பார்க்கிறேன் பார்க்கிறேன்ன்ன்... உண்மையைச் சொன்னால் ஓடிப்போய்ப் பார்ப்பேன்ன்...:) அதாவது அனுக்காவுக்கு வயசாகிட்டுது எனும் உண்மை:) ஹா ஹா ஹா:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதனால என்ன அதிரா...நீங்கதான் சீனியர் மோஸ்ட்....ஹாஹாஹாஹா

      கீதா

      நீக்கு
  16. ஶ்ரீராம் எங்கே சிரிக்கிறாங்க இருவரும் .... பாருங்கோ துரை அண்ணன் சிட்டுவேஷன் சோங் போட்டிருக்கிறார்ர்ர்ர் ஹாஅ ஹா ஹாஆஆஆ:)

    பதிலளிநீக்கு
  17. // பாருங்கோ துரை அண்ணன் சிட்டுவேஷன் சோங் போட்டிருக்கிறார்ர்ர்ர் ஹாஅ ஹா ஹாஆஆஆ:) //

    எப்படியோ... அழாமல் சந்தோஷமா இருக்காருல்ல?

    பதிலளிநீக்கு
  18. தலைப்பு உபயம் ஸ்ரீராம்தானோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எஸ்ஸு ஏகாந்தன் அண்ணா தலைப்பு உபாயம் ஸ்ரீராமேதான்....நல்லாருக்குல...

      கீதா

      நீக்கு
  19. வணக்கம்....வணக்கம்..ஆஆஆ..இந்தக் குழந்தை தவழ்ந்து கூட்டம் இடையில.உள்ளே வரவே முடியலை...இன்னும் எபி அதிர்ந்துட்டுருக்கு..ஹாஹாஹா....

    நெட் இன்று சரியானதும்...வந்துருவேன்....இப்ப மொபைலில் இருந்து....so.. சுருக்கமாக....

    கீதா

    பதிலளிநீக்கு
  20. மிக மிக யதார்த்தம் கீதாமா.
    இருவரும் நீண்ட நாட்கள் பேரனோட
    கலந்து சந்தோஷமாக இருக்க பிரார்த்தனை. நல்ல கதை படிக்க மனசுக்கு இனிமை. வாழ்க வளமுடன்,.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வல்லிம்மா...பாராட்டிற்கும்..

      முதல் முடிவு பேரன் என்ட்ரி இல்லாமல்...அடுத்த முடிவு பேரன் போன்...என்று இரு முடிவுகல் வைத்து...எபக்கு ரெண்டாவது முடிவு வைச்சா நல்லாருக்கும்னு நினைச்சேன்..அன்பா எடிட் பண்ணாம அப்படியே ஸ்ரீரமுக்கு அனுப்பிட்டேன். ஸ்ரீராமும் நான் விரும்பிய முடிவை எடுத்துக்கொண்டதாகச் சொன்னார்.....

      கீதா

      நீக்கு
  21. ஸ்ரீராம் மிக்க மிக்க நன்றி....அருமையான தலைப்பிற்கு....மற்றும் கதை வெளியிட்டமைக்கு....என் சமீபத்திய 3 கதை களுக்கும் அழகான ஈர்க்கும் தலைப்பு கொடுத்து கதைக்கு அழகு பெருமை சேர்த்த உங்களுக்கு நன்றி கள் பல ஸ்ரீராம்....இப்படியா ந ஊக்கமும் ஆதரவும் அன்பும் கொடுக்கும் நட்புகள் கிடைத்தமைக்கும் தன்யள்ஆனேன்...பின்னர் வரேன்...

    கீதா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம்ஜி எனது கதைக்கும் தலைப்பு கொடுப்பாரா ?

      நீக்கு
  22. பேரனின் தொலைபேசி அழைப்பு இந்த கதைக்கு அருமையான டர்னிங் பாய்ண்ட் ஸூப்பர்.

    மனதின் பாரம் இறங்கியது வேதமூர்த்தி ஐயாவுக்கு மட்டுமல்ல! எங்களுக்கும்தான்.

    இந்த வாழ்க்கை ஏழைகள் வீட்டில் இல்லை காரணம் பணமில்லாத காரணத்தால் குணப்படுத்த வழியின்றி பெருசுகள் சட்டென மண்டையை போட்டு விடும் (இது நகைச்சுவைக்காக சொல்லவில்லை)

    செல்வந்தர்கள் இந்நிலையை தொட்டு மனம் வருந்தியே இறக்கின்றனர். இதுதான் நிதர்சனமான உண்மை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர்ஜி...விரிவான கருத்திற்கு. உங்கள் கருத்து சரிதான்...யதார்த்தமா சிந்திக்கணும் அப்டினும் ஒரு சிலர் சொல்லி தங்கள் கடமையைச் செய்யாமல் இருப்பவர்களையும் பார்க்கலாம்..

      கீதா

      நீக்கு
  23. வ(ள)ரும் தலைமுறைக்கு உறவுகளின் மதிப்பு புரிந்ததாக பாஸிட்டிவான கதைக்கு பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மிகிமா...புரியத் தொடங்கும் ...ஒரு சில குடும்பங்களில் பார்க்கிறேன்
      கீதா

      நீக்கு
  24. நல்ல கதை. பெரும்பாலும் இப்படித்தான் நடக்கிறது. ஆனால் பேரன் பொறுப்பேற்ற கொள்வதாக முடித்திருப்பதில் உங்கள் நல்ல எண்ணம் புரிகிறத.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி பானுக்கா...ஒரு சில குடும்பங்களில் பார்க்கிறேன்...நானும் தாத்தா பாட்டியுடன் இருந்ததால் இருக்கலாம்...குழந்தைகள் அம்மா அப்பாவிடம் அன்பு கொண்டாலும் தாத்தா பாட்டிஇடம் கூடுதல் அன்பு செலுத்துவதையும் பார்க்கிறேன்.. அக்கா

      கீதா

      நீக்கு
  25. கில்லர்ஜி சொல்லியிருப்பது 100% உண்மை.

    பதிலளிநீக்கு
  26. கீதா ரங்கன் - பேரன் சொன்னது ஆறுதலைக் கொடுத்தாலும் யதார்த்தத்தை மீறியதல்லவா? வாழ்க்கையே இந்தமாதிரி வெளிச்சம் வராதா என்று ஏங்குவதுபோல்தான் இருக்கு.

    ஏழைகள் வீட்டில் பாசம் இருக்கும், ஆனால் யதார்த்த நிலைமையான ஏழ்மை, செய்ய நினைப்பதைச் செய்யவிடாது. பெரும் பணக்காரர்கள் வீட்டில் சிகிச்சைக்குப் பணம் இருக்கும், நர்ஸ் போடுவார்கள், ஆனால் வீட்டு மனிதர்கள் கூட இருக்கமாட்டார்கள். அங்கு பெரும்பாலும் சுயநலம்தான் இருக்கும், அதாவது அவரவர் அவரவர் சந்தோஷத்தை மட்டுமே நினைத்திருப்பர். மத்தியதர வகுப்பு, ஆற்றிலொரு கால், சேற்றில் ஒரு கால். பணம் ஓரளவு இருக்கும், மனம் கடமையைச் செய்யவேண்டுமே என்று அடித்துக்கொள்ளும், நிலைமை, தன்நலம் அதைசன் செய்ய விடாது.

    இரயில் பிரயாணம் வரை, கதை மிக யதார்த்தமாக இருந்தது. வெல் டன். கதை முடிவு, இப்படி இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் என்று தோன்ற வைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை யதார்த்தத்தில்... நடக்கிறது....பேரன் அல்லது பேத்தி தாத்தா பாட்டியை பார்த்துக்கொள்வது நடக்கிறது...

      நடக்கும் நெல்லை...வாழ்க்கை சுழற்சித்தான்....இப்போது பாரம்பரியம் என்று கைக்குத்தல் அரிசிக்கும், செக்கு எண்ணெக்கும் தானியங்களுக்கும் மவுசு வரலியா அது போல....

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  27. இந்தக் கதைக்கு "தொட்டால் பூ மலரும்" என்ற தலைப்பு பாசிடிவ் ஆக இருக்குமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக் கதைக்கு "தொட்டால் பூ மலரும்" என்ற தலைப்பு பாசிடிவ் ஆக இருக்குமா?//

      ஓவர் to ஸ்ரீராம்....ஹாஹாஹா

      கீதா

      நீக்கு
  28. வாடிக்கிடந்த வேதமூர்த்தியின் மனது பேரனின் பேச்சால் மலர்ந்திருக்கும். அருமையா கதை எழுதறீங்க கீதா ரங்கன். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாடிக்கிடந்த வேதமூர்த்தியின் மனது பேரனின் பேச்சால் மலர்ந்திருக்கும். அருமையா கதை எழுதறீங்க கீதா ரங்கன். பாராட்டுகள்.//

      ஆமாம் நெல்லை மலர்ந்திருக்கும்...மிக்க நன்றி நெல்லை பாராட்டிற்கு

      கீதா

      நீக்கு
  29. @ கீதா சாம்பசிவம் :..அப்புறமா வரேன். :)//

    @ கீதா : ..வந்துருவேன்.. //.. ..பின்னர் வரேன்...//

    @ கில்லர்ஜி : ..மீண்டும் வருவேன்...//

    இப்படியே நாலாபக்கமுமா பரவி.. ‘நானே வருவேன்.. அங்கும் இங்கும் ..’ என பாடிக்கொண்டே சேந்தாப்புல லாண்டிங் ஆயிருங்க.. ஏற்கனவே வந்து ஒக்காந்திருக்கிற பறவைங்கல்லாம் அரண்டு, மிரண்டு பறந்துபோயிரும்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா...ஏகாந்தன் அண்ணா நாங்க என்ன அதிரடி மாதிரியா என்ன!! ஹாஹாஹா....

      கீதா

      நீக்கு
  30. வயோதிகத்தில் ஒவ்வொரு பெற்றோருக்கும் ஏற்படும் அனுபவங்களைப் படம்பிடித்தாற்போல புனையப்பட்ட சிறுகதை.நல்ல கதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோ முத்துசுவாமி மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு...

      கீதா

      நீக்கு
  31. //வேதமூர்த்திக்கு மனமும் உடலும் பரவசமாகி பல வருடங்கள் குறைந்து இளமையானது போல் துள்ளியது. இறைவா! கண்களில் நீர் பனித்தது.. சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ள மீனாட்சி எழுவதற்குக் காத்திருந்தார்.//

    நல்ல முடிவு.
    இன்னும் கொஞ்ச காலம் தாத்தா, பாட்டி பேரனின் அன்பில் ஆன்ந்தமாய் இருக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோமதிக்கா....ஆமா பேரன் அன்பில் அவங்க திளைக்க ட்டும்..எனக்கும் இந்த முடிவுதான் பிடித்தது....பாசிட்டிவாய் நினைப்போம்.. இல்லையா...

      கீதா

      நீக்கு
  32. என் மாமியார் அவர்களை பேரனும், பேரனின் மனைவியும் தான் நன்கு பார்த்து கொண்டார்கள்.(ஸாரின் அண்ணன் மகன், மருமகள்) உடம்பு கொஞ்சம் தெம்பானதும் சென்னை அழைத்து செல்வதாய் சொன்னான் , அத்தைக்கு கோவை கிளைமெட் எங்கும் இருக்காது கோவையில் தன் இருப்பேன் என்று சொல்லி விட்டார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் மாமியார் அவர்களை பேரனும், பேரனின் மனைவியும் தான் நன்கு பார்த்து கொண்டார்கள்.(ஸாரின் அண்ணன் மகன், மருமகள்)//

      கேட்பதற்கே சந்தோஷமா இருக்கு கோமதிக்கா....இப்போதும் இப்படியான பேரன் பேத்திகள் இருக்காங்க....

      நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  33. கீதா, நாளை எப்படி இருக்குமோ தெரியாது ஆனால் நம்பிக்கை ஒளி தெரிவது போல் கதையை நிறைவு செய்தமைக்கு நன்றி.
    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாளை எப்படி இருக்கும் யாரறிவார் இல்லையா கோமதிக்கா..பாசிட்டிவா..நினைப்போம்...கண்டிப்பா மாறும்...மிக்க நன்றி கோமதிக்கா பாராட்டிற்கும் வாழ்த்திற்கும்...

      கீதா

      நீக்கு
  34. அதுசரி...
    மீனாட்சி எழுந்துட்டாங்களா..இல்லையா!..//

    துரை அண்ணா எழுந்துட்டாங்க...ட்ரெயின் இப்பதான் ஸ்டேஷன் உள்ள வரப்போகுது....

    கீதா

    பதிலளிநீக்கு
  35. ஒரு நல்ல கதை படித்த திருப்தி வந்தது.முடிவு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மீரா பாலாஜி..பாராட்டிற்கும் கருத்திற்கும்

      கீதா

      நீக்கு
  36. அதிரா சொல்ல நினைத்து விடுபட்டது....என்னை கீத்ஸ் என்று விளிப்பது....சந்தோஷமா இருக்கு...லவ் இட்....நன்றி நன்றி....(இன்னும் யங் ஆகிப் போனேன்!!!!!!!!!பீலிங்ஸ்....ஹாஹாஹாஹா)

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///அதிரா சொல்ல நினைத்து விடுபட்டது....என்னை கீத்ஸ் என்று விளிப்பது....சந்தோஷமா இருக்கு...லவ் இட்....நன்றி நன்றி....(இன்னும் யங் ஆகிப் போனேன்!!!!!!!!!பீலிங்ஸ்....ஹாஹாஹாஹா)////

      அது என் கொப்பி வலதாக்கும் ஜொள்ளிட்டேன்ன்ன்ன்:)... அப்போ கீத்ஸ் நீங்க யங் இல்லையாஆஆஆஆஆ:) ஹா ஹா ஹா ...

      நீக்கு
  37. நல்ல கதை கீதாக்கா...👌👌👌


    ரொம்ப பயந்துட்டேன்...எங்க சோகமான முடிவு வருமோ ன்னு...

    நல்ல வேளை பேரன் வந்து காப்பாத்திட்டார்...😊😊😊


    வாழ்க நலம்...💐💐💐

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அனு தெரியும் உங்களுக்கு சோகம் பிடிக்காதுன்னு...

      மிக்க நன்றி அனு கருத்திற்கு...

      கீதா

      நீக்கு
  38. படம்பார்த்துக்கதையா ஆனாலும் உறவுகள் குறித்த கணிப்பு யதார்த்தம் என் பதிவு உறவுகளில் நானெழுதீருந்தேன் பெண்கள் தங்கள் வீட்டு உறவுகளுக்கே முக்கியதுவம்தருகிறார்கள் என்றுகதையிலு மகன்களைவிட மருமகள்கள் பேச்சுக்கே வலு என்று தெரிகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜிஎம்பி சார் மிக்க நன்றி கருத்திற்கு.....சார் எல்லா பெண்களும் அப்படி அல்ல...கதையில் நான் சொல்லியிருப்பதால் பெண்கள் அப்படி என்று கொள்ள முடியாது. என் நட்புகள் உறவுகள் பல பெண்களும் இரு வீட்டாரையும்...அல்லது தங்கள் புகுந்த வீட்டாருக்கும் முக்கியத்துவம் தரும் பெண்களைத்தான் பார்க்கிறேன்....

      கீதா

      நீக்கு
  39. ஜி.எம்.பி சார்... பெண்கள் தங்கள் வீட்டு உறவுகளுக்கே முக்கியத்துவம் தருகிறார்கள். இது உண்மைதான். ஆண்கள், மனைவியின் வீட்டாருக்கே முக்கியத்துவம் தருகிறார்கள். இதுவும் உண்மைதான். (means, more than their own parents or brothers, sisters).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை உங்களுக்கும் ஜிஎம்பி சாருக்கு சொன்ன பதில்தான்....எல்லா பெண்களும் அப்படி அல்ல....எல்லா ஆண்களும் நீங்கள் சொல்வவது போல் அல்ல....

      கீதா

      நீக்கு
    2. நெ. தமிழன்:-
      ///. பெண்கள் தங்கள் வீட்டு உறவுகளுக்கே முக்கியத்துவம் தருகிறார்கள்///

      “தனக்கு தனக்கென்றால், சுளகு படக்குப் படக்கெண்ணுமாம்:)”... இதுக்கு மட்டுமல்ல, இது பல விசயங்களுக்குப் பொருந்தும்:)...

      நீக்கு
  40. ஒரு படத்துக்கு இரண்டு விதமாக சிந்திச்சு எழுதியிருக்கிறீங்க கீதா.. எனக்கு போன தடவையை விட இம்முறை நன்கு பிடிச்சிருக்கு ... வாழ்த்துக்கள்.

    விரைவில் நம்ம ஏரியாவில் அனுக்காவை அம்மாவாக்கி வரப்போகும் உங்கள் கதைக்காக மீ வெயிட்டிங்:).

    பதிலளிநீக்கு
  41. அதிரா - //விரைவில் நம்ம ஏரியாவில் அனுக்காவை அம்மாவாக்கி வரப்போகும் உங்கள் கதைக்காக // - கெளதமன் சாரின் 'பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்' விளையாட்டு இது. 'அனுக்காவுக்கு ஆண்டி வயதாகிவிட்டது' என்று சொல்லணும், ஆனால் ஸ்ரீராமின் 'கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்' தவிர்க்கணும். அதுக்காக, 'அனுக்கா ஆன்ரி' என்று கதையில் வரணும்னு சொல்லிட்டு, கொஞ்சம் வயதுக்குறைவான அனுக்கா படம் போட்டிருக்கிறார். (ஒருவேளை ஒரிஜினல் படத்தை எடுத்துவிட்டு-அதாவது வயதான- இப்படி இளம் படத்தை ஸ்ரீராம் போட்டிருக்கிறாரோ?)

    பதிலளிநீக்கு
  42. பிள்ளையை விட பேரன் பராவாயில்லை பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  43. @ கீதா:.. கைக்குத்தல் அரிசிக்கும், செக்கு எண்ணெக்கும் தானியங்களுக்கும் மவுசு வரலியா அது போல...//

    கைக்குத்தல் அரிசி, செக்கு எண்ணெய்க்கு மவுசு திரும்பியதற்கு என்ன காரணம்? அவரவர்கள் தங்கள் தொப்பையைப் பார்த்துக்கொண்டு நீண்டநாள் வாழவேண்டாமா- அதற்காக மட்டுமே. பாரம்பரியம் தேடி யாரும் வரவில்லை.

    பதிலளிநீக்கு
  44. @ கீதா: அதிராவினால் நீங்கள் ‘கீத்ஸ்’ ஆகியதில் மகிழ்ச்சி என்றாலும், உங்களால் அதிரா ‘அதிர்ஸ்!’ என்று ஆகிவிடுவாரோ என நினைத்தால் இடிக்கிறது..ஐ மீன்.. இடி இடிக்கிறது!

    பதிலளிநீக்கு
  45. ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன்.. என் கதை நாயகிகளில்.... அம்மாவாக அனுக்காவும் மகளாக த.. வும் வரப்போகிறார்ர்ர்ர்க......... நோஓஓ இல்ல இல்ல நா ஒண்ணுமே ஜொள்ளல்லே:).. மீ ரொம்ப நல்ல பொண்ணு சின்ஸ் சிக்ஸ் இயேர்ஸ்ஸ்ஸ்ஸ்:)

    பதிலளிநீக்கு
  46. ஏகாந்தன் அண்ணன், எங்கள் அண்ணன் சொன்னார்... எங்கெல்லாம் வண்டியோடு:)... உங்கட பாஷையில் தொப்பையுடன் ஆட்கள் நிற்கினமோ அவர்கள் எல்லாரும் தமிழர்கள் என ஈசியா அடையாளம் கண்டு பிடிச்சிடலாம் என:)...
    அந்த அடையாளச் சின்னத்தை:) மாத்தச் டொல்றீங்களோ?:) ஹா ஹா ஹா.

    என்னாது அதிர்ஸ் ஆஆஆஆஅ நேக்கு ஷை ஷையா வருதே பெயர் பார்த்து:)... மீ அதிராத அதிராவாக்கும்:)...

    ஆவ்வ்வ்வ் ஏ அண்ணனும் ஐ மீன் ஜொள்ளப் பழகிட்டார்ர்ர் என்னோடு சேர்ந்து ஹா ஹா ஹா:)..

    பதிலளிநீக்கு
  47. அது என் கொப்பி வலதாக்கும் ஜொள்ளிட்டேன்ன்ன்ன்:)... அப்போ கீத்ஸ் நீங்க யங் இல்லையாஆஆஆஆஆ:) ஹா ஹா ஹா //

    ஹலோ...அதிரா யங்க் தானே....எப்போதும்னுநு சொன்னதாக்கும்....ஹெ ஹெ ஹெ ஹெ

    கீதா

    பதிலளிநீக்கு
  48. ஏகாந்தன் அண்ணா ஹைஃபைவ். எனக்கும் அதிர்ஸ் என்று தோன்றியது ஆனா யோசனையும் வந்துச்சு...என் மகன் அதிரஸத்தை அதிர்ஸ் ம்பான்....அதிரசம் செய்யும் முறை தெரியும்தானே!!! ஹா ஹா ஹா பொரித்து இரு கரண்டியின் நடுவில் வைத்து அமுக்கு அமுக்குனு அமுக்கி.....

    ம்ம்ம்ம் அதிரஸ் சொல்லலாம் செக் ஒரு பக்கம், நான் மற்றொரு பக்கம்.....பூஸாரை வாலை இழுத்து அமுக்கி!!! ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  49. ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன்.. என் கதை நாயகிகளில்.... அம்மாவாக அனுக்காவும் மகளாக த.. வும் வரப்போகிறார்ர்ர்ர்க.........//

    என்ன அதிர்ஸ் நெல்லைக்கு ஐஸ்!!! நீங்க அனுக்காவை அம்மாவாக்கினாலும் சரி பாட்டியாக்கினாலும் சரி....ஸ்ரீராம் இதுக்கெல்லாம் அசர மாட்டாராகும்..நாங்க அரச வும் அசர மாட்டோமாக்கும்!!

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!