ஞாயிறு, 22 ஜூலை, 2018

ஞாயிறு 180722 : ..மாறலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்......




சில நாட்களாய் டிவியில் படங்கள் சரியாய்த் தெரியவில்லை.  அதற்குக் காரணம் இது மாதிரி உடைந்து போயிருப்பதுதானோ என்கிற சந்தேகம் உண்டு.  விடியோகான் டிடிஹெச்சிலிருந்து வேறு சர்வீஸ் மாறலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அதற்கு இது (மட்டுமே) காரணம் இல்லை.





அலைபேசியில் எப்போதுமே அதன் சார்ஜரில்தான் முதலில் பிரச்னை வரும்.  இப்போது நான் வைத்திருக்கும் அலைபேசி C type சார்ஜர்.  வேகமாக சார்ஜ் ஏறிவிடும்.  முன்னர் ஹெச் டி சி வைத்திருந்தபோது சார்ஜர் தொலைந்த நேரம் கேஜி இந்த சார்ஜர் பற்றிச் சொல்லிப் படம் அனுப்பி இருந்தார்.  ஜஸ்ட் 150 ரூபாயில் வேலை முடிந்து விடும்.  வேகமாக சார்ஜ் ஏறும் என்று சொன்னார். .. 




மற்ற சார்ஜர்கள் குறைந்தபட்ச விலையே 450 ரூபாய் என்றிருக்க, இது குறைந்த விலையில் வேகமான சார்ஜர் என்றதும் இந்தப் படத்தை வைத்துக் கொண்டு கடைகடையாக ஏறி இறங்கி...   அவர் சொன்ன இந்த சார்ஜர் என் கைக்குக் கிடைக்கும் முன் என் ஹெச் டி சியின் டிஸ்பிளே காணாமல் போக, அலைபேசியையே மாற்றியதில் இதன் தேவை தீர்ந்து போனது!



பாத்திரத்துக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கும் இட்லி போல...!  சூர்யோதயமோ, சந்திரோதயமோ..   பார்க்க எப்போதுமே ஆனந்தம்.  ஆமாம்,   இது உதயம்தானா?  





சென்னை மெட்ரோ டிரெயினிலிருந்து ஒரு க்ளிக்!




எங்கள் வீட்டு பச்சை மிளகாய் செடி.   இந்த மிளகாயில் அவ்வளவு காரமில்லை என்பதால் எனக்கு இதில் செய்யும் சமையல் ரு(ர)சிப்பதில்லை!  என் சித்தப்பா பையன், என் தம்பி,  சூரத்தில் வசிப்பவன், ஒருமுறை சென்னை வந்திருந்தபோது இரவு சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள பச்சை மிளகாய் கேட்டான்.  கடையிலிருந்து வாங்கிய முரட்டு பச்சை மிளகாயிலிருந்து ஒன்றை வாங்கி கையில் வைத்துக் கொண்டவன், ஒவ்வொரு வாய் சப்பாத்திக்கு நடுவிலும்  பச்சையாய் மிளகாயை ஒரு கடி கடித்து எங்களை பரபரப்புக்குள்ளாக்கினான்.




எங்கள் வீட்டுக்கு ஒருசமயம் இரு பிரபல பதிவர்கள் வந்தார்கள்.....  அதில் ஒரு பதிவர் கொண்டு வந்த கேக் இது.   ஸ்பெஷல் கேக்.  மூலப்பொருட்கள் என்ன என்று அவரே சொல்வார்.




மெட்ரோ டிரெயினிலிருந்து க்ளிக் எடுத்த அதே இடம்...  கீழிருந்து...  மேலே தெரிவது நிலவா?  சூரியனா?!



ஃபிப்ரவரியில் கல்யாணமகாதேவி சென்ற சமயம்.  ஓடும் பஸ்சிலிருந்தே ஒரு க்ளிக்.  எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று.  இந்த இடம் அழகாய் இருந்ததால் அடுத்தடுத்து க்ளிக்கியத்தில் வரிசையாய் சில படங்கள்... 



மேலே உள்ள படத்தில் கோவிலின் அருகில் குளமும், மாடுகளும் இருப்பது இயற்கையாய் ஒரு கிராமத்துத் தோற்றத்தைக் கொடுத்தது என்றால் இந்தப் படம் மரமறைவில் கோவில் என்று காட்சி சுந்தரமாய் தெரிந்தது.  அப்போது நான் எடுத்த என் படங்களில் இந்த இரு படங்களையும் (அலைபேசியில்) கூகுள் செலெக்ட் செய்து கொடுத்தது.  மேலே உள்ள படத்தை கருப்பு வெள்ளையில் காண்பித்து மகிழ்வித்தது!


இதுவும் அதே கோவில்தான்.  என்ன கோவில் என்று கேட்டு விடாதீர்கள்.  க்ளிக் செய்யும் அவசரத்தில் அதைப் பார்க்க மறந்தேன்.  கோவிலை விட குளம் அழகு!



நடுவில் காஃபி குடிக்க நிறுத்திய இடத்திலிருந்து மேற்கொண்டு செல்லவேண்டிய சாலையை ஒரு க்ளிக்... (ஃபிப்ரவரி - க ம தேவி ட்ரிப்) 



காஃபி குடிக்க நிறுத்திய இடம் என்று சொல்லி சாலையைக் காண்பித்தால்..?  எந்த ஹோட்டல்?  இதுதானே உங்கள் மனதில் உதிக்கும் கேள்வி?  இதுதான் அந்த மோட்டல் / ஹோட்டல்!


71 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  2. அன்பின் ஸ்ரீராம் , கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
  3. இனிய காலை வணக்கம் அனைவருக்கும். .கிராமப் படங்கள் ,கோவில், குளம், குளத்தங்கரை மரம் எல்லாமே அழகு.

    சென்னையில் மழையா.பாம்பனில் கொடியேற்றி இருப்பதாக
    தினமலரில் படித்தேன்.


    பதிலளிநீக்கு
  4. வாங்க வல்லிம்மா... சென்னையில் மழையா? எங்கே? எங்கே? அது மேல்வீட்டிலிருந்து யாரோ தண்ணீரைக் கீழே கொட்டினார்களாம்!!! சென்னையிலாவது... மழையாவது...!!!

    நன்றி வல்லிம்மா. இனிய காலை (மாலை) வணக்கம்.

    பதிலளிநீக்கு
  5. தி/கீதா தானே கேக் கொண்டு வந்தது! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், எனக்குக் கொடுக்கவே இல்லை! :)))) போனால் போகட்டும். நீங்க இப்போப் போன மாசம் தான் போனீங்க! இது கல்யாண மகாதேவி போன படங்கள் எனில் இவற்றை எடுத்தது கல்யாணமகாதேவி கோபால கௌதமன் அவர்களா? அதான் நல்லா வந்திருக்கு! :)))))))

    பதிலளிநீக்கு
  6. //சென்னையிலாவது... மழையாவது...!!!// இங்கே சூரியனார் கடந்த இரு நாட்களாகத் தான் மதியம் போல் எட்டிப் பார்க்கிறார். பகல்லேயே மின் விசிறி போட்டால் போர்த்திக்கும்படி இருந்தது. இரண்டு நாட்களாகக் கொஞ்சம் வெயில்! ஊரே ஏசி போட்டாற்போல் குளு குளு! குளுருது குளுருது குப்பக்கா, நடுக்குது நடுக்குது நாச்சியாரேனு பாடிட்டு இருக்கோம். :)))))

    பதிலளிநீக்கு
  7. எப்படி தி/கீதாதான் கொண்டு வந்தார்னு சொல்றீங்க கீதாக்கா? வேற யாருமே கொண்டு வரமாட்டார்களா!

    பதிலளிநீக்கு
  8. கல்யாணமாகாதேவி படங்கள்னா கௌதமன் மாமாதான் எடுக்கணுமா? நான் எடுக்க மாட்டேனா? அந்த ட்ரிப்பில் அவர் வரவில்லை! கட் அடித்து விட்டார்!

    பதிலளிநீக்கு
  9. // பகல்லேயே மின் விசிறி போட்டால் போர்த்திக்கும்படி இருந்தது. ஊரே ஏசி போட்டாற்போல் குளு குளு! குளுருது குளுருது குப்பக்கா, நடுக்குது நடுக்குது நாச்சியாரேனு பாடிட்டு இருக்கோம். :))))) //

    கிர்ர்ர்ர்ர்ர்.....

    பதிலளிநீக்கு
  10. ஒரு பதிவில் அழகான பயணமும் கூட ...
    அருமையான பதிவு நண்பரே...

    பாத்திரத்துக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கும் இட்லி போல...! சூர்யோதயமோ, சந்திரோதயமோ.. பார்க்க எப்போதுமே ஆனந்தம். ஆமாம், இது உதயம்தானா?

    இது கவிதை வடிவில் தெரிகிறது.
    அருமை அருமை...!

    பதிலளிநீக்கு
  11. சென்னையில் கேக் பண்ணுகிற நமக்கு தெரிந்த ஒரு பதிவர் கீதா ரெங்கன் மட்டும்தான் சரிதானே

    பதிலளிநீக்கு
  12. படங்களை ரசித்தேன் ஜி
    நான் சொல்ல வந்ததை மதுரைத்தமிழன் சொல்லி விட்டார் வரட்டும் செய்முறைய

    பதிலளிநீக்கு
  13. டிடிஹெச் - உடைந்து போனதை மட்டும் மாற்றிக் கொள்ளலாம்...

    மற்ற படங்களை ரசித்தேன்...

    'கேக்' பதிவர் யார்...?

    பதிலளிநீக்கு
  14. அழகான படங்கள்.

    பச்சை மிளகாய் கடித்துக் கொள்வது - சப்பாத்தி சாப்பிடும்போது நானும் இப்படி பச்சை மிளகாய் கடித்துக் கொள்வதுண்டு. வட இந்திய பழக்கம். பச்சை மிளகாய் தவிர வெங்காயம், கீரா எனப்படும் வெள்ளரி, முள்ளங்கி என சீசனுக்கு தகுந்தாற்போல காய்கறிகளும் சாப்பிடுவது இங்கே வழக்கம். குறிப்பாக Dhaba என அழைக்கப்படும் உணவகத்திற்குச் சென்று சாப்பிடும்போது பச்சை மிளகாய் நிச்சயம் உண்டு!

    தலைநகரிலும் இரண்டு நாட்களாக ஒரே மேக மூட்டம். சூரியன் வெளியே வரவில்லை. வாட்டி எடுத்த வெப்பத்திலிருந்து கொஞ்சம் ரிலீஃப்!

    கேக் பதிவர் யார் - தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.

    பாத்திரத்திற்குள்ளிருந்து எட்டிப்பார்க்கும் இட்லி - வாவ்... நல்ல கற்பனை. சந்திரன், சூரியன் - உதயம், அஸ்தமனம் இவை எல்லாமே படம் எடுக்க, எடுக்க அலுக்காத விஷயங்கள். அப்படி எடுத்த படங்கள் என்னிடமும் நிறைய உண்டு!

    சார்ஜர் - அந்தந்த அலைபேசிக்குறிய சார்ஜர் இல்லாமல் வேறு சார்ஜர் பயன்படுத்துவது சரியல்ல. அதிக சூடேறும் வாய்ப்புண்டு.


    பதிலளிநீக்கு
  15. மெட்ரோ டிரெயின் காட்சிகள் அபாரமாக உள்ளது பாராட்டுக்குரியது வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  16. நல்ல தொகுப்பு. எங்கள் வீட்டுத் தோட்டத்து ப.மிளகாயும் அதிகம் காரமில்லை.

    நிலவா சூரியனா? நிலவுதானோ?

    பதிலளிநீக்கு
  17. பாத்திரத்திலிருந்து எட்டிப் பார்க்கும் இட்லி...! அடடா! என்ன உவமை. எனக்கு என்னவோ முகத்திரையை விலக்கிப் பார்க்கும் பெண்ணைப் போல தோன்றுகிறதே!

    ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையமா?

    மறைந்து கொண்டிருக்கும் சூரியன் என்று தோன்றுகிறது.நான் அரசியல் பேசவில்லை, நீங்கள் வெளியிட்டிருக்கும் படத்தைதான் குறிப்பிடுகிறேன். ஹா! ஹா!

    கல்யாண மஹாதேவி எங்கிருக்கிறது? கோவிலும் குளமும் அழகு. கருப்பு வெள்ளையில் இன்னும் சிறப்பாக இருக்குமோ?

    பதிலளிநீக்கு
  18. சென்னையில் உள்ள பதிவர்களில் 'கேக் குயின்' கீதா ரெங்கன்தானே? இன்னொரு பதிவர் யாரென்று எனக்குத் தெரியும். ஆனால், சொல்லமாட்டேனே..!
    நீங்கள் பிரபல என்னும் அடைமொழி கொடுத்து விட்டதில் அவருக்கு ஒரே சந்தோஷம்.

    பதிலளிநீக்கு
  19. தில்லையகத்து இரு பதிவர்களுமா?

    படங்கள் நல்லா வந்திருக்கு.

    பதிலளிநீக்கு
  20. ///மாறலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்......
    ///

    நோஓஓஓஓஓஓஓஓஓஓ இது மட்டும் நடக்க விட மாட்டேன்ன்ன்ன்ன் இந்த உசிரு உடம்பில இருக்கும்வரை அது நடக்க விட மாட்டோம்ம்ம்ம்ம்:) ஆரம்பம் ஹேம்ஸ், பின்பு ச்ரீதேவி யாம் இப்போ அனுக்காவுக்கு வயசாகிட்டுது என கெள அண்ணன் சொல்லிட்டார் என்று மாற ஓசிக்கிறாராம்ம்ம்:).. ஒருவேளை கீர்த்தியின் கதை சமீபத்தில அடிபட்டுதே:) அதுதான் ஐடியாவோ:)).. விட மாட்டோம்ம்ம் நடு பஜாரில வச்சு நாலு கிளவி.. ஹையோ டங்கு ச்லிப்பாக ஆரம்பிக்குதேஎ:)) கேள்வி கேய்ப்போம்ம்ம்ம்ம்:))..

    ஸ்ஸ்ஸ்ஸ் ஓவரா சவுண்டு விட்டிட்டமோ?:) எதுக்கும் கட்டிலுக்குக் கீழயே இருந்திடுவது பெட்டர்:))

    பதிலளிநீக்கு
  21. ஆங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங் எல்ல்லோரும் ஓடிவாங்கோஓஓஓஓஓஒ நான் ச்ரீராமைப் பார்த்திட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்.. சாத்திரம் சொல்லட்டோ?:)...
    ஹையோ இந்த நேரம் பார்த்துக் கீதா இங்கின இல்லையே கொம்ஃபோம் பண்ண கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

    அப்பூடியே பூனாரின் போட்டோவைவும் சேர்த்திருக்கலாமே:)..

    பதிலளிநீக்கு
  22. ஆவ்வ்வ்வ் என்ன அழகு முகில்களை நீக்கிவிட்டு எட்டிப் பார்க்கும் நிலா...

    சென்னைப் படங்கள் அழகு. மரங்கள் தறிக்கிறார்கள் என அழுவினமேஎ.. இது எங்கும் பச்சையாகத்தானே இருக்கு.. ஒருவேளை கண் பட்டிடும் என அழுவார்களோ கர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
  23. //எங்கள் வீட்டு பச்சை மிளகாய் செடி. ///

    ஆஹா வீட்டுத்தோட்டம் அழகு.... இதைப் பராமரிப்பது ஸ்ரீராமின் பொஸ்தானே.. எங்கட வீட்டு மிளகாய்க்கண்டுப்படம் போடுவேன், பார்த்தீங்களேயெண்டால் 3 நாளைக்கு மயங்கம் தெளியாது யாருக்க்கும் ஹா ஹா ஹா:).

    கேரளா மிளகாய் இங்கு கிடைக்கிறது வெளிர் பச்சை நிறம் , பெரிதாக இருக்கும் உறைக்காது. ஆனாலும் பச்சையாக சாப்பிடுவதென்பது கஸ்டம்தான்.

    //இரு பிரபல பதிவர்கள் வந்தார்கள்..//
    கீதாவும் துளசி அண்ணனும் அல்லது கீதாவும் கில்லர்ஜி உம்.

    இப்போ பிரபல பதிவர் என்றாலே நினைவுக்கு வருபவர் கில்லர்ஜிதான்:).. அவரே அவர் இன்னும் பிரபல்யமாகவில்லை எனச் சொல்லிச் சொல்லியே இதை மனதில பதிய வச்சிட்டார் ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
  24. //ஃபிப்ரவரியில் கல்யாணமகாதேவி சென்ற சமயம். //

    இந்த முதலிரண்டு படங்களும் உடனேயே இங்கு போட்டு விட்டீங்களே..

    பிரயாணத்தின்போது எடுக்கும் படங்கள் எல்லாமே ஒருவித அழகுதான்.

    பதிலளிநீக்கு
  25. //பாத்திரத்துக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கும் இட்லி போல...! சூர்யோதயமோ, சந்திரோதயமோ.. பார்க்க எப்போதுமே ஆனந்தம். ஆமாம், இது உதயம்தானா? //

    எடுத்தவர் நீங்கள் தான் சொல்ல வேண்டும். உதிக்கும் போது சூரியன் சிவப்பாய் இருப்பார்.
    இரண்டு உதயங்களும் நன்றாக இருக்கும் பார்க்க , மறையும் போதும் அழகுதான்.
    //பாத்திரத்துக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கும் இட்லி போல...//
    கற்பனை நன்றாக இருக்கிறது.

    கேக் நன்றாக இருக்கிறது. பதிவர்கள் தெரிகிறது.
    கோவில் கோபுரம், குளம், மாடுகள் உள்ள படம் அழகு.
    அனைத்து படங்களும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  26. @ ஶ்ரீராம் சிறு தானியக் கேக் அவர் தானே தி/கீதா தானே செய்து காட்டினார்? இதைப் பார்த்தா அது மாதிரித் தெரியுதே! :))) அதான் அவர் தான் கொண்டு வந்திருப்பார் எனச் சொன்னேன். இன்னொருத்தர் பானுமதியா? ஹிஹிஹி, அவரே எங்கப்பா குதிருக்குள் தான் இருக்கார்னு சொல்லிட்டாரே!

    பதிலளிநீக்கு
  27. எங்கள் வீட்டுத் தொட்டியில் பச்சைமிளகாய்(ஊசி பச்சை மிளகாய் ) சின்னது தானே என்று என் கணவர் சாப்பிட்டு விட்டு ஆ, ஊ என்று சத்தம் கொடுத்ததை நினைத்தால் இப்போதும் சிரிப்பு வரும். பச்சைமிளகாய் காரம் இல்லாமல் இருக்குமா?
    பழைய கஞ்சிக்கு சின்னவெங்காயம், பச்சைமிளகாய் வைத்து சாப்பிடும் மக்களைப் பார்த்து இருக்கிறேன். (வயலில் வேலைப் பார்ப்பவர்கள்.)

    பதிலளிநீக்கு
  28. பாத்திரத்துக்குள் எட்டிப்பார்த்த இட்லி எந்த ஊரில் எடுக்கப்பட்டது என்பது தெரிந்தால் உதயமா, அஸ்தமனமா என யூகிக்கலாம். எப்போ எடுத்ததுனும் சொல்லணும்! ஹிஹிஹிஹி

    பதிலளிநீக்கு
  29. கோமதி அரசு, பழைய சாதத்துக்குச் சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு சேர்த்துத் தொட்டுக் கொண்டு சாப்பிடுவோம் நாங்கல்லாம். ரொம்பப் பிடிச்சது! இப்போக் கூடக் கொஞ்ச நாட்கள் முன்னர் இங்கே ஒரு நாள் முதல்நாள் வடித்த சாதம் நிறைய மிஞ்சிப் போய் மறுநாள் காலை அதைப் பிசைந்து தயிர் சேர்த்துக் கலந்து இரண்டு பேரும் சாப்பிட்டோம். நான் அதுக்குச் சின்னவெங்காயமும், பச்சைமிளகாயும் சேர்த்துக் கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  30. கீசாக்கா நானும் ஒண்டு சொல்லட்டே.. 4 பச்சை மிளகாய்க்கு ஒரு கப் உடனே திருவிய தேங்காய்ப்புவும், ஒரு சின்ன துண்ணு பழப்புளி சிறிது உப்பு போட்டு.. அம்மியில் அல்லது உரலில் அல்லது மிக்சியில், தண்ணி கொஞ்சம் சேர்த்து அல்லது சேர்க்காமல் மெதுவா அரைச்செடுத்து.. அப்படியே பாண்[bread] உடன் சாப்பிட என்னா சுசி தெரியுமோ?:) அதிலும் பிரெஞ்பக்கெட்டை பாதியாக வெட்டி உள்ளே இந்த சம்பலை வைத்து மூடி விட்டுக் கடிச்சால்ல்ல் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்னா யூப்பரூஊஊஊஊஉ:))

    பதிலளிநீக்கு
  31. எனக்கு என் பேரன் ஒரு ஆப்பிள் போன் வாங்கிக் கொடுத்தானதன் சார்ஜெரி ஒரு முனை உடைந்துபொய் போனை சார்ஜ் செய்ய முடியாமல் இருந்தது நெற்றுதான் அமேசான் மூலம் ஒரு சார்ஜெர் வாங்கினான் விலை ரூ 800 க்கும் மேலே இப்போதெல்லாம் போன் இல்லமல் இருப்பதுகஷ்டமாக இருக்கிறதுசில ஆண்டுகளுக்கு முன் வரைஎப்படி இருந்தேன்

    பதிலளிநீக்கு
  32. ஆஹா ஸ்ரீராம் அது ஆராக்கும்? எனக்குப் போட்டியா கேக் செஞ்சு கொண்டுவந்தது?!!!

    அந்த இன்னொரு ப்ளாகர் யாருனு யோசிக்கறேன்!!!!!!!!!!!!! ஹா ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  33. கீதாக்கா இந்த கேக் ஸ்ரீராம் உங்களுக்குத் தரலைதானே? ......ச்சீ ச்சீ புளிக்கும்!!! .. நான் உங்களுக்கு செஞ்சு தரேன்கா..!!!!!! ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  34. க ம தே படங்கள் அப்போவே போட்டுட்டீங்களே ஸ்ரீராம்......கிட்டத்தட்ட இதே கருத்துதான் கொடுத்துருந்தீங்க....ஆனாலும் பார்க்க அழகுதான் போங்க...

    பாத்திரத்திற்குள் இருந்து எட்டிப் பார்க்கும் இட்லி போல....ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹாஹ் ஆ...நமக்கு எப்போதும் திங்க ஹிஹிஹிஹிஹி...

    கீதா

    பதிலளிநீக்கு
  35. பாத்திரத்திற்குள் இருந்து எட்டிப் பார்க்கும் அந்த இட்லி அழகு.....உங்க தலைப்பையும் ரசித்தேன்...

    கமதே படங்கள் செம க்ளாரிட்டி ஓடும் பேருந்துலிருந்து எடுத்தாலும்...ஆமாம் அந்தக் குளம் எனக்கு ரொம்பப் பிடித்தது...

    பமி எங்க வீட்டுல கூட சில சமயம் (ரொம்பக் காரமில்லா மிளகாய்) சப்பாத்தியோடு, ப்ரெட்ட்டோடு கடிச்து சாப்பிடுவதுண்டு...

    ஸ்ரீராம் கூடியவரை மொபைல் ஃபோனுக்கு அதனுடைய சார்ஜரைப் போடுவதுதான் நலல்து. வேறு சார்ஜர் போடும் போது பேட்டரி பிரச்சனைகள் வரும் என்று எலக்ட்ரானிக்/எலக்ட்டிகள் மக்கள் சொல்லுவதுண்டு...

    கீதா

    பதிலளிநீக்கு
  36. கீசாக்கா நானும் ஒண்டு சொல்லட்டே.. 4 பச்சை மிளகாய்க்கு ஒரு கப் உடனே திருவிய தேங்காய்ப்புவும், ஒரு சின்ன துண்ணு பழப்புளி சிறிது உப்பு போட்டு.. அம்மியில் அல்லது உரலில் அல்லது மிக்சியில், தண்ணி கொஞ்சம் சேர்த்து அல்லது சேர்க்காமல் மெதுவா அரைச்செடுத்து.. அப்படியே பாண்[bread] உடன் சாப்பிட என்னா சுசி தெரியுமோ?:) அதிலும் பிரெஞ்பக்கெட்டை பாதியாக வெட்டி உள்ளே இந்த சம்பலை வைத்து மூடி விட்டுக் கடிச்சால்ல்ல் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்னா யூப்பரூஊஊஊஊஉ:))//

    ஹையோ ஞானி....பூஸாரே....கீதாக்கா கோமதிக்காவுக்கு பதில் கொடுக்க வந்தா அதே அதே நீங்க இங்க சொல்லிட்டீங்க....இந்த சட்னி தண்ணி அதிகம் இல்லாமல் அரைத்தால் செம செம டேஸ்ட்...என் பாட்டி பாணுக்கு தொட்டுக் கொள்ளத் தருவார்கள்...ஹைஃபைவ் நானும் இந்த ருசியை ரொம்பவே ருசிப்பேன்..அதே சம்பல் என் பாட்டி எனக்கும் தாத்தாவுக்கும் சப்பாத்திக்கும் கூட செஞ்சு தருவாங்க செமையா இருக்கும்...

    கீதா

    பதிலளிநீக்கு
  37. கீதாக்கா, கோமதிக்கா மீ ட்டு பழைய சாதத்திற்கும், ஆடிக் கூழுக்கும் கூட/கஞ்சி க்கும் ப மி, சி வெ, உ காம்பினேஷன் செமையா இருக்கும்...பிடிக்கும்...

    கீதா

    பதிலளிநீக்கு
  38. எப்படி தி/கீதாதான் கொண்டு வந்தார்னு சொல்றீங்க கீதாக்கா? வேற யாருமே கொண்டு வரமாட்டார்களா!//

    அதானே!! அப்படி நல்லா கேளுங்க ஸ்ரீராம்!!! ஹா ஹா ஹா ஹா ஹா...

    கீதா

    பதிலளிநீக்கு
  39. ஆலந்தூரிலிருந்து தானே அந்த க்ளிக்ஸ்...நல்லாருக்கு ஸ்ரீராம்...

    வாங்க வல்லிம்மா... சென்னையில் மழையா? எங்கே? எங்கே? அது மேல்வீட்டிலிருந்து யாரோ தண்ணீரைக் கீழே கொட்டினார்களாம்!!! சென்னையிலாவது... மழையாவது...!!!//

    சென்னையில மழை இல்லை தண்ணீர் இல்லைனு யார் சொன்னது? லாரிகள்ல, பாட்டில்ல எல்லாம் எவ்வளவு தண்ணி இருக்கு...!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  40. ஒருவேளை கீர்த்தியின் கதை சமீபத்தில அடிபட்டுதே:) //

    முதல்ல்ல பூஸாருக்குக் கண்டனம்! அனுக்காவா நோ நோ நோ...அனுஷ்!! இது அரம எடுத்த முடிவு உங்களுக்கு ரீச் ஆகலை போல!! ஹா ஹா ஹா ஹா...

    அதிரா கவலையே படாதீங்க....மாற விட்டுருவமா?!!! .அரம ஆளுங்க பானுக்கா நாங்க நீங்க எல்லாம் தேம்ஸ்ல போராட்டக் கொடி பிடிச்சுருவோம்....(ஆனா பூஸாரை நம்பவே முடியாது டமால்னு இன்னுரு அக்காவுக்கு தாவிடுவார்!! நெல்லையை ஐஸ் வைக்க....அவரிடமிருந்து தப்பிக்க!!!ஹா ஹா ஹா)

    கீதா

    பதிலளிநீக்கு
  41. பானுக்கா கேக் க்வீன்??????!!!!!!!!!!!!!!!! ஹா ஹா ஹா ஹா அக்கா அவள் நானில்லை!!!! ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  42. படங்கள் எல்லாம் அழகாக இருக்கிறது ஸ்ரீராம்ஜி.

    சார்ஜர் அதே போனுடையதுதானே போட வேண்டும் இல்லையா? நான் சில சமயம் மாற்றிப் போட்டதுண்டு ஆனால் அது நல்லதல்ல என்று நண்பர் சொன்ன பிறகு ஊருக்குச் சென்றாலும் மறக்காமல் எடுத்துச் சென்று விடுவேன்.

    பாத்திரத்திலிருந்து எட்டிப் பார்க்கும் இட்லி என்பதைப் பார்த்ததும் சிரிப்பு வந்தது. நல்ல கற்பனை. படம் அழகாக இருக்கிறது.

    மிளகாய்ச்செடி, உங்கள் ஊருக்குப் போகும் போது எடுத்த படங்கள் எல்லாமே அழகாக இருக்கின்றன. என்றாலும் வழக்கமான ஞாயிறு போல் இல்லையோ என்றும் தோன்றியது.

    அந்த இரு பதிவர்கள் யார்? கேக் செய்த பதிவர் யார்?

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  43. அதிரா அந்தப் படத்தில் ஸ்ரீராமைப் பார்த்துவிட்டேன் நு எப்படிச் சொல்லுவீங்க? கை விரல் மட்டுமே தெரியுது. அது ஸ்ரீராம் மகனின் கை விரலாக இருக்கலாமல்லோ??!கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!!!கூகுள் இமேஜ் செர்ச் பண்ணிப் பாருங்கோ!! ஹிஹிஹிஹிஹி!!!!...மீ ஆன் த ரன்வே...

    கீதா

    பதிலளிநீக்கு
  44. வாங்க அஜய் சுனில்கர்...

    பாராட்டுதல்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  45. //சென்னையில் கேக் பண்ணுகிற நமக்கு தெரிந்த ஒரு பதிவர் கீதா ரெங்கன் மட்டும்தான் சரிதானே//

    மதுரை,,, கேக் செய்யத் தெரிந்த மற்றப் பதிவர்கள் கோபித்துக் கொள்ளப்போகிறார்கள்!!

    பதிலளிநீக்கு
  46. வாங்க தனபாலன், ஆனால் அது மட்டுமே பிரச்னை இல்லை. எல்லா சேனல்களுக்கு என்று பணம் காட்டினாலும் பாதி முக்கிய சேனல்களைக் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள்!

    பதிலளிநீக்கு
  47. பச்சை மிளகாயைக் கடிக்க என் சகோதரன் வடநாடு வந்து கற்றிருக்கிறேன் போலும். எங்களுக்கெல்லாம் வித்தை காட்டிவிட்டான்!

    இப்போது வேறு அலைபேசி வாங்கி விட்டேன் (ஏழெட்டு மாதங்கள் ஆகிறது!) என்பதால் சார்ஜர் பிரச்னை தீர்ந்தது.

    நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
  48. நன்றி அசோகன் குப்புசாமி ஸார்.

    பதிலளிநீக்கு
  49. நன்றி ராமலக்ஷ்மி. அது நிலவுதான். அதிகாலை நிலவு!

    பதிலளிநீக்கு
  50. வாங்க பானு அக்கா..

    பாத்திரத்திலிருந்து எட்டிப்பார்க்கும் இட்லிக்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை!!

    ஆம், ஆலந்தூர் மெட்ரோதான்!

    நீங்கள் அரசியல் பேசவில்லை என்பதை நான் நம்பி விட்டேன். மற்றவர்களும் நம்பட்டும்!!

    இந்தக் கோவில் கல்யாணமாகாதேவி கோவில் அல்ல. அங்கு செல்லும் வழியில் ஏதோ ஒரு ஊரில் எடுக்கப்பட்டது. கல்யாணமாகாதேவி திருவாரூர் மன்னார்குடி சாலையில் உள்ளது.

    இன்னொரு பிரபலத்துக்கு சந்தோஷம் என்பதில் எனக்கும் சந்தோஷம்.

    பதிலளிநீக்கு
  51. வாங்க நெல்லை. உங்களு கேள்விக்கு பதில் 'இல்லை'!

    பதிலளிநீக்கு
  52. வாங்க அதிரா... மாறலாமா என்பதற்கு தனி அகராதியை போட்டு என்னையே குழப்பி விட்டீர்கள்! இப்போ நான் என்ன செய்யணும்?!!

    // ஓஓஒ நான் ச்ரீராமைப் பார்த்திட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்.. சாத்திரம் சொல்லட்டோ?:)... //

    சொல்லுங்க... சொல்லுங்க...

    பூனார்! நாங்கள் பூனாச்சு என்கிறோம்! அது வியாழன் போடுகிறேனே...

    பதிலளிநீக்கு
  53. அதிரா..

    படங்களை ரசித்ததற்கு நன்றி.

    ஆமாம் என் வீட்டு தோட்ட பராமரிப்பு பாஸ்தான்! எனக்கு அந்தப் பொறுமை இல்லை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்! கேரளா மிளகாய்? கேள்விப்பட்டதில்லை.

    பதிலளிநீக்கு
  54. அதிரா..

    பிரபல பதிவர்கள் விடை தவறு. ஆனால் நான் கேள்வியே கேட்கவில்லையே!

    // இந்த முதலிரண்டு படங்களும் உடனேயே இங்கு போட்டு விட்டீங்களே..//

    ஓ... உணர்ச்சிவசப்பட்டு விட்டேன் போல!!!

    பதிலளிநீக்கு
  55. வாங்க கோமதி அக்கா..

    அதிகாலை ஐந்தரை மணி நிலா அது! பாராட்டுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  56. கீதாக்கா... சிறுதானிய கேக்கா, பெரிய தானிய கேக்கா என்று செய்தவரிடம்தான் கேட்கவேண்டும்! எனக்கென்ன தெரியும்?

    பதிலளிநீக்கு
  57. கோமதி அக்கா..

    சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் என் அம்மா சொல்லிக் கொடுத்து (அவர்களுக்கு மிகவும் பிடித்த ஸைட் டிஷ்) நானும் சாப்பிட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  58. கீதாக்கா... பாத்திரத்திலிருந்து எட்டிப்பார்க்கும் இட்லி விடை வெளியாகி விட்டது!!!

    பதிலளிநீக்கு
  59. ஞானி அதிரா.. உங்கள் பழப்புளி தேங்காய்த்துருவல் பச்சைமிளகாய் செம டேஸ்ட்டாத்தான் இருக்கும் போல..

    பதிலளிநீக்கு
  60. வாங்க ஜி எம் பி ஸார்.. சார்ஜர் பிரச்சனை இப்போது (எனக்கு)இல்லை. ஆனால் வீட்டில் அவ்வப்போது வரும் நிரந்தரப் பிரச்னை அது!

    பதிலளிநீக்கு
  61. வாங்க கீதா... காணோமேன்னு பார்த்தேன்.. ஆமாம்... ஆராக்கும் அது? உங்களுக்குத் போட்டியா கேக் செய்யும் பதிவர்!

    அந்த கேக் புளிக்கவில்லையே..! ஹிஹிஹி..

    படங்களைத் திருப்பிப் போட்டதற்கு ஸாரி... கவனமில்லை.

    பதிலளிநீக்கு
  62. கீதா...

    ஆம், ஆலந்தூர் மெட்ரோதான் அது.

    // டமால்னு இன்னுரு அக்காவுக்கு தாவிடுவார்!! நெல்லையை ஐஸ் வைக்க...//

    ஹா... ஹா... ஹா... அதானே?

    பதிலளிநீக்கு
  63. வாங்க துளஸிஜி..

    பாராட்டுக்கு நன்றி. அந்த இரு பதிவர்களும் பிரபல பதிவர்கள். நீங்களும் பாத்திரத்திலிருந்து எட்டிப்பார்க்கும் இட்லியை ரசித்திருப்பதற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  64. வாங்க கீதா..

    // ஸ்ரீராமைப் பார்த்துவிட்டேன் நு எப்படிச் சொல்லுவீங்க? கை விரல் மட்டுமே தெரியுது. அது ஸ்ரீராம் மகனின் கை விரலாக இருக்கலாமல்லோ??/

    அதானே... இருக்கும். இருக்கும்!

    பதிலளிநீக்கு
  65. /பாத்திரத்துக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கும் இட்லி //

    ஆமா ஆமாமா அந்த லண்டன் ஸ்டைல் தட்டை இட்லி மாதிரி :)

    பதிலளிநீக்கு
  66. யாரந்த கேக் கொடுத்த பதிவர் ??????????
    எனக்கு கீதா தானு தோணுச்சு .இல்லைனா பானுக்காவா ?? இல்லைனா ஹேமா HVL :)

    பதிலளிநீக்கு
  67. இந்த மிளகாய்ங்களை உப்பில் மற்றும் வினிகர் சேர்த்து ஊர்வச்சி பிக்கிள் செய்வாங்க துருக்கி கடையில் கிடைக்கும் காரமே தெரியாதது .முந்தி எனக்காக வெஜ் டோனர் இந்த மிளகாய் சீஸ் சேர்த்து செய்யச்சொல்லி வாங்கி கொடுப்பார் கணவர் ஜெர்மனியில் இருக்கும்போது .செம சுவை

    பதிலளிநீக்கு
  68. வாங்க ஏஞ்சல்..

    லண்டன் ஸ்டைல் தட்டை இட்லி... :)))

    ஹேமா (HVL)? நீங்க எங்கேயோ போயிட்டீங்க!!

    மிளகாயை உப்பாவது, வினிகராவது... அப்படியே சாப்பிட்டான் அவன்! படத்தில் இருப்பது குழந்தை மாதிரி மிளகாய். அவன் சாப்பிட்டது முற்றிய பெரிய மிளகாய்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!